ஒளியானவன் 4
திருமணம் செய்து வைத்தால் அவன் குணமாகி விடுவான் என்று வெங்கட்டின் தந்தை கூறியதை கேட்டு கோபமானார் கேசவன்.
“உங்களுக்கு உண்மையில் கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா? இல்லையா? அவனது நோய் எப்படிப்பட்டது என்று உங்களுக்கு தெரியும் தானே? அப்படிப்பட்டவனுக்கு எப்படி நீங்கள் திருமணம் செய்து வைத்தால் சரியாகி விடுவான் என்று நினைத்தீர்கள்?” என்றார் கோபமாக.
“இல்லை டாக்டர், நான் எவ்வளவோ சொன்னேன். இவள் தான்” என்று மனைவி புறம் திரும்ப,
கலங்கியபடி அமர்ந்திருந்த அவரது மனைவியும், “என் மகன் எப்படியாவது சரியாகி விடுவான் என்று நினைத்தேன் டாக்டர்” என்று கதறி அழுதார்.
திருமணத்தின் போது எவ்வளவு திமிராக நடந்து கொண்ட பெண்மணி இப்பொழுது அழுவதை கண்டு அமைதியடைந்த கேசவன், “இப்படி நீங்கள் அழுதால் மட்டும் நடந்தது எதுவும் மாறிவிடுமா?” என்றார் விரக்தியாக.
“பிறந்ததில் இருந்து வைஷ்ணவியை நான் பார்த்திருக்கிறேன். கலகலவென்று இருக்கும் பெண். இப்பொழுது என்னை பார்த்தாலே பயப்படுகிறாள். அவளை இதிலிருந்து எப்படி என் நண்பன் குடும்பம் வெளியே கொண்டு வரப் போகிறது என்றே தெரியவில்லை. நீங்கள் செய்த தவறால் ஒரு சின்னப் பிள்ளையின் வாழ்க்கை இப்படி கேள்விக்குறியாக இருக்கிறது” என்றார்.
கண்ணீரைத் துடைத்த பெண்மணி, “அதெல்லாம் எதுவும் ஆகாது டாக்டர். என் மகன் சரியாகிவிடுவான். அவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்வார்கள்” என்றார்.
அவரை முறைத்த கேசவன் “நான் டாக்டர். உங்கள் ஃபேமிலி டாக்டரிடமும் நான் எல்லாவற்றையுமே கேட்டு தெரிந்து கொண்டேன். ஒழுங்காக அவன் ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டால் ஒருவேளை 10% அவன் சரியாகலாம். அதற்காக இனிமேலும் எங்கள் பெண்ணின் வாழ்க்கையை, அவனுடன் இணைக்க நாங்கள் ஒருகாலும் சம்மதிக்க மாட்டோம். ஒருவேளை என் நண்பன் ஒத்துக் கொண்டால் கூட, நான் இதற்கு சம்மதிக்கவே மாட்டேன்” என்றார் உறுதியாக.
மனைவி பேசியதில் எரிச்சலாக இருந்தவர், டாக்டர் கூறியதை கேட்டதும், “நீங்கள் சொல்வது சரிதான் டாக்டர். கூடிய சீக்கிரம் நான் என் மகன் திருமணத்தை ரத்து செய்ய ஏற்பாடு செய்கிறேன். அதன் பிறகாவது வைஷ்ணவி நிம்மதியாக இருக்கட்டும். இப்படிப்பட்ட ஒருவன் அந்த பெண்ணிற்கு கணவனாக இருக்கவே வேண்டாம்” என்றார்.
“என்னங்க நீங்களே எப்படி சொல்லலாமா? நிச்சயம் அவனுக்கு சரியாகிவிடும்ங்க. அவன் அவன் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்வான்” என்றார் கணவனை அதட்டிய குரலில்.
“போதும் உங்கள் பேச்சை, உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இது மருத்துவமனை. இங்கு குரல் உயர்த்தி பேசி, மற்ற நோயாளிகளுக்கு தொந்தரவு தராதீர்கள்” என்று கூறி விட்டு,
அவனின் தந்தையிடம் “
“எவ்வளவு சீக்கிரம் விவாகரத்திற்கு ஏற்பாடு செய்ய முடியுமோ! அவ்வளவு சீக்கிரம் ஏற்பாடு செய்யுங்கள். இல்லையென்றால் என்னுடைய நடவடிக்கை வேற மாதிரி இருக்கும்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்கு சென்றார்.
அனைத்து நோயாளிகளையும் பரிசோதித்து விட்டு வந்த விஷ்ணு, கேசவனை பார்க்க அவரது அறைக்கு வந்து அனுமதி கேட்டு காத்திருந்தான்.
தனது அறைக்கு கோபமாக வந்த கேசவனும் சற்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டு விஷ்ணுவை அழைத்தார்.
அறைக்குள் வந்த விஷ்ணுவும் கேசவனுக்கு நான் வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தான். அவனிடம் வேலையை பற்றி கேட்டார் கேசவன். பின்னர் “வைஷ்ணவியை பார்த்தாயா?” என்றார்.
“எஸ் அங்கிள். ஆனால் அவள் என்னை பார்க்க மறுத்து விட்டாள். அங்கிளும் ஆன்ட்டியும் என்னிடம் பேசினார்கள். என்னை இங்கு பார்த்ததில் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தான்” என்றான்.
“சரி எப்பொழுது அப்பா அம்மா எல்லாம் இங்கு வருவார்கள். எப்பொழுது நீ உன் வீட்டிற்கு செல்வாய்” என்றார்.
“அவர்கள் வர இன்றும் இரண்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் என்று நினைக்கிறேன். அவர்கள் இங்கு வர முடிவு செய்த பிறகு அங்கிளிடம் சொல்லலாம் என்று நினைத்தேன். அதற்குள் என்று அவர்களை இப்படி பார்க்கும்படி ஆகிவிட்டது” என்றான் சோகமாக.
அவரும் பெருமூச்சு விட்டு கொண்டு “எல்லாம் இப்படி வேகமாக நடந்து முடிஞ்சிடுச்சு. நான் அவர்கள் வீட்டில் விவாகரத்து செய்யச் சொல்லி இருக்கிறேன். சீக்கிரம் இதிலிருந்து வைஷ்ணவி வெளியே வர வேண்டும்” என்றார்.
“அவர்களை பார்த்தீர்களா?” என்றான் கேள்வியாக.
“இங்கேதான் அட்மிட் ஆகியிருக்கிறான்” என்றார்.
“என்ன ஆச்சு?” என்று பதட்டமான விஷ்ணுவிடம் ,
“தற்கொலைக்கு முயன்று இருக்கிறான்” என்றார் அமைதியாக.
விஷ்ணு அதிர்ச்சியில் இருக்கையில் இருந்து எழுந்து விட,
“சிட் மேன்” என்று சொல்லிவிட்டு,
“அவன் வைஷ்ணவியிடம் நடந்த கொண்ட குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்ய முயன்றதாக சொல்கிறார்கள். நான் ஒரு டாக்டராக போய்விட்டேன். அதனால் வேறு வழி இல்லாமல் அவனை காப்பாற்றி விட்டு வந்திருக்கிறேன்” என்றார் எரிச்சலாக.
அவரது கோபம் புரிந்த விஷ்ணு “என்ன தான் நடந்தது நடந்தது அங்கிள்” என்று அவளது வாழ்க்கையில் நடந்ததை தெரிந்துகொள்ள ஆர்வமானான்.
பெருமூச்சுடன் வைஷ்ணவியின் திருமணத்தைப் பற்றி கூறத் தொடங்கினார். “அவர்களாக வந்து தான் பெண் கேட்டார்கள்” என்று வெங்கட் பற்றி கூற ஆரம்பித்தார். “எங்கோ கோயிலில் வைத்து வைஷ்ணவியை குடும்பத்துடன் பார்த்திருக்கிறார்கள். அரசும் அவர்களது தகுதிக்கு குறைந்தவன் அல்லவே! ஆகையால் அவளை திருமணம் செய்யலாம் என்று நினைத்திருக்கிறார்கள். மறுநாளே அவனது தாய் வைஷ்ணவியின் வீட்டில் வந்து பேசி பெண் கேட்டுள்ளார்.
வெங்கட் குடும்பமும் இங்கு கொஞ்சம் பேர் சொல்லும் குடும்பம் தான் இல்லையா?” என்று அவனைப் பார்த்தார்.
அவனும் ஆமாம் என்று தலையாட்ட ரமணன் குரூப்ஸ் பற்றி அவனும் கேள்விப்பட்டு இருக்கிறானே!
வெங்கட்டின் தந்தை ரமணனின் தொழில் சாம்ராஜ்யம் தான் ரமணன் குரூப்ஸ். இப்பொழுது அவரது இரு மகன்களை வாரிசாக கொண்டு பல்வேறு தொழில்களில் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வருகிறது.
வெங்கட்டை பற்றி விசாரித்த வரைக்கும் வயது 32. அதைத் தவிர அவனைப் பற்றி எந்த ஒரு தவறான செய்தியுமே இல்லை. வயது வித்தியாசம் தான் அதிகம். அதை மட்டும் தான் அரசு யோசித்தான். ஆனால் லட்சுமியும் அதில் என்ன இருக்கிறது என்று கூறிவிட்டார். வைஷ்ணவியும் பெற்றோர் முடிவு என்னவோ அதற்கு ஒத்துக் கொண்டாள். ஜாதக பொருத்தமும் சரியாக இருந்தது. ஆகையால் லட்சுமி திருமணம் செய்ய முடிவு செய்துவிட்டார். அதன்படியே அடுத்த முகூர்த்தத்தில் நிச்சயம் வைத்து, ஒரு மாதத்தில் திருமணமும் நடந்துவிட்டது.
திருமணத்திற்கு உன் அப்பா அம்மா வந்திருந்தார்களே?” என்றார்.
“ஆமாம் அங்கிள். ரொம்ப கிராண்டா நடந்தது என்று சொன்னார்கள். நான் அப்பொழுது இங்கு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருந்தேன். அதனால் எனக்கு அங்கு பல வேலைகளை முடிக்க வேண்டிய கட்டாயம். ஆகையால் என்னால் வர முடியவில்லை”
திருமணம் முடித்து வீட்டிற்கு வந்த, அவனது தாய் பேசியதை நினைத்துப் பார்த்தான். ஏர்போர்ட்டில் இருந்து இவன்தான் தன் தாய் தந்தையை அழைத்துக் கொண்டு சென்றான். காரில் வைத்தே, வைஷ்ணவி பற்றி வாய்வையாமல் பேச ஆரம்பித்தார் அவனது தாய்.
“எவ்வளவு அழகா இருக்கா தெரியுமா? எவ்வளவு அன்பா ஆன்ட்டி ஆன்ட்டியின் பேசுறா. அடக்கமான பொண்ணா இருக்கா. அவங்க அப்பா அம்மாவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்குறா. சரிமா, சரிப்பா என்ற வார்த்தையை தவிர அவள் வாயிலிருந்து வேறு எதுவுமே வரமாட்டேங்குது. ஆனால் நீயும் இருக்கீயே! நான் எது சொன்னாலும் எதிர்த்து எதிர்த்து பேசிக்கிட்டு இருக்க” என்றார்.
“அம்மா நீங்க என்னைக்கோ ஒரு நாள் போய் அவளை பாக்குறீங்க. அவ உங்ககிட்ட கோவப்படவா போறா? இல்ல உங்களை எதிர்த்து பேசுவாளா? அதனால அவள் அமைதியாக இருந்திருப்பா! உடனே நீங்க அவளை போயி அமைதியான பொண்ணுன்னு சர்டிபிகேட் கொடுக்காதீங்க. அவள் எப்படிப்பட்டவள் என்று எனக்கு தெரியும்” என்றான் சிறுவயதில் அவனிடம் அவள் பேசுவதை வைத்து.
“என்ன மேன்? என்ன யோசனை?” என்று அவனை நிகழ்காலத்திற்கு வர வைத்தார் கேசவன்.
- தொடரும்..
Yennathaan aachu intha vaishnaviku😂😜…. Ithu yaruda new character 🎊🎊
Paavam vaishnavi
Nice moving sis
Vaishu vum vishnu vum childhood friends ah enna . venkat apadi enna prachanai atha marachi ipadi avanukku kalyanam panni vachi tu ava life vera spoil pannitaga
🙂🙂
doctor ah avar kapathitaru but avana kutra unarchila suicide atten pannanu namba mudila vera etho reason iruku ipo ethukaga vaishnavi ah kodumai paduthanum . ipo vanthu iruka vishnu yaru ellam friends group mari varanga
எல்லாமே வேகவேகமா நடந்துட்டு போல???… விஷ்ணு யாரா இருக்கும்??
Nice epi👍