Skip to content
Home » MM 10

MM 10

இன்ஸ்டண்ட் காபி, டூ மினிட்ஸ் நூடுல்ஸ், ரெடி டு ஈட் மீல்ஸ் மாதிரி திடுதிடுப்புனு ஒரு கல்யாணம் எங்கயாச்சும் நடந்து கேள்விப்பட்டிருக்கிங்களா? இந்த மாதிரி திடீர் திருமணங்கள் மூவிஸ்லயும் நாவல்ஸ்லயும் பாசிபிள்… யாருனு தெரியாத ரெண்டு பேர் கல்யாணம் பண்ணிக்குறது, நமக்குள்ள நோ டச்சிங் நோ கிஸ்சிங்னு டீல் போட்டு லைஃபை ஸ்டார்ட் பண்ணுறது, அப்புறம் ஒருத்தர் இன்னொருத்தர் மேல அட்ராக்சன்ல விழுந்து லவ் பண்ணுறதுலாம் ஒரு ரொமாண்டிக் நாவலுக்குப் பொருத்தமான ப்ளாட்… பட் அதுவே ரியாலிட்டில உங்களுக்கு நடந்தா உங்க ரியாக்சன் எப்பிடி இருக்கும்? பயம், டென்சன், த்ரில்னு மிக்சட் எமோசன்ல எதை வெளிக்காட்டுறதுனு தெரியாம ‘ஙே’னு முழிச்சிட்டு நடக்குற எல்லாத்தையும் வேடிக்கை மட்டும் தானே பாப்போம்… இப்ப நான் அதை தான் செஞ்சிட்டிருக்கேன்… முகிலை நான் லவ் பண்ணுறேன் தான்… அதுக்காக இந்த இன்ஸ்டண்ட் கல்யாணத்தை என்னால கொண்டாட்ட மனநிலைல ரசிக்க முடியுமா என்ன?

                                                              -மேகா

“என்கேஜ்மெண்டை நம்ம வீட்டுலயே சிம்பிளா வச்சுக்கலாம் மோகன்… இப்பவா கல்யாணம் வைக்கப்போறோம்? அதுக்கு இன்னும் ரெண்டு வருசம் ஆகட்டும்… மேகாவும் படிச்சு முடிக்கணும்ல”

பாரிவேந்தன் சொல்வதை ஆமோதித்தார் மோகனரங்கம். அவர்கள் வந்து இரண்டு நாட்களில் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவு தான் மேகவர்ஷிணி – முகிலனின் திருமணம்.

மேகவர்ஷிணிக்கு இருபது வயது தான் என்பதால் இப்போதைக்கு நிச்சயத்தை மட்டும் வைத்துகொள்ளலாமென்ற முடிவு.

மோகனரங்கத்துக்கு மகளின் விருப்பத்தை மிஞ்சி எந்தவொரு கோரிக்கையும் பெரிதாக இல்லை. முகிலனின் மருண்ட பார்வையைக் கூட சுதந்திரம் பறிபோய்விடுமோ என்ற பயமாகத் தான் கருதினார் அவர்.

அதை விட நண்பனின் மைந்தன்மீது ஆயிரம் மடங்கு பலமான நம்பிக்கை அவருக்கு! ரஞ்சனா அவளுக்குத் தாயாக இருந்து பார்த்துக்கொள்வார் என்பதால் மாமியார் வழி பிரச்சனையும் மேகவர்ஷிணிக்கு இருக்காது.

தந்தையும் பாரிவேந்தனும் பேசுவதைக் கேட்ட சம்பந்தப்பட்டவளான மேகவர்ஷிணிக்கு நிச்சயதார்த்த ஏற்பாட்டில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் பாரிவேந்தன் முகிலனுக்குக் கொஞ்சம் யோசிக்க அவகாசம் கொடுத்திருக்கலாம் என்று மட்டும் எண்ணினாள் அவள்.

அவன் எதையோ இழந்தவன் போல இரண்டு நாட்கள் உலா வருவதைப் பார்த்த பிற்பாடு எழுந்த எண்ணம் அது!

அவனிடம் பேச முயன்றாலோ அவளைக் கண்டால் பேயைக் கண்டவனைப் போல ஓடுகிறான் முகிலன்! கடந்த இரண்டு தினங்களாக யூடியூப் சேனலில் எந்த வீடியோவும் பதிவேற்றாமல் சோம்பித் திரிபவனை எப்படி இயல்பாக்குவது என்ற யோசனையில் அவள் நேரத்தைக் கழித்தாள்.

பெரியவர்கள் வேறு ஏதோ முக்கியமாகப் பேச ஆயத்தமானார்கள். சோபாவில் உட்கார்ந்திருந்த மேகவர்ஷிணிக்கு அது தெரியவேண்டாம் என்ற எண்ணம் போலும்!

பாரிவேந்தன் மனைவியை அர்த்தபுஷ்டியோடு பார்க்கவும் அவர் எழுந்து மேகவர்ஷிணியிடம் வந்தார்.

“வீட்டுக்குள்ளவே உக்காந்திருந்தா போரடிக்கும்டா… நீ நம்ம முகிலோட பாலி ஹவுஸுக்குள்ள போய் பாரு… அங்க நிறைய ஃப்ளவர்ஸ் இருக்கு.. உனக்கும் டைம்பாஸ் ஆகும்” என்று ரஞ்சனா அவளைப் பாலிஹவுசுக்கு வற்புறுத்தி அனுப்பிவைத்தார்.

மேகவர்ஷிணிக்கும் மலர்கள் நிறைந்த ஈடன் நந்தவனத்துக்குள் செல்வதற்கு விருப்பம் தான். முகிலனே அவளது கையைப் பற்றி அங்கே அழைத்துச் சென்றால் நன்றாக இருக்குமெனக் கனவு கண்டிருந்தாள். அது நடப்பதாகத் தெரியவில்லை. எனவே தனியாகப் போய் நின்றாள்.

அங்கே அவளது எண்ணங்களின் நாயகன் ஆர்கிட் மலர்களை வெறித்தபடி மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான்.

மேகவர்ஷிணியைக் கண்டதும் அசௌகரியமாக உணர்ந்தவனின் மனம் ஒரு நொடி அவளைச் சபித்தது என்னவோ உண்மை!

காதலைச் சொன்னாள்! தேடி வந்தாள்! இதோ நிச்சயதார்த்தம் வரை கொண்டு வந்துவிட்டாள்! மேகவர்ஷிணி என்ற பெயரே அவனைச் சுற்றி இரும்பு வேலி ஒன்றை அமைப்பது போல உணர்ந்தவனுக்கு எப்போதும் இல்லாத வகையில் தந்தையின் முறைப்பும் கட்டளைகளும் மூச்சு மூட்ட வைத்தன.

அனைத்துக்கும் காரணம் இவள் தானே என்ற ஊமைக்கோபம் அவனுக்கு. அதை வெளிக்காட்டக்கூட சுதந்திரம் இல்லையே என உள்ளுக்குள் அவன் கதறிக்கொண்டிருக்கிறான் இரு தினங்களாக.

முடிந்தளவு மேகவர்ஷிணியைப் பார்ப்பதைத் தவிர்த்தவன் இப்போது அவளே முன்னே வந்து நிற்கவும் கசப்பான புன்னகையோடு “வாங்க லிட்டில் மன்ச்கின்! ஒரு வழியா நினைச்சதை சாதிச்சிட்டிங்க போல” என்று வினவினான்.

ஆர்வமும் ரசனையிடும் குமிழிடும் விழிகளோடு பாலி ஹவுசுக்குள் அடியெடுத்து வைத்தவளை அவனது கசந்த புன்னகை தயக்கத்தோடு நிற்க வைத்தது. கிட்டத்தட்ட ஒரு குற்றவாளியைப் போல!

இவ்வளவு நேரம் வன்மத்தோடு சபித்த முகிலனின் மனம் பாலி ஹவுசுக்குள் அத்துமீறி நுழைந்த காலை கதிரவனின் பொன்மஞ்சள் ஒளியில் இறகில்லாத தேவதையாக ஜொலித்தவளைக் கண்டதும் பேசக் கூட மறந்துபோனது.

முதல் முறையாக மேகவர்ஷிணியை ஊன்றி கவனித்தான் முகிலன். கவனித்தவனை ரசிக்கவும் வைத்தாள் குற்றவுணர்ச்சியில் உதடு கடித்து தவறு செய்த சிறுபிள்ளையைப் போல மருண்டவிழி பார்வையோடு நின்ற மேகவர்ஷிணி.

