இதயத்திருடா-21
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
நித்திஷோ பெரிய ஜோக்கை கேட்டது போல சிரித்தார்.
“கொல்லறதுனா என்ன? சமைக்கிறது போல ஒரு மணி நேரத்துல செய்யறதுனு நினைச்சியா. அதை விடு… முதல்ல உன்னால யார் செய்தானு தேடி கண்டுபிடிக்க முடியுமா? டிப்ளமோ கேட்டரிங் கோர்ஸ் புட் டெக்ரேஷன், இப்ப ஹோட்டல் இதை தவிர என்ன தெரியும் உனக்கு? மனுஷங்களோட தந்திர புத்தியாவது தெரியுமா? அக்கா, மாமா, அக்கா பொண்ணு, கிட்சன் இப்படி தானே உன்னோட வட்டம் இருக்கும்” என்றார்.
இம்முறை மாறன் உதடு வளைந்தது. ஆனாலும் நித்திஷ்வாசுதேவனை பேச வைத்து வேடிக்கை பார்த்தான்.
“ஒரு குறுகிய வட்டத்துல இருந்துட்டு, கல்யாணம் என்றதே அக்காவுக்கு பிடிச்சா போதும் எனக்கெதுக்கு பிடிக்கணும்.
அந்த கமிட்மெண்ட்ல போனாலே மத்தது தானா நடக்கும் குழந்தை குட்டினு தள்ளிடும்னு பேசினவன் தானே நீ.” என்றதும் மாறன் முகம் உடனே கறுத்தது.
“சார்… நான் இப்ப அப்படி சிந்திக்கலை.” என்று மறுத்தான்.
“போதும்டா… இப்ப மட்டும் எங்கிருந்து வந்தது மாற்றம்.” என்றார் கோபமாக.
“என் மேல இருக்கற கோபத்தை எல்லாம் கொட்டுங்க சார். பொறுமையா பதில் சொல்லறேன்.
உங்களோட பழகின மதிமாறன் அப்ப அந்தளவு முதிர்ச்சி இல்லாதவன். நான் என்ன பேசினேன்னும் இப்ப அது தப்புணும் எனக்கு தெரியும்” என்றான் மாறன்.
ப்ரனித் எப்படி ஒரு விதத்தில் ஒரே வசிப்பிடத்தில் எழுத்து மூலமாக வசீகரிக்கப்பட்டு, நடிப்பு துறையில் நண்பனாய் மாறினானோ, அது போல சமையல் துறையில் நித்திஷ் சந்தித்தவனே மதிமாறன்.
நித்திஷின் மனைவி வினோதினி கேன்சரினால் உடல்நிலை மோசமாகி இறந்ததும், முழுவதும் நித்திஷின் சமையல் தான்.
உப்பை அள்ளி கொட்டியும், கருகி போனதுமாய், சில நேரம் சல்லென்ற நீராய் குழம்பு வைத்த நித்திஷ் இருமகளுக்கு சமைத்தார்.
என்றோ ஒரு நாளென்றால் பரவாயில்லை. தினமும் சமையல் இப்படியென்றால்? அடுத்து தன்னோடவே மகள்கள் இருக்கவும் அவர்கள் படிப்பு வேலை என்று அடுத்த கட்டம் செல்லும் கட்டாயத்தினாலும், புத்தகம் பார்த்து கற்றுக்கொள்வதை விட, உணவை எப்படி சமைக்கயென டிப்ளமோ கோர்ஸ் சேர்ந்தார்.
அங்கு தான் சகமாணவனாக மதிமாறனை சந்தித்தது.
கல்லூரியில் முதல் வருடம் சென்றவன் பின்னர் அங்கிருந்து நின்று விட்டு டிப்ளமோ சேர்ந்தவனாக கண்ணில்பட்டான்.
ஒரே குழுவில் அதிகமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது.
உணவு தயாரிப்பில் கூட்டு சேர்ந்து கைப்பக்குவத்தை காண்பித்தாலும் மனதின் எண்ணங்களை வெவ்வேறாக இருந்தது வயதும் பெரிதாய் வித்தியாசத்தை காட்டியது.
அக்காவை தவிர பெண் வாசமறியாத மதிமாறனுக்கு ஆண் வர்க்கத்தோடு மட்டும் பழகும் நேரமெல்லாம், “இந்த சமையலை தான் செய்துட்டு ஓவரா சீன் போடறாங்க. அவங்களை விட நாம நல்லாவே செய்திடறோம்” என்ற எண்ணம் உகுந்தது வாலிப வயதில்.
பெண்கள் திருமணம் குழந்தை இதற்கு மட்டும் தான் கடவுள் படைத்தது போலவும் ஆண்கள் பெரும்பாலும் அனைத்தும் சாதிக்கும் வல்லமை பெற்றவராக கருதினான்.
எழுத்தாளர் நித்திஷ்வாசுதேவனோ எதிர்வாதம் கொண்டவர். தோழியான நன்விழிவெற்றியை நேரில் கண்டவராயிற்றே.
“ஒரு பொண்ணு படிச்சி அவளும் வேலைக்கு போனா ‘சீ ஆண்கள் செய்வதை பெண் நானும் செய்வேன் என்ற ஏளனம் அவ வாயிலயும் வரும்” என்பார்.
இப்படியே வாதங்கள் தொடர்ந்தாலும் வயது வித்தியாசம் மறந்து நண்பர்களாய் பழக ஆரம்பித்தார்கள் இவர்கள்.
ஒரு கட்டத்தில் படிப்பு முடிய, அக்கா மகளை மணக்க போகும் எண்ணத்தை வெளியிட்டான்.
படிக்கிற பிள்ளையை போய் கல்யாணமா? என்ற எண்ணம் வந்தது. “படிக்க வச்சி பாரு. நீ தான் டிகிரி வாங்கலை.” என்றார். மதிமாறன் டிப்ளோமா வைத்து மேற்கொண்டும் கோர்ஸ் பண்ணுவேன் சார்.” என்றான்.
“எப்படியும் கல்யாணம் குழந்தை அதுக்கு பிறகு இரண்டையும் சமாளிக்க முடியாம வீட்ல தான் இருப்பா.
அதுக்கு எதுக்கு ஐ.ஏ.எஸ் படிக்க வைக்க?” என்றான்.
“ஐ.ஏ.எஸ் ஆ..?” என்று எழுத்தாளர் வியக்க “ஆமா சார் அதான் படிக்க கேட்டா.” என்று இலகுவாய் கூறினான்.
“ஆர்வமா இருந்தா படிக்க வைப்பா. கல்யாணம் குழந்தை என்றதை தாண்டி, நீயே புதுவழி கொடுத்து பாரு. நீ கொடுக்குற சப்போர்ட்ல தலைப்பு செய்தியா கூட அவப்பெயர் வெளிவரும் டேலண்ட் இருந்தா.” என்றார்.
“நாட் இன்ட்ரஸ்ட் சார். பொண்ணுங்க எல்லாம் முதல்ல ஆர்வமா வரலாம். ஆனா கடைசில நாலு சுவர்ல மாட்டிக்கிட்டு முழிப்பாங்க. வேஸ்டாப் டைம்.” என்றதை நித்திஷ் மறுத்தார்.
“நீ ஏன் மாத்தக்கூடாது.” என்றதற்கு, புரியாமல் பார்த்தான்.
“உனக்கு அக்கா மகள் என்றதை தாண்டி அந்த பொண்ணோட ஆசை கனவை வெற்றி பெற வைக்கணும் தோணலைனா? அப்படின்னா நீ மதுவை அக்காவுக்காக நன்றிக்கடனுக்காக கல்யாணம் பண்ணறனு அர்த்தம். இந்த திருமணம் கட்டிலில் புரளுமே தவிர காதலா வெளிப்படாது” என்றதும்.
“எல்லாருமே காதலிக்கலைனா கூட கல்யாணம் பண்ணி கட்டிலில் புரண்டு ஒரு குழந்தையை பெத்தடுக்க தான் பிராசஸ் நடக்கும் சார். மற்ற இந்த காதல் எல்லாம் நம்பிக்கையில்லை.” என்றான் நண்பனாக.
இரு பெண்களை பெற்றவரான நித்திஷுக்கு கோபமே வந்தது. எழுத்தாளன் வேறு சிந்தனை மாறுபட்டு பேச வாதங்கள் அதிகரித்தது. மதிமாறனின் எண்ணத்தில் இது நாள் வரை பிரமித்த பெண்கள் எல்லாம் புத்தகத்தில் வாசித்தவை அவ்வளவே.
நேரில் யாரையும் கண்டதில்லை அதனால் இஷ்டத்திற்கு உளறினான்.
நித்திஷ் அதன்பின் வாலிபனான மதிமாறனிடம் பேசுவதில்லை என்று அகன்று விட்டார்.
மதிமாறன் மட்டும் கேட்ரிங்கில் மேன்மேலும் படிக்க ஆரம்பித்தான்.
சில நேரம் நித்திஷ்வாசுதேவனை மிஸ் பண்ணும் உணர்வில் இருப்பான். தோழனாக போனதால் இருக்கலாம். அதனால் நித்திஷின் வார்த்தைக்கு மதிப்பளித்து, மதுவந்தியை அப்பொழுது படிக்க வைக்க ஆசைப்பட்டான்.
அவள் மேல் எந்த காதல் உணர்வும் வராததால் ‘படிக்கிறப்ப லவ் பண்ணி யாராயாவது பிடிச்சாலும் சொல்லு மேரேஜ் பண்ணி வைக்கறேன்’னு கூறினான்.
மதுவந்தி தலையாட்டினாளே தவிர யாரையும் காதலிக்க அவளுக்கு தோன்றவில்லை. அவள் ஏற்கனவே மதிமாறனை விரும்பினாள்.
மதிமாறன் அதன் பின் கேட்டரிங் படித்துக் கொண்டே சம்பளம் வாங்கும் நேரம் அக்காவின் கட்டாயத்தில் கரசில் பெயருக்கு ஒரு டிகிரியை போட்டான். அதன் விளைவு படிக்க ஆரம்பித்த போது வெவ்வேறு புத்தகங்களை அலசினான்.
புத்தகங்கள் தாளை மட்டும் திருப்ப வைக்காது. மனதின் எண்ணங்களையும் புரட்டி போடும். நமது ஆழ்மனதின் ஆணித்தரமான எண்ணங்களை கூட அசைத்து உலுக்கி சரியான பூவை நட்டு வைக்கும்.
அப்படி தான் பெண்களும் பயின்றால் சுவற்றுக்குள் மட்டும் அடைப்பட்டு இருக்க மாட்டார்கள். சிறகை விரிக்கும் பறவைக்கு சுவரையும் உடைப்பெடுத்து பறக்கும் வல்லமை உருவாகுமென நம்பினான்.
அதற்கெற்றது போல மதுவந்தி ஐ.ஏ.எஸ் என்று வந்து ஆளுமையோடு செயல்படும் போது பிரம்மிபாய் உணர்ந்தான். அவளோ “நீ இருக்கற தைரியம் தான் மாமா. என்னை கெத்தா எந்த முடிவும் செய்ய வைக்குது. நீ தான் மாமா என் பலம் பலவீனம்” என்று காதலோடு பேச, இரண்டு உடல்கள் உராய்வை விட மனதின் ஆதிக்கத்திற்கு வலிமையுண்டு என்று உணர்ந்தான். அதுவும் தன் சிசுவை சுமந்தவளுக்கு அனைத்து பணிவிடையும் செய்தான்.
‘நித்திஷ் சாரை பார்த்தா வாதிட்டத்துக்கு சாரி கேட்கணும். அவர் மட்டும் என்னை பார்த்தா என்னோட மாற்றத்தை ரொம்ப விரும்புவார்’ என்று எண்ணினான்.
ஆனால் நித்திஷ் அப்பொழுது ‘எழுத்தாளன் என்ற அடையாளத்தோடும் சினிமா உலகம் போற்றும் நடிகன் ப்ரனித்தின் மாமனார் என்ற அடையாளமும் சேர, உயர்ந்த இடத்தில் சென்றிருந்தார்.
இனி பார்த்து பேசுவது அபூர்வமானது என்று கடந்து விட்டான்.
நற்பவியை முதல் முதலில் ஊரில் பார்த்த முதல் நாள், போலீஸ் பெண்ணாக வந்தது மகிழ்ந்தான். ஆனாலும் அவன் செயலை அறிந்திட மாட்டாளென எண்ணினான்.
நித்திஷ் மகளென அறிந்ததும் அவளுக்குண்டான மரியாதையையும் தேவையையும் பூர்த்தி செய்து வந்தான். ஒரு கட்டத்தில் அவள் உயிரை விட கடமையை கண்டவனுக்கு மதுவந்தியினை போல இருப்பதை அறிந்ததும் பெருமையாய் பார்த்து மதிப்பளித்தான்.
நற்பவியின் கண்ணில் தனக்கான காதல் உணர்வை கண்டதும், அவள் அவனை தவிர்ப்பதும், பேச தயங்குவதும், இது சரியல்ல என்று உணர்ந்தான்.
நித்திஷ்வாசுதேவனின் மகளுக்கு பெண் அடக்குமுறை காட்டினாலோ, ஆண்வர்க்கத்தின் திமிரை பறைச்சாற்றினாலோ, தன்னால் கோபம் வந்து வெறுப்பு தோன்றுமென, ‘ஒரு கொலையே செய்தாலும் நான் தப்பிச்சிட்டேன்’ என்ற கர்வமாய் மொழிந்து கண்சிமிட்டுதலோடு வந்தான்.
நற்பவி சென்னையில் தேடி வந்ததும், இதென்ன விட்டகுறை தொட்டக்குறை தொடருதே என்ற அச்சம் உருவானது.
‘நித்திஷ் சார் அநியாயத்துக்கு இப்படி ஒரு தைரியசாலியான பொண்ணுங்களை வளர்க்க கூடாது. பன்னிரெண்டு மணிவரை ரோட்டுல சுத்தறாளே.’ என்ற எண்ணம் உருவானது. மேலும் அவளை பிடிக்கவும் ஆரம்பித்தது.
தப்பி ஓடினாலும் வசமாய் நற்பவியின் அன்பில் மாட்டிக் கொண்டான்.
நித்திஷிற்கு தர்ஷன்-நற்பவி இருவரும் மதிமாறனின் போட்டோவையும், பெயரையும் அவனை பற்றி கூறவுமே, மதுவந்தி இறந்து விட்டதை அறிந்தவர், அவன் எல்லாம் பெண்ணை மதிக்க தெரியாதவன். இவனுக்கு நற்பவியை கட்டி வைக்க வேண்டுமா? அதுவும் இரண்டாதாரமாக என்ற கோபம் அதிகமாகவே இருந்தது.
ஆனால் நற்பவியின் பிடிவாதம் கண்டதும், இவள் எப்படியும் மதிமாறனை மாற்றுவாள் என்ற எண்ணம் தோன்றவும், தற்போது அவன் யாருமற்ற நிலையில் தோழமையாய் பேச வந்துவிட்டார்.
போதாதற்கு அவன் ஒரு பெண்ணை ஐ.ஏ.எஸ் படிக்க வைக்கும் குட்டும் நற்பவி மூலம் அறிந்தார்.
“சார்… நான் பவியை விரும்பறேன். ஆத்மார்த்தமா… கட்டிப்பிடிச்சதை வச்சியோ, இன்னமும் பழைய மாறனாவே நினைக்காதிங்க. அனுபவம் மனுஷனை முதிர்ச்சியாக்குது.
உங்களிடம் வாதிட்ட பழைய மாறனா இருந்தா மதுவந்தி ஐ.ஏ.எஸ்னு ஒருத்தியை உருவாக்கி இந்த உலகத்துல அவளை பறிகொடுத்து இருக்க மாட்டேன்.
வெறும் கட்டில் குழந்தை போதும்னா இந்நேரம் வேற எவளையாவது மறுமணம் செய்துயிருப்பேன். ஐந்து வருஷமா தனிமரமா என்னையே தொலைச்சுட்டு நிற்க மாட்டேன்.
அதெல்லாம் விட என் காதலை நற்பவியிடம் உணர்ந்துட்டேன். இப்ப அவளோட வாழணும்னு ஆசையாயிருக்கு சார் பிரிக்காதிங்க. எங்க அக்கா மாமாவோட ஆசையும் அதுதான்.” என்று முடித்தான். அக்கா மாமாவின் கடைசி நொடிகள் நற்பவியை தானே மகளாக, தனக்கு மனைவியாக கண்டார்கள்.
“நீ இரண்டு பேரை படிக்க வைக்கிறேன்னு என் மக நற்பவி சொன்னதுமே, உன் மேல கோபம் போச்சு டா. என்ன பார்க்குற.. நேத்து தான் சொன்னா.
எல்லாரும் பிறந்ததும் காரல் மார்க்ஸாவோ, பெரியாராகவோ இருக்க மாட்டாங்க. நீ மாறிட்டனு நேத்தே தெரிஞ்சுக்கிட்டேன். அதனால தான் என்னோட குக்கிங் கிளாஸ்மெட்டுக்கு நானே குக் பண்ணி கொண்டு வந்தேன்.” என்றவர் மதிமாறனை நட்புரீதியாக அணைத்தார்.
“போங்க சார் பயமுறுத்தறிட்டிங்க.” என்று நெகிழ்ந்தான்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் மக அவளோட கெரியரை எப்பவும் போல பார்ப்பா. அவ விருப்பபட்டவனே அவளிடம் ஒப்படைக்கிறேன்.” என்று பேச நற்பவி வேகமாய் தந்தை சாப்பாடு கொண்டு சென்றதை அறிந்து, மாறனை காயப்படுத்திவிட்டால் என்று அஞ்சி, ஆட்டோவில் பயணித்து வந்து சேர்ந்து அனைத்தையும் கேட்டு நின்றாள்.
தந்தையை ஓடி சென்று அணைத்து கொள்ள, அவளின் தலையை கோதி நெற்றியில் முத்தமிட்டார்.
“ஓகே மதிமாறன்… இனி வேறெதும் கவலைப்படாதே. நற்பவி கேஸ் டீடெயில் கண்டுபிடிச்சி, உங்களோட அக்கா மாமாவை அழிச்சவனை தண்டிப்பா. நீ எந்தவித கோபமும் படாதே.” என்றதும் நற்பவியோ “எனக்கு முன்ன உங்க மாப்பிள்ளை கண்டுபிடிக்க முயற்சிப்பார்ப்பா… ஏன்னா சமையலோட அவருக்கு அந்த வெறி இருக்கு. கொலையாளியை தேடறதுல” என்றாள் இருபொருளாய்.
நித்திஷ் புரியாமல் பார்க்க, “ஒன்னுமில்லைப்பா.” என்றதும் மதிமாறன் பார்வை ‘என்னை நீ அறிவாய்… உன்னை நான் அறிவேன்.’ என்பது போல இருவரும் நின்றனர்.
“சரிம்மா… பேசிட்டு வா… நான் கார்ல இருக்கேன்” என்று வெளியேறினார்.
மாறனிடம் “அங்கிருந்தா கொலைக்காரனை தேட கஷ்டமாயிருக்கும்னு தனியா வந்திருக்கியா மாறா” என்றாள் நற்பவி கோபமாய்.
“கண்டிப்பா.” என்றான் மதிமாறன்.
“போனமுறை நீ செய்த கொலைக்கு எந்தவிதமான ஆதாரம் கிடைக்கலை மாறா.
இந்த முறை ஏதாவது முட்டாள்தனமா செய்து, ஆதாரம் கிடைச்சி நீ மாட்டினா… நானே விலங்கிடுற சூழ்நிலை வரலாம் மாறா… ப்ளிஸ் மாறா… நான் கொலையாளியை தண்டிப்பேன். நீ எதுவும் செய்துடாதே. எல்லா நேரமும் சூழ்நிலை உனக்கு சாதகமா இருக்காது.” என்று கோரிக்கை வைத்தாள்
“மாமா வெயிட் பண்ணறார் போ. வாழணும்னு விருப்பம் இல்லாதப்பவே கொலையை சாமர்த்தியமா பண்ணினவன் நான். இப்ப உன்னோட வாழணும்னு ஆசை கடலளவு இருக்கு. எது எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும்.
நீ தானே சொன்ன.. தப்பை தட்டிக் கேட்க உனக்கு போலீஸ் என்ற லைசன்ஸ். எனக்கு அதுயில்லை. யாருவேண்டுமென்றாலும் தப்பை தட்டிக்கேட்கலாமெ’ன்ற அவளின் உபதேசத்தை அவளுக்கே திருப்பி கொடுத்தான்.
“முதல்ல லாக்கப் டெத்துக்கு மனித உரிமைக்கு என்ன பதில் சொல்லனு யோசிச்சு வைச்சிருக்கிங்கனு பாருங்க” என்று கதவை நீட்டி வெளியேறு என்பதாய் காண்பித்தான்.
மீண்டும் நற்பவி மாறனின் திருடன் போலீஸ் விளையாட்டு ஆரம்பமானது.
- தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Super super super semma
Wow nice. Super super intresting
Ithu nalla iruke ivanga rendu perum already therinja vangala intha mari pechi nala tha pidikama irunthucha nithish ipo purinji ok sollitaru super eni sikram pavi avana kandu pidichi arrest panni mathi mrg panikanum