பைக்கில் செல்லும் இயலினியையே அந்த இளைஞன் பார்த்துக் கொண்டிருந்தான்… நடந்த அனைத்தையும் அமைதியாக இன்ஸ்பெக்டர் பின்னாடியே நின்று பார்த்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவர், “என்ன சார்? நீங்க யாருன்னு சொன்னதுக்கு அப்பறமும் அந்த பொண்ணு இந்த போடு போட்டுட்டு போகுது… நீங்க என்ன டான்னா இவ்வளவு அமைதியாவே பார்த்து கிட்டு நிக்கிறீங்க?” என்று சலித்து கொண்டு கூறினார்.
இன்ஸ்பெக்டர் ஆன அந்த இளைஞனும், “விடுய்யா பார்த்துக்கலாம்… எங்க போக போறா?” என்று கூறியே தனது புல்லட்டை நோக்கி சென்றான்.
அது எப்படி போலீஸ்காரனையே திட்டி விட்டு போகும் பெண்ணிடம் பிரட்ச்சனை பண்ணாமல் போக முடியும் என்பது போலவே அந்த கான்ஸ்டபிள், “சார்… அப்படி எப்படி சார் விட முடியும்? உங்கள அந்த பொண்ணு என்ன என்ன சொன்னிச்சி பார்த்தீங்களா? நல்லா புடலங்காய் மாதிரி இருந்து கிட்டு உங்கள திருடனோட சேர்த்து வச்சு கம்பேர் பண்ணிட்டு அது பாட்டுக்கு பைக்ல ஏறி கிட்டு டுர்ருன்னு போயிடுச்சி… அப்படி எல்லாம் அவள போக விட கூடாது வாங்க சார்… இந்நேரம் அடுத்த தெருக்கு தான் அந்த புள்ள போயி இருக்கும்… வெரசா போனா அந்த புள்ள பின்னாடியே போயி நல்லா ரெண்ட்டு தட்டு தட்டியாவது இழுத்து கிட்டு வருவோம்…” என்றார்.
அவர் கூறியதை கேட்ட இன்ஸ்பெக்டரான அந்த இளைஞன் ஒரு பார்வையாலே அவரை ஏற இறங்க பார்த்து விட்டு அவர் பக்கம்மே திரும்பி நின்று தன் இடுப்பில் கை வைத்து கொண்டு அவரை பார்த்தான்.
தன்னை விட ஒரு வயது சிறியவன்னாக இருந்தாலும் அவனின் கண் பார்வைக்கு காண்ஸ்டபிள் அமைதியாக, “ஏன் ய்யா… இவ்வளவு நேரம் அந்த புள்ள என்னைய போட்டு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டு ஏதோ போனா போகுதுன்னு என்னைய விட்டுட்டு போற மாதிரி போறா… அப்ப எல்லாம் வராம அத எல்லாம் நின்னு நல்லா இரசித்து வேடிக்கை தானே பாத்து கிட்டு இருந்த… அப்பறம் என்னய்யா அந்த புள்ள போனதுக்கு அப்பறம் ஏதோ பாசம் உள்ளவன் மாதிரி வந்து ஏத்தி விடுற… ம்… சொல்லு… ஏன் உன் மனசுல இருக்குற இன்னம் வேற எதையாவது அவ கொட்டாம போயிட்டாளா… அதான் அவ பின்னாடியே போக வச்சி என்னைய இன்னம் நல்லா வாங்க வைக்க பார்க்குறியா என்ன?” என்றே கேட்டான்.
அவ்வளவு தான் இன்ஸ்பெக்டரின் கேள்வியில் கான்ஸ்டபிள் அவரோ எச்சில் விழுங்க ஆரம்பித்து விட்டார்… பின்ன என்ன?
“உண்மையை அப்படியே அல்லவா நேருக்கு நேரா சொல்லுறான்… எப்ப பாத்தாலும் பெரியவர் என்ற மரியாதை கூட இல்லாமல் பதவி உயர்வில் இருக்கும் காரணத்தால் போய்யா வாய்யா அத வாங்கி கிட்டு வாய்யா சிகரெட் வாங்கி கிட்டு வாய்யா ஏன் இன்னம் வீட்டுக்கு எல்லாம் போனால் சொல்ல தேவையே இல்லை…” என்று எல்லாம் வேலை வைத்தால் அவரும் மனுஷன் தானே… அதான் இது போல் தன்னை வேலைக்கும் ஏவுபவன் திட்டு வாங்குவதை கண்டதும் சிறிது இரசித்து பார்த்து இன்னம் கொஞ்சம் வாங்கினால் நன்றாக இருக்கும் என்று ஏங்கியும் விட்டார்.
அதை அப்படியே கூற முடியாது அல்லவா… “அய்யோ சார்… நான் போயி அப்படி பண்ணுவேனா சார்…” என்று இழுக்க
அதை கண்டு நம்பாமலே தனது சட்டை பாட்டனில் மாட்டியிருந்த கூலரை எடுத்து தனது விழிகளில் மாட்டிக் கொண்டே, “யோவ்… யோவ்… நீ யாருன்னு எனக்கு தெரியும்… நான் யாருன்னு உனக்கு தெரியும்… சும்மா அப்படியே பாசப்புற வேலை எல்லாம் வேணாமய்யா… சரி… சரி கிளம்பு… வண்டிய எடு…” என்றான்.
அவன் கூறிய தோரணையில் சிறிது அசடு வழிந்தே தனது பின்னந்தலையை சொரிந்து கொண்டு, “சார்ர்ர்… நீங்களே அந்த பொண்ணு பேசுனதுக்கு எல்லாம் பதில் பேசி ஜெயிக்க முடியாம நின்னிங்க… இதுல நான் எல்லாம் வந்தேன்னா… என்னைய பார்த்த வேகத்துல போயாங்கன்னு சொல்லுறதோட விடாம என்னைய தூக்கி போட்டு பந்தாடினாலும் ஆடிடுவா போல சார்… அதான் நான் வரல… மத்தபடி அந்த புள்ள உங்கள பேசுன பேச்சிக்கு எல்லாம் எனக்கு அவ்வளவு கோவம் வந்தது சார்…” என்றார்.
அவர் கூறியதைக் கேட்டதும், “ஆமாம்… ஆமாம்… அவள் செஞ்சாலும் செய்யா கூடியவள் தான்… சரி விடுய்யா… அதான் எல்லாம் ஆச்சில்ல… வா போலாம்…” என்று கூறி இன்ஸ்பெக்டர் செல்ல போக
அந்த கான்ஸ்டபிளுக்கு இன்ஸ்பெக்டர் மேல் இருக்கும் கோவம் இன்னம் குறைய வில்லை போல… மீண்டும், “இல்ல சார்… இத்தனை பேர் முன்னாடி திட்டி உங்க மானத்தையே வாங்கி போலீஸ்காரங்களையே அசிங்க படுத்திட்டு போன அந்த புள்ளைய அப்படியே விட்டுட்டு போகுறது சரியில்ல சார்… அந்த புள்ளைய நீங்க ஏதாவது பண்ணனும் சார்…” என்றே வீராப்பாக அந்த கான்ஸ்டபிள் பேச பேச
பற்களை கடித்து கொண்டே திரும்பிய இன்ஸ்பெக்டர், “யோவ் என்னைய விட பெரியவன் கந்தசாமின்னு என் குலசாமியோட ஒரு பேர வச்சிருக்க என் ஒன்னு விட்ட அக்கா கழுத்துல தாலி கட்டி இருக்கன்னு எல்லாம் பார்க்க மாட்டேன்… சப்பு சப்புன்னு வச்சிடுவேன்… அவ எல்லாம் பொம்பளையா ய்யா… நல்லா பஜாரி… இல்ல இல்ல பொண்ணுங்கள தப்பா பேச கூடாது… நல்லா ராட்சசி மாதிரி இத்தனை பேர் முன்னாடி அந்த குதி குதிச்சிட்டு போறா நான் போலீஸ்ன்னும் சொல்லியும் என்னைய எதிர்த்து… அவ கிட்டையே என்னைய கோர்த்து விட பார்க்குறியே… உனக்கு என்ன என்னைய அவ கிட்டையே அனுப்பி போட்டுதள்ள எண்ணம்மா என்ன?” என்றே அவரின் சட்டையை பிடித்து தன் முகத்துக்கு நேராக இழுத்தே கேட்டான்.
“என்ன டா இது? எப்பவும் இவ்வளவு தூரம் கோவப்பட மாட்டானே… இன்னைக்கு என்ன இவ்வளவு தூரம் கோவப்பட்டு என் சட்டையிலையே கைய வச்சிட்டான்…” என்றே திருட்டு முழி முழித்து விட்டு, “இல்ல டா இளா மாப்பிள்ளை… என் மாப்பிள்ளைய அந்த புள்ள பேசுனதுனால தான்… சரி சரி உனக்கு விருப்பம் இல்லன்னா விட்டுவிடு விட்டுவிடு…” என்று இழுத்தார்.
கந்தசாமி மாப்பிள்ளை என்றதும் இன்ஸ்பெக்டர் இளம்மாறனும் உறவுக்காரனாக, “யோவ் மாமா… அந்த விஷத்த விடுய்யா… எவன் எவனோ நம்மள என்ன என்னமோ பேசி அசிங்கப்படுத்திட்டு போறான்… ஏதோ இந்த புள்ள கண்ணுக்கு லட்சணமா பத்து நிமிஷம் நம்ம கண்ணு முன்னாடி நின்னு நிதானாம்மா அசிங்கப்படுத்திட்டு போனாலே… அத நினைக்கும் போது மானம்மே போன மாதிரி தாங்க தான் முடியல… என்ன பண்ண? விடு விடு… அப்போ வெடுக்கு வெடுக்குன்னு அவ பேசும் போது அசிங்கம்மா தான் தெரிந்தது… ஆனால் இப்போ நினைத்தால் அது அசிங்கமா கூட தெரியல… நல்லா தான் இருக்கு… அப்பறம் இப்படியும் ஒரு மாதிரி திமிரான பொண்ணா நம்ம நாட்டுல இருக்குறதும் நாட்டுக்கு நல்லா தான் இருக்குது…” என்று கூறி கொண்டே பைக்கில் ஏறி கொண்டான்.
இளமாறன் கூறியதைக் கேட்டதும் கான்ஸ்டபிள் கந்தசாமி, “என்னது… நாட்டுக்கு நல்லா இருக்கா? மாப்பிள்ளை என்ன டா மாப்பிள்ளை சொல்லுற… அப்ப உன் கண்ணுக்கு அந்த புள்ள அழகா தெரிகிறதா டா…” என்றே கேட்க
இளமாறனும் பைக்கை ஆன் செய்த படியே, “யோவ்… யோவ்… பாக்குற பொண்ணு எல்லாம் என் வயசு பசங்களுக்கு கண்ணுக்கு அழகா தான்யா தெரிவாங்க… அதுக்கு எல்லாம் அந்த பொண்ணு அழகா இருக்குனு அர்த்தம் இல்லய்யா… ஏன்னா என் வயசு அப்படி… ஒழுங்கா உன் பொண்டாட்டியும் நீயும் வீட்டுல சொல்லி ஏதாவது ஒரு பொண்ண என் தலை கட்டி வைக்கிற பொழப்ப பாருய்யா… அத விட்டுட்டு போற வர பொண்ணுங்க கிட்ட எல்லாம் என்னைய அடி வாங்க வைக்க கோர்த்து விட்டு கிட்டு திரியாத…” என்றான்.
இளமாறன் கூறியதை கேட்டதும் கந்தசாமி வாய் விட்டே சிரித்துக் கொண்டு தனது பைக்கில் ஏறி ஆன் செய்து கொண்டு, “ஓஹோ… அப்ப… மாப்பிள்ளை அப்படி வரீங்க… எதுக்கு டா மாமா போற வரவ கிட்ட எல்லாம் என்னைய கோர்த்து விட்டு அடிவாங்க வைக்கிற… அதுக்கு பேசாம நீயே உன் தங்கச்சிய தேடி பிடிச்சி என் தலையில கட்டி வச்சி உன்னைய கும்ம வைக்க சொல்லுற… அப்படி தான டா மாப்பிள்ளை…” என்று கேட்க
இளமாறனும் தனது கேசத்தை கொதியப்படியே சிரித்து கொண்டு அந்த இடத்தில் இருந்து கிளம்பி விட்டான்… அவனின் பின்னாடியே கந்தசாமியும், “ம்ம்ம்… அடுத்து மாப்பிள்ளைக்கு ஏத்த மாதிரியே வீட்டுல சொல்லி பொண்ணு பாக்குற வேலையை ஆரம்பிச்சிட வேண்டியது தான்… ஏன் பேசாம இப்ப பேசிட்டு போன பொண்ணையே பார்க்க கூடாது… அய்யய்யோ வேண்டாம்… வேண்டாம்… இவன் வேற வீட்டுக்கு ஒத்த பையன்… இவள வேற கட்டி வச்சி வாய தொறந்தாலே அவ வாயில இருந்து நிறைய வார்த்தைகள் வருது… இதுல வேணாம் டா சாமி… நல்லா அடக்க ஒடக்கம்மான பொண்ணா தான் மாப்பிள்ளைக்காக பார்க்கணும்…” என்று மனதில் நினைத்துக் கொண்டு சென்றார்.
நாயகன் அவன் நாயகி அவளை இரசித்தாலும் அவளை தனது நாயகி என்று எடுத்துக் கொள்ளாமல் அரளிப்பூவை இரசித்து கொண்டு மட்டும் செல்பவன்னாக சென்று விட்டான்… அவனின் மாமன் இயலினியை ஒரு நிமிடம் தனது மாப்பிள்ளைக்காக நினைத்தார் தான்… ஆனால் அரளிப்பூவை இரசிக்கலாம்… விஷத்தை பார்க்கலாம்… ஆனால் விஷயத்தை பருகும் அளவிற்கு நீலகண்டன் இல்லையே தனது மாப்பிள்ளை.
அப்படி இளமாறன் இருக்கவும் எங்களுக்கு விருப்பம் இல்லையே என்று நினைத்துக் கொண்டு நாயகியை ஒதுக்கி வைத்து விட்டு அடுத்த பெண்களை நாயகிக்காக பார்க்க தயாரானார்.
நாயகன் அவனை திட்டி விட்டு சென்ற அரளிப்பூவுக்கோ போகும் வழியெல்லாம் பக்கு பக்கு என்றே இருந்தது, “எங்கு போலீஸ்காரன் தன் பின்னாடியே வந்து தன்னை தூக்கி கிட்டு போயி சிறையில் வைத்து தன்னை குத்து குத்தென்று குத்தி விடுவானோ? அச்சோ… அடிச்சா கூட பரவா யில்ல… இன்னும் என்ன என்னமோ பண்றதா வேற செய்தியில எல்லாம் போட்டு கேள்விப்பட்டு இருக்குமோ… இவன் வேற அத்தனை பேரு முன்னாடியே நம்ம கைய புடிக்கிறதுலையே குறியா வேற இருந்தான்… இதுல தனியா மட்டும் மாட்டினோம்… அவ்வளவு தான்…” என்று எல்லாம் யோசித்துக் கொண்டே சென்று கொண்டு இருந்தாள்.
சூப்பர்.. அன்ட் வெரி நைஸ் கோயிங்.
Thank you
Adipavi thairiyama pesunenu ninacha ippadi bayapadura ipo onum pana matan thairiyama iruka mariye kamichiko
thank you
Nice epi
Spruuu