Skip to content
Home » இதயத்திருடா-25

இதயத்திருடா-25

இதயத்திருடா-25

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

    நற்பவி தலையில் கைவைத்து மதிமாறனை எந்த வகையில் சேர்த்து கொள்வதென புரியாமல் குழம்பினாள்.

      “டின்னர் சாப்பிடவாம்மா?” என்று தந்தை நித்திஷ் கூப்பிடவும் நிமிர்ந்தவள், “அப்பா… மதிமாறன் எப்படிப்பட்டவர் பா?” என்று கதிகலங்கி கேட்டாள். மாறனின் குணம் இவள் சொன்னால் எடுபடவில்லையே. மதிமாறனும் தந்தையும் நண்பர்கள் என்று அறிந்தவளாயிற்றே. ஏதேனும் தெரிந்தால் அவ்வழியில் அணுக நினைத்தாள். 

      “என்னடா இது? என் மக அவனை பத்தி, எல்லாம் தெரிந்து தான் காதலிச்சானு பார்த்தேன்.” என்று ஆச்சரியமாய் கேட்டு நின்றார்.

    “அப்பா நான் காதலிச்சது உதவி பண்ணுற குணத்தை, அமைதியானவனை, மனைவி இழந்தாலும் தன்னோட கூட்டுக்குள் சுருங்கி வாழ்க்கையை வெறுத்தவனை, அதை மீறி அவரை பிடிக்கும். மதுவந்தி இறந்தப்பிறகு அவர் உடைஞ்சு போயிட்டார். அவரோட குணங்களை அவரே முடக்கிட்டார்.

    நான் அதை தவிர்த்து, வேற சில குணங்களை கேட்டேன். திருமணத்துக்கு முன்னாடி பேட்சுலரா இருந்தப்ப, எப்படியிருந்தார்னு கேட்கறேன்?” என்று  கேட்டாள். 

     “அவன் குணமா…? எனக்கு தெரிந்தவரை கேட்ரிங் சொல்லி கொடுத்த இடத்துல, என்னோட பார்ட்னரா போட்டாங்க. அப்ப அந்த செஃப் என்ன சொன்னார் தெரியுமா?
  
    சார் உங்களுக்கு செட்டா போடற பையன், யாரிடமும் மிங்கிள் ஆகமாட்டான். ஏதாவது ஆர்கியூமெண்ட் பண்ணி, யாரிடமாவது சண்டை போட்டுடறான், கை நீட்டிடறான். நீங்க வயசுல பெரியவர் அதனால முடிஞ்சளவு பேச்சை தவிர்த்திடுங்கனு சொன்னார். யாரிடமும் மல்லுக்கு போவான்னு சொன்னார்.
   
    ஒருமுறை அவனே டெகரேட் பண்ண வச்சிருந்த பழங்களை காய்கறியை எதிர் டீம் ஏடாகூடமா அழுத்திட்டு கட் பண்ண முடியாத வகையில வச்சிட்டாங்க. உடனே அவன் அவங்க டீம்ல இருந்த டெகரேட் பண்ணின புட் முதல் கொண்டு ஆக்ரோஷமா கொட்டி கவிழ்த்துட்டான்.

    கேட்டதுக்கு என்னோடதை பாழ் பண்ணினா.. நான் டபுள் மடங்கா பனிஷ் பண்ணுவேன்னு சொல்லிட்டான்.” என்றதும் நற்பவி அதிர்ந்தாள்.
 
    பழிக்கு பழி என்பது இரத்தத்தில் ஊறியதா? என்று தோன்றியது.

    “ஆனா நற்பவி…. அதே டீம் ஏதோ பங்ஷன்ல என்னவோ சொதப்பிடுச்சு. அப்ப அந்த டீம்ல ஒருத்தன் ஹெல்ப் பண்ண கேட்க, ஒரு நிமிஷம் கூட தயங்காம போய் அதை சரிப்பண்ணி டேஸ்ட் பெட்டரா கொண்டு வந்துட்டு அந்த இடத்துல நிற்காம வந்துட்டான்.

   யாராயிருந்தாலும் உதவி செய்வான்.” என்று கூறவும் நற்பவியோ இது தான் தெரியுமே. இதுல தானே நான் விழுந்துட்டேன். ஆனா முதல்ல  மாட்டிக்கிட்டேன் என்றது மனம்.

    “ரொம்ப சேட்டைம்மா… எந்த பொண்ணோடவும் பேச மாட்டான். பொண்ணுங்க எல்லாம் வேஸ்ட்டுனு பேசுவான். 

 அக்கா அக்கா அக்கா இது தான் அவன் உலகம். அவன் பேச ஆரம்பிச்சதுனா அவங்க பொண்ணுக்கிட்ட மட்டும் தான்.” என்றதும் ‘அதனால தான் என் உடல் உரசல் அவனை பித்தமடைய வச்சது.’ என்று நினைத்தவள் உதடு புன்னகையில் விரிந்தது.

      “என்னிடம் அடிக்கடி ஆர்கியூமெண்ட் பண்ணுவான். இப்ப அவன் தாட்ஸ் நிறைய மாறியிருக்கு. முன்ன பொண்ணுங்க வேஸ்ட் என்பது போல பேசுவான் சொன்னேன்ல. இப்ப அப்படியில்லை. என் பேச்சை கேட்டு அவ அக்கா பொண்ணை ஐ. ஏ. எஸ் படிக்க வச்சான். பாவம் அந்த பொண்ணுக்கு இவன் கூட வாழ கொடுத்து வைக்கலை. அப்பவே நல்லா சமைப்பான்… ” என்றவர் “முதல்ல சாப்பிட வாம்மா. வீட்டுக்காரரை கல்யாணம் பண்ணிட்டு அவன் கேரக்டரை நீயா தெரிந்துக்கோ.” என்று அழைத்து சென்றார்.

     இங்கு மாறனோ தனியாக உணவை உண்டு, ‘இளங்கோவை பிடிக்கணும். அவன் மூலமா அவனுக்கு தெரிந்ததை வாங்கிட்டு கொல்லணும்.” என்ற வேட்கையோடு பாதி சாப்பிட்டு பவிக்கு போன் செய்ய, அவளோ எங்க போனாலும் இனி குரு இருப்பான். அதை மீறி ஏதாவது பண்ணினா? என்று கேட்க, அவன் சும்மா இருப்பான்னு நினைக்கிறியா?’ என்றது மனம்.

        நற்பவி மாறனை பற்றி யோசித்து யோசித்து நேரம் கழித்து உறங்கினாள்.

         இரவில் அந்த புகை மூட்ட மண்டலத்தில் “அந்த சரத்தை நாம போட்டு தள்ளினோம். ஆனா அவன் கூட்டாளி மணியை எவன் போட்டது.”

    “இந்த மணி தான் இளங்கோ கூட மாறன் வீட்டை காட்டபோனது.” என்று ஒருவன் பவ்வியமாய் கூறினான்.

    “இளங்கோ… எங்க?” என்று மதுவை தொண்டையில் சரித்து விட்டு கடினமான முகத்தோடு கேட்டு வைத்தான் குறுந்தாடி தலைவன்.

    “அவனையும் காணோம் சார். மணி டெத் மேட்டரு கேள்விப்பட்டதும் அவனை தான் தேடியது.” என்றனர்.

    “யோவ் அந்த மதிமாறனோ இல்லை அந்த நற்பவியா யார் மணியை கொன்றாலும் அடுத்த டார்கெட் இளங்கோ தான். அதனால இளங்கோவை பார்த்தா அடுத்த நிமிஷம் போட்டு தள்ளிடுங்க. ஏன்னா இளங்கோ தான் அவங்க அக்கா மாமாவை போட்டு தள்ள போனது. அவனை பிடிச்சி அடுத்த துடுப்பை தேடி மேல மேல வந்துடப் போறானுங்க.” என்று உத்தரவிட்டான்.

     “நற்பவி… அந்த பொண்ணு என்ன கமிஷனரோட சொந்தமா… நாய் மாதிரி காவலுக்கு ஆள் போட்டிருக்கான். எங்க போனாலும் பின்னாடி பாதுகாப்புக்கு வெல் ட்ரையின் போலீஸுங்க மப்டில வர்றானுங்க. அந்த பொண்ணுக்கு அது தெரியுமோ இல்லையோ? ஆனா அவங்களை மீறி அவளை தூக்கி காட்டணும்.” என்று வெறிப்பிடித்தவனாய் பேசினான். குறுந்தாடி.

      “சார் அந்த பொண்ணோட அப்பா பெரிய எழுத்தாளர். அக்கா வீட்டுக்காரர் சினிமா பேமஸ் நடிகன் ப்ரனித் சார். செலிபரெட்டியான வாழ்க்கை, ஆனா இந்த பொண்ணு அதோட ஆசைக்காக தான் இந்த வேலையில சேர்ந்திருக்கா.” என்று அல்லக்கை எடுத்து இயம்பினான்.

    “ஆசை தான் துன்பத்துக்கு காரணம். அந்த பொண்ணு ஆசை அவளோட வாழ்க்கைக்கு அழிவை தரும். என்னிடம் நாசமாகி செத்து போகணும்னு அவ தலையில எழுதியிருக்கும் போல. அவளை கழுகாட்டும் சுத்துங்க. ஒரு நாள் சந்தர்ப்பம் கிடைச்சா தூக்கிடுங்க. தூக்கிட்டா இங்க எங்கயும் வச்சிக்காதிங்க. கடல்ல கப்பலில் ஏத்திடுங்க. அங்க வந்து பார்த்துக்கலாம்” என்று கூறினான் குறுந்தாடி மனிதன்.

     அவன் சென்றதும் பாக்கெட் போடப்பட்டு அதனை ஆட்டோவிலும், மீன்பாடி வண்டியிலும், உணவு டெலிவரி செய்யும் பாக்ஸ், பழுதடைந்த சோபாவை ரீமேக் செய்தது போன்றதிலும், சொகுசு மெத்தையிலும், தனியார் கொரியர் நிறுவனம் பெயர் போட்டு பெரிய பேக் செய்த பொட்டிகள் என்று வரிசையாய், நாளைய அமுலுக்கு வெவ்வேறு ஏரியாவுக்கு சில்லரையாகவும், மொத்த பேக்கெட்டுமாக தயாராகி இருந்தது.

   நமது கண்களுக்கு யாரோ ஒருவருக்கு உணவு எடுத்து செல்லும் டெலிவரி பெட்டியாகவோ, யாரோ ஒருவர் வீட்டுக்கு மெத்தை சோபா செல்வது போன்றதும் மாயம் தந்துவிட்டு அதனுள் போதை கடத்தியபடி சமார்த்தியமாய் எடுத்து சென்றனர்.

      தினமும் அதிகப்படியான ஷேர் ஆட்டோ கடந்து செல்ல அதிலெல்லாம் பொதுவான ஆட்களை ஏற்றிக்கொண்டும் போலீஸுக்கு சந்தேகம் இல்லாமல் அடுத்ததடுத்து செல்லும் இடத்தின் பெயரை சொல்லி மக்களை அழைத்து சென்றனர். ஆட்டோவின் சீட்டு, பின்னால் பெட்டிகள் என்று அது தனியாய் வியாபாரத்திற்கு தயாராகியது.

   குருவோடு மாறன் செல்வதை கண்டு வடிவேல் நற்பவிக்கு போனில் அழைக்கவும், மாறனோ எதிரில் நின்றான்.

     “ஏன்யா… துட்டு வாங்கறது இங்க. விசுவாசம் மட்டும் அந்தம்மாவுக்கா. இந்த அண்ணா என்ன கொலையா பண்ண போறார். அந்தம்மாவுக்கு உதவ தானே தேடறார்.” என்று கூறவும் வடிவேலு இன்று வந்த குருவின் பேச்சை கேட்டு தலை கவிழ்ந்தார்.

    மாறனோ “அண்ணா நான் போறேன் வர்றதை சொல்லுங்க. அது என் நல்லதுக்கு தான். இல்லைனு சொல்லலை. ஆனா இங்கயே இருந்தாலும் என் நிம்மதி இருக்குமா?” என்று பேசவும் வடிவேல் “மன்னிச்சிடுங்க தம்பி அந்த நற்பவி உங்களை கட்டிக்க போற பொண்ணு. உங்களை பாதுகாப்பா பார்த்துக்க கேட்டதும் நல்லதுக்குனு தான்.” என்று தலை சொரிந்தார்.
   
     அதன்பின் வந்த நாட்கள் குருவோடு மாறன் இளங்கோவை தேடினான்.

       ஒரு வாரத்யிற்கு மேலாக மாறனும் அங்கும் இங்கும் குருவை கூட்டிக்கொண்டு அலைந்து திரிந்து எங்கும் தென்படவில்லை. அவன் உஷாராகி வேறு மாநிலம் சென்றிருப்பானோ என்ற ஐயம் உதித்தது.

   தன்னால் எதையும் கண்டறிந்திட முடியவில்லையென்ற வருத்தம் அதிகமாகதாக்க தோற்றுப்போன உணர்வில் மிதந்தான் மாறன்.

    மதுவந்தி இறப்பில் இன்னார் என்று அறிந்து அக்கா மாமாவிற்காக தன் மேல் பழி வராமல் கொலை செய்தவனுக்கு, இன்று யார் என்ன எங்கிருப்பாரென எல்லாம் அறியாது களத்தில் விழிப்பது பித்து கொள்ள வைத்தது.

     தன்னால் கண்டறிய இயலாத என்ற கையாளாகாத தனம் அவனை கொன்று புதைத்தது.
  
   அடுத்த நாள் ஞாயிறுயென்று நித்திஷ் வீட்டிற்கு வர கூறினார். நற்பவியை பார்க்க செல்லும் ஆர்வம் மட்டும் இருந்தது. அக்கா மாமா சடலத்தை வாங்கி இறுதி காரியம் செய்யும் போதெல்லாம் கூட துவளாதவன் அவர்களை அழித்தவனை பிடிக்க இயலாது தற்போது துவண்டபடி வந்தான்.

       நற்பவியோ “என்ன மாறா… ரொம்ப சோர்வா இருக்கிங்க. பேசாம கடையை பார்த்துக்கிட்டு நிம்மதியா இருக்கலாம். கொலையாளியை தேடறது எல்லாம் எல்லா நேரமும் ஒர்க்கவுட் ஆகாது.” என்று மெதுவாய் கூறவும் அவளின் முகம் மகிழ்ச்சியில் திளைப்பதில் கண்டு மெதுவாய் சாப்பிட்டான்.

      நித்திஷ் பேசிக்கொண்டு இருக்க பதில் தந்தவன் நன்விழியை ஏறிட்டான்.

     அவளின் அன்னை பற்றி குரு கூறியதை அறிந்ததிலிருந்து அவளின் இழப்பு குருமஹா இவர்களின் வாழ்க்கை என்று வாழ்க்கையின் விசித்திரத்தை கண்டு பிரம்மித்தான்.

    ஒரு வெள்ளித்திரை நாயகன் அவனுக்கு எழுத்தாளன் இவர்கள் வீட்டில் மீன் மற்றும் மெக்கானிக் ஷாப் நடத்தி வந்த குருமஹா, இதில் மத்திய தரமா தான் வந்து நற்பவியின் காதலை ஏற்றது. அவளும் தனக்காக பார்த்து பார்த்து செய்வது என்று வியந்தான்.
 
   தனக்கும் நித்திஷுக்கும் ஏற்பட்ட பிணைப்பு காலம், மகள் மூலமாக தொடர வைக்கிறது. அப்படியானால் எந்த வினைக்கும் எதிர் வினை உண்டா? என்று பலவாறு யோசித்து நின்றான்.

    “கை அலம்பு மாறா” என்று கூறவும் எழுத்து சென்றான்.
 
     “இளங்கோ கிடைக்கலையா… சோ சேட்… அதனால் தொடர் சங்கிலி கண்டறியாம பாதிக்கப்படுதா?” என்று கேட்டு வைத்தாள்.

   மாறன் அவள் தன்னை கேலி செய்து வெறுப்பேத்துகின்றாளென விலகினான்.

  அடுத்த நொடி அவள் தன்னை காயப்படுத்த மாட்டாளென விளங்கவும் அவள் கை பிடித்து முன் நின்றான்.
 
     “இளங்கோவை நீ பிடிச்சிட்ட போல?” என்று கேட்டு வைத்தான்.
  
     “ஸ்மார்ட் மாறா” என்றவள் அவனை கடந்து நடந்து சென்றாள்.

    மணியின் போனை பவியும் பார்த்திருப்பாலே என்றதும் புகைப்படத்தை பார்த்து மற்றவரை அறிந்திட்டு இருப்பாளோ? என்று அவளை நோக்கினான்.

  இவனை போலவே கண் சிமிட்டி அவள் பணிக்கு புறப்பட்டிருந்தாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “இதயத்திருடா-25”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!