இலக்கு
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
நாம இந்த உலகத்துல பிறந்தோம் வளர்ந்தோம். எப்பவும் மனிதரின் தலையாய கடமைகளாக சிலவற்றை காலை கடன் முதல் உறங்கும் முன் வரை அனைத்தையும் சங்கிலி தொடராக செய்து வாழ்வை வாழ்கின்றோம்.
யாராவது எப்பவாது… தினமும் எழுந்துக்கறோம் சாப்பிடறோம், படிக்கறோம், வேலைக்கு போகறோம், அசதியானா தூங்கறோம்.
ஒவ்வொரு வயதுக்கும் ஒரு கடமை என்று வாழ்கின்றோம். அந்தந்த வயதில் உள்ள கடமைகளை நிறைவேற்றுகின்றோம்.
இந்த உலகத்துல பிறக்கின்றோம் இறக்கின்றோம். நடுவுல நமக்கான இடத்தை எங்கயாவது பதிவு பண்ணறோமா?
ஒரு பெரிய வினாவை யாருக்காவது உள்மனதில் ஓயாமல் ஏற்படுத்துகின்றதென்றால், உங்களுக்கான இலக்கை நீங்க தேடணும் என்ற பொருள்.
இலக்கு… இலக்குன்னா…? நீ என்னவாக மாற நினைக்கின்றாயோ அது தான் உன் இலக்கு.
சிலரெல்லாம் பிறக்கும் பொழுதே தங்கள் பெயரை நிலைநாட்டி உலகுக்கு தெரிவிக்கும் விதமாக வாழ்ந்திடும் பாக்கியம் அமையுது. உதாரணம் பிறந்த எட்டு மாத குழந்தை படம் பார்த்து பெயரை சொல்லி மக்கள் மனதில் பேசப்படும். வில்வித்தை நீச்சல்பயிற்சின்னு அப்பவே டிரையின் செய்து, அந்த குழந்தையோட இலக்கு, பாதை இது தான்னு தடம் பதித்து அதில் பயணம் செய்ய வைப்பாங்க.
ஆனா பலருக்கும் தங்கள் இலக்கு எதுவென்று தெரியாமலேயே கல்விக்கு தகுந்த படிப்பு, அதற்கேற்ற சம்பளம் அதில் தன்னை மேம்படுத்தி பொறுத்திக்கொள்வது. திருமணம் குழந்தை குட்டி குடும்பம் என்று சராசரி வாழ்க்கை வாழ்ந்து இறந்தும் போயிடறாங்க.
இதில் வித்தியாசமா ஐம்பது ஆறுபது வயதில் கூட இலக்கை அடையும் சிலர் அத்திபூத்தாற் போல இருப்பாங்க. நான் கனவாக நினைத்தது கனவாகவே செல்லாமல், கடைசி காலத்திலாவது சுயமாக என் பெயர் சொல்லும் விஷயத்தில் சாதித்து இருப்பார்.
காலம் கடந்து சாதித்து என்னங்க பண்ணறது? இருக்கும் பொழுது நமக்கான இலக்கில் பெயரை எடுப்பது கிக் அல்லவா? கண்திறந்து மனபூரிப்புடன் கனவை எட்டி பறிப்பதற்கு சமம்.
அந்த இலக்கை யாரெல்லாம் உருவாக்கறிங்க. ஆமாங்க.. எந்த வழியும் தானா வந்து சிவப்பு கம்பளம் விரித்து வாய்ப்பை நல்கி, இலக்கிற்கு அழைத்து செல்லாது. நாம தான் வாய்ப்பை உருவாக்கி நமக்கான இலக்கை நிர்ணையித்து, நம் இலக்கிற்கு ஓயாமல் ஓடனும்.
நாம இலக்கை நோக்கி ஓடினா…
ஒரு நாள் அந்த இலக்கை அடையும் போது…
நீங்க திரும்பி பார்க்கும் பொழுது….
சாதித்தவராக, நின்று இருப்பிங்க.
இலக்கை நிர்ணையுங்கள்.
-பிரவீணா தங்கராஜ்.