Skip to content
Home » தீயாகிய தீபம் » Page 2

தீயாகிய தீபம்

தீயாகிய தீபம் 10

தீயாகிய தீபம் 10 வாழ்க்கையில் கணவன் மனைவி என்னும் புதியதொரு அழகான உறவிற்குள்ச் சென்றிருந்த விக்கி மற்றும் ருத்ரா எந்தவொரு மாற்றமும் இல்லாமல் நண்பர்களைப் போலவே இருந்தனர். திருமணம் முடிந்த அடுத்த ஒரு வாரம்… Read More »தீயாகிய தீபம் 10

தீயாகிய தீபம் 9

தீயாகிய தீபம் 9 கோதாவரியும் அபர்ணாவும் புதுமணத் தம்பதிகளான விக்கி ருத்ராவை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். “வலது காலை எடுத்து வெச்சி வாம்மா” எனக்  கோதாவரி கூற அவ்வாறே ருத்ரா தன் கணவன் வீட்டினுள் அடியெடுத்து வைத்தாள். பூஜை அறையில் தீபம் ஏற்றினாள் ருத்ரா. பின்பு கோதாவரி விக்கி ருத்ராவிற்குப் பாலும்… Read More »தீயாகிய தீபம் 9

தீயாகிய தீபம் 8

தீயாகிய தீபம் 8 விக்கியின் மனைவி என்னும் புதிய  பதவியை ருத்ரா  அடைந்துவிட்டாள். இந்த நொடிக்காக தானே எத்தனை எத்தனை ஆசை கனவுகளோடு காத்திருந்தாள். ஆனால் அவை அனைத்தும் மொத்தமாக  இடிந்து தரைமட்டம் ஆகிவிட்டது. திருமண சடங்குகள் எதிலும் அவள் மனம் லயிக்கவில்லை. விக்கி மற்றொரு பெண்ணுடன் இருந்த புகைப்படத்தைப் பார்த்ததும் உடனே கேள்வி கேட்டு  திருமணத்தை நிறுத்தியிருக்கலாம். ஆனால் தான் ஏன் அப்படிச் செய்யவில்லை எனத் தன்னை  தானே  பலமுறை கேட்டுவிட்டாள். “நீ விக்கியை நேசிப்பதுதான் காரணம் வேறு என்ன? ” உள்ளம் உண்மையை உரைத்தது. சிறு வயது முதலே ருத்ராவிடம் ஒரு பழக்கம் உண்டு. தனக்கு வேண்டுமென்பதை எப்பொழுதும் யாருக்கும்  எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டாள்.  அதை எப்படியும் தன் வசம் ஆக்கிக் கொண்டே தீருவாள். விக்கி தனக்கானவன்.… Read More »தீயாகிய தீபம் 8

தீயாகிய தீபம் 7

தீயாகிய தீபம் 7 விக்கி மற்றும் ருத்ரா ரிசப்ஷென் விமர்சையாக களைக்கட்டியது. ஒரு பக்க தனி மேடையில் இசைக் கலைஞர்கள் தத்தம் வாத்திய கருவிகளை அதன் உரையிலிருந்து துகிலுரித்துக் கொண்டிருந்தனர். கல்யாண ரிசப்ஷனில் பலர் புடவைக்கு மாற்றாக  விதவிதமான பல வண்ண வடநாட்டுப் பாணியில் ஆடைகள் அணிந்திருந்தனர். விவரம் தெரிந்த யாரும் ஆறு மணிக்கு வர மாட்டார்கள். ஆனால் சில அப்பாவி மனிதர்கள் ஆறு மணிக்கே  வந்தமர்ந்து   பே பே என முழித்து கொண்டிருந்தார்கள்.… Read More »தீயாகிய தீபம் 7

தீயாகிய தீபம் 6

தீயாகிய தீபம் 6 விக்கித் தானே விமான நிலையம் சென்று கம்போடியாவிலிருந்து திரும்பும் ருத்ராவை வரவேற்றான். பெரியவர்கள் யாரும் செல்ல வில்லை.  அவர்களுக்குள் நல்ல அன்யோன்யம் வர வேண்டி ஒதுங்கிவிட்டனர். ருத்ரா தங்கை பவித்ராவிற்கு தான் சற்று வருத்தம். ஆசையாக அக்காவை வரவேற்க எண்ணியவளுக்குத் தடை உத்தரவு. ருத்ரா “ஹாய் விக்கி” எனக் கையசைத்து டிராலியை தள்ளியபடி முகம் கொள்ளா புன்னகையுடன்… Read More »தீயாகிய தீபம் 6

தீயாகிய தீபம் 5

தீயாகிய தீபம் 5 விக்கி மற்றும் ருத்ரா நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்து முடிந்தது. விக்கி பெற்றோரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அடுத்த இரண்டு நாட்களில் ருத்ரா தன் வேலைத் தொடர்பான  வெளிநாட்டுப் பயணத்தை தங்களின் குழுவுடன் மேற்கொண்டாள். ருத்ரா தன் வேலையில் தன்னையே தொலைத்தாள் என்பதுதான் உண்மை. அங்கோர்வாட் கோயில் அதன்… Read More »தீயாகிய தீபம் 5

தீயாகிய தீபம் 4

தீயாகிய தீபம் 4 ருத்ரா வயது 25 சொல்லில், செயலில், எண்ணத்தில் ஒரு நேர்த்தி இருக்கும். கூர்மையான பார்வை. சற்றே உயரம் குறைவு.   பருமனான தேகம்.  கொத்தமல்லி கட்டு போல தலை முடி.  அவளுக்கு நீண்ட முடி வேண்டும் என்னும் ஆசை.  ருத்ரா  தொல்லியல் துறையில் பணிபுரிகிறாள். அவள் வேலை   அலுவலகத்தில் காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஆறு   வரை எனக் கிடையாது. ஊர் ஊராகச் சுற்ற வேண்டும். பல நாள்   வீட்டுக்கு வரக் கூட  முடியாது. அது மட்டும் அல்லாமல் ஓவியம் தீட்டுவதிலும் திறமையானவள்.  மிக நேர்த்தியாக வரைவாள். சிறு வயது முதலே நன்றாக ஓவியம் தீட்டுவாள். தொல்லியல் தொடர்பான படிப்பைத் தேர்ந்தெடுத்த பொழுது  வீட்டில் யாரும் ஆட்சேபிக்கவில்லை. அவள் படித்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்னும்  நிலைமை இல்லை. செல்வச்  செழிப்பான குடும்பம். அதனால் படிப்பு வேலை அனைத்தும்  அவள் விருப்பம். ருத்ராவின் அப்பா நாராயணன் ரெயில்வே துறையில் உயர்  அதிகாரி. அம்மா பரிமளம் மகப்பேறு மருத்துவர்.  இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் சங்கரன், ருத்ரா மற்றும் பவித்ரா.… Read More »தீயாகிய தீபம் 4