Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-30

ஐயங்காரு வீட்டு அழகே-30

அத்தியாயம்-30

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

     ‘என்ன நெஞ்சழுத்தம்? இத்தனை நாள் என் கூட வர்றவ, இன்னிக்கு கோபம் வந்ததும் தனியா போயிட்டாளா.’ என்று கோபத்துடன் வண்டியை இயக்கினான்.‌

      வீட்டுக்கு வந்ததும் சண்டையிழுப்பான் என்ற ரீதியில் காருண்யா ஹாலில் காத்திருக்க, ராவணன் வந்ததும் வராததும் அறைக்கு சென்று குளித்து உடைமாற்றி வெளியே சென்றுவிட்டான்.

  அதோடு இரண்டு மணி நேரம் கழித்து வந்து சேர்ந்தான்.
“எங்க போனேள்” என்று காருண்யா அதிகார தோரணையில் கேட்க, “என்னை கேள்விக் கேட்கற அதிகாரம் உனக்கில்லை” என்றான் நிதானமாய்.

  “வாயை மூடிட்டு சும்மாயிருக்கணும்னு சொல்றேளா? அவ உங்களை நேசித்தவா. வேண்டுமின்னே என்னை வெறுப்பேத்த உங்களிடம் குழையறா. அது தெரிந்தும் நீங்க” என்று பேச பேச அவன் பாட்டிற்கு உடை மாற்றி படுத்துக்கொள்ள, “நான் பேசிட்டு இருக்கேன். நீங்க பாட்டுக்கு படுத்தா எப்படி?” என்றாள்.

  “இதப்பார்…‌ நான் இந்த ஆபிஸுக்கு வந்தப்ப நீ என்னிடம் சரியா முகம் கொடுத்து பேசாட்டியும், ஏதாவது காரணம் இருக்கும்னு நானும் லிமிட்டா பேசினவன்.
  தெரிந்த பெண்ணிடமே எந்த லிமிட் என்று மைண்ட்ல பிக்ஸ் பண்ணிருக்கேன். அப்படியிருக்க ஷாலினியிடம் எந்தளவு லிமிட்ல இருக்கணும்னு எனக்கு தெரியும்.
  நீ அசிங்கமா பேசியது அவளை இல்லை. என்னை… என் கேரக்டரை.

அங்க என்ன சொன்ன? ‘பொண்டாட்டி கூப்பிட கூப்பிட நீங்களும் வழிஞ்சி பேசிட்டு சுத்தறேள். உங்களை சொல்லியும் குத்தமில்லை. ஆம்பளை புத்தி இப்படி தான். பொண்ணுன்னா இறங்கி வந்து உதவுவேள்’

   என் மேல நம்பிக்கையில்லாம என்னென்ன வார்த்தை பேசின. ஆம்பளை புத்தின்னா…. அப்ப நான் எவ பேசினாலும் கூட ஒட்டிப்பேன்னு தானோ? அப்ப இத்தனை நாள் என்கூட வாழ்ந்த வாழ்க்கைக்கு என்னடி அர்த்தம்.
  கடைசில இந்த நம்பிக்கையான காதல், நமக்குள் வரவேயில்லை. கட்டாயத்துல கல்யாணம் செய்தது, கிணத்துல போட்ட கல்லா அப்படியே இருக்கு.
  நீ சொன்ன மாதிரி கட்டில்ல உருண்டது மட்டும் தான்‌ மிச்சம். காதல்… நமக்குள்ள மலரவேயில்லை” என்று வருத்தமாய் பேசினான்.

“இல்லை…நீங்க வந்து” என்றவளை தடுத்து, “என் கேரக்டரை ஜட்ஜ் பண்ணிட்டல்ல… இனி என் முகத்துல முழிக்காத.. உன்னை பார்த்தாலே பிடிக்கலை.” என்று முகம் திருப்பி படுத்துக்கொண்டான்.

   “இப்படி சாப்பிடாம படுத்தா எப்படி? நான் ஒன்னும் உங்களை நம்பாம இல்லை.” என்று பேச, “உன் நம்பிக்கையை எடுத்து குழி தோண்டி புதை” என்றவன் போர்வையை முகத்தோடு சேர்த்து போர்த்தி அவளை தவிர்த்தான்.

  “என்வி சாப்பிட்டு ஹெவின்னு தூங்கறேள். அதானே.. அப்படியே இருங்கோ. நானா இறங்கி வந்தேன் பாருங்கோ. அதான் இப்படி உதாசினம் பண்றேள்.” என்றாள்.

  இன்னமும் காருண்யா செய்த தவறு அவளுக்கு விளங்கவில்லை என்ற போது ராவணன் அதை சுட்டி காட்டி பேசி விளக்க தயாராகயில்லை. காருண்யாவுக்கு அவள் செய்த தவறு நன்றாகவே அறிவாள். ஆனால் அதை ஒப்புக்கொள்ளவும் மறைக்கவும் முயலும் போது அங்கே எவ்வித உறவுக்கும் உண்மை தன்மை இல்லையே.

  இரண்டாவது சண்டை… அவ்வளவே என்று காருண்யா நினைத்து  அவளும் சாப்பிடாமல் உறங்கிவிட்டாள்‌.

  அடுத்த நாள் ராவணன் தாமதமாக தான் எழுந்தான். காலையிலேயே எழுந்து பேசவோ சண்டையிடவோ விருப்பமின்றி தூங்குவது போல பாசாங்கு செய்தான்.

  காருண்யா குளித்து முடித்து சமைத்து தயாராக, புயலை போல அவனும் தயாராகியிருந்தான்.
   கெட்டிலில் செம்பருத்தி டீயை போட்டுவிட்டு பிரெட்டில் ஜாம் தடவினான்.

   “பொங்கல் செய்திருக்கேன். பிரெட் ஜாம் எடுத்தா என்ன அர்த்தம்?” என்று கேட்டு நின்றாள்.

“ஏற்கனவே நீ போட்ட கல்லு நெஞ்சுல இருக்கு. இதுல பொங்கல்லா… நீயோ சாப்பிடு.” என்றவன் பிரெட்டை விழுங்க, “சாப்பிடாதேள்… உங்களுக்கு யாராவது ஏதாவது தந்தா விரும்பி சாப்பிடுவேள். அதுன் இருக்காளே… ஷாலினி ரோஸ்லின்.. தாமஸ்” என்றதும் பிரெட்டை கடித்தவன், நிதானித்து, திரும்ப, தாமஸ் பெயரை இணைத்து கொண்டதால் தப்பித்தாள்.

   ஒரே வாயில் பிரெட்டை வாயில் அதக்கி, தண்ணீர் குடித்து எழுந்து சாவி எடுத்துக்கொண்டு கிளம்பினான்.‌

  “அப்படியே போறேள்… நான் இன்னமும் சாப்பிடல” என்று காருண்யா பதற, “நேத்து நீயா தானே என்னை விட்டுட்டு வந்த. இன்னிக்கும் அப்படியே தனியா போ. அதான் ஸ்கூட்டி வச்சியிருக்கியே.” என்று பதிலடி தந்து சென்றான்.

  காருண்யா தலையை பிடித்து அமர்ந்தாள். போனால் போகட்டும் ஸ்கூட்டியில் சொல்வோம் என்று முடிவெடுத்தாள்.

  ராவணனோ, அவன் வண்டி எடுக்க சென்றவன், வீட்டுக்குள் எட்டிப் பார்த்துவிட்டு, ‘சாரிங்க… தப்புங்க.. உங்களை அப்படி திட்டியிருக்க கூடாது. நான் பேசியதில் நீங்களும் காயப்பட்டுட்டிங்க ஏதாவது வருதா…’ என்று ஸ்கூட்டியில் காற்றை பிடுங்கி விட்டு கமுக்கமாய் தன் பைக்கை உதைத்து கிளம்பினான்.
 
  நிதானமாக காருண்யா வீட்டை பூட்டி ஸ்கூட்டி அருகே வந்து இயக்க, ஏதோ கோளாறு தென்பட, குனிந்து பார்த்தாள். காற்று இல்லாதது கண்ணில்படவும், ‘பெட்ரோல் இருக்காது போகறச்ச போடலாம்னு இருந்தேன். இதென்ன… டயர் இப்படி இருக்கு. பஞ்சரா? காற்று இல்லையா? ஒன்னும் தெரியலையே’ என்று அதேயிடத்தில் வைத்துவிட்டு, கேப் புக் செய்தாள்.

  பதினைந்து நிமிடம் காத்திருந்து சென்றாள்.
  அலுவலகம் வந்தப்பொழுது, ராவணன் அங்கே, ஜவஹரோடு பேசிக் கொண்டிருந்தான்.‌
 
  “நல்லா யோசித்து சொல்லுங்க ராவணன்.” என்று கைகுலுக்க, காருண்யா அவளிடத்தில் அமர்வதை கண்டான்.

‘எப்படியும் நீ இங்க தான் பக்கத்தில உட்காரணும்.’ என்பது போல காருண்யா பார்வையிருக்க, ரோஸ்லினோ “ஏன்டி தனியா வந்த. சண்டை சமாதானம் ஆகலையா?” என்று கிசுகிசுக்க, உதடு பிதுங்கினாள் காருண்யா.

  ”சரியா போச்சு.” என்று ரோஸ்லின் நகர, வந்ததிலிருந்து ராவணன் தனியாக காருண்யா ஆட்டோவிலிருந்து வந்ததை கண்ட ஷாலினிக்கு மனம் கேளவில்லை.

தனித்து பேச நினைத்தாள். ஆனால் என்ன தான் பிராஜக்ட் முடிந்தாலும் அடுத்த வேலை தயாராக இருந்தது.
  ஆனால் அவசரமின்றி செய்ய காலம் இருந்தும் அதை செய்வதற்கு முனைய, கேண்டீனில் காருண்யா ரோஸ்லின் பேசும் பொழுது ஷாலினி பேச சென்றாள்.

   “சாரி காருண்யா… என்னால உனக்கும் ராவணனுக்கும் சண்டை வந்தது ரியலி சாரி.
  ஆக்சுவலி என் பிறந்த நாளுக்கு சர்பிரைஸா” என்று ஏதோ கூற நினைக்க, “எங்க ஆம்படையான் பொண்டாட்டி சண்டை எங்காத்துல பேசி தீர்த்துப்போம். உன் பிரச்சனை உன் கரிசனம், உன்‌மன்னிப்பு எதுவும் வேண்டாம்.
என் புருஷனுக்காக சமைச்சி கொண்டு வர்ற வேலையை நீ வச்சிக்காத. அவாளுக்கு பிடிச்சதை நான் கஷ்டப்பட்டாவது செய்வேன்.” என்றாள் காருண்யா.

  ராவணன் அந்த நிமிடம் சரியாக வந்தவனோ “சமையலை இஷ்டப்பட்டு செய்யணும். யாரும் கஷ்டப்பட்டு செய்ய மாட்டாங்க. ஷாலினி நீ ஒன்னும் சாரி கேட்க வேண்டிய அவசியமில்லைன்னு வந்ததும் சொல்லிட்டேன். திரும்ப திரும்ப அவளிடம் மன்னிப்பு கேட்க போற? நீ எந்த அர்த்தத்தில் எனக்கு கொண்டு வந்தேன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது. அதெல்லாம் இவளிடம் விளக்கவேண்டிய அவசியமில்லை. உன் வேலையை பாரு.” என்று திட்ட, “அதில்லை… இரண்டு பேரும்” என்று கூறவருபவளிடம், “நீ சொல்லி அவ என்னை புரிஞ்சிக்க வேண்டிய அவசியமில்லை. நீ சொல்லி கேட்கற இடத்துல நானும் இல்லை. கிளம்பு.” என்று அனுப்ப, ஷாலினி மெதுவாக நகர்ந்தாள்.

  “நேத்து வந்தவா முக்கியமா போயிட்டா” என்று ராவணனை பார்த்து கேட்க, “நீயே நேத்து வந்தவ தான்டி.” என்று பதில் தந்தான்.

  ரோஸ்லினோ அவ்விடம் விட்டு அமைதியாக நகர்ந்திருந்தாள்.

ஷாலினி பக்த்ததில் ரோஸ்லின் இடமிருக்க, சென்று அமர்ந்தாள். ரோஸ்லின் முகம் திருப்பி தோழிக்கு ஆதரவு கரம் காட்ட ஷாலினியோ அசிங்கமாய் உணர்ந்தாள்.

  அவரவர் வேலையில் நேரம் பறந்தது. நேற்று கூறியதற்கிணங்க ஜவஹர் மதியம் போல உணவருந்த டீம் லஞ்ச் ஏற்பாடு செய்தனர்.

ஆளாளுக்கு பக்கத்தில் இருந்த பெரிய உணவகத்திற்கு செல்ல தயாராக, ‘நீ ராவணனோட வருவ தானே’ என்று ரோஸ்லின் கேட்க, ‘அவா காலையிலேயே என்னை அழைச்சிட்டு வரலை’ என்று பதில் தந்தவள் ”மச்சி பைக் எடுக்கலை. ” என்றான் தேவேந்திரன்.
 
  “வாக்கப்பிள் ஏரியா தானே‌. நம்ம ஆபிஸ்ல இருந்து கீழே இறங்கினா மூனாவது பில்டிங்.” என்று நடக்க காருண்யா மற்ற அலுவலக ஆட்கள் முன்பாவது தன்னை வண்டியில் ஏற்றி செல்வானென்ற எண்ணத்தில் மண்ணை அள்ளி போட்டிருந்தான்.‌

ஆளாளுக்கு அமர, என் புருஷன் என் பக்கத்தில் என்று வேகமாய் வந்தமர்ந்தாள்.

“மேடம் என்வியா ஆர்டர் போடுவேன். நீங்க பக்கத்துல உட்கார்ந்து மூக்கை மூடிட்டு சாப்பிடுவிங்களா? எந்திரிச்சு வேற எங்கயாவது உட்கார்ந்து சாப்பிடு. என்னிடம் வந்து உட்காராதே” என்று தோளைக்குலுக்கினான்.‌

காருண்யாவிற்கு அழுகை உடைப்பெடுக்க அவசரமாய் ரெஸ்ட் ரூம் காரணம் காட்டி முகமலம்ப சென்றாள்.

ரோஸ்லினோ ‘எப்பா… சாதாரண வார்த்தை பேசியும் ஒருத்தவங்களை அழவைக்க முடியுமா? இந்தா… இவன் பேசியே கொன்றுடுவான் போலயே’ என்று ராவணன் யாரும் பாராத போது மட்டும் காருண்யா மீது காட்டிய கோபத்தை கவனித்து அதிர்ந்தாள்.
நல்லவேளை பெட்ரமாக்ஸ் லைட் மேல ஆசைப்பட்டேன், பெட்ரமாக்ஸே கிடைச்சிருந்தா தினம் தினம் இப்படி தானா?’ என்று ராவணன் முகத்திருப்புதலில் பெண்ணவள் விழித்து உறைந்தாள்.

வெயிட்டர் வந்து ஆளாளுக்கு தங்கள் தேவையான உணவை கூறிமுடிக்க, ரெஸ்ரூமை எட்டியெட்டி பார்த்தவன் காருண்யா வரவில்லை என்றதும் அவளுக்கு தேவையானதை அவன் கூறிமுடித்தான்.

ரோஸ்லினோ இத்தனை நாள் காருண்யாவோடு டீம் லஞ்ச் சாப்பிட்டு பழகியதால் அவளுக்கு என்ன பிடிக்கும் என்பதை பார்த்துபார்த்து ஆர்டர் தந்தவனை, ‘பெட்ரமாக்ஸ் நல்லா தான் இருக்கு. ம்ம்ம்… அப்ப ஏதோ மிஸ்அன்டர்ஸ்டாண்டிங்’ என்று பார்த்து சிரிக்க, ராவணனோ ‘ஏய் என்ன லுக்கு’ என்ற ரீதியில் பார்த்திட, ‘அய்யோடா முறைச்சா பத்து தலை ராவணன் ரோல் மாதிரி இருக்கான்’ என்று மறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.

அழுது ஓய்ந்து முகத்தை கழுவி மற்றவர் பார்வைக்கு சந்தோகம் வராமல் வந்து சேர்ந்தாள் காருண்யா.

தனக்கான இடம் ராவணன் அருகேயிருக்க, அவனை பார்த்து ஏக்கத்துடன் அமர்ந்தாள்.

ஜவஹரோ உணவு வந்து சேரவும், “இந்த டீம் லஞ்ச் நம்மளோட இத்தனை நாள் உழைப்பை ஈடுகட்டு” என்று சாப்பிட கூறினார்.

காருண்யா சாதத்தை பிசைந்து, விரலால் கோலமிட்ட, ஆளாளுக்கு பேசிக்கொண்டு உணவருந்தினார்கள்.

சுந்தர் ஷாலினி காருண்யா முகத்தை பார்த்து, சண்டையின் அடிநாதம் லேசாக அறிந்தவன், “ஏன் ஷாலினி அமைதியா இருக்க” என்றான்.‌ வேண்டுமென்றே பேச்சை இழுத்து ராவணனை புகுத்தும் திட்டத்துடன்.
ராவணன் வரவில்லை என்றால் இந்த டீமிற்கு வழிநடத்தும் பொறுப்பு சுந்தர் பெற்றிருப்பான். அதோடு உட்காரணம் அவனுக்கு காருண்யாவை லேசாக பிடிக்கும். அதையும் ராவணன் தட்டி சென்ற அதிருப்தி.

 ஷாலினியோ "அதெல்லாம் இல்லை சுந்தர். சில விஷயம் ஷேர் பண்ண தயக்கமா இருக்கு" என்று மட்டும் உரைத்தாள். ஜவஹரோ, "காய்ஸ்... சொல்ல மறந்துட்டேன். இன்னும் இரண்டு நாள் தான் ஷாலினி நம்மளோட வேலை செய்வாங்க. அவங்க பேப்பர் போட்டாச்சு. அவங்க வேலையை விட்டு நிற்க போறாங்க" என்றார். 

காருண்யா ராவணனை அப்படியா என்பது போல பார்வையிட, ‘எனக்கு தான் முன்னயே தெரியுமே’ என்பது போல நாசூக்காய் அவன் புஜத்தை பற்றிய அவள் மென்கரத்தை தட்டிவிட்டான்.

“ஏன்? ஏன்ன? எதுக்கு?” என்ற அவசர குரலுக்கு ஷாலினியே பதில் தந்தாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

11 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-30”

  1. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 30)

    காருண்யா அத்தனை பேசினதும் தப்பு, அதுக்கு ராவணன் அவளை பப்ளிக்கா வைச்சு செய்யுறதும் தப்பு.
    ம்… என்ன புருசன் பொண்டாட்டியோ, என்ன கர்மமோ..? இப்பவெல்லாம் மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்ங்கிற கான்செப்ட்ல தான் திருமண வாழ்க்கையே இருக்குதோன்னு சந்தேகமே வந்துடுது போங்க.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Dharshini

    Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 renduperum samadhanam agura mathiri therilaiye 🙄 evalum purinjikka matengura avanum pidivadhakaran enna pannuvaangalo parpom 🧐

  3. Very entrastink ud samma super super super super Rantuparum santaiya paaththa eppithaikku samathanam akathu polaya kaaru porumaiya veetukku vanthu pasirukkalam unnota avasara puthi eppati Achu Ravanan malai erkkarathu Rompa kastamma erukkumo

  4. Kalidevi

    SUPER EPI . RENDU PERKUM SANDA VANTHUTE IRUKU EPO THA SARIYANA PRITHAL VARA POTHO RAVANAA SOLRA MARI AVALUKU INUM CRT AH LOVE VARALA PERIYAVANGA PATHU PANI VACHITANGANU THA ETHO IRUKA IPPADIYE POCHINA ENA AGUM. ITHULA SHALINI VERA APER POTUTENU SOLRA ETHUKAGA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *