அத்தியாயம்-2
கார் மலைப்பாதையிலும், வளைவு நெளிவில், மழையாலும் தடுமாறியது.
நீலகிரி பக்கம் ஒரு குக்கிராமம், ஆளுங்கட்சியான ‘தமிழக எழுச்சி கழகம்’தின் முதல்வர் இலக்கியன், எதிர்கட்சியான ‘ஜனநாயக விடியல்’ கட்சியின் தலைவர் நடராஜன் இருவரின் சொந்த ஊரில் தான் இந்த அரசியல் மாநாடு.
மலைசரிவான பாதை என்பதால் காரோட்டுபவர்கள் எப்பவும் கவனம் செலுத்தியே ஓட்ட வேண்டும். அதுவும் இது போன்ற மழையில் பயணத்தை தவிர்ப்பது நலம். ஆனால் நம் சுரபிக்கு எங்கும் தங்கப்பிடிக்காது. மேடை பேச்சு, கூட்டம், முடிந்தால் நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும். இரவு பயணம் என்பதெல்லாம் அரிது. பொதுவாக சென்னையில் மட்டுமே வாசம். அங்கு தான் மாநாட்டு பேச்சும் வழக்கமாய் போடுவது.
இலக்கியன் சொந்தவூருக்கு வருஷக்கணக்காக வாராமல் போனதால், வரப்போகும் தேர்தலை முன்னிட்டு வேண்டுமென்றே முதல் விழாவை இங்கே துவங்கினாள் சுரபி. எல்லாம் அரசியல் தந்திரத்தில் ஒன்று.
இங்கே வருவதால் நடராஜனும் பெரிதாக மகளை தடுக்கவில்லை. அவரது சொந்தவூரில் தனியாக அனுப்ப அவருக்கென்ன பயம். இன்னமும் இந்த ஊரில் அவருக்கும் செல்வாக்கும், ஆதரவும் உண்டு.
அதோடு இந்த புயல் மழை எல்லாம் திடீரென ஆக்கிரமித்தது. இங்கே மாநாடு நியமிக்க, நாட்களை தேர்ந்தெடுத்தப்போது இந்த இயற்கை சீற்றங்கள் வரும் அறிகுறியே இல்லை.
மூன்று நாட்களுக்கு முன் தான் இந்த இயற்கை சீற்றம் மழை பற்றி செய்திகள் வந்தது. சுரபிக்கு மாநாட்டை தள்ளிப்போட மனமில்லை. முதல்வர் இலக்கியனும் அவரை சார்ந்த ஆட்களும் கேலியாக பேச வாய்ப்பை தந்திடக்கூடாதென வீம்புக்கு வந்தாள்.
எதுவென்றாலும் பார்த்துப்போமென்று இயற்கைக்கு எதிராக வந்து சேர்ந்து, இதோ இப்பொழுது அவஸ்தைப்படுகின்றாள்.
“என்ன மஸ்தான்… எதிர்ல வர்ற வண்டி தெரியலையா? கஷ்டமாயிருக்கா? நம்ம முன்னாடி போகற காரை தொடர்ந்து போங்க” என்றாள்.
“மேடம் நமக்கு முன்ன போன கார் கண்ணுக்கே தெரியலை. அதான் யோசிச்சிக்கிட்டே வண்டக ஓட்டுறேன்.” என்றார்.
“வாட்… ஓகே ஓகே.. பின்னாடி வர்ற காரோட நிறுத்திட்டு முன்னாடி போன கார் டிரைவருக்கு போன் பண்ணுங்க” என்றவள் “இர்ரெஸ்பான்ஸபிள் இடியட்ஸ்.” என்று முன்னே சென்ற காரை திட்டி முனங்கினாள்.
“மே…மேடம் பின்னாடி வந்த காரும் கண்ணுக்கு தெரியலை” என்று மிரரை பார்த்து பதில் தந்தான்.
