துஷ்யந்தா-28
கதிர் வீட்டின் முன் வந்து நிறுத்த, பிரகதி இறங்கினாள்.
விதுரன் அவளை ஏறயிறங்க பார்த்து விட்டு முன் வந்தான்.
“பரவாயில்லை… போனப்ப எப்படியிருந்தியோ அப்படியே சிக்குனு இருக்க. ஒன்னு இல்ல ஒன்றை வருஷமாகியிருக்குமா? நீ நான் தனியா வாழ ஆரம்பிச்சு?” என்றான்.
“ஒரு வருஷம் ஏழு மாதம் ஆகுது. உன்னை தலைமுழுகி” என்ற பிரகதி நேராக ஆதித்யா அறைக்கு சென்றாள்.
நேற்று தான் வீட்டிற்கு வந்திருப்பார் போல பெட்டில் சாய்ந்திருந்தார். வந்ததும் கைகாலம்பி வந்து அவரருகே அமர்ந்தாள்.
“தாத்தா..” என்று தொடவும் கஷ்டப்பட்டு எழுந்து அமர்ந்தார்.
“எப்படிம்மா இருக்க? நல்லாயிருக்கியா… உன்னை கடைசியா பார்க்கணும்னு விருப்பப்பட்டேன். பார்த்துட்டேன். இனி சந்தோஷமா போய் சேருவேன்.” என்று கையை பிடித்து பேசினார்.
“ஏன் தாத்தா இப்படி பேசறிங்க. விதுரனுக்கு நீங்க தான் சப்போர்ட். இப்படி பேசலாமா.” என்று கண்டித்தாள்.
“அவனுக்கு யாரோட சப்போர்டும் வேண்டியதில்லை மா. பாரு… கல்நெஞ்சக்காரனாட்டும் இருக்கான்.
நீயெல்லாம் பத்மாவதிக்கு உடம்பு சரியில்லாதப்ப அவங்க கூடவே இருந்த.. அவனை பாரு… மீட்டிங் கிளம்பிட்டான்” என்று மூச்சிரைக்க கூறினார்.
“நான் தான் இருக்கேனே தாத்தா. போகட்டும்.” என்றாள்.
“ஆமா ஆமா நான் இருந்தா உங்க பேத்தி பேச மாட்டா. உதட்டுல கோந்து தடவின மாதிரி முழிப்பா.” என்று பேசவும் பிரகதி போனை எடுத்து பேசினாள்.
“சொல்லு எட்வின். அனிலிகா இருக்கா அவளிடம் சொல்லிட்டு வந்துட்டேன்…. ஓ… என் ரூம் கப்போர்ட் ஓபன் பண்ணினா செகண்ட் ஸெல்ப்ல இருக்கு. ம்ம்.. அதே தான். அதுவா… பெட்ல ரைட் பாக்ஸ் இருக்கே அதுல இருக்கு. ம்ம்ம.. பயமாவா? அதெல்லாம் எனக்கில்லை. நான் யாரோ அவர் யாரோ இதுல என்ன பேச்சு வார்த்தை கடக்கு. சரி அப்பறம் பேசறேன்.” என்று அணைத்தாள்.
விதுரன் இவளின் அறையில் எட்வினை விட்டு வைத்திருப்பதே கடும் சினத்தை தர உடனே கிளம்பிருந்தான்.
ஆதித்யா உடனே யாரென கேட்கவில்லை.
மிதியம் சாப்பிடும் நேரம் “இந்த வீட்ல மகா சிவராமன் இருந்து விதுரனை கவனிச்சிருந்தா உங்களை பிரிய விட்டு வேடிக்கை பார்த்திருக்க மாட்டாங்க. நான் இருந்தும் இல்லாத உணர்வு.
அவனை கெட்டவன்னு சொல்லி ஒதுக்கவும் மனசு வரலை. நல்லவன்னு சொல்லி உன் தலையில் கட்டவும் எனக்கு விருப்பமில்லை. என்ன இத்தனை வயசுக்கு பிறகு என் தம்பி பேரனோட(சசி) குழந்தையை(யுகனை) பார்த்துட்டேன்.
விதுரனோட குழந்தையை பார்த்துட்டு கண்ணை மூடினா நிம்மதியா இருந்துயிருக்கும். இல்லை விதுரன் உன்னோட வாழற வாழ்வையாவது பார்த்து கண்ணை மூடியிருக்கலாம். இரண்டுமில்லாம ஏங்கி தவிச்சுட்டு இருக்கேன்.” என்று ஆதித்யா வருந்தினார்.
“தாத்தா… விதுரனை பற்றியோ அவனோட வாழறதே பற்றியோ பேச மாட்டிங்கனு நம்பி வந்தேன். நீங்க வார்த்தைக்கு வார்த்தை அவனை இழுக்கறிங்க” என்றவள் சாப்பாட்டில் கோலமிட்டாள்.
“சாரி மா. மனசு அதையே நினைக்குது” என்றவர் கழுத்திலும் காலிலும் விதுரன் அணிவித்த தாலியும் மெட்டியும் இல்லாமல் போக முழுவதும் சோர்ந்தார்.
“இதென்ன மா சின்னதா சங்கிலி ஒரு நகையை மாட்ட கூடாதா?” என்றார்.
“தாத்தா… இது பிளாட்டின செயின். இதுவே கம்பர்டெபிளா இருக்கு.” என்றாள்.
“தாத்தா… பத்து நிமிஷத்துல வந்துடறேன்” என்று “சாப்பிடாச்சா… ம்.. சரி வைக்கிறேன் எட்வின்” என்று கத்தரித்தாள்.
அவளின் போனிடெய்ல் அசைந்தாட, நடந்து வந்தவள் “மாத்திரை சாப்பிட்டிங்களா தாத்தா” என்று கேட்டாள்.
“ஆச்சு மா. தூங்கிடுவேன். நீ வேண்டுமின்னா தூங்கு. வந்ததும் பேசி அறுத்துட்டேன்.” என்றதும் பழக்க தோஷத்தில் மாடிக்கே சென்றாள்.
ஆதித்யா அழைத்து தடுக்கவில்லை. மாறாக மாடியிலும் மூன்று அறைகள் இருக்கே என்ற எண்ணம் தோன்றியது.
ஆனால் மாடிக்கு சென்றவளின் பாதங்கள் தானாக விதுரன் அறைக்கே வந்து சேர்ந்தது.
அசதியில் மெத்தையில் உறங்கிட செய்தாள். தூங்கி எழுந்த நேரம் வெற்று மார்பும் புல் டிராக்ஷூட்டும் விதுரன் எதிரில் இருந்தான். அதுவும் பக்கத்தில் லேப்டாப்பில் யாருக்கோ மெயில் அனுப்பி கொண்டிருந்தான்.
“நீ… நீ எப்ப வந்த. அதுவும் இங்க.?” என்றவள் அதன் பிறகே அறையை பார்வை பதித்தாள்.
அவளும் அவனும் ஒரே மெத்தையில், மெத்தைக்கு எதிரே அவர்களின் வரவேற்பு புகைப்படம், விழுந்தடித்து எழுந்து உடையை நோட்டமிட்டாள்.
விதுரன் சத்தமின்றி சிரித்தாலும் நகைப்பது தெளிவாய் புரிய, “நான் தான் மறந்து இங்க வந்து படுத்துக்கிட்டேன். உனக்கு என்ன? இதே ரூம்ல இருக்க?” என்றாள் சிடுசிடுவென.
“ஏய்… இது என் ரூம் அப்படியிருக்க நான் எப்படி மூவ் ஆகி வேற ரூம்க்கு போவேன். நீ பக்கதுக்குல இருக்கறது எனக்கு பிராப்பிட்டா பீல் பண்ணினேன்.” என்றான்.
“அதுக்கு ஷர்ட் போடாமலா?” என்றாள்.
“ஏன் இதுக்கு முன்ன என்னை ஷர்ட் போடாம பார்தததில்லையா..” என்றவன் புருவமுயர்த்த போனை எடுத்து கொண்டு படிகளில் வேகமாக இறங்கினாள்.
ஏற்கனவே தனது உடைமைகள் முன்பு ன அன்னை இருந்த இடத்தில் இருக்க தான் எப்படி அங்கு செல்லாமல் விதுரன் அறைக்கு சென்றோம் என்று தன்னையே திட்டினாள்.
விதுரன் மேலிருந்து தன்னையே பார்த்து சிரிப்பதை கண்டு, மனதை மாற்ற எட்வினுக்கு அழைத்தாள்.
“எட்வின் ஸ்நாக்ஸ் டைம் முடிஞ்சுதா? அனிலிகா இருக்காளா.? ஓ வாக்கிங்கா?” என்ற பேசியவள் நிமிர விதுரன் அங்குயில்லை. அவனை தவிர்க்க எட்வினுக்கு போன் என்று புரிந்தது.
நேரம் போனதும் இரவு உணவு உண்ண விதுரனும் ஆதித்யா அருகே அமர்ந்தான்.
“சாப்பிட போறேன் எட்வின். ம்ம்… ஆதித்யா தாத்தா கூட தான். ம்ம்… அங்க என்ன டின்னர்? அனிலிகாவா… நான் வந்த பிறகு நானே ஊட்டி விடுவேன்.” என்று பேச விதுரன் கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க முடிந்தது.
அவனுக்கு இருக்கும் கோபத்தில் பிரகதியை அடித்து போனை பிடுங்கி உடைக்கும் அளவிற்கு சினம் துளிர்த்தது. ஆனால் டிவோர்ஸ் என்ற ஒன்றை தானே கொடுத்துவிட்டு தற்போது என்ன உரிமையில் அவளிடம் கணவனாய் காட்டுவதென புரியவில்லை.
“என்னம்மா… முன்ன எல்லாம் அதிகமா போன் யூஸ் பண்ண மாட்ட. இப்ப அடிக்கடி யூஸ் பண்ணற.” என்றார் ஆதித்யா.
“அனிலிகா எட்வின் அந்தளவு சிநேகிதமா?” என்று நூல்விட்டு கேள்வியை துளைத்தார்.
“ஆமா தாத்தா.” என்றவள் சாப்பாட்டை விழுங்கியவள் மீண்டும் போனையே வெறித்தாள்.
“எட்வின்… உன்னை காதலிச்சவன்னு முன்ன விக்னேஷ் சொல்லிருந்தான். இப்பவும் விரும்பறானாமா? அவன் மட்டுமா? இல்லை….. நீயுமா?” என்று ஆதித்யா கேட்டு விட்டார்.
“தாத்தா… எப்படி சொல்லறதுன்னு தயங்கினேன். கேட்டுட்டிங்க. ஆக்சுவலி எட்வினுக்கும் எனக்கும் அடுத்த மாசம் கல்யாணம். அதுக்கான வேலையே அங்க நிறைய இருக்கு. நீங்க போன் பண்ணினப்ப, தயங்கியதே திரும்ப இங்க எப்படி வந்து உங்களை ஹாண்டில் பண்ணறதுன்னு தான். நீங்களே விதுரனோட சேர்த்து வைக்க மாட்டேனு சொன்னிங்க. பெரியவர் நீங்க சொன்ன வாக்கை காப்பாத்தி என்னை மட்டும் சந்திக்க விரும்பறிங்கனு நினைச்சேன்.
அப்படி தானே தாத்தா?” என்று கேட்டதும் ஆதித்யா பதில் கூறாது அமைதியானார்.
அவர் பிரகதி முதலில் கூறிய எட்வினுக்கும் எனக்கும் அடுத்த மாதம் திருமணம் என்றதே கசப்பை விழுங்கியதாய் எண்ணினார்.
விதுரன் வைத்து கொண்டு கேட்டது தவறாக தோன்றியது. தனியாக கேட்டிருக்க வேண்டுமோ.
“தப்பில்லை மா. விவாகரத்து வாங்கிட்ட பிறகு இன்னொரு வாழ்க்கை தேவை தான். விதுரனிடம் கூட சொன்னேன். அவன்…. அவன்…” என்று இழுக்க, “தாத்ரு.. இருந்த இம்சையே போதும். இன்னொன்னு எதுக்கு? தாத்ரு குட் நைட்” என்று எழுந்தான் விதுரன்.
“ஹார்டி கங்கிராட்ஸ் பிரகதி. கல்யாணத்துக்கு கூப்பிடு பெஸ்ட் கிப்ட் அனுப்பி வைக்கிறேன்.” என்று கூறிவிட்டு மாடிக்கு சென்றான்.
பிரகதியோ ‘தாட்பூட்’ என்று விதுரன் கத்துவானென எண்ணினாள். ஆனால் வாழ்த்து கூறி சென்றதில் விதுரன் மாறிவிட்டானோ என எண்ணினாள்.
அன்னை அறையில் அவளுமே நிம்மதியாய் உறங்க ஆரம்பித்தாள்.
இரவு இரண்டு முறை எட்வினுக்கு போன் செய்து நலன் விசாரித்தாள்.
அடுத்த நாள் காலை காபி கப்பில் எடுத்து கொண்டு மொட்டை மாடிக்கு விரைந்தாள்.
காபி குடித்தபடி முன்பை போல வெட்டை வெளி வானத்தையும், சூரியன் மேகத்தை முட்டி வரும் நிகழ்வையும் எண்ணி ரசித்து பருக, விதுரன் இரவாடையுடன் காபி கப் பருகி கொண்டு நின்றான்.
“நீ மாறிட்டனு நினைச்சேன். ஆனா மாறாம காபி குடிக்க உன்னோட பேவரைட் பிளேஸ்க்கு வந்துட்ட?” என்றான்.
“எனக்கு இந்த இடம் பிடிக்கும்.” என்றவள் காபி கப்பை வைத்து விட்டு அங்கிருந்த மரத்தில் எட்டி எட்டி மஞ்சள் பூவை பறித்தாள்.
இரு கை முழுவதும் பறித்தவளை இழுத்து விதுரன் ஆக்ரோஷமாய் முத்தமிட்டான்.
முதலில் அவன் இழுப்புக்கு அதிர்ந்து விழித்தவள், அவனின் முத்தத்தில் விழி விரிய ஆடிப்போனாள்.
அவன் தோளில் அடித்து கொண்டே விடுபட முயன்றவள் தோற்று போனாள்.
பத்து பதினைந்து நிமிட போராட்டத்திற்கு பிறகு விதுரனே விடுவித்தான்.
“முத்தம் மட்டுமில்லை மொத்தமும் நானே சொல்லி தர்” என்றவனை கண்முன் தெரியாமல் அடித்தாள்.
“யூ சீட்.. நேத்து நல்லவன் மாதிரி விஷ் பண்ணிட்டு எதுக்கு இப்படி பிகேவ் பண்ணற” என்று அடிகளை தொடர்ந்தாள்.
“யு ஆர் மைன். கல்யாணம் பண்ணப்போறியா பண்ணிக்கோ டி.
என் பாணியில் இப்படி தான் விஷ் பண்ணுவேன். என்ன ஜிவ்வுனு இருந்துச்சா. கடைசியா முத்தம் கொடுத்தப்ப அடுத்த நாளே ஆளைக்காணோம். இன்னிக்கும் அப்படி பண்ணிடாதே. நான் தேடமாட்டேன். எவனையாவது கட்டிக்கோ. எப்படியோ போ. உன்னை பொறுத்தவரை நான் எப்படியோ அப்படியாவே இருந்துக்கறேன். எனக்கு இந்த எக்ஸ்பிளைன் மண்ணாங்கட்டி பண்ணற பழக்கமில்லை. இப்ப கொடுத்த முத்தமும் அப்படி தான்.
நேத்து எட்வினை கல்யாணம் பண்ணறதா பேசின. டைனிங் டேபிள் உடைச்சிருக்கணும். தாத்ரு ஆசையா உன்னை பார்க்க நினைச்சார். அதனால அவர் முன்ன கோபத்தை காட்டக்கூடாதேனு பொறுமையா விட்டுட்டேன்.
என் தாத்ரு சாகப்போறது நிஜம். சுதன் கெடு கொடுத்துட்டான். என்னால அவரை சந்தோஷமா அனுப்ப முடிவு செய்தேன். அதனால தான் உன்னை பார்க்க ஆசைப்பட்டப்ப வரவழைக்க போன் செய்தேன்.
இன்னொரு முறை நான் இருக்கறப்ப எட்வினுக்கு போனை போட்ட… அடுத்த கட்ட நடவடிக்கை போக வேண்டியதா போகும்.” என்றவன் மிரட்டியே சென்றான்.
அவன் சென்றதும் சுற்றி முற்றி பார்த்தால் யாரேனும் முத்தமிட்டதை கண்டுவிட்டனரோயென யாரும் இல்லையென்றதும் படியிறங்கினாள்.
ஆதித்யா அதற்குள் எழுந்து ஹாலில் அமர்ந்திருக்க, பிரகதி வர பின்னால் விதுரன் சிரித்து கொண்டே வந்தான். அதுவும் பிரகதி மீதே பார்வை பதித்து வந்தான்.
பிரகதியோ தாத்தா தன் பின்னால் பார்த்து சிரிப்பது எதனாலென திரும்ப அவன் மீதே மோதி நின்றாள்.
“கண்ணு தெரியலையா டெவில். இல்லை என்னோட டச் வேண்டும்னு விழுந்தியா?” என்று காதோரம் வெட்பக்காற்று வீசி பேசினான்.
“நீ தான் டா டெவில். கையை எடு” என்று சிலிர்த்து நழுவினாள்.
ஆதித்யா மனமோ இப்படி எலியும் பூனையுமாகவே இருந்தாலும் இப்படியே வாழ்ந்திருக்கலாம். ஏன் இந்த விவாகரத்து பெற்று பிரிந்தனரோ என்று தேன்றியது.
“தாத்தா… நான் நான் கொஞ்சம் வெளியே போகணும். இன்பாவை பார்த்துட்டு வந்துடறேன். ஆக்சுவலி அவன் ஓய்ப் பிரகனட்டா இருக்கா. வளைகாப்பு வேற திங்கள் என்று சொன்னான். நான் இன்னிக்கே போயிட்டு வந்திடறேன்.
அப்பறம் கேட்கலாமா வேண்டாமானு தெரியலை… தீபிகா சசி லைப் எப்படியிருக்கு தாத்தா? யுகன் வளர்ந்திருப்பான் தானே. தீபிகா சசிதரனுக்கு ஏற்ற மாதிரி மாறியாச்சா. அவளோட தீய எண்ணங்களை விட்டுட்டாளா?” என்று கேட்டாள்.
“சம்மந்திம்மா சொல்லலையா… தீபிகா இறந்துட்டா மா. குழந்தை பிறந்த அப்போ அழகு போயிடும்னு பாலை கொடுக்கலை. அதுக்கு பிறகு அந்த பிரகனன்ஸி சீக் வருமே அது, இதுல குடிக்க வேற ஆரம்பிச்சிட்டா. சசிதரன் எவ்ளோ சொல்லியும் கேட்கலை. குடியோட டிரக்ஸ் எடுத்திருப்பா போல போய் சேர்ந்துட்டா…” என்றதும் பிரகதிக்கு அய்யோ பாவமென்றானது.
“இப்ப யுகன் யாரிடம் இருக்கான் தாத்தா?” என்று கேட்டாள்.
“ம்ம்…. யாரிடம் இருக்கணும். அவனோட அப்பா கூட தான். அந்த கீதாவிடம் கொடுத்து தீபிகா மாதிரி வளர்க்கவா.” என்றான் விதுரன்.
“தீபிகா ஒன்றும் பிறவி கெட்டவயில்லை. அவ ஆசைப்பட்டது போல வாழ்வு அமைந்திருந்தா எல்லாம் நல்லபடியா இருந்திருப்பா. உன்னால தான் மாறி போச்சு. நீயும் வாழலை. யாரையும் வாழவும் விடலை.” என்று திட்டினாள்.
“ஏற்கனவே சொல்லிட்டேன். அவ இன்பாவை ஏமாற்றி தான் சசியோட பணத்தை கண்டு கட்டிக்க நினைச்சா. திக்கு வாயென்றதும் திரும்ப இன்பா வேண்டுமா? குழந்தை பெற்ற பிறகும் இன்பா முன்ன போனது யாரு. உன் பிரெண்ட் தானே. லுக் அவளை உன் பிரெண்ட் என்று சொல்லாதே. சகிக்கலை.” என்று கத்தினான்.
இருவரின் கத்தலும் திட்டும் சண்டையாய் தொடர, ஆதித்யாவோ “நிறுத்துங்க… பிரகதி நீ உன் பிரெண்ட் இன்பா வீட்டுக்கு போயிட்டு வாமா… விதுரா… நீ ஆபிஸ் கிளம்பு.” என்று சேர்வதற்கென்று ஆசையாய் மணல் கோட்டை கட்டியவரே பிரிந்து உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறினார்.
“என்னோடவே வா விட்டுட்டு போறேன்.” என்றதும் “நோ தேங்க்ஸ் நான் ஓலோ புக் பண்ணிக்கறேன். உன் வேலையை பாரு” என்றதும் விதுரன் “கதிர் ஓட்டுற கார் விட்டுட்டு போறேன். உன்னிஷ்டம்” என்று தன் உதட்டை வருடி மென் குறும்போடு புறப்பட்டான்.
குளித்து உடைமாற்றி ஓலோ புக் செய்து சென்றவளை ஆதித்யா வருத்தமிகுந்து பார்வையிட்டார்.
-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
kavala padathinga thatha kandipa rendu perum sikram seruvanga
Super😍