Skip to content
Home » MM 22 (FINAL)

MM 22 (FINAL)

நம்ம எல்லாருக்குமே நமக்கு வரப்போற லைஃப் பார்ட்னர் பத்தி சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் இருக்கும்… அந்த எதிர்பார்ப்பு மோல்டுக்குள்ள கச்சிதமா பொருந்துற மாதிரி ஒரு ஆள் கிடைச்சாதான் நான் அவங்களை முழுமனசோட ஏத்துக்குவேன்னு சொல்லுறதுலாம் ரியாலிட்டிய புரிஞ்சிக்காத இம்மெச்சூர்டான பிஹேவியர்… இந்த பிஹேவியர் உங்களுக்கு இருந்துச்சுனா நைன் ஒன் சிக்ஸ் ஹால்மார்க் தங்கத்தோட குணத்துல உங்களுக்கு லைஃப் பார்ட்னர் அமைஞ்சாலும் நீங்க சந்தோசமா வாழ முடியாது… Couple who understands each other’s wishes is better than couple who made for each other.

                                                                          -மேகா

சில மாதங்களுக்குப் பிறகு…

பரபரப்பான காலை வேலையில் ஒரு நடுத்தர வயது தம்பதிகளின் கூச்சல் ‘தி க்ளவுடி ஹில் ஹோம் ஸ்டேவின்’ அமைதியைக் கலைத்திருந்தது.

“மானிங் டீயும் பிஸ்கெட்டும் காம்ப்ளிமெண்டரினு சொன்னிங்க… ரெண்டையும் வாய்ல வைக்க முடியல… மடைத்தண்ணியா இருக்கு… இவ்ளோ மோசமான ஹோம்ஸ்டேவை நாங்க இதுவரைக்கும் பாத்ததில்லை”

காச்மூச்சென்று கத்திக்கொண்டிருந்தார் நடுத்தரவயது பெண்மணி ஒருவர். முந்தைய நாளிரவு தான் அவரும் அவரது கணவரும் மகளுடன் உதகமண்டலத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக வருகை தந்திருந்தார்கள்.

ஆன்லைன் மூலம் ஹோம்ஸ்டேவை புக் செய்தவர்களுக்குத் திடீரென என்ன மனக்குறை என்று புரியாமல் அவர்களைச் சமாளிக்க முயன்று கொண்டிருந்தாள் மேகவர்ஷிணி.

சரியான தூக்கமில்லாமல் அவளது விழிகள் சிவந்து போயிருந்தன. காலை குளிருக்கு அணிந்திருந்த ஸ்வெட்டரின் நுனியைத் திருகி தனது கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தவள் நிமிர்வோடு அப்பெண்மணியிடம் பேச ஆரம்பித்தாள்.

“இப்ப என்ன மேடம்? ஹோம்ஸ்டேவை காலி பண்ணப்போறிங்களா? நீங்க பே பண்ணுன அமவுண்டை நான் திருப்பித் தந்துடுறேன்… வேற இடம் பாத்துக்கோங்க” என்றாள் அமைதியாக.

இவ்வளவு நேரம் வானமே இடிந்து விழுந்தது போல கத்திக்கொண்டிருந்த பெண்மணியின் வாய் கப்சிப்பென மூடிக்கொண்டது.

“என்னாச்சு? ஏன் சைலண்ட் ஆகிட்டிங்க?”

உடனே அப்பெண்மணியின் கணவர் வாயைத் திறந்தார்.

“இந்த ஹோம்ஸ்டே யாரோடதுனு தெரியாம நாங்க ரிசர்வ் பண்ணி வந்துட்டோம்… மானிங்ல தான் இது யாரோடது என் பொண்ணு ஃபேஸ்புக்ல பாத்துட்டுச் சொன்னா… இதோட ஓனர் யூடியூப் வ்ளாகர் முகில் தானே… செக்ஸ் வீடியோ விவகாரத்துல சிக்குனவனோட ஹோம்ஸ்டேல நாங்க எப்பிடி எங்க பொண்குழந்தையோட தங்குவோம்மா?”

அவர் கேட்டதும் மேகவர்ஷிணியின் நெற்றியில் மூன்றாவது கண் முளைத்து அக்னியைக் கக்காத குறை!

“வாயை அடக்கி பேசுங்க… என் ஹஸ்பெண்டைப் பத்தி என் கிட்டவே அசிங்கமா பேசுறிங்க? அந்த வீடியோ டீப்ஃபேக் டெக்னாலஜில உருவாக்கப்பட்டதுனு அவர் எபப்வோ நிரூபிச்சிட்டார்… இன்னும் அதையே சொல்லி அவரோட கேரக்டரை கேவலமா பேசுறிங்க… இப்பவே பெட்டி படுக்கைய தூக்கிட்டு இங்க இருந்து போயிடுங்க… இல்லனா என் வாய்ல எதாச்சும் அசிங்கமா வந்துடும்”

“என்னம்மா வயசுல பெரியவங்களை மட்டுமரியாதை இல்லாம பேசுற?”

“வயசுக்குலாம் மரியாதை குடுக்க முடியாது.. செய்யுற செயல், பேசுற வார்த்தைக்குத் தான் மரியாதை… அது ரெண்டும் தரமில்லாம இருந்தா என் கிட்ட இருந்து வர்ற வார்த்தைகள் தரத்தோட வரும்னு என்னால கேரண்டி குடுக்க முடியாது… லக்கேஜை எடுத்துட்டுக் கிளம்புங்க… ரூம் க்ளீன் பண்ணணும்… அடுத்த ஃபேமிலி காத்திருக்காங்க” என அவர்களை விரட்ட ஆரம்பித்தாள் அவள்.

மெய்யாகவே அங்கே வேறு எந்த சுற்றுலா பயணியும் முன்பதிவு செய்து காத்திருக்கவில்லை. ஆனால் முகிலனின் பெயரைக் கேவலப்படுத்தி வரும் வருவாய் தங்களுக்குத் தேவையில்லை என்ற எண்ணம் அவளுக்கு!

“விடிஞ்சும் விடியாமலும் இருக்குற நேரத்துல இப்பிடி விரட்டுனா என்ன அர்த்தம்? பொம்பளைப்புள்ளைய வச்சுக்கிட்டு நாங்க எப்பிடி புது ஊர்ல தங்குறதுக்கு வேற இடம் பாக்குறது?” பம்மிப் பேசினார் மனைவியான பெண்.

இப்போது அலட்சியம் பிறந்தது மேகவர்ஷிணியின் உடல்மொழியில்.

“அது உங்க பிரச்சனைங்க! இங்க இருந்தா உங்க பொண்ணோட பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லனு ஃபீல் பண்ணித் தானே காலையில இருந்து புதுசுபுதுசா குறை கண்டுபிடிச்சிங்க… பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லாத இடத்துல இருக்குறதை விட வெளிய போறது பெஸ்ட்”

சொன்னதோடு இல்லாம ஹோம்ஸ்டேவுக்காக அமர்த்தியிருந்த பணியாளரை அழைத்து “இவங்க லக்கேஜை எடுத்து வெளிய வச்சிடுங்கண்னா… அப்புறம் ராணிம்மா கிட்ட இவங்க தங்கியிருந்த ரூமை க்ளீன் பண்ணச் சொல்லிடுங்க” என்று மடமடவென கட்டளையிட்டாள்.

இப்போது விழிப்பது அந்தத் தம்பதிகளின் முறை!

“இந்த ஹோம்ஸ்டேவோட சொந்தக்காரன் இவன்தான்மா” என்று மகள் முகிலனின் புகைப்படத்தைக் காட்டி அவனைப் பற்றிய விவரத்தைச் சொன்னதும் சதிபதி இருவரும் ஏதாவது குட்டி கலாட்டா செய்து பணம் கொடுக்காமல் தங்க திட்டமிட்டு தான் மேகவர்ஷிணியிடம் கத்தியது!

ஹோம்ஸ்டேவின் பெயர் கெட்டுவிடக்கூடாதென அவளும் தங்கள் இஷ்டத்துக்கு வளைந்துவிடுவாள் என்ற எண்ணம்!

“என்னம்மா ரூம்ல ஹாட்வாட்டர் வரல?”

குளியலறையில் இதமான வென்னீரில் நீராடிவிட்டுப் பொய் சொன்னார்கள்!

“சீ! இதுல்லாம் ஒரு டீயா?”

ஏலம், இஞ்சி தட்டிப் போட்டு மேகவர்ஷிணி கொண்டு வந்து கொடுத்த ருசியான தேநீரைக் குடித்துவிட்டுப் புலம்பினார்கள்.

“என் மக நைட் முழுக்க சொறிஞ்சிக்கிட்டே இருந்தா… பெட்ல மூட்டைப்பூச்சி இருக்கு… என்ன இப்பிடி சுத்தமில்லாம வச்சிருக்கிங்க?”

தினந்தோறும் சுகாதாரமாகப் பராமரிக்கப்படும் அறை மற்றும் படுக்கையை உபயோகித்து இன்பமான நித்திரையில் ஆழ்ந்துவிட்டு உறக்கமில்லை என்று உருட்டினார்கள்.

அனைத்தையும் மேகவர்ஷிணி பொறுத்துக்கொண்டாள். ஆனால் முகிலனின் நடத்தையைக் காட்டி அவச்சொல் பேசுவதைக் கேட்க சகிக்காமல் கத்திவிட்டாள்.

அவர்களை அங்கிருந்து கிளப்ப அவள் மும்முரம் காட்ட அந்நேரத்தில் காலை நேர நடைபயணத்துக்காக அங்கே வந்து சேர்ந்தார்கள் பாரிவேந்தனும், மோகனரங்கமும்.

கையைப் பிசைந்துகொண்டு பெட்டி படுக்கையோடு தங்கள் மகளையும் அழைத்துகொண்டு காரிடாரில் வந்து நின்ற தம்பதியைக் கண்டதும் மருமகளிடம் என்னவென வினவினார் பாரிவேந்தன்.

அவளும் நடந்ததைச் சொல்ல அவரது முகம் இறுகிப்போனது. எங்கே முகிலனின்மீது கோபம் கொள்வாரோ என்று மேகவர்ஷிணி தயங்க அவரோ அத்தம்பதியிடம் பேச ஆரம்பித்தார்.

“ஆணோ பொண்ணோ நம்ம வீட்டுப் பிள்ளைங்களா இல்லாத பட்சத்துல அவங்க நடத்தைய பத்தி பேச நமக்கு உரிமை கிடையாது… நீங்க எந்த உரிமைல என் மகனைப் பத்தி தப்பா பேசுனிங்கனு நான் கேக்கமாட்டேன்… அந்தக் கேள்விய என் மருமக ஏற்கெனவே கேட்டிருப்பா… உங்களுக்கு நான் ஒன்னே ஒன்னு சொல்லிக்குறேன்… நீங்களும் ஒரு பொண்குழந்தை வச்சிருக்கிங்க… யார் நடத்தை மேலயும் பழி போட்டுப் பேசாதிங்க…. என் மகன் எப்பிடிப்பட்டவன்னு எனக்குத் தெரியும்… கிளம்புங்க”

மேகவர்ஷிணியின் முகம் பளிச்சிட்டது.

மருமகளிடம் திரும்பியவர் “துரை டெல்லி வ்ளாகை முடிச்சிட்டு இன்னைக்கு வந்துடுவாரா மேகாம்மா?” என்று இயல்பாகப் பேசினார்.

“இன்னைக்கு மதியத்துக்குள்ள வந்துடுவேன்னு முகில் வாட்சப்ல சொன்னான் மாமா… அப்புறம் அவனோட பாலிஹவுசுக்காக நிறைய ப்ளாண்ட்ஸ் ஆர்டர் போட்டிருந்தானாம்”

“அதை நான் வாங்கி வச்சிடுறேன்… நீ ஹோம்ஸ்டேவை பாத்துக்க… அவன் வந்ததும் வீட்டுக்குச் சாப்பிட வந்துடுங்க”

மருமகளிடம் பேசிவிட்டு நண்பரை அழைத்துக்கொண்டு கிளம்பினார் பாரிவேந்தன்.

முகிலனுக்காக அவர் பரிந்து பேசிய காட்சியை அவன் பார்த்திருக்க வேண்டும்! எப்போதும் தந்தை தன்னிடம் கண்டிப்பு காட்டுகிறார் என்று புலம்புவானே!

அவன் டெல்லியிலிருந்து வந்ததும் முதல் காரியமாக இச்செய்தியை அவனிடம் கூறவேண்டும்!

“ரூமை க்ளீன் பண்ணிட்டேன் மேகாம்மா… பூச்சி பொட்டுனு ஒன்னுமில்ல… அந்தம்மா பொய் சொல்லிருக்கு” என்றார் ராணி, கடந்த எட்டு மாத காலமாக அந்த ஹோம்ஸ்டேவில் பணியாற்றுகிறார்.

“அதுங்க எல்லாம் அல்பங்கள் ராணிம்மா… நீங்க டீ குடிங்க”

மிச்சமிருந்த தேநீரை அவரோடு பகிர்ந்து அருந்த ஆரம்பித்தாள் அவள்.

‘தி க்ளவுடி ஹில் ஹோம்ஸ்டே’

முகிலனின் கனவுகளில் ஒன்று! மேகவர்ஷிணியின் பொறுப்பில் அதை விட்டிருந்தான் அவன்! கல்லூரிப்படிப்பைக் கவனித்தபடியே ஹோம்ஸ்டேவையும் நிர்வகித்தாள் அவள்.

காலை மாலையில் தேநீர் மற்றும் பிஸ்கெட்டுகள் மட்டும் காம்ப்ளிமெண்டரியாகத் தருவார்கள். அது மேகவர்ஷிணியின் பொறுப்பு.

புக்கிங்குகள் பெரும்பாலும் ஆன்லைன் மூலம் வருவதால் அவளால் ஹோம்ஸ்டேவைத் திறம்பட நிர்வகிக்க முடிந்தது. சிறியளவிலான தொழிலே! ஆனால் உழைக்கும்போது சலிப்பு வரவிலை.

அதை இன்னும் எவ்வாறெல்லாம் மேம்படுத்தலாமென முகிலனும் அவளும் திட்டமிடுவார்கள்!

இதோ அவன் டெல்லி, ஆக்ராவைச் சுற்றி வ்ளாக் எடுக்கப் போவதாகக் கிளம்பி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது.

மூன்றாமாண்டின் முதல் செமஸ்டர் தேர்வுக்காகச் சென்னையில் கழித்த நாட்களின் அனுபவம் கொடுத்த இனிமையால் இறுதி செமஸ்டர் தேர்வுக்காகவும் முகிலனே மேகாவுடன் சென்னையில் தங்கினான்.

அவளது தேர்வு முடிந்த கையோடு கிளம்பியவன் அன்று திரும்பி வருவதாகக் கூறியிருந்தான்.

வந்ததும் ஈடன் நந்தவனத்தில் புதுவகை மலர்ச்செடிகளை நட்டுவைப்பதற்கான வ்ளாகை ஆரம்பிப்பதாகத் திட்டமிட்டிருந்தான்.

ஹோம்ஸ்டேவின் சாவியை ஊழியரிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினாள் மேகா.

சாவியைப் போட்டுத் திறக்கும் முன்னர் கதவு திறந்துகொண்டது.

திருடனாக இருக்குமோ? ஒரு கணம் யோசித்தவள் அந்த திருடனின் பெயர் முகிலனாக இருக்கும் என அவளது மனசாட்சி சொல்லவும் உதடு பிரிக்காமல் சிரித்துக்கொண்டாள்.

மதியம் வருவதாகச் சொன்னவன் காலையிலேயே வந்துவிட்டானா? சந்தோசமாக அறைக்குள் தலைநீட்டியவளை உள்ளே இழுத்துக்கொண்டான் அவளது கணவன்.

இழுத்த கணத்தில் அணைக்கவும் செய்தவன் “ஐ மிஸ் யூ மேகா” என்று வழக்கமான வசனத்தை எடுத்துவிடவும் அவன் தலையில் நறுக்கென குட்டினாள் மேகவர்ஷிணி.

“இஷ்டத்துக்கு ஊர் சுத்திட்டு வர்றது… வந்ததும் இந்த டயலாக்கை எடுத்து விடுறது… ஒன்னு நீ டயலாக்கை மாத்து… இல்லனா உன்னோட வ்ளாக் ப்ளானை மாத்திட்டு என்னையும் உன் கூட கூட்டிட்டுப் போ… உன்னை மாதிரியே உன்னோட இந்த ‘மிஸ் யூ மேகா’ டயலாக்கும் செம போர்”

“நான் போரா? மனசாட்சி இல்லாம பேசாதடி”

விளையாட்டுக்காக அவளைத் தள்ளிவிட்டவன் அவளுக்காக டெல்லியிலிருந்து வாங்கி வந்த பரிசுகளைக் கொடுத்தான்.

கண்கள் மலர அனைத்தையும் பார்த்தவளிடம் “இவ்ளோ கிப்ட் குடுத்தவனுக்குப் பதிலுக்கு ஒரு கிஸ் குடுப்போம்னு தோணுதா உனக்கு? ஸ்டோன் ஹார்ட் வுமன்” என்று திட்டிவிட்டு அவள் போட்டு வைத்திருந்த தேநீரில் கொஞ்சம் கோப்பையில் ஊற்றி எடுத்து வந்து அருந்த ஆரம்பித்தான்.

மேகவர்ஷிணி சற்று முன்னர் ஹோம்ஸ்டேவில் நடந்ததை அவனிடம் பகிர்ந்தாள்.

தந்தை தனக்காகப் பரிந்து பேசியதை அவனால் நம்பவே முடியவில்லை.

“நிஜமா அப்பா எனக்காகப் பேசுனாரா? நீ பொய் சொல்றியா?” என்று கேட்டு கேட்டு மாய்ந்து போனான்.

அவன் தலைமீது கைவைத்துச் சத்தியம் செய்யாதக் குறையாக மேகா அழுத்திக் கூறவும் நம்பினான். அடுத்த நொடி அவன் கண்கள் கலங்கின.

அதை காட்டிக்கொள்ளாமல் ஒரே மிடறில் தேநீரைக் காலி செய்தான்.

அவன் கண் கலங்கியதை மேகா அறியாமலா இருப்பாள்?

அவனது புஜத்தைச் சுரண்டி “அழுறியா முகிலு?” என்று சீண்ட

“சீ போடி!” என்றவன் புறங்கையால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டான். மேகவர்ஷிணி அவனது கன்னம் பிடித்து இதழ் பதித்தாள்.

“ரிலாக்ஸ்… இதுக்குலாமா அழுவ? மாமாக்கு உன் மேல அன்பு ஜாஸ்தி… அவரோட அன்பை அவர் வெளிக்காட்டுற விதம் அதட்டலாவும் கண்டிப்பாவும் இருக்கு… அவ்ளோ தான் முகில்”

அவள் எடுத்துச் சொல்லவும் “ம்ம்ம்” என்று தலையாட்டினான்.

“சரிங்க தலையாட்டி பொம்மை… நீங்க ரெஃப்ரெஷ் ஆகிட்டிங்கனா நம்ம வீட்டுக்குப் போவோமா? இன்னைக்குப் புவ்வா நமக்கு அங்க தான்” என்று சாப்பிடுவது போல சைகை காட்டினாள் மேகவர்ஷிணி.

“எப்ப பாத்தாலும் சோறு குழம்புனு உன் புத்தி  சாப்பாட்டைச் சுத்தி வருமாடி? அழகா அம்சமா ஒரு புருசன் இருக்கான் உனக்கு… அது மறந்து போச்சுல்ல… இந்த லெட்சணத்துல எனக்கு ஃபர்ஸ்ட் நைட்ல பயாலஜி க்ளாஸ் எடுத்தவ நீ” என்று சலித்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்துகொண்டான் முகிலன்.

மேகவர்ஷிணி சிரித்தபடி அவனது உடமைகளைப் பிரிக்கத் தொடங்கினாள்.

சொன்னது போல அவளும் முகிலனும் சாப்பிட பாரிவேந்தனின் இல்லத்துக்குச் சென்றார்கள். மனைவி சொன்ன செய்தியைக் கேட்டவனுக்குத் தந்தையைக் கண்டதும் மனம் நெகிழ்ந்துபோனது.

சர்வாதிகாரி என்று திட்டாத குறையாகப் பொருமித் தீர்ப்பவனுக்கு அவரது அன்பும் பாசமும் கண்டிப்பு என்ற மேல்பூச்சோடு வெளிப்படுவது புரிந்த பிறகும் நெகிழாமல் இருப்பானா என்ன!

“வாங்க துரை… உங்க தோட்டத்துக்குத் தேவையான செடி எல்லாம் வந்தாச்சு…. பாத்து எடுத்து வைங்க… வயசான காலத்துல அப்பனுக்கு வேலை வைக்குறதை மட்டும் நிறுத்திடாதிங்க”

வழக்கம் போல அதட்ட ஆரம்பித்தவரை கண்கள் கலங்க அணைத்தான்.

குரல் உடைந்து மீசை முளைக்க ஆரம்பித்த வயதில் ஆண் பிள்ளைகள் தந்தையை விட்டு விலகி நிற்க ஆரம்பிப்பார்கள்! மரியாதை கலந்த பயமாக ஆரம்பிக்கும் அந்த விலகல் ஆண் ஆனவன் தந்தையாகி அவனது மைந்தனைக் கொஞ்சும் வரை தொடரும். பின்னரே ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தையாக இருப்பது எத்தகைய பெரும்பொறுப்பு என்பது அவனுக்குத் தெரியவரும்.

அந்தோ பரிதாபம்! அந்நாளில் பெரும்பான்மையான தந்தையர்கள் மகனது அன்பையும் நேசத்தையும் அனுபவிக்க அவர்களுடன் இருப்பதில்லை!

முகிலனுக்கு அதற்கெல்லாம் முன்னரே தந்தையின் அன்பை உணரும் தருணம் வாய்த்துவிட்டது! இதோ பயம் கலந்த மரியாதை, தயக்கத்தை ஒதுக்கிவைத்துவிட்டு அவரை அணைத்துக்கொண்டான்.

ஐந்து வயதில் கிள்ளைமொழி பேசி எண்ணற்ற கேள்விகளைக் கேட்டவன், பத்து வயதில் கண்ணில் கண்ட கார் பைக் பொம்மைகளைக் கேட்டு அடம்பிடித்தவன், பதின்வயதில் பள்ளி கல்லுரிகளில் செய்த கலாட்டாவுக்காக தலை குனிந்து விலகி நின்றவன் – இதோ அவரது அணைப்பில்!

பாரிவேந்தனுக்குள் இருந்த தந்தையின் கண்டிப்பு உடைந்து பாசம் மட்டும் அணை நீராகப் பெருகியது. அவரும் நெக்குருகிப்போனார்.

குரம் கமறியது. வார்த்தை வரவில்லை அவருக்கு.

ரஞ்சனாவும் மோகனரங்கமும் கூட இத்தருணத்தில் நெகிழ்ந்து போனார்கள்.

மேகவர்ஷிணி மட்டும் புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தாள் இந்த அரிய காட்சியை.

“யூ ஆர் தி பெஸ்ட் அப்பா இன் த வேர்ல்ட்”

திணறிய குரலில் சொன்னான் முகிலன்.

பாரிவேந்தனின் மனம் பூரித்துப்போனது.

அவனைத் தன்னை விட்டுப் பிரித்தவர் “ஏன்னா நீ இந்த உலகத்துலயே பெஸ்ட் சன்…. நான் சொன்ன வார்த்தைக்காக நான் தேர்ந்தெடுத்த பொண்ணைக் கல்யாணம் பண்ணுனவன் நீ… இப்பவும் நீ குழந்தை தான்டா… விளைவு தெரியாம எதையும் சட்டுனு செஞ்சுடுற உனக்கு நிதானமா யோசிக்கத் தெரிஞ்ச பொண்ணு, என்னையும் உன் அம்மாவையும் மாதிரி உன்னை அளவேயில்லாம நேசிக்கிற பொண்ணு வாழ்க்கைத்துணையா வந்தா உன் வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைச்சு மேகாவ உனக்குக் கயாணம் பண்ணி வச்சேன்… இந்த பெஸ்ட் அப்பா உனக்காக பெஸ்டான பொண்ணைத் தான் தேர்ந்தெடுத்திருக்குறேன்னு நீ நம்புறல்ல?” என்று கேட்டார்.

முகிலன் மேகவர்ஷிணியைத் திரும்பிப் பார்த்தான். தன்னிடம் வருமாறு கை நீட்டினான். அவளும் ஆசையாய் அவன் கரத்திற்குள் கரம் பதிக்கவும் தன்னோடு சேர்த்து நிறுத்திக்கொண்டான்.

“இவளைத் தவிர வேற எந்தப் பொண்ணாலயும் என்னோட இம்மெச்சூரிட்டிய ஹேண்டில் பண்ண முடியாதுப்பா” என்றான் சிரிப்போடு.

மேகவர்ஷிணி ஆர்வமாகத் தந்தையைப் பார்த்தாள்.

“நீயும் என்னைப் புகழ்ந்து ஏதாச்சும் சொல்லுப்பா” என்றாள் அவள்.

அவள் சொன்ன விதத்தில் அங்கிருந்த அனைவரும் சத்தமாக நகைத்தார்கள்.

மேகவர்ஷிணி அதில் சிணுங்கவும் “என் மருமகளைக் கிண்டல் பண்ணாதிங்க யாரும்… அவளை மாதிரி ஒரு பொண்ணு தேடுனாலும் என் புள்ளைக்குக் கிடைச்சிருக்கமாட்டா” என்ற ரஞ்சனா அவளுக்குத் துணைக்கு வந்தார்.

வழக்கம் போல இக்காட்சிகள் மோகனரங்கத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்த தவறவில்லை.

பின்னர் குடும்பமாக அமர்ந்து அனைவரும் சாப்பிட மோகனரங்கம் மருமகனிடம் பழத்தோட்டம் ஒன்று விலைக்கு வருவதைப் பற்றி விவரம் கூறினார்.

“நாளைக்கு நீங்களும் அப்பாவும் போய் பாத்துப் பேசி முடிங்க மாமா” என்று முகிலன் சொல்லிவிட்டான்.

“பாருடா மறுபடி நமக்கு வேலைக்கு வைக்குறாரு துரை” எனப் பாரிவேந்தன் சலித்துக்கொள்ள அன்றைய உணவின் ருசி கூடிப்போனது முகிலனுக்கு.

அவனும் மேகாவும் பாலி ஹவுசுக்குள் செடிகளை இடம் மாற்றியபோது, அவன் சொன்னதைத் தட்டாமல் செய்தவளைக் கவனித்தவனின் பார்வை மாறி கனிந்தது.

மேகவர்ஷிணி அதைக் கவனித்துவிட்டாள்.

“என்னடா?”

அதட்டலாகக் கேட்டபடி தனது கையை அங்கிருந்த குழாயில் கழுவினாள் அவள்.

முகிலன் மலர்ச்செடிகள் இருந்த பெஞ்சின் மீது சாய்ந்து கொண்டவன் “மேகா நீ டீம் டெஸ்டோஸ்ட்ரானா இல்ல டீம் ஆக்சிடோசினா?” என்று திருட்டுப்பார்வையோடு கேட்கவும் அவளது வதனத்தில் நாணம் படர்ந்தது!

“திடீர்னு ஏன் கேக்குறிங்க புருசரே?”

கேலியாய்ப் பேசி தனது நாணத்தை ஒளித்துவைக்க முயன்றாள் அவள்.

முகிலன் அவளை நெருங்கி அவளது வதனத்தைத் தனது கைகளுக்குள் ஏந்திக்கொண்டான்.

“நான் டீம் ஆக்சிடோசின்ல ஜாயின் பண்ணி ரொம்ப நாள் ஆச்சுடி… நீ பச்சப்புள்ளை, கிண்டர்கார்டன் போற பேபினு இத்தனை நாள் ஒதுங்கி நின்னாச்சு… இப்ப தேர்ட் இயர் எக்சாம் முடிஞ்சாச்சுல்ல… சட்டுப்புட்டுனு ஒரு முடிவுக்கு வா மேகா” என்றான் அவன்.

“என்ன முடிவு?” புரியாதவளைப் போல கேட்டாள் அவள்!

“வேற என்ன? ப்யார், ப்ரேமா, காதல் இத்தியாதி இத்தியாதி ஃபுல்ஸ்டாப்” என்று ராகத்தோடு பேசியபடி அவனது விரல்கள் அவளது கன்னங்களைச் சீண்ட மேகாவின் தேகத்தில் சிலிர்ப்பு!

“ஐ வோண்ட் அக்ரி”

அவள் பிடிவாதக்குரலில் சொல்லவும் ஏமாற்றத்தின் சுவடுகள் முகிலனின் வதனத்தில்!

“ஏன்டி?” ஏக்கமாகக் கேட்டவனிடம்

“ப்யார், ப்ரேமா, காதலுக்கு ஃபுல்ஸ்டாப் எல்லாம் கிடையாது… என் கூட சேர்ந்தா கமா மட்டும் தான்… நாலு புள்ளை வேணும்னு கேட்டல்ல முகிலு? ஃபுல்ஸ்டாப்லாம் வச்சா எங்க இருந்து நாலு புள்ளைங்க பாசிபிள்னு சொல்லு” என்று அவள் வார்த்தையாட பாலிஹவுசுக்குள் மலர்களின் நறுமணத்தோடு காதலும் கலந்து கமழத் துவங்கியது.

மேகங்கள் முட்டினால் மழை பொழியுமாம்! இதோ இங்கே முகிலும் மேகமும் முட்டிக்கொள்ள காதல் மழை பொழியப்போவதற்கான அறிகுறியாக இரு இதயங்களிலும் மின்னல்கள் வெட்டின!

ஆனால் அங்கே இடியோசை எல்லாம் இல்லை! இரு மேகங்களும் இதழ் அணைத்து மோனமாய்த் தொலைந்து, கலந்து தங்கள் காதல் மழையைப் பெய்விக்கும் முயற்சியில் இறங்கின! மேகங்களின் இனிய மோனத்தைக் கலைக்க விரும்பாமல் நானும் விடைபெறுகிறேன்!

இனிதே நிறைவுற்றது!

25 thoughts on “MM 22 (FINAL)”

  1. Kalidevi

    Wow cute superb ending with cute couple moments. Alaga nadaimuraila nadukuratha solli kamichi sernthu payanicha mari iruku niraya nadakuthu intha athula oru silar alaga kondu povanga antha mari mugil panalum oru appava crt ah avaroda poruppu panni kamicharu pidikama kalyanam panalum ethum varathu un mela sonnalum kalyanam achi aduthu friends aananga aduthu oru thappunalum atha solli puriya vachi crt panni avangaluku pidichatha life la pani win pani irukanga aduthu love laum . Superb superb.

    1. Avatar

      வாவ், லவ்லி ஸ்டோரி மா, முகில், மேகா அருமையான ஜோடி, ❤❤❤❤❤

  2. Avatar

    Wow super ending sis semma story pa 👌👍😍😍😍😘🥰 oru azhagana kadhai nagarvu sis romba arumaiyana kaadhal totally ellamey superb👏😍😘💗💞

  3. M. Sarathi Rio

    மேகத்தின் மோனம்..!
    (அத்தியாயம் – 22)

    எஸ்.. கரெக்ட் ! இங்க வயசுக்கு எல்லாம் மரியாதை கொடுத்தா சரிப்பட்டு வராது. செய்யுற செயல், பேசுற வார்த்தைக்குத்
    மட்டும் தான் மரியாதை…! அது ரெண்டும் தரமில்லாம இருந்தா
    நம்ம கிட்ட இருந்து வர்ற வார்த்தைகளும் தரமில்லாத் தானே வரும்… வெல் செட் !

    அதானே.. இவனுக்கு இதே வேலையாப் போச்சு மேகாம்மா !
    எப்ப பாரு உன்னை விட்டுட்டு போக வேண்டியது, திரும்ப ஒரே டயலாக்கை அடிச்சு விட வேண்டியது, சரியான கள்ளன் இவன்…!

    பின்னே… அப்பா வாயால பாராட்டு வாங்குறது என்கிறது ஒவ்வொரு குழந்தையோட பல நாள் கனவு இல்லையா… ?
    இதுக்குத் தான் குட்டு வாங்கினாலும் மோதிர கையால குட்டு வாங்கணும்ங்கறது. அப்பாக்கள் அப்படி கண்டிப்பும் கறாராவும் இருப்பதா காட்டுறதுக்கு காரணமே… தன் பிள்ளை, தான் பார்க்காத உலகத்தை, தான் பார்க்காத உயரத்தை எட்டிப் பதர்க்கணும், எட்டணும்ங்கறது ஒவ்வொரி அப்பாவோட கனவும், ஆசையும். அந்த ஒரே எண்ணத்துலத் தான் காரணமே இல்லாம பிள்ளைங்களை திட்டறதும், கண்டிப்பதும், கடியறதும் எல்லாமே…!
    உண்மையை சொல்லப்போனா அவங்களும் ஒரு ஏணியைப் போலத்தான்…! பிள்ளைங்களை உசரத்துல கொண்டு போய் வைச்சுட்டு, அவங்க மட்டும் அதே இடத்துலயே நிலையா நின்னுடுவாங்க. எந்த பலனையும், எதிர்பார்ப்பையும்
    வைச்சுக்க மாட்டாங்க. கண்ணுக்குத் தெரிய புற உண்மை தெய்வங்கள் தான் நம்ம பெத்தவங்க… இது புரிய நமக்கு நாளாகுது அம்புட்டு தான்.

    வாவ்..! இவளைத் தவிர வேற எந்தப் பொண்ணாலேயும் என்னோட இம்மெச்சூரிட்டிய ஹாண்டில் பண்ண முடியாதுப்பா… எத்தனை அருமையான வார்த்தைகள்.
    இதைத்தான்…
    “உன்னை அறிந்தால்,
    நீ உன்னை அறிந்தால்…
    உலகத்தில் போராடலாம்..
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்…
    தலை வணங்காமல்
    நீ வாழலாம்…”

    ஓ.. இந்த “மேகத்தின் மோனம்”
    டைட்டிலின் அர்த்தம் இது தானா…! அப்ப, முகிலும் மேகமும் நல்லா முட்டிக்கட்டும், மழையும் பொழியட்டும். மழை நாட்டுக்கு நல்லது தானே..! நாமளும் இந்த மேகங்களின் இனிய மோனத்தைக் கலைக்காமல் கமுக்கமா கலைந்து போகலாம்.
    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  4. Avatar

    Excellent story dear 😍😍😍asusual attahaasamaana padaippu.
    Romba romba pudichchathu yennannu antha daddy son senti sean thaan 🥰🥰🥰🥰🥰🥰Vazhthukkal da 👍👍👍👍👍

  5. Priyarajan

    Wow 👌👌👌👌👌👌👌👌👌
    Ethir paara mrge rendu perum settled illa… Mega padichitu mugil avanoda vlog kaha spr spr rendu perum avanga paathaila correct ah irukkanga💕💕💕💕 parents mostly nama mela irukka paasatha kandipavum kovamavum tha kaatuvaanga kaaturanga👌👌👌👌👌👌
    Pidikatha kalyanamave irunthalum nama epti kondu porom nu tha irukku…. Yosikama entha mudivum eduka kudathu… Orutharukoruthar purinjitale life smooth ahidum……
    Megathin monam lovely story 😘😘😘😘😘😘😘😘😘👌👌👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  6. Avatar

    ரொம்பவே அருமையான ஒரு கதையை படித்த ஃபீல் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍

  7. Avatar

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *