Skip to content
Home » MM 20

MM 20

ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்புக்குள்ள ‘தேங்க்ஸ்’, ‘சாரி’ இந்த வார்த்தைகளுக்கு அவசியமே இல்லனு யாராச்சும் பூமர்ஸ் உங்களுக்கு அட்வைஸ் பண்ணுனாங்கனா turn a deaf ear to them… அந்த ரெண்டு வார்த்தைகளும் உங்க லைஃப் பார்ட்னருக்கு எவ்ளோ சந்தோசத்தைக் குடுக்கும் தெரியுமா? ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ப் ரெண்டு பேர்ல ஒருத்தர் சுப்பீரியர் இன்னொருத்தவங்க செகண்ட் க்ரேட் சிட்டிசனா வாழ்ந்த காலத்துல வேணும்னா இந்த வார்த்தைகள் கபிள்குள்ள தேவைப்படாம இருந்திருக்கலாம்… ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ப் ஆர் ஈக்வல்னு சொல்லுற இந்தக் காலத்துக்கு அந்தப் பூமரிசமான கருத்து ஒத்துவராது… உங்க ஈகோவை தூக்கி எறிஞ்சிட்டு லைஃப் பார்ட்னர்கிட்ட சின்ன சிரிப்போட தேங்சும், மானசீகமான ரெண்டு சொட்டு கண்ணீரோட சாரியும் சொல்லிப் பாருங்க… அப்ப புரியும், மேகா ஒன்னும் நேரம் போகாம இந்த அட்வைசைச் சொல்லலனு.

                                                                         -மேகா

படிக்கிறேன் என்று சொல்லிவிட்டுப் புத்தகத்தை மார்போடு அணைத்துக்கொண்டு நாற்காலியில் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள் மேகவர்ஷிணி.

சமீபத்திய கார்டன் வ்ளாக் ஒன்றின் தேவையற்ற வீடியோ க்ளிப்பிங்குகளை வெட்டி வீசிவிட்டு எடிட்டிங்குக்காக ராமுக்கு அனுப்பிவைத்த பிற்பாடு  மேகாவைச் சாப்பிட அழைக்கச் சென்ற முகிலன் அவள் துயில் கொண்டிருப்பதைப் பார்த்ததும் நமட்டுச்சிரிப்போடு அருகே நெருங்கினான்.

நல்ல தூக்கத்தில் இதழ்கள் பிரிந்து பற்கள் தெரிய தூங்கிக்கொண்டிருந்தவளின் தோற்றம் குழந்தையின் தூக்கத்தை நினைவுறுத்தியது அவனுக்கு.

அவன் துபாயிலிருந்து திரும்பி நாட்கள் சிறுத்தைவேகத்தில் பறந்திருந்தன. லோனாவாலாவில் நேர்ந்த பிணக்குக்கு இப்போது வரை முகிலன் மேகவர்ஷிணியிடம் மன்னிப்பு கேட்கவில்லை. அவளும் அதை எதிர்பார்க்கவில்லை.

செய்தது தவறென அவன் உணர்ந்தால் போதுமென்ற எண்ணம் அவளுக்கு. இதற்கெல்லாம் ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற எண்ணம் முகிலனுக்கு. இருவரும் தங்கள் எண்ணங்களை வாய்விட்டுச் சொல்லாத காரணத்தால் இப்போது வரை அவர்களுக்குள் எந்தப் பிரச்சனையும் வரவில்லை.

மேகாவின் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளுக்கு இன்னும் சிறிது காலமே இருந்தது. சரியாக இரண்டு வாரங்களுக்குப் பிறகு தேர்வுக்குப் படிப்பதற்கான விடுமுறை ஆரம்பிக்கும். அந்த விடுமுறைக்கு இடையே தேர்வுகளும் நடைபெறும். கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்கு அத்தேர்வுகள் நடந்தேறும்! அதற்கு தீவிரமாகப் படித்தவளுக்கு வேறு எதுவும் மண்டையில் உறைக்கவில்லை.

அரியர் எதுவும் வைத்துவிடக்கூடாதென்று கொஞ்சம் ஸ்ரதையோடு படித்தாள் அவள். ஆனால் அவளையும் அறியாமல் சில நேரங்களில் படிப்பது போரடித்தால் உறங்கிவிடுவாள், இப்போது போல!

முகிலன் என்ற ஒருவன் தன்னருகே நிற்கிறான் என்ற உணர்வே இல்லாமல் நல்ல உறக்கத்திலிருந்தாள்.

அவளைப் பார்க்க பார்க்க முகிலனுக்கே ஆச்சரியம் தாளவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் வரை யாரென்றே அறியாத ஒருத்தியோடு இன்று ஒரே வீட்டில் வாழ்நாள் முழுமைக்குமான உறவில் பிணைக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறான் அவன்.

அவள் முகம் சுணங்கினால் அதற்கான பிரச்சனையைக் கண்டறிந்து தீர்வு கண்டுபிடிக்க அவனுக்குள் பரபரப்பு எழுகிறது. அவள் கோபம் கொண்டாலோ அதைத் தணித்து இயல்பாகத் தன்னுடன் பேச வைப்பது எப்படியென அமைதியற்று சிந்திக்கத் தோன்றுகிறது. அவளற்ற தனிமை பொழுதுகள் கருப்பு வெள்ளை திரைப்படம் பார்ப்பது போல படுபோர் என்று வாய் விட்டுக் கதற வைக்கின்றது.

என்ன தான் ஆயிற்று எனக்கு? இதே போலவே துபாயிலும் உணர்ந்தேன்! இவளை எரிச்சலூட்ட வ்ளாக், இன்ஸ்டாக்ராமில் அடுத்தடுத்த புகைப்படப்பதிவுகள் என்று உற்சாகமாக இருப்பது போல காட்டிக்கொண்டாலும் வெறுமையை உணர்ந்தேனே நான்!

வீட்டுக்கு வந்து இவளை அணைத்து கழுத்தில் முகம் புதைத்த நொடியில் என்னில் பாதி மீண்டும் என்னுடன் இணைந்தது போல முழுமையானவனாக உணர்ந்தேனே நான்!

முன்னே கிடந்த ‘ஸ்டடி டேபிளில்’ சாய்ந்து உறங்குபவளைக் கூர்ந்து நோக்கியவன் “இந்த மன்ச்கின் என் மண்டைய குழப்புறா… ஒருவேளை இதுதான் லவ்வா? இவ கிட்டவே கேட்டுருவோமா?” என்று தனக்குள் கேட்டபடி அவளை எழுப்பப் போனான்.

பின்னர் அவளருகே நீண்ட கரத்தை வெடுக்கென இழுத்துக்கொண்டான்.

“வேண்டாம்! இவ சும்மாவே என்னை ஓவரா கலாய்க்குறா… இந்த டவுட்டை கேட்டோம்னா இன்னும் பங்கமா கலாய்ப்பா”

முகிலன் தனக்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தபோது மேகாவின் தூக்கம் கலைந்தது.

சோம்பல் முறித்து கொட்டாவி விட்டவள் முகிலனிடம் “என் அழகை ரசிச்சிட்டிருந்தியா முகில்?” என்று கேட்க

“ஆமா! நீ கொட்டாவி விடுறப்ப டயனோசர் மாதிரி இருக்க… அந்த அழகை ரசிச்சிட்டிருந்தேன்” என்றான் துடுக்காக.

மேகவர்ஷிணி உதட்டைச் சுழித்து அழகு காட்டினாள்.

“கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை”

“அப்ப கழுதை போட்ட பைனாப்பிள் ஜூஸை நீ குடிக்காத”

மேகவர்ஷிணிக்கு அன்னாசி பழச்சாறு என்றால் விருப்பம். அவளுக்காக அதைத் தயாரித்து வைத்திருந்தான் அவன்.

அன்னாசி பழச்சாறு என்றதும் எங்கிருந்தோ சுறுசுறுப்பு வந்துவிட்டது மேகவர்ஷிணிக்கு.

நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்தவள் அவசரமாகச் சமையலறையை நோக்கி செல்ல அவளைப் பின்தொடர்ந்தவன் ஃப்ரிட்ஜை திறக்கும் முன்னர் அவள் கையைப் பிடித்துத் தடுத்தான்.

“ப்ளீஸ் முகில்”

“கழுதை எப்ப முகில் ஆச்சு?”

“டயனோசர் எப்ப மேகா ஆச்சோ அப்ப கழுதையும் முகில் ஆகிடுச்சு”

“நல்லா சமாளிக்கிறடி நீ”

கையை விடுவித்தான் அவன்.

முழு தம்ளரையும் காலி செய்தவளை மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு பார்த்தவன் “இன்னும் ஒன் வீக்ல நான் கொச்சின் போகணும் மேகா” என்றான்.

“ஐயையோ மீண்டும் மீண்டுமா? இந்தத் தடவையும் நான் உன் கூட வரமுடியாது போல… எனக்கு எக்சாம் கிட்ட வருது முகில்… இந்த டைம்ல ஊர் சுத்துனேன்னா கட்டாயம் இந்தத் தடவையும் அரியர் வச்சிடுவேன்”

பரிதாபமாகக் கூறினாள் மேகவர்ஷிணி.

“சரி நீ எக்சாமுக்குப் படி… நான் கொச்சின் போயிட்டு வர்றேன்”

அவன் சாவகாசமாகக் கூறவும் மேகாவின் முகம் வாடிப்போனது.

முகிலனுடன் நேரம் செலவளிக்க அவளுக்குப் பிடித்திருந்தது. அவனுடன் வெளியூர் செல்லவும் அவளுக்கு ஆசையே! இப்போதைய சூழல் அதற்கு சரியாக இருக்காது.

“அப்ப எனக்காகக் கொஞ்சம் உன்னோட வ்ளாக் ப்ளானை போஸ்ட்போன் பண்ணு முகில்” என்று கொஞ்சலாகவே வினவினாள்.

“நாட் பாசிபிள்… நான் முன்னாடியே சொல்லிருக்கேன், என்னோட வேலைய செய்ய நீ எப்பவும் தடையா இருக்கக்குடாது… இந்த ஹோம்ஸ்டேவை நமக்கு வீடா மாத்தியாச்சு… என் ட்ரீம் ஹோம்ஸ்டே – ரிசார்ட் – ஃப்ரூட் ஃபார்ம் இதெல்லாம் தான்… அதுக்காக நான் சம்பாதிக்கணும்ல”

முகிலன் சில நேரங்களில் இளக்கமாகப் பேசுவான். அப்போதெல்லாம் அவனைத் தனது சாதுரியமான பேச்சால் வளைத்துவிடுவாள் மேகவர்ஷிணி. ஆனால் அவனது வருங்காலத்திட்டங்களைப் பற்றிய பேச்சின் போது அவனைத் தனது பேச்சுக்குப் பணியும்படி மாற்றவே முடியாது.

இதோ இப்போது கூட அதே தீர்மானத்தொனி தான் அவனிடம்.

இனி அவனது பயண திட்டத்தை மாற்ற யாராலும் முடியாது. சோர்ந்த முகத்தோடு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டாள் மேகவர்ஷிணி.

ராமுடன் சேர்ந்து கொச்சி பயணத்திற்கான ஆயத்தத்தை ஆரம்பித்துவிட்டான் முகிலன். எங்கே செல்லவேண்டும், எங்கே தங்கவேண்டும் என இருவரும் தீவிரமாகத் திட்டமிட்டார்கள்.

அன்றிலிருந்து ஒரு வாரத்தில் பாரிவேந்தன் – ரஞ்சனாவின் திருமண நாள் வந்தது. வழக்கம்போல வீட்டில் விருந்து சமைப்பது, அருகிலிருக்கும் கோவிலுக்குப் போய்விட்டு வருவது என்று அவர்களின் திருமணநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இம்முறை கொஞ்சம் ஸ்பெஷல்! பாரிவேந்தனின் மருமகளும் நண்பனும் குடும்பத்தில் புதிய உறுப்பினர்கள் ஆகியிருக்கிறார்கள் அல்லவா!

மேகவர்ஷிணி அவளுடைய ரசனைக்கு ஏற்றபடி வீட்டை அலங்கரித்திருந்தாள். தோட்டத்தின் நடுவே பாரிவேந்தனும் ரஞ்சனாவும் அவர்களுக்காக மேகவர்ஷிணி ஆர்டர் செய்து வாங்கிய கேக்கை வெட்டினார்கள்.

ரஞ்சனாவின் நாணப்புன்னகை, பாரிவேந்தனின் கம்பீரமான வதனத்திலும் புன்னகையின் சுவட்டைப் பதித்தது.

அழகான அத்தருணத்தை முகிலன் புகைப்படமாக்கினான்.

பின்னர் ஐவரும் குடும்பமாகத் தோட்டத்தின் பின்னணியில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

மதியவுணவை ஒன்றாகச் சாப்பிடலாமெனப் பாரிவேந்தன் அனைவரையும் அழைத்தபோது மேகவர்ஷிணி முகிலன் அறியாவண்ணம் அவரைத் தனியே அழைத்துச் சென்று ஏதோ சொன்னாள்.

பாரிவேந்தன் அவளது சிகையை வருடிக்கொடுத்துவிட்டு “நான் பாத்துக்குறேன் மேகாம்மா” என்றவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது சரியாகப் பேச்சை ஆரம்பித்தார்.

“மருமகளுக்குச் செமஸ்டர் எக்சாம் வருது… ஒரு மாசம் ஸ்டடி லீவுக்கு இடைல எக்சாம் எழுதப்போகணும்… மோகனோட வீடு இன்னும் விக்கல… மேகா ஒரு மாசம் அங்க இருந்து எக்சாமை எழுதிட்டு அப்புறமா ஊட்டிக்கு வர்றது தான் பெஸ்டுனு மோகன் நினைக்குறான்… மேகாவுக்குத் துணையா நீ சென்னைக்குப் போகணும்”

சாப்பிட்டப்படியே பாரிவேந்தன் கூற முகிலன் அவரையும் மோகனரங்கத்தையும் மாறி மாறி பார்த்தான்.

‘இந்த அப்பாக்கு என் ப்ளானை இடைல புகுந்து சொதப்புறதே வேலையா போச்சு’ என்று மைண்ட்வாய்சில் எண்ணியவனுக்கு “போன தடவை அவர் புகுந்து சொதப்புனதால தான் உன்னால மேகா கூட தனியா டைம் ஸ்பெண்ட் பண்ண முடிஞ்சுது… மறந்துடாத முகிலு” என்று நினைவுறுத்தியது அவனது மனசாட்சி.

மேகாவுடன் நேரம் செலவளிக்கலாமென மனசாட்சி ஆசை காட்டியதை ஒதுக்கிவிட்டான் முகிலன்.

“நான் ஏன்பா போகணும்? அங்கிளும் அவளும் போயிட்டு வரட்டும்… அடுத்த வாரத்துல இருந்து இன்னும் ஒரு மாசத்துக்கு எக்சாம் நடக்கும்னா அதுவரைக்கும் அங்கிளும் அவளும் சென்னைல இருக்கட்டும்” என்றவனை முறைத்தார் பாரிவேந்தன்.

“அவ இப்ப உன்னோட ஒய்ப்… அவளுக்காக நீ சென்னைக்குப் போகமாட்டியா? யூடியூப் சேனல்காரனுங்க இண்டர்வியூனு சொன்னா மட்டும் துரை காரை எடுத்துட்டு விர்ருனு கிளம்பி போவிங்க… இப்ப மட்டும் ஏன் தயங்குறிங்க? சாப்பிட்டுட்டுப் போய் லக்கேஜை பேக் பண்ணு… மோகன் நீ வீட்டுச்சாவிய குடுத்துடு… இவங்க ரெண்டு பேரும் போய் பரிட்சை எழுதிட்டு வரட்டும்… வயசான காலத்துல நம்மளை வேலை வாங்க பாப்பாங்க… நீ சூதானமா இரு”

“நீ சொன்னா சரி தான் பாரி… மாப்ள இந்தாங்க வீட்டுச்சாவி…. ஒரு மாசம் மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நம்ம வீட்டுல தங்கி மேகாவ பாத்துக்கோங்க… எக்சாம் முடிஞ்சதும் இங்க வந்துடுங்க… சிரமம் பாக்காம இந்த ஒரு தடவை போயிட்டு வந்துடுங்க”

மோகனரங்கம் சென்னை வீட்டின் சாவியை முகிலனின் பக்கம் நகர்த்த அவனும் தந்தையின் முறைப்புக்கு அடங்கி எடுத்துக்கொண்டான்.

பாதி சாப்பாட்டில் அவன் எழுந்திருக்க மோகனரங்கம் ஏதோ சொல்லப்போக அவரைத் தடுத்தார் பாரிவேந்தன்.

“விடு… எப்பவும் அவன் பேச்சுக்கு அடிபணிஞ்சு போகக்கூடாது… அது மேகாவோட வாழ்க்கைய பாதிக்கும்… என் மகனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்… நீ கொஞ்சம் இடம் குடுத்தனா அவன் தலைகால் புரியாம ஆட ஆரம்பிச்சிடுவான்”

தந்தையும் மாமனாரும் பேசுவதைப் பற்றி அறியாமல் கை கழுவ போய்விட்டான் முகிலன்.

“இவ பெரிய மகாராணி… இவளுக்குத் துணைக்கு ஆள் வேணுமாம்… இவளுக்கு இருக்குற வாய்க்கு சென்னைய ப்ளாட் போட்டு வித்துட்டு வந்துடுவா… இன்னும் குட்டிப்பாப்பானு நினைப்பு… ஒரு மாசம் கொச்சின் போய் ட்ராவல் வ்ளாக் எடுக்கலாம்னு நினைச்சேன்… வேணும்னே என்னை அப்பா கிட்ட மாட்டிவிட்டுட்டா… அந்தக் குட்டிசாத்தானால என் ப்ளான் எல்லாம் போச்சு” புலம்பியபடியே கை கழுவிவிட்டுத் திரும்பியவன் பின்னே நின்ற மேகவர்ஷிணியின் மீது மோதிக்கொண்டான்.

அவள் சமாளித்து நின்றுவிட்டு நமட்டுச்சிரிப்போடு சுடிதார் துப்பட்டாவை நீட்டினாள்.

“எதுக்குடி?”

“ஹான், உன் கழுத்துல அலங்காரமா தொங்க விட்டுக்க”

“உன்னைக் கல்யாணம் பண்ணுனதுக்கு இன்னும் அதை மட்டும் தான் நான் செய்யல… ப்ளான் பண்ணி என்னைச் சென்னைக்கு வர வச்சிட்டல்ல… போடி” அவளது தலையைப் பிடித்து தள்ளிவிட்டான் முகிலன்.

“மத்த எல்லாம் ஒழுங்கா செஞ்சுட்ட மாதிரி பேசுவான்… போடா” என்று சொல்லிவிட்டு அவளும் போக

“வர வர நீ டபுள் மீனிங்ல பேசுற மேகா… இதுல்லாம் ஓவரு” என்றவனைத் திரும்பிப் பார்த்தவள்

“நான் சிங்கிள் மீனிங்ல தான் பேசுனேன்… உனக்கு எப்பவும் நினைப்பு எங்கயோ இருந்தா அதுக்கு நானா பொறுப்பு?” என்று விசமச்சிரிப்போடு கேட்டுவிட்டுச் சுடிதாரின் துப்பட்டாவைச் சுழற்றிக்கொண்டு ஸ்டைலாக நடந்தபடி போய்விட்டாள்.

முகிலன் தலையிலடித்துக்கொண்டு ராமின் எண்ணுக்கு அழைத்தான்.

“மச்சி! கொச்சின் ப்ளான் ட்ராப்ட்… என் பொண்டாட்டி குட்டிசாத்தானுக்கு எக்சாம் வருது… அதுக்காக ஒன் மாசம் சென்னைல தங்கி அவ எக்சாம் எழுதி முடிச்சதும் ஊட்டிக்கு வரணுமாம்… இப்ப ப்ளானை மாத்திடுவோமா? டெக்னோ ஜெயண்ட் சேனல் கூட கொலாப் வ்ளாக் பேசுனோம்ல… அது, ஃப்ரன்ட்வுட் சேனல் இண்டர்வியூவை இந்த ஒன் மன்த்ல முடிச்சிடலாமா?”

மனைவிக்காகத் தனது வேலை திட்டத்தை மாற்றிக்கொண்டதற்கு தந்தையின் வற்புறுத்தலே காரணம் என்றாலும் அந்நேரத்தில் தனது பயணத்திட்டம் நிறைவேறாத ஏமாற்றம் தவிர மேகவர்ஷிணி மீது எந்தக் கோபமோ வெறுப்போ தனக்கு வரவில்லை! அது ஏன் என்று யோசித்தவனுக்கு ஒருவேளை இது காதல்தானோ என்ற ஐயம்!

16 thoughts on “MM 20”

  1. Kalidevi

    Ithuku per kadhal da atha kuda ippadi yosipiya ena nee la ..megha mela inum lova varama iruntha tha thappu ava ina vida chinna ponnu evlo alaga plan panra paru unnala muditha un wife kuda thaniya time spend panna ivlo kasta padura

  2. M. Sarathi Rio

    மேகத்தின் மோனம்..!
    (அத்தியாயம் – 20)

    ஹாலோ பாஸ்…! அது தானே தாலி கயிறு மேஜீக் என்கிறது.
    அது இன்னும் கூட தன் துணைக்காக நிறைய செய்ய வைக்கும், நிறைய சொல்லித் தரும், நிறைய புரிய வைக்கும், இன்னும் சொல்லப் போன அவங்க சிரிச்சா நம்ம முகத்துல அதோட ரிப்ளெக்சனை தோற்றுவிக்கும். அவங்க வேதனைப்பட்டா அதோட ரீயாக்சன்ஸ் நம்ம கிட்ட தெரியும்.
    “அழகான மனைவி (கணவன்),
    அன்பான துணைவி (துணைவன்)
    அமைந்தாலே பேரின்பமே..!”

    அட.. இவன் இன்னும் கூட புரிஞ்சுக்கலையோ…? இந்த ‘மன்ச்கின்’ அவன் மனசுக்குள்ள வந்து எப்பவோ சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துட்டான்னு…!
    இல்லைன்னா, இந்நேரத்துக்கு
    அவங்கப்பா கூட என்னாம்மா
    ஆர்க்யூ பண்ணியிருப்பான்னு ?
    இது காதல் மட்டும் இல்லை மிஸ்டர் முகிலன்… மனதில் கொண்டவளுக்குச் செய்யும் சின்னஞ்சிறு சிஷ்ருஷைகள்,
    கடமைகள்,பொறுப்புகளும் கூட.
    இதெல்லாம் சுகமான சுமைகள் மிஸ்டர் க்ளவுட்மேன்…!
    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. Avatar

    Mugil rombha kastam da ne unnoda love ah realise panra thu kula Megha kezhavi aagiduva pola
    Aana megha evolo pakka ah va plan panni avan cochin trip ah cancel panna vachita ah

  4. Avatar

    இப்படியே ஒன்னு ஒன்னுக்கும் இது காதல் தானா அப்படின்னு இந்த முகில் யோசிச்சுக்கிட்டே இருந்தானா அதை அவன் கன்ஃபார்ம் பண்றதுக்குள்ள அவனுக்கு 60 வயசா தாண்டி போய் இருக்கும்.

  5. Avatar

    அவளுக்காக உன் பிளானையே மாத்திக்கறேன்னா அதுதான் காதல், இது புரியலியே உனக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *