Skip to content
Home » அபியும் நானும்-14

அபியும் நானும்-14

 🍁  14      

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  


                          இங்கு அபிநயாவை கட்டிலில் உறங்க வைத்து அவள் அருகே மெசேஜ் செய்த கீர்த்தியின் முன் நிழல் ஆட நிமிர்ந்து பார்த்தாள்.


           ராஜேஷ் கண்கள் சிவக்க நின்று இருந்தான். அவனை கண்டு எழுந்து கொள்ள, அவன் மீது மதுவின் வாடை வீசியது.


      ”என்னாச்சு ராஜேஷ் இங்க வந்து இருக்க?” என்று கேட்டாள்.
     ”என்ன இங்க நான் வந்தது உனக்கு வசதியா இல்லையா? எவன் கூட ஊரை சுத்தற?” என்றான்.
      ”ராஜேஷ் நம்ம அபிக்கு எப்படி அவளுக்கு ஏற்றார் போல் நடக்கணும்னு?”
     ”யாரவன் கேட்டேன்?”
     ”ஓஹ் ஹோட்டலில் பார்த்தியா? அவர் நம்ம அபி படிக்கிற ஸ்கூல் நிர்வாகம் செய்யறவர்.. அபியை கூட்டிட்டு ஒரு ஹோம் போனோம் அங்க இருந்து திரும்பும் பொழுது அபி பசிக்குது சொன்னா அதான்”
     ”என்னது ஸ்கூல் நிர்வாகம் செய்யறவன் உன்கூட எதுக்கு சுத்தணும்?”
     ”அபிமன்யு தான் அந்த ஹோம் தெரிந்து கூட்டிட்டு போனார்”
     ”என்ன அபிமன்யு வா? வெல் உனக்கு அவனை முன்னவே தெரியுமா? நமக்கு ஆண் குழந்தை பிறந்தா அபிஷேக் பெண் குழந்தை என்றால் அபிநயானு அடம்பிடிச்ச அப்போ இவன் பெயர் கூட வருது என்பதாலா தானே? அப்போ காலேஜில இருந்தே பழக்கமா.? என்ன முன்னால் காதலனா?” என்று ஏளனமாக பேசினான்.


      ”வாயை மூடு ராஜேஷ் அசிங்கமா பேசாதே.. அவர் எனக்கு தெரிந்ததே இந்த பள்ளி ஆண்டு விழா அப்போ தான். நான் காதலிச்சது உன்னை மட்டும் தான்”
     ”ஓஹ் அப்போ நான் டிவோர்ஸே கொடுக்கறேன் என்றதும் தேடி பிடிச்சுயிருக்க?” இருந்தாலும் பேர் இடிக்குதே?” என்றான்.


      ”உன்னை மாதிரி வாழும் வாழ்க்கை எனக்கு வேண்டாம் ராஜேஷ் நான் தனியா இருக்கறேன் இப்படி வாழறதே எனக்கு நிம்மதி, இங்க வர்றாதே, நீ நினைக்கும் இஷ்டத்துக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது. எனக்கு அபி லைஃப் அடுத்த கட்டம் எப்படி கொண்டு போகனு சொல்ல ஆரம்பித்தவர்”


       ”என்ன ரொம்ப தான் மரியாதை?” என்று வெடுக்கென்று போனை பிடுங்கி பார்க்க அங்கே வந்திருந்த மெசேஜ் எல்லாம் வாசித்து பார்த்தவன்,
      ”வாழ்நாள் முழுக்க நன்றி சொல்லணும் என்றால்…. எப்படி கீர்த்தி மனைவியாவா? இல்லை.. படுக்கையில்லா?” என்று விஷ வார்தையால் கேட்டான்.
     ”ராஜேஷ்………” என்று கத்தியவள் ”எதுக்கு ராஜேஷ் இப்படி பேசி மனசை காயப்படுத்தற, என்னோட மனசு உனக்கு புரிந்து இப்படி பேசறது ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சிறு விசும்பல் கொள்ள கண்ணீரை அழுத்த துடைத்து ”உனக்கு ஓகே சொல்லவே யோசித்தவ.. இப்ப இந்த நிலைமையில் எவனோ ஒருவனுக்கு ஓகே சொல்வேனா? அதுவும் அபியை விடுத்து ஒரு வாழ்க்கை அமைப்பேனா? உனக்கு எது சொன்னாலும் புரியாது போ” என்று சொல்லி ஹாலுக்கு வர ராஜேஷ் அவளை தான் முன்பு இருந்த அறைக்கு இழுத்து சென்று கதவை சாற்றினான்.


      அவன் இழுத்து வந்த நோக்கம் புரிய ”கேத்ரினுக்கு துரோகம் செய்யற…?” என்றாள் கீர்த்தி.
      ”உனக்கு நான் தானே கணவன்… மாங்கல்யம் இல்லை என்றாலும் அது உனக்கு தெரியும் தானே” என விளக்கை அணைத்தான். கீர்த்தி எதற்கும் மறுக்கவில்லை.. அவளுக்கு இப்பொழுது மறுத்தால் ராஜேஷ் இன்னும் பேசக்கூடும் என்று அமைதியாக இருந்தாள்.


          அதிகாலை எழுந்து அபி கிர்த்தியை தேடி வர, கதவு உட்பக்கம் சாற்றி இருக்க, தட்டி விட கீர்த்தி எழுந்து வேகமாக திறந்தாள். ராஜேஷ் தனியாக வெளியே வந்து அமர்ந்தான். அவனுக்கும் அபிக்கும் சேர்த்தே பாலை சூடுப்படுத்தி அவனுக்கு காபி கொடுத்து அபிக்கு பால் கொடுத்தாள்.


      ”பேருக்கு தான் விவாகரத்து கீர்த்தி என்னால நீ இல்லாமல் வாழ முடியாது. அதே சமயம் எனக்கு அபியை ஏற்றுக்க மனசிலை.. கேத்ரின் இப்போ கர்ப்பமா வேற இருக்கா.. அவளை இனி விடவும் முடியாது. நான் நிறைய முட்டாள் தனமா முடிவு எடுத்து குழம்பி இருக்கேன். இப்பவும் என்னால தெளிவா உன்னை போல முடிவு எடுக்க முடிலை… அது தான் உண்மை” என்றான்..


      ”காபி கப் வாங்கியபடி ”உன் லைஃப் இனி கேத்ரின், அவள் குழந்தை மட்டும் தான் ராஜேஷ். இனி நீ இங்க வாராதே… நான் அபிநயாவை தவிர எங்களுக்குள் யாரும் வரமாட்டாங்க” என்றாள். அவனுக்கு புரியும் வகையில்.
 அவனுக்கு அந்த பதிலே போதும் போல கிளம்பிவிட்டான்.


        இன்று இதுவே அதிகம் போல என்று மனதின் வருத்தம் ஏற்று சோபாவில் அமர, இதோடு முடியவில்லை என்று வீதி எள்ளி நகையாடியது.


        பள்ளியில் அபிமன்யு விரைவாக வந்தவன் கீர்த்திக்காக காத்திருந்தான். வருகைபதிவேட்டில் அவள் கையெழுத்து போட வருகை தருவாள், இன்றும் அதே போல அவளின் வருகைக்கு காத்திருக்க அவனை பார்க்காமல் வந்தவள் விழியை அந்த நோட்டில் மட்டுமே செலுத்தி கையெழுத்து போட்டு விட்டு போக அபிமன்யுவுக்கு அவள் தன்னை காணாமல் புறக்கணிக்கின்றாள் என்று நன்றாகவே தெரிந்தது.


        இருந்தும் ஏதேனும் காரணம் இருக்கும் என்று விட்டுவிடு ரௌண்ட்ஸ் போனான். 2 ஆம் வருப்பில் எல்லா கிளாஸ் பார்க்க அங்கே இவனின் வருகையில் எல்லோரும் வணக்கம் வைத்து மாணவர்கள் எழுந்து கொள்ள இங்கு கீர்த்தியோ எழுந்து கொண்டாலே தவிர அவன் கண்களை கூட காணவில்லை.. அவனுக்கு ஒரு பார்வை சின்ன சிரிப்பு என்றியிருந்தாலும் போதும் நிம்மதியாக போயிருப்பான்.

இன்று அப்படி இல்லை என்றதும், மேலும் குழப்பதோடு கடந்தான். மதியம் உணவு உண்ண அபிக்கு ஊட்டும் விததிலும் அபிமன்யு வந்து நிற்க, அபிநயா தான் சார் என்று எழுந்திட அவளோ முதுகுக்கு பின்னால் திரும்பாமல் இருந்தாள்.


    ”என்னாச்சு கீர்த்தி பார்த்தா பேச மாட்டேன்கிறீங்க” என்று இவனாக ஆரம்பிக்க
    ”இல்லை சார் கொஞ்சம் ஒர்க்” என்று அபிநயா நீயே சாப்பிடு நான் பேப்பர் கட் பக்கதில அம்மா போன் அங்கயே வச்சிட்டு வந்துட்டேன். போயி பார்த்துட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று நழுவ அபிமன்யு அவளுக்கு அழைப்பை தொடுக்க, அவளின் கையில் இருந்த சின்ன பார்சில் அவள் போன் மணி எழுப்பியது.


     ”என்ன அவாய்ட் பன்ற? எதுக்கு?’ என்றான் நேரிடையாக,


     ”சார் எனக்கு ரெஸ்ட் ரூம் போகணும் அதை சொல்லிட்டு போக முடியாது அதான் போதுமா.. பிளீஸ்.. உங்களை நான் ஏன் அவாய்ட் பண்ணனும்.. நீங்க அபிக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணி இருக்கீங்க மறக்க முடியாது காலத்துக்கும் அபியின் ஸ்கூல் நிர்வாகியான உங்களை மறக்க மாட்டேன்” என்று நழுவினாள்.


      அவனோ ஏதோ நடந்து இருக்கு. இல்லை என்றாள் இப்படி திடீரென மாற்றமாகி இருக்க மாட்டா என்று மாலையில் ஏதோ கவர் ஒர்க் கொடுத்து அவளை வேலை வாங்கினான். அபி அங்கே இருந்த கிண்டர் கார்டனில் விளையாட பேப்பர்ஸ் எல்லாம் சரி பார்த்து வைக்க வர, அங்கே அபிமன்யு மட்டும் இருந்தான்.

அவன் கண்களை கண்டதும் காலையில் இருந்து தவிர்த்தவள் மீண்டும் புறக்கணிக்க திரும்ப,
     ”நில்லு.. எதுக்கு இப்படி முகம் திருப்பிட்டு போற..?’ என்றான்.


     ‘அப்படி எல்லாம் இல்லை சார்.. அபிநயா காத்திருக்கா போகணும்” என்று போக முயன்றவளை கை பிடித்து நிற்க வைத்து
     ”ஆன்சர் மீ.. கீர்த்தி” என்று சொன்னதும் தான் கீர்த்தி அபிமன்யுவின் போக்கு வித்தியாசத்தை கண்டாள்.
       ”லூக் மனு விடுங்க இது ஸ்கூல்.. எதுக்கு இப்படி கையை எல்லாம் பிடிக்கறிங்க..” என்றாள் அவனை பார்த்து.


      ”இப்ப எப்படி முகம் பார்த்து பேசற.. ஆனா காலையில் இருந்து நீ அப்படி இல்லை.. என்னாச்சு உனக்கு?”
     ”உங்களையே பார்க்கணும் என்ற அவசியம் இல்லையே…” என கீர்த்தி யாரேனும் பார்த்திடுவார்களா என்ற எரிச்சலில் நின்றாள்.


      ”எனக்கு அவசியம் இருக்கே.. பிகாஸ் ஐ லவ் யூ கீர்த்தி…” என்றதும் தான் தான் உலறிய விதம் உணர்ந்து விழிக்க, அதே நேரம் அவன் கண்களை நேராக பார்த்து
     ”ஆக உங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் என் மேல காதலா.. தயாளன் ஒரு விதம் என்றால், நீங்க மறுவிதம் போல” என்று சொல்ல அபிமன்யுவின் கைகள் மேலே அவளை அடிக்க சென்றது.

கீர்த்தி இடையை பற்றி அபிநயா பயந்து நடுங்கி விழிக்கும் முகம் காணவும் கைகளை இறக்கினான்.
     ”குழந்தை இருக்கானு பார்க்கறேன்… இல்லை” என இந்நேரம் வரை காத்திருந்தவன் வெளியேறினான்.


           தனது காதலை அவளிடம் ஒழுங்காக சொல்ல முடியாது தவித்தவன், ஒரு கட்டத்தில் சொல்லிவிட்டு, அதனை அவள் இப்படி ஒரு கோணம் பார்ப்பாள் என நொந்துவிட்டான்.


         நேராக வீட்டின் தனது அறைக்கு சென்று ஆண்டு போலவே விழந்தான். மனம் ஒரு நிலை இல்லாமல் மோதியது.
       அங்கிருந்த ஸ்மைலி பந்தை கைகளில் அழுத்தம் கொடுத்தான். அது அவனின் கோவத்துக்கு எடுத்துக்கொள்ளும் பயிற்சி.


     பல முறை அழுத்தம் கொடுக்க மனம் சமன் கொண்டதாக இல்லை… எப்படி பேசிட்டா என்னையும் ஒரு உமன் நேசர் தயாளனோட கம்பேர் பண்ணி பேசிட்டா.. என் காதலை எவ்ளோ புனிதமா பாதுகாத்தேன். எங்கே சொன்னா என்னை.. அது இப்படி..’ என்றே தடுமாறியவனின் மனசாட்சி வெளியே வந்து நின்றது
   ‘யெஸ் அப்பவே யோசிச்சு இருக்கணும் புரிந்துடுச்சா.. அவ ஒன்னும் கல்யாணம் ஆகாத பெண் இல்லை நீ காதல் சொன்னதும் அதனை கண்ணியமா எண்ணி மகிழ.. அவள் கல்யாணமானவள்.. ஒரு பத்து வயது சிறுமிக்கு தாய்.. அப்படி இருக்க கணவனும் விவாகரத்து கொடுத்தது இப்போ தான்.

அப்படி இருக்க அவளிடம் காதல் வசனம் பேசினா, இப்படி எண்ணாமல் என்ன செய்வா?’ என்று நக்கலாக எடுத்துரைத்தது.
    ”ஆனா நேற்று அவளுக்கு என் மேல ஒரு நட்பு வந்துச்சு… அதே நட்போட அவள் என்னிடம் பேசினா நான் ஏன் திடீரென இப்படி மனதை உடைத்து இருக்க மாட்டேன்.. அவள் என்னை ஒதுக்கவும் நானா காதலிப்பதை உலரிட்டேன்’
     ‘அவளுக்கு தான் கஷ்டம், கடல் அளவு இருக்கு. அம்மா, அப்பா, கணவன், வேலை, குழந்தை சுற்றி இருக்கற மக்கள் முதல் கொண்டு, இந்த சமூகம் என்ற உலகமே சுழல விடுதே, இதுல அவள் எப்போ சந்தோஷமா இருப்பா? அது போல ஏதேனும் நடந்து இருக்கோம்… அது தெரியாம நீ காதலிப்பதா சொல்லி வேற அவளை மேலும் கஷ்டபடுத்தி இருக்க’ என மனசாட்சி புளி போட்டு விளக்கியது.


      ”ஆம் கஷ்டப்படுத்தி இருக்கேன். நேற்று அவ்ளோ பாசமா அபிக்கு வாழ்வு சிறக்க முயற்சி எடுதது, நான் இன்னிக்கு காதல் என்று நிற்கும் பொழுது, நேற்று நடந்த நிகழ்வு எல்லாம் ஒரு வேடமா எண்ணி இருப்பா..” என முகம் வாடி போனான் அபிமன்யு.


              இன்றே அவள் இல்லம் சென்று அப்படி இல்லை என சொல்லவும் முடியவில்லை… போனில் சொல்லலாம் என்று போனை எடுத்து அவள் எண்ணிற்க்கு அழைக்க அவள் எண்ணோ ஸ்விட்ச்ஆப் என்று வந்து நின்றது.


         பல முறை போன் செய்தும் பதிலே அதுவே. ஆக இரவு வரை பல அழைப்புகள் அழைத்து ஒய்ந்து போனான்.


      இங்கு கீர்த்தியோ நேற்று உதவி செய்தது எல்லாம் சுயநலம் கொண்டு செய்யவில்லை என அவனின் மனம் ஒன்றிய பணியில் அவளாகவே உணர்ந்தாள்.


       அவனின் முதல் முறை பேச்சும் பார்வையுமிருந்த உற்சாகம், தன்னோடு பேசும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் எண்ணி யோசிக்க, தான் அபியின் ஆண்டு விழாவில், அபிக்கு சித்தியா? அத்தையா? என்று கேட்க, தான் அதற்கு மிஸ்ஸஸ் கீர்த்தனா ராஜேஷ் என்ற பதிலில் இருந்து தான் அவன் பேச்சு உற்சாகம் கொஞ்சம் குறைந்து போனதை யோசித்தாள்.


          அடுத்த நாள் தான் பள்ளிக்கு வேலை விஷ்யமாக போன அன்றும், கழுத்திலே பார்வை பதித்து இருந்தவன் உடனே வெளியேறியதை இன்று தான் நிதானமாக யோசித்தாள்.


          ஆக அபிமன்யு தன்னை காதலித்து இருக்கின்றான். தன்னை பற்றி அறியாத பொழுது அறிந்த கணம் விலகி ஒதுங்கி இருக்கின்றான். மறுபடியும் ராஜேஷம் நானும் பிரிவதாக கோர்ட்டில் கண்டு திரும்ப காதல் செய்ய ஆரம்பிக்கின்றான்.

இது நல்லது அல்ல.. மற்றவர்கள் போல கயவர்கள் என்றால் தானாக விலகி விட்டாளே எதிர்த்து பேசியோ புரிய வைப்பேன்.  மனுவோ காதல் என வந்து நிற்கின்றானே? அவன் திருமணம் ஆகாதவன் அவனுக்கு என்று குடும்பம் இருக்க இப்படி அவன் யோசிப்பதே முட்டாள்தனமானது.

இதில் தான் எப்படி அவனுக்கு புரியவைத்து விலகி செல்வது? என்ன ஆனாலும் அவன் மீது எனக்கு ஒரு நட்பு இருக்கு.. அதை இழக்க மனம் இல்லையே என்று யோசிக்க, அபிநயா ஃபிரித்ஜ் திறந்து, அங்கிருந்த ஐஸ் கட்டி எல்லாம் எடுத்து, கடித்து, சுவைத்து இருந்தாள்.

‘அபிமன்யுவுக்கு என் மேல காதல் வர கூடாது.. நான் அதுக்கு எல்லாம் தகுதியானவள் அல்ல.. ஒரு பத்து வயது சிறுமிக்கு தாய் மட்டுமே.’ என்று திரும்ப அங்கே அபிநயாவுக்கு உடல் வெட்டி வெட்டி இழுக்க, ‘அபி’ என்று கத்தலோடு அபிநயா அருகே விரைந்தாள்.

2 thoughts on “அபியும் நானும்-14”

  1. Kalidevi

    Yen Keerthi appadi ninaikira nee rajesh ah love avanum nalla tha vazhnthan aana abi ippadi irukanum vitu poi iruka kudathu avan selfish ah yosichi tan athUkaga nee ippadiye irupiya unaku life venama

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *