Skip to content
Home » காதலின் காலடிச் சுவடுகள்‌-1

காதலின் காலடிச் சுவடுகள்‌-1

காதலின் காலடிச் சுவடுகள் 1

   காதல் என்னும் கடலில் மூழ்கினேன்
   என் முத்தாகிய உனை எடுக்க! 
  உன் அன்பின் ஆழம் அதிகரிக்க 
  மூழ்கிக் கொண்டே இருக்கிறேன்!   
  நீ கடமை என்னும் சிப்பிக்குள்  ! 
  நானோ காதல் எனும் கடலுக்குள்.... 
  நீயும் விடுவதாய் இல்லை.... 
  நானும் எழுவதாய் இல்லை..... 

         தயவு செய்து என்னை விட்டு விடு.. எதுவும் பண்ணிடாத. .  ௨ன்னை கெஞ்சி கேட்டுக் கிறேன்... என்று அந்த நள்ளிரவு அமைதியில் ஒரு பெண்ணின் அழுகுரல் அந்த அறை முழுவதும் கேட்டது..... 

      உன்னை விடுவதற்கா தூக்கிட்டு வந்தேன்? இனிமே இந்த ரூமை  தாண்டி உன்னால வெளி உலகத்தைப் பார்க்க முடியாது.. என்ற ஆண் குரல் கொடூரமாக ஒலித்தது.... என்று கூறியபடி அந்த பெண்ணை அருகில் வந்தான் அவன்.... அருகில் வந்தது தான் தெரியும் என்ன நடந்தது என்று கணிக்கும் முன்னே அவனை எட்டி உதைத்து இருந்தால் அந்த பெண்... 

      ஆஆஆஆஆ ! !!!! என்று  அலறியபடியே கட்டிலில் இருந்து கீழே விழுந்தாள்  இன்னொரு பெண்...... எழுந்து என்ன நடந்தது என்று பார்க்க அவளை உதைத்து  கட்டிலில் இருந்து கீழே தள்ளி இருந்தால் அவள் தோழி... பல்லை கடித்து கொண்டு இவள!!!!!     
      அடியேன் மது!! எழுந்திரு டீ.... எழுந்திரு சொல்றேன் இல்ல என்று உலுக்கி கொண்டு இருந்தால் கீழே விழுந்த இன்னொரு பெண்..... 
    என்ன ஆச்சு?? என்று கண்ணை கசக்கி கொண்டே எழுந்தாள் நம் கதையின் நாயகி . .மதுரயாழினி  . 
       என்ன ஆச்சு? என்ன ஏண்டி  எட்டி உதைச்ச?? என்று சண்டைக்கு வந்தாள் அவள் தோழி கவிதா... 
உதைச்சனா? என்னடி சொல்ற?? மது
எருமை மாடு எட்டி உதைச்சிட்டு கேள்வியா கேக்கற?? என்று சரமாரியாக மதுவை அடித்தாள் கவிதா..... 
 அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டு ஏதோ யோசனையில் அசையாமல் அமர்ந்து இருந்தாள் மதுரயாழினி..... 
  அடிப்பதை நிறுத்திய கவிதா அவளின் முகம் பார்த்து என்ன மது? என்ன யோசனை? ஏதாவது கெட்ட கனவா? 
  கலங்கிய கண்களுடன் நிமிர்ந்து பார்த்தாள் மது..... மதுவின் அழுகையை பார்த்து புதிய கவிதா டேபிளில் இருந்த நீரை குடிக்க சொல்லி எடுத்து வந்து கொடுத்து விட்டு குடிக்கும் வரை அமைதியாக அமர்ந்து இருந்தாள்... 
  குடித்து முடித்து தண்ணீர் பாட்டிலை கொடுத்தவுடன் என்ன மது கெட்ட கனவா? இல்லை மறுபடியும் அதே கனவா?? 
 மறுபடியும் அதே கனவு தான் கவி...... 
 இது எப்போதும் நடப்பது தான்.... பெருமூச்சை வெளியேற்றிய கவிதா... சரி தூங்கு காலையில் காலேஜ போகணும்... என்று கூறிவிட்டு அவள் படுத்ததும் பக்கத்தில் அவள் தோளில் கையிட்டி  மறுபக்கம் படுத்தால் கவிதா..... 
கொஞ்சம் நேரம் கண்ண மூடி தூங்கு மது மணி ரெண்டு.... 
சரி..... 

அவர்கள் மதுரயாழினி, கவிதா 8 வருடங்களாக நெருங்கிய தோழிகள்…. ஒரே பள்ளி ஒரே வகுப்பு.. ஒரே ஊர்…. கல்லூரியிலும் ஒரே பாடப்பிரிவில் இடம் கிடைத்தது பெண்கள் விடுதியில் அறை வேறு வேறு கிடைக்க ஹாஸ்டல் வார்டனிடம் கூறி இருவரும் ஒரே அறையில் தங்கிக் கொண்டனர்…. இவர்களுடன் நேகா என்ற தோழியும் அதே அறை….
சரி நேகா எப்ப வருவா?மது
வந்துடுவா மது நீ தூங்கு… எப்படியும் நாளைக்கு வந்துடுவா தூங்கு…….

மறுநாள் காலை சீக்கிரமாய் எழுந்து குளித்து முடித்து கவிதாவை எழுப்பினாள் மது…
கவி எழுந்திரு கவி டைம் ஆச்சு பாரு… அடியேய் தூங்கு மூச்சு எழுந்திருடீ என்று கவிதாவை உலுக்கினாள் ……

யாரு நான் தூங்கு மூச்சு… அதிக சொல்ற பாத்தியா என்று கூறிக் கொண்டே உடையை எடுத்துக் கொண்டு குளியலறை சென்றாள் கவிதா….

மது எப்பவும் சீக்கிரம் எழுந்து கொள்பவள் அல்ல…. கனவு வரும் சமயங்களில் மட்டுமே இப்படி!!! அதை தான் கவி சொல்லி விட்டு சென்றாள்…. மற்றபடி மதுவும் கும்பகர்ணன் தங்கை தான்…
வெளியே வந்து தான ஆகணும்….. பேசிக்கிறேன் உன்னை என்று கண்ணாடி பார்த்து தலை வார ஆரம்பித்தாள் மது….

கவியும் கிளம்பி வந்ததும் ஹாஸ்டல் மெஸ்ஸிற்கு செல்லும் வழியில்

ஏண்டி கவி இன்னிக்கு ப்ரெட் மட்டும் தான!!!? என்று தன் அதி முக்கிய சந்தேகத்தை கேட்டாள்.. மது
ஆமா மது…..
இந்த ப்ரெட் மட்டும் கண்டுபிடிச்சவன் என் கையில் கெடச்சான் அவன அப்படியே பெரிய தோசைக் கல்லுல ரோஸ்ட் பண்ணிடுவேன்.. என்று திட்டிக் கொண்டு சாப்பிட சென்றாள்….
சாப்பிட்டு விட்டு மெஸ்ஸிலிருந்து வெளி வரும் போது மதுவின் போன் ஒலித்தது….
எடுத்து யார் என்று பார்க்க அம்மா என்று திரையில் மின்னியது ….
எடுத்து பேசிட்டு வா மது… இல்லனா கால் வந்துட்டே இருக்கும்… கவி
ஒரு பெருமூச்சை வெளியேற்றிய பின் தன்னை சமன் படுத்திக் கொண்டு சொல்லுங்க அம்மா….. எதிர் முனையில் என்ன சொன்னார்களோ போனை கட் செய்து விட்டு கண்கலங்க நின்றாள் மது….
என்னடி???? கவி
ஒன்றுமில்லை கவி வா காலேஜ் போகலாம்…..

இந்த மது யார்? அவளுக்கு வரும் கனவு என்ன? தினமும் ஒரே கனவு என்றால் அவளுக்கு என்ன பிரச்சனை?? அடுத்த அடுத்த பதிவுகளில்…….

தொடரும்…..

5 thoughts on “காதலின் காலடிச் சுவடுகள்‌-1”

  1. ஏன் மதுவுக்கு இப்படி ஒரு கனவு???… அருமையான ஆரம்பம்!!..

    எழுத்து பிழைகள் இருக்கு!!… செக் பன்னுங்க!!!..

  2. சொன்ன மாதிரி இந்த மதுவுக்கு என்ன பிரச்சினைன்னு தெரியலையே…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *