Skip to content
Home » காதலின் காலடிச் சுவடுகள் 9

காதலின் காலடிச் சுவடுகள் 9

   காதலின் காலடிச் சுவடுகள் 9

“வேற என்ன குறைச்சல்.. சொல்லுடி என்னோட மக்கு பொண்டாட்டி” என்று வேந்தன் கேட்க.. அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் மது….

“எதுக்கு அப்படி பாக்கற ?? எப்ப இருந்தாலும் நீ தான் என் பொண்டாட்டி. .. தாலி கட்டல அவ்ளோதான”… . ” அதையும் சீக்கிரம் கட்டிடுவேன். . கவலை படவேண்டாம்.. . என்று வசீகரிக்கும் புன்னகையுடன் கூறினான் வேந்தன்.. .

மற்ற மூவரும் இவர்களை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டு இருந்தனர்…

“என்னடா அப்படி பாக்கறீங்க??? உண்மையில் தான சொன்ன”???

” டேய் வேந்தா நீயாடா இது?? “நீ என்னடா இப்படி மாறிட்ட”??? என்று அருண்

தன்னையே பார்த்துக் கொண்டு இருந்த கவியை என்னவென்று புருவம் உயர்த்தி வேந்தன் கேட்க!!! ஒன்றுமில்லை என்று இடம் வலமாக தலையை ஆட்டினாள் கவி….

” இப்ப என்னால எதுவும் சொல்ல முடியாது.. நான் என்ன செய்தாலும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் என்று நம்பிக்கை இருக்கு தான உங்களுக்கு”.. என்று வேந்தன் கேட்க…

ஆம் என்பது போல் நால்வரும் தலையை ஆட்டினர்….

” சரி அந்த நம்பிக்கையோட போய் சாப்பிட்டு தூங்குங்க ….. நாளைக்கு நிறைய வேலை இருக்கு.. ஊருக்கு போனதும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்”…. என்று வேந்தன் கூற

” என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அப்படின்னா என்ன அர்த்தம் ரிஷி”… என்று இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த மது கேட்டாள்…..

” உன்கிட்ட சொல்லணும் யாழினி…
நிறைய இருக்கு சொல்ல!!!! ஆனா சொல்ல வேண்டிய டைம் இது இல்ல!!! அவள் தன்னை புரிந்துகொள்ள வேண்டுமே என்ற தவிப்பில் வேந்தன் கூறினான்…

” சரி “…… தன்னை மேலும் கேள்வி கேட்டு சங்கடபடுத்தாமல் சரி என்றது போதுமானதாக இருந்தது வேந்தனுக்கு….

சாப்பிட்டு விட்டு அவர்கள் உறங்க ஆரம்பிக்க வேந்தன் வந்து டிரெயின் உள்ளே ஏறும் இடத்தில் நின்று மரங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான்….

” அண்ணே” என்று கவி வந்து கூப்பிட…

“சொல்லு கவிம்மா”????

” அண்ணே உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”….

“என்னடா சொல்லு”????

“மறுபடியும் மது கனவு கண்டு தூக்கத்தில் எழுந்து அழுதுட்டு இருக்கா” என்ற கவியை ஷாக்காகி பார்த்தான்…

“என்னம்மா சொல்ற… நடுவுல கனவு வரல தான!!!! இப்ப எப்படி திரும்ப வரும்”??? என்று கேட்க ” ….. “அதான் எனக்கு தெரியும்” கவி கூற யோசயோடு ” சரி
நான் பார்த்துக்கிறேன் நீ போய் தூங்கு”… என்று பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.. “

கவியிடம் சமாதானம் சொல்லி விட்டாலும் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத பயம்… தன்னால் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை… முடியாவிட்டால் என்ன செய்வது என்று பயம்.. பயம் என்று சொல்வதை விட நிதர்சனம் அவனை தூங்க விடாமல் நெரிஞ்சி முள்ளாய் குத்தியது…. என்ன நடந்தாலும் யாழினியை அவனால் விட்டு கொடுக்க இயலாது… யாழினி மட்டுமே அவன் வாழ்க்கை… அவள் இல்லையென்றால் அந்த எண்ணமே அவனுக்கு கசந்தது…. இப்படி எதை எதையோ யோசித்து நடு இரவில் தான் அவன் வந்து தூங்கியது…. நன்றாக தூங்கிய வேந்தனை புகழ் உலுக்கி எழுப்பினான்…..

” என்னடா வந்துட்டோமா”???

“ஆமா போய் முகம் கழுவிட்டு வா அடுத்த ஸ்டாப் இறங்கனும்” என்று கூற….

“ம்ம்ம் சரி” என்று கூறி முகம் அலம்பி விட்டு வந்து ஜன்னல் அருகில் அமர்ந்தான்… எல்லோரும் அவர்களுடைய டிராவல் பேக் எடுத்து வைக்க அவர்களை பார்த்து விட்டு வேந்தன் ஜன்னல் புறம் திரும்ப ” திருநெல்வேலி என்ற பெயர் பலகை தாங்கள் இறங்க வேண்டிய இடத்தை காண்பித்தது……

தொடரும்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *