Skip to content
Home » அபியும் நானும்-13

அபியும் நானும்-13

🍁 13
                  அபிமன்யு சொல்லி விட்டான் என்று தனது காரை தவிர்த்தது தவறோ என்று கீர்த்தி நொடிக்கு ஒரு முறை எண்ணி கொண்டிருந்தாள்.
             அபிமன்யுகார் கண்டதும் தான் நிம்மதியுற்றாள்.

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  


        அபிமன்யு முன் கதவை திறந்து ஏற சொல்ல, கொஞ்சம் அல்ல அதிகமாகவே தயங்கி ஏறினாள். அதிலும் வாட்ச்மேன் எதிர் வீட்டில் வேலை செய்யும் கண்ணம்மா வேறு இவளை குறுகுறுவென பார்ப்பதை அறிந்து ஏறியது இன்னும் அவஸ்தை தந்தது.


      ”சார் எங்க போறோம் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்க அவளை ஒரு பார்வை பார்த்தவன்.
      ”கீர்த்தி நான் இன்னும் அந்த டிபார்ட்மெண்ட்ல ஒரு பொறுக்கி செய்த செயல் செய்யறவன் போல நம்பாம வர்றிங்க பயப்படமா வாங்க.. நான் கொஞ்சம் நல்லவன் தான்” என சிரிக்க கீர்த்தி கூட சிரித்தாள்.


        அபிநயா அங்கே கண்ணாடியில் கையை வைத்து தேய்க்க
   ”அபி சும்மா இரு.. தொடாதே… ” என்று கண்டிக்க அபிமன்யு திரும்பி ஒரு பார்வை பார்க்க
      ”சாரி அபிநயா நீங்க அபிமன்யு … எனக்கு அபிநயாவை அபினு சொல்லி கூப்பிட்டு இங்க இப்போ..” என்று அசடு வழிய, அபி கொஞ்சம் முறுவலித்தவன்யோசனையில் போனவன் திடீரென
      ”மனு என்று என்னை கூப்பிடு, அவளை எப்பவும் போல அபினு கூப்பிடு, எனக்கு எப்பவும் நீ அபி சொன்னா அபிநயாவை சொல்றேனு நினைச்சுப்பேன்” என்றான் மாறாத புன்னகையோடு.


      ”அது சரிப்பட்டு வராது சார்… நீங்க சார் நான் உங்களிடம் வேலை செய்யும்..”
     ”உனக்கு கீழே வேலை பார்த்தா அப்போ உன்னை மேடம் என்று தான் சொல்லனுமா பேர் சொல்லி கூப்பிட கூடாது என்று சொல்லிடுவியா?’ என்றான்.


      ”சே சே அப்படி இல்லை சார்.. நீங்களும் நானும் ஒன்னா? நீங்க எவ்ளோ பெரிய ஆளு”
      ”அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை கால் மீ மனு போதுமா இனி நீ அப்படி தான் கூப்பிடணும்” என்று கட்டளையிட அவன் கார் ஒரு கம்பௌண்ட் உள் நுழைய கீர்த்தனா அதனை கண்டு உள்ளம் உறைந்து போனாள்.
       ”இறங்கு கீர்த்தி” என்றதும்
       ”வேணாம் சார்.. இங்க.. அது… அபி..”
      ”இறங்கு என்று அவளின் கையை பிடித்து இழுக்க அபியும் இறங்கினாள்.


                அபியை தூக்கி கொண்டு அவன் முன்னே செல்ல பின்னால் மனதில் ஏதோ பிசைய அவன் கால் பதிவில் தானாக நடந்தாள்.


        அபியை போல எத்தனை குழந்தைகள் அதுவும் ஆண் பெண் வயதில் முதிர்ந்த்வர்கள் கூட மனம் பிசைந்தது. உள்ளுக்குள் அழுகை வெடிக்க செய்திட முகமோ வெளிறிப்போனது. வெளியே அழாமல் கண்கள் கலங்காமல் இருக்க பாடுபட்டாள்.
        நேராக ஒரு அறைக்கு அழைத்து செல்ல கீர்த்திகா பெயர் சொல்ல கொஞ்ச நேரம் அங்கே அபியை விளையாட ஒரு பெண் அழைத்து செல்ல அங்கே ஒரு கண்ணை வைத்தபடி கீர்த்திக்கு தான் பேச்சு தொடர செய்தது.


       இங்குள்ள குழந்தைக்கு தனியாக அவர்களுக்கு புரியும் வகையில் சொல்லி தரும் முறைகளை கீர்த்திக்கு சொல்லி கொடுக்க அவளோ இதுவரை அப்படி செய்யாமல் நார்மல் குழந்தையாக நடத்தியது புரிந்தது.
         எதையும் சொல்லும் விதம் என்றிருக்க அது கீர்த்திக்கு அன்று தான் புரிந்தது.


    தனக்கே இப்பொழுது இந்த நிமிடம் தான் புரிய, ராஜேஷ் பாவம் ஒரு பணக்காரன் வாழ்வில், திடீரென மகள் மூளை வளர்ச்சி குறைவு என்று, எந்த பக்கம் போனாலும், அவனை சொல்ல, அவன் தோல்வியே இன்னலோ காணாதவனுக்கு, இது பெரும் வலி. அவனது சுயநலமான முடிவும் சரியென்றே எண்ணினாள். ஆனால் ராஜேஷ் நிச்சயம் இப்படி புரியவைத்து அபியை பெரிய ஆளாக மாற்ற முடியும் என்று சொன்னாலும் நம்ப மாட்டான். ஏன் தனக்கே இது போல அவளிடம் பேசினால் புரிய வைக்க முடியுமா? மாற முடியுமா என்று கீர்த்தியும் யோசிக்க தான் செய்தாள்.


        அங்கே சொல்லியதில் பெரும்பாலும் கருவில் ஏற்பட்ட சத்துக்குறைவும்.. மரபணு மூலமாகவும், இனி மாற்ற இயலாது.. எப்படி அவளை சரி படுத்துவது என யோசிக்க, அபிக்கு அடிக்கடி கீழே விழும் நிலை சரியான தசை எலும்பு இல்லாமலே முதலில், அதற்கு பயிற்சி அளிக்க முடிவு செய்ய வேண்டும்.

எப்படி எல்லாம் அவளுக்கு புரியும் வகையில் பயிற்சி அளிப்பது என்ற காணொளி(வீடியோ) காண்பிக்க அதில் கீர்த்தி ஆர்வமாக பார்த்தாள். அடுத்து அபிக்கு இருக்கும் திறமை என்ன என்ற பேச்சு.

பெரும்பாலும் இது போன்ற குழந்தைகள் ஏதேனும் ஒருவிததில் தனி திறமை இருக்க செய்வார்கள்.. அது என்ன என்று கண்டறிந்து வெளிக்கொண்டு வருவது பெற்றோர் கடமை அல்லது அவளை புரிந்து கொண்ட வெல்வேசர் பொறுப்பு என்று புரிந்திட, கீர்த்தி அதற்குள் ஒரு தெளிவில் அபிமன்யு கண்டான்.
      ”என்ன கீர்த்தி ஏதோ உன்னை கடத்தி காட்டு பங்களாவுக்கு கூட்டிட்டு வந்தது போல பார்த்த இப்போ எப்படி இருக்கு மனநிலமை?” என்றான் அபிமன்யு.


     ”சார்.. அது..” நிறுத்துமாறு செய்கை சொன்னவன்
     ”அபிமன்யு.. அபி நம்ம பொண்ணை கூப்பிடு நான் மனு” என்று திருத்த அவன் நம்ம பொண்ணை என்ற வார்த்தை கவனிக்க மறந்தவள், ‘நான் மனு’ என்ற ஒன்றை மட்டும் யோசித்து
      ”மனு சார்..”  என்று ஆரம்பித்தாள்.
      ”நிறுத்து மனு ஓகே அது என்ன சார் மோர்னு” என கொஞ்சம் உரிமையோடு கோபித்து கொள்ள
      ”மனு போதும் விளையாடியது.. எனக்கு இங்க ரொம்ப யூஸ் ஃபுல்லா இருக்கு… அபியை பார்த்து அபியும் நல்லா விளையாடறா… இங்க படிக்க முடியாதா?” என்று கேள்வி கேட்டாள்.


      ”இங்கயே இருக்கற குழந்தைகள் தான் இங்க கற்று தருவாங்க கீர்த்தி இது ஹோம்”
      ”ஹோம் என்றதும் முகம் வெளிறிட ”மனு நான் வீட்டிலே அவளுக்கு சொல்லி தர்றேன்.. இங்க வேண்டாம்… ஆனா அடிக்கடி இங்க வரலாமா?” என்ற கேள்வியை கேட்டு முடிக்க,
       ”தாராளமா…” என்ற குரல் தனக்கு இடப்பக்கம் இருந்து வர திரும்பினாள்.

அங்கே கீர்த்திகா இருந்தாள். கூடவே அபிநயாவும்
    ”அம்மா மா.. காக்கா கதை தெரியுமா..?” என்று சொல்ல, இதுவரை அபிநயா கதை சொல்லி இல்லாதது புரிய கீர்த்தனா ”சொல்லுங்க பார்போம்” என அவள் உயரத்திற்கு மண்டியிட்டு அமர அபிநயா கதை சொல்ல, அபியோ அபிநயத்தோடு சொல்லி முடித்தாள்.


       இதை எதிர்பார்க்காமல் கீர்த்தி இருந்தமையால் மெய் மறந்து நின்றவளின் நிலை அபிமன்யு கை தட்டல் முறையாலே நிகழ்வுக்கு வந்தாள். மகள் அபியை அள்ளி அணைத்து முத்தமிட்டாள்.


    ”உங்க பொண்ணு செம ஷார்ப் டூ டைம்ஸ் சொன்னேன் ஆனா உடனே கப்புனு புடிச்சுக்கிட்டா.. நைஸ் கிட்” என கீர்த்திகா சொல்ல, கீர்த்தனா கண்கள் ஆனந்த கண்ணீர் திரையிட்டது.


    “இந்த சைட்ல நிறைய வீடியோ இருக்கு பொறுமையா பாருங்க அவளுக்கு எப்படி புரிய வைக்கின்ற முறை அணுகுமுறை என நிறைய சொல்லி இருப்போம். உங்களுக்கு இவள் இப்படி சொல்லி புரிந்தா இவளுக்கு எளிதில் கற்று  கொள்ள வாய்ப்பு இருக்கு” என கீர்த்திகா சொல்ல, அந்த சைட் பெயரை குறித்து கொண்டாள்.


     அடிக்கடி இங்க கூட்டிட்டு வாங்க அவளுக்கும் பொழுது போகும்” என்றதும்,
    ”நிச்சயமா மிஸ்” என நன்றி கூறி அபிநயாவை அழைத்து கொண்டு கீர்த்தனா முகம் மலர்ந்தே சென்றாள்.


        அபிமன்யு கிளம்ப கண்டு கீர்த்திகா அவனிடம் பேச எண்ணி அமைதியாக
    ”அபி நீங்களும் கிளம்பறிங்களா?” என்று கேட்க
     ”அது கீர்த்தி தெரியாம அதிர்ச்சி கொடுக்க தான், இடம் சொல்லாமல் நானே இங்க கூட்டிட்டு வந்தேன. அவங்க கார் எடுத்து வர வேண்டாம்னு சொன்னேன். இப்போ நானும் கிளம்பி கூட்டிட்டு போகணும்… என்ன கீர்த்திகா சொல்லுங்க” என்றான்.


      தன்னோடு பேச அழைத்தேன் நேரம் இருக்கா என கேட்க எண்ணிய கீர்த்திகா ”ஒன்னுமில்லை அபி அடிக்கடி போன் டச்ல இருங்க” என்று முறுவலிக்க அவனும் கிளம்பினான்.


     கீர்த்தனா கையை சுரண்டிய அபிநயா மென் குரலில் ”பசிக்குது” என்று சொல்ல கீர்த்தியோ அதே போல காதில் குனிந்து ”வீட்டுக்கு போனதும் சாப்பிடலாம்” என்று சொல்ல அபிநயா வேடிக்கை பார்க்க அபிமன்யு காரினை ஒரு ஹோட்டலில் நிறுத்தினான்.


     ”அபி.. இங்க எங்க?” என்று விழித்தாள்.
    ”பசிக்குது.. கீர்த்தி மார்னிங் சாப்பிடலை” என்று இறங்க அந்த பக்கம் வந்தவன் கதவை திறந்து அபிநயாவை தோளில் வாங்க
     ”இல்லை அபி.. மனு.. இங்க எல்லாம் நான் அபியை அழைத்து வருவதில்லை… எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க..” என தயங்கினாள்.


     ”இது தனி தனி இருக்கற டேபிள். சின்ன அறை போல தான் இருக்கும். பயப்படமா வா” என்றதும் கொஞ்சம் தயங்கி தான் இறங்கினாள்.
       அபியை வாங்க கையை நீட்ட மனுவோ நானே தூக்கிக்கறேன்” என சொல்லிட, கீர்த்தி கண்களை சுழலவிட்டு தான் வந்தாள்.


       இதுவரை ராஜேஷ் கூட வந்தது. இப்பொழுது மனுவோடு வருவது இதுவே முதல் முறை.. மனு மட்டும் காலையில் சாப்பிடலை என்று சொல்லாமல் இருந்தால் வரவில்லை என்று சொல்லி இருப்பாள் இப்பொழுது அதையும் சொல்ல முடியாது போனது.


      உணவுகள் ஆர்டர் கொடுத்து காத்திருக்க அங்கே சூப் ஆர்டர் கொடுத்து அபிக்கு மனுவே ஊட்டி விட்டான். கொஞ்சம் சிந்தினாலும் அவனுக்கு என்னவோ சந்தோஷம் அதிதமாக தோன்றியது. பின்னை கீர்த்தி அபிநயா என தன் குடும்பமாக எண்ணியவர்கள் இருக்க அபிமன்யுவிற்கு ஆனந்தம் இல்லாமலா?
        கீர்த்தி தான் முதலில் அபி நிலைக்கு நநானே ஊட்டி விடறேன் என்று வாங்க கேட்டவள் மனு தர மறுக்க கொஞ்ச நேரம் கேட்டு பார்த்து உணவினை மட்டும் அபிநயாவே உண்ண கற்று கொடுத்தான். ஏற்கனவே ஸ்பூனில் உண்ண தெரிந்தவள் என்றாலும் இப்பொழுது பார்க்க, ஏனோ கீர்த்திக்கு திகட்டவே இல்லை. மகள் மடியில் டிசு பேப்பர் இருக்க அதிக அளவு சாதம் சிதறாமல் உண்ணும் அழகு கொள்ளை என்றால் அதன் அருகே அப்பா ஸ்தானம் கொண்ட அபிமன்யு இருக்க இமைக்காமல் பார்த்து ரசித்தாள்.

என்ன அங்கே அபிமன்யுவிற்கு பதிலாக கீர்த்தி மனகண்ணில் நிழலாடிய உருவம் ராஜேஷ் தான். ராஜேஷ் ஊட்டிட மகள் அபி சிறிது உணவு விழுங்க கண்டவள் கொஞ்ச நேரத்தில் வெயிட்டர் வர சிந்தனை கலைந்தவள் அதன் பின்னே எதிரே இருந்த அபிமன்யுவை கண்டவள் மனதில் சே மனுவை தான் நான் ராஜேஷா கற்பனை பண்ணி கொண்டேனா? என தவிப்புடன் குனிந்திட, அவளை ஒரு கண்கள் கோவத்தோடு கண்டதையும் செல்வதையும் பார்க்க தவறினாள் கீர்த்தி.

                       வீட்டுக்கு வந்து விட்டவன் “இங்க பாரு கீர்த்தி வாழ்க்கை இதோட முடியலை… இன்னும் இருக்கு…. கொஞ்சம் எல்லாவற்றுக்கும் தயாராக இரு.. இனி அபிநயாவை இன்னும் நல்லா டிரைன் பண்ணு” என்று சென்றான்.

மணி மூன்று தொட காலை பதினொன்று இருந்து இந்நேரம் வரை தான் மனுவோடு இருக்க சந்தோஷம் அடைந்தாள் கீர்த்தி.

”தேங்க்ஸ் தேங்க்ஸ் எ லாட் மனு… இன்னிக்கு நான் கொஞ்சம் வேற உலகத்தை பார்த்தேன். இதுவரை நான் தனியா இருக்கறேன்னு இருந்தேன். ஆனா நான் தனியா இல்லை, இந்த உலகத்தில் என்னை போல நிறைய பேர் இருக்காங்கனு புரிய வச்சி இருக்கீங்க..

எனக்கு அபியை வளர்ப்பது ரொம்ப பெரிய பொறுப்புனு இருந்தேன். ஆனா என்னை போல பொறுப்பை சுமகின்றவர்கள் இருக்காங்க. அதுவும் மகிழ்ச்சியோடு என்று புரிந்தது. முதலில் இந்த அழுத்தம் குறைந்து இருக்கு மனு…

இந்த மாறுதல் எல்லாம் உன்னால தான். உனக்கு ஆயிரம் நன்றிகள் இன்று மட்டும் சொன்னால் போதாது.. வாழ்நாளில் முழுக்கவும் சொல்வேன்” என்று சாதாரணமாக மெஸேஜ் செய்து தட்டி விட, அதனை பார்த்து அபிமன்யு ”இது என் கடமை கீர்த்தி.. வாழ் நாள் முழுக்க தானே நன்றி சொல்லு” என்று அவனும் அனுப்பி இருந்தான்.                                                

1 thought on “அபியும் நானும்-13”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *