Skip to content
Home » காற்றின் மொழி- சினிமா விமர்சனம்

காற்றின் மொழி- சினிமா விமர்சனம்

படத்தின் பெயர் காற்றின் மொழி.
நடிப்பு ஜோதிகா.

   இந்த படத்தை முன்னவே பார்த்துட்டேன். எப்பவும் ஜோ சிம்பு இவங்க இரண்டு பேரோட படத்தை பார்க்கற ஆவல் எனக்குண்டு. பிகாஸ் என் பேவரைட் ஆட்கள்.

   சமீபகாலமா என் மகள் போரடிக்கு நீங்க ரசிச்ச படத்தை சொல்லுங்க பார்ப்போம்னு கேட்க நான் வரிசையா சொன்ன படங்கள்ல இந்த படமும் வரவும் பார்க்க ஆரம்பிச்சா.
   ஜோதிகா நடச்சிருக்காங்க என்றதால தான் இந்த படத்தை மீண்டும் பார்கக உட்கார்ந்தது.

    இந்த படம் இந்தி மொழியை தழுவி எடுக்கப்பட்டது.
    ஜோதிகா ஒரு இல்லத்தரசி ‘சும்மா தானே இருக்கோம்’ என்ற வெற்றிட ரோல், ஆக்டிங் இயல்பா பொருந்தியது.

    ஒரு சாதாரண இல்லத்தரசி அனுபவிக்கற முக்கிய பிரச்சனைகள் இதுலயும் இருக்கு.

  தன்னுடைய திறமை எங்கயிருக்குனு தெரியாத நிலை. தந்தையின் பார்வையில் ஒன்றுக்கும் உதவாதவ.
   அக்காகள் இருவரும் பேங்க் உத்தியோகம் என்று இருக்க, நீ சமையல்கட்டும் மிமிக்ரியும் பண்ணிட்டு  லெமன் ஸ்பூன்ல வின்னான ஸ்போர்ட்ஸா? சுத்தற என்ற இழிவு.

     தனக்குண்டான திறமை ஒரு ரேடியா போட்டில பரிசு வாங்கும் அனுபவத்தில் அறிந்துக்கறா.

    ஏதாவது செய்யணும். எப்படியாவது தான் பேசப்படணும் என்ற ஆதங்கம் கொண்டவளா விஜி இருக்கா.

    தனியா (பாக்கியலட்சுமி என்ற புறா)புறாவோட பேசறதாகட்டும், வேலைவிட்டு வர்ற ஏர்ஹஸ்டர் பெண்களிடம் காபி குடிக்கிறிங்களா? என்று கேட்டு நோ டயர்ட் நாங்க போறோம்னு சொன்னதும் முகம் வாடி ஒரு கைப்பையை தூக்கிட்டு வயிற்று தொப்பையை இழுத்து நிற்கும் பெண்ணாக பார்க்க ரசிக்க முடியுது.

    ரேடியோ RJ வாக வலம் வர்றா முதல் நாள் ஷோவே ஏடாக்கூடமான கேள்வி. ‘கேள்விக் கேட்கறவங்க எப்படியோ என் பதில் சரியா இருக்கு தானே’ என்று அவள் கூறும் நேரம் இது பெண்களின் ஒட்டு மொத்த ஆண்வர்க்கம் கேட்கும் வினாக்கு பதிலாக இருக்குனு சொல்வேன்.

     தினமும் சமைச்சி போடும் இல்லத்தரசி ஒரு நாள் தூங்கிட்டாலும் அதென்னவோ தெய்வகுத்தம் என்ற ரேஞ்சுக்கு பேசுவது எல்லாம், நாலு சுவரில் மனதை செலுத்தும் பெண்களுக்கு எத்தகைய கஷ்டம்னு எப்ப தான் ஆண்களுக்கு புரியுமோ?

    இதுல மரியா அஞ்சலி கூடவே சுத்தும் கும்கி(இளங்கோ குமாரவேல்) என்றவர்.

  கும்கி என்றவரை பத்தி சின்ன பகிர்தல். அவர் ஒரு எழுத்தாளர், கவிஞன். ‘உப்பளத்தில் வாடும் பாமரனை பற்றி பாட்டெழுதுவேனே தவிர அப்பளத்தை பற்றி இந்த காப்ரேட் முதலைக்கு எழுத மாட்டேன்’ என்று சொல்லிட்டு போவார்.

   வேற வழியில்லாம திரும்ப வர்றப்ப மரியா பேசுவாங்க. ‘உன்னைனெல்லாம் பிரெண்ட்டுனு வேலைக்கு வச்சிருக்கேன் பாருனு பயங்கரமா திட்டுவிங்க. அப்ப அந்த லேடி மரியா சொல்வாங்க… ‘உன்னை மாதிரி எழுத்தாளர் தான் அப்படியிப்படினு பேசிட்டு என் கதை கவிதையை யாரும் பேசலை, நல்ல தமிழுக்கு இதான் நிலைமை அப்படின்னு புலம்புவாங்க. உனக்கு நான் கொடுத்துயிருக்கற வேல்யூ புரியலைனு திட்டுவாங்க.’
    பெரும்பாலும் நான் சில எழுத்தாளரை பார்த்திருக்கேன். நாலு கதை எழுதிட்டு என் கதை வாசிக்கப்படலை, மற்ற கதைக்கு வியூ போகுது. இதான் உலகம் என்று பொரிந்து தள்ளுவதை தாண்டி புலம்புவாங்க.

  பொரிந்து தள்ளறது வேற, புலம்பறது வேற.

  பொரிந்து தள்ளறவங்க யாரும் தன் எழுத்தை எந்தவித வியாபாரத்துக்கும் மாத்திக்க மாட்டாங்க. ஆனா புலம்பறவங்க சட்டுனு அவரை போலவே அப்பளத்துக்கு பாட்டு எழுதிடுவாங்க. சிரிப்பா இருந்தாலும் அந்த காட்சிகள் சிந்திக்க வேண்டியது.

    சும்மாவே இருக்கற இல்லத்தரசி ஏதோ சாதிக்க புறப்பட்டா வரும் பாருங்க பிரச்சனை குழந்தையை சரியா பார்த்துக்கலைனு. சப்புனு ஹீரோவை அடிக்கலாமானு தான் எனக்கு தோன்றியது. ஏன்டா நைட் ஷிப்ட் இரண்டு மணி நேர வேலைக்கு போறா நாயகி. அந்த ரெண்ட் மணி நேரத்துல நைட்ல வளர்ந்த பையனை பார்த்துக்க தெரியாது. கூடவே போய் தூங்க வேண்டியது தானே. போனை அவனிடம் கொடுத்துட்டு நீ பொறுப்பா இல்லாம அந்த பழியும் விஜி மேல போடுறனு காண்டு.

   அதோட அக்கா அப்பா வர்றப்ப நான் ஏதும் சொல்லலை அவங்க கேட்டாங்க சொன்னேன்னு பேசவிட்டு வேடிக்கை பார்த்தியே. சொந்தவீடு இல்லைனு அதே குடும்பம் குத்தி காட்டினப்ப அவ உனக்கு சப்போர்டா இருந்தா தானே. பேய் மாதிரி உடனே வாங்குனு நச்சரிக்கலையே.
    என்ன தான் நாயகன் மேல செம கோபமா இருந்தாலும், பிரச்தனை முழுவதும் ஓய்ந்து  ‘இல்லை விஜி… நீ நீயா இல்லை. வேலைக்கு போ. சமையல் காண்ட்ரேக்ட் கூட நான் பார்த்துக்கறேன். மதுவோடு பேசுங்கள் ஷோவுக்கு நீ இல்லாம நிறைய பேர் தவிக்கறாங்க. எல்லாருக்கும் ஆறுதல் சொல்லறது கூட யாருக்கும் வராது. உனக்கு அது நல்லா வருது. போ.. வேலைக்கு போ. நான் இனி சந்தேகப்படவோ, குற்றம் சுமத்தவோ மாட்டேன். என் விஜி சரியா பேசுவா’னு சொல்லறப்ப இதான் இது தான் ஹீரோக்குண்டான மதிப்புனு சொல்லலாம்.
நடுவுல நம்ம சிம்பு வருவாப்ல… லைட்டா சைட் அடிச்சாச்சு. மன்மதன்ல ஜோடியாவந்த ஆட்களா இதுங்கனு கேட்கற மாதிரி இருப்பாங்க. ஐ லைக் யூ சிம்பு.

    இல்லத்தரசிகளுக்கு பெண்களுக்கும் பிடிக்கும். ஏதேனும் சாதிக்க வேண்டும்னு நினைக்கறவங்களுக்கு மோட்டிவேஷனான படம்.





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *