இதயத்திருடா-10
- 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
மதிமாறனின் பணம் வாங்கும் அறையிலிருந்த டிவியில் போராட்டம் நடந்த இடத்தை செய்திகாரர்கள் வளைத்து வளைத்து செய்தி சேகரிக்க துவங்கினார்கள்.
நற்பவி இருக்கின்றாளா என்ற தேடுதலில் உன்னிப்பாய் கவனத்துடன் செய்தியை கவனிக்க, மாணவிகள் இருக்கும் பகுதியில் நற்பவி பெண்சிங்கம் போல நின்றிருந்தாள்.
நல்ல உச்சி வெயிலில் காக்கி உடையணிந்து இருந்தாள்.
காலையில ஒயிட் டீஷர்ட் போட்டிருந்தா தானே என்ற மனசாட்சி கேள்வி எழுப்பவும், அவசரமாய் பணிக்கு கிளம்பி தற்போது டிவி பத்திரிக்கை என்றதும் உடை மாற்றியிருப்பாள் என்று அவனாகவே யூகித்து கொண்டான்.
வலது ஆள்காட்டி விரலில் நெற்றி வியர்வை வழித்து சுண்டிவிட, மதிமாறன் பார்வை அருகேயிருந்த மாணவிகளையோ செய்தியையோ ஏன் அவர்கள் பேசுவதை கூட செவிமடுக்காமல் அவளையே ஜூம் செய்தது அவன் விழிகள்.
‘இந்த உச்சி வெயில், வியர்வை. போராட்டத்துக்கு பாதுகாப்பு, மாதச்சம்பளம் இதெல்லாம் இவளுக்கு தேவையா.? அவ அப்பா சாகித்ய அகாடமி விருது வாங்கிய பிரபல எழுத்தாளர். அக்கா கணவனோ பிரபல ஸ்டைலிஷ் ஸ்டார் ப்ரனித். இருவரிடமே கையெழுத்து வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும். இவ இப்படி கஷ்டப்படவேண்டும் என்று தலைவிதி அல்ல.
ஆனால் கஷ்டப்படுகின்றால்… எல்லாம் ஆசை கனவு என்ற ஒன்றை தலையில் தூக்கி வைத்து சொந்த காலில் நிற்கும், பிடித்த வேலை என்றதற்காக.
சிலருக்கு தான் பணத்தை விட தன் எண்ணத்தின் ஆசை பணியை செய்ய பிடிக்கும். அவர்களுக்கு வாய்ப்பும் அமையும்.
அவள் பிடித்ததை செய்கின்றாள். அவளுக்கு தன்னை பிடித்திருக்கிறது என்றதும் உதடு விரிந்தது.
முன்பு சில சமயம் அக்காவிற்காக மாமாவிற்காக என்று திருமணமா? என்ற கோபம் வரும். அப்பொழுது எல்லாம் மதுவந்தி இடத்தில் யாரையும் பொருத்தி பார்க்க பிடிக்காது. ஆனால் என்று நற்பவியை விரும்ப ஆரம்பித்தானோ அன்றிலிருந்து மதுவந்தி இடத்தில் பாந்தமாய் பொருந்தியவளை ஏற்கவும் சிறிதாய் மனம் சண்டித்தனம் செய்கின்றது.
ஒரு மனம் பிடித்திருக்கின்றது என்று ஆசை வைத்தால், மறுமனமோ மதுவந்தியோடு வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவு தானா? ஐந்து வருடத்தில் மனைவியை மறந்திட சொல்லி நற்பவியை நாடுகின்றதா உன் மனம். இல்லை…. உன் உடல் தேவை ஒரு பெண்ணை நாடுகின்றதா என்று கேலி செய்ய நற்பவியை தவிர்க்கவே துடித்தான்.
இதை காதலா காமமா என்ற உச்சப்பட்ச வேதனையில் வெம்பினான்.
அவனுக்கே தெரியும் நற்பவி தவிர வேறொருத்தியிடம் மனம் அலைப்பாய்ந்திருக்காதென்று. ஏனோ தவிர்க்க துடிக்கின்றான். டிவியில் திரும்ப திரும்ப மறு ஒளிபரப்பு போடவும் டிவியை அணைத்து விட்டான்.
அன்றைய தினம் சரத் வரமாட்டான் என்றதால் அது அந்தளவு பாதிக்கவில்லை.
மேலே ஏசியறை தனிப்பட்டு குடும்பமாய் உணவருந்த ஏற்பாடு செய்த இடத்திலும் கீழேயும், மற்றும் கிச்சன் அறை என்று கண்கானித்து கொண்டான்.
ரெஸ்ட்ரூம் கூட வருபவர்களுக்கு வசதியாக உள்ளதாயென்று ஆராய்ந்து கொண்டான்.
புத்தக ரேக்குகளை பார்த்து வந்தவன் அங்கே கருத்துகள் பகுதி என்ற குடுவையை கண்டு மகிழ்ச்சியாய் அந்த பேப்பரை எடுத்து அவனுக்கான அறையில் சென்று வாசிக்க ஆரம்பித்தான்.
பெரும்பாலும் இந்த புத்தக வாசிப்பு பிடித்திருப்பதாகவும் பயனுள்ளதாகவும், ஈர்க்கப்படுவதாக இருந்தது. சிறுவயதில் வாசித்தது தற்போது இங்கே வந்து வாசிக்க ஆரம்பித்ததும் தனக்கு பழைய நினைவுகள் தோன்றுவதாக சிலர் எழுதியிருந்தனர்.
வயதானவர்கள் தங்கள் கால எழுத்தாளரின் புத்தகம் படித்து மகிழ்ந்ததாக வாழ்த்தினார்கள். இப்படி வாசித்து கொண்டே வந்தவனின் கையில் அந்த கடிதமும் கிடைத்தது.
‘என்னிடம் இதுவரை எட்டு பேர் காதலை வெளிப்படுத்தி இருக்காங்க. அவங்க மேல எல்லாம் எந்த சின்ன எண்ணமும் வந்ததில்லை.
என் மனசுல லேசா சலனம் தந்தது நீ தான். கண்சிமிட்டியதால இல்லை. உன் மனைவிக்காக நீ தனி மனிதனா ஜஸ்டிஸ் கொடுத்ததுக்காக. போலீஸ்காரி கொலையாளியை பாராட்டறானு தோனுதா…
வண்டியை ஒட்டறதுக்கு லைசன்ஸ் வேண்டும்னு அவசியமில்லை. யார் வேண்டுமென்றாலும் ஓட்டலாம்.
என்னை பொறுத்தவரை காக்கி சட்டை நியாயத்தை தட்டிக்கேட்க லைசன்ஸ் மாதிரி. நீ லைசன்ஸ் இல்லாம வண்டி ஓட்டின அவ்ளோ தான்.
தப்பை தண்டிச்ச காதல் வந்துடுச்சுனு சொல்ல மாட்டேன் மாறா. அதே போல கண் சிமிட்டியதும் காதல் வந்துடுச்சுனு ஈர்ப்பை வச்சும் உன்னை தேடி வரலை. நீ மனசுல உறுத்திட்டு இருந்த அது உண்மை.
உன்னை மறுபடியும் இங்க ஒரு காலேஜ்ல ஒரு பொண்ணிடம் பேசினப்ப பார்த்தேன். என்னடா இது மாறன் எங்க இங்க.? அந்த பொண்ணு யாருனு ஆர்வமா இருந்தேன். நீ போனதும் விசாரிச்சேன். ஐஏஎஸ் படிக்க ஆசையா இருக்கு ஆனா பணமில்லைனு சொல்லி பேட்டி கொடுத்த பொண்ணை தேடி போய் படிக்க வைக்கிற பாரு. அங்க நின்னுட்டடா மாறா.
உன்னை தேடி உன் பின்னாலயே வரவச்சிடுச்சு. மேபீ.. இது உன் ஆட்டிடியூட்ல விழுந்தது தான். ஏற்கனவே என் மனசுல சலனம் தந்தியா… அதோட இதெல்லாம் சேர்ந்து உனக்கு நல்ல பார்ட்னரா இருக்கணும்னு பேராசையே வந்துடுச்சு.
லவ் யூ மாறா. மாறா… இவ்ளோ எழுதிட்டு இது யாரு எழுதினானு முழிச்சே. கன் எடுத்து நெத்தில வச்சி போட்டு தள்ளிடுவேன். இது நான் தான்….
அப்பறம் இந்த லெட்டர் புக்ஸ் எதுக்கு யூஸ் ஆகுதோ இல்லையோ… உன்னிடம் நேர்ல பேசா தயங்கியதை இதுல சொல்லிட்டேன். பை மாறா குயிக்கா உன் மனதை கொடுத்துட்டு என் மனதை திருடிட்டு போ’ என்று கூறவும் மென்னகையோடு அதனை மடித்து தனது மேல் சட்டை பாக்கெட்டில் வைத்தான்.
டிவியில் அவளை மீண்டும் காண இயலுமா என்று போடவும் அங்கே பெரும் கலவரத்தோடு அரசியல் ஆட்களுக்கும், மாணவர்களுக்கும் கைகலப்பு உருவாகியிருந்தது.
என்ன இது? காலையில அமைதியா இருந்தது. அதுக்குள்ள இப்படி கலவரம் நடக்குது. அங்க அவ வேற இருக்காளே!
கடவுளே சின்னதா அவமேல ஆசைப்படக்கூடாதா. உடனே என்னை சோதிச்சு பார்க்கற.’ என்று கண்கள் கலங்கி இடத்தை விட்டு “வடிவேல் அண்ணா பார்த்துக்கோங்க” என்று ஓடினான்.
மாறன் வந்து சேரும் நேரம் ஏதோவொரு ஆட்டோ எரிந்து கொண்டிருந்தது.
ஒரு பெண் இரத்த வெள்ளத்தில் மிதந்திருக்க புஜத்தில் வெட்டு வாங்கி நற்பவி அருகேயிருந்தாள்.
மாறனை வரவிடாமல் போலீஸ் தடுக்க, அவனோ “நற்பவி” என்று கத்தினான்.
போலீஸ் சைரன் ஒலியெழுப்பி இரண்டு கார் வந்து நின்றது. அதிலிருந்து கமிஷனர் வரவும் சரியாய் மாறன் நற்பவி என்று கலங்கவும் சரியாக இருந்தது.
கமிஷனர் தர்ஷன் வந்ததும் ஒரு காவலரிடம் இருந்து லத்தியை வாங்கி, அங்கிருந்த கறை படிந்த வேட்டியில் பலமாய் அடிகளை வழங்கினார்.
கால் மணி நேரம் கழிய, மாணவர் தனியாக, கறை வேட்டி தனியாக ஒதுங்க, லத்தியை கீழே வீசினார்.
“குச்சியை வச்சி குரங்கை மிரட்டுற மாதிரி பயமுறுத்தினா என்ன அர்த்தம்.
கவர்மெண்ட் பிராப்பர்ட் எரிக்கற… எரிஞ்ச பொருளுக்கு எல்லாம் உங்கப்பன் காசு தருவானா?” என்று கறை வேட்டி ஆட்களிடம் கத்தினான்.
மாணவரை பார்த்து திரும்பி “டேய் படிக்க வந்திங்க உங்கள்ல ஒருத்தனை அடிச்சாங்க. ஒற்றுமையா போராட்டம் பண்ணினிங்க. இப்ப என்னாச்சு.. ஏன் அடிதடி?” என்று கத்தவும், “சார் அவங்க தான்” என்று மாணவர்கள் கத்தவும், “ஸ்டாப்… அடிப்பட்ட பொண்ணு சொல்லட்டும்” என்று கூற, “சார் என்னனு தெரியலை அமைதியா தான் போராட்டம் பண்ணினோம். சட்டுனு யாரோ எங்க மேல யாரோ தண்ணி ஊத்தினாங்க. பசங்களுக்கு லேடிஸை இப்படி பண்ணறாங்கன்னதும் கோபம் வந்துடுச்சு. அப்பவும் சைலண்டா இருந்தாங்க. ஆனா போலீஸ் தான் கல்லு அடிச்சதா சொல்லவும் சட்டுனு எங்கிருந்தோ அரசியல் கட்சி வந்துடுச்சு சார்.
போலீஸுக்கும் மாணவர்களை அடக்கறதா, அரசியல் தொண்டர்களை அடக்கறதானு தெரியலை. இரண்டு பேரையும் ஒழுங்குப்படுத்தினாங்க.
ஆனாலும் அரசியல் கட்சி ஆட்கள் வேண்டுமின்னே எங்கப்பக்கம் வந்து அருவாளை வீசறாங்க. அதோ அந்த அக்கா தான் முடிஞ்சவரை தடுத்தாங்க. அப்ப கூட எங்க காலேஜ் பொண்ணு ஒருத்திக்கு கையில வெட்டு விழுந்தது. இதோ இவங்களுக்கும் வெட்டிட்டாங்க” என்று நற்பவியை சுட்டிக்காட்டினாள்.
“இங்க இருக்கறவங்கள்ல இப்ப அரஸ்ட் பண்ணிருக்கு. யாரு வெட்டினா என்பதை செய்தியை லைவ்ல எடுத்த பதிவுல பார்த்து தண்டனை கிடைக்கும் மா. இப்ப போராட்டம் நிறுத்திட்டு வீட்டுக்கு போங்க. உங்க பிரெண்ட் உயிர் பிழைச்சி நல்லா ஆயிட்டார். அவரே தான் மன்னிப்பு கேட்டுட்டாங்க பிரச்சனை வேண்டாம்னு சொன்னார்” என்று வீடியோ கால் போட்டு நீட்ட, மாணவர்கள் போராட்டத்தை விடுத்து செல்வதாக உறுதி மொழிந்தனர்.
கறை வேட்டிகளில் சிலரை மட்டும் காவல்துறை வண்டியில் ஏற்றி சென்றனர்.
ஒருவழியாய் நற்பவியை நெருங்கி சந்திக்க செல்லும் நேரம், “ப்ரவுட் ஆப் யூ டியர்.” என்று தர்ஷன் கைகுலுக்கி, “உங்க அக்கா நன்விழியை பார்த்த மாதிரி இருக்கு கீப் இட் அப்” என்று புகழ்ந்திட, நற்பவியோ “தேங்க்யூ அங்கிள்” என்றவள் மாறனை கண்டு தர்மசங்கடத்தில் கையை பிசைந்தாள்.
“முதல்ல ட்ரீட்மெண்ட் பாரு” என்று தர்ஷன் மருத்துவவூர்தி பக்கம் கையை சுட்டிக்காட்டினான்.
நற்பவியும் மாறனை காணாதது போல மாணவி ஒருத்தியோடு மருத்துவ ஊர்தியில் ஏறி பயணப்பட்டாள்.
-தொடரும்.
Ivlo aasaiya manasula vachitu nee irukiye mathi kavala padatha first life mari intha life agathu pavi police ah irunthalum ava oru ponnu nee madhu va pathukittathu vachi una virumbura pirinjiko
Super super. Narpavi excellent. Intresting
Super super super super super super super super super super super super super