“பச் என்ன மஸ்தான். மழை பொழியறதால சரியா கவனிக்காம இருப்பிங்க. போன் பண்ணி பாருங்க” என்று சலிப்படைந்து கூறினாள்.
“மேடம்.. மேடம் போன் போக மாட்டேங்குது.” என்று பயந்தார்.
“வாட்?” என்று தனது அலைப்பேசியை கவனிக்க அதிலும் சிக்னல் சுத்தமாய் இல்லையென்று காட்டியது.
“சிக்னல் இல்லாத இடமா இருக்கு மஸ்தான். கொஞ்சம் தள்ளி போனப் பிறகு பாருங்க. எல்லாம் நான் சொல்லணுமா?” என்றாள் எரிச்சலுடன்.
மஸ்தானும் சரியென்று வண்டியை பாதுகாப்பாய் ஓட்ட கஷ்டப்பட்டார்.
மாநாடு நடந்த இடத்தை தாண்டி வந்ததால் ஜனநடமாட்டம் குறைந்திருந்தது. அதோடு சாலை வளைந்து நெளிந்திருக்க பொறுப்பாய் வண்டியை இயக்கினார்.
பொறுமையாக வந்தப்பொழுதும், சடுதியில் சட்டென்று குறுக்கால் வந்த வண்டியை கண்டு மஸ்தான் சடன்பிரேக் போடவும், அதிலிருந்து மூன்று பேர்கள் வெளியே வந்தார்கள்.
ரெயின்கோர்ட் அணிந்து முகத்தை மூடி, சுரபி காரின் அவள் அமர்ந்நிருந்த பக்கம் வந்தார்கள்.
“மேடம் யாரோ திருடங்கன்னு நினைக்கறேன்.” என்று மஸ்தான் பயந்து பதறி கூற, ஜன்னல் கதவை ஹாக்கி ஸ்டிக் கொண்டு வெறித்தனமாய் உடைத்தனர் வந்தவர்கள்.
சுரபி நெஞ்சில் கைவைத்து, “ஏய் யாரு நீங்க… பணம் நகை வேண்டுமா? ” என்று கேட்டு முடிக்க கார் ஜன்னல் கதவு உடைத்து கதவை திறந்தனர்.
மஸ்தனின் தலையில் ஒரடி அடித்து தள்ளி, சுரபியை ஆக்ரோஷமாய் இழுத்தனர்.
“பணம் நகை வேண்டும்னா எடுத்துக்கோங்க. என்னை விடுங்க.. ஏய் நான் யார் தெரியுமா? எதிர்கட்சி நடராஜனோட பொண்ணு.” என்று தேவையற்று அறிமுகம் செய்துக் கொண்டாள்.
“அதுக்கு தான் உன்னை கிட்னாப் பண்ணறோம்” என்று ஒருவன் நகைத்தபடி உரைத்திட, சுரபிக்கு நெஞ்சுக்கூடு விதிர்த்தது.
முதுகு தண்டு சில்லிட்டது. இது திட்டமிட்ட வலையா?!
இந்நேரம் வரை ‘திருடர்கள் பணத்திற்காக வழிப்பறி செய்வதாக நினைத்திருக்க, தன்னை கடத்தப்போவதாக கூறுவதை கேட்டு அதிராமல் எப்படி?
“நீ..நீங்க ஆளுங்கட்சி முதல்வர் இலக்கியனோட ஆளுங்க தானே. ஐ நோ. உங்களை ஜெயில்ல தள்ளறேன் பாருங்க” என்று அவளது போனை எடுக்க, அவள் போனை பிடுங்கி காரில் தூக்கியெறிந்து, அவளது முகத்தில் கைக்குட்டையை வைத்து அழுத்தினார்கள்.
சுரபி மயக்கநிலையை அடைய அவள் மேனியெங்கும் மழைத்துளிகள் உடலை நனைத்து ஒட்டிக்கொண்டது.
பேய் மழை என்பார்கள் அதெல்லாம் அன்று தான் பொழிந்தது.
இரவெல்லாம் மழை பொழிந்தும் நின்றபாடில்லை. அதன் தொடர்ச்சி அடுத்த நாள் காலையிலும் தூறல் விடாமல் பொழிந்தது.
—
சுரபியின் நாசியில் வறுத்த காபி கொட்டையின் மணம் கமழ்ந்தது.
இமை திறந்து இடத்தை பார்வையிட, ஏதோவொரு சொகுசான அறையில் மெத்தையில் படுத்துறங்குவது புரிந்தது.
‘எந்த இடம்? நேற்று கடத்தப்பட்டோமே? யாரோ மூக்கில் மயக்கமருந்தை வைத்து அழுத்தினார்களே’ என்று நினைக்க, விதிர்த்து எழுந்து அமர்ந்தாள்.
அவள் மேனியை ஒரு வெள்ளை சட்டையும் முட்டிவரையிருந்த குட்டி ஷார்ட்ஸும் தழுவியிருந்தது. தனது சேலை அவிழ்க்கப்பட்டிருந்ததில் பயந்தாள். ஏதோ தனக்கு ஒன்றும் நிகழவில்லை என்று அவளுக்கு தெரிந்தது ஆனாலும் இதென்ன கடத்தி வந்து உடைமாற்றி, மெத்தையில் உறங்க வைத்துள்ளனர்? என்று புரியாமல் குழம்பினாள். நிர்வாணமாக வீடியோ எடுத்து அதை பகிரங்கமாக நெட்டில் உலவவிட்டிருப்பார்களா? என்று இயல்பான பெண் மனம் பயந்தது.
அவள் குழப்பத்தை நிவர்த்தி செய்யும் விதமாக “குட் மார்னிங்” என்று ஆராவமுதன் குரல்… இந்த குரலை அவள் மறந்திருக்க வாய்பில்லை, ஆனாலும் அவனாக இருக்குமா என்ன? என்று விசுக்க குரல் வந்த திசைப்பக்கம் திரும்பினாள்.
“நீயா…?” என்று சுரபி அதிர்ந்தது ஒர்நொடி. அடுத்த வினாடி “ஹௌ தேர் யூ. என்னை நீ தான் கிட்னாப் பண்ணினியா? என் க்ளாத்ஸ் எல்லாம் ரிமூவ் பண்ணிருக்க. சீ… என்னடா நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? என்னை என்ன செய்த?” என்று போர்வையை வீசிவிட்டு அவன் டீஷர்ட்டை காலரை பிடித்து பயமின்றி கேட்டாள்.
“காலையிலயே திவ்ய தரிசனம். நான் வெளியே இருக்கற காட்சிகளை சொன்னேன்.” என்றதும் கைகள் நடுங்கியது சுரபிக்கு. மேற்சட்டையும் ஷார்ட்ஸும் அவளை நெளிய வைத்தது.
“ஏய் கூல் சுரபி. உன்னை ஒன்னும் பண்ணலை… ஆ….னா….ஏதாவது பண்ணிருக்கணும். என்ன செய்ய தூக்கிட்டு வந்தும் தப்பா நடந்துக்க தோணலை. ஜஸ்ட் டிரஸ் மட்டும் மாத்தினேன். நல்ல மழையில தொப்பலா நனைஞ்சுட்ட. இதுல மயங்கி தொலைச்சி என் மேலேயே விழற, இங்க ரூம்ல வந்ததும் இது போல தான் மயக்கத்துலயே நடுங்கின. அதான்… நானே க்ளாத்ஸ் சேஞ்ச் பண்ணி விட்டேன்.
இப்ப கூட குளிர்ல கை நடங்குதா?” என்று காபியை ஊற்ற சென்றான்.
“எதுக்கு கடத்தின. என் டிரஸ் எங்க? நீ என்ன பண்ணற தெரியுமா?” எங்க அப்பாவுக்கு போன் பண்ணறேன்” என்று போனை தேடி “ஷிட்.. நீ தான் போனை கார்ல தூக்கி போட்ட? என்னடா வேண்டும்?” என்று கத்தினாள்.
“ஏய் டா போட்டு பேசின பல்லை உடைச்சி கையில கொடுத்திடுவேன். உன்னை விட இரண்டு வருஷம் பெரியவன் தெரியும்ல?!
அப்பறம் உன்னை நான் கிட்னாப் பண்ணலை. யாரோ மூன்று பேர் உன்னை கிட்னாப் பண்ண வந்தாங்க. அந்த நேரம் நான் வந்து அவனுங்களை அடிச்சி துவசம் பண்ணி, அதே கார்ல அவனுங்களை உட்கார வச்சிட்டு உன்னை மட்டும் தூக்கிட்டு வந்தேன்” என்று விளக்கினான்.
“ஓ… பெரிய ஹீரோ.. பொய் பேசாத டா. நீ ஏன்டா அந்த நேரத்துல அங்க வரணும்? பிளான் பண்ணி வந்து, என்னை கிட்னாப் பண்ணிட்டு பேச்சை பாரு” என்று முகம் திருப்பினாள்.
“ஏய் ஏய்… உன்னை சந்திக்க அந்த வழியா வந்தது என்னவோ உண்மை தான். ஆனா கிட்னாப் பண்ணுற லெவலுக்கு நீ வொர்த் இல்லை.
ஆக்சுவலி உன்னை கிட்னாப் பண்ணியது உன்னோட ஆட்கள் தான். உன் கட்சி கொடி அவங்க கார்ல இருந்தது.” என்றான்.
“நல்ல திரைக்கதை. காதுல பூவச்சி யாராவது இருப்பாங்க அவங்களிடம் உன் ஸ்கீரின் பிளேவை சொல்லு. படமா எடுப்பாங்க. இல்லை ஓடிடில ரிலீஸ் பண்ணு. ஃபுல்ஷிட்.
என் டிரஸ் எங்க? நீ ஏன் எனக்கு டிரஸ் மாத்தி விட்ட” என்று கோபமாய் லாவாபீடபூமியின் அவதாரமாக கேட்டாள்.
“ஈரமா இருக்குன்னு காயப் போட்டிருக்கேன்.
இங்க பாரு… நீ என்னோட எடுத்த போட்டோ. பச்.. அப்ப என் பக்கத்துல தெத்து பல் தெரிய சிரிச்சிட்டு இருக்க. இந்த டிரஸே நான் தான் உனக்கு போட்டுவிட்டதா உங்கப்பா சொல்வார். வேண்டுமின்னா அகைன் பழைய கதையை கேளு.
இப்பவும் அதே போல டிரஸ் மாத்தி விட்டேன் தப்பா?” என்றவன் கிண்டலும் கேலியுமாக உல்லாசமாய் பேசினான்.
‘சிறு குழந்தைகளாக இருந்தப்போது எடுத்த புகைப்படம். அதை இன்னும் போனில் வைத்துக் கொண்டு சுற்றுகின்றானே. அன்று டிரஸ் மாற்றியதும் இன்று மாற்றுவதும் ஒன்றா?’ என்று எரிமலையை சுவாசித்தவளாக மூச்சை விடுத்தாள்.
ஆராவமுதனோ “பை-தி-வே உண்மையாவே உன் ஆட்கள் தான் உன்னை கடத்த முயன்றது. முதல்ல பல்லை விலக்கு, பிறகு காபி குடி” என்று கூறினான்.
ஆராவமுதன் சுரபி இருவரும் ஒரு புகைப்படத்தில் குழந்தையாக இருந்த காலத்தில் எடுத்த புகைப்படம். அதில் ஆராவமுதன் ஸ்லீவ் பனியன் ஹாப்டவுசர் அணிந்த ஐந்து வயது பையனாகவும், சுரபி இடையில் தங்க அரைஞாண் கயிற அணிந்து, ஜட்டி போட்ட இரண்டு வயது குட்டி பாப்பாவாக தெத்து பல் தெரிய சிரித்திருந்தாள். அதை தான் அவன் குறிப்பிட்டுக் காட்டினான்.
இலக்கியன் நடராஜன் நண்பர்களாய் இருந்த காலக்கட்டத்தில் எடுத்த புகைப்படம் அது.
சொல்லப்போனால் ஆராவமுதன் தந்தை இலக்கியன் இந்நாள் முதலமைச்சர் தான் நடராஜனின் தோழாக இருந்த காலத்தில் சுரபிக்கு பெயர் சூட்டினார்.
தமிழ் பெயராக நினைத்து தோழனின் மகளுக்கு ‘சுரபி’ என்று வைத்தார். இதில் மகன் ஆராவமுதன் இவள் சுரபி என்று இருக்க, பதின்ம வயது அடைவதற்கு முன்னர். இரண்டு பேரும் பிற்காலத்தில் கல்யாணம் செய்வாங்க. ‘அமுதசுரபி’யா பெயர் பொருத்தம் எல்லாம் கூறி மகிழ்ந்தார் நட்ராஜன் இலக்கியன் இருவரும்.
அப்பொழுது எல்லாம் நட்ராஜன் ஆராவமுதனை மாப்பிள்ளை என்று முடிவுக்கட்டி உறவாக பழகிய காலம்.
எல்லாம்.. ஆராவமுதன் முதல் வருடம் கல்லூரி முடிக்கும் நேரம் தூள் தூளானது. இரு தந்தையர்களுக்கும் அரசியலில் பகை ஏற்பட்டு பிரிந்து, ஒரு கட்சியாக இருந்தது, இரண்டாக பிரிந்த சரித்திரம், இங்கு தமிழக மக்களில் பலருக்கு தெரியும்.
என்ன ஒரு குறை மக்களுக்கு ஆராவமுதன் சுரபி பற்றி தெரியாது. ஒரே பள்ளியில் இருந்த பொழுது ஆராவமுதன் சுரபியின் டிபன் பாக்ஸ் மாற்றிக்கொண்டு உரிமையாக சாப்பிடுவான். சண்டை ஆனப்பின் பெரிதாக சுரபி முகம் கொடுத்து பேசுவதில்லை.
காரணம் ‘அரசியலில் உனக்கெல்லாம் வாரிசு இல்லை. என்னை பார் எனக்கு பிறகு என் மகன் அரசியல் வாரிசாக என்னிடத்தில் நிற்பான். நீ கட்சியை பிரித்து எடுத்து உனக்கு பின் யாரோ ஒருவன் தான் கட்சியை கைப்பற்றுவான்’ என்று கோபத்தில் நட்ராஜனை உதாசினம் செய்தார் இலக்கியன்.
நட்ராஜ் அதன் பின் சுரபியை தன் அரசியல் வாரிசாக ஆள தயார்ப்படுத்தினார்.
இந்த தமிழகத்தை ஒரு பெண் முதல்வர் ஆண்டதில்லையா? அல்லது டெல்லி பாராளுமன்றயிடத்தில் பெண்கள் அரசியலில் இல்லையா? என் மகளும் எனக்கு பின் என்னிடத்தில், என் கட்சியை வழிநடத்துவாளென்று சபதமிட்டு, இதோ மேடை பேச்சில் இலக்கியனையே வெளுத்து வாங்கும் விதமாக சொல்லாட்சி புரிகின்றாள்.
இதெல்லாம் அந்த புகைப்படத்தை கண்டதும் மனதிற்குள் நிழற்படமாக ஓடவும் ”பஸ்ட் போனை கொடு நான் என் அப்பாவிடம் பேசணும்” என்றாள் சுரபி.
” உன்னை இரண்டு கையில் தூக்கிட்டு வந்த சந்தோஷத்துல, என் போனை கவனிக்கலை. அது மழைதண்ணில நனைந்து இப்ப ஓர்க் ஆகாம சதி பண்ணுதா இல்லை நெட் சதியா தெரியலை. சுத்தமா சிக்னல் காட்ட மாட்டேங்குது. ஏதோ பாதி உசுரு இருக்கு என்பது போல டிஸ்பிளே ஒர்க் ஆகுது. ஆனா உன் போன் உன் கார்ல இருக்கும். லேண்ட் லைன் ட்ரை பண்ணலாம். ஆனா அதுவும் வேலை செய்யலை.” என்றவன் பேச்சை சந்தேகத்துடன் முகமலம்பி மௌத்வாஷ் வைத்து கொப்பளித்து, உரிமையாக காபியை பருகினாள். இலக்கியனை அந்தளவு திட்டி தீர்த்தது இவளா? எண்ணும் அளவிற்கு பகைமையை மறந்து நின்றாள்.
இரவு உணவு உண்ணாமல் கிளம்பி மயங்கி சரிந்திருக்க வயிறு காய்ந்தது. அதுவும் மனதை மயக்கும் காபியின் மணத்தை நுகர்ந்துவிட்டதால் முதலில் காபியை பருகினாள்.
ஆராவமுதன் நிதானமாக தன்னுடைய வெள்ளை சட்டையை கவனித்தான்.
ஏனெனில் அதை தானே சுரபி அணிந்திருந்தாள்.
-தொடரும்.
Hello Miss எதிர்கட்சி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 2)
அடப்பாவி… ! இவன் தானா அந்த கடத்தல் களவாணிப் பையன். இல்லைன்னு சொன்னா நானே நம்ப மாட்டேன், இதுல் சுரபி எங்க நம்ப போகுறா…?
அது சரி, போன் வேலை செய்யலைன்னு சொல்லிட்டு எப்படி போன்ல இருக்கிற சின்ன வயசு பிக்சரை காட்டுறான்னு தெரியலையே..?
ஆனா, ஒண்ணுங்க இவனுக்கு அரசியலுக்கு வர அத்தனை சாமூத்ரிகா லட்சணங்களும் அம்சமா பொருந்தி இருக்கு பாருங்களேன்.
அது சரி, எதுக்கு போட்டுட்டிருக்கிற அவனோட வெள்ளை சட்டையை கழட்டி கொடுத்தான் ? அம்புட்டு பெரிய வீட்ல அவனுக்கு வேற சட்டையே கிடைக்கலையோ…?
சட்டை அவனோடதுன்னா…
அப்ப ஷார்ட்ஸ்…? ஓ மை காட்..!
என்ன கண்றாவிடா இது..?
ஆக மொத்தம் சந்துல சிந்து பாடிட்டான்னு சொல்லுங்க.
யாரோட சட்டை..? அமுதனோட சட்டை…! அப்படின்னு ரைமிங்கா பாடத் தோணுதே…!
😀😀😀
CRVS (or) CRVS 2797
Semma interesting 💥💯🔥💯
Interesting 👌👌👌
👌👌👌👌
Wow Sema. Super..intresting
எனக்கு இன்னும் இவன் மேல தான் சந்தேகமா இருக்கு 🤔 சூப்பர் சிஸ் கதை அழகாக நகர்கிறது அடுத்த பகுதிக்கு மிக மிக மிக மிக மிக ஆவலுடன் காத்திருக்கிறேன் 😊👍
😂😂😂😂semmaa siss….
Super sis nice epi semmaiya pogudhu story 👌👍😍
Adeiyei ne sollura kadhai ah nambura mathiri yae illa ithu la ava enga irundhu nambuva ah
அவளை கடத்துனதும் இல்லாம.,.ஷர்ட் உம் போட்டு விட்டுட்டு, சூடா காபியும் குடுத்துட்டு….நல்ல புள்ளையா… பொய் சொல்றான் பாருங்க…மக்களே…🙆♀️🤦♀️