தன்னை அவன் ரசிப்பதை அறியாமல் அவனது வார்த்தைகளும் சற்று முன்னர் கண்ட கசந்த புன்னகையும் மட்டுமே நினைவில் இருக்க தலையைக் குனிந்துகொண்டவள் தன்னைச் சமாளித்துக்கொண்டு “முகில்” என ஆரம்பிக்கும்போதே வேகமாக அவளை நெருங்கியவன் இடையோடு சேர்த்து இழுத்து தன்னுடன் அணைத்துக்கொண்டான்.

அதோடு நிற்காமல் அணிந்திருந்த டெனிம் ஜாக்கெட்டுக்குள் அவளைப் புதைத்தவன் “பயந்துடாத” என்று பதற்றத்தோடு உரைக்க மேகாவிற்கோ ஒன்றுமே புரியவில்லை.

அவள் உணர்ந்தது எல்லாம் அவனது திண்ணிய மார்பு தசைகளின் வரி வடிவமும், ஐந்தடி பத்தங்குல தேகத்தின் இதமான வெம்மையும் தான்!

மனங்கவர்ந்த ஆடவனுடன் அமைந்த முதல் நெருக்கமான சூழல் இது! காது கதுப்பில் ஆரம்பித்து கால் விரலின் நுனி வரை புது இரத்தம் பாய்ந்தது போல மெல்லிய மின்சார ஊடுருவல் அவளுக்குள்!

முகிலனின் இதயத்துடைய ‘லப்டப்’ சிம்பொனியாக ஒலித்தது மேகாவின் செவிக்குள்.

இதெல்லாம் பலமணி நேரங்கள் நடந்தேறிய பிரமைக்குள் அவள் மூழ்கும் முன்னர் தன்னிடமிருந்து அவளைப் பிரித்து நிற்க வைத்தான் முகிலன்.

அணைத்தபோதிருந்த பதற்றத்தின் கடைசித்துளி அவனது வதனத்தில்.

குறுகுறுத்த காது மடல்களைக் கூந்தலை ஒதுக்கிவிடுவது போல தடவிக்கொடுத்தபடி “என்னாச்சு முகில்? ஏன் இவ்ளோ டென்சன்?” என்ற இரு கேள்விகளைக் கேட்டு முடிக்கும் முன்னர் மேகவர்ஷிணிக்கு மூச்சு வாங்கியது.

முகிலன் மார்பில் ஒட்டாத தூசியைத் தட்டியபடி “குளவி ஒன்னு சுத்தி வந்துச்சு… மஞ்சள் குளவி கொட்டுனா உயிருக்கே ஆபத்து” என்று சொல்லவும் மேகாவின் கண்களில் மிரட்சியின் ரேகைகள் விரிய ஆரம்பித்தன.

அதைக் கவனித்தவன் அவளது தோளில் சினேகமாகத் தட்டினான்.

“ஹேய்! அது போயிடுச்சு… பயப்படாத… ரிலாக்ஸ்” என்றவன் முறுவலிக்கவும் அனிச்சையாக மேகவர்ஷிணியின் இதழ்களும் விரிந்தன.

அதைப் பார்த்த முகிலனுக்குள் மெல்லிய குறுகுறுப்பு! சற்று முன்னர் தான் அவளைச் சபித்தேன்! க்ஷணப்பொழுதில் அவளுக்காகத் துடிக்கவும் செய்துவிட்டேன்! என்ன தான் நடக்கிறது எனக்குள்? நான் இவளை விரும்புகிறேனா? வெறுக்கிறேனா?

குழம்பித் தவித்தவனை இன்னும் சோதனைக்கு ஆளாக்கியது மேகவர்ஷிணியின் ஆப்பிள் கன்னங்களில் சிரிக்கும் போது விழும் குழிகள்! கூடவே வலது பக்கத்தில் அழகாய் ஒரு தெற்றுப்பல் சிரிப்புக்குப் புதுப்பொலிவைக் கொடுத்தது.

செவ்விதழ்களின் ஓடும் வரிகள் கூட புலப்படும் அளவு தான் இருவருக்குமிடையே இடைவெளி இருந்தது. சின்ன குழந்தைகளின் கன்னத்தைப் பற்றி உதட்டைக் குவியச் செய்து விளையாடுவதைப் போல அவளிடமும் விளையாட மனம் விரும்பியது.

தன்னை மீறி இதெல்லாம் நடப்பதை உணர்ந்தவன் “டேய் அலையாதடா… கண்ட்ரோல் முகிலு கண்ட்ரோல்” என்று மானசீகமாகச் சொன்னபடி தன் கன்னத்தில் படபடவென தட்டிக்கொண்டான்.

“பாக்காதடா அவளைப் பாக்காத” என்று மந்திரம் போல சொல்லிக்கொண்டு திரும்பி நின்றவனைப் பார்த்து குழம்பியவள் என்னவோ மேகவர்ஷிணி தான்!

“உனக்கு என்னைப் பிடிக்கலையா முகில்?” என்று வினவினாள் அவனிடம்.

“பிடிக்கலனு சொன்னா நிச்சயத்தை நிறுத்திடுவியா?”

“நோ வே”

“அப்புறம் எதுக்குடி நியாயவான் மாதிரி கேள்வி கேக்குற?” என்று புயலைப் போல திரும்பியவனின் கண்களில் எப்படியாவது நிச்சயத்தை நிறுத்திவிடு என்ற அவஸ்தை அப்பட்டமாகத் தெரிந்தது.

மேகாவுக்கோ பரிதாபத்துக்குப் பதிலாகச் சிரிப்பு வந்தது.

அவள் சிரிக்கையில் புத்தி தறிகெட்டு கண்டபடி போகிறது என்பதால் முன்னெச்சரிக்கையாக கையை உயர்த்தியவன் “சிரிக்காத! திடுதிடுப்புனு ஒரு பையனோட லைஃப்ல வந்து அதைக் குழப்புறோமேங்கிற குற்றவுணர்ச்சி கொஞ்சமாச்சும் இருந்துச்சுனா இப்பவே போய் என்கேஜ்மெண்ட் வேண்டாம்னு எங்கப்பா கிட்ட சொல்லு” என்றான் காரியத்தில் கண்ணாக.

“என்னை லவ் பண்ணுடுவியோனு பயப்படுறியா முகில்?”

முகிலன் சலிப்போடு தன் பின்னங்கழுத்தைத் தடவிக்கொண்டான். இரு கைகளால் அவளது தலையைப் பிடித்து உலுக்குபவனைப் போல வந்தவன் அவளை நெருங்கினால் புத்தி பேதலிப்பதை அறிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி நின்றான்.

கைகள் அந்தரத்தில் நிற்பதை மேகவர்ஷிணி கேள்வியாகப் பார்க்கவும் கீழே போட்டவன் “என்னைக் கல்யாணம் பண்ணுனா நீ எல்லா விதத்துலயும் ஏமாந்து போவ மேகா… உனக்கும் எனக்கும் இடைல இண்டிமசி சுத்தமா இருக்காது… என்னால உன்னை அப்பிடியெல்லாம் யோசிக்க முடியாதுடி… உனக்கு நான் எப்பிடி புரியவைப்பேன்?” என்று தவிப்பாய்ப் பேச பேச அவளது விழிகளில் குறும்பு மின்னியது.

“ஏன் முகில் உனக்கு மடோனா – ஹோர் காம்ப்ளக்ஸ் (Madona Whore complex) இருக்குதா?”

“எதே?” தூக்கிவாரிப்போட்டது முகிலனுக்கு,

“நீ தானே சொன்ன என் கூட இண்டிமசி பில்ட் பண்ண முடியாதுனு… ஒய்ப் மேல ஹஸ்பெண்டுக்கு அட்ராக்சன், செக்ஸ்வல் இண்ட்ரெஸ்ட் வரலனா தப்புல்ல முகில்… கண்டிப்பா கவுன்சலிங் எடுத்தே ஆகணும்”

முகிலன் வேக எட்டுகளில் மேவர்ஷிணிக்கும் தனக்குமிடையே இருந்த சமூக இடைவெளியை நிரப்பியவன் அவளது கன்னங்களைத் தீவிர பாவனையுடன் பற்றினான்.

“எனக்கு உன்னைப் பாத்து அட்ராக்சன் வரலனு யார் சொன்னது? சிரிக்குறப்ப கன்னத்துல விழுதே இந்தக் குழி, இந்தத் தெத்துப்பல்லு, இவ்ளோ ஏன் உன்னோட உதட்டுல இருக்குற ஒவ்வொரு சின்ன லைனும் என் புத்திய தடுமாற வைக்குது… ஃபர்ஸ்ட் டைம் ஆல்கஹால் எதுவுமில்லாம ஜிவ்வுனு போதை ஏறிப் போய் நிக்குறேன்டி… ஐ அம் அட்ராக்டட் டுவார்ட்ஸ் யூ மேகா”

அவளிடம் எதையோ நிரூபிப்பவன் போல ஆவேசமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவனுக்கு எப்படி தன் மனநிலையை அவளிடம் புரியவைப்பதென தெரியவில்லை.

பற்றிய கன்னங்களின் மென்மையை இழக்க விரும்பாத கரங்கள் அப்படியே இருக்க “லுக் மேகா! என் லைஃப் பார்ட்னர் கூட வெறும் செக்சுவல் அர்ஜுக்காக நான் வாழ விரும்பல… மேரீட் லைஃப் நீட்ஸ் லவ்” என்று சொன்னவனின் குரலில் வெண்ணெய்யின் குழைவு!

பெருவிரலால் அவள் கன்னத்தை வருடியவனை விலக்காமல் நின்றவளோ “என் கிட்ட போதும் போதும்ங்கிற அளவுக்குக் காதல் இருக்கு முகில்… நம்ம வாழ்க்கைக்கு அது போதும்… உன்னை மாதிரி லவ், லஸ்ட், செக்சுவல் அர்ஜ் இப்பிடிலாம் தனித்தனியா யோசிச்சு குழம்ப தெரியாது எனக்கு… இப்ப நீ பாக்குறல்ல இந்தப் பார்வைல என் மனசு ஜில்லுனு குளிர்ந்து போகுது… இந்த ஃபீல் தான் லவ்னு நான் நம்புறேன்… காதலுக்கு நீ என்ன டெபனிசன் வச்சிருக்கனு எனக்குத் தெரியாது… என் வரையில காதல்னா இது தான்… இதோ இந்தக் கண்ணுல தெரியுதே இந்த ஃபீல் தான்” என்று சொல்லி முறுவலித்தாள்.

முகிலன் பக்கென நகைத்தவன் “பேசி பேசி ஆளைக் கவுக்குறதுல நீ என் அப்பாவ மாதிரியே இருக்க” என்றவனின் பெருவிரல் அடுத்த இலக்காக அவளது இதழைத் தீண்டப்போன நொடியில் பாரிவேந்தனின் செருமல் சத்தம் கேட்டது.

உடனே வேகமாக விலகி நின்றார்கள் இருவரும். தந்தை என்ன சொல்லப்போகிறாரோ என்று முகிலன் பதறியபோதே பாரிவேந்தனின் வதனத்தில் மென்மையான முறுவல் பூத்தது.

“அவசரமா நிச்சயம் பண்ண நினைச்சிட்டேனோனு நான் குழம்பிப் போயிருந்தேன்.. இப்ப எனக்கு அந்தக் குழப்பம் போயிடுச்சு… என்கேஜ்மெண்டுக்கு உங்க ரெண்டு பேரோட ஃப்ரெண்ட்சை கூப்பிடலாமானு கேக்குறதுக்காக வந்தேன்” என்றார் அவர்.

முகிலன் இப்போது மானசீகமாகத் திட்டியது தன்னைத் தான்.

“புத்தி கெட்டுப் போய் நீ தடுமாறி நின்ன மொமண்டை பாத்துட்டார் இவரு… இனிமே உலகமே அழிஞ்சாலும் இந்த என்கேஜ்மெண்டை நிறுத்த முடியாதுடா”

மகன் அமைதியாக நிற்கவும் மேகவர்ஷிணியிடம் அவள் தரப்பில் தோழிகளை அழைக்கப்போகிறாளா என வினவினார். அவள் ரம்யாவை மட்டும் அழைப்பதாகக் கூறவும் வருங்கால மருமகளைத் தன்னோடு அழைத்துப்போய்விட்டார்.

தந்தையும் மேகவர்ஷிணியும் அங்கிருந்து சென்றதும் முகிலன் தன்னைத் தானே நொந்தபடி நின்றவன் மொபைலில் ஏதோ மின்னஞ்சல் வந்திருக்கவும் அது என்னவென பார்க்க ஆரம்பித்தான்.

ஒரு பிரபல ‘பெட்டிங் செயலியில்’ இருந்து மின்னஞ்சல் வந்திருந்தது.

அந்தச் செயலியைப் பற்றி தனது வீடியோக்களில் முகிலன் விளம்பரம் செய்து அதன் ப்ளேஸ்டோர் இணைப்பைக் கொடுப்பதன் மூலம் அவனை சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்கள் அந்த செயலியைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துவார்கள்.

அதில் தினந்தோறும் கிரிக்கெட் முதலிய விளையாட்டுகளில் பணம் கட்டி யார் ஜெயிப்பார்கள் என்று கணிப்பதன் மூளம் பணமீட்டலாமென குறிப்பிட்டிருந்தார்கள்.

முகிலன் பெரிதாக எதுவும் யோசிக்கவில்லை. உடனே அவர்களிடம் சம்மதம் தெரிவித்துவிட்டான். அதற்கான தொகை இன்னும் சில மணி நேரங்களில் அவனது வங்கி கணக்கில் வைப்பு வைக்கப்படுமென பதில் வந்ததும் மொபைலை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு மீண்டும் ஆர்க்கெட்களைப் பார்வையிட ஆரம்பித்துவிட்டான்.

மனதிற்குள் எப்படி தனது மனநிலையை மேகவர்ஷிணியிடம் முழுமையாக விளக்குவதென்ற போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்க கவனக்குறைவாக செய்த ஒரு காரியம் அவனது வாழ்க்கையைத் திருப்பிப் போடப்போவதை முகிலன் அறியவில்லை.

16 thoughts on “MM 10”

  1. Avatar

    Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 marubadium enna prechanaiyila maata porano kadavuley 🙄

  2. M. Sarathi Rio

    மேகத்தின் மோனம்..!
    (அத்தியாயம் – 10)

    அச்சோ..! இவன் திரும்ப, திரும்ப அவங்கப்பா சொல்ற மாதிரியே, தன் அலட்சியத்தால திரும்பவும் கிரிக்கெட் பெட்டிங்
    செயலியில் சேரப் போறானா என்ன..? போச்சு போ… ! பிரச்சினையில வாலண்ட்ரியா போய் வான்டட் ஆகுறதே
    இவனோட வேலையாப் போச்சு.

    ஆனா, முகில் மனசுல நிச்சயமா மேகா மேல காதல் இருக்குதோன்னு தோணுது.
    ஏன்னா, ஒரு பையன் நோ:ன்னு சொன்னா அது கடைசிவரைக்கும் நோ தான்… !அதுவே அவன் எஸ்ன்னு சொன்னா, அது எப்பவும் எஸ் தான். இதானே ஹியூமன் சைக்காலஜிக்கல். முகில் மனசுலேயும் அவ மேல காதல் எப்பவோ வந்திடுச்சு. பட்,
    அதை மனப்பூர்வமா ஒத்துக்க மறுக்குறான். பிகாஸ், அவன் மனசுல இருக்கிற குழப்பங்கள் தான் காரணம். அதான் அந்த காதலை உணர முடியாம தவிக்கிறான்னு தோணுது.
    அது உணருற காலம் கூடிய விரைவிலேயே வரத்தான் போகுது. இல்லைன்னா, அப்பா சொன்னாரு, ஆட்டுக்குட்டி சொல்லிச்சுன்னெல்லாம் எவனாவது ஒருத்தன் மண்டையை, மண்டையை ஆட்டி கல்யாணத்துக்கு சம்மதிப்பானா என்ன… சொல்லுங்க பார்க்கலாம்..???
    😁😁😁
    CRVS (or) CRVS 2797

  3. Avatar

    Parivendhan bayapadrathu niyam.na ra mathiri than ivan oda activities iruku ivan pattu ku ithuku ok solluran yae nalaiku ithu na la ethachum prachanai vandha enna pannuvan ivan

  4. Kalidevi

    Ena tha vera yosanaila irunthalum konjam yosichi senji irukanum wekanave oru prachanai la maati tha ipo pidikama kalayanam varai poi iruku . Ipp rnavo

  5. Avatar

    லாசா இவன் மையில் ஓழங்கா படிக்கிறது இல்ல… பாரி சொல்லறது தப்பே இல்ல

  6. Avatar
    Anupama Ravichandran

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  7. Avatar

    கடவுள் என்ன ஃபுல் டைம்மா பிரச்சனைகள் எல்லாத்தையும் முகிலனுக்கு மட்டுமே கொடுக்கலாம்னு முடிவு எடுத்துட்டாரோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *