Skip to content
Home » அபியும் நானும்-15

அபியும் நானும்-15

🍁 15

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  


           காலை மணி பதினொன்று ஆக, போனும் எடுக்காமல், பள்ளிக்கும் வராமல், கீர்த்தி இருக்க, அபிமன்யு காரினை எடுத்து, அவளின் பிளாட் இருக்கும் இடம் நோக்கி சென்றான். அங்கே பூட்டி இருந்த கதவை கண்டு கொதித்துப் போனான்.
          காதல் சொன்னதுக்கு இப்படி பூட்டிட்டு எங்கேனும் சொல்லாமல் போவாளா? என்றெண்ணி, அங்கே எதிர் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி இவனை யார் என்று விசாரிக்க, தன்னை பற்றி சுருக்கமாக நண்பன் என்றான்.

கீர்த்தனா மருத்துவமனை சென்றதை அப்பெண் கூற, எந்த ஹாஸ்பிடல் என்று கேட்டு அங்கு விரைந்தான்.
      ரிசப்ஷனில் பெயர் கேட்டு அறை எண்ணிற்கு சென்று பார்க்க, அங்கே கீர்த்தனா வாடிய மலர் போல அமர்ந்து இருந்தாள். அபிமன்யு அருகே சென்று, அவள் பக்கம் அமர்ந்து “கீர்த்தி” என்றதும் திரும்பியவள் உடனே அவன் சட்டை மார்பில் சாய்ந்து அழ துவங்கினாள்.


    ”பயமா இருக்கு மனு… அவளுக்கு இப்படி இதுவரை ஆனதில்லை பிக்ஸ் வந்து, அவள் உடல் வெட்டி வெட்டி இழுக்க ரொம்ப பயமா இருக்கு” என்று கதற அவளின் தலையை வருடி விட்டு,
     ”அபிநயாவுக்கு ஒன்னும் ஆகாது கீர்த்தி, அவளுக்கு எல்லாம் சரி ஆகிடும் பாரு.. நீ அழுவறதை கண்டு உன்னை கிண்டல் செய்வா கண்ணை தொடமா..” என்றான் மெல்ல ஆறுதலாய்.

அக்கணம் அவளிடம் காதலை கூட அவன் எதிர் பார்க்கவில்லை.. ஒரு பெண்ணின் மனம் எதிர்பார்க்கும் ஆறுதலை தந்தான். அவளுமே அம்மாவிடம் சென்றடையும் கோழி குஞ்சை போல அடங்கி இருந்தாள்.


     மல்லிகா மிஸ் கீர்த்தனாவுக்கு போன் செய்ய, அதில் விலகி எழுந்து, போனில் பேசி நிலைமையை தெரிவித்தாள். கூட அபிமன்யு இருப்பதை கூறவில்லை.
 அவள் போனில் பேச, தனது சட்டையின் மேலே ஈரமாக இருந்த கண்ணீர் துளிகளை தடவி பார்த்தான். தன்னில் கீர்த்தனா சாய்ந்த நிகழ்வு எண்ணி பார்த்தான்.


         எந்த பெண்ணும் அன்பாய் இது போல நிகழ்வு இருக்க ஒரு அன்பின் இடம் நோக்கி அடைக்கலம் ஆவது தவறில்லை அது காதல் என்று முடிவெடுக்க அவனும் இளம் பருவம் கொண்டவன் அல்ல..


     ”சாரி.. நான் மேல சாய்ந்தது வேற காரணம் இல்லை ஏதோ..” என்றவளின் பேச்சினை இடைவெட்டி ”இது எல்லாம் காதல் என்று சொல்லி உன்னை கேள்வி கேட்க மாட்டேன் கீர்த்தனா அபிக்கு என்னச்சு?” என்றான் நேற்று எதுவும் நடக்காதது போல.


     ”ஃபிரிட்ஜ்ல இருந்த ஐஸ்கட்டி ட்ரேல பாதி எடுத்து சாப்பிட்டு இருக்கா.. நான் அதை பார்க்காமல் விட்டுட்டேன்” என்றாள் கண்ணீரோடு.


     அதே நேரம் டாக்டர் வெளியே வந்து ”ஒன்னுமில்லை மா 2 ஹவர்ஸ்ல எழுந்திடுவா நார்மல் ஃபீவர் டானிக் எழுதி தர்றேன் கொடுங்க… இனி ஒன்னும் பயப்பட வேண்டியதில்லை” என்றார் டாக்டர்.

கீர்த்தனா நிம்மதியாக நன்றியை  தெரிவித்தாள்.
        அவர் சென்றதும் அபிநயா கண் விழிக்க காத்திருக்க, அபிமன்யு தான் அபிநயாவின் தலையில் வருடி விட்டே அவளை பார்த்து பேசாமல் இருந்தான்.


        கீர்த்திக்கோ மனு இங்கே இருந்து போனால் நிம்மதி என பார்த்திருந்தாள். அவளுக்கு மனு மீது இன்னும் அதே நல்ல அபிப்ராயம் இருக்கு ஆனா ராஜேஷ் பேசிய பேச்சு மனதில் வதைக்க, மனு தெரிவித்த காதல் என்று ஒரு பெண்ணாக அவள் மனம் இரண்டும் ஏற்க மறுத்து கலங்கியது.


         அடிக்கடி கீர்த்தனா தன்னை பார்ப்பதை அறிந்து ”இங்க பாரு நான் கிளம்ப போறதில்லை.. எனக்கு அபிநயாவை வீட்டுக்கு கொண்டு வந்து விடற வரை, எனக்கும் இனி நிம்மதி இருக்காது. நீ தனியா இங்க என்ன செய்வனு தான் ஓடும்.. அதனால நீயும் அவளும் கிளம்பியதும் நான் போவேன் போதுமா” என முடித்தான்.


       கீர்த்தனாவை கலங்க வைக்காமல் அபிநயா விழி திறக்க பில் செட்டில் செய்து கிளம்பினார்கள்.
      இம்முறையும் அபிமன்யு அபிநயாவை தோளில் தூக்கி கொண்டு தான் வந்தான். கீர்த்தனா கேட்க கொடுக்கவில்லை.


       ”உன்னோட கார்?” என்றே சுற்றி சுற்றி பார்த்து கேட்க அவளோ
      ”அது வரும் பொழுது கார் ஸ்டார்ட் ஆகலை அதனால ஆட்டோ ஸ்டண்ட்ல இருந்து வந்தேன்” என்றாள்.


      ”அப்போ என் காரில் வா” என்று அவன் பாட்டுக்கு அவனின் கார் இருக்கும் திசையில் சென்று கொண்டு இருக்க அவளோ “மனு நான் தனியா போறேன் பிளீஸ்” என்றாள்.


        அவனின் முறைப்பில் அமைதியாக பின் தொடர்ந்தாள்.
        காரில் அவன் பக்கதில் அபியை வைத்து விட்டு பின் கதவை திறந்தான் அங்கே கீர்த்தனா ஏறிட அவன் காரிணை எடுத்தான்.


     அரை மணி நேரம் அவள் இடம் வந்து நின்றது கார். கதவை திறந்தவள் அபியை தூக்க செல்ல அவனோ அதற்கும் முன் அவளை தூக்கி இருந்தான்.


     ”என்ன பார்கற எப்படியும் கதவு திறக்க கஷ்டப்படுவ கொண்டு வந்து விட்டுட்டு போயிடறேன்” என்றான் அபிமன்யு.


          கீர்த்தி தங்கள் வீட்டின் கதவை திறக்க போக அதுவோ ஏற்கனவே திறந்து தான் இருந்தது. கீர்த்தி அப்படியே அசையாமல் நின்றாள். அதனை கவனிக்காமல் அபிமன்யு உள்ளே செல்ல அங்கே ராஜேஷ் அதீத கனல் கண்களால் கீர்த்தியை தான் பார்த்திருந்தான். அபிமன்யு பார்த்ததும், அவனை பார்க்க தவிர்த்து திரும்ப அபிமன்யு இப்போ என்ன செய்ய என்று புரியாது அறைக்குள் அபியை வைத்து போர்வை போற்றி விட்டு திரும்பினான்.


ராஜேஷிடம் பேச முயன்றான்.. அவனோ இவனை பார்க்காமல் ”கீர்த்தி நம்ம அறைக்கு வா.. உன்னிடம் பேசணும்” என எதிர் அறையில் சென்றான்.
     ”நீங்க கிளம்புங்க அபிமன்யு” என்றாள் கீர்த்தனா.

அபிமன்யுவுக்கு தான் என்ன செய்ய என புறப்பட்டான்.
               ராஜேஷ் அங்கு இருப்பான் என்று அபிமன்யு நினைத்து கூட பார்க்கவில்லை… அதுவும் உரிமையாய் அதே வீட்டில் அடக்கபட்ட கோவத்தோடு அமர்ந்து இருந்தான்.

அபிமன்யு அறியாதது அல்ல… கீர்த்தியை என்ன சொல்லி கொல்கின்றானோ? விவாகரத்து ஆனது தான் ஆனால் கீர்த்தி ராஜேஷ் இன்னும் எப்படி? அவர்களுக்குள் புரிதல் இருக்கா? ராஜேஷ்க்கு தான் இங்கு வந்தது உதவிக்காக என்பது புரியுமா? இல்லை எப்படியோ…. ஒரு தனித்து இருக்கும் பெண் வீட்டில் யோசிக்காமல் போனது தவறோ என்று அபிமன்யு இப்பொழுது தான் விளங்கியது.

சே அவளே இறங்கி போயிருக்கலாம் நான் தான் தடுத்தேன் இப்போ அங்க என்ன கஷ்டம் அனுபவிக்கின்றாளோ? யாராக இருந்தாலும் தனது மனைவி இருக்க அங்கே வேறொருவன் வந்தால் தவறாக தானே எண்ணுவான் என தவித்தான்.


          அவன் தவித்ததை துளியும் பொய் ஆக்காமல் ராஜேஷ் சீற்றதுடன் பேசி கொண்டு இருந்தான்.
      ”அன்னிக்கு எதிர்பாராமல் வந்தான். சரி அபிக்கும் பசிச்சுது சொன்ன.. இப்போ என்னடி வீட்டுக்கு வந்து நிற்கறான்… உன் டப்பா கார் என்னாச்சு? மேடம் எங்க போனாலும் அதுல போவீங்க என் காரில் கூட வராம.. இப்போ எவனோ ஒருத்தன் காரில் வந்து இறங்குற… அதுவும் நம்ம குழந்தை தூக்கிட்டு அவன் வர்றான்” என்றதும் அந்த ‘நம்ம குழந்தை’ என்ற வாக்கியத்தில் மலர்ந்தாள். அபிமன்யு பேசும் பொழுது கவனிக்காத அதே வார்த்தை ராஜேஷ் பேச்சில் கவனித்தது கீர்த்திக்கு வானளாவு சந்தோஷம் அடைந்தாள்.


           கண்ணீர் துளிர்க்க துடைத்தாள்.
     ”என்ன கேள்வி கேட்டா கண்ணீர் விடற?” என்றதும்
     ”இல்லை ராஜேஷ் நீ நம்ம குழந்தை சொன்னியா மனசில் ஆனந்த கண்ணீர் அதான்” என்றவள்
        ”எனக்கு இப்பவும் உன் நிலை புரியுது ராஜேஷ் யார இருந்தாலும் விவாகரத்து பெற்ற ஒரு பொண்ணு வீட்ல ஒருத்தன் உரிமையா வந்து, அதுவும் அவளோட குழந்தையை தூக்கிட்டு வந்து, அறைக்கே போனா சந்தேகம் வருவது இயல்பு.

நீ சந்தேகம் படறது தவறில்லை ஆனா உன்னை தவிர வேற யாரையும் நான் ஏற்றுக்க மாட்டேன் சொன்ன நான், மாறுவேனா? நீ கொஞ்சம் யோசிச்சு பேசி இருக்கலாம்.. இங்க வர உனக்கு தகவல் கொடுத்த அந்த தூதகர் நான் எதுக்கு போனேன் என்று சொல்லி தெரியப்படுத்தி இருப்பாங்களே.? ஏன் வாட்ச்மேன் அண்ணா சொல்லலையா? நம்ம பொண்ணு அபிக்கு பிக்ஸ் என்று? இல்லை காலையில் என் டப்பா கார் ஸ்டார்ட் ஆகாம ஆட்டோவில் கிளம்ப செய்தது சொல்லலையா? நான் மருத்துவமனையில் அபிநயாவோட இருக்கேன்னு தெரிந்து, அங்க வந்து நேர்ல ஆறுதலா இல்லாமல், போன் செய்து விசாரித்து இங்க வந்து நிற்கற..?” என அவனுக்கு எப்படி தெரிந்து, எப்படி நடந்து கொண்டோம் என்று தெளிவாய் சொன்ன கீர்த்தியை இமைக்காமல் பார்த்தவன்
       ”எல்லாம் சரி அவன் எதுக்கு வந்தான்…?” என்றான் இயலாமையோடு.


       ”ஸ்கூல் கு நான் லீவ். அதனால இங்க வந்து பார்த்து கேட்டு மருத்துவமனைக்கு வந்ததா சொன்னார். கார்ல நான் வரலை என்றதும் ட்ராப் பண்ணிட்டு போறார்… என்ன அவர் அபிநயாவை தோளில் தூக்கிட்டு வந்தது தான் உனக்கு தப்பா போச்சு.. மருத்துவமனையில் நான் சோர்ந்து இருந்ததை பார்த்து தான் அவளை” என்று சொல்ல ராஜேஷ் நிறுத்து என்று செய்கையில்கூறினான்.


     ”நான் நல்லவன் கெட்டவன் சொல்ல வரலை… ஏன் நான் ஒரு சாதாரண சுயநலமான மனுஷன் தான். ஒரு பேப்பர் அது உனக்கும் எனக்கும் சம்மதம் இல்லை என்று சொல்லிடுச்சு கீர்த்தி. அதனால உன்னை இன்னொருத்தனோடு பார்த்தா எனக்கு என்ன என்று, விட்டுட்டு போக முடியலை… என்ன இருந்தாலும் நீ என் மனைவி தான்னு இந்த ஆண் மனசு சொல்லுது… உன்னை வேறொருத்தன் கூட பார்க்க முடியலை.. நீ கேட்கலாம் எனக்கும் அப்படி இல்லையாடானு, எனக்கு அதற்கு பதில் சொல்ல தெரிலை… நீ அபிநயாவை ஹோம்ல விட்டுட்டு இருந்தா, என் பார்வை எங்கயும் போயிருக்காது என்பது தான் என் நிலமை… எது பேசி என்ன பிரோஜனம்? இனி என்ன செய்ய… நீ விவாகரத்து ஆனதும் உன் மேல நிறைய பேருக்கு….” என்று வார்த்தை கூற தடுமாறினான்.


      ”நீ இங்க இருக்கும்‌ பொழுதே அதெல்லாம் நடந்து தான் இருந்தது.. அதை எல்லாம் என்னால சமாளிக்க முடிந்தது தான்”
       ”கேள்விப்பட்டேன்…வேலக்காரி சொன்னா.. உனக்கு தெரியாம இல்லை எதுக்கோ பார்த்து இரு… இங்க தனியா இருக்க பிடிக்கவில்லை என்றால் நம்ம வீட்டுக்கு போ அங்க ஏற்கனவே வேலை செய்தவங்களை பணியில் அமர்த்தறேன்” என்றான்.


     ”வேணாம் ராஜேஷ் அந்த வீடு கேத்ரினுக்கு ரொம்ப புடிக்கும் அவளோட நீ தங்கு” என்று சொல்ல ராஜேஷ் போன் அலறியது.
      ராஜேஷ் பார்த்தவன் அட்டேன் பண்ணாமல் கட் செய்ய ”போனை எடுத்து பேசு ராஜேஷ் கேத்ரின் தானே? நீ இன்னொருதியை தேடிவிடுவியோ பயந்து இருப்பா? பேசிட்டா கொஞ்சம் நிம்மதியா இருப்பா” என்றதும் போனை எடுத்து பேசினான்.


     ”எங்க இருக்க ராஜேஷ்?”
     ”என்ன வேணும் உனக்கு?” என்றான் ராஜேஷ்
     ”ஆஃபிஸ் போன் செய்தேன் நீ வரலை சொன்னாங்க.. எங்க போன எவளோட ஆட்டம் போட்டுட்டு இருக்க?”
      ”ஷர்ட் அப்.. எங்கயும் போகலை… அரை மணி நேரம் வந்திடுவேன் வை டி” என்றே அணைத்தவன்.
      ”நான் தெரிந்தே விழுந்த படுகுழி இவ… சே” என சோபாவில் அமர்ந்து.
    ”பசிக்குது கீர்த்தி” என்றான். ஆண்களுக்கு அவர்கள் தவறு எப்பொழுதும் உணர்வதில்லை போல..


                அங்கிருந்த தோசையை வார்த்து சட்னி கொடுக்க உண்டான். அங்கே இருக்க பார்க்க
      ”கிளம்பு ராஜேஷ் இங்க இருப்பது நல்லது அல்ல” என கீர்த்தி சொல்ல அரை மனதோடு கிளம்பினான்.


            கண்ணீர் கோடுகள் வரும், இவளின் அழுகை கூடும் என எதிர்பார்த்த அந்த அறை இவளின் அசதியில் அழுகை கூட காணாமல் உறங்கினாள்.


       அபிமன்யுவுக்கு தான் அதீத கவலை தாக்க, ‘என்ன செய்ய ராஜேஷ் இருப்பான் என்று எண்ணி பார்க்காமல் போனது பெரும் தவறு.  தான் அவளோடு சென்றதற்கு முதல் காரணம் அபிநயா உடல்நிலை மற்றொரு காரணம் கீர்த்தியிடம் காதலை சொன்னதற்காக, அதுவும் அப்படி தடாலடியாக சொல்லியதற்கு மன்னிப்பு கேட்டு, ஆனால் சொன்னது வெறும் வாய் வார்த்ததைக்காக அல்ல’ என்று புரிய வைக்க..


          ராஜேஷை கண்டதும் ஏனோ காதலை சொன்னது கூட தற்பொழுது தவறு என தோன்றியது. இந்த காதல் சரிவருமா என்ற அச்சம் அவனுள் சூழ்ந்தது.

2 thoughts on “அபியும் நானும்-15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *