யாரோ-15
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
“மாறன்?” என்று நற்பவி அதிர அவனை ஏறிட்டாள்.
கண்கள் கலங்க, “எஸ் இட்ஸ் மீ. அந்த கொலைக்காரன் நானே தான்.” என்று கர்வமாய் கூறினான்.
“மதுவந்தி என்னோட அக்கா பொண்ணு, என்னோட மனைவி.” என்றவன் போட்டோவை தூக்கி தொப்பென போட்டு, “ஷண்முகத்தோட ஆசை வார்த்தைக்கு உடன்படலைனு, இதழினிக்கே தெரியாம அவளை புகைப்படம் எடுத்தான் ஷண்முகம். அதுலயிருந்து தப்பிக்க தெரியாம ‘நெப்பந்தஸ்’ தாவரத்துல மாட்டின பூச்சி மாதிரி இதழினி தவித்திருப்பா. உதவிக்கு போன என் மனைவியையும் சேர்த்தே மரணத்துக்கு அனுப்பிட்டான்.” என்றவன் கோபம் இதுவரை மேடம் மேம் நற்பவி என்று இயல்பாய் பேசும் வார்த்தையில் காணப்பட்ட முகமே அல்ல. ரௌவுத்திரம் கொண்டு அணலை விழுங்கி இருந்தது.
“அன்னிக்கு காலையில தான் மதுவந்தி வீட்ல இருந்து சந்தோஷமா புறப்பட்டா.
மதுவந்தி மதிமாறன் உரையாடல்
“மது… இந்த மாதம் அக்கா ஒரு ஸ்கேன் எடுக்க சொன்னாங்க.” என்று தலைவாறியபடி கூறினான்.
“இன்னிக்கு ஒரு வில்லேஜ்ல சீப் கெஸ்டா போக வேண்டியதா இருக்கு மதி மாமா.” என்று சேலையை நேர்த்தியாய் கட்டி முடித்தாள்.
“இன்னிக்கு ஸ்கேன் எடுக்கலைனா நாளைக்கு எடுக்க முடியாது.” என்றான் மதிமாறன்.
ஏனாம் என்பது போல மதுவந்தி பார்த்து வைத்தாள்.
“புதன் மட்டும் தான் ஸ்கேன் எடுக்க அப்பாயின்மெண்ட் இருக்கு. மற்ற டேஸ்ல ஸ்கேன் டாக்டர் வரமாட்டாங்களாம்.” என்று கூறினான்.
“வேற டாக்டரை பாரு.” என்று அசட்டையாய் கூறிவிட்டு கிளம்ப தயாரானாள்.
“மது….. உனக்கு போஸ்டிங் சேன்ஞ் ஆக இன்னும் எத்தனை நாளிருக்கு?” என்று கேட்டான்.
“மாமா… அதுக்கு இன்னமும் ஒரு மாசம் இருக்கு. அதுவரை வெயிட் பண்ணு. ப்ளிஸ்… என் செல்லம்ல” என்று கொஞ்சினாள்.
“சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கறது கடுப்பா இருக்கு டி. இருந்த வேலையும் உனக்காக தூக்கி போட்டுட்டு மாசமா இருக்கனு வந்தேன்.” என்று சலித்தான்.
“நான் என்ன பண்ண முடியும் மாமா. உன்னை யார் என்னை படிக்க வைக்க சொன்னா. அம்மா சாதாரணமா படிச்சா போதும்னு சொன்னாங்க. நீ தான் என்னை உசுப்பேத்தி இதை படி அதை படினு ஐஏஎஸ் ஆக்கின.
கல்யாணமாகி படிக்க போனப்ப கையை கட்டி வேடிக்கை பார்த்துட்டு, இப்ப அங்க இங்கனு மாத்துவாங்களானு அப்பாவியா கேட்கற?” என்று தோசை சுடுபவனிடம் தட்டை நீட்டி கேட்டாள்.
“என்ன பண்ண சொல்லற நான் ஹோட்டல் மேனேஜ்மெண்ட். நீயாவது விரும்பியதை படினு என்கரேஜ் பண்ணினேன்.
முன்ன கஷ்டமாயில்லை. இப்ப உன்னோட இணைந்தப் பிறகு உன்னை விட்டு நகரவே மனசில்லை.” என்றான் மதிமாறன்.
“பொய் பொய் பொய் மாமா . உன் வாரிசு என் வயிற்றுல வளரவும் என்னை தாங்கணும்னு கூடவே இருக்க.” என்று மல்லி சட்னி தொட்டு சுவைத்தாள்.
“அப்படியும் வச்சிக்கலாம்” என்று அவளருகே வர, தோசையை பிய்த்து ஊட்டி விட்டு “அதான் உண்மை” என்று மதுவந்தி கூற கன்னம் ஏந்தி நெற்றி முட்டினான்.
“ஒரு மாசம் வேகமா ஓடிடும் மாமா. பிறகு உன்னோடவே இருப்பேன். இன்னிக்கு லாங் டிரைவ் வேற… நீ சாப்பிட்டு இரு நைட்டுக்குள்ள வந்துடுவேன்” என்று அவன் தோளில் அணிந்த துண்டில் துடைத்து சென்றாள்.
கேஸை அணைத்து விட்டு வாசல் வரை வந்து வழியணுப்பி வைத்தான்.
“கடைசியா மதுவந்தியை உயிரோட பார்த்தது அன்னிக்கு தான்.” என்றவன் சேரில் அமர்ந்து கையை நெற்றியில் கீறியபடி தொடர்ந்தான்.
மதுவந்தி யாராயிருந்தாலும் சட்டுனு மிங்கிள்ஆகிடுவா. இதழினியிடமும் பேசி பழகினா. அப்ப தான் பாத்ரூம் போக இதழினியோட கூட்டிட்டு போயிருக்கா. என்ன தான் இதழினி பேசி சிரிக்க முயன்றாலும் சோகமா இருக்கறது மது கண்ணுல பட்டுச்சு., என்ன ஏதுனு விசாரித்து இருக்கா.
இதழினி சொல்லாம அமைதியா அழவும் அதே நேரம் மதுவந்தி போனை வாங்கி அவ நம்பரை ஸ்டோர் பண்ணி ‘உனக்கு ஏதாவதுனா எனக்கு சொல்லுனு’ டைப் பண்ணி அவளிடம் போனை ரிட்டர்ன் தர்றப்ப ஷண்முகம் ஏதோ புகைப்படம் அனுப்பவும் மதுவந்தி தற்செயலா பார்க்க நேர்ந்தது.
அதுக்கு பிறகு இதழினி ஷண்முகத்தை பற்றி கூறவும் மதுவந்தி அவ பார்த்துக்கறதா சொல்லிட்டு நம்பிக்கையா பேசிட்டு வந்திருக்கா.
பட் அதை ஷண்முகத்தோட கைத்தடி யாரோ பார்த்துட்டான். ஷண்முகத்திடம் போட்டு கொடுத்திடவும் செய்தான்.
ஏற்கனவே ஷண்முகம் சென்றதால மதுவந்தி அடுத்த நாள் மாதர்சங்கத்தோட வந்து ஹாக்கர் மூலமா எல்லாம் அழிச்சு அவனோட முகத்திரையை கிழிக்க வைப்பேனு பேசியதை சொல்லி கிளம்பிட்டா. அதை கேட்டதால ஷண்முகம் உஷாராகி முதல்ல மதுவந்தியை சாகடிக்க திட்டமிட்டார். அப்ப தான் வந்தவாசி டூ ஆரணி பஸ் வர்ற டைம். அவரோட விசுவாசத்துல வேலை சேர்ந்தவன் பஸ் ஓட்டவும் மதுவந்தி காரை இடிச்சி ஆக்சிடெண்ட் பண்ண சொன்னார்.
அவனும் பண்ணிட்டான்.
என் மதுவந்தி இறந்துட்டா. அவ வயித்துல மூன்று மாத கருவும் இறந்துடுச்சு.
நானும் விபத்துனு தான் நினைச்சி அழுது துடிச்சேன். ஒரு வாரம் கழிச்சி அவளோட போன்ல இந்த இந்த வேலை செய்யணும் என்ற சார்ட் இருக்கும். அதுல ‘மாதா இன்ஸ்டியூட் இதழினிக்கு உதவணும், ஷண்முகத்துக்கு பாலியல் வன்முறை செய்தாருனு தண்டனை வாங்கணும்’னு ஷார்டா போட்டிருந்தது.
எனக்கு அவ யாருக்கோ உதவணும்னு போட்டிருந்ததும். அது யாரு என்னனு பார்க்க அங்க போனேன். அப்ப தான் இதழினி என்ற பொண்ணு தற்கொலை பண்ணி இறந்தானு தெரிய வந்தது. மது இறந்தது ஆக்சிடெண்ட் இல்லைனு அப்ப தெளிவா புரிந்தது.
இங்க வந்து ஒரு வருடம் கண்காணிச்சேன். ஷண்முகம் கேரக்டர் வீட்டு வேலைக்காரங்க மூலமா சுலுவா வாங்கிட்டேன்.
மதுவந்தி இதழினியை இறந்ததுக்கு அவனை பழிவாங்க காத்திருந்தேன்.
எங்கயும் ஆதரவு அந்தாளுக்கு. ஜாதி மதம் ஊர்ல ரொம்ப வருட வாழ்ந்தவர் அதுயிதுனு ஆட்கள் இருந்தாங்க. எல்லா இடத்திலயும் நல்ல பெயர் வாங்கியிருந்தான். அந்த பெயரை வச்சிட்டு தானே பசு தோல் போர்த்தி புலி வேலை பார்த்தான். அதனால நானும் அந்த நல்லவன் என்ற பெயரை வாங்கினேன். ஊருக்கு வந்து இறங்கியதும் கடை. அதுவும் இரண்டு வகையான உணவும் சுத்தமா கிடைக்கிற பாங்குல வடிவமைச்சேன். கல்யாண வீடு காதுகுத்து எந்த விஷேஷம் என்றாலும் ஆளை வச்சி எடுத்து செய்தேன்.
உணவு மூலமா என்றைக்காவது ஷண்முகத்துக்கு விஷம் வைக்கலாம்னு. ஆனா அந்த பரதேசி ஹோட்டல் புட் சாப்பிட மாட்டான்.
காத்திருந்தேன்…. கழுகாட்டும்.
சந்தானம் கட்சிக்காக முட்டிக்கிறது தெரிந்து வச்சிக்கிட்டேன். கொலை பண்ண கூட சந்தானம் தயார் நிலையில இருப்பது முருகன் மூலமா தெரியும். அவருக்கு அடிக்கடி புட் சப்ளை செய்யறப்ப தெரிஞ்சுக்கிட்டேன்.
சந்தானத்தோட பிறந்த நாள் விழா அப்போ காண்ட்ராக்ட் என்னோடது தான். அதனால அங்க ஒரு கண்ணு வச்சிருந்தேன்.
சந்தானத்தோட கிச்சன்ல இருந்த கத்தியை எடுத்துட்டு இடையில சிக்கன் வறுவல் காலியாக இருக்குனு எடுத்துட்டு வர்றேனு கிளம்பினேன். அடிக்கடி திங்க்ஸ் எடுக்க வைக்கனு அன்னிக்கு எல்லா பக்கமும் பைக்ல வந்துட்டு போயிட்டு இருந்தேன். ஏற்கனவே ஷண்முகத்தோட வீட்ல ஷ்யாம் இல்லை, வேலையாட்கள் இல்லை. ஜாமர் வேற வாங்கி சிக்னலை கட் செய்து இருந்தேன்.
உள்ள போகலாம்னு இருந்தப்ப தான் தரண் பைக்ல வந்தான். தரண் பின்பக்க வழியில ஏறி போனான். நான் தரண் பைக்ல உப்பு மண்ணை அள்ளி போட்டுட்டு, ஜாமர் இருக்கறதால நேர் வழியிலேயே வேகமா சென்று ஷண்முகத்தோட அறைக்கு போய் குத்தி கொன்றேன்.
மதுவந்தி இதழினிக்காகனு சொல்லி சொல்லி குத்தினேன். என் வெறி தீரவும் தரண் வர்ற சத்தம் கேட்டுச்சு. சட்டுனு ஷ்யாம் அறைக்குள்ள போனேன்.
தரண் கொலையை பார்த்துட்டு விழிந்தடித்து போய் பைக்கை ஸ்டார்ட் செய்தான். பட் வண்டி ஸ்டார்ட் ஆகலை என்றதும் ஓடி சந்தானத்தோட வீட்டுக்கே வந்திருக்கான். அங்கிருந்து காரை எடுத்திருக்கான். பாவம் கொலை செய்தோ திட்டமிட்டோ பழக்கமில்லையில்ல.
நான் எப்பவும் போல வெளிவந்து நேரா சந்தானத்தோட தோட்டத்துல எல்லோரோடவும் மிங்கிள் ஆகிட்டேன். எதுக்கோ இங்கிருந்து என்னை யாரும் தேடிடக் கூடாதுனு பேக்கெட்ல இருந்த மிளகாய் பவுடரை யார் பார்க்காதப்ப தூவிட்டேன்.
அதனால தான் சைரா நேரா வந்து மிளகாய் பவுடர் இடத்துல வந்து கன்பியூஸ் ஆகிடுச்சு.
இதுல தரண் மாட்டுவான் பணமும் பதவியும் கட்சியும் வேண்டும்னு நினைக்கிறவனே இந்த கொலை பழியை ஏற்றுக் கொண்டு சாகட்டும்னு இருந்துட்டேன்.
எப்படியும் போலிஸ் உடனே இங்கிருந்து போனா சந்தேகப்படும்னு தான் இதே ஊர்ல இருந்தேன். அதுவுமில்லாம யார் வர்றா என்னனு பார்க்க ஆர்வமா இருந்தது.
ஒரு பெண் வந்திருக்கானு தெரியவும் அதிர்ச்சி தான். ஆனா கண்டுபிடிக்க மாட்டேனு நினைச்சேன். நீ புத்திசாலியா இருந்தியா கொஞ்சம் பக்குனு இருந்தது.
இதுல நம்மளை வச்சி கிசுகிசு வேற. எனக்கு அதுல நீ தடுமாறி என்னைய கோட்ட விடுவனு நினைச்சேன். போதாதிற்கு தரண் கிடைக்கவும், அப்பாடா கேஸை முடிச்சிடுவனு பார்த்தேன். பட் நீ இறங்கி செய்துட்ட. ஆவ்சம்…” என்றான் மதிமாறன் கைதட்டி.
“உன்னால தரண் ஜெயிலுக்கு போனானு குற்றவுணர்வா இல்லை, அவன் இன்ஹலர் இல்லாம முச்சு விட சிரமபட்டு செத்துட்டானே அதுக்கு வருந்தலை?” என்று கேட்டாள் நற்பவி.
“தரண் தங்கை இதழினியால தான் என் மதுவந்தி அவ வயித்துல உருவான என் குழந்தை இறந்தது. அப்ப கூட அவன் எதிர்பார்த்த கொலையை நான் செய்தேன்.
இறப்பு எதுவும் நம்மிடம் இல்லையே. என் மது எப்படி ஒரே நாள்ல அவ வாழ்க்கையில இறப்புக்கு காரணமா கடவுள் எழுதி வச்சானோ அது மாதிரி தரண் வாழ்க்கையில எழுதிட்டார். இதுல என் பங்கு எதுவும் இல்லை.
நான் கொலை செய்ததற்கு ஆதாரமும் இல்லை. உன்னால என்னை உள்ள தள்ளவும் முடியாது. மதுவந்தி இறப்பை மறுபடியும் இன்வஸ்டிகேஷன் பண்ண முடியாது. அப்படி பண்ணினா மீதி எல்லாம் வரும். ஆனா அது திரும்ப தோண்டி எடுக்க முடியாது. அது ஜஸ்ட் ஆக்சிடெண்ட் என்று பதிவாகியிருக்கு. இந்த ஷண்முகத்தோட இறப்பு தரண் கொலை செய்யப்பட்டான்னு கேஸ்ல பதிவாகியிருக்கு.
எல்லாம் முடிஞ்சிடுச்சு… முடியுறப்ப உனக்கு தெரிந்துடுச்சு. அவ்ளோ தான்.” என்று தோளை குலுக்கினான்.
நற்பவி சிலையாக நின்றாள் அவன் கூறுவது போல எந்த ஆதாரமும் இல்லை. அப்படியிருக்க சாமர்த்தியமாய் செய்து ஜித்தனாக மாறி நிற்கின்றான்.
“எனிவே பயப்படாம சாப்பிடுங்க. நான் எதுவும் கலக்கலை.” என்று சைராவுக்கும் பிடித்த பிரியாணி பொட்டலத்தை பிரித்து வைத்து சென்றான்.
நற்பவிக்கு மதிமாறன் என்று அறிந்தாலும் ஆதாரமின்றி பிடிக்க இயலாத நிலை. மற்றவருக்கோ தரண் இறப்பிற்கு பின் நற்பவி காட்டிய தீவிரத்தில் தரண் இல்லைனா ஷண்முகத்தோட *உயிரை உருவியது யாரோ?* என்ற வினாவோடு இன்னமும் சிலர் மதிமாறனை அறியாமலே இருந்தனர்.
*முற்றும்*
-பிரவீணா தங்கராஜ்.
Epilogue வேண்டும் என்பவருக்கு சும்மா… 😜 சின்னதா… ஒரு காதல் மொட்டு
நற்பவி மாறன் குற்றவாளி என்று அறிந்தும் வெளியே சொல்லவோ அவனை சட்டதின் முன் நிறுத்தவோ இயலாமல் மதிமாறனை பார்ப்பதை கூட தவிர்த்தாள், அவன் வருவது போல தெரிந்தாலும் பேசாமல் கடந்து சென்றாள். இப்படியே நாட்கள் மாதங்கள் சென்றது.
நற்பவிக்கு போஸ்டிங் வரவும், அதனை பிரித்து பார்த்தாள். மகிழ்ச்சியோடு தந்தையோடு பேசினாள். நேற்று தான் அக்கா நன்விழிக்கு இரட்டை குழந்தை என்று குதுகலித்தாள். இன்றோ தனக்கு சென்னைக்கே போஸ்டிங் என்றதும் ஆனந்தமாய் மகிழ்ந்தாள்.
ஸ்டேஷன் செல்லும் வழியில் மதிமாறன் வண்டியை நிறுத்தி கைகட்டி காத்திருந்தான்.
நற்பவி வண்டியின் ஓட்டத்தை குறைத்து நிற்கவும் அவளருகே வந்தான். அவளுக்கு இங்கிருந்து சென்றால் இனி இவனை பார்க்க இயலாதே என்ற எண்ணத்தில் நிறுத்தி விட்டாள்.
“ஹார்ட்டி கங்கிராஜூலேஷன்… சித்தியா ஆகிட்டிங்களாமே.. நடிகர் ப்ரனித்திற்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. பேப்பர்ல போட்டிருக்குங்க.” என்றதும் நற்பவி முறைத்து முகம் திருப்பினாள். அவன் வாசு மூலமாக பதவி உயர்வும் போஸ்டிங்கும் மாற்றம் கிடைக்க அறிந்து வாழ்த்துவானென எண்ணி ஏமாந்தாள்.
அவனோ மெதுவாக இடைவெளி விட்டு “அப்பறம் போஸ்டிங் வேற மாறுது. வாசு அண்ணா சொன்னார் அதுக்கும் வாழ்த்துக்கள்.” என்றவன் ஆழ்ந்து மூச்சை விடுவித்து சுற்றிமுற்றி பார்த்து, “என்னால இங்க இருக்க முடியாது நானும் சென்னைக்கு பெட்டிய கட்டணும். உங்களுக்கு முன்னாடியே முன்னயே போகணும்னு பார்த்தேன். ஆனா தனியா உங்களை விட்டுட்டு போக மனசு கேட்கலை.” என்று இதயம் இருக்கும் பகுதியை சுட்டி காட்டி பேசினான். அவன் செய்கை பேச்சை கண்டு திடுக்கிட்டாள்.
அவனோ தொடர்ந்தான், “அதனால தான் நீங்க கிளம்புற வரை வெயிட் பண்ணினேன். இப்ப உடனே போனா அதையும் இந்த கிராமத்துல கிசுகிசுப்பாங்க. கிசு கிசு நமக்கு புதுசுயில்லை, அதனால நீங்க போனதும் ஒரு மூன்று மாசம் கழித்து இங்கிருந்து கிளம்பிடுவேன். என் அட்ரஸ் மாறும். பட் போன் நம்பர் மாறாது. தேவைப்பட்டா கூப்பிடுங்க” என்று இடது கண்சிமிட்டி, வலது கையை நெற்றியில் தொட்டு எடுத்து சல்யூட் வைத்து மறைந்தான்.
அவன் கொடுத்த ஸ்வீட்டை கையில் வைத்து கொண்டு அவன் சென்ற பாதையே வெறித்தாள்.
-to be continue இதயதிருடா….
உயிர் உருவியது யாரோ கதை இத்துடன் முடிந்தது. இதன் தொடர்ச்சியாக நற்பவி மதிமாறன் காதல் கலந்த சமூக கதை இதயத்திருடா என்ற தலைப்பில் வேறொரு கதை களத்துடன் சந்திப்போம்.
நன்றி,
-பிரவீணா தங்கராஜ்.
ஆகஸ்ட் 15 வரும்.
எப்பவும் போல உங்கள் ஆதரவும் அன்பும்.
Short and sweet…..
Wow super super fantastic ending sis. Next story lead also very intresting
Super super super super super super super super super super super