Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -19

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -19

துஷ்யந்தா-19

      பிரகதி கத்தியால் குத்தி சிகிச்சை செல்கின்றதென எண்ணினால் இவன் எதிரே வந்து நிற்கின்றான்.

       அதுவும் இருவரும் ஜோடியாக. பிரகதி குத்தினால் இந்நேரம் அவளை ஒரு வழி செய்திருப்பானே.. இதென்ன இவர்களுக்குள் உறவு.

   இந்த பிரகதியும் தான் சேர்ந்து வருகின்றாள் கத்தியால் குத்தும் அளவுக்கு வெறுப்பிருந்தும் எப்படி இவளால் அவனோடு சேர்ந்து வருகை தர முடிந்தது.

     தீபிகா யோசனையில் “குழந்தை கியூட்டா இருக்கு. சசிக்கும் இதே போல மச்சம் வலது கையில இருக்கும். நாட் பேட் அப்ப இது சசி குழந்தை தானா?” என்றான்.

     தீபிகாவுக்கு பற்றி எரிய வேண்டியது. ஆனால் கோபம் துளிர்த்தது என்னவோ பிரகதிக்கு தான்.

    “அறிவில்லை… எங்க வந்து எப்படி பேசற. அதுவும் இந்த மாதிரி குழந்தை பிறந்த நேரத்துல. பச்ச குழந்தை என்ன டா பாவம் பண்ணுச்சு. பிறந்த கொஞ்ச நேரத்துல உன் சந்தேக பார்வை இந்த பூந்தளிர் மேல விழுந்தது.” என்று அரவணைத்து குழந்தையை தூக்கினாள்.

     “விடு பிரகதி… தேளோட குணமே கொட்டறது தான். மச்சம் மட்டும் உங்க சசி மாதிரி இருந்தது பெட்டர் குரல் எந்த லட்சனத்துல வந்து தொலைக்குமோ? ஒரு வேளை இதுவும் திக்கி திக்கி பேசினா நம்புவிங்களா.” என்றாள் தீபிகா.

      “தேவையில்லை…சந்தேகம் வந்தா டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப்பேன்.” என்று கூறவும் இம்முறை பிரகதி “கத்திய வயிற்றில குத்தியிருக் கூடாது டா. தொண்டையில குத்தியிருக்கணும். என்னலாம் பேசற. வெளியே போ” என்றாள்.
 
     தீபிகா பார்வை இரத்தம் தெரிந்த பாகத்தில் விதுரனின் உடலை தழுவியது. வயிற்றில் குத்தியிருப்பதை கண்களால் ஆசைதீர பார்த்தாள். என்ன விதுரன் முகம் சின்ன வலியை கூட காட்டவில்லையேயென பெருவலி அவளுக்குள் ஏற்பட்டது.

      “நான் வெளியே இருக்கேன்.” என்று சென்றான்.

     “அம்மாவுக்கு எப்படியிருக்கு பிரகதி ஆசிட் குடிச்சிட்டாங்களாமே.” என்றதும் பிரகதி கண்ணீர் அடைப்பெடுத்து வழிந்தது.

     “இனி 90% பேச முடியாதுனு சொல்லறாங்க. இவனால் வந்தது. இவனுக்கு போக வேண்டிய ஆபத்து. எங்கம்மாவுக்கு வந்து சேர்ந்துடுச்சு. எத்தனை தான் அவங்க கஷ்டப்படுவாங்களோ.” என்று அழுதவளின் செய்கையில் குழந்தை அழ “நான் ஒரு லூசு. குழந்தையை பாரு.” என்று அவளிடம் அமுதம் பருக  கொடுத்துவிட்டு வெளியேறினாள்.

      “என்ன ஆசைதீர ரெண்டு பேரும் பேசியாச்சா. என்ன நான் சாகலைனு இரண்டு பேருக்கும் வருத்தம் இருக்கும்.” என்றான்.

     “வாயை மூடு. எங்கம்மாவோட நிலைமைக்கு நீ தான் காரணம்” என்றாள்.

     “என்னோட இந்த நிலைமைக்கு நீ தான் காரணம்னு நானும் சொல்வேன். ஆனா தீதும் நன்றும் பிறர்தர வாறனு படிச்சிருக்கேன்.” என்றான் விதுரன். நடந்துக் கொண்டே பத்மாவதி இருக்கும் சிகிச்சை பிரிவுக்கு வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்தனர்.

    “அப்ப என் லைப்க்கு நான் படற கஷ்டம் என்னாலனு சொல்லறியா?” என்றாள்.

     “கண்டிப்பா… கல்யாணத்துக்கு வந்தம்மா போனமானு இருந்தா உன் லைப் கடவுள் ஏன் என்னோட கோர்த்து விடப் போறார். நீ பாட்டுக்கு படிச்சி முடிச்சி வந்து உங்கம்மாவோட இருந்திருப்ப. அந்த உஷாதேவி… அவங்க கூட இருந்து கவனிச்சு இருப்பாங்க. அதோட பழக்கம் இன்னும் நெருக்கமாகி அபிமன்யுவை கல்யாணம் பண்ண பேச்சு போயிருக்கும். நீயும் அவனை கல்யாணம் செய்திருப்ப.

இல்லை எட்வினை மேரேஜ் பண்ண பர்மிஷன் கேட்டு உங்கம்மாவிடம் நின்றுயிருப்ப. அனிலிகாவிடம் என்னை கொல்ல போறதா பேச வேண்டி சூழலே இருந்திருக்காது.

இப்ப… எல்லாம் மாறிடுச்சு. என்னை நோண்டிட்ட.. என்னோட கோபம் என் திமிர். இப்ப உன்னை ஆட்டுவிக்குது. என்னோட எதிரி இப்ப உன்னோட எதிரியா மாறி இங்க உட்கார்ந்து இருக்கோம்.” என்றான்.

    விதுரனுக்கு உஷாதேவி அபிமன்யு எல்லாம் அறிந்திருக்கின்றானே. அப்படியெனில்… இதில் அனிலிகாவிடம் இவனை கொல்லப் போவதை பேசியதும் அறிந்து வைத்திருக்கின்றான். சே நான் ஒரு முட்டாள். அதான் அறையில் கண்காணிப்பை வைத்திருக்கின்றானே என்று சோர்ந்தாள்.

   அவளுக்கு ஒன்று புரியவில்லை. அவனை கொல்ல முயல்கின்றேனென அறிந்தும் எப்படி தன்னை விட்டு வைத்தான். எதனால்? ஏதோ தலைவலி அதிகமாக தாக்கியது. தலையை தாங்கி

   “ரொம்ப யோசிக்கதே… எனக்கு அடவெஞ்சர் பிடிக்கும். எதிரி அமைதியா இருந்தா அதுல என்ன கிக்கு. போட்டு தள்ள பிளான் போட்டு அதுல தப்பிச்சு அந்த எதிரிக்கு புரிய வைக்கணும். உன்னால ஒரு … பிடுங்க முடியாது. ஹாஹா ஆமா அதே வோர்ட்ஸ் தான் பில் பண்ணிக்கோ.” என்றான் அவளின் முறைப்பில்.
  
     நீ முறைச்சா அழகாயிருக்கு.. அந்த மூக்கு வெடைக்குது, சிவக்குது. ரெட்கலர் மிளாகாய் மாதிரி ஆனா என்ன மிளகாய்னா தூர போகணும்னு தோன்றும். எனக்கு மட்டும் மிளகாயை கடிக்கணும்னு தோன்றுது.” என்றான்.
  
    பிரகதிக்கு எரிச்சல் மண்டியது. “உனக்கு அறிவேயில்லை. எங்கம்மா எந்த நிலைமைதில் இருக்காங்க. என்ன பேசற?” என்றாள்.

    “நாளைக்கு காலையில வீட்டுக்கு வந்திருக்க வேண்டியவங்க. பட்…” என்றவனின் பேச்சுக்கு அநியாயத்திற்கு உள்ளே சென்றது.

     தன்னை கொல்ல வந்த எதிரி கிடைக்கவில்லையென கோபத்தில் இருந்தான்.

     “இதோட போதும். எங்களை விட்டுடு. நானும் அம்மாவும் உன் கண்ணுல படமாட்டோம். எங்கயாவது போயிடறேன்.” என்றாள்.

     “எங்க போவ.. மிஞ்சி மிஞ்சி போன உங்க வீடு. இல்லை ஆஸ்திரேலியால அனிலிகா கூட இருப்ப. லுக் நான் பேசியது எல்லாம் மறந்து போச்சா. இன்னிக்கு நைட் கம்பர்டெபிளானு கேட்டேன். அதுக்கு… இப்ப” என்றதற்குள் “சீ.. உன்னால எப்படி டா… இந்த நிமிஷத்தை கூட விட்டு தர மனசில்லை.” என்று அடிக்க கைக்கு ஏதாவது கிடைக்குமா என்று தேடினாள்.

    அதற்குள் இவர்கள் பேசிக்கொண்டிருக்க நாகரீகம் கருதி ஆதித்யா விக்னேஷ் தூரமாக சென்றிருந்தவர்கள் பிரகதியின் ஆக்ரோஷத்தில் ஓடி வந்தார்கள்.

    எதுவும் அடிக்க கிடைக்காது நெஞ்சில் குத்திக் கொண்டிருந்தவளை விக்னேஷ் தடுக்க ஆதித்யா வந்து “என்னாச்சு விதுரன். பேசி சண்டையை மறப்பிங்கனு பார்த்தா. மறுபடியுமா? விதுரன் உன் மேல தான் எனக்கு டவுட். எதுவானாலும் பத்மாவதி வீட்டுக்கு வந்தப்பிறகு பார்த்துக்கோ. பிரகதியை இப்ப நிம்மதியா இருக்க விடு.” என்றார்.

    “நானும் அதை தான் சொல்லறேன் தாத்ரு. அவங்க அம்மா வீட்டுக்கு வர்ற வரை நம்ம சண்டையை பார்த்துக்கலாம். இப்ப நிம்மதியா சாப்பிடுனு சொன்னேன்.

  நேத்து நைட்ல இருந்தே உங்க  பேத்தி சாப்பிடலை.” என்றவன் கண்ணாடி அணிந்து அனுப்பறேன் ஒழுங்கா சாப்பிடு. இல்லை… இன்னிக்கு நடக்க வேண்டியதா பேசியதை நடத்த வேண்டியதா போயிடும்” என்று சென்றான்.

     “விக்னேஷ்… புட்டை லேப் டெஸ்ட் பண்ணிட்டு கொடு.” என்று போனான்.

     பிரகதி சிலையாக மாறிப்போனாள்.

    இவனை கத்தியால் குத்தியும் என்னால் நிம்மதியடைய முடியவில்லை. ஆனால் அதே நேரம் இவன் பேசினால் அதை ஏற்கவும் முடியவில்லை. இந்த நேரம் இவனை பற்றி எண்ணுவதை விட தாயின் நலனே முக்கியம் என்று அம்மா குணமடைய பிராத்தனை புரிந்தாள். அவளால் அதை தவிர வேறென்ன செய்ய முடியும். இந்த கணத்தில்… கத்தி குத்தியவனே எதை பற்றி யோசிக்காமல் செல்கின்றானே. தன் நிலை யாருக்கும் வேண்டாமென வருந்தினாள்.

      உணவு வந்ததும் சாப்பிட வற்புறுத்த, பிரகதி வேண்டாமென பிடிவாதம் பிடித்தாள்.

       ஆதித்யா எவ்வளவோ கூறியும் சாப்பிடவில்லை.
  விதுரனுக்கு தெரிந்தும் அவன் அவளை கட்டாயப்படுத்தவில்லை.

   அடுத்த நாள் பதினொன்றுக்கு இமை திறந்தார் பத்மாவதி. பேச முடியவில்லை உயிர் போகும் வலி. கைகள் எரிச்சல் தொண்டையிலோ எச்சிலை விழுங்க கூட இயலாத நிலை. கண்ணீரால் மட்டுமே இருவரும் தங்களின் பேச்சை பரிமாறினார்கள்.

     இரண்டு நாள் போனது தீபிகாவை கீதா தங்கள் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்று விட்டனர்.

    கோமதி சசி இருவரும் இரண்டு நாள் வந்து சேர “நீங்க இங்க வர வேண்டாம். இனி நான் பார்த்துக்கறேன்” என்றான் விதுரன்.

     அதன் பிறகு எதிர் வாதம் ஏது. ஆதித்யா தாத்ருவை கூட கிளம்ப சொன்னான்.

  ‘நான் பிரகதியோட தாத்தாவா இருக்கேன் உனக்கு என்னடா.’ என்று பதில் தந்துவிட்டார்.

   என்ன பேசியும் ஆதித்யாவால் பிரகதியிடம் நட்பாக ஒரு வார்த்தையை வாங்கிட முடியவில்லை. அதே போல ஒரு வாய் சாதம் உண்ண வைக்கவும் முடியவில்லை. அப்படியே விதுரன் குணம் என்று தான் மனம் ஓப்பிட்டது. அவனும் அப்படி தான் தாய் தந்தை (சசிதந்தை)சித்தப்பா இறந்த நேரமும் கோமதியும் தானும் சிகிச்சை பிரிவில் இருந்த நேரம் பச்சை தண்ணீர் தொடவில்லை. ஒரு வாரம் ஆனது. சாப்பாட்டை எடுத்துக்கொள்ள… அவன் ஆண். உடல் வலிமை இருந்தது. பிரகதி பெண். அதிலும் இவனை போல அதிகம் உடல் வலிமை இல்லை. ஆனால் மனவலிமை கூடுதலாக இருந்தது. தைரியமாக இந்த நொடி வரை தன் பேரனை எதிர்த்து பேசி கோபத்தை வெளி காட்டுகின்றாள். விதுரனையே குத்தி விட்டு அஞ்சாமல் அவனோடவே அமர்ந்து பேச செய்கின்றாள்.

   இதுவரை விதுரனிடம் மோதி சரிக்கு நிகர் யாரும் நின்றதில்லை. பிரகதி இருப்பது பெருமையானதே. என்ன தம்பதியாராக கருத்து ஒன்றி வாழ்ந்தால் ஆதித்யா மகிழ்ச்சியடைவார். அது நடக்குமா?

     விதுரன் இருமுறை பத்மாவதியை காண போகும் போதெல்லாம் பிரகதி ஆர்ப்பாட்டம் செய்து தடுத்தாள்  விதுரனோ சற்று விட்டு பிடித்தான் எனலாம்.

    மேலும் நான்கு நாட்களாக பத்மாவதி உணவை ட்யூப் மூலமாக சாப்பிடுவதை விடுத்து ஜூஸாக பருக ஆரமுபித்தார். பத்மாவதி போதுமென மறுக்க அந்த ஜூஸை பிரகதி உட்கொண்டாள்.

      கண்ணாடி டம்ளர் அடுத்த நாள் பெரிதாக வந்து சேர்ந்தது. சந்தேகத்துடன் சுற்றுப்புறம் திரும்ப ஆதித்யா எட்டி பார்த்தார்.

   அவரின் ஐடியாவாக இருக்கும். தான் சாப்பிடாததால் இப்படி என்று. அதுவும் ஜூஸை முதலில் பிரகதி உறிந்து குடித்து ஆராய்ந்தே அன்னைக்கு கொடுத்தாள்.

     பத்மாவதி மகளின் வாழ்வு என்னவாகுமோ என்ற சஞ்சலம் அதிகமாக மாற்றியது. அப்பொழுது தான் விதுரன் உள் நுழைந்தான். பிரகதி பாத்ரூம் சென்று குளிக்கும் நேரத்திற்கு வந்து பத்மாவதியிடம் பேசினான்.

   மன்னிப்பு கேட்டான். இது எனக்கு விரித்த வலை. என்னோட உணவை உங்களுக்கு கொடுக்கறதுக்கு முன்ன கொஞ்சம் யோசித்திருக்கணும். ஐ அம் ரியலி சாரி. நான் கேட்கற முதல் மன்னிப்பு இது. இதுவரை யாரிடமும் கேட்டதில்லை. என்னால உங்க குரல் போயிருக்கு. பிரகதியிடம் ஜம்பமா என்னால இல்லைனு சொன்னாலும் இந்த நிகழ்வுக்கு நான் காரணம்.” என்று படபடவென பேசிவிட்டு வெளியேறினான்.
 
  பத்மாவதிக்கு அவன் பேச வந்த போது அத்தனை பயம் கவ்வியது. ஆனால் பேசி முடித்து சென்ற நேரம் ஏதோ நிம்மதி. இத்தனை நாள் வரை அழுத்திய பயம் அகன்றது போல… தெளிவானார்.

     கூடுதலாக மகள் சாப்பிடாமல் இருப்பதை குறிப்பிட்டு சென்றதை எண்ணி தனக்கு பிறகு அவள் சாப்பிடவில்லையென கடிந்திட ஒருவன் இருக்கின்றான் என்றே யோசித்தார்.

   அவருக்கு விதுரனை பற்றி எதுவும் தெரியாது. கேள்விப்பட்ட வரை அரக்கன் என்ற பிம்பமே. ஆனால் தற்போது அவனின் அரக்க பிம்பம் தாண்டி இரு நிகழ்வை நேரில் தன் அனுபவத்தில் கண்டதில் ஏதோ ஒரு ஆறுதல்.

  ஒன்று, தனக்கு புரையேறிய தருணத்தில் நீரை எடுத்து நீட்டினான்.

    இரண்டு, இன்றோ அத்தனை கர்வமாக நடமாடியவன் மன்னிப்பு என்ற வார்த்தையை உதிர்த்து விட்டான்.
 
  மூன்று, மகள் உண்ணவில்லை என்று கோடிட்டு காட்டி அவளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுகின்றான். அதுவும் கதுதியால் மகள் குத்தியும்.

  அவனின் இந்த குணங்கள் வரிசையாய் கண்ணில் பட பத்மாவதி தெம்பானார்.

   முன்பை விட திடத்தோடு குரல் போனாலும் மனவலிமை பெருகி நின்றார்.

    அன்று உஷாதேவி போன் செய்ய விதுரன் மேல் இருக்கும் கோபத்யில் அவரை வர சொல்லி விட்டாள்.

     உஷாதேவியும் அபிமன்யுவை அழைத்து கொண்டு மருத்துவமனை வந்து சேர்ந்தார்.

   பிரகதி வழி கூறி மேலே வர சொன்னாள்.

   இவ யாருக்கு வழி சொல்லறா, என்று எட்டி பார்க்க அங்கே உஷாதேவி அபிமன்யு வர, முகத்தில் சினம் பிரதிபலிக்க பிரகதியை நோக்கினான்.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -19”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *