வீட்டின் தொலைக்காட்சியில் ஒன்றன் பின் ஒன்றாக செய்திகள் ஓடி கொண்டு இருந்தது… என்ன? அந்த செய்திகளை தான் மக்களால் கேட்டு கொண்டு பயம்மில்லாமல் ஒருவேளை கூட நிம்மதியாக சாப்பிட முடிய வில்லை என்றால் பாருங்களேன்.
நாமும் இப்போது செய்தியை கேட்டு கொண்டே அரளிப்பூ கதையை பற்றி பார்ப்போம்…
“இன்றைய முக்கிய செய்தி துளிகள்… ஒரு வாரத்திற்கு முன் காணாமல் போன பெண்ணை காவலர்கள் மிகவும் தீவிரமாகத் தேடி இன்று அந்த பெண்ணை கவலைக்கிடம்மான சூழலில் கண்டு பிடித்தனர்… **** ரோட்டின் அருகே இருந்த காட்டு பகுதியில் அந்த பெண்ணின் சடலம் இன்று மீட்கப்பட்டது… அந்த பெண்ணின் வயது பன்னிரெண்டு தான்… பள்ளி மாணவி… விரைவாக அந்த பெண்ணிற்கு என்ன நேர்ந்தது அந்த பெண்ணின் இறப்பிற்கு காரணம் என்ன? என்று எல்லாம் அறிவதற்காக சிறப்பு படை ஒன்றை காவல்துறை நியமித்து உள்ளது…”
“அரசு வேலைக்கான விண்ணப்பத்தை பதிவிட இன்றே இறுதி நாள்… ஆகையால் படித்து முடித்த இளைஞர்கள் அனைவரும் விண்ணப்பம் பதிவிடும் வேலையில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள்… இன்று வரை முப்பது லட்சம் இளைஞர்கள் பதிவிட்டு உள்ளார்கள்…”
“ஆழ்துளை கிணறு போட்டு வேலை முடிந்த பிறகு அதனை மூடாதவர்கள் மீது தீவிர வழக்கு பதிவிடும் படி கடந்த ஒரு மாதம்மாக நடந்த பாதிக்க பட்ட மகளின் போராட்டத்தில் இறுதியாக யார் எல்லாம் ஆழ்துளை கிணறை திறந்து வைத்து இன்னும் மூடாமல் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் தீவிரமாக விசாரித்து அவர்களின் மீது வழக்கு பதிவிடும் படி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது…”
“இன்று கல்வித்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர்களிடம் நடந்த பேச்சு வார்த்தையில்… டாடி மம்மி வீட்டில் இல்லை… டேய்… முக்கியமான செய்தி ஓடி கிட்டு இருக்கு… எதுக்கு டா சேனல மாத்துன… ஒழுங்கா சேனல வை…” என்ற குரல் கேட்க
அதன் கூடவே, “அப்பா… இதே செய்திய தான் ப்பா இன்னும் அரை மணி நேரம் இல்லன்னா ஒரு மணி நேரம் கழிச்சி போடுவாங்க… நீங்க அப்ப பாருங்க ப்பா… ப்ளீஸ் ப்பா… இந்த பாட்டு என் தளபதி பாட்டு ப்பா…” என்று அந்த குரல் காரரின் மகன் கெஞ்சல் குரலில் கூற
அவரும், “இது எல்லாம் எங்க உருப்பட போகுது? பாரு… அப்பா முன்னாடியே என்ன பாட்டு பார்த்து கிட்டு இருக்கு…” என்று முணகி கொண்டு அவர் அவரின் வேலையை பார்க்க கிளம்பி விட்டார்.
பக்கத்து வீட்டில் நடந்த சம்பாஷனைகள் அப்படியே அருகில் இருந்த வீட்டில் கேட்க அந்த வீட்டில் இருந்த நம் கதையின் நாயகியோ வாய் விட்டே சிரித்தாள்.
அவளின் சிரிப்பை கேட்டதும், “இயலு… நீ பண்றதே சரியில்ல புள்ள… ஒரு டிவி பொட்டிய நம்ம வீட்ல வாங்கி வைக்க வேண்டியது தானே… அப்படி வச்சா என்ன குறைஞ்சா போவா? பாரு தினமும் ஓஸ்ல பக்கத்து வீட்ல ஓடுற செய்தியை நம்ம காதுல கேட்க காத்து இருக்குற மாதிரி இருக்கு… நம்ம வீட்டிலேயே அந்த டிவி பொட்டி இருந்தால் நாட்டு நடப்ப நம்மளும் தெரிஞ்சுக்கவோம்மில்ல…” என்று கூற
இயல் என்று அழைக்க பட்ட இயலினியோ, “செல்லம்… செல்லம் வெயிட் செல்லம்… இப்போ நீ என்ன நினைச்சி பேசி கிட்டு இருக்க? ஓஓஓ… நான் நாட்டு நடப்ப தெரிஞ்சுக்கணும் என்பதற்காக தான் இந்த நியூஸ் நேரத்துல வந்து சரியா உக்காந்து கேட்டு கிட்டு இருக்குறேன்னு நினைச்சியா? இல்லவே இல்ல செல்லம்… அவங்க அப்பா இந்த மாதிரி ஒரு நியூஸ பார்த்து கிட்டு இருக்கும் போது இடையில் அவங்க பையன் புகுந்து ஆட்டைய கலைக்கிறான் பாரு… அப்போ சரியா இந்த மாதிரி வில்லங்கத்தனமா ஒரு பாட்டு அவன் கேட்பான் பாரு… அப்ப அவங்க அப்பா ஒரு பீல் பண்றாரு பாரேன்… அதை கேட்க தான் நான் தினமும் சரியா வந்து வெயிட் பண்றேன்…” என்றாள்.
இயலினை கூறியதைக் கேட்டதும் நெஞ்சில் கை வைக்காத குறையாக வாயைப் பிளந்து கொண்டு செல்லம் என்று அழைக்கப்பட்ட இயலினியின் பாட்டி செல்லத்தாயி, “அடக்கடவுளே…. இதுக்காக தான் இந்த நேரம் எல்லாம் இங்க வந்து உட்கார்ந்து கிட்டு இருக்கியா… நான் கூட ஏதோ நாட்டு நடப்பு தெரிஞ்சுக்க தான் நீ இதெல்லாம் பண்றியோன்னு நினைச்சேன் என்னைய சொல்லணும்… இருந்தாலும் நீ வேற அப்பைக்கு அப்ப நல்லா வியாக்கியானமா பேசுவியா… அதான் என் மூளை இப்படி எல்லாம் யோசிக்கிட்டு போயிடுச்சி…” என்றார்.
அவர் கூறியதை கேட்டதும் மீண்டும் வாய் விட்டே சிரித்த இயலினி, “ஏய் கிழவி… நியூஸ்ல வரது எல்லாம் நாட்டு நடப்பு பத்தி அவங்க சொல்லுறதா? அய்யோ கிழவி… கிழவி… உனக்கு எல்லாம் எப்படி சொல்லி புரிய வைக்கிறது… ம்… இருந்தாலும் சொல்லுறேன்… முடிஞ்சா புரிந்துக்கோ… இவங்க நியூஸ் சேனல நடந்துறதே நாட்டு நடப்ப நமக்கு சொல்ல இல்ல… நமக்கு இது தான் நாட்டு நடப்புன்னு சொல்ல தான் இந்த செய்திகளே…” என்று கூற
புரியாமல், “இயலு புள்ள… கடைசியா சொன்ன இரண்டுக்கும் என்ன டி வித்தியாசம்? நாட்டு நடப்ப சொல்லுறதுக்கும் இது தான் நாட்டு நடப்புன்னு சொல்லுறதுக்கும் என்ன டி பெரிய வித்தியாசம் இருக்கு?” என்று பாட்டி வினாவினார்.
இயலினியும், “ம்… இரண்டுக்கும் வித்தியாசம் மில்ல கிழவி… இரண்டும்மே வேற வேற… சொல்லுறேன் நீயே கேளேன்… நாட்டு நடப்ப சொல்லுறது என்கிறது நடக்குறத அப்படியே வந்து சொல்லுறது… அதே இது தான் நாட்டு நடப்புன்னு சொல்லுறது என்கிறது இது தான் அந்த விசியத்திற்கான செய்தி… இது தான் நடந்தது… இது தான் நாட்டு நடப்புன்னு நம்பள நம்ப வைக்கிறது…” என்று கூற கூற கேட்டு கொண்டு இருந்த செல்லத்தாயிக்கு மயக்கம் வராத குறை தான்.
ஏன் எனில் எப்போதுமே இயலினி இப்படி தான்… ஏட்டிக்கு போட்டியாகவும் எடக்கு மடக்காகவும்மே எப்போதும் பேசுவாள்… அவளை அந்த ஊர் காரர்கள் வில்லங்கம் என்றே கூறுவார்கள் என்றால் பார்த்துக்கோங்களேன்.
கதையை பற்றி கருத்துகளை தாருங்கள் நண்பர்களே…
இன்ட்ரெஸ்டிங் டீஸர்!!… வாழ்த்துகள்❣️
நன்றிகள் சகி 😀
புதுவரவு சூப்பர் பெயருக்கு ஏற்றமாதிரி கதையும் இருக்கும் வில்லங்கமாக என்று எதிர்பார்க்கிறேன் வாழ்த்துகள் சகோதரி
நன்றிகள் சகி 😀
Interesting
Thank you 😀
Started well story. Yarkum ethaium crt ah nadakuratha sonna pidikathu thane athe mari ingeum solranga pola athum pombala pasanga solratha ethukave matanga
Thank you 😀
Super… And very nice epi
Thank you 😀
Nice 👍
Thank you 😀
Intresting character
ஆரம்பம் நல்லா இருக்கு….உங்க கதைனா ஒரு டுவிஸ்ட் விருவிருப்பா இருக்குமே….