Skip to content
Home » MM 16

MM 16

முகில் இன்னும் எங்களோட ரிலேசன்ஷிப்ல முழுசா இணையலனு தோணுது… Our relationship seems like a bread crumbing relationship… சில நேரம் அவனோட கண்ணுல தெரியுற உணர்வுல நானே தொலைஞ்சு போயிடுறேன்… அப்ப இவனுக்கும் நம்ம மேல ஒரு ‘இது’ இருக்குதோனு நான் கியூரியாசிட்டில இருக்குறப்ப டக்குனு விலகிப்போயிடுறான்… அவன் மைண்டுல என்ன ஓடுதுனு எனக்குச் சத்தியமா புரியல… ஆனா ஒன்னு, அவன் என்ன பண்ணனும்னு புரியாம தவிக்குறதை பாக்க நல்லா இருக்கு.

                                                                         -மேகா

மேகாவும் முகிலனும் சென்னையிலிருந்து உதகமண்டலத்திற்கு திரும்பி தங்களது தனிக்குடித்தன வாழ்க்கையில் இயல்பாகக் கலந்துவிட்டார்கள்.

மேகாவுடன் இருக்கும்போது தனக்கு நடந்த திருமணம் பற்றிய அதிருப்தி எண்ணங்கள் முகிலனை விட்டுத் தூரமாகிவிடும். எப்போதும் அவன் அங்கேயே இருக்க முடியாதல்லவா!

அவன் ஆசையாக வளர்த்து வரும் மலர்களையும் ஈடன் தோட்டத்தையும் பிரிந்து முகிலனால் இருக்க முடியாது. கூடவே ‘கார்டன் வ்ளாக்’ எடுக்க வீட்டுக்குப் போய் தானே ஆகவேண்டும்!

அப்படி போகும் போது பாரிவேந்தனைக் காண நேரிட்டால் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி தலைகீழாகத் தொங்க ஆரம்பிக்கும்.

அங்கிருந்து வீட்டுக்குப் போகமாட்டான். தனக்குள் இயலாமையால் உண்டாகும் ஏமாற்றத்தையும் சுயவிரக்கத்தையும் போக்குவதற்காக ராமுடன் சேர்ந்து ஜிம்முக்குப் போய்விடுவான்.

வியர்க்க விறுவிறுக்க ஜிம் ட்ரெய்னர் சொன்ன உடற்பயிற்சிகளை வெறியோடு செய்து அந்த இயலாமையைக் கரைத்துவிட்டு வருபவனுக்கு மேகவர்ஷிணியின் செடி குழந்தைகளைப் பார்த்ததும் வேறெந்த எதிர்மறை உணர்வுகளும் மனதில் இருக்காது.

அவன் வீட்டுக்குத் திரும்பியதும் மனைவி சமைத்திருந்தாள் என்றால் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுப்பான். பின்னர் மாலையில் அவள் புத்தகங்களுடன் போராடுவாள். அவனோ ராமுடன் சேர்ந்து வீடியொ எடிட்டிங்கில் அமர்ந்துவிடுவான். இரவுணவை இருவரும் சேர்ந்து சமைப்பார்கள்.

உடனே சாப்பிடாமல் வராண்டாவில் கிடக்கும் மரபெஞ்சில் அமர்ந்து சிறிது நேரம் கதை பேசுவார்கள். அவர்களுக்கென பேசுவதற்காக தினமும் ஏதோ ஒரு விசயம் கிடைத்துவிடும்.

நேரம் போவதே தெரியாமல் பேசுவார்கள்! சிரிக்க சிரிக்க பேசியதில் சில நேரங்களில் பசி மறந்து போய்விடும்.

பேச்சு சுவாரசியத்தில் கரங்கள் கோர்ப்பதையோ, தோளில் சாய்வதையோ இருவரும் விகல்பமாக யோசித்ததேயில்லை.

முகிலனைக் காதலிப்பதால் அவனிடம் மேகா எந்த அட்வான்டேஜும் எடுத்துக்கொள்ளமாட்டாள். அவனுக்கான ஸ்பேசை கொடுக்கவும் தவறமாட்டாள்.

அதே நேரம் நீ என் கணவன் என்பதை அடிக்கடி அவள் பேச்சின் மூலம் நினைவூட்டிக்கொண்டே இருப்பாள். வெளிப்பார்வைக்கு முகிலன் அதை நகைச்சுவையாக எண்ணி கடப்பது போல தெரிந்தாலும் அவனுக்குள்ளும் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன.

அவளைச் சீண்டுவதிலும், மென்மையாகத் தீண்டுவதிலும் மெல்லிய இன்பம் தனக்குள் ஊற்றெடுப்பதைப் புரிந்துகொண்டான் முகிலன். அவளது செல்லத்தொந்தரவுகள் விதவிதமாக அவனைப் பாதித்தன.

அது வேதனையை உண்டாக்கும் பாதிப்பு அல்ல. மாறாக அவனுக்குள் இருக்கும் கணவனை உசுப்பேற்றும் இதமான பாதிப்பு அது. சில நேரங்களில் அலுத்துக்கொள்வான்.

சில நேரங்களிலோ பதிலுக்கு அவனும் அவளைச் சீண்டுவான்.

முகிலனது சீண்டல்கள் எல்லாம் மேகவர்ஷிணியின் குறும்புத்தனத்துக்கு முன்னே ஒன்றுமேயில்லை எனலாம்.

அவனுக்கு இருட்டு என்றால் பயம்! அதை வைத்து அவனைக் கலாய்ப்பாள். பொழுது போகவில்லை என்றால் அவனைக் கலாய்த்து சிரிப்பாள்.

இதெல்லாம் சில நேரங்களில் முகிலனுக்குத் தொந்தரவாக இருந்தாலும் பல நேரங்களில் அவனுமே அவள் தன்னுடன் இயல்பாக வாயாடுவதை ரசித்தான்!

அடிக்கடி மேகாவின் வதனத்தைக் கரங்களுக்குள் அடக்கி உள்ளங்கைக்குள் ஏந்தி ஆழ்ந்து நோக்குவது அவனுக்குப் பிடித்துப் போனது.

பார்வையோடு நிற்கும் உணர்வுகள் அடுத்த கட்டம் செல்லேன் என்று தூண்டும்! அந்நேரத்தில் மேகாவின் ஸ்டடி டேபிளில் வீற்றிருக்கும் புத்தகங்கள் அவனைப் பின்னடையச் செய்துவிடும்.

சமைக்கும் போது உணவில் உப்பு சரி பார்க்க அவளிடம் கரண்டியில் சிறிது குழம்பை எடுத்து அவன் உள்ளங்கையில் ஊற்றி ருசி பார்க்கச் சொல்வான் முகிலன்.

மேகாவும் அதைச் சுவைத்துவிட்டு “ம்ம்… உப்பு கரெக்டா இருக்கு முகில்” என்று சொல்லிவிட்டு குழம்பு படிந்த உதட்டை அவனது புஜத்தில் துடைத்துவிட்டுப் போவாள்.

“ஏன்டி அந்த வாயை வாஷ் பேஷின்ல கழுவ என்ன கேடு?” என்று சிடுசிடுத்தாலும் உள்ளுக்குள் சிரித்துக்கொள்வான் அவன்.

அவளோ பதில் சொல்கிறேன் பேர்வழியென அவனோடு வம்பு வளர்ப்பாள்.

இவர்களின் வாழ்க்கை முறை வினோதமாக இருந்தாலும் சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்தாலும் எதற்காகவும் பெற்றவர்களிடம் போய் நின்றதில்லை இருவரும்.

அந்த வகையில் பாரிவேந்தன், ரஞ்சனா, மோகனரங்கம் மூவருக்கும் நிம்மதியே! இப்படியே முகிலன் – மேகவர்ஷிணியின் முதல் மாத திருமண நாளும் வந்தது.

பாரிவேந்தன் மகனையும் மருமகளையும் வீட்டுக்கு வரவழைத்திருந்தார். இருவரிடமும் தேனிலவு பற்றிய பேச்சை ஆரம்பித்தபோது ரஞ்சனாவும் மோகனரங்கமும் ஏன் இதெல்லாம் பேசுகிறீர்கள் என்ற ரீதியில் பார்த்தார்கள்.

“என்ன பாக்குறிங்க? இவன் செடிய நடுறான், ஊர் சுத்துறான்னு கல்யாணம் பண்ணி வச்சா இப்ப மருமகளையும் சேர்த்து அதே ரொட்டீன்குள்ள கொண்டு வந்துட்டான்” என்றார் அவர்.

மேகாவும் இப்போது செடி வளர்ப்பில் பிசியாகி இருப்பதை அவர் கவனிக்காமல் இருப்பாரா என்ன?

முகிலன் அசட்டையாகத் தோளைக் குலுக்கினான்.

“மேகா படிச்சிட்டிருக்காப்பா… அவளை ஹனிமூன்ங்கிற பேருல ஊர் சுத்தக் கூட்டிட்டுப் போனா அவ படிப்பு பாதிக்கப்படாதா?”

“அடேங்கப்பா உங்களுக்கு இவ்ளோ அக்கறையா? அதெல்லாம் ஓரங்கட்டிட்டு மருமகளோட ஹனிமூன் போயிட்டுவா… அதுல ஒன்னும் அவ படிப்பு பாதிக்கப்படாது”

முகிலன் அமைதியாய் இருக்க மேகவர்ஷிணிக்கு என்னவோ சந்தோசம் தான். அவளை ஓரக்கண்ணால் முறைத்தவன் “இவ ஒருத்தி எப்பவும் க்ளவுட் நைன்லயே இருக்கா” என்று முணுமுணுக்க

“என்னடா சொல்லுற?” என்று பாரிவேந்தனின் அதட்டல் கேட்டதும்

“சரிப்பா” என்று வேகமாகத் தலையை உருட்டினான் அவன்.

ரஞ்சனா மருமகளைத் தனியே அழைத்துப் போய் தேனிலவுக்குப் போனால் படிப்பு பாதிக்கப்படுமா என விசாரித்தார்.

“அப்பிடில்லாம் இல்லத்த… செமஸ்டருக்கு இன்னும் ஃபைவ் மன்த்ஸ் இருக்கு… என் கூட இருக்குறதால முகில் ஒரு மாசம் எந்த ட்ராவல் வ்ளாகும் போடலத்தை… இதை சான்ஸா வச்சு அவனும் வ்ளாக் எடுப்பான்ல”

மகனைப் பெயர் சொல்லி இயல்பாக அழைப்பதைக் கேட்டு ரஞ்சனாவுக்கு திகைப்பு தான். இந்தக் காலத்துப் பெண்கள் துணிச்சல் மிக்கவர்கள் தான் என்று எண்ணிக்கொண்டார்.

அதே நேரம் மோகனரங்கமும் மருமகனிடம் தன் மகள் அவனை நல்லபடியாகப் பார்த்துக்கொள்கிறாளா என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

“வீ ஆர் மியூச்சுவலி கேரிங் ஃபார் ஈச் அதர் மாமா… அவளால எனக்கு எப்பவுமே பிரச்சனை வந்ததில்ல…  எங்க லைஃப் நல்லபடியா போகுது”

மோகனரங்கம் நிம்மதியடைந்தார்.

முகிலன் மேகாவைத் தேட அவளோ அவனது பாலிஹவுசுக்குள் நின்று கொண்டிருந்தாள்.

அவள் கணவனின் வளர்ப்பு பிள்ளைகளான மலர்ச்செடிகளை ரசித்துக்கொண்டிருந்தவளை ஓரமாக இருந்த ஹையாசிந்த் செடிகளில் மொக்கு வந்திருந்தது.

ஒரு மலர்க்கொத்து மட்டும் மலர்ந்தால் போதும்! மொத்த பாலிஹவுசும் மணம் கமழ்ந்து போகும்!

“மேகா”

முகிலன் அழைக்கவும் “இதோ வர்றேன் முகில்” என்றபடி அங்கிருந்து வீட்டுக்குள் ஓடினாள்.

அங்கே ஜன்னல் திட்டின் விளிம்பில் சாய்ந்து நின்றிருந்தான் முகிலன்.

“எதுக்குக் கூப்பிட்ட என்னை?” என்றபடி வந்தவள் அவனருகே சாய்ந்து நின்றாள்.

“உன் மாமனார் நம்மளை ஹனிமூனுக்குப் போகச் சொல்லுறார்… மேடமுக்கு அதுல எந்தப் பிரச்சனையுமில்லயே? போலாமா ஹனிமூனுக்கு?”

விசமப்பார்வையோடு கேட்டான் அவன். மேகவர்ஷிணியோ அவனது புஜத்தில் குத்தினாள்.

“அது என்ன என் மாமனார்? உன் அப்பா தானே அவரு… சும்மா சும்மா சிலிர்த்துக்காத முகில்”

“அதுல்லாம் அப்பிடி தான்… உன்னை மாதிரி குட்டிப்பிசாசை நேக்கா என் தலைல கட்டுனார்ல”

குறை சொல்லுவது போல இருந்தாலும் அவனது பேச்சு கேலியே என்று புரிந்ததால் சிரிப்பைக் கட்டுப்படுத்துவது போல உதட்டின் குறுக்கே ஆட்காட்டிவிரலை வைத்துக்கொண்டாள்.

“லோனாவாலா, ஆம்பி வேலி அங்கல்லாம் போய் ட்ராவல் வ்ளாக் போடலாம்னு ஷெட்யூல் போட்டு வச்சிருந்தேன்… பேசாம அந்த வ்ளாகையும் ஹனிமூன் ட்ரிப்லயே எடுத்துடலாமா?”

அனுமதி கேட்பது போல ஒலித்தது அவனது குரல்.

மேகவர்ஷிணி ஆர்வமாகத் தலையாட்டினாள்.

“நான் அங்கல்லாம் போனதேயில்ல முகில்” என்றவனின் கண்களில் அதீத குறுகுறுப்பு!

“அங்க என் கூட வரணும்னா நான் பண்ண போற அட்வென்சர்ஸ் எல்லாத்துலயும் நீயும் இருக்கணும்… இந்தக் கண்டிசனுக்கு ஓ.கேனா சொல்லு… உன்னை அழைச்சிட்டுப் போறேன்… இல்லனா வீட்டுலயே உக்காந்து டிவி சீரியல் பாரு” என்றான் முகிலன்.

அட்வென்சர் என்றதும் மேகவர்ஷிணியின் கண்களில் இருந்த குறுகுறுப்பு கொஞ்சம் பின்வாங்கியது. அதில் யோசனையின் சாயல் படிந்தது.

கீழுதட்டைக் கடித்து யோசித்தவள் “அட்வென்சர்னா எப்பிடி முகில்?” என்க

“ஸ்கை டைவிங், பாரா க்ளைடிங் இந்த மாதிரி… அதுல்லாம் செம த்ரில்லா இருக்கும்… லாஸ்ட் டைம் என்னோட பாரா க்ளைடிங் எக்ஸ்பீரியன்ஸ் எவ்ளோ எக்சைட்மெண்டா இருந்துச்சு தெரியுமா? பஞ்சு பொதி மாதிரி மேகக்கூட்டத்துல மிதந்துகிட்டே காலுக்கு கீழே கட்டெறும்பு மாதிரி தெரியுற மரங்களையும், ரோடுகளையும் பாத்தப்ப வந்த ஃபீலே தனி… ஐ ஃபெல்ட் லைக் ஐ வாஸ் பவுன்சிங் ஆப் த வால்ஸ் ஆன் தட் டே… ஸ்கை டைவிங்கை மிஸ் பண்ணக்கூடாதுனு தான் ஆம்பி வேலிக்குப் போகணும்னு டிசைட் பண்ணுனேன்” என்றான் அவன்.

முகிலன் அவனது அனுபவத்தை விவரித்துச் சொல்ல சொல்ல மேகவர்ஷிணியின் அடிவயிற்றில் பூனைக்குட்டி நகத்தினால் பிறாண்டினால் வலிக்குமே அப்பிடி ஒரு வலி. அது பயத்தில் வந்த வலி என்று தனியாகச் சொல்லவேண்டுமா என்ன?

“எனக்கு உயரம்னா பயம் முகில்” கண்களில் கிலியுடன் அவள் கூற முகிலனின் கண்களிலோ விசமம் கொப்புளித்தது.

“இதை தானே நீ முதல்லயே சொல்லிருக்கணும்… நீ கண்டிப்பா என் கூட ஸ்கை டைவிங்குக்கு வர்ற” என்றவனை அவஸ்தையாய் பார்த்தாள் அவன் மனைவி.

“நான் வரமாட்டேன்” என்றாள் பிடிவாதத்தோடு.

“நீ என்னடி வர்றது? நான் உன்னைத் தூக்கித் தோள்ல போட்டுட்டுப் போயிட்டே இருப்பேன்… பல அடி உயரத்துல நீ அப்பிடியே காத்துல மிதந்து போறதை நான் என் கண்ணால பாக்கணும்” என்றவனைப் பரிதாபமாகப் பார்த்தவள்

“எத்தனை நாளா இந்தப் பழிவெறி?” என்று உதட்டைப் பிதுக்க

“நீ என்னை மிஸ் பண்ணுனியா முகில்னு எங்க வீட்டுக்கு வந்து நின்னியே அப்ப இருந்து செல்லக்குட்டி… முகத்தைப் பாவமா வச்சுக்காம போய் லக்கேஜை எடுத்து வை… உன் மாமனார் கிட்ட நம்ம ஹனிமூனுக்குப் போக ரெடினு சொல்லிட்டு வந்துடுறேன்” என்றபடி ஸ்லீவை முழங்கை வரை மடித்துவிட்டுக்கொண்டு கிளம்பியவனைப் பார்த்தபடி தரையை உதைத்தாள் மேகவர்ஷிணி.

தந்தையின் அறையை நோக்கிச் சென்ற முகிலனோ தேனிலவு உற்சாகத்தை விட தன்னை விதவிதமாகத் தொந்தரவு செய்தவளுக்குப் பதிலடி கொடுக்கப் போகும் குதூகலத்தில் இருந்தான்.

பாரிவேந்தன் மகன் தன் அறைக்குள் தலை நீட்டவும் “என்னடா ஹனிமூன் ஸ்பாட் என்னனு டிசைட் பண்ணிட்டியா?” என்று கேட்க

“மகாராஷ்டிரா போகலாம்னு இருக்கேன்பா… லோனாவாலா, ஆம்பிவேலி ரெண்டு ப்ளேஸ்லயும் என்ஜாய் பண்ணுறதுக்கு நிறைய இருக்கு” என்றான் ஆர்வமாக.

பாரிவேந்தன் சரி தான் என்பது போல தலையாட்டியவர் “நீ போறது ஹனிமூன்… வ்ளாக் ஷூட்டிங் இல்லனு ஞாபகம் வச்சுக்க… அங்க நீ வ்ளாக் எடுத்தாலும் உன் யூடியூப் சேனல்ல நீ ஹனிமூன் போனது எல்லாம் வராத மாதிரி பாத்துக்க… உன் யூடியூப் புரொபசன் வேற, உன்னோட சொந்த வாழ்க்கை வேற… இப்ப இருக்குற யூடியூபர்ஸ் மாதிரி ட்ராவல் வ்ளாகை ஹனிமூன் வ்ளாகா மாத்திடாத… மேகாக்கு அதுல்லாம் பிடிக்காதுடா… உன் புரொபசனுக்காக நீ வ்ளாக் எடுக்க போனா தயவு பண்ணி அந்த ஷூட்ல மேகா இல்லாம பாத்துக்க… உன்னை நம்பி அவ்ளோ தூரம் மருமக வர்றா… அவளைப் பாதுகாப்பா பாத்துக்க… பி ரெஸ்பான்சிபிள்” என்று அறிவுரை கூற அனைத்துக்கும் தலையாட்டி வைத்தான்.

“தலையாட்டிக்கிட்டே நிக்காம ஹனிமூனுக்கான ப்ளானை பண்ணு”

அவர் விரட்டியதும் மனதுக்குள் கடுப்பு இருந்தாலும் அமைதியாகக் காட்டிக்கொண்டு வெளியே வந்தவன் மனைவியோடு அவனது வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

வந்த உடனே லோனாவாலாவில் இருக்கும் ரிசார்ட்டில் அறை புக் செய்வது, ஸ்கை டைவிங்குக்கான தளத்தில் முன்பதிவு செய்வது, லோனாவாலாவில் நிலவும் காலநிலை பற்றி விசாரிப்பது என தேனிலவு சம்பந்தப்பட்ட வேலைகளில் மும்முரமானான் முகிலன்.

18 thoughts on “MM 16”

  1. Kalidevi

    Nee eppadium vlog eduka pora athuku honeymoon. Oru saaku unaku mm enjoy pannu anga poi unga chemistry work agamala poidum papom

  2. M. Sarathi Rio

    மேகத்தின் மோனம்..!
    (அத்தியாயம் – 16)

    ஆனாலும் இந்த முகில் வித்தியாசமானவன் தான். லவ் சொல்லி, பிடிவாதமா துரத்திட்டு வந்து கட்டிக்கிட்டாலும், அவ கூட சண்டை சச்சரவுன்னு இருபத்து நாலு மணி நேரமும் சிடு சிடுன்னு முகத்தை காட்டாம
    ரொம்பவே ஸ்போர்ட்டிவ்வா இருக்கிறான். அவ கூட சேர்ந்து சமைக்கிறதாகட்டும், கலாய்க்கிறதாகட்டும், ஷேர்
    பண்ணிக்கிறதாகட்டும்,…
    எல்லாமே ஃபீல் ப்ரீங்கற மாதிரி அவங்கவங்க இணைக்கான ஸ்பேசை கொடுக்கிறதாகட்டும் ஒரு குட் ரிலேஷன் ஷிப்புக்குத்தான் வழி வகுத்திட்டிருக்குது, குட் பார்ட்னர் ஷிப் உணர்வைத் தான் கொடுக்குது. ரெண்டு பேருமே ரொம்ப வித்தியாசமான கப்பிள்தான்.

    ஆனா, இது இப்படியே போனா முகில் கிடையாதே. அவன் தான் அடிக்கடி ஆர்வக்கோளாறுல ஏதாவது பண்ணி அவங்கப்பாவோட பீபியை ஏத்தறது தானே முகிலோட ட்ரெண்டே. இப்பவும் இந்த ட்ராவல் வ்ளாக் ப்ளஸ் ஹனிமூன்ல குண்டக்க மண்டக்க இப்படி ஏதாவது பண்ணி அவங்கப்பா கையால
    ஸ்பெஷல் கொட்டு வாங்குவானோன்னு… ஹனிமூன் கப்பிள்ஸ்ஸை விட
    முகிலோட அதிரடி அட்வென்ச்சரை நாங்க தான் ஆர்வமா எதிர்பார்க்கிறோம்.
    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. Avatar

    அவளுக்கு உயரம் பயம் உடனே எப்படி ப்ளான் பண்றான் பாரு

  4. Avatar
    Lalitha Ramakrishnan

    That’s what Mukil !! He was waiting for the opportunity to make Meka in trouble. Now he is going to utilize it in the form of named Honey moon trip for his parents., but Adventurous scarring trip for Meha . Let’s see what problem Mukil is going to create at the end of his trip ??

  5. Avatar

    Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr 👌👌👌👌👌👌

  6. Avatar

    மேகா பேசுற பேச்சுக்கு எல்லாம் சேர்த்து மொத்தமா வச்சு செய்ய போறோன் முகில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *