Skip to content
Home » MM 9

MM 9

நம்ம சொசைட்டி நாசமா போக காரணம் என்ன தெரியுமா? நாலு பேர் நம்மளை பத்தி என்ன நினைப்பாங்கனு ஒவ்வொருத்தரும் அளவுக்கு மீறி யோசிக்குறது தான்… அதுலயும் மிடில் க்ளாஸ் பீபிள் எப்பவுமே சொந்தக்காரங்க, கொலீக்ஸ், ஃப்ரெண்ட்ஸ்னு யாரும் தங்களைக் குறைச்சு எடை போட்டுடக்கூடாதுங்கிறதுல ரொம்ப கவனமா இருப்பாங்க… இதுல பெரியளவுல பாதிக்கப்படுற என்னை மாதிரி யூத் தான்… பின்ன என்னங்க? யாரோ எதுவோ நினைப்பாங்கனு பிடிக்காத கோர்சைப் படிக்கணும்… படிச்சுட்டுச் சும்மா இருக்கான்னு சொந்தக்காரங்க குத்திக்காட்டுவாங்களேனு பிடிக்காத வேலைக்குப் போகணும்… இத்தனை வயசாகியும் பொண்ணு கிடைக்கலையானு எவனாச்சும் கிளப்பிவிட்டுருவானோனு அவசர அவசரமா வீட்டுல பாத்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும்… நம்ம ஃபினான்ஷியல் கண்டிசனுக்கு இப்ப குழந்தை பெத்துக்கிட்டா சரியா இருக்குமானு யோசிக்க கூட நேரமில்லாம சொசைட்டில என்ன சொல்லுவாங்கனு பயந்து குழந்தை பெத்துக்குறதுனு லிஸ்ட் ரொம்ப பெருசு… கொஞ்ச வருசம் பின்னாடி போய் யோசிச்சுப் பாத்தா தான் யாரோ கண்ணுக்குத் தெரியாத நாலு பேருக்காக இத்தனை வருசத்தை வேஸ்ட் பண்ணிருக்கோம்னு நமக்குப் புரியும்… அப்ப நம்மளே நினைச்சாலும் பழைய நாட்களுக்குத் திரும்பிப் போக முடியாது… இந்த மாதிரி சிச்சுவேசன்ல முக்கால்வாசி மிடில் க்ளாஸ் பாய்சோட லைஃப் ரன் ஆகுது, நானும் அந்த க்ளப்ல கூடிய விரைவில சேர்ந்துடுவேன் போல.

                                                       -முகில், தி க்ளவுட்மேன்

இன்னும் ஐந்தாண்டுகளுக்குத் திருமணம் வேண்டாமென முகிலன் சொன்னதும் பாரிவேந்தன் இவ்வளவு நேரம் முகிலனைப் பார்த்த மெச்சுதல் பார்வை துணி போட்டுத் துடைத்தார்போல காணாமல் போய்விட்டது.

“இன்னும் அஞ்சு வருசத்துல ஐநூறு பிரச்சனைய இழுத்துட்டு வருவ… அதுல இருந்து உன்னை வெளிய கொண்டு வர்ற வரைக்கும் நானும் உன் அம்மாவும் சோறு தண்ணியில்லாம கிடக்கணும்… அதான உன் விருப்பம்?” என்று வெடித்தார் மனிதர்.

“எந்த ஒரு தப்பும் ஒரு தடவை தான் நடக்கும்பா”

அவருக்குப் புரியவைத்துவிடும் வேகம் முகிலனுக்கு.

“நீ ஒவ்வொரு தடவையும் புதுசு புதுசா தப்பு பண்ணுவியேப்பா… உன்னை இப்பிடியே விட்டுட்டா வாழ்நாள் முழுக்க நீ தப்பு மட்டும் தான் பண்ணிட்டிருப்ப”

“நீங்க என்ன ஆர்கியூ பண்ணுனாலும் நான் மேகாவ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்பா… அவ தான் லூசு மாதிரி இங்க வந்து நிக்குறானா நீங்களும் அவளை என் தலையில கட்டப் பாக்குறிங்க… என் லைஃப் பார்ட்னர் இப்பிடி தான் இருக்கணும்னு எனக்குச் சில கனவுகள் இருக்குப்பா… மேகா அதுக்குத் துளி கூட செட் ஆகமாட்டா… அவளுக்குப் புத்தியில்லனா உங்க ஃப்ரெண்டுக்குமா இல்லாம போகணும்? பொண்ணு ஒருத்தனைப் பிடிச்சிருக்குனு சொன்னா அவன் வீட்டு வாசல்ல வந்து நின்னுடுவாரா? உங்க இடத்துல வேற யாரோ ஒருத்தர் இருந்திருந்தா இந்நேரம் அந்தாளை அசிங்கப்படுத்தி அனுப்பிருப்பாங்க”

முகிலன் பேசிக்கொண்டே செல்ல அடுத்த நொடி பாரிவேந்தனின் கரம் அவனது கன்னத்தைப் பதம் பார்த்தது.

பன்னிரண்டு வயதுக்குப் பிறகு அவர் ஒரு தடவை கூட முகிலனிடம் கை நீட்டியதில்லை. முறைப்பார், திட்டுவாரே தவிர கை நீட்டும் அளவுக்குச் சூழ்நிலையை முகிலனும் உருவாக்கியதில்லை.

தந்தையின் கரம் பட்ட கன்னம் எரிந்தது. ஆண்களுக்கும் அடி பட்டால் வலி எடுக்கும். கண்ணீர் வரும்! முகிலனின் கண்கள் கலங்கின.

மேகா – மோகனரங்கத்திற்காக என்னை அடித்துவிட்டாரே என்ற கோபமும் எழுந்தது. கோபத்தோடு அவன் ஏதோ சொல்லவரும் முன்னர் பாரிவேந்தன் அவனை எச்சரிக்க ஆரம்பித்தார்.

“என் ஃப்ரெண்டை பத்தி இன்னும் ஒரு வார்த்தை பேசுன, மகன்னு கூட பாக்கமாட்டேன்… கொன்னுடுவேன்… என்னடா தெரியும் உனக்கு அவனைப் பத்தி? காலேஜ்ல ரெண்டு வருசம் எனக்கு எல்லா செமஸ்டர் பீசும் கட்டுனவன் அவன்… எங்கப்பா சின்ன வயசுலயே தவறுனதால எங்கம்மா தான் என்னைப் படிக்க வச்சாங்க… அவங்க ஒன்னும் கவர்மெண்ட் உத்தியோகம் பாக்கல… அப்பளம், வடகம் போட்டு விக்குறது வயித்துப்பாட்டுக்குத் தான் வரும்… அப்ப எனக்குத் துணையா நின்னவன் மோகன்… காலவோட்டத்துல அவனும் நானும் பிரிஞ்சிட்டோம்… எங்களால ஒருத்தரை ஒருத்தர் பாக்க முடியாத சூழலும் வந்துடுச்சு… குடும்பம் குட்டினு ஆனதும் நட்பு வட்டம் மறந்து போச்சு.. கடவுளா பாத்து அவனை என் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்திருக்கார்.. அவனை நீ மோசமா பேசுற… டேய் இவ்ளோ பேசுறல்ல… உன்னோட வீடியோவ பாத்த எந்த நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவனாச்சும் உனக்குப் பொண்ணு குடுக்க முன்வருவானாடா? கை நிறைய காசு இருக்கு, புகழ் இருக்குனு தலைகனத்துல ஆடாத… உண்மையான நட்பும், எதிர்பார்ப்பில்லாத காதலும் ஒரு தடவை தான் வாழ்க்கைல வரும்… அதை இழந்துட்டனா எத்தனை கோடி குடுத்தாலும் உனக்கு மறுபடி கிடைக்காது… மோகன் இடத்துல வேற ஒருத்தன் இருந்திருந்தான்னா உன்னால அவன் பொண்ணு பேர் கெட்டுப் போனதுக்கு உன் சட்டைய பிடிச்சு கேள்வி கேட்டு அதுக்கு இழப்பீடு வாங்கிட்டுப் போயிருப்பான்… என் ஃப்ரெண்ட் அவனோட மக ஆசைப்பட்டாளேனு இங்க வந்திருக்கானே தவிர ‘முகில் – தி க்ளவுட்மேன்’னு நீ உருவாக்கி வச்சிருக்குற பிம்பத்துக்காக வரல… என் பேச்சைக் கேக்க விருப்பமில்லாதவனுக்கு என் வீட்டுல இடமில்ல”

மகன் மனம் வருந்துவானே என்று நிறைய விசயங்களைப் பாரிவேந்தன் அவனிடம் சொல்வதில்லை. நம் மக்கள் சினிமா, தொலைகாட்சி நட்சத்திரங்கள் போல இந்த இன்ஃப்ளூயன்சர்களை ரசிப்பார்களே தவிர அவர்களைத் தங்களில் ஒருவராக ஏற்றுப் பழக மாட்டார்கள்!

“சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்ஸ் எல்லாத்தையும் கண்டெண்ட்டா மட்டும் தான் பாப்பாங்க… அழகான தருணம்னு ஒன்னு அவங்க கூட ஷேர் பண்ணிக்க முடியாது… அதையும் கண்டெண்ட் ஆக்கி காசு பாக்க துடிப்பாங்க… இயல்பான வாழ்க்கைய ரசிச்சு வாழ முடியாது… கேமரா முன்னாடி ஹேப்பி கபிளா நாடகம் போடணும்… கோமாளி மாதிரி நடிக்கணும்… இதெல்லாம் எனக்குச் செட் ஆகாது அங்கிள்… எனக்கு ஒரு சிம்பிளான லைஃப் வேணும்… முகிலைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு அது கிடைக்காது… அவனை மாதிரி இன்ஃப்ளூயன்சர் யாரையாச்சும் அவனைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுங்க… அவங்களால தான் பணத்துக்காக ஃபேக் லைஃப் ஸ்டைல் வாழ முடியும்… நான் டிக்னிட்டியோட வாழ ஆசைப்படுறேன்… பணம் எனக்கு ரெண்டாம் பட்சம் தான்”

இது முகிலனுக்காகக் குன்னூரில் பார்த்தாரே ஒரு பெண், நண்பனின் மகள், அவர் கூறியது!

‘க்ரவுண்ட் ரியாலிட்டி’ என்பார்களே அது எப்போதும் இப்படி தான் இருக்கும். எந்தப் பளபளப்பையும், போலி புகழையும் சாமானிய மக்கள் பெரிதாய்க் கருதுவதில்லை.

பிரபலங்கள் எல்லாம் பொழுதுபோக்குக்கான காரணிகள் மட்டுமே! அவர்களைத் தங்களது வாழ்க்கைக்குள் இழுத்துப்போட்டுக்கொண்டு வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கொள்ள யாரும் விரும்பமாட்டார்கள்!

இதெல்லாம் முகிலனுக்குப் புரியவில்லை என்பது பாரிவேந்தனின் எண்ணம். நண்பரின் மகள் சொன்னது போல அவனைப் போலவே சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சரை அவன் மணந்தான் என்றால் கட்டாயம் தனிப்பட்ட வாழ்க்கை என்ற ஒன்று இல்லாமல் மகனும் ‘கண்டெண்ட்’ ஒன்றே வாழ்வில் குறிக்கோள் என்ற எண்ணத்தோடு வாழ்வின் அழகான தருணங்கள் அனைத்தையும் மற்றவர் பார்வைக்கு விருந்தாக்கிப் பணம் சம்பாதிக்கும் கேலிக்கூத்தைச் செய்ய நேரிடும் என்பது அவரது எண்ணம்.

ஒரே ஒரு பிள்ளையைப் பெற்று அவன் பணத்துக்காக இல்லாத கோமாளித்தனங்களை எல்லாம் செய்வதில் அவருக்குக் கிஞ்சித்தும் விருப்பமில்லை. கூடவே பெயரும் அல்லவா கெட்டுப் போகிறது!

இதெல்லாம் யோசித்துவிட்டுத் தான் மேகவர்ஷிணி காதல் என்றதும் அவர் சம்மதித்தார். முகிலனின் பக்கத்து நியாயம் சரியாகவே இருக்கலாம். ஆனால் அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை!

திருமணம் என்றதும் சுதந்திரம் பறிபோய்விடும் என்று அவன் அஞ்சலாம்! ஆனால் மேகவர்ஷிணி ஒன்றும் கட்டுப்பெட்டியான பெண் அல்லவே! மனதில் நினைப்பதை ஒளிவுமறைவின்றி பெரியவர்களிடம் வெளிப்படையாகப் பேசுமளவுக்கு அவளுக்குத் தைரியம் இருக்கிறது.

பேச்சு, செயல், ஆடைகளில் நவீனகாலப்பெண்களைத் தானே பிரதிபலிக்கிறாள். கட்டாயம் முகிலனின் சுதந்திரத்தை அவள் கெடுத்துவிடமாட்டாள்.

முகிலன் தோட்டத்தில் தனது மறுப்பைக் கூறியதையும், பின்னர் நடந்ததையும் மனைவியிடம் கூறி மேற்சொன்ன தனது பயத்தையும் வெளிப்படுத்திவிட்டார். ரஞ்சனாவுக்கு அவரது பயத்தில் இருந்த நியாயம் புரிந்தது.

ஒருமுறை முகிலனைக் காவல்துறையினர் கைது செய்தபோதே இருவரும் அரை உயிராகிப் போனார்கள். அவனது விளையாட்டுப்போக்கால் இது தொடர்கதை ஆகிவிடுமோ என்ற பயம் அவருக்கும் உண்டு.

யாரோ ஒரு பெண்ணைத் தேடி அவனுக்கு மனைவியாக்குவதற்கு பதிலாக கணவரின் நண்பர் மகளை மருமகளாக்கிக் கொண்டால் பிரச்சனை வராது என்றே அவருக்கும் தோன்றியது.

“நான் முகில் கிட்ட பேசுறேன்ங்க”

ரஞ்சனா தோட்டத்துக்குப் போய் கலங்கிய கோலத்தில் நின்ற மகனைச் சமாதானப்படுத்தி சம்மதிக்கவைப்பதற்கான பேச்சை ஆரம்பித்தார். ஆனால் அதற்கு முன்பாக முகிலனே “நான் மேகாவ கல்யாணம் பண்ணிக்குறேன்மா… அப்பா கிட்ட சொல்லிடு” என்று சொல்லிவிட அவருக்குப் பழம் நழுவி பாலில் விழுந்தது போலாகிவிட்டது.

ரஞ்சனா நற்செய்தியைக் கணவரிடம் பகிர்ந்துகொள்ள ஓட முகிலனோ அவனது மனக்கணக்கைத் தொடர்ந்தான்.

தந்தை கைநீட்டியதும் மனமுடைந்து ராமிடம் நடந்ததைப் பகிர்ந்துகொண்டவனுக்கு நண்பன் என்ற முறையில் அவன் ஆறுதல் கூறினான்.

“இப்ப என்ன மச்சி? கல்யாணத்துக்குச் சம்மதிக்கச் சொல்லுறார்… அவ்ளோ தானே? சம்மதிச்சிடு” என்றான் அவன்.

உடனே முகிலன் அலறினான்.

“டேய் என்னால முடியாது… அந்த மேகா குட்டிப்பிசாசு என் லைஃப்ல வந்ததும் இது நாள் வரைக்கும் என் கிட்ட கைநீட்டாத எங்கப்பா என்னை அடிச்சிட்டார்… அவளை மட்டும் நான் கல்யாணம் பண்ணுனேன்னு வையேன்… லைஃப் லாங் அவ கண்ட்ரோல்ல நான் இருக்குற மாதிரி ஆகிடும்… என்னால அவளை ஒய்ப்ங்கிற ஸ்தானத்துல வச்சு பாக்கக் கூட முடியல ராம்” என்று கதறாதக் குறையாக கூறியவனுக்கு ஒரு உபாயம் சொன்னான் ராம்.

ஆனால் முகிலனுக்கு அதை ஏற்க தயக்கம்! மீண்டும் ஐயோ அம்மாவென அலறல் அவனிடமிருந்து வரவும் ராம் பொறுமையாக அவனிடம் விளக்கமளித்தான்.

“மேகாவுக்கு இப்ப நீ ஹீரோவா தெரியுற மச்சி… அவ இடத்துல யார் இருந்தாலும் அப்பிடிதான் யோசிப்பாங்க… சூசைட் பண்ணப் போனவ உன் பேச்சால மறுபடி வாழணும்னு ஆசைப்பட்டு பாசிட்டிவியோட லைஃபை வாழுறா… இப்பிடிப்பட்ட மனநிலைல நீ வெக்ஸ் ஆனது பொறுக்காம உன் மேல இரக்கப்பட்டுருக்கா… அதை லவ்னு தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்காடா… இப்போதைக்கு நீ கல்யாணத்துக்கு ஓ.கே சொல்லு… உடனேவா கல்யாணம் பண்ணி வச்சிடப்போறாங்க? உனக்கு என்ன வயசு ஆகு? இருபத்தைஞ்சு… குழந்தைப்பையன்டா நீ… எப்பிடியும் இன்னும் மூனு நாலு வருசம் ஆகும்டா மேரேஜுக்கு.. மேகாவும் சின்னப்பொண்ணு… இவ்ளோ ஏர்லியரா மேரேஜ் பண்ணுறதுலாம் இன்னைக்குக் காலகட்டத்துக்கு சைல்ட் மேரேஜ் மாதிரி… அங்கிள் உன்னை அவரோட கண்ட்ரோல்ல வச்சுக்க நினைக்குறதுக்குக் காரணம் நீ மறுபடி பிரச்சனைல மாட்டிடக்கூடாதுங்கிற அக்கறையில தான்.., இன்னும் மூனு நாலு வருசத்துல மேகாவோட மனசு முதிர்ச்சியடையலாம்… அவளுக்கேத்த பார்ட்னரை அவ மீட் பண்ணலாம்… அப்ப அவளுக்கு உன் மேல இருக்குறது லவ் இல்ல, இரக்கம்னு புரியவரும்… அதனால இப்போதைக்கு எரியுற தீயை அணைச்சிடுனு சொல்லுறேன்… அப்பாக்கும் பயம் குறையும்”

ராம் கொடுத்த விளக்கம் ஏற்புடையதாக இருக்கவே ரஞ்சனாவிடம் சம்மதம் சொல்லிவிட்டான் முகிலன்.

மனைவி சொன்ன செய்தியைக் கேட்டதும் முதலில் சந்தோசப்பட்ட பாரிவேந்தன் தன்னிடம் அவ்வளவு வசனம் பேசிய மகன் திடுமென எப்படி சம்மதித்தான் என்று அடுத்த நொடியே ஐயங்கொண்டார்.

ஆனால் மனைவியிடம் காட்டிக்கொள்ளவில்லை.

“இப்பவே மேகா கிட்ட இதைச் சொல்ல வேண்டாம் ரஞ்சி… எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு… அதை முடிச்சிட்டு மேகா கிட்டவும் மோகன் கிட்டவும் இந்தச் சந்தோசமான தகவலை ஷேர் பண்ணிக்கலாம்… அது வரைக்கும் மோகனையும் மேகாவையும் நம்ம ஸ்பெஷல் கெஸ்டா நினைச்சு கவனிக்கணும்” என்று சொல்லி மனைவியை அனுப்பி வைத்தார்.

மகன் சொன்னான் என்று மேகவர்ஷிணியின் மனதில் ஆசையை வளர்க்க அவர் தயாராக இல்லை. உறுதியாய் முகிலன் மேகவர்ஷிணியை மணபேன் என்று சொல்லாதவரைக்கும் அவர் எந்த வாக்குறுதியும் அளிக்க விரும்பவில்லை. திடுமென மகனின் மனம் மாறிப்போனால் ஒரு சிறுபெண்ணின் மனதில் ஆசையை வளர்த்து ஏமாற்றிய பாவம் அல்லவா வந்து சேரும்! எனவே பொறுமையாக முகிலனின் நடவடிக்கைகளைக் கவனிக்க முடிவு செய்தவர் கூடவே இன்னொரு முடிவையும் யாரிடமும் சொல்லாமல் இரகசியமாக எடுத்தார்.

சம்மதம் சொன்னால் தந்தை குதூகலத்தில் சமாதானமாகிவிடுவார் என்ற எண்ணத்தில் முகிலன் நிம்மதியுற்றிருந்தான். அவனைக் கண்காணிக்க பாரிவேந்தன் முடிவு செய்ததெல்லாம் தெரிய வந்தால் அவனது நிலை?

16 thoughts on “MM 9”

  1. M. Sarathi Rio

    மேகத்தின் மோனம்..!
    (அத்தியாயம் – 9)

    உண்மை தான்…! எதிர்பார்ப்பில்லாத காதலும், உண்மையான நட்பும் வாம்க்கையில ஒருத்தடவை தான் கிடைக்கும்.

    பாவம் மேகா…! முகிலனுக்கு பொண்டாட்டியாகறதுக்கு முன்னாடியே, அவன் வாம்க்கையில நுழையறதுக்கு முன்னாடியே, குட்டிப்பிசாசு, குட்டிச்சாத்தான்னு…. ரொம்ப அருமையான பெட் பேரெல்லாம் கிடைக்குது.

    மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தானே தெரியும்…பிள்ளைகளோட உள்மனசும், அதிலுள்ள வக்கிர புத்தியும்…! சூப்பர் அப்பு…!
    😂😂😂
    CRVS (or) CRVS 2797

  2. Avatar

    Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 payapulla avanga appava pathi theriyama pannikiru eruku silly fellow 🤣

  3. Avatar

    Nice update dear 👌👌👌
    Athipuththisaalinnu nenappu oruththanukku…evan appa villaathi villannu therila evanukku…kozhanthapulla nu ram sonnathu sariyaa erukku 🤭🤭🤭

  4. Kalidevi

    Unnoda positive varthaila ava life la next step eduthu vachi iruka athuvum illama straight ah un kitta solli un veetuku vanthuta ithula ung appa friend ponnu konjam yosikalame atha vittu avala panni ka matenu solli ipo friend solranu ok solra ethum neeya yosika matiya . But unga appa etho step edukuraru papom enanu

  5. Avatar

    Enna nilai nondha nilai than avan language la that means kalyanam pavam paiyan pagal kanavu kandutu iruku aana vendhan avar ivan oda thought ethuvum nadakkuthu nu theriyama happy ah irukan

  6. Avatar

    பாரிவேந்தன் சார் சத்தம் இல்லாமல் பையனுக்கு கல்யாணத்தையே முடிக்க முடிவெடுத்துட்டாருன்னு தோணுது. இது தெரியாம அப்பாவை தற்காலிகமாக சமாதானம் படுத்திட்டதா முகில் நினைச்சுகிட்டு இருக்கான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *