Skip to content
Home » காதலில் காலடிச் சுவடுகள்-5

காதலில் காலடிச் சுவடுகள்-5

காதலில் காலடிச் சுவடுகள் 5

    உன் ஞாபகம் நெஞ்சில் வந்தாடுதே..
   ஓயாமலே என்னை பந்தாடுதே...
   உன் பூ முகம் கண்ணில் நின்றாடுதே.      
   நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே..
    படித்தால் இனித்திடும் புதினம்...
    உனை நான் மறப்பது கடினம்.....
   அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு..
   வலைக்குள் தவித்திடும் தவிப்பு...
  துளிர்க்கும் ஆசை துளிர்த்தால்...
  மேனி சிலிர்க்கும், மிதக்கும், பறக்கும்..

"அடேய் பிசாசே, ஏன்டா இப்படி பண்ணி தொலச்ச"??? ... என்று காரில் சத்தம் போட்டு கத்தினான் புகழ்....

“அப்பாடா!! நான் மட்டும் தான் இவன் கிட்ட மாட்டிகிட்டேன்னு நெனச்சேன்…இப்ப இவனும் ஐஐஐ ஜாலி ஜாலி”.. என்று கைதட்டி குதுகலித்தான் அருண்…

வேந்தன் , புகழ் இருவரும் ஒருசேர அருணை முறைத்தனர்….

“ஹீஹீஹீ சாரி பா கொஞ்சம் ஓவரா சந்தோஷ பட்டுட்டேன்”……

“டேய் உண்மைய சொல்லுங்க….நீங்க லாயர் வேலைய விட்டுட்டு ஆள் கடத்தல் செய்யறீங்களா”????என்று கேட்டான் புகழ்….

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இதான் பா நடந்தது ….பார்க்க வந்த ஆள நம்ப வேந்தன் கடத்திட்டான் பா…….

2 மணி நேரம் முன்பு……..

வேந்தன் அருகில் அவசரமாக வந்து அமர்ந்த மதுவை குறுகுறுவென பார்த்தாள் நேகா…..

அருணும், கவியும் சண்டையில் பிஸியாக இருந்ததால் இவர்களை கவனிக்கவில்லை…..புகழ் மட்டுமே டென்ஷனாக அமர்ந்து இருந்தான்….

தனதருகில் வந்து அமர்ந்தவளை நன்றாக பார்த்துவிட்டு பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு கிஃப்டை எடுத்து மதுவின் கையில் யாருக்கும் தெரியாமல் கொடுத்தான் வேந்தன்…. கேள்வியாய் பார்த்த மதுவிடம் வாங்கிக் கொள்ள சொல்லி தலையசைக்க மதுவும் எதுவும் கேட்காமல் வாங்கிக் கொண்டாள்……

“என்னடா நடக்குது இங்க “என்று எதுவும் புரியாமல் தலையை பிய்த்துக் கொண்டது புகழ் மட்டுமே…..

“டேய் வேந்தா இங்க பாருடா இவ கிட்ட சொல்லி வை ரொம்ப ஓவரா பண்றா”….

“அண்ணா இவன் கிட்டயும் சொல்லுங்க ..என்கிட்ட வைச்சு கிட்டான் பல்ல தட்டி கைல கொடுத்துட்டு வேன்”…..

“ச்சீ பே” அருண்……

“ச்சீ பே”….

“வாய் மூடுங்க ரெண்டு பேரும்…நீங்க என்ன சின்ன பசங்களா”….என்று வேந்தன் கத்தினான்….

“எப்படி இருக்க யாழினி” ???என்று வேந்தன் கேட்க….”ஹ்ம்ம் நல்லா இருக்கேன்”என்று கூறினாள் மது…..

இருவரும் பேசியதை மற்ற மூவரும் ஆச்சர்யமாக பார்த்தனர்….

” சரி சாப்பிட்டு விட்டு சீக்கிரம் இங்க இருந்து கிளம்புங்க” என்றான் வேந்தன்…..

“ஏன் ?ஏன் ? சீக்கிரம் போகணும்… நாங்க லேட்டா தான் போவோம்…. நீங்க சொன்னா நாங்க கேட்கணுமா” ???என்று கவியை அருண் முறைத்து பார்த்தான்..

” கவி”

” சொல்லுங்க வேந்தன் அண்ணா”

” நான் சொன்னா கேட்ப தான”???

“ம்ம்ம் “என்று கவி தலையை ஆட்ட….

“சாப்பிட்டு சீக்கிரம் கிளம்பி ஹாஸ்டல் போங்க”……

எல்லோரும் அமைதியாக சாப்பிட்டனர்…..

“டேய் அருண்”….

“சொல்லு வேந்தா ‘…..

“நீ போய் நாம மீட் பண்ற ஆள் வந்துடானானு கால் பண்ணி கேளு ….அப்படி வந்து விட்டால் கார் பார்க்கிங்ல வைட் பண்ணு நானும், புகழும் பின்னாடியே வரோம்….. என்று வேந்தன் கூற தலையாட்டினான் அருண்…..

“நீங்க வெளியே ரொம்ப சுத்திட்டு இருக்காதிங்க… ஹாஸ்டல் போங்க”….. என்று மூவரிடமும் சொல்லி விட்டு புகழை அழைத்துச் சென்றான் வேந்தன் ….

“புகழ் நீ கார் டிரைவர் சீட்டில் இரு நான் சொல்லும் போது கார் ஸ்டார்ட் பண்ணிட்டு ஒகே “……. என்று புகழிடம் கூறினான் வேந்தன்….

“சரி வேந்தா”…..

வேந்தனின் போன் சத்தம் இசைக்க எடுத்து பார்த்து விட்டு “சொல்லு அருண் பார்ட்டிய பாத்துடியா”……

“பாரத்துடேன் வேந்தா அவர் உன்கிட்ட பேசணும் சொல்லிட்டு இருக்காரு”…….

“சரி ஆடு வந்து தான சிக்குது… கார் கிட்ட கூட்டிட்டு வா”…..

“சரி டா வேந்தா”

சிறிது நேரத்தில் அருணும் நாற்பது ஐந்து வயது நிரம்பிய ஒருவரும் வந்தனர்… வேந்தன் அருகில் வந்தவர் ” என்ன வேந்தன் எப்படி இருக்கீங்க”???? என்று கேட்டு முடிப்பதற்குள் அவர் முகத்தில் மயக்க மருந்தை அடித்து கார் டிக்கியில் தள்ளி டிக்கியை குளோஸ் செய்து புகழை கார் எடுக்கச் சொல்லி முன் சீட்டில் வேந்தன் அமர,பின் சீட்டில் அருண் உட்கார்ந்து கொண்டான்……..

“பாவி,பாவி என்னடா பண்ணி தொலைஞ்ச ???யாருடா அந்த ஆளு ????நீ வக்கீல் தான???கடத்துனத்துக்கு என்ன தண்டனை தெரியும் தானே????என்று புகழ் கேள்வி மேல் கேள்வி கேட்டான்”……

“ஆமா அவன் கொலையே பண்ணிட்டு அசால்ட்டா இருக்கான்…..இதுல கடத்தல் பத்தி பேச வந்துட்ட ….போவியா…என்று அருண் சொல்ல…….

“எது கொலையா”???? இன்னும் என்ன என்ன டா செஞ்சு வைச்சு
இருக்கீங்க???சொல்லி தொலைங்கடா வீக் பாடிடா நான் தாங்க
மாட்டேன் “…….என்று புலம்பிய புகழை பார்த்து வண்டியை எடு புகழ் எல்லாத்தையும் சொல்லுறேன் என்று வேந்தன் கூற காரை எடுத்தான் புகழ்…..

“என்னன்னு சொல்லு வேந்தா” என்று புகழ் கேட்ட கேள்விக்கு …….

“ரம்யா ” என்று பதில் அளித்தான் வேந்தன்…….

இந்த ரம்யா யார்? வேந்தனுக்கும், ரம்யாவிற்கும் என்ன தொடர்பு????

தொடரும்…….

3 thoughts on “காதலில் காலடிச் சுவடுகள்-5”

  1. CRVS2797

    அதானே… இந்த ரம்யா யாரு? வேந்தனுக்கும் ரம்யாவிற்கும் என்ன தொடர்பு…
    புரியலையே ??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *