Skip to content
Home » தீரா காதலே – 14

தீரா காதலே – 14

தீரா காதலே – 14

கதிரவன் தன் ஆளுமையை கூட்டி தன் செங்கதிர்களை செந்தீயாய் தகிக்க வைக்கும் உச்சிவெயில் நேரம். தோளில் ஒரு பையும் கையில் ஒரு வாட்டர் பாட்டிலுமாக வைத்துக்கொண்டு தான் செல்ல இருக்கும் முகவரியை தேடி அலைந்து கொண்டிருந்தாள் ஆதினி. காலையில் தீரா அலுவலகத்தில் விடுமுறை கேட்டு வெளியே செல்லவும் தானும் கிளம்பி வெளியேறியிருந்தாள். ஒரு வழியாக கண்டறிந்து அதன் வாயிலில் நின்றாள்.

மைண்ட் ஃட்ரீ டாப்ரா குரூப் கம்பெனி

நுழைவுவாயிலில் காவலாள் நிற்க அவரிடம் விசாரிக்கலாம் என்று செல்லப்போக தீராவின் நண்பன் அதற்குள் அழைத்தான்.


“ஹாய் அண்ணி எப்படி இருக்கீங்க? உங்களுக்கு ஹெல்த் சரியில்லைனு தானே லீவு எடுத்தான்… நீங்க என்னடான்னா இங்க நிக்றீங்க? ….. எங்கே அவன்?” என்று அவளின் பின் எட்டி பார்த்தான்.


“நீங்க..?”


“நான் உங்க மேரஜ்க்கு வந்திருந்தேன் உங்களுக்கு அந்தளவுக்கு அறிமுகம் இல்லைல. நான் ஜஸ்டின். தீராவும் நானும் தான் ஆபிஸ்ல குளோஸோ இருந்தோம்” என்றான் அந்த ஜஸ்டின் என்பவன்.


“ஓ ஓகே. அதென்ன இருந்தோம்னு சொல்றீங்க அப்படினா இப்ப ப்ரெண்ட்ஸா இல்லையா?”


“ம்ம் எப்படி சொல்றது இப்பலாம் அவன் என்ட்ட பேசுரதே இல்லை அண்ணி.. புதுசு புதுசா…” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே ஆதினி கண் சொருக தலையை பிடிக்க


“வாங்க அண்ணி கேன்டீன் இங்க பக்கத்தில் தான் ” என்று அழைத்து கொண்டு அமர வைத்தவன் பழச்சாறை ஆர்டர் செய்து வாங்கி கொண்டு வந்து கொடுத்தான்.


“தேங்க்யூ ப்ரோ வெயில்ல வந்தது தலை சுத்திருச்சி”


“கேக்ரேனு தப்பா எடுத்துகாதீங்க அண்ணி. வீட்டில் எதுவும் பிராப்ளமா?”


“ஏன் அப்படி கேக்ரீங்க?”


“தீரோவோட ரீசண்ட் ஆக்டிவிட்டி எதுவுமே சரியில்லை புதுசு புதுசா ப்ரெண்ட் பிடிக்கிறான். யார கண்டாலும் பணம் வேணும் கடனா தரீங்களானு கேக்ரான். நான் பேச ட்ரை பண்ணா என்கிட்ட பேசவே மாட்டேங்குறான். இப்ப நான் அவன் டீம்லயும் இல்லை சோ நானே உங்கள வந்து வீட்டில் பாக்கனும்னு தான் இருந்தேன் அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க”


“ஏன் அப்படி பண்றாரு? யார பாத்தாலும் பணம் கேக்ராரா?”


“ஆமா போன மாதத்தில் ஒரு தடவை நான் டீ குடிக்க வெளியே இருக்கும் டீக்கடைக்கு போனேன். அங்கு வேறு கம்பெனி பையன் நின்னுட்டு இருந்தான். பழக்கம் கிடையாது எப்பவாவது பேசுவோம் அவன்கிட்ட காசு கிடைக்குமானு கேட்டு அவன்கூடயே போய்ட்டான்”


“அப்படியா?”


“ஆமா. உங்களுக்குள்ள ஏதாவது பிராப்ளமா?”


“ஒரு பிராப்ளமும் இல்லை. சட்டர்ன்லி தான் இப்படி சேன்ஜஸ். ஏன் இப்படி பண்றாரு என்ன பிரச்சினைனு எதுவுமே தெரில அதான் ஆபிஸ்ல வந்து கேட்டு பாக்கலாம்னு வந்தேன். ஆபிஸ்ல எட்டு மணிக்கு எல்லாம் இருக்கனும் நியூ பிராஜக்ட்னு கிளம்பி வந்துடுராரு. ஆனால்…. வீட்டுக்கோ எனக்கோ ஏதும் செலவுக்கு….. தரது இல்லை” என்று சங்கடமாக தலையை குனிந்து கொண்டாள்.


“அண்ணி என்னை உங்க தம்பி மாதிரி நினைச்சிகோங்க இப்படி Embarrass ஆகாதீங்க. எனக்கு புரியுது. ஆனால் அண்ணி அவன் இந்த பிராஜக்ட் ஸ்டார்ட் ஆனதுல இருந்து சரியாவே ஒர்க் பண்ணல. எதையோ பறிகொடுத்த மாதிரியே இருக்கான். அதோட எட்டு மணி எல்லாம் ஆபிஸ் டைமிங்கே கிடையாது. அதோட பாஸ்ட் சிக்ஸ் மன்த்ஸா அவனுக்கு சாலரி இன்கிரீஸ் பண்ணி இருகாங்க பட் நீங்க சொல்றத கேக்கும் போது எனக்கு ஷாக்டா இருக்கு எப்படியும் த்ர்ட்டீ தௌசன் இருக்கும்”


பொறுமையாக கேட்டவள் உணர்வுகளை கட்டுப்படுத்தி அதனை கேட்டாள்.


“அவரு… அவரு..க்கு வே.. வேற .. பே..மி..லி ஏதும்?”


“அண்ணி அவன் உங்க மேல உயிரையே வச்சிருக்கான். எந்த காலத்திலும் அப்படி ஒரு தப்பு அவன் பண்ணவேமாட்டான். அவன் ஏதோ சிக்கல்ல இருக்கானு எனக்கு புரியுது ஆனால் என்னனு தான் தெரில எனக்கு. சில லோக்கல் பசங்க கூட பழக்கம் வச்சிருக்கான் ஏண்டா இப்படி பண்றனு கேட்டதுல இருந்து என்கிட்ட சரியா பேசுறது இல்லை. நான் வேணா மறுபடியும் பேசி பாக்ரேன் பட் இப்படி ஒரு எண்ணத்தை மட்டும் டெலிட் பண்ணிடுங்க”


விழிகளில் விழிநீர் சூழ்ந்து இம்சித்தது. இருக்கும் இடத்தை கருத்தில் கொண்டு கட்டுப்படுத்தி “அவர் இப்ப எல்லாம் … ட்ரிங்க்ஸ் பண்ணிட்டு வராரு” என்று சொன்னாள்.


“கூடா நட்பு தான். சில ஆட்களோட சேர்க்கை சரியில்லை கேஷ் வேணும்னு அவங்களோட பழகுறான் அப்ப அவங்களோட பழக்கத்தை பழகி தானே ஆகனும். அவங்க கூட சேந்து தான் இப்படி ஆகிட்டான். நீங்க ஒர்ரி பண்ணிகாதீங்க நான் என்னனு கேக்ரேன்”


“ஓகே நான் கிளம்புறேன்”


“அண்ணி எப்படி வந்தீங்க நான் கேப் அரேன்ஞ் பண்ணி தரவா?”


“நோ ஐ வில் மேனஜ்”


“சரி அப்ப லன்ச்சாது சாப்பிட்டு போங்க”


“இல்லை ப்ரோ நான் பாத்துகிறேன் தேங்க்ஸ்”

சொல்லி கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
ஜஸ்டின் சொன்ன விஷயங்களும் அலைச்சலும் மனதை அலைக்கழிக்க தன் கையில் அணிந்திருந்த வளையலை விற்று பணம் பெற்று கொண்டவள் வரும் வழியில் வாங்கி வந்த உணவை கடனே என்று உண்டாள். மீதி பணத்தை செலவிற்கு வைத்தவள் தன்னவன் வந்ததும் நேரடியாக அனைத்தும் கேட்டு விடலாம் என்று முடிவுக்கு வந்தவளாய் சிறிது நேரம் மனதை அமைதிபடுத்தும் பொருட்டு தொலைக்காட்சியில் பாடல்களை ஒலிக்கவிட்டாள்.

🎶 உன் இதழுடன் இணைந்த நாள் மறவேன்..
உன் மடியினில் மயங்கி நான் கிடந்தேன்..
காலை பனியில் உன் முத்தங்கள் இங்கே..
மாலை இருளில் நான் ஏங்குகின்றேன்..

பிறந்தேன் உடைந்தேன்..
மனம் திறந்தேன் கடந்தேன்..
மரித்தேன் சரிந்தேன்
நான் சாகிறேன்..

தீரா காதலே… தீரா காதலே…
தீரா காதலே… தீரா காதலே…🎶

தொலைக்காட்சியில் ஓடிய பாடலை ரசித்தபடி மெலிதாக ஹம் செய்து கொண்டு சோபாவில் சாய்ந்தமர்ந்தாள்.


‘டிங்’

அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி வந்ததும் அதை எடுத்து பார்க்க புலனத்தில் பெயரில்லா எண்ணிலிருந்து ஒரு புகைப்படம் வந்திருந்தது. அதன் கீழே சில வாக்கியங்களும் இடம் பெறவே என்னவென்று திறந்து பார்த்தவளோ “நோஓஓஓ” என்று கத்தி கொண்டே அலைபேசியை தவற விட்டிருந்தாள்.


வியர்வையில் குளித்திருந்தவள் மேனி நடுக்கமும் பதற்றமும் கொண்டு தடுமாறியது. இதயம் வெளியே வந்து கூக்குரலிடுவது போல் இரைச்சலிட்டது. அலைபேசியை எடுக்க கைகள் மறுத்து நடுங்கின. அருகிலிருந்த சிறுமேஜையில் தண்ணீர் பாட்டில் இருக்க அதை எடுத்து பருகினாள். கைகளின் நடுக்கத்தின் உபயம் பாதி தண்ணீர் மேனியெங்கும் சிந்தி சிதறியது. தண்ணீர் குடித்தபின் கொஞ்சம் ஆசுவாசமாக சாய்ந்தமர்ந்து கண்களை மூடினாள்.

சிலமணி துளிகளில் தீரா வந்தான். கதவு தாழ் போடாமல் இருக்கவே உள்ளே வந்தவன் இவள் இருக்கும் நிலையை கண்டு பதற்றம் கொண்டு


“ஆது.. ஆது.. ஐயோ என்னடி ஆச்சு? ஆ..”
அவன் கத்தி கொண்டிருக்கும் போதே படக்கென்று விழிகளை திறந்தவள் உஷ்ணமாக முறைத்தாள்.


” என்னடா நடக்குது இங்க? என்கிட்ட இன்னும் என்ன மறைக்கிற நீ? யார் கூட குடும்பம் நடத்திட்டு வர்ர?”
விழிகளில் அதிர்ச்சி பரவ அவள் உதிர்த்த கடைசி வினாவில் சினம் மிகுந்தவன்


“ஸ்டாப் இட் ஆதினி என்ன பேசுரனு தெரிஞ்சி தான் பேசுரீயா? இதென்ன புதுசா ‘டா’ போட்டு பேசுற பழக்கம்?”


“ஏன் அதுல என்ன குறைஞ்சி போய்ட்டீங்க? பஸ்ட் நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. என்ன விஷயங்களை என்கிட்ட மறைக்கிறீங்க? லெட் யூ சே”


“என்ன நடந்ததுனு சொல்லாமல் இப்படி பேசினால் என்ன அர்த்தம் ஆதினி. அண்ட் யூ ஆர் மை எவிரிதிங் யூ ஆர் மை பேமிலி”

என்று சொல்லியவன் விழிகள் எதேச்சையாக கீழே பார்க்க அவளின் அலைபேசி கேட்பாரற்று கிடந்தது. அதை எடுத்தவன் பார்க்க விழிகள் சிவந்து தாடையிருகியது. அப்படியே தளர்ந்து சோபாவில் தொம்மென்று அமர்ந்தான்.


“இப்பவாது என்ன நடக்குதுனு சொல்லுங்க தீரா என்னால டாலரன்ஸ் பண்ண முடில” என்று அழுதாள்.


“ஆதினி ஸ்டாப் க்ரையிங்….. சொல்றேன்…. குருவோட சிஸ்டர் மேரஜ்க்கு கொஞ்சம் கேஷ் லோன் வாங்கி இருந்தேன் அதுல கொஞ்சம் அதிகம் கடன் ஆகிருச்சி வட்டி ஜாஸ்தி ஆகி என்னால மேனேஜ் பண்ண முடில. உன்கிட்ட சொல்லாமல் இதை முடிச்சிடலாம்னு நினைச்சேன் ஆனால் இவங்க இந்தளவுக்கு இறங்குவாங்கனு நினைக்கலடி. அண்ட் ஐ லவ் ஒன்லி யூ பிளிஸ் பிலிவ் மீ” என்று அவள் முன் முழந்தாலில் நின்று கைகளை பிடித்து தன்னை புரிந்து கொள்ளேன் எனும் பார்வையை விழிகளால் மொழிந்தான்.


“ஐ ட்ரஸ்ட் யூ தீரா. கடன் இருந்துனா என்ன என்கிட்ட சொல்றதுக்கு என்ன ரெண்டு பேரும் சேர்ந்து சமாளிச்சிருக்கலாமே. குரு ரிட்டர்ன் தரலயா?”
மறுப்பாக தலையசைத்தான்.


“சரி இரு என் மத்த ஜொவல்ஸ் எல்லாம் லாக்கரில் இருந்து எடுத்து தரேன்” என்று கிளம்ப எத்தனிக்க அவளை தடுத்தவன் தலை குனிந்து நின்றான்.

“வாட்ஸ் மோர்?”


“ஆது அது… வந்து ஆது உனக்கு.. இப்படி.. ஒரு.. துரோகம்.. பண்ணியிருக்க கூடாது.. உன்கிட்ட.. கேக்காம.. உன் ஜூவல் எல்லாம் வித்துட்டேன்” என்று கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான். ஒரு நொடி அதிர்ந்தாலும் சுதாரித்தவள்


“சரி என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க”


“வட்டி இல்லாமல் கேஷ் கிடைக்கனும் மன்த்லி டொவின்டி தௌசன் கட்டி சீக்கிரமே அடைச்சிடலாம். உன்னால முடியுமா?”


“எவ்வளவு வேணும்?”


சில நிமிட கணக்கிடு முடிவில் “டோட்டலா செவன் லாக்ஸ் வேணும்”


“வாட் ஏழு லட்சமா?”


“ம்ம்ம்”


“சரி நான் வாங்கி தரேன். அதுக்கு அப்புறம் என்ன பண்ண போறீங்க?”


“சீக்கிரமே அடைச்சி தந்துரேன்டி நம்புடி”


“அத விடுங்க. கடன் இருந்ததால தான் தள்ளி இருந்தேனு ஒரு முகத்திரை போட்டு என்கிட்ட முகம் காட்டாமல் ஓடி ஒளிஞ்சீங்களே இனி எப்படி இருப்பீங்கனு கேக்ரேன்”


மௌனமாக இருந்தான். என்ன பதில் சொல்ல முடியும் இதற்கு.


“என்ன பதில் சொல்ல முடிலயா இல்லை ஏன் சொல்லனும்னு..”


“ஆதினி பிளிஸ் ஸ்டாப் நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போய் இருக்கேன். மேற்கொண்டு நோகடிக்காதடி”


அத்துடன் அன்றைய உரையாடலையும் உணவையும் முடித்துக்கொண்டு உறங்கினார்கள். வெகுநாளைக்கு பின் சிறு நிம்மதியான உறக்கம்.
மறுநாள் ஆதினி தனக்கு தெரிந்தவர்களிடம் விஷயத்தை சொல்லி உதவி கேட்கலாம் என்று கிளம்பினாள். அவளுக்கு அலைபேசியை தொடவே பயமாக இருந்தது.

மொத்தமாக யார் கொடுப்பார்கள் அதுவும் இந்த காலத்தில் பண விஷயத்தில் யாரும் யாரையும் நம்புவதில்லை. அவளுக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை.


மறுநாள் தன் நெருங்கிய தோழி மலர் வீட்டுக்கு சென்றவள் தன் நிலையை சொல்லி உதவி கேட்டாள். மலரும் ராகவ்வும் திருமணத்திற்கு பின் சொந்தமாக புகைப்பட ஸ்டுடியோ ஒன்றை நிர்வாகம் செய்தார்கள்.


மலர் சரியென்று ஒப்புக்கொண்டதோடு ராகவ்விற்கு அழைத்து விஷயத்தை தகவலாக தான் சொன்னாள். அவனேதும் மறுப்பு சொல்லவில்லை சரியென்று சொன்னான்.


“மலர் இந்த உதவியை உயிர் இருக்கும் வரைக்கும் நான் மறக்கமாட்டேன்டி தேங்க்யூ சோ மச்” என்று கைகளை பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டாள்.


“எனக்கு ஒரு பிரச்சனைனா நீ ஹெல்ப் பண்ண மாட்டியாடி? என்ன இது தேங்க்ஸ் எல்லாம் சொல்லிகிட்டு. அதுவும் நீ கன்சீவா இருக்க இந்த நிலையில் அழுதுகிட்டு… வாய்லயே போட போறேன் பாரு .. உட்காரு பஸ்ட். லன்ச் சாப்பிட்டு தான் போகனும் ” என்று சமாதானம் செய்தாள் தன் நண்பியை.


மனதிற்குள் ‘ஆண்டவா எங்களுக்கும் சீக்கிரமே குழந்தை வரம் கொடுப்பா இந்த புண்ணிய காரியமே உனக்காக தான் செய்ரேன்’ என்று வேண்டி கொண்டாள்.


ஆனாலும் பணம் தர இரண்டு மாதங்கள் அவகாசம் ஆகும் என்பதையும் தெரிவித்திருந்தாள். சரியென்று மகிழ்வுடன் வீட்டுக்கு வந்தவள் தீராவிற்கு அழைத்து விஷயத்தையும் சொன்னாள். மறுநாள் மெர்ஸியின் கணவன் தீபக் தற்கொலை செய்ததை கண்டு இருவரும் அதிர்ந்தார்கள்.

தீரா காதலுடன்…

4 thoughts on “தீரா காதலே – 14”

  1. CRVS 2797

    அட்லோஸ்ட் இவங்களாவது போலீஸை அப்ரோச் செய்தால் நல்லது. ஒருவேளை, எந்த புத்துல எந்த பாம்பு இருக்குதோன்னு பயப்படறாங்களோ…????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *