Skip to content
Home » காதலின் காலடிச் சுவடுகள்-3

காதலின் காலடிச் சுவடுகள்-3

காதலின் காலடிச் சுவடிகள்– 3

        யமுனை ஆற்றிலே  ஈர காற்றிலே
       கண்ணனோடு  தான் ஆட!!! 
       பார்வை பூத்திடே  , பாதை பார்த்திட
       பாவை ராதையோ  வாட!!!!! 
       இரவும் போனது, பகலும் போனது 
       மன்னன் இல்லையே கூட!!! 
       இளைய கன்னியின் இமைத்திடாத கண்
       இங்கும், அங்குமே  தேட!!!! 
       ஆயர் பாடியில் கண்ணன் இல்லையோ!!!! 
       ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ!!! 
       ஆயர் பாடியில் கண்ணன் இல்லையோ!!! 
       ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ!!!! 
       பாவம் ராதா.........

      தனது தொலைபேசியில் பாடலை கேட்டு அப்படியே அமர்ந்து இருந்தாள் மது... 
  "மது வா சாப்பிட போகலாம் " என்று கூப்பிட்டாள் நேகா.. காலையில் தான் ஊரிலிருந்து வந்து இருந்தாள் நேகா.. திருவண்ணாமலை பக்கத்தில் ஒரு கிராமம்.. 

” இல்லடி நேகா நீயும், கவியும் போய் வாங்க.. எனக்கு எதும் வேண்டாம்”….

” வா மது என்ன கோபம், கஷ்டமா இருந்தாலும் சாப்பாட்டுல காட்டாத…

” இல்ல நேகா நீ போ”

அப்போது அங்கு வந்த கவி… ” என்ன நேகா”???

” சாப்பிட கூப்பிட்டா வர மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கா” என்று நேகா கூற..

“சரி நீ போ நாங்க வரோம்” கவி

” இல்ல கவி நீ போ எனக்கு எதுவும்
வேண்டாம் “…. மது

ம்ம்ச்ச்ச் ” மது எழுந்து வா.. இங்க தனியா இருந்தா கண்டதையும் யோசனை செஞ்சிட்டே தான் இருப்ப… வா சாப்பிட போகலாம் “!!!!…

சாப்பிடும் அறை செல்லும் போது நேகா யாருடனோ போன் மெசேஜில் பேசிக் கொண்டு இருந்தாள் … இவர்கள் இருவரை பார்த்தவுடன் போனை அவரசம் அவசரமாக லாக் செய்தாள்….

” யாரு நேகா போன்ல” என்று கவி கேட்டதற்கு “ப்ரெண்ட் “பா என்று ஒத்தை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிட்டாள்…..

” என்னடி இவ இப்படி போறா” மது

” நாம கேட்டது தப்பு மது.. கேக்காம இருந்து இருக்கணும்… அது அவ பெர்சனல் விஷயம் ” என்று கவி கூறினாள்…

“அதுவும் சரிதான் கவி”
சரி ” வா போய் சாப்டு வரலாம் நாளைக்கு சன்டே வெளில போக பிளான் பண்ணி இருக்கோம் தான” சீக்கிரம் தூங்க போனா தான் சீக்கிரம் எழுந்திருக்க முடியும்.. அதுக்கு சீக்கிரம் சாப்பிட போகணும்”….

அய்யோ போதும் “மது எத்தனை சீக்கிரம்” தயவு செய்து நிறுத்து என்று கேலி செய்த படி சாப்பிட சென்றனர்….

இவர்கள் போவதற்கு முன்னரே நேகா வேறிடத்தில் அமர்ந்து கொள்ள கவியும், மதுவும் எதுவும் கேட்காமல் தங்களிடத்தில் சாப்பிட அமர்ந்தனர்….

தான் செய்யும் போது தெரியாதது.. அவர்கள் வந்து அமர்ந்ததும் நேகாவிற்கு என்னவோ போல் ஆனது….

சாப்பிட்டு முடித்து ரூம் வந்ததும் தூங்க செல்ல அவர்களிடம் வந்த நேகா

“மது, கவி சாரி டி கொஞ்சம் வீட்டு டென்ஷன் அதான் அப்படி பண்ணிட்டேன் ” என்று மன்னிப்பை கேட்க….

“பரவாயில்லை நேகா நாங்களும் உன் பெர்சனல் விஷயம் கேட்டது தப்புதானே ” என்று கூறினாள் மது…

மது அப்படி கூறியதும் மனதிற்கு கஷ்டமாகி விட்டது நேகா விற்கு..

எதுவும் கூறாமல் பக்கத்து பெட்டில் படுத்து விட்டாள் நேகா…

கவியும் மதுவும் எதுவும் கூறாமல் தூங்கி விட்டனர்…

மறுநாள் காலை எழுந்தது முதலே மூவரும் வெளியில் செல்ல பரபரப்பாக கிளம்பினர்.

“கவி என்னோட பிரவுன் குர்தியை பார்த்தியா”???

இவளோட இதே வேலையா போச்சு… அந்த பிரவுன் குர்தில என்னதான் இருக்கோ.. என்று அலுத்துக் கொண்டே மதுவின் குர்தியை எடுத்து கொடுத்தாள் கவி…

அவள் அலுத்து கொண்டதை பார்த்த மது” அது எல்லாம் உனக்கு சொன்ன புரியாது” என்று வாங்கியபடியே சொன்னாள் மது….

ஒரு வழியாக சண்டை, சமாதானம் என்று பேசியபடியே மூவரும் ஹாஸ்டலை விட்டு வெளியில் வந்தனர்….

நாள் முடிந்து திரும்பும் போது இதே மகிழ்ச்சி இருக்குமா??? கடவுளுக்கு தான் வெளிச்சம்…

ரிஷி வேந்தனும், அருணும் சென்னை சிட்டியில் உள்ள மிக பெரிய மாலிற்கு வந்து இருந்தனர்… தெரிந்தவர் ஒருவரை பார்க்க…

” டேய் அருண் அந்த ஆளிடம் அப்பாயின் மெண்ட் வாங்கி இருக்க??? எத்தனை மணிக்கு வருவார்?? என்று கேட்டான் வேந்தன்…

” வேந்தா 10 மணிக்கு தான் சொன்னாரு… இன்னும் 10 ஆகல… இதுவரைக்கும் வந்ததுல இருந்து 24 தடவை கேட்டுட்ட…. என்று சற்று எரிச்சலாக கூறினான் அருண்….

“என்னடா அருண் எரிச்சலாக சொல்வது போல இருக்கு… என்ன விஷயம்?? என்று வேந்தன் கேட்க…

காலையில் 10 மணி அப்பாயின் மெண்ட் க்கு 5 மணிக்கே எழுப்பி விட்டு காலை டிபன் கூட சாப்பிட விடாம 8 மணிக்கு இங்க கொண்டு வந்து விட்டுட்டு கேள்வி வேற.. என்று மனதில் நினைப்பதாக சத்தமாக அருண் சொல்ல…

” என்னடா அருண், ஏதாவது சொன்னாய்”??? என்று வேந்தன் கேட்க…

“ஒன்னுமில்லையே, ஒன்னுமில்லை” என்று சொல்லி காது வரைக்கும் இளித்து வைத்தான் அருண்…..

அருணிற்க்கு தெரியும் எடுத்து இருக்கும் வேலை எவ்வளவு முக்கியம் என்று… இப்போது “கரணம் தப்பினால் மரணம் “என்னும் நிலை
கொஞ்சம் பிசகினாலும் மொத்தமாக மாட்டிக் கொள்ளும் நிலை… ஆனால் அப்படி எந்த பயமும் வோந்தனுக்கு இருப்பது போல் தெரியவில்லை….

” வேந்தா”

“என்னடா சொல்லு”

“இல்ல, வந்து”

“இல்ல, வந்து ன்னு இழுக்காம விஷயத்த சொல்லு அருண்”

” கேட்ட கோவ பட மாட்டியே”

“அது நீ கேக்கற விஷயத்தை பொறுத்து”

” சரி நான் கேட்கவே இல்லை விடு”

” கேளு கோவ பட மாட்டேன் ” என்று வேந்தன் சம்மதித்த பிறகே அருண் கேட்க ஆரம்பித்தான்…

“ஒரு வேலை நாம மாட்டிக்கிட்டா என்ன வேந்தா செய்வது” என்று கேட்ட அருணை ஆழ்ந்து பார்த்த வேந்தன்….

” கண்டிப்பாக உன்னை தப்பிக்க வைத்து இருப்பேன் “

இவ்வாறு வேந்தன் கூறியதும் பளார்.. என்று அறைந்து இருந்தான் அருண்…

தான் மட்டுமே தப்பிக்க நினைக்கவில்லை அருண்… அவன் பொதுவாக கேட்க வேந்தன் கூறியதும் தன்னை மீறிய கோவத்தில் கை நீட்டி அடித்து இருந்தான்….

எதிலிருந்து தப்பிக்க இருவரும் பேசிக் கொள்கிறார்கள்??? இவர்களை பார்க்க வரும் அந்த ஆள் யார்??? ஹாஸ்டல் விட்டு வெளியே சென்றவர்கள் மகிழ்ச்சி என்ன ஆகும்??? நேகா யாருக்கு மெசேஜ் செய்தாள்??? வரும் பதிவுகளில்……

தொடரும்…..

7 thoughts on “காதலின் காலடிச் சுவடுகள்-3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *