Skip to content
Home » தித்திக்கும் நினைவுகள்-2

தித்திக்கும் நினைவுகள்-2

அத்தியாயம் -2

அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து நிதானமாக சாய்ந்துக் கொண்டான்.

இன்று காலையில் குடித்த டீ அதன் பின் தந்தை இறந்த செய்தி அறிந்து சாப்பிடாமல் இருந்து இப்பொழுதும் எதுவும் சாப்பிட தோன்றாமல் கண்களை மூடி தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டான்.

ரவீந்தர் தனது அக்கா வேதவள்ளி வளர்த்து ஆளாக்கிய மனிதர். தாய் தந்தை விட அக்கா மேல் அதிகம் பாசம் கொண்டவர். பெற்றோர்கள் மறைவுக்கு பிறகு அக்கா-மாமாவோடு வளர்ந்தவர். வேதவள்ளியின் கணவன் ரங்கன் மேகலை பிறந்த சில வருடங்களில் மறையதன் மகள் மேகலையோடு தம்பி ரவீந்தர் கூடவே வேதவள்ளி வளர்த்து ஆளாக்கியது.

மேகலையை வேறு யாருக்கும் மணம் முடிக்க பிடிக்காமல் தனது சொந்த தம்பிக்கே கட்டி வைத்தாள் வேதவள்ளி. திருமணம் முடிந்து இரண்டு வருடம் இன்பமாய் கழிய கௌதம் பிறந்தான்.

அதன் பின் ரவீந்தர் வேலை விஷயமாக சென்னை வர அங்கே சந்தித்த சியாமளாவை காதல் செய்து கரம் பிடித்தார். இவ்விஷயம் மேகலைக்கும் யாருக்கும் தெரியாது பார்த்துக் கொண்டார்.

அதே போல தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி பிள்ளை இருக்கும் விஷயம் சியாமளாவிற்கும் தெரியாது பார்த்துக் கொண்டார். இரண்டாம் மனைவி சியாமளாவிற்கு சிவா பிறந்து சில மாதங்களில் விஷயம் இருவீட்டாருக்கும் தெரிந்தது.

மேகலை மேலே கொண்டது அக்கா மேல் கொண்ட பாசத்தால் செய்த திருமணம் என்றும்சியாமளா மேல் கொண்டது தனக்கே உண்டான காதலில் நடந்த திருமணம் என்றே ரவீந்தர் சொல்ல இருவருமே தவித்தனர்.

வேதவள்ளி கோவம் கொண்டு சென்னைக்கே தனியாளாக வந்துவிட்டார்.

சியாமளா மற்றும் மேகலை இரு பெண்களும் தனது கணவனை இழக்க மனமின்றி இருந்தனர். இருவரும் ஆளுக்கு ஒரு பிள்ளையை கொண்டாலும் இருவரிடமும் பாசம் காட்டினார்கள்.

சியாமளா அண்ணன் காந்தன் எவ்வளவு சொல்லியும் சியாமளா அவரின் மீது புகார் செய்யாது இருக்க மேகலைக்கு(முதல் மனைவி) சியாமளா(இரண்டாம் மனைவி)மேல் ஒரு பாசம் உண்டானது.

என்னதான் அவளை ஏற்றுக் கொண்டாலும் மேகலைக்கு உடல் மனம் இரண்டும் பாதிப்பு அடைய சியாமளாவை அழைத்து ஒரே வீட்டில் வசிக்க துவங்கினாள்.

இதனால் கோவம் கொண்டு காந்தன் தாமரையை திருமணம் செய்யும் போது சியாமளாவை கூப்பிடவில்லை. தாமரை தனது சிநேகிதியே என்றாலும் அண்ணன் கூப்பிடாமல் போக மறுத்துவிட்டாள்.

கொஞ்ச நாளில் காந்தனுக்கு(சியாமளா அண்ணாவிற்கு) சாதனா பிறக்கசியாமளா வயிற்றில் பிள்ளை உண்டாக மீண்டும் குடும்பம் ஒன்றானது.

மேகலை படுத்த படுக்கையில் கிடந்தாள். சியாமளா இம்முறை பெண் பிள்ளையை பெற்றெடுதாள். ஜோதி பிறந்து துரு துரு அழகோடு ஐந்து வருடம் ஆனா போது மேகலை மரணம் அடைந்தாள்.

தனது மகள் சிறு வயதில் இறந்ததற்கு காரணம் சியாமளா என்றே எண்ணினார் வேத வள்ளி. அவள் மட்டும் தனது மகள் வாழ்கையில் வராமல் இருந்தால் மேகலை திடகாத்திரமாக இருந்திருப்பாள் என்று நம்பினார்.

 மேகலை இறந்து சில மாதங்களில் வேதவள்ளி ரவீந்தரிடம் சண்டையிட்டு கௌதமை தாமே வளர்ப்பதாக கூறி சாதனவை விளயாட்டில் விரட்டி வந்த பதினான்கு வயது சிறுவனான கௌதமை அப்பொழுதே அழைத்து சென்றார்.

சென்னை வந்த பிறகு ரவீந்தர் பற்றி சொல்லி இனி அங்கே போகக் கூடாது என்றும் சொல்லியே வளர்க்க செய்தார். கௌதமை பார்க்க வரும் போது சிவாவையும் அழைத்து வருவது கௌதமிற்கு தந்தையை பிடிக்காது போயின.

தந்தை தன்னை விட அப்பாவின் இரண்டாம் மனைவி பிள்ளைகள் மீது அதிகம் பாசம் வைத்து இருக்கின்றார் என்று அறிந்து கௌதம் விலகினான்.

தனது தந்தையிடம் அப்பொழுது இருந்தே பேச மறுத்தான். அடிக்கடி தந்தை தன்னை பார்க்க வந்தாலும் எடுத்தெறிந்து விடுவான். இதோ இப்பொழுது வரை அவரிடம் பேசாமலே இருந்து விட்டான்.

இன்று சடலமாக பார்க்கும் வரை கூட அவனின் மனதில் கோவம் இருந்தது. ஆனால் இறந்த பின் மேகலை அருகே சமாதி கட்ட சொல்லி அவர் எழுதியதை வைத்து ஓரளவு மனம் இலகுவானது.

கடைசியாக சாதனா விரட்டி கொண்டு தான் அவளிடம் விளையாடியது நினைவு வர தானாக முறுவலும் வந்தன.

அன்று பார்த்த சாதனா வா இது இப்படி வளர்ந்து ஆளே அடையாளம் அறியாத அளவுக்கு என்றே எண்ணி வியக்க தான் முடிந்தது.

தன்னை போலவே அவளுக்கும் என்னை நினைவு இருக்கின்றதாபார்த்து பல வருடம் ஆனது தனக்கே நினைவு இப்பொழுது தான் தோன்றும் பொழுது அவள் தன்னை விட அன்று சிறுவயது என்பதால் நினைவு இருக்குமா என்பதே அரிது தான்.

   அத்தை ப்ளீஸ் சாப்பிடுங்க இரண்டு நாளா சாப்பிடாம இருந்தா மாமா திரும்ப வந்திடுவாங்களா?” என்ற சாதனா குரலில் கலைந்தவன் அருகே இருக்கும் ஜன்னல் வழியே எட்டி பார்த்தான். அங்கே சியாமளா கிணற்றின் அருகே அமர்ந்து இருக்க சாதனா தட்டில் சாததுடன் வற்புறுத்திக் கொண்டு இருப்பதைக் கண்டான்.

எல்லா உயிரும் ஒரு நாள் போவது தான் அத்தை” என்று சாதனா சொல்லிற்கு ,

இப்போ என் உயிர் போனாலும் தேவலை சாதனா. அவர் இல்லாத வாழ்க்கை என்னால நினைக்க முடியலை

என்ன பேச்சு அத்தை இது உங்களை நம்பி சிவா ஜோதி இருக்காங்க நீங்களும் மாமா மாதிரி தவிக்க விட போறீங்களாநீங்க சாப்பிடாம ஜோதியும் சாப்பிடமா இருக்கா” என்றாள் சாதனா.

என்னை வற்புறுத்ததே சாதனா விட்டுடு…

நீங்களே சாப்பிடாம இப்படி செய்தாள் உங்க பெரிய பையன் எப்படி சாப்பிடபோறார்….?” என்று சரியாக மடக்கினாள்.

சாதனா… கௌ..தம்… கௌதம் சாபிட்டானா…ஐயோ ரொம்ப வருஷம் கழிச்சு வந்து இருக்கான் என்னால பச்சை தண்ணீர் கூட கொடுக்க முடியலை” என்று அழுது இருக்க,

நீங்க இந்த ரெண்டு இட்லி சாப்பிட்டீங்க நானே போய் உங்க பையனுக்கு எடுத்துட்டு போறேன்” என்று சமாதானம் செய்தாள்

நீ முதலில் கௌதமிற்கு கொடு நான் சாப்பிடறேன்” என்று அவளை விரட்டினார் சியாமளா.

நீங்க சாப்பிடுங்க கண்டிப்பா அவரும் சாப்பிடுவார்” என்றதும் சாதனா ஊட்டி விட சியாமளா உண்ண துவங்கினார். இடையில்

சாதனா அக்காவிற்கு நான் துரோகம் பண்ணலை எனக்கு அவர் திருமணமானவர் என்று தெரிந்தால் மேகலை அக்கா வாழ்கையில் குறுக்கே வந்து இருக்கவே மாட்டேன். பிள்ளை பிறந்து முடிந்த பின் தெரிந்து என்ன பிரோஜனம்…அக்கா அதுக்கு பிறகு ஒரே வீட்டில் இருந்தோம் ஆனா அவரோட அவ்வளவா பேசலை… பேசாமல் இருந்தே மேகலை அக்கா அவருக்கு தண்டனை கொடுத்தாங்க…. ஆனா என்னிடம் அக்கா பேசி மன்னிச்சுட்டாங்க அவங்க சிவா கௌதம் இரண்டும் பேரையும் ஒரே மாதிரி தான் பார்த்துகிட்டாங்க… எனக்கும் கௌதம் என்றால் என் முதல் பிள்ளை போல தான் பார்த்துக்கிட்டேன்.

மேகலை அக்கா இறந்ததும் கௌதம் என்னை விட்டு போயிட்டான். அதுக்கு பிறகு வரவே இல்லை… நீ கூட ரொம்ப வருஷம் பிறகு தானே இங்க வந்து இருக்கஅத்தை மேல ஏதாவது கோவமாசொல்லு சாதனா அத்தை இப்படி ஒருத்தங்களுக்கு துரோகம் செய்தேனு… 

சே சே அதெல்லாம் இல்லை அத்தை… அப்படி எல்லாம் நினைக்கலை… நீங்க தண்ணீர் குடிங்க ஏற்கனவே இரண்டு முறை மயங்கிட்டீங்க என்று அம்மா சொன்னாங்க” என்று திசைதிருப்பினாள்.

கௌதம் என்னை இன்னும் மன்னிக்கலை

முடிஞ்சதை விடுங்க அத்தை. நான் ஜோதியை சாப்பிட வைக்கறேன்

கௌதம்…

ம்‌ம்‌ம்… அவரையும் தான்” என்று சாதனா சென்றதும் முழங்காலிட்டு முகத்தை பொத்தி சியாமளா அழுவது கௌதமிற்கு பாவமாக தான் தோன்றியது.

தன் தந்தை செய்த தவறால் பாவம் இவர்கள் என்ன செய்வார்கள் என்று பொறுமினான். ஆனால் எல்லாம் மாற்றிட முடியாது.

டொக் டொக்‘ கதவு தட்டும் சப்தம் எழ, ”கதவு திறந்து தான் இருக்கு” என்றான்.

தட்டில் இட்லி கொஞ்சம் சட்னி குடிக்க நீர் என்று சாதனா அவன் முன் நின்று இருந்தாள்.

உங்களுக்கு சாப்பாடு…. நீ… நீங்க சாப்பிடலை…” என்றாள் திணறலோடுகையை அங்கிருந்த டேபிளில் காண்பித்து வைக்குமாறு நீட்டினான். ஒரு வார்த்தை பேசாமல்…

நீங்க சாப்பிடாம விட்டுட்டா…” என்று அவள் கூறியதும் வாய் திறந்தான். அதுவும் சினதோடு…

ஒன்றும் சாக மாட்டேன் வச்சிட்டு போ” என்றான். வேறு வழியின்றி டேபிளில் வைத்துவிட்டு அமைதியாக வெளியேறினாள். இப்படி பேசினாலும் சாதனா அமைதியாக தான் போனாள். ஆனால் பேசியவனோ சே இப்போ தான் பார்த்தேன் அதுக்குள் இவளிடம் எதுக்கு இப்படி பேசிட்டேன்… என்னை அறியாமை எல்லோர் மேலயும் கோவம் காட்டுகின்றேன்.

பின்னர் கௌதமிற்கு சியாமளா பேசியதே ஓடின. பிள்ளை பிறந்த பிறகு தெரிந்து என்ன பயன்உண்மை தான் ரவீந்தர் செய்த செயலால்… என கோவப்பட்டவன். இனி இறந்தவர் மீது கோவம் இருந்து என்ன பயன் என்றே அதையும் மறக்க முயன்றான்.

அங்கிருந்த தட்டினை எடுத்து உண்ண துவங்கினான். அவனுக்கு அதிக பசி இருந்தது சாப்பிட்டான். சாதனாவும் நீண்ட நாட்களாக இங்கே வரவில்லை என்று சியாமளா பேசியதில் தெரிந்துக் கொண்டான். ஆனால் அதற்கு தான் காரணம் என்று அறியாமலே… எதனால் என்று யோசித்தான்.

போனில் வேதவள்ளியோடு பேசிக் கொண்டு இருக்க கதவு தட்டும் சப்தம் கேட்க திரும்பினான். அங்கே சாதனா நின்று இருந்தாள். என்ன என்பது போல பார்வை பார்க்க,

த… தட்டு எடுத்துட்டு போக வந்தேன்” என்றதும்

சரி ஆச்சி நாளைக்கு போன் பண்ணறேன்” என்ற துண்டித்தான். மீண்டும் எடுத்துக் கொள் என்பது போல செய்கை கைகளில் நீட்டி,

அவன் கொஞ்சம் இறுக்கம் தளர்த்தி இருப்பதாக தோன்றியது. ஆனாலும் அவனை பார்க்க உறுத்தல் இருந்தன. காரில் கீர்த்தியோடு பேசிய பேச்சை வைத்து தன்னை தவறாக நினைத்திருப்பான் என்பதே… அவனோ அவளோடு பேச தோன்றாமல் அவளையே கண் கொட்டாமல் பார்த்து இருந்தான். கீழே செல்லும் வரை அவளையே பார்த்தான்.

இவளுக்கு என் நினைவு இருக்கா இல்லையா…சே என்றே வருந்தினான். அதற்கு தான் காரணம் தேடாமல்….

உறங்க போராடி தான் ஒரு வழியாக அவ்வீடு உறக்கம் தழுவியது. அழுது அழுது வீங்கிய கண்கள் தானாக உறக்கம் வர வழி வகுத்தது.

நினைவுகள் தொடரும்

பிரவீணா தங்கராஜ்.

4 thoughts on “தித்திக்கும் நினைவுகள்-2”

  1. Everyone having their own explanation even though ravinder is the main culprit

    He doesn’t had any regrets which is worst

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *