காதலின் காலடிச் சுவடுகள் 15
மதுவின் அறை நோக்கி சென்ற கவிதாவை என்ன கூறியும் தடுத்து நிறுத்த முடியவில்லை….
” மது கதவை திற ” என்ற கவியின் குரல் கேட்டு கதவை திறந்து உள்ளே அழைத்தாள்….
“என்னடி ஏன் இப்படி இருக்க.. நீ பயந்து இருந்தா உன்னை ஏறி மிதிச்சு போய்டே இருப்பாங்க!!! கொஞ்சம் கூடவா உனக்கு தைரியம் இல்ல “….என்று மதுவை திட்டி தீர்க்க….
” பெத்த அம்மாவையே பைத்தியம் சொல்றான் கவி அவன்…. என்னால எதுவும் பண்ண முடியல … பயத்துல பூ ஜாடிய தூக்கி போட்டு உடைத்து விட்டு வந்தேன்… நான் எல்லாம் எங்க அம்மாக்கு என்ன பொண்ணு நல்ல பொண்ணே இல்ல கவி”…. என்று தன் முகத்தில் அறைந்து கொண்டு அழுதாள்…..
” சரி விடு வா சாப்பிடலாம் அங்கையும் எதுவும் சாப்படல போல வேந்தன் அண்ண சொன்னான் எழுந்து முகம் கழுவிட்டு
வா “…. மது வேண்டாம் என்று தலையை ஆட்ட… ” வேந்தன் அண்ணனும் சாப்பிடல மது” என்று கூற…. வேந்தன் எனும் பெயர் நன்றாக வேலை செய்தது… எழுந்து குளியலறை சென்று தன்னை சுத்த படுத்திக் கொண்டு வந்து சாப்பிட அமர கவி அவள் வீட்டில் இருந்து உணவு எடுத்து வந்து இருந்ததை அப்போதுதான் கவனித்தால் மது…….
“மது தாத்தாக்கு திதி வருது மது”
” தெரியும் அதுக்கு தான் எல்லாரும் வந்தோம்” …
“இல்லடி ரொம்ப நாளைக்கு அப்புறம் ரம்யா திதி சேர்த்து குடுக்க முடிவு செய்து இருக்காரு போல பெரியப்பா”…
” என்ன !!!!என்று அதிர்ந்து போய் கேட்டாள் மது”
” எப்படி வேந்தன் மாமா அப்ப சொன்னது செஞ்சிட்டாரா”???
” தெரியலை டி வேந்தன் அண்ணன் கிட்ட தான் கேட்கணும்” என கூற தன் அலைபேசியை வேகமாக எடுத்து வேந்தனுக்கு அழைத்தாள் மது….. நல்ல தூக்கத்தில் இருந்த வேந்தனுக்கு கைபேசி இசைக்க அதில் வரும் பிரத்யேக ரிங்டோனில் சட்டென்று தூக்கம் கலைந்து எழுந்தான்… போனை கையில் எடுத்து அழைப்பு முடியும் வரை பார்த்து கொண்டு இருந்தான்…. நெடுநாளைக்கு பிறகு தன் லட்டு பெண்ணின் அழைப்பு… அதுவும் அவள் வீட்டில் இருக்கும் போது….. சட்டென்று ஏதாவது பிரச்சினையோ என்று பயந்து உருள மீண்டும் கைபேசி அழைப்பு… அழைப்பை ஏற்று காதில் வைக்க…..
“மாமா”
“லட்டு” என்று இருவரும் ஒருசேர விளிக்க… வேந்தனின் முகத்தில் மின்னல் கீற்றாய் புன்னகை… மதுவோ கதறி அழுது விட்டாள் வேந்தனின் லட்டு என்ற அழைப்பில்…… “மாமா” என்ற வார்த்தையை தவிர தன்னவளின் வாயில் வேறு வார்தை வரவில்லை என்பது புரிந்த வேந்தன் வெகுவாக கலங்கி போனான்…. தான் இருந்தும் தன்னவளை மீட்க முடியாத நிலையை அறவே வெறுத்தான்….
“லட்டு பொண்ணே அழுகாம இருக்கணும்.. மாமா இருக்கேன்… மாமா மேல நம்பிக்கை இருக்கு இல்ல”…. என்ற கேள்வியில் சற்று சுதாரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தால் மது…..
” மாமா கவி இங்க வந்து இருக்கா!!!… என்ன என்னவோ சொல்லிட்டு இருக்கா???
என்ன நடக்குது மாமா அங்க”!!!!
” அவ சொன்னது எல்லாம் சரிதான் யாழிமா”…
“அப்ப ரம்யாக்கு திதி குடுக்க நீ சம்மதம் சொல்லிட்டியா….. அப்போ அவன்கள கண்டு பிடித்துட்டியா”??? என்று எதிர்பார்போடும், கண்டு பிடித்து இருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடும் கேட்டாள்….
” இன்னும் ரெண்டு பேர் மட்டும் பாக்கி யாழினி…. ரெண்டு நாள் இருக்கு கண்டுபிடிச்சிடுவோம்”…. என்று நம்பிக்கையோடு கூறினான்….
தொடரும்…..
எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி…. என்னால கமெண்ட் க்கு ரிப்ளை பண்ண முடியல அதுக்கு ஸாரி. … மன்னிச்சிடுங்க ப்ளீஸ்….. Mail id open agala athan sorry and thanks 🙏
ரம்யா யாருன்னு சொல்லவேயில்லையே..??
Nice epi