Skip to content
Home » என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-2

என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-2

ராகம் 🎶 2 🎶

“ஷாலு! நீ உள்ள போ. நான் வண்டியை பார்க்கிங் விட்டு வரேன்.”

“சரி,” என்றவள் அந்த நான்கு தளங்களைக் கொண்ட எஸ் எம் மருத்துவமனையை பார்த்தவண்ணம் இறங்கினாள்.

அவள் கால்கள் ரிசப்ஷனை நோக்கி சென்றன. ரிசப்ஷனில் யாரும் இல்லை.

கண்களை சுழற்றியவள், கண்களில் சிக்கினான் , சஞ்சய் !

அவள் மனோ வீட்டில் தங்க வைக்கப்பட முக்கிய காரணமானவன் அவன் தான். அவன் சொல்லாவிட்டால், அனாதரவாக ஹாஸ்டலில் தங்கி இருப்பாள். அவனுக்கு ஒரு நன்றி கூட சொல்லாதது உறுத்தியது.

அவளது கால்கள் தன்னாலே அவனை நோக்கி சென்றன.

“ஹலோ!”

அவளது குரலில் கவனம் குவித்தான் சஞ்சய். அவன் அவளை கேள்வியாய் பார்த்தான்.

“எனக்காக உங்க அம்மாக்கிட்ட பேசினதுக்கு தேங்க்ஸ் . என் பேர் ஷாலினி.” தன் கையை நீட்டினாள்.

அவன் அவள் கையை பார்த்துவிட்டு, “உன் அண்ணா அப்சர்வேஷன் ரூம்ல இருக்காரு,” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

ஷாலினியும் அவன் சென்ற திசையை பார்த்தாள்.

“ஓய்! இங்கே நின்னு என்ன பண்ற? எந்த ரூம்னு கேட்டியா?”

“ஃபர்ஸ்ட் ப்ளோர்ல அப்சர்வேஷன் ரூம்ல இருக்காங்களாம்.”

“அதற்கு ஏன் இப்படி முழிக்கிற?”

“இல்ல, மனோ… உன் அண்ணனை பார்த்தேன். எனக்காக உங்க அம்மா கிட்ட எல்லாம் பேசினாங்களே! ஒரு தேங்க்ஸ் சொல்லலாம்னு இன்ட்ரோ கொடுத்தா கண்டுக்காம, ‘உன் அண்ணன் மேல இருக்காருன்னு சொல்லிட்டு அவர் பாட்டுக்கு போயிட்டாரு!'”

“நான்தான் சொன்னேன்ல ? அவன் ரொம்ப சை டைப். என்கிட்டயே ரெண்டு லைனுக்கு மேல பேசினதில்லை தெரியுமா?”

“எப்படிடா பேசாம அவரால இருக்க முடியல?”

“அது தான் எனக்கும் தெரியல!”

“எனக்கு எல்லாம் பேசாட்டி பைத்தியம் பிடிச்சுடும்!”

“இப்பவே அப்படித்தான் இருக்க!”

“ஓய்!” என்று கூறி அவன் முதுகில் ஒரு அடி வைத்தாள்.

“டாக்டர் மனோகரன்.”

“எஸ், சிஸ்டர்?”

“உங்களை டாக்டர் சஞ்சய் அவரு ரூமுக்கு வர சொல்லிருக்காங்க.”

“வெயிட் பண்ணு… நான் இவங்களை அப்சர்வேஷன் ரூம்ல விட்டுட்டு வரேன்.”

“நான் வேணா விட்டுட்டு வரவா, டாக்டர்? ஏன்னா டாக்டர் சஞ்சய் எமர்ஜென்சி இல்லனா யாரையும் கூப்பிட மாட்டாங்க, அதான்!”

“யா ஓகே. இவங்களை நியூ பேஷன்ட் பிரவீன் ரூம்ல விட்டுருங்க. ஷாலு, நீ அவங்க கூட போ. நான் முடிச்சுட்டு வந்துடறேன்.”

“ம்ம்..” என்றவள், மாலதியுடன் நடந்தாள்.

“நீங்க, டாக்டர் மனோகரோட ரிலேஷனா?”

“இல்ல. அவரு என் அண்ணாவோட பிரண்ட்.”

“அப்போ, பேஷன்ட் பிரவீன் தான் உங்க அண்ணனா?”

“ஆமாம்.”

“எப்ப இப்படி ஆச்சு?”

“டென் டேய்ஸ்க்கு முன்னாடி நடந்த ஆக்சிடென்ட்ல அப்பாவும் அம்மாவும் இறந்துட்டாங்க. அண்ணா கோவமாக்கு போயிட்டான்.”என்றாள், கண்ணீருடன்.

“ஓ மை காட் ,கவலைப்படாதீங்க. இந்த உலகத்துல யாரும் , எதுவும் நமக்கு நிரந்தரம் இல்ல. யாராலயும் நம்ம உலகம் நிக்கப்போறதில்லை. எல்லா மனிதர்களும் பாசிங் கிளவுட்ஸ் தான். என்ன உங்க அப்பா, அம்மா சீக்கிரம் உங்களை வீட்டுக்கு போயிட்டாங்க. போன உயிரோட ஆத்மாக்காக பிரார்த்தனை பண்ணுங்க. இதுதான் அப்சர்வேஷன் ரூம். நீங்க போய் பாருங்க. ரொம்ப நேரம் உள்ள இருக்காதீங்க. டாக்டர் பார்த்தா திட்டுவாங்க.”

“ம்ம்….” என்றவள், அறை கதவை திறந்தாள்.

எந்த சலனமுமின்றி படுத்திருந்தான் பிரவீன்.

அவன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவளுக்கு நேற்றைய இரவு முதல், பின்னுக்கு சென்ற துக்கம் முன்னே வந்து ஆட்டி படைத்தது.

“ஏண்டா இப்படி பண்றீங்க? இவ்வளவு நாள் என்னை செல்லமா வளர்த்தது, இப்படி மொத்தமாக உட்கார்ந்து அழுக வைக்க தானா?, அப்பா, அம்மா தான் என்னை விட்டுப் போயிட்டாங்க. நீயாவது கூட இருப்பேன்னு பார்த்தா, இப்பவா அப்பவான்னு பயமுறுத்துட்டே இருக்கடா! நீ இருக்குற தைரியத்தை தான் நான் இருக்கேன். இல்லன்னா, நான் எப்படிடா இருப்பேன்?

இதோ… நீ இப்படி படுத்து இருக்கிறதால, மனோ வீட்டில அவங்க வீட்டு ஆளுங்களுக்கே பிடிக்காம இருக்கேன். இப்படி யார் வீட்டிலேயோ எதுக்குடா கட்டாயமா இருக்கணும்? ப்ளீஸ்… பாவம் தானே நான். என்னை பயமுறுத்தாம சீக்கிரம் எழுந்து வாடா!”
என்றவள், அவன் கையில் சாய்ந்து அழுதாள்.

“ஷாலினி!”

அந்த அழுத்தமான குரலில் பதறி எழுந்தாள் ஷாலினி.

“இப்படி பேஷன்ட் முன்னாடி அழுக கூடாது? மே பி, அவர் கோமால இருக்கலாம். பட், அவர் சுத்தி நடக்கிறத, அவர் அப்சர்வ் பண்ணிட்டு தான் இருப்பாங்க. எப்படி நீ அழுதா அவரோட BP ரைஸ் ஆகலாம். அப்புறம் நிலைமை மோசமாக வாய்ப்பிருக்கு. பேஷண்ட் முன்னாடி ஸ்ட்ராங்கா இருக்கணும்!”

என்றவன், “சிஸ்டர்!” என குரல் கொடுக்க, அருகே இருந்த செவிலி பெண் ஊசியை அவன் கையில் கொடுத்தாள். 

அதை வாங்கியவன், பிரவீனின் உடலில் செலுத்தினான். 

“பேஷண்ட்டா டிஸ்டர்ப் பண்ணாம, எமோஷனல் ஆகாம இருக்கணும், ஷாலினி! இல்லனா உன்னை அலோவ் பண்ண மாட்டோம், ஞாபகம் வச்சுக்கோ!”

என அவன், ஒரு கணம் ஷாலினியை நோக்கி பார்க்க, கண்களை துடைத்து, தலையை மட்டும் ஆட்டினாள். 

செவிலிய பெண் வித்தியாசமாக பார்த்தாள்.

அதை அவன் கவனித்தானோ என்னவோ விறுவிறுவென வெளியில் சென்றான்.

அவன் சென்ற சிறிது நேரத்தில், உள்ளே நுழைந்தான் மனோ. 

“ஷாலுமா, பிரவீன் ரிப்போர்ட் பார்த்தேன். முன்ன விட பெட்டரா தான் இருக்கு. நீ கவலைப்படாதே! சீக்கிரமே எல்லாம் சரியாகும்.

இப்போ எனக்கு டியூட்டி இருக்கு. நீ பிரவீன் கூட இரு. உனக்கு போர் அடிச்சா, கீழ வந்து என் ரூம்ல இருக்கலாம்.

சிஸ்டர்ஸ் கிட்ட வந்து கேட்டா எந்த பக்கம் னு சொல்லுவாங்க. அங்க வந்து உட்காரு. உனக்கு ஏதாவது வேணும்னாலும், இங்க உள்ள சிஸ்டர்ஸ் கிட்ட என் பேர் சொல்லி கேளு. உனக்கு பண்ணி தருவாங்க.” 

“சரி, மனோ.”

என்றவளது வார்த்தைக்குப் பதிலாய், புன்னகையை உதிர்த்த மனோ அங்கிருந்து சென்றான். 

அறையின் அமைதியை கலைத்தது பிரவீனின் ECG மானிட்டர். 

அவன் அருகில் அமைதியாய் அமர்ந்தவள், உள்ளுக்குள் துக்கம் பொங்கினாலும், வாயை திறக்கவில்லை. 

கதவை யாரோ தட்டி, பின் உள்ளே நுழையும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தாள். சிஸ்டர் மாலதி தான். 

“டாக்டர் இதை உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க.”

என, ஒரு புத்தகத்தையும் மாதுளம்பழ சாறையும் நீட்டினாள். 

புன்னகையுடன் அதை வாங்கியவள், “தேங்க்ஸ், சிஸ்டர்!” என சொல்ல, சிஸ்டர் புன்னகையை பதிலாக கொடுத்து, அங்கிருந்து கிளம்பிவிட்டாள். 

இப்போது வாட்டும் இந்த தனிமைக்கு, புத்தகம் சிறந்த துணை என உணர்ந்தவள், மனோவிற்கு மனதில் நன்றி சொல்லி, புத்தகத்தில் மூழ்க ஆரம்பித்தாள். 

அமைதியான இரவு நிசப்தத்தில் நிலவைப் பார்த்துக் கொண்டு, பால்கனியில் நின்றாள் ஷாலினி. 

“ஷாலு! நீ அங்க என்ற பண்ற பனி பொழியுது பாரு! வா, டின்னர் சாப்பிடலாம்.”

“இல்ல, கொஞ்ச நேரம் ஆகட்டும்.மணி 8 தானே ஆகுது.”

” 8 தானேவா!”

“எங்க வீட்டு மிலிட்டரிக்கு 7 மணிக்கே டின்னர் முடிக்கணும். அம்மா தான் அப்பா கிட்ட சண்டை போட்டு, ‘வயசு பிள்ளைங்க, நைட் பசிச்சுரும்னு சண்டை போட்டு அதை 8 மணி ஆக்கிருக்காங்க.

இந்த வீட்ட பொறுத்தவரை, 8 மணிக்கே டின்னர் முடிக்கணும்.

9 மணிக்கு எல்லாம் பெட்டுக்கு போயிடனும். தூக்கம் வருதோ இல்லையோ, லைட் ஆப் பண்ணிட்டு, பெட்ல கண்ணை மூடிடணும்.

நைட், ஹாஸ்டல் வார்டன் மாதிரி, என் டாடி ரவுண்ட்ஸ் வருவார்!”

“என்ன சொல்ற மனோ ?” கலக்கமாக கேட்டாள்,ஷாலினி… 

“உன்ன மாதிரி 11 மணிக்கு டின்னர் சாப்பிட்டு, ஒன் , ஒன் தர்ட்டி வர ஃபோன்னை ஸ்வைப் பண்றதுன்னு மிலிட்டரிக்கு தெரிஞ்சது, டின்னு கட்டிருவாரு!”

“நீ சொன்ன மாதிரி அவர மிலிட்டரில சேர்த்து விட்ருக்கனும் உன் தாத்தா. யாராவது 8:00 மணிக்கு எல்லாம் சாப்பிடுவாங்களா?”

“இப்போ நீ இதை என் டாடி கிட்ட கேட்டு இருந்தா, டைஜஸ்ட்டிங் சிஸ்டம் பத்தி மூணு மணி நேரமாவது கிளாஸ் எடுத்திருப்பார்! இங்கே சாப்பிட்டு தான் ஆகணும், வா கீழ போலாம்!” என அழைத்து சென்றான்.

டைனிங் டேபிளில், சஞ்சய் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருக்க, அவன் அருகே ஷாலினியை அமர வைத்தவன். ஷாலினி அருகே , அவன் அமர்ந்து கொண்டான்.

“சோ, சேட்! இன்னைக்கு இட்லிதான்!” என அவன் தட்டில் இரண்டு இட்லி வைத்துவிட்டு, ஷாலினி தட்டிலும் இரண்டு இட்லி வைத்தான்.

இருவரின் தட்டிலும் சட்னி வைத்தவன், அப்பொழுதுதான் சஞ்சயின் தட்டை கவனித்தான்.

“என்னடா? வெறும் இட்லிய சாப்பிட்டுட்டு இருக்க? இந்தா சட்னி!” என நகட்டி வைக்க, ஷாலினி அதை எடுத்து சஞ்சயின் தட்டில் வைத்தாள்.

சஞ்சய் சட்டென எழுந்து நின்றான். ஷாலினி கேள்வியாய் நோக்க,

“இல்ல, போதும்!” என வாஷ்பேசன் சென்று கைகளை கழுவினான்.

அப்பொழுது தான் சமையலறையில் இருந்து தோசையுடன் வெளிவந்தார், பத்மா.

“சஞ்சய் சாப்பிடலையா?”

“போதும்மா?” என்றவன் விறுவிறுவென மேலே ஏறி அறையில் அடைந்தான்.

அதைப் பார்த்து கோபமான பத்மா, டைனிங்கில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஷாலினியை பார்த்து,

“இப்ப நீ சாப்பிடலன்னு யார் அழுதா?” என கேட்டார்.

சாப்பிடிக்கொண்டிருந்த இட்லி தொண்டையில் சிக்கிக் கொண்டது, ஷாலினிக்கு.

“அம்மா, என்ன பேசுற?”

“நீ வாய மூடுடா! எல்லாம் உன்னால தான்! உனக்கு தெரியாதா உன் அண்ணனைப் பத்தி? அவன் கூச்சப்படுவான்னு. அவனுக்கு ஒரு இட்லி கூட வேணும்னா என் கிட்ட கூட கேட்க மாட்டான். அப்படிப்பட்டவன் பக்கத்துல இவ்வள உட்கார வைச்சா, எப்படி சாப்பிடுவான்?ஒரு இட்லி கூட முழுசா சாப்பிடல. போயிட்டான்!”

“அவன் தான் சாப்பிடறான்ல, அப்புறம் வந்து சாப்பிட வேண்டியதுதானே உனக்கு என்ன அவசரம்?சோறு போட மாட்டேன்னா சொன்னேன்.” என பதிலடி கொடுத்தாள், ஷாலினி.

“சாரி, ஆன்ட்டி!” என்றவள் கைகளை கூட கழுவாமல் அங்கிருந்து ஓடி அறையில் நுழைந்தாள்.

“இத உங்ககிட்ட இருந்து கொஞ்சமும் எதிர்பார்க்கலாமா? சாப்பிட உட்கார்ந்தவக் கிட்ட, இப்படியா கேப்ப?”

“ஓ, அவள் சாப்பிடாம போனது மட்டும்தான் உன் கண்களுக்கு தெரியுதா? என் பையன் சாப்பிடாம போனது உன் கண்ணுக்கு தெரியலையா?”

“சஞ்சய் அவனாதான் எழுந்து போனான். ஆனால், நீ சாப்பிட்டு இருந்தவளை இப்படி அசிங்கப்படுத்தி அனுப்பிட்டே?”

“ஓஹோ! அவளுக்காக பெத்த அம்மா கிட்ட சண்டைக்கு வரியா? அப்படி என்னடா அவ உனக்கு ஒசத்தி?”

” ஒசத்தி தான்! அவ எனக்கு ஒசத்திதான். எப்படின்னு உங்ககிட்ட சொல்லனும்னு அவசியம் எனக்கு கிடையாது!”

அதைச் சொல்லியவன், தட்டிலேயே கை கழுவிக் கொண்டு எழுந்து சென்றான்.

“டேய், நீயாவது சாப்பிட்டு போடா!”

“இப்போ நான் சாப்பிடலைன்னு யாரு அழுதா?” என்றவன், படிகளில் ஏறினான்.

“என் பிள்ளையவே எனக்கு எதிரா திருப்பிட்டா?” என்று புகைந்து கொண்டாள் பத்மா.

“ஷாலு! ஷாலு! கதவை திற!” என கதவை பலமாக தட்டினான் ,மனோ.

அவள் கன்னத்தில் வழிந்த நீரை விரலால் அழுத்திச் சரி செய்தவளால், ஆனால் உள்ளுக்குள் வெடிக்கத் தயாரான துக்கத்தை அடக்க முடியாமல் இருந்தாள். மனோவிற்காக துக்கத்தை தொண்டையில் அடக்கியவள். போலியாய் முகத்தில் புன்னகையை பூசிக்கொண்டாள்.

“என்னாச்சு மனோ? ஏன் இப்படி தட்டற? நீ சாப்பிடலையா?”

“போதும்! நீ எனக்காக ஒன்னும் நீ நடிக்க வேண்டாம்.”

“நான் எதுக்கு நடிக்கணும்? தப்பு என் மேலதான்! உங்க அண்ணன பத்தி தெரிஞ்சும், நான் அவங்க சாப்பிடும் போது போய் இருக்கக்கூடாது.”

“நீ என்ன பண்ணுவ? அவன பத்தி நான் யோசிக்கல. எதார்த்தமா எடுத்துட்டு, உன்னையும் கம்பல் பண்ணி நான் தான் கூட்டிட்டு போனேன். அம்மா இப்படி ஹார்ஷா பிஹேவ் பண்ணுவாங்கன்னு நான் எதிர்பார்க்கல. அம்மா சார்பா நான் மன்னிப்பு கேட்கிறேன். சாரி, ஷாலு!”

“நீ என்ன பண்ணுவ, விடு மனோ.நான் ஃபீல் பண்ணல.”

“சரி. வா! நாம்ம வெளியே போய் டின்னர் சாப்பிடலாம்.”

“இல்ல! எனக்கு பசி இல்ல. உனக்கு தான் தெரியுமே, நான் எப்பவும் 11 மணிக்கு மேல தான் சாப்பிடுவேன். சுத்தமா பசி இல்ல. நீ கம்மல் பண்ணதால தான் டின்னருக்கு வந்தேன்.”

“சரி, நாம அப்பறமா போலாம்.”

“இல்ல மனோ! நேத்து ட்ராவல் பண்ணது ரொம்ப டயர்டா இருக்கு. இப்ப தூங்கிட்டா, எந்திரிக்கமாட்டேன்.”

“நைட்டு பசிக்கும். நாம வேணா பார்சல் வாங்கிட்டு வரவா?”

“ப்ளீஸ் மனோ! கில்டியா பீல் பண்ணாத. எனக்கு கஷ்டமா இருக்கு.நான் ஓகேதான். எனக்கு பசிச்சா, நானே உன்ன கூப்பிடுறேன். போதுமா?”

“கூப்பிடு,” என்றவன் வெளியேற, கதவை சாத்திவிட்டு கட்டிலில் அமர்ந்தவள். அழுது, கரைந்தாள்.

அழுத சோர்வில் கண்கள் சொறுக, அப்படியே உறங்கியும் போனாள்.

மணி இரண்டு இருக்கும். வயிற்றில் இருந்து கடமுடா சுழற்சியில் கண் முழித்தாள், ஷாலினி.

ஒரு நாளும் பசியில் இருந்தது இல்லை. கோபப்பட்டு சாப்பிடாமல் இருந்தாலும், அண்ணன், தந்தை, தமயன் என ஆளுக்கு ஒரு தட்டுடன் அவளையே சுற்றி வந்து, அவளுக்கு ஊட்டி விட்டு தான் மறு வேலை பார்ப்பார்கள். அதிலும் பிரவீன், தங்கைக்கு பிடித்த தலைப்பாக்கட்டு பிரியாணியை நல்லியுடன் வாங்கி வந்து சமாதானம் செய்வான்.

அது எல்லாம் இப்போது ஞாபகம் வர, அவள் நாசியிலும் பிரியாணியின் மணம் நிறைந்தது. திரும்பி பார்க்க, “தலப்பாக்கட்டு பிரியாணி” கவர் ஒன்று மேஜையில் வீற்றிருந்தது.

ஒரு நாள், மனோ அழைப்பு விடுத்த போது “டேய், நான் தங்கச்சிக்கு தலப்பாக்கட்டு பிரியாணி கொடுத்து சமாதானம் படுத்திட்டு இருக்கேன். வைடா போனை. அப்புறம் கூப்பிடுறேன்!”

எனக் கூறியதும்,

“ஏன்? உன் தங்கச்சிக்கு ஆம்பூர் பிரியாணி கொடுத்தா எல்லாம் சமாதானம் ஆக மாட்டாளா? தலப்பாக்கட்டு பிரியாணிக்கு தான் சமாதானம் ஆவாளா?”என கிண்டல் செய்ததும் ஞாபகம் வந்தது.

“நீயே எனக்கு தலப்பாக்கட்டு தான் வாங்கி கொடுத்திருக்க, மனோ!”

தன்னைக் காக்கவும் ஒரு ஜீவன் உள்ளது என மனம் நிறைந்தவள்
நாசியில் நிறைத்த பிரியாணியை, மன்னிக்கவும், தலப்பாக்கட்டு பிரியாணியை வயிற்றில் நிறைத்தாள். சாப்பிட்டதும் படுத்தவள்.
மனம் எந்த சஞ்சலமும் இன்றி அமைதியாய் உறங்கிப் போனாள்.

Trust me friends briyani is not a good . It’s an emotion!!!!

4 thoughts on “என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-2”

  1. கூச்சம் இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா???… பிரியாணி மனோதான் வாங்கி வச்சிருந்தானா???… சூப்பர் சூப்பர்!!…

    ஆங்காங்கே கதாப்பாத்திரம் பெயர், டைலாக்ஸ்ல பிழை இருக்கு!!… சரி பார்த்துக்கொள்ளவும்!!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *