🍁 11
- 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
பள்ளியில் வகுப்பெடுக்க நேரம் போனது. மதியம் அபிக்கு உணவு ஊட்டினாள். இந்த பள்ளியில் பணி என்றதுமே அபநயாவுக்கு இவளே உணவு ஊட்ட எளிதானதாக மாறியது.
மகிழ்வோடு அக்கணம் செல்ல சகஆசிரியர் ஒருவர் இவளை பற்றி அறிந்தவாரே, இவளுக்கு விவாகரத்து ஆனா நிலையும் அறிந்து, அவளிடம் அவளை வாழ வைக்க எண்ணுவதாக ஆரம்பித்து பேசியவர், கடைசியில் பேசியது எப்பொழுதும் முடியும் அதே அசிங்கத்தில் தான். இதனை கூட இவள் மற்ற ஆண்களிடம் எதிர்பார்த்து இருந்தாள். அப்படி பேசி வருபவரிடம் முகத்திற்கு நேராக கத்தி அறைந்தது நினைவு வர, இன்றோ அப்படி செய்ய இயலாமல் நின்றாள்.
அறைந்தால் எங்கே பணி இல்லாமல் போயிடும் என்ற அச்சம். மேலிடத்தில் புகார் கொடுக்கலாம் என்றாலோ சக ஆசிரியர். இத்தனை நாட்களாக இங்கு பணிப்புரிந்தவர். தானோ இங்கு கொஞ்ச மாதங்களாக இருக்கும் தற்காலிக ஆசிரியர் என்றெண்ணி பத்தோடு பதினொன்றாக அவள் அந்த நிகழ்வை புறம் தள்ளபோராடினாள்.
மாலையில் அதே ஆசிரியர் அபிநயாவை கிள்ளி கீர்த்தனவை பார்த்தபடி முத்தமிட, கீர்த்தனா உடலெங்கும் நாகம் தீண்டிய உணர்வில், அபியை அழைத்து மாலையில் பள்ளியில் இருந்து கிளம்பினாள்.
அவள் காரில் அபிநயாவை முன்னே அமர வைத்து வண்டியை செலுத்த, ஒரு இடத்தில் மக்காசோளம் இருக்க அதனை வாங்கி தருமாறு அபிநயா செய்கை செய்ய காரை ஓரமாக நிறுத்தினாள்.
மக்கா சோளம் வாங்கி விட்டு திரும்ப எதிரில் ஒரு ஷோப்பில் ராஜேஷ் கேத்ரினை கை தாங்கலாக ஒரு கையை பற்றி, மறுகையில் அந்த கடையில் வாங்கிய பை இருக்க நொறுங்கி போனாள்.
அபிநயா வயிற்றில் இருக்க, இதே போல தான் ராஜேஷ் அன்பு தனக்கு கிடைத்தது என்று எண்ணியவள் கண்ணீர் வரவா வேண்டாமா என கண்களில் வட்டதிலே போராட.. பெருமூச்சோன்றை வெளியேற்றி தனது கண்ணீரை இழுத்து கொண்டாள்.
காரினை கிளப்பி வீட்டுக்கு வந்து அபியிடம் மக்காசோளம் கொடுத்துவிட்டு சிலையாக அமர்ந்து விட்டாள்.
ராஜேஷ் போனதற்கு எல்லாம் அவளுள் கவலை இல்லை… அவனாவது ஒரு வாழ்க்கை அமைத்து கொண்டானே என்ற நிம்மதி அடைந்தாலும், தான் நினைத்தால் அவனோடு வாழும் கை எட்டிய சொர்க்கம் தான். ஆனால் அபி.. அபியை விட்டுவிட்டு எப்படி? தனக்கு தாய்மை என்ற வரத்தை கொடுத்தவள் அவள்.
கடவுள் மகளாக வந்து இருக்கா.. இது ராஜேஷ் நம்பறானோ இல்லையோ எனக்கு நான் நம்பறேன். கணவன் மனைவி உறவை விட அம்மா என்ற தாய்மை எந்த விதத்தில் இறங்கி இருக்கு. நான் அபியை விட்டுட்டு ராஜேஷ் மட்டும் போதும் என்று போக.. எனக்கு இந்த ஜென்மம் இந்த வாழ்க்கை போதும்… 25 வயது வரை சொல்ல இயலாத அளவுக்கு சந்தோஷம் அடைந்து விட்டேன். இனி அபியின் சிரிப்பில் மட்டுமே எந்தன் வாழ்வு… என்று கண் அயர்ந்தாள்.
அடுத்த நாள் காலையில் இருந்தே அபிநயா உடல் சுகவீனம் ஆக கீர்த்தனா அபியை அழைத்து மருத்துவமனை சென்றாள்.
அங்கே மக்காசோளம் சரியாக மென்று உண்ணாமல் அப்படியே உண்ண போக, அது மந்தமாகி வயிற்று வலி வந்து கொஞ்சம் போல ஜுரம் வந்து விட்டது.
மொத்த நேரமும் அங்கே செல்போனை கூட எடுக்க மறந்து இருந்தாள். அருகே இருந்து கவனித்து மாலையில் தான் கிளம்ப, வீட்டுக்கு வரும் பொழுதே, அங்கே வாட்ச்மேன் அருகே அபிமன்யு மற்றும் மல்லிகா மிஸ் இருவரும் நிற்க கண்டு குழம்பினாள்.
”சார்.. அதோ கீர்த்தனா மேடமே வந்துட்டாங்க” என்றதும் இருவரும் அவளை காண அவளோ ஒரே நாளில் ஒடிந்து போயிருந்தாள்.
”வாங்க ஸார்… வாங்க மேம்.. என்ன திடிருனு…?” என லிப்டில் தங்கள் தளத்திற்கு அழைத்து சென்றாள்.
கதவை திறக்க கொஞ்சம் கஷ்டம் கொண்ட கீர்த்தியிடம் இருந்து சாவியினை பற்றி அபிமன்யுவே திறந்தான்.
அங்கு இருந்த இரு அறையில் ஒரு அறையில் அபிநயாவை உறங்க வைத்தாள்.
அபிமன்யு கண்களை நாலாபக்கம் பார்க்க அங்கே ஹாலில் ஒரு புகைப்படம். ராஜேஷ் அபிநயா கீர்த்தனா ஐந்து போட்டோ வருடங்கள் வாரியாக இருந்தது. ஐந்து வருடத்தில் இருந்து அபி கீர்த்தி மட்டுமே இருக்க அதுவே அபிமன்யுவிற்கு புரிந்தது.
குடிநீர் முன்னே நீட்டி “குடிங்க சார்.” என்று சொன்னவள் அவன் பெற்றதும் ஃபிரிட்ஜ் திறந்து பழச்சாறை டம்ளரில் உற்ற வாங்கி பருகினார் மல்லிகா மிஸ்.
”ஏன் கீர்த்தி அபிக்கு என்னாச்சு?”
”அது ஒண்ணுமில்லை மிஸ் எப்பவும் அவள் உணவை சரியா கடிச்சு விழுங்க மாட்டாள். சாப்பிடும் பொழுது கொஞ்சம் கடினமான உணவை எல்லாம் பக்கத்தில இருந்து சொன்னா தான் நல்லா மெல்லுவா.. நேற்று கொஞ்சம் கவனம் இல்லாமல் கொடுத்துட்டு அப்படியே உட்கார்ந்துட்டேன். அபிநயா மக்காசோளம் சரியா மெல்லாம சாப்பிட்டு இப்படி ஜுரம் ஆகிடுச்சு.. வயிறும் வலி… சரியாகிடும் சொல்லி இருக்காங்க” என்றதும்
”ஓஹ் காட்…என்னாச்சு அபியை நீ எப்பவும் பக்கத்தில தானே பார்த்துப்பா?” என்று மல்லிகா கேட்க
”இல்லை மிஸ் கொஞ்சம் நேற்று டிஸ்டர்ப் ஆகிட்டேன்.. தலைவலி..” என்று தயாளன் பேசியதை சொல்லாமல் தவிர்த்தாள்.
”எல்லாம் தெரியும் அந்த தயாளன் பேசியது தானே.. நீ ஏன் கீர்த்தி அதை எங்களிடம் சொல்லலை நல்ல வேளை அபிமன்யு பார்த்தார்.. அவனை வேலை விட்டே தூக்கிட்டார்..” என்றதும் கீர்த்தி அபிமன்யுவை காண அவனோ அபியின் 2 வயது குழந்தை புகைப்படம் கண்டான். அவன் பார்வை தான் அங்கே இருந்தாலும் கீர்த்தி பார்ப்பதை அவன் அறியாமல் இல்லை…
”இல்லை மிஸ் அவர் 10 வருஷமா இங்க ஒர்க் பன்றார்.. சில மாதம் வந்த நான் சொல்றது எடுபடுமா என்ற ஒரு தயக்கம்.. அதுவும் இல்லாமல் இதே போல நான் முன்ன வேலை பார்த்த இடங்களிலும் பேசி என்னை கஷ்டபடுத்தி இருக்காங்க.. அதான் அதே கேட்டு பழகிடுச்சு இனி அவரிடம் பேச வேண்டாம் இருந்தேன் இப்போ அதுவும் அவசியம் இல்லை.. தேங்க்ஸ் சார்” என்று மனுவை பார்த்து கூற அபிமன்யுவோ மெல்ல முன் வந்து,
”உங்கள் நலனில் சிலர் மல்லிகா மிஸ் மாதிரி அக்கறை இருக்கறவங்க இருக்காங்க அவர்களிடம் உங்கள் கஷ்டத்தை பகிருங்க… இப்படி உள்ளுக்குள்ளே போட்டு வருத்தி கொள்ளாதிங்க..” என்று பருகியவன் மல்லிகா மிஸ் பேசி கிளம்பி வெளியேறினார்கள். ”அந்த ரூம்ல இன்னும் பீர் பாட்டால் இருக்கு ரிமூவ் செய்திடுங்க… அபிநயா இருக்கா எடுத்து உடைச்சி காலில் குத்தவோ அல்லது அவளே.. சோ கொஞ்சம் அழிச்சுடுங்க அங்க இருக்கற பாட்டில் அதே போல சில கசப்பை…” என்று கிளம்பினான்.
அவன் சொல்லியதில் புரிந்தும் ஏதோ ஒன்று புரியாமல் இருக்க கண்டவள் பால்கனியில் இருந்து அபிமன்யுவின் காரை பார்த்து மல்லிகா மிஸ் வழியனுப்பி வைத்தாள்.
அடுத்த நாள் மல்லிகா மிஸ் தான் ‘அபிமன்யு வந்து அன்றே இவளை பார்க்க தன்னையும் அழைத்து சொன்னார். இல்லை என்றால் தனக்கு கூட அன்னிகழ்வு தெரியாமல் போயிருக்கும் ஆனால் அவர் தனியாக உன்னை சந்திக்க யோசித்து தான் என்னை அழைத்து சொல்லி கூட்டி கொண்டு வந்தார்” என்றதும் அபிமன்யு மேல் அதிக மதிப்பு கூடியது.
முதலில் தான் அவனை அறைந்த அன்றும் ஆண் என்று கோவப்படாமல் பொறுமையாக எதுக்கு அடிச்சிங்க என்று நிதானத்தோடு கேட்ட அவனின் செயலும், பின்னர் அவனே பள்ளியில் தான் அடித்ததை கூட மறந்து இன்முகமாக பேசி மதிப்பு கொடுக்க. அடுத்து வேலையும் கொடுத்து அதில் ஏற்பட்ட இன்னல்களை களைத்து. ஒரு பெண்ணுக்கு நல்ல காவலனாக கேர் எடுத்து செய்து இருக்கான். என்ற எண்ணம் ஓட பக்கத்தில் இருக்கும் ஆசிரியர் புது மணப்பெண் பத்திரிகை எடுத்து சக ஆசிரியருக்கு கொடுத்து விட அந்த ஆசிரியரோ அந்த நேரத்தில் ”உன்னை கேர் எடுத்து புரோடக்ட் பண்ணி சாஃப்ட் ஆக இருப்பரே அவர் தானா? ஒரு கணவனுக்கு இந்த தகுதி போதுமே. வாழ்த்துகள்” என சொல்ல அபிமன்யுவை எண்ணி பார்த்த கீர்த்திக்கு ”ஒரு பொண்ணு விரும்பற குணம் தான் அபிமன்யு சார்… நல்ல கணவன்” என்ற சிந்தையில் உதிர்த்தவள், அவர் என்னை அல்லவா அப்படி பார்த்து கிட்டார். என்றும் யோசித்தவள் ‘சே நான் திருமணம் ஆனவள் அவரை போயி எப்படி இப்படி யோசிச்சேன். சே முட்டாள் முட்டாள்.. அவர் ஏதோ பாவப்பட்டு, அவரோட பள்ளி நிர்வாகம் ஒழுங்கா இருக்க, ஸ்டெப் எடுத்து இருப்பார். அதை போயி… முதலில் இப்படி தோணுச்சு என்றதே கேவலம்.’ அதோடு அந்த எண்ணம் மேலும் செல்லாமல் கீர்த்தி மாற்றி கொண்டாள்.
ஆனால் மாற்றி கொள்ளும் எண்ணம் இருந்தவனோ மாறாமல் ஆசைப்பட்டான். ராஜேஷ் கீர்த்தி வாழ்வில் இல்லை.. அப்போ நான் இருக்கேனா? என்னோட வாழ்வு அவளோட இணையுமா?
அவளோட என் காதல் சொல்லலாமா? அப்படி செய்தால் அவள் ஏற்று கொள்வாளா? என்று தவித்தவன். கடைசில் சொல்ல கூடாது தான் அப்படி சொன்னால் தயாளன் போல எண்ணுவாள். கொஞ்சம் காலம் போவதே நல்லது.
ஆனால்… இந்த காதல் ஜெயிக்குமா? தோற்கும் என்றே காதல் செய்பவன் நானாக தான் இருப்பேனா.? என்றெல்லாம் எண்ணினாலும் அவனின் மனம் கீர்த்தியிடம் தவறாக நடந்தவனை வேலயை விட்டு அனுப்பியதில் கொஞ்சம் நிம்மதி அடைந்தாள் என்றதில் சந்தோஷம் கொண்டது.
இந்த சந்தோஷம் தானே இன்னும் சில நாட்களில் அழிபோம் என்று அறியாது போனான்.
Super. Intresting sis.