Skip to content
Home » அபியும் நானும்-16

அபியும் நானும்-16

🍁 16
                           அடுத்த நாள் அபிமன்யு பார்வையில் போனாலும் ஒரு சின்ன முறுவல் மட்டுமே கொடுத்து சென்றிட அபிமன்யு மனம் அதற்கே நிம்மதி கொண்டது.
        இரு வாரம் போனது. அபிமன்யு கீர்த்தி வாழ்வில் எந்தவொரு மாறுதலும் இல்லாமல் போனது.

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அபிமன்யுவிற்கு அவளை பார்ப்பதே போதுமானதாக தோன்றினாலும் இடையில் அவன் அப்பா ரகுவரன் திருமணம் பற்றியே பேச, அதுவும் கீர்த்திகாவுக்கும் இவனுக்கும் பற்றி பேச, மறுக்கவும் தோன்றாமல் தவிர்க்கவும் தெரியாமல் துடித்தான்.


        கேத்ரின் ராஜேஷ் வாழ்வு ஆகா ஓஹோ என்று அன்னியோனின்யம் கொண்ட தம்பதியாகவும் இல்லாமல், அதேநேரம் வாழனும் என்ற கடமைக்கு, கொஞ்சம் கால போக்கில் அவர்களுக்காகவும் வாழந்தார்கள்.
     ராஜேஷிற்கு அடிக்கடி கீர்த்தி நினைவே தாக்கும்.
            நடுவில் கேத்ரின் ”உங்க பரம்பரையில் தான் மூளை வளர்ச்சி சரியில்லைனு கேள்விபட்டேன்.. அப்போ எனக்கும் அப்படி பிறக்குமா? அப்படி பிறக்கும் என்று கருவில் தெரிந்தால் எனக்கு இந்த குழந்தை வேணாம்” என்று பயந்து போனாள்.


        அப்படி இல்லை என்று ராஜேஷ் போராடி அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று புரிய வைத்தான். அன்று நின்று கூட கேட்க இயலாத ராஜேஷ், இன்றோ கேத்ரின் செய்கையில் தலையில் கையை வைத்து, அந்த டாக்டர் சொல்ல சொல்ல பொறுமையாக அமர்ந்து இருந்தான்.


       அப்பொழுது தான் கேத்ரின் வெளியே செல்ல டாக்டர் ராஜேஷை நிறுத்தி ”இந்த பொண்ணை விட கீர்த்தி ரொம்ப சின்ன பொண்ணு, இங்க வரும் பொழுது அவளுக்கு இருக்கும் பக்குவம் இந்த பெண்ணுக்கு துளியும் இல்லை. ஏன் ராஜேஷ் உனக்கு பொறுமையா பக்குவமா அம்மா என்ற மென்மையை மேன்மையா சரிவர நடத்தும் கீர்த்தி வேணாமா போயிட்டா? உனக்கு இந்த மாதிரி பெண்கள் தான் சரியா பொருத்தமா இருக்காங்களா?” என்று கேட்க பதில் சொல்ல முடியாது வெளியேறினான்.


        கேத்ரின் வழிநெடுகில் ”இங்க பாரு ராஜேஷ் எனக்கு உன் மகள் மாதிரி குழந்தை பிறந்தா விட்டுட்டு நான் போயிடுவேன்..” என மிரட்ட ராஜேஷோ இப்பொழுது தான் மீண்டும் தங்கள் சமூகத்தில் மீண்டும் ஒரு மதிப்பும் மரியாதையும் பெற்று முன்னுக்கு வர நின்றவன் இவளின் பேச்சில் கடுப்பானன்.
        கீர்த்தியிடம் திமிராக பேசியவன் இவளிடம் எதுவும் வாயை திறக்க யோசித்தான். கழுதைக்கு வாக்க பட்டாயிற்று இனி என்ன?


       கீர்த்தியோ அபியை கீர்த்திகா சொன்ன இடம் சென்று அவளுக்கு எதில் ஆர்வம் என ஆராய துவங்கினாள். ஏற்கனவே திருக்குறளில் ஆர்வம் இருக்க கண்டு, அதிலே இன்னும் பயிற்சி கொடுத்தார்கள் அங்கே…. அதே போல கதை சொல்லுவதை செயலில் விளக்கம் சொல்லி பேசும் சக்தி இல்லாதவர்களுக்கு புரிய வைக்கும் வையில் சொல்லப்படும் கதை அபிக்கு எளிதாக புரிய அவள் அந்த கதையினை எல்லாம் அப்படியே மனதில் செய்கையோடு பதிய வைத்தாள்.
      கீர்த்திகா கீர்த்தனா ஒரு சேர இருக்க அபிமன்யு இங்கே வந்து, அபியின் திறமை அவள் புரிந்து கொள்ளும் விதம் எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டான்.


       ஆனால் ரகுவரனுக்கோ அபிமன்யு கீர்த்திகாவை பார்க்க தான் அப்படி போகின்றான் என முடிவு கட்டி அவனுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவனுக்கு சொல்லாமல் நிச்சயம் செய்ய முடிவு செய்தார்.


       அதை இரு நாட்களில் முன் சொல்ல அபிமன்யு நிஜமாகவே நொந்து விட்டான்.
          பள்ளியில் கீர்த்தனா பார்க்க பேச துடித்தான். ரவுண்ட்ஸ் செல்ல அங்கே கீர்த்தனாவை நிற்க வைத்து ஒரு மரத்தில் நின்று தயக்கதோடு கேட்டான்.


      ”கீர்த்தி.. நீ எனக்கு பதில் சொல்லவே இல்லை.. நானும் நீ இயல்பா இருக்கட்டும்னு இவ்வளவு நாள் விட்டுட்டு இருந்தேன்.. ஆனா அப்பா. அப்பா … அது..”
      ”வாழ்த்துகள் அபிமன்யு சார்… கீர்த்திகா சொல்லிட்டாங்க.. நாளை மறுநாள் உங்களுக்கு நிச்சயம் என்று.. ” என முறுவலிக்க தனக்கு நிச்சயம் என்று தெரிந்து இருகின்றாள் என்ற கடுப்பில்
        ”உனக்கு அது தெரியுமா தெரிந்தும் எப்படி டி இருக்க? இங்க நான் செத்துட்டு இருக்கேன்… சொல்லு… எனக்கு ஓகேனு ஒரு வார்த்தை சொல்லு. நீ நான் நம்ம பொண்ணு அபிநயா மூவரும் சேர்ந்து வாழலாம்” என்று காலில் விழாத வகையில் கெஞ்சினான்.


        ”அபிமன்யு.. கொஞ்சம் இந்த ஸ்கூல் நிர்வாகி மாதிரி பேசுங்க. இங்க நமக்குள் அந்த உறவு மட்டும் தான். அதை மீறி ஏதாவது பேசினிங்க சார் என்று கூட பார்க்க மாட்டேன்” என திரும்பி பாராமல் நடந்தாள்.
         அபிமன்யு போகும் அவளையே இமைக்காமல் பார்த்தான்.


 என்ன சொல்லி இவளிடம் சம்மதம் வாங்க என தலையை பியித்து கொள்ளாதா குறை.
            மணி ஐந்து ஆகவும் , மின்சாரம் பறிப்போக எல்லா இடமும் வெளிச்சம் சூழ அதே இருக்கைக்குள் இருந்தான்.


        ஏதோ ஒரு விசும்பல் கேட்க கண் திறந்தவன் வெளியே வந்து காண அங்கே அபிநயா அழுதபடி கால்களை கட்டி கொண்டு இருந்தாள்.


        ”அபிக்குட்டி என்ன இங்க இருக்கீங்க? என்றே கையை அவள் அருகே வைக்க அவளோ அவனை பிடித்து கொண்டு அபி அங்கிள்….” என கதற ஆரம்பித்து இருந்தாள்.
      ”அம்மா எங்கே?” என கேட்டான்.


      ”அம்மா அம்மா தண்ணீர் எடுத்து வர போனாங்க இன்னும் வரலை” என ஓரளவு அவனுக்கு புரியும் வகையில் சொல்லி முடிக்க, அபியை அணைத்து தூக்கி கொண்டு ‘அழக்கூடாது அங்கிள் இருக்கேன்ல வாங்க அம்மாவை தேடலாம்” என போக அங்கே தண்ணீரில் வழுக்கி கீர்த்தனா மயங்கி இருந்தாள்.
        ஓரளவு இருட்டாகவே இருக்க வேறு போனில் ஆன் செய்து நீரை எடுத்து கீர்த்தி முகத்தில் அடிக்க திடுக்கிட்டு எழுந்தாள்.
           மணியை பார்க்க ஆறு முப்பதை காட்டியது.


      எவ்வளவு நேரம் இப்படி இருந்தேன் ஏன் யாரும் தேடலை.” என்றே யோசித்தவள் கடைசியாக அபியை அழைத்து திரும்ப அபி நீரை கேட்க வாட்டர் பாட்டில் காலி என்றதும் பள்ளி கேன்வாட்டர் அருகே போக அப்பொழுது தான் நீரால் வழுக்கி விழுந்த நிலை அறிந்து இருந்தாள். கரெண்ட் வேறு இல்லாததால் அப்படியே வெளியே பூட்டி சென்ற நிலை அறிந்து கொண்டார்கள். அபிமன்யு காரினை சர்விஸ்‌ அழைத்து சொல்ல பள்ளியில் இருந்தே கார் நான்கு மணிக்கு சென்றதால் அவன் அறையும் பார்க்காமல் போனது விதி.


      ”பயமா இருக்கு என் போன் எங்கயோ விழுந்து போச்சு…” என அங்கே தேட அங்கு எங்கும் காணாமல் அபிமன்யு போன் பண்ண முயன்றான். அதுவோ சிக்னல் இல்லாமல் கால் போகவில்லை.. கால் அருகே போனின் ஒரு பாகம் மட்டுமே இருக்க விழுந்து இருக்கும் என்றே எண்ணி முதலில் என் அறைக்கு வா.. என்று அவனின் அறைக்கு வந்து கதவை திறந்து விட்டு நின்றான்.


              அபி அழுகை நிற்க ”வாட்ச்மேனுக்கு போன் செய்ங்க” என அவனிடம் சாவி இருக்கும் என்றதும் அவனோ பல முறை முயன்று தோற்றான்.
         அடுத்த முறை போன் செய்ய அதுவோ பேட்டரி லோ என காட்ட, கடுப்பாக முதலில் டார்ச் தேடினான்.
           டார்ச் கிடைக்க பெற்ற அடுத்த நொடி போன் செயல் இழந்தது.


        ”போச்சு டா” என்றே அபிமன்யு சொல்ல அங்கே கீர்த்தி தான் பயத்தில் விளிம்பில் இருந்தாள்.
       ”மனு… இப்ப என்ன செய்ய?” என்று கேட்க ”இப்படியே இருந்தடலாம்” என்றான்.
     கீர்த்தி அபிமன்யுவை பார்க்க அவனோ இங்கே இருப்பது தனது குடும்பமாக மாறும் கனவில் மிதந்தான்.


      யாருக்கும் போன் செய்யும் நிலை இல்லை.. வெளியே கத்த இயலாது கேட் வரை குரல் சென்றடையாது. எப்படியும் இன்று போக இயலாது.
     ”சாப்பிட என்ன இருக்கு? என்றான் ஹேண்ட் பேக்கை பார்த்தபடி.

கீர்த்தி முறைக்க ”ஏய் எனக்கு இல்லை கீர்த்தி அபிநாயவுக்கு கொடு அழுதழுது சோர்ந்து போயிருக்கா பசிக்கும்.” என்று சொல்ல காலையில் ஒன்றும் இரண்டு பிஸ்கெட் வாங்கிய நினைவு இப்பொழுது நல்லதாக தோன்ற, ஒரு பாக்கெட் பிஸ்கெட் சாப்பிட்டாள்.

அபிமன்யு தட்டி கொடுக்க உறங்கியும் போனாள். மணி எட்டு என்று காட்ட
      ”எனக்கும் பசிக்குது… மதியம் வேற சாப்பிடலை” என்றான் அபிமன்யு.

ஹாட் பாக்ஸில் இருந்த உணவு கேட்டு போயிருந்தது. அதில் சப்பாத்தி மட்டும் இரண்டு இருக்க அதை எடுத்தாள் கீர்த்தி. அவளும் அவளின் பாக்ஸ் எடுத்து பார்க்க புளியோதரை அப்படியே கெடாமல் இருக்க அவனிடம் நீட்டினாள்.


       ”நீயும் அப்போ மதியம் சாப்பிடலையா?” என்றான் அவள் முகத்தில் எதையோ தேடி கொண்டு அவளோ இல்லை என தலை அசைத்தாள்.
        அபிமன்யு புளியோதரை உண்டு முடிக்க கீர்த்தி சப்பாத்தி உண்ண எட்டு முப்பதே கண்ணை சுழற்றியது.


       அபி உறங்கிவிட்டாள் என்றறிந்து மனு ஆரம்பித்தான்.    
       ”மதியம் சொன்னதுக்கு பதிலே இல்லையே கீர்த்தி…” என்று பேச
       ”அவன் அருகே கைக்கு எட்டிய இடத்தில் கீர்த்தி இருக்க, அவளோ அவன் மடியில் உறங்கும் அபியை தான் விழி எடுக்காமல் பார்த்தாள்.


        ”என்ன தான் பிரச்சனை… ராஜேஷ் ஆஹ்? இல்லை நீயா? எனக்கு அபிநயா நம்ம பொண்ணா வளர்க்க எந்த பிரசனையும் இல்லை.. அவளை என் பொண்ணு பெருமையா சொல்ல நான் தயார்… அப்பா ஒத்துக்கொள்ள வைக்க என்னால முடியும்” என்றான்.


      ”ப்ளீஸ் மனு” என நிறுத்த சொல்ல, இங்க இருந்து எப்படியும் இன்று போக இயலாது… இந்த விதி மாட்டி விட்டு வேடிக்கை பார்க்க திணறி நின்றாள் கீர்த்தி.


      ”கீர்த்தி நான் எதுக்கு உன்னை முதல் முறை பார்க்கும் பொழுது, நீ வித்தியாசமா தெரிந்த? உன் திமிர்… என்னை எட்டி நின்று ரசினு சொல்ற அழகு… அடுத்து நீ அம்மா எனறு தெரிந்தப்ப, எனக்குள் நடந்த பூகம்பம்…. அன்னிக்கு என் மூஞ்சியை நீ பார்க்கணுமே எந்த அளவு துடிச்சேன் தெரியுமா? சரி அவள் வரும் பொழுது நாம வெளியே வரக்கூடாது, பள்ளி ஆரம்பிக்கும் பொழுதும் முடியும் பொழுதும் மட்டும் நம்ம அறையில் இருந்துகனும். என்ன என்னவோ மனசுக்கு கடிவாளாம் போட்டு, அடுத்த நாள் பள்ளிக்கு வந்தா? நீ ஒன் ஆப் தே டீச்சர்ரா ஒர்க் பண்ண வந்து நிற்கற.. ஹவ் ஐ டெல்லிங் கீர்த்தி… உன்னை டையிலி பார்க்கிற சந்தோஷம்.. அப்பவும் நீ இன்னொரு ஆணுக்கு சொந்தம் என்று விலகி தான் இருந்தேன். தயாளன் உன்கிட்ட பேசியதை தூரத்தில் இருந்து பார்த்தேன். உன் முகம் சொல்லுச்சு அவன் என்னவோ தவறா பேசி நீ கோவம் கொண்ட என்று. அங்கிருந்த சி‌சி‌டி‌வி நிறைய முறை ஓட விட்டு அவன் பேசியதை உதட்டு அசைவில் கேட்டு வேலையை விட்டு நிறுத்தினேன். அடுத்த நாள் டூர் போக ஏற்பாடு செய்ததும் உனக்கு மைண்ட் டைவேர்ட் கொடுக்க தான்” என்றதும் கீர்த்தி பார்வை ஒரு நொடி மனுவை தொட்டு செல்ல


        ”என்ன தான் நீ இன்னொருத்தான் மனைவி என்று விலகி போனாலும் விதி நீ விவாகரத்து பதிவு செய்த அன்று என்னை அங்க சந்திக்க வைத்து, விவாகரத்து கொடுத்து விட்டு செல்கின்றான் என்று எனக்கு சொல்லனுமா? அதனால தான்
    “அதனால இது நடப்பது எல்லாம் கோஇன்சிடெண்ட் நினைச்சிங்களா… ”    
    “இல்லைனு சொல்றீயா… இந்த நிமிஷம் என் கூட இருக்க, இதுக்கு பேர் என்ன கீர்த்தி” என்றவன் தவிப்பு அவளுக்கு புரியாமல் இல்லை. ஆனால் சம்மதம் சொல்லாமல் மறுக்க ஆயிரம் காரணம் இருக்க இவனிடம் என்னவென்று கூறுவது?


                    ‘திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவள், 10 வயது குழந்தைக்கு தாய், அதுவும் சாதாரண குழந்தை அல்ல… ராஜேஷ் ஊருக்கு தான் விவாகரத்து பெற்றான் இன்று வரை தன்னை விடாது தேட தான் செய்கின்றான் அதற்கு பதில்.
முக்கியமாக சமூகம்
மனு தந்தை தங்களை ஏற்பாரா?
காதலித்த ராஜேஷ் கூட சந்தர்ப்பம் வந்தவுடன் தன்னலமாக மாறியதில் இங்கு மனு நல்விதமாக பேசினாலும், காலம் தந்த பாடம் சூடுபட்டு இருக்க மனு மனதோடு ஒன்ற முடியுமா?
தனக்கு தான் மாற்றம் ஏற்படுமா? தலைவலியே தாக்க எங்கிருந்தோ கோவிலில் பாடல் இசைக்க மணி அடித்தது.
   “என் காதல் உண்மை என்ற கணம் மணியடிக்க
    “பாரு மணியடிக்கு” என்றான்.


     “இன்னிக்கு வெள்ளி கிழமை மணி அடிச்சுட்டு தான் இருக்கும்” என்றவள்
     ”மனு இன்னிக்கு வெள்ளி கிழமை நாளை சனி ஞாயிறு… நாம எப்படி இங்கிருந்து போக” என்றதும் யோசித்தவன்
      “காலையில் வெளிச்சம் வரட்டும் யோசிப்போம்” என்றான் வெளியே செல்ல பிடிக்காதவன் போல..

கீர்த்தனாவும் அதன் பின் எதுவும் சொல்லவில்லை.
                                                                                 

2 thoughts on “அபியும் நானும்-16”

  1. Kalidevi

    Ippadi school ulla matikitangala ellam manu kaga nadakara mariye iruke intha rajesh ivala vitu suthama poita paravala inum varane cathrin kuda e irukama. Athan iva manasu mara matuthu manu evlo solli Puriyala vaika pathutan ena mudivu vara potho interesting ah iruku story

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *