காதலின் காலடிச் சுவடுகள் 14
- Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
மதுவின் வீட்டில்….
மதுவை இழுத்து வந்து தரையில் தள்ளி…
“சித்தி, சித்தி எங்க இருக்கீங்க”??? என்று வீடே அதிரும் படி கத்த….
மெதுவாக ஆடி அசைந்து அறையில் இருந்து வெளியே வந்தாள் மகேந்திரனால் சித்தி என அழைக்கப்பட்ட கல்பனா….
” எதுக்கு மகி இப்படி நடு வீட்டில் நின்று கத்திட்டு இருக்க”????? என்று கொஞ்சம் குரலில் கேட்க…
இப்படி பேசி, பேசி தான் இந்த குடும்பத்தையே உன்னோட கன்ட்ரோல வச்சு இருக்க…. பாம்புக்கு பல்லுல மட்டும் தான் விஷம்… ஆனா உனக்கு உடம்பு முழுவதும் விஷம்” என்று மது மனதில் நினைக்க…..
” மகி ஏன் இவ்ளோ கோவம்.. அவ அவளோட அம்மாவ பார்க்க போய் இருக்கா… இதுல தப்பு என்ன இருக்கு???? நீ பொறுமையாக யோசி … அங்க இருக்கறது உனக்கும் அம்மா….. என்று தேனொழுகும் வார்த்தைகளால் கல்பனா பேச……
“அய்யோ அந்த பைத்தியத்த என்னோட அம்மான்னு சொல்லாதீங்க”….. உங்கள தான் என்னோட அம்மாவாக நினைச்சுட்டு இருக்கேன்”…. என்று கூறி முடிக்கும் முன்னே அங்கு இருந்த பூ ஜாடி கீழே மகி காலடியில் சுக்கு நூறாக உடைந்தது…. அதிர்ச்சி அடைந்த மகி நிமிர்ந்து பார்க்க பத்ரகாளியாக நின்ற இருந்தாள் மது….
” நீ யார வேனா அம்மா சொல்லி தொலைச்சிட்டு போ!!! ஆன் என்னோட அம்மாவ பைத்தியம் சொன்ன உன்னை சும்மா விட மாட்டேன் பார்த்துக்கோ”….. என்று விறுவிறு வென்று அவள் இருந்த அறையில் நுழைந்து கதவை லாக் செய்து கொண்டாள்….
” மகி மது கிட்ட இப்படி பேசாத… அவ மொத்தமும் அவங்க பக்கம் தான் இருக்கா!!!.. நீ இப்படி பேசுனா இன்னமும் நம்ம மேல வெறுப்பு தான் வரும் என்று நயமாக பேச”…..
” வேற என்ன செய்ய சொல்றீங்க சித்தி..நீங்களே பார்த்தீங்க இல்ல அவ எப்படி பேசிட்டு போறான்னு… அவன் என்னன்னா மதுவை அவனோட பொண்டாட்டின்னு சொல்லிட்டு இருக்கான்”… என்று கூறியவுடன் புருவம் சுருக்கி யோசித்த கல்பனா “யாரு வேந்தனா” என்று கேட்க……
” அவனேதான் ” என்றான் மகி…
” சரி விடு மகி நாம சீக்கிரம் மதுவுக்கு கல்யாணம் செய்து வைச்சிடலாம்… என்று கூற…..
” அப்பா வந்ததும் அதை செய்ய சொல்லணும் சித்தி … இனிமே அந்த பக்கம் போக விடாமல் பார்த்துக்கணும்…. வெளியே அதிகமாக விட வேண்டாம் சித்தி”… என்று கூறி சென்றுவிட்டான்…..
” நீ சொல்லவில்லை என்றாலும் அதைதான் செய்வேன்… சொல்லிட்டு போய்ட்ட இல்ல இனிமே பாரு என்னோட வேலையை ” என்று மனதில் நினைத்தாள் கல்பனா….
மதுவை பார்ப்பதற்கு கவி மதுவின் வீட்டிற்கு வர….
“ஏய் அங்கேயே நில்லு… நீ எதுக்கு இப்படி இங்க வந்து இருக்க??? என்ன உன்னை அனுப்பி வேவு பார்த்துட்டு வர சொன்னான்”???? என்று கல்பனா அதட்ட
” இங்க பாரு உனக்கு இங்க இருக்கிறவங்க வேண்டும் என்றால் பயன்படலாம் நான் இல்ல….. வேந்தன அவன் இவன்னு சொல்லிட்டு திரிஞ்சிங்க அவ்ளோதான் சொல்லிட்டேன் “… என்று பதில் சொன்னபடியே மதுவின் அறை நோக்கி சென்றாள்….
தொடரும்…..
Super kavi apadi tha pesanum ava kitta eppadi panra paru madhu va ena pana porangalo
அப்பாடா..! இந்த கவிக்காவது கல்பனாவை எதிர்த்து பேச தைரியம் இருக்கே.
Nice epi