Skip to content
Home » உயிரில் உறைந்தவள் நீயடி-16

உயிரில் உறைந்தவள் நீயடி-16

அத்தியாயம்-16

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

எப்படியோ ஒரு வழியாக ஜீவிதா எம்பிராய்டரி செய்த சட்டத்தில் மணிகளால் ஆன யுகேந்திரன் முகத்தைக் கோர்த்து முடித்திருந்தாள்.

முகம் மட்டுமே கோர்த்து நெஞ்சு பகுதி வரை இருக்கும் தோற்றம். அதற்கே ஜீவிதாவிற்கு இடிப்பு ஒடிந்துவிட்டது.

என்னதான் மெத்தையை விட்டு இறங்க கூடாதென்று கூறியதால் இந்த அறையை விட்டு அவள் அசைந்ததில்லை. ரத்தக்கசிவு ஏற்பட்டதால் வந்த பயம்.

அதிலும் இந்த மணிகளால் வேலைப்பாடுகளைச் செய்ய ஆரம்பிக்கவும் எல்லாம் கட்டிலில் கடை பரப்பிடுவாள்.

பாத்ரூம் உபயோகப்படுத்தும், பூஜைக்கு விளக்கேற்றவும் நடமாடுவாள். மற்றபடி அதிகமாக நடப்பது கூடக் கிடையாது. என்னதான் உட்கார்ந்து சாய்ந்து இத்யாதி வேலையில் மூழ்கினாலும், முதுகு வலித்தால் குழந்தை நலன் கருதி உறக்கத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பாள்.

யுகேந்திரனின் உயிர் அணுக்கள் குழந்தை வடிவில் வருவது முக்கியமல்லவா.

‘நாளைக்கு அவரிடம் காலையிலேயே இதைக் காட்டி மனதை திறந்து பேசிட வேண்டும்.’ என்று தனக்கான பீரோவில் யுகேந்திரன் அதிகம் திறக்காத இடத்தில் மறைத்து வைத்தாள்.

நாளைக்குத் திருமண நாள். இன்று அவளிடம் தஞ்சம் அடைந்திட துடித்தது நெஞ்சம். ஆனால் வயிற்றில் குழந்தை இருக்க, ஏக்கமாய் மனைவியைப் பார்வையிட்டான்.‌

ஜீவிதாவிற்கு நேற்றும் இன்றும் கணவனின் வாடிய முகம் கண்டு வருத்தம் சூழ, அவன் கையை எடுத்து அடிவயிற்றில் பதிய வைத்தாள்.

“ஏய். என்ன பண்ணற பயமா இருக்கு” என்று கையை உருவ முயல, “பச் என் கன்னத்தை, கழுத்துக்குக் கீழே உங்க கை வருது. வயிற்றுல கை வச்சி பாருங்க” என்று கூறவும், மறுத்து எடுக்க முனையும் நேரம், ‘இங்கிருந்து கையை எடு’ என்பது போல ஒர் உதை. அதிர்ச்சியாக மனைவியைப் பார்க்க, ஜீவிதாவோ “பீல் பண்ணினிங்களா” என்று மகிழ்ச்சியாகக் கேட்டாள்.

“என்ன சிரிக்கற? உனக்கு வலிக்கலையா?” என்று ஆச்சரியமாகக் கண்கள் விரிந்து கேட்டான்.

“குழந்தை அசையுது” என்று பதில் தந்தாள்.‌

அதன் பின் வயிற்றில் கையை வைத்து மென்மையாகத் தடவிக் கொண்டிருந்தான்.‌

“சரி தூக்கம் வருது” என்று உறங்கியவளிடம், ‘நீ தூங்கு. எனக்கு இன்னிக்குத் தூக்கம் வராது” என்று கூறினான். இன்று தானே வயிற்றில் குழந்தை அசைவதை தொட்டு பார்த்த சந்தோஷம்.

ஜீவிதா சற்று நேரத்தில் உறக்கத்தில் திளைக்க, யுகேந்திரன் இரவெல்லாம் குழந்தை அசைவதை உணர்ந்து அகமகிழ்ந்தான்.‌ எப்பொழுது உறக்கம் என்பதைத் தழுவினானோ, காலையில் ஜீவிதா எழும் நேரத்தில், யுகேந்திரன் கைகள் அவள் வயிற்றில் இருந்தது.

அதனை எடுத்து விட்டு, எழுந்து குளித்து முடித்து மங்களகரமாக வந்தாள்.

அரைத் தூக்கத்தில் யுகேந்திரன் கண் விழித்து எதிரே பார்க்க ஜீவிதா அழகான ஓவியமாகக் காட்சிக்கு நின்றாள். தினம் தினம் பார்த்தாலும் தெவிட்டாத தெய்வீக முகம்.

பின்னால் கைகட்டி, முன்னால் நடந்து வர, “ஜீவி அழகுல கொல்லாதடி.” என்று அவளை மெதுவாய் இழுத்து, அவள் மடியில் முகம் புதைத்தான்‌.

ஜீவிதா அவன் சிகையை வலது கையால் வருடி தலையில் அவளது வெண்டக்காய் விரலால் கோதி, “இன்னிக்கு நமக்குக் கல்யாண நாள். நமக்குக் கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகிடுச்சு. உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு இரண்டு நாளைக்கு முன்ன சொன்னிங்க. பதிலுக்கு நான் அன்னைக்குச் சொல்லலை.

காரணம்…

இன்னிக்கு நம்ம கல்யாண நாள்ல இதைக் கொடுத்துட்டு சொல்லலாம்னு காத்திருந்தேன்” என்று தயக்கமாய் எடுத்தாள்.

ஏற்கனவே கல்யாண நாள் என்பதால் ஏகப்பட்ட வேலையை முடித்துவிட்டே வந்திருந்தான். அந்த அசதியும், குழந்தை அசைவில் அதில் லயித்து உறக்கத்தைத் தாமதமாகத் தழுவியதால், தாமதமாகவே எழுந்தான்.

“ஏய் ஜீவி… நீ… நீயா… செய்தது?” என்று பிரம்மிப்பாய் கேட்டான்.‌

“என்ன தினமும் (பீட்ஸ்)மணிகளை வச்சிட்டு இருக்க, கீழே பீட்ஸ் சிதறி கால் வழுக்கிடும்னு அத்தையிடம் இதை ஏறக்கட்ட சொன்னிங்க. அப்ப எல்லாம் தெரியாதா நான் இந்தக் குட்டி குட்டி பீட்ஸ் வச்சி என்னவோ பண்ணறேன்னு” என்று கேட்டாள்.

“தெரியும்… நீ இரண்டு மூன்று கழுத்துல போடுற மணியா செய்து பொன்னம்மாவிடம் கொடுத்ததைப் பார்த்தேன். நம்ம வீட்ல கூடத் திரைச்சீலையா பீட்ஸ்ல செய்ததையும் பார்த்தேன். அது ரொம்ப அழகா எக்ஸ்பென்ஸிவா தெரிந்தது. கூடுதலாகக் கலை நயமிக்கதா.

ஆனா இது, நீ செய்து நான் பார்க்கலை. என்னைப் பேக்டரிக்கு அனுப்பிட்டு செய்தியா?” என்று ஆசையாகக் கேட்க இமை மூடினாள்.

யுகேந்திரனுக்கு அந்தச் சட்டத்தில் இருக்கும் குட்டி குட்டி பீட்ஸ் மணிகள் கோர்வை கோர்த்திருந்த தன் முகத்தை ஆராய்ந்தான்.

தலைக்குக் குட்டி குட்டி கருப்பு மணிகள், முகத்திற்கு லேசான பழுப்பு வண்ண மணிகள், சட்டைக்கு வெளிர் நீலநிறம் என்று எம்பிராய்டரி செய்த சட்டத்தில் அவன் முகத்தை நுணுக்கமாய் வரவழைத்திருந்தாள்.

“நம்ம மனசுல ஆழமா பதிந்த விஷயம், நம்ம கையில் இப்படி அற்புதமான படைப்பா காட்டும். என் மனசுல ஆழமா பதிஞ்சியிருக்கிங்க.

மூன்று நாள் வாழ்ந்துட்டு சாபம்னு சொன்னேன்.

இப்ப ஒரு வருஷமாகுது. நீங்க வரம்னு சொல்லலாம்.

நானும் உங்களை விரும்பறேன். எந்த நிமிஷம் எல்லாம் தெரியலை. இந்தத் தாலி கழுத்துல ஏறும் போது அம்மா அப்பாவுக்காக, சொந்தம் ஒன்றாக, குடும்ப மானத்துக்காக, ஊர்ஜனம் வாயை பாதியாவது அடைக்க, அட்லீஸ்ட் அப்பா அம்மாவுக்கு என் கல்யாணம் மூலமாகச் சின்னச் சந்தோஷத்தை தர, இப்படித் தான் கல்யாணத்துக்குத் தலையாட்டியது.

நீங்க பழிவாங்க தான் தாலிகட்டினேன்னு சொன்னப்ப, காயப்படுத்தி வார்த்தை வீசும் போது, எதிர்பார்த்தது தானே, அப்படின்னு தெரிந்தாலும் ஒரு சிறு நெருடல், கணவன் மனைவிக்கு அன்பு முக்கியம் ஆச்சே.

அதில்லாம முதராத்திரில எப்படி? கண்ணைக் கட்டி காட்டுல விட்ட கதையா போச்சுன்னு பயந்தேன். அதுக்கு ஏத்த மாதிரி வார்த்தையால் வதைச்சிங்க. ராத்திரி மென்மையும் வன்மையுமா ஆளறப்ப விதிர்த்து போனேன். ஆனா மூன்று நாள் கழிச்சு வந்த நாட்களில், என்னை வார்த்தையால் வதைச்சதா எனக்கு நினைவுயில்லை. அத்தை உங்களை அடிச்சி அறிவுரை செல்லியிருக்கலாம். அதுக்குப்பிறகு லேசான கனிவு உங்களிடம் பார்த்தேன். நிதானமா கவனிச்சப்ப, முழுமையான கனிவும் பாசமும் ஒரு கட்டத்துல பார்த்துட்டேன்.

அந்தத் தைரியத்துல தான் அத்தையிடம் அக்காகிட்ட நான் பேசவான்னு பர்மிஷன் கேட்டுட்டு போன் பேசினேன். அத்தை போன் பேச பெர்மிஷன் தந்தாங்க.

ஆனாலும் உங்களிடம் ஒரு வார்த்தை கேட்டுட்டு பேசியிருக்கணும். எனக்கு நான் பேசிய வார்த்தையால நீங்க காயப்பட்டது தெரியாது இல்லையா. தெரிந்திருந்தா அப்பவே சாரி கேட்டிருப்பேன். சாரிங்க” என்று யுகேந்திரனை கட்டியணைத்து அழுதாள்.‌

ஒர் ஆண்மகனுக்குப் பத்திரிக்கை வரை வந்து அந்தப் பெண் வேறொருத்தனோடு ஓடியதாகப் பரவினால் என்ன தோன்றும். முன்பு வேறு அசிங்கம் அவமானம் பெரிய அடி கிடைக்க வேண்டுமென்று ஜீவிதா அறியாமல் சாபத்தை வழங்கினாளே. நல்லதோ கெட்டதோ நம் வார்த்தை பலித்தால்….

‘ஏய் ஜீவி.. அழறியா?” என்றவன் அவளை அணைத்துத் தேற்றினான்.

“என்னடி அழுக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்க. இன்னிக்கு நம்ம கல்யாண நாள் அழலாமா? முடிஞ்ச கதைக்குத் திரும்ப ஏன் அழற. இன்னிக்கு சந்தோஷமா இருக்கணும். நம்ம வீட்ல இன்னிக்குச் செலிபரேட் இருக்கு.” என்று முகத்தை நிமிர்த்தி முத்தம் வைக்கச் சென்றான்.

ஆனால் முத்தம் வழங்காமல், “நான் இன்னும் பிரஷ் பண்ணலை. பண்ணிட்டு ஓடிவந்திடறேன். இல்லைன்னா உனக்குக் குமட்டும்.” என்று அதுவரை கன்னம் காது மூக்கு நெற்றி என்று முத்தமிட்டு ஓடினான்.

ஜீவிதாவோ எப்படியும் இனி வரும் வாழ்வு புரிதலாகச் செல்லும் என்ற நம்பிக்கை பிறக்க ‘என்ன செலிபரேட் பண்ண போறார்’ என்று யோசித்தாள். எப்படியும் திருமண நாளை கொண்டாட நினைப்பது எல்லார் வீட்டிலும் நடப்பது தானே. அதற்குள் கணவனுக்குக் கருப்பட்டி டீயை தேடி கிச்சனுக்குப் பறந்தாள்.

“கூப்பிட்டுயிருந்தா பொன்னம்மா டீ எடுத்துட்டு வந்திருப்பா. நீயென் இங்க வந்த? உன் புருஷன் பார்த்தா என்னைத் திட்டுவான்.” என்று கூற, “இன்னிக்கு எங்க கல்யாண நாள் அத்தை‌. அவருக்கு நான் எடுத்துட்டு போலாம்னு வந்தேன்.. அவரோட சேர்ந்து வந்து ஆசிர்வாதம் வாங்கிக்கறேன்” என்றதும், உமாதேவி வேறென்ன பேசுவார்.

டீயை எடுத்துச் செல்லும் மருமகளைக் கண்டு, ஆச்சரியமாகக் கணவரை பார்த்தார்.

அவருமே ஒரெட்டு அறையிலிருந்து எட்டி பார்த்திருந்தாரே.

“உங்களுக்கு டீ” என்று ஜீவிதா அறைக்குள் வந்தாள்.

டீயை எடுத்து மேஜையில் வைத்து, இதழ் முத்தங்களைப் பருகினான் யுகேந்திரன். அவனால் தற்போது சைவ சாப்பாடு தான் சாப்பிட முடியும்.

“போ…தும் மூச்சடைக்கு” என்றதும் அவனைத் தள்ளி நிறுத்தி நீண்ட மூச்சை உள்ளிழுத்து சுவாசித்தாள்.‌

“சேலை.” என்று நீட்ட, “இதைக் கட்டிட்டேனே” என்று அணிந்து இருந்ததைக் காட்டி மசக்கை பெண்ணாகக் கூற, “பரவாயில்லை.. முதல் தடவை வாங்கித் தர்றேன். இதைக் கட்டு. இந்தச் சேலையை நான் கழட்ட உதவறேன். நீ இந்தச் சேலையை உடுத்து.” என்றான்.

“முன்ன மாதிரி எட்டு பத்துச் சேவ்டிபின் இல்லையே. தளர்வா கட்டியிருக்க” என்று கூறி இரண்டு நொடியில் சேலையைக் களைத்து விட்டு, ஜாக்கெட் கொக்கியில் கை வைக்கப் போக, கையைத் தட்டிவிட்டு “நானே கட்டிப்பேன். நீங்க சும்மா உட்காருங்க” என்று மெத்தையைக் காட்டினாள்.

அவனும் சற்று நேரத்தில் வெளியே செல்லும் பணிகள் காத்திருக்க, அமர்ந்தான்.‌

வேகமாய் உடையைக் கழட்டி மாற்றிட, “கொஞ்சம் வெயிட் போட்டுட்டியோ” என்றான் கிறக்கமாய்.

அவன் பார்வை சென்ற திசையில் “லைட்டா” என்றவள் சேலை முந்தானையை எடுத்து மேலே போட்டு ப்ளீட்ஸ் வைக்க மடித்தாள்.

“இப்ப ஓகேவா” என்றதும் “டபுள் ஓகே.” என்றவனிடம் காலில் விழுந்தாள்.

“கர்ப்பிணி பொண்ணு என் கால்ல விழுந்துட்டு. நான் உன்‌புருஷன் டி.” என்றான்.‌

“இதே வாய் தான் புருஷன் கால்ல விழமாட்டியான்னு கேட்டுச்சு.” என்று சிரிக்க, “அது அப்ப” என்று மூக்கை திருகினான்.‌

இருவரும் மலர்ந்த முகமாய் வெளிவர, “அப்பா அம்மா.” என்று அழைக்க, “பூஜையறைக்கு வாடா” என்று உமாதேவி அழைத்தார்.

“உங்கம்மா உங்க கல்யாண நாளுக்கு ஏதோ பரிசு வாங்கியிருக்கா. அதை அங்க வச்சி தான் கொடுப்பா” என்று தட்சிணாமூர்த்திக் கூறி “கல்யாண நாள் வாழ்த்துகள்” என்று இருவரிடமும் கூறினார்.

இறைவன் சந்நிதியில் கடவுளை இருகரம் கூப்பிக் கும்பிட, உமாதேவி தீபாராதனை காட்டி மகனுக்கும் மருமகளுக்கும் குங்குமம் விபூதி வைத்தார்.

தந்தையும் அவ்வாறே பூசி விட, “மனமொத்த தம்பதிகளா வாழணும்.” என்றவரிடம் காலில் விழுந்து தம்பதிகளாக வணங்கினார்கள்.‌

ஜீவிதா எழுவதற்குச் சிரமப்பட, யுகேந்திரன் கை கொடுக்க, பிடிமானமாகப் பிடித்து எழுந்தாள்.

“இப்ப சொல்லும்மா என் பையனை கல்யாணம் பண்ணியது உனக்குச் சாபமா?” என்று தட்சிணாமூர்த்திக் கேட்க, “கடவுள் எனக்குக் கொடுத்த வரத்துக்கு நன்றி சொல்லிட்டு இருக்கேன் மாமா” என்றாள் பதிலாக.

இந்த வார்த்தையே மனம் குளிர்ந்தது பெத்தவருக்கு.

“நேத்து வாங்கி வந்த முத்து நெக்லஸ். இந்தக் கலர் சேலை என்றதும் அதுக்கு ஏத்த மாதிரி வாங்கினேன். பிடிச்சிருக்கா?” என்று கேட்க, “ரொம்ப ரொம்ப அத்தை” என்றவள் கழுத்தை காட்ட, “என்னை விட நீ உசரமா இருக்கியே. “டேய் யுகேந்திரா உன் பொண்டாட்டிக்கு மாட்டிவிடு” என்று உத்தரவு போட மனைவியின் சங்கு கழுத்தில் முத்து நெக்லஸ்ஸை மாட்டி விட்டான்.

“அவங்க எத்தனை மணிக்கு வருவாங்க” என்று தட்சிணாமூர்த்திக் கேட்க, பத்து மணிக்கு ஜெகனே வேன்ல கூட்டிட்டு வந்துடுவான் அப்பா.” என்றார். அதற்குள் உணவை முடித்துவிட்டு வரவேற்க தயாரானார்கள்.

“யார் வர்றா? என்ன விழா?” என்று கேட்டாள்.

“நம்ம வீட்டுக்கு தான் வருவாங்க யாருன்னு பாரு. ஆஹ்… உங்க அம்மா அப்பாவும் வருவாங்க.

அதோட உன் பாசமலர் அக்கா அக்கா புருஷன் அவங்களும் வருவாங்க.

ரொம்ப நேரம் நிற்காம, ஸ்டெரெயின் பண்ணிக்காம, எதுக்கெடுத்தாலும் அழாம, சமத்தா இருக்கணும்.

தண்ணி வண்டி மாதிரி அழுத, தூக்கிட்டு போய் ரூம்ல அடைச்சிடுவேன்” என்று மிரட்ட, தட்சிணாமூர்த்தி உமாதேவி மைந்தனை முறைக்க, “அன்பான தானய்யா மிரட்டறேன். எனக்கு மிரட்ட தான் வருது. நான் என்ன செய்ய?” என்று முனங்கினான்.

“அ..அக்கா வர்றாளா? எ..எப்படி? உங்களுக்கு அவளைப் பிடிக்காதே.” என்று கேட்க, “நீ சொன்ன மாதிரி காலம் கடந்து மன்னிச்சு நாம என்ன சாதிக்கப் போறோம். நான் ஒன்னும் ஒட்டி உறவாட போறதில்லை. நான் பேசிட்டா, இந்த வீட்டுக்கு கூப்பிட்டா, மாமா தன்னைப் போல உங்க அக்காவை ஏத்துப்பாங்க. அதுக்குப் பிறகு ஊர் வாய் கொஞ்சம் தானா அடங்கும்.” என்று கூறினான்.

தன் அக்கா இங்கு வருவாளா? அப்பா அம்மா பேசுவார்களா? யார் வரப்போகின்றார்கள்? இத்தனை டேபிள் சேர் வாசலில் போட்டு பந்தலிட்டு வைத்திருக்கின்றார்.

எந்த அசம்பாவிதம் நடக்காமல் இருந்தால் போதுமென்றா இறைவனை வேண்டினாள்.

-தொடரும்.

6 thoughts on “உயிரில் உறைந்தவள் நீயடி-16”

  1. M. Sarathi Rio

    உயிரில் உறைந்தவள் நீயடி..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 16)

    கல்யாணமாகி மூணே நாள்ல திருமண வாழ்க்கை சாபம்ன்னோ, வரம்ன்னோ ஜீவிதா மட்டுமில்லை, வேற யாருமே கூட அத்தனை சீக்கிரம் சொல்லக் கூடாது, சொல்லிடவும் முடியாது.
    ஒரு வருசம் கழிச்சுத்தான் அது வரமா, சாபமா என்கிறதே தெரிய வரும். கரெக்ட்டா ?

    ஜீவிதாவோட அம்மா, அப்பா, அக்கா, மாமா, ஜெகன், அவனோட மனைவி செல்வி, குழந்தை ஆல்யா.. இவங்க எல்லாம் வரது தெரியும். இன்னும் வேற யாரெல்லாம் வரப்போறான்ங்க..? இதுக்கு மேல என்ன சஸ்பென்ஸ் புரியலையே..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    super super jeevi un surprise pathu un vai ah adachitan yugan sabam illa varamnu sollitiye neeya athukum mannipu ketuta ithuku mela ena venum ellarkum . suspense over ah iruku yarellam vara paoranga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!