Skip to content
Home » உயிர் உருவியது யாரோ-14

உயிர் உருவியது யாரோ-14

யாரோ-14

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

      அதிகாலை நற்பவி கொட்டாவி விட்டு சுற்றுப் புறத்தை கண்டாள். அடச்சே உட்கார்ந்துட்டே தூங்கிட்டேன் போலயே என்று சாய்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்தாள்.

    எதிரே ஆங்காங்கே இருந்த ஷண்முகத்தின் கேஸிற்காக சேகரித்தவை அப்படியே இருந்தது.

    மீனா நேற்றே தாய் வீட்டிற்கு கணவரோடு செல்வதாக கூறியிருந்ததாள். அதனால் நற்பவியே எழுந்து காபி கலக்கினாள்.

    ஆற அமர காபி குடித்து ஒவ்வொரு விஷயமாய் பார்த்தாள்.

     சந்தானகிருஷ்ணனின் தோட்டத்தில் பிறந்த நாள் விழாவில் இருந்த புகைப்படம், இதழினியின் போன் காண்டெக் எண்ணிலிருந்து அவள் வைத்திருந்த அனைத்து பெயரும் அடங்கியிருந்தது.

        அனைத்தும் எடுத்து வைத்து இதழினி படித்த மாதா டீச்சர் இன்ஸ்டியுட்டிற்கு சென்று வர முடிவெடுத்து கிளம்பினாள்.

     சைராவிற்கு உணவளித்து, அதனை வாக்கிங் அழைத்து சென்று பெல்டை அவிழ்த்து விட்டு வீட்டினுள் ஒரு பகுதி செருப்பு வைக்கும் பகுதியில் அதனை அமர வைத்து முத்தமிட்டு கிளம்பினாள்.

      காக்கி உடையை தவிர்த்து சென்றாள். கிராமத்திலிருந்து சற்று தள்ளியிருந்தது. ஒரு மைல் அளவிற்கு நடந்து வரவேண்டிய சூழ்நிலையில் இன்ஸ்டியூட் இருந்தது.

    உள்ளே வந்தப்பொழுதே மரங்களும் பூக்களும் நிசப்தமாக வரவேற்றது போல உணர்ந்தாள்.

   நேராக இன்ஸ்டியூட் நடத்தும் மேரியை சந்தித்தாள். இதழினி பற்றி பேசி நேரங்கள் கழிந்தது. இது போன்ற பாலியல் வன்முறை நடந்தா அதை என்னிடம் தெரிவிக்க நம்பரை நீட்டினாள்.

   மேரியோ “இப்ப லஞ்ச் டைம் எல்லா பெண்களும் ஒரேயிடத்துல குழும சொல்லி பேசறேன். நீங்களே போல்டா பேசி நம்பரை பகிர்ந்துக் கொள்ளுங்க நற்பவி” என்று கூறவும் தயாராய் பேச வந்தாள்.

     சின்னதாய் நான்கு இருக்கை போட்டு இருந்தது. மைக்கை திணித்து சென்றனர் அங்கிருந்த பணியாட்கள்.

    “ஹாய் என் பெயர் நற்பவி இந்தவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர். ரீசண்டா ஷண்முகசுந்தரம் கொலைச் செய்யப்பட் கேஸை இன்வஸ்டிகேஷன் பண்ணியது நான் தான்.” என்று கூற “உங்களை தெரியும் மேம். நாங்க கேள்விப்பட்டிருக்கோம்.” என்று  பாதிக்கு மேலாக குரல் கொடுத்தனர்.

    “தேங்க்யூ… இத்தனை பேருக்கு தெரியும்னா அதோட காரணமான எல்லா விஷயமும் இந்த ஏரியா பேப்பர்ல வாசித்து இருப்பிங்க.

    பிரச்சனையோட தீர்வுகள் விடுபட காரணம் தரண் என்பவர். அவரோட தங்கை இதழினி இங்க தான் படிச்சாங்க.” என்றதும் அங்கு மௌனமாய் இருந்தனர்.

      “இந்த இடம்னு இல்லை எல்லா இடத்திலும் பாலியல் வன்முறை நடக்குது. அதோட தாக்கம் சிலர் அமைதியா பல்லை கடிச்சி சகிச்சிட்டு போறது. அடுத்து எதுவும் முடியாத கையறு நிலையில தற்கொலை செய்வது.

    மேபீ முடிந்துப்போன தற்கொலையை பேசி யாரையும் உயிர்தெழ வைக்க முடியாது. இனிமே அந்த தவறை நடக்காம தடுக்கலாம். உங்களுக்குள் யாருக்கேனும் எந்த தொந்தரவு வந்தாலும் பயப்படாம என்னை தொடர்பு கொண்டு கூறினா நான் சட்டபடி ஆக்ஷன் எடுப்பேன். ஆபாச புகைப்படமா சமூக தளத்துல போகும்னு நீங்க பயப்பட கூடாது. நீங்க பிரச்சனையை எந்தளவு விரைவா சொல்லறிங்களோ அந்தளவு சமூகத்தளத்துல இருந்து ஹாக்கர் மூலமா உங்களுக்கே தெரியாம எடுத்த புகைப்படங்கள் ஆபாசமா செல்லாம தடுக்க முடியும். முற்றிலும் அழிக்கவும் முடியும். அந்தளவு டெக்னாலஜி வளர்ந்திருக்கு.

     இது என்னோட நம்பர்” என்று அங்கிருந்த பலகையில் எழுதி முடித்தாள்.

    “எந்த பிரச்சனை என்றாலும் அணுகுங்க. உங்களுக்கு சர்வீஸ் பண்ண தான் நாங்க.” என்று கூறினாள்.

  மடமடவென பெண்கள் தங்கள் போனில் நற்பவி எண்ணை பதிவு செய்தனர்.

     “மேம்… எனக்கு இதழினியோட பிரெண்ட்ஸை பார்க்கணும். பார்த்துட்டா நான் கிளம்புவேன்”  என்று நற்பவி கேட்க பத்து நிமிடத்தில் தனியாக சந்திக்க நேர்ந்தது.

     “மேம்.. நாங்க மூன்று பேர் தான் இதழினி பிரெண்ட்ஸ்.” என்று சவீதா நின்றாள்.

    “ஹாய்.. உங்க பெயர்?” என்று கேட்டதும் “நான் சவீதா மேம். இவ ரேகா இது தியா. தியா தான் இதழினியோட ரூம் மேட் மேம்” என்றதும் நற்பவி மூவரிடம் அந்த ஒற்றை கேள்வியை கேட்டாள்.
  
     “உங்களை பார்க்க கேட்டது என் ஒரு கேள்விக்கான பதிலை எதிர்பார்த்து தான். கஷ்டமான கேள்வி எல்லாம் இல்லை.” என்றவள்  அருகே வந்து “இதழினி யாரையாவது விரும்பியிருந்தாளா? உங்களுக்கு தெரிந்து?” என்று கேட்டதும் மூவரும் யோசித்தனர்.

     தியா வந்து, “மேம் அவ ஒரு எயிம்மோட படிக்க வந்தவள். இந்த காதல் கீதல் எதுலயும் நாட்டமில்லை. அவளை யாரும் காதலிச்சதாகவும் தெரியலை.

   எப்பவும் புக்கை வச்சி படிப்பா, படிப்பு சம்மந்தமா நிறைய சார்ட் ஓர்க் பண்ணுவா. ஆய்வு கட்டுரை சேகரிப்பா. ப்ரீ டைம்ல கூட புக் தான் படிப்பா. எங்களுக்கு தெரிந்து காதலிக்கலை.” என்று கூறினாள்.

     “ஆமா மேம். அடிக்கடி சொல்லுவா. எத்தனையோ வேலை இருந்தாலும் குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரை பிடிச்ச வேலைனா அது டீச்சர் ஜாப். ஸ்கூலுக்கே போகாத குழந்தைங்க கூட என்னவாக போறனு கேட்டா உடனே நான் டீச்சராகணும்னு சொல்லும். அந்த மாதிரி இந்த பணி ரொம்ப ஸ்பெஷல். எத்தனை டாக்டர், போலீஸ், நர்ஸ், ஐ.எ.எஸ், ஐ.பி.எஸ், இன்ஞினியர் இப்படி பல படிப்பாளியை படிக்க தூண்டுகின்ற விதை தான் ஆசிரியர் பணி. அந்த பணியில் தான் ஒழுக்கமான மனிதனை வளர்த்து விட முடியும்னு பேசுபவள் அவ. காதலிக்கறதா இருந்தா அவளோட இந்த டீச்சிங் புரபஷனலை தான் விரும்பியிருக்கணும் மேம்.” என்றாள் ரேகா.

     சவீதாவோ “எஸ் மேம் நான் கூட என் லவ்வரோட ஒரு முறை அவளிடம் மாட்டினப்ப கேட்டேன். சேசே லவ்வா எனக்கா செட்டாகாதுனு பேசினா மேம்.” என்று பதில் தந்தனர்.

    “ஓகே… தேங்க்ஸ்.. ஏதாவது பாலியல் தொந்தரவுனா தற்கொலை தீர்வு இல்லை. என்னை மாதிரி யாரிடமாவது சொல்லுங்க.” என்று கூறி விடைப்பெற்றாள்.

     ஸ்கூட்டி எடுக்கும் நேரம் தியா ஓடிவந்து மூச்சு வாங்க நின்றாள்.

      “மேம்… சாகறத்துக்கு இரண்டு நாள் முன்ன அவ மதுவந்தி மேமிடம் தனிபட்டு பேசி அழுதா மேம். அவ எதுக்கு அழுவறானு தெரியாது. அதனால வேகமா வந்து அவளிடம் என்னனு கண்ணால விசாரிச்சப்ப, நத்திங் என்று அவளும் கண்ணாலயே கூறினா. ஆனா மதுவந்தி மேம் ஏதோ பேசினாங்க. ‘நீ கவலைப்டாதே இதுக்கெல்லாம் பயந்த காலம் மலையேறிடுச்சு. தைரியசாலியா இரு நான் பார்த்துக்கறேன்’ தட்டி கொடுத்தாங்க. இதழினி அந்த நொடி ஏதோ ரெலீப் ஆன பீல்ல இருந்தா. ஒரு வேளை அவங்களிடம் இதழினி ஷண்முகத்தை பத்தி பேசியிருக்கலாம் மேம்.” என்று கூறவும் நற்பவி “யார் அந்த மதுவந்தி?” என்று கேட்டாள்.

    “மதுவந்தி ஐ.ஏ.எஸ் மேம். பட் அவங்க ரிட்டன் போறப்ப கவர்மெண்ட் பஸ் மோதி ஆவனியாபுரம் பாலத்தில விழுந்து இறந்துட்டாங்க.

    மேம் எங்க இதழினி யாரையும் காதலிக்கலை மேம்.”  என்றதும் நற்பவி குழப்பமானாள்.

     “ஓகே மா. பார்த்துப்போங்க” என்று பைக்கை உயிர்பித்தாள்.

     ஸ்டேஷன் வந்து சேர்ந்தவள் போனை எடுத்து மதுவந்தி ஐ.ஏ.எஸ் என்று போட்டு பார்த்தாள்.

      ‘ஆவனியாபுரத்தில் அரசு பேருந்து மோதி ஐ.ஏ.எஸ் ஆபீசர் மதுவந்தி இறந்தார். பாலம் கீழே அவர் வந்த வண்டி விழுந்து தீப்பற்றி எரிந்தது. மதுவந்தி கீழே விழுந்தாலும் அங்கிருந்த கல்லில் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிர் பிரிந்து உள்ளது.’ என்று வெளிவந்திருந்தது. தமிழ்நாட்டில் வெளிவந்த அனைத்து பத்திரிக்கையிலும் அதையே வார்த்தைகள் மாறி மாறி செய்தியாய் வெளிவந்திருந்தது.

     எல்லாவற்றிலும் பாலத்திலிருந்து கீழே விழுந்த மதுவந்தி சடலமும் ஜீப் எரிந்த நிலையையும் புகைப்படமாக செய்திதாள் காட்டியது.

    சட்டென எல்லா புகைப்படத்தின் கீழ் ‘ஆவனியாபுரம் ஆறுமுகம்’ என்ற அடைமொழியோடு இருக்க, ‘விடியலை நோக்கி’ என்ற இந்த வட்டாரத்தின் பத்திரிக்கை நிருபர் என்று அறிந்தாள்.

     வேகமாக தொப்பியை தலையில் மாட்டி ஸ்கூட்டி எடுத்து கிளம்பினாள்.

    ஞானவேலோ “தரண் தான் குற்றவாளி என்றாலும் நற்பவி ஏன் அதை ஏற்க மாட்டறாங்கனு தெரியலை.” என்று பேச, “இதே டவுட் தான் சார் எனக்கும்” என்றான் திவாகர்.

     ஆறுமுகம் வீட்டை வந்து சேர்ந்து இந்த மதுவந்தி இறந்தப்ப எடுத்த புகைப்படங்கள் செய்திகள் கிடைக்குமா? என்று கேட்க, கண்ணாடியை எடுத்து போட்டு பார்த்து “இது இரண்டு வருடத்துக்கு முன்ன நடந்த விபத்தாச்சே. இது எதுக்கு மேம்?” என்றார்.

    கேட்பது பத்திரிக்கை ஆட்கள் என்பதால் பக்குவமாக “இல்லை சார் வுமன்ஸ் டே அப்ப எல்லாரும் வெற்றி பெற்ற பெண்களை பற்றி பேசுவாங்க. நான் நம்ம இடத்தை சுற்றி இருக்கிற பெண்களில் யார் சிறந்தவர் என்ன செயல் புரிந்தாங்க. எப்படி பதவியில சிறப்பா பணிப்புரியறாங்கனு நோட்ஸ் எடுத்து ரோல் மாடலான ஸ்பீச் கொடுக்க போறேன். அதுக்கு சில டீடெய்ல் தேடினப்ப இவங்க டெத் கொஞ்சம் அதிர்ச்சியா இருந்தது. அதனால தெரிந்துக்கலாம்னு… ஒரு ஜென்ரல்நாலேட்ஜ்” என்று கூறவும் கணினியை உயிர்பித்து பழைய வருடங்கள் பிரிவாக எடுத்த புகைப்படத்தை தேடினார்.

      ஆண்டும் மாதமும் போட்டு தெளிவாக வைத்திருக்க உடனே மதுவந்தியின் புகைப்படங்கள் சிக்கியது.

    “எனக்கு ஒரு போட்டோ காபி(copy) கிடைக்குமா சார்? இல்லை போன்ல வாட்ஸப்ல பண்ணினாலும் ஓகே” என்று நற்பவி கேட்டு முடித்தாள். போலிஸ் கேட்டு கொடுக்காமலா?

     “வீட்ல குழந்தைங்க எஜிகேஷனுக்காக கலர் ப்ரிண்ட் அவுட் இருக்கு. உங்களுக்கு ஓகேனா கலர் பிரிண்ட் அவுட் எடுத்து தரவா?” என்று ஆறுமுகம் கேட்டதும் “யா சூர் சார்” என்று இருந்து கையோடு புகைப்படத்தை வாங்கி வந்தாள்.

    வீட்டுக்கு வந்து சேர மணி ஏழை தொட்டது. புகைப்படத்தை பரப்பி விட்டு குளித்து முடித்து நைட்சூட் அணிந்து வந்தவள் கூந்தலை ரப்பர் பேண்டில் அள்ளி முடித்து கட்டுக்குள் கொண்டு சென்று சோபாவில் அமர்ந்தாள்.

    மதிமாறன் உள்நுழைந்து “நற்பவி மீனா இன்னிக்கு லீவு நீங்க சாப்பிட வருவீங்கனு பார்த்தேன். வரலை என்றதும் நானே கொண்டு வந்துட்டேன். என்ன போட்டோ இது?” என்று எடுத்து பார்த்தான்.

    அதே நேரம் மதுவந்தி என்று குகூளில் தேட அதுவோ முகநூலின் பக்கத்தின் லிங்கை காட்டி பத்து பன்னிரெண்டை காட்டியது.

    நற்பவி மதுவந்தி ஐஏஎஸ் என்று போட மதுவந்தியின் புகைப்படம் வந்தது.

    முகநூல் பக்கம் சென்று மதுவந்தியின் பேஜிற்கு சென்று காண தாய் தந்தையரோடு புகைப்படங்கள் இருந்தது. அதில் மேரீட் என்ற இடத்தில் மதிமாறன் என்ற பெயர் இருக்க அதை ஓபன் செய்தாள். ஆனால் அதில் எந்தவொரு படமும் இல்லை.

    மதிமாறனை திரும்பி பார்த்தாள்.

-யாரோ தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.






1 thought on “உயிர் உருவியது யாரோ-14”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *