காலேஜில் தேர்ட் இயர்ல படிக்கறப்ப அனுப்பிய கவிதை எல்லாம் லைன் கட்டி கல்யாணம் ஆனப்பிறகு மங்கையர் மலரில் வெளிவந்தது. ஹைக்கூ முதல் கொண்டு பத்து வரி கவிதை வரை.
எல்லாமே அப்பா போன்ல சொல்வார். அந்த நேரம் குட்டியா கார்ட் வடிவில் சான்றிதழும் பணமும் அனுப்புவாங்க. அந்த சான்றிதழ் ரொம்ப கியூட்டா இப்பவரை வச்சியிருக்கேன். பணம் தான் அப்படியே வச்சியிருக்கணும்னு நினைச்சி செலவு பண்ணிட்டேன்.
அப்ப யோசித்தது… பணம் கைக்கு கை மாறும். இதே சான்றிதழ் நினைவேட்டில் அப்படியே இருக்கு.(சைட்ல கதை போட்டி வச்சப்ப, பணத்தை விட ஷீல்ட் வைத்தது இது போன்ற நீங்கா நினைவுக்கு தான்.)
- Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
ஆல்ரெடி இங்க ஆப்டர் மேரேஜ் கணவர் வீட்டில், மங்கையர் மலர் ரெகுலரா வாங்கவும் புக்ல பார்த்துப்பேன். ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா இதெல்லாம் இனி ஓவர்ல. இனி எழுதவும் வரலை என்று மூட்டைக்கட்டிட்டேன். சமைக்க தெரியாது என்பதால் சமைக்க கத்துப்போம்னு அந்த பக்கம் டேக் டைவர்ஷன் ஆனேன்.
காலேஜ் பிரெண்ட்ஸ் அப்பாவோட அத்தை இவங்களாம் கூட போன்ல பேசறப்ப சந்திக்கும் பொழுது, கவிதை எழுதறியா? என்று கேட்பாங்க. இல்லை டச் விட்டு போச்சுன்னு சொல்வேன்.
அதோட நார்மல் மனைவியா நேரத்தை கடத்தினேன்.
பெரிய மகள் பிறந்தப்ப, பிறக்கும் முன் மாஸ்டர் டிகிரி கரஸ்ல போட்டேன். அதனால் மீண்டும் மாணவர்களுக்கான கவிதை பக்கத்தில் கவிதை எழுதி அனுப்பினேன். ஆக்சுவலி மாணவர் என்ற அடையாள அட்டை ஜெராக்ஸ் அனுப்பணும். கல்லூரிக்கான பகுதியில் அப்ப தான் பிரசுரிப்பாங்க.
அப்பவும் சிலது பிரசுரமாகி வீடு தேடி புக், பணம், சான்றிதழ் வந்தது. முன்பு எல்லாம் நம்ம படைப்பு ஒரு புத்தகத்தில் வருகின்றது என்றால் நமக்கு ஒரு காபி புக் தருவாங்க. படைப்புக்கான பணம் வரும். புக் போஸ்ட் கவருடன் சான்றிதழ் வரும்.
மங்கையர் மலருக்கு எழுதி வருது என்றதும் ‘ராணிமுத்து’ நாவல் இதழில் அனுப்பினேன். 20 வரி கவிதை ஆறு வரியுடன் வந்தது. இதை தப்பு சொல்லக்கூடாது. கவிதை கதை அனுப்பும் பொழுதே, படைப்பை திருத்த பதிப்பக ஆசிரியருக்கு முழு சுதந்திரம் உண்டு என்ற ஒப்புதலும் போட்டு தான் அனுப்பணும்.
அதனால் சுருக்கமாக வந்தது. ‘ராணிமுத்து’ புக் பணம் இரண்டும் வீடு தேடி கிடைத்தது.
இதற்கு பிறகு குமுதம் சிநேகிதியில் ஒரு கட்டுரை அனுபவம் எழுதினேன். அதுவும் பிரசுரமானது. அந்த புக்கும் பணமும் வீடு தேடி வந்தது. பணம் என்றதும் ரொம்ப எல்லாம் யோசிக்காதிங்க. கவிதை கட்டுரைக்கு குறைந்தது 50 முதல் 200 வரை இருக்கும்.
பணத்தை விட நம் படைப்பு பிரசுரமாகும் என்றதே எனக்குள் திருப்தி தந்தது.
அதுக்குப்பிறகு புதுசா கவிதை எதுவும் எழுதலை. அதோட பெரியமகள் பிறந்து அவளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இருந்தது.
அவள் வளர வளர அவளை மட்டுமே ரசித்தேன். அவளை மட்டுமே செதுக்கினேன். சொல்லப்போனா அவளை வளர்த்ததில் ஒரு பெருமை இருக்கு. அவள் எனக்கு கிடைத்த வரம்.
இதுக்கு நடுவுல வாரமலர் புக்கிற்கு கவிதை எழுதுனு அத்தை(மாமியார்) சொன்னாங்க.
எழுதியும் போட்டேன்…. ஆனா…. இந்த முறை வரலை. ரொம்ப சோகம்.
அறிவும் கற்பனையும் இருந்தாலும் அது அடிக்கடி பட்டைத்தீட்டப்பட்டுக் கொண்டு இருக்கணும். இல்லைன்னா.. கற்பனை வறட்சியாகும். வார்த்தை தேடுதலாகும்.
இது காலதாமதமாக உணர்ந்தேன்.
கவிதை எழுதுன்னு சொன்னாளே சட்டுனு பத்து நிமிஷத்துல எழுதி தர்ற ஆளு. காலேஜில் கூட தானாக புனையும் கவிதையும், கதையும் தான் கடைசி பத்துமார்க் பகுதில தேர்ந்தெடுக்கற ஆளு.
ஆனா… வார்த்தையும் கோர்வையும் வராம தள்ளாடினேன். நமக்கு அறிவு அவ்ளோ தான். வேஸ்ட் பெல்லோவா மாறிட்டோம்னு நினைச்சேன். இதுல சின்ன பிள்ளையாட்டும் சிஸ்டம்ல கார்ட்ஸ் விளையாடுவேன், finding games, gold collect, supwr mario, vudwo game ல சின வயசுல விளையாடிய எல்லா கேமும் விளையாடிட்டு டைம் பாஸ் பண்ணினேன்.
எஸ்…. எந்தவிதமான எனக்கான அடையாளம் மறந்து சராசரி குடும்ப பெண்ணாக மட்டும் என்னால் இருக்க முயன்றது. கவிதை எல்லாம் எழுதி என்ன பண்ணப்போறோம். மிஞ்சி மிஞ்சி முகநூலில் ஷேர் பண்ணினா சிலர் லைக் கமெண்ட்ஸ் பண்ணி பாராட்டுவாங்க. அதோட வேற…
இந்த டைம்ல தான் எங்கண்ணா(தங்கராஜா) எண்ட்ரி. அண்ணாவுக்கு என் டேலண்ட் மங்கியதில் வருத்தம். ‘ஏன் பிரவீ எழுதலை. ஏற்கனவே எழுதியதை பிளாக்ல போடு. நாலு பேரு படிப்பாங்க.’ என்று கூறினான். ஆக்சுவலி எங்கண்ணா கவிதை எழுதுவான். அவன் காலேஜ் படிக்கறப்ப எழுதிய கவிதையை நான் ஸ்கூல் படிக்கிறப்ப திருட்டு தனமா படிச்சிருக்கேன்.
காதல் கவிதை மட்டுமில்லை.. சமூக கவிதையும் அண்ணா எழுதுவான். காலேஜ்ல ‘போதையில்வா பாதை’ அப்படின்னு கட்டுரை எழுதி பிரைஸ் வாச்கியிருக்கான். இதெல்லாம் எதுக்கு சொல்லறேன்னா… எழுத்து எனக்குள் என் அப்பா அண்ணா அத்தை பெரிப்பா… இப்படி எல்லாரிடமும் ஒவ்வொரு விதத்தில் இருக்கு.
அண்ணா கேட்டதும்…
“படிச்சு?” என்று அசட்டையா கேட்டேன்.
“பிரவீ… எழுதறது எல்லாம் எல்லாருக்கும் வராது. நான் எல்லாம் பாரு.. வேலை வேலைனு ஓடுவதால் எழுத முடியலை. சொல்லப்போனா தமிழே தப்பு தப்பா தான் எழுதறேன். தெரிந்த விஷயம் கூட நாம தினசரி செய்யாம விடுவதால் மறந்துடும். நீ எழுத எழுத தான் உனக்கு கவிதைக்கு கற்பனை வரும். வார்த்தை வரும். மச்சானை பிளாக் ரெடி பண்ணி தரச்சொல்லு. ஆக்சுவலி மச்சான் வெப்சைட் டிசைன் பண்ணுவாரே. அவரிடம் வெப்சைட் க்ரியேட் பண்ண சொல்லு.” இப்படி நிறைய சொன்னான்.
“மச்சான் எல்லாம் செய்ய மாட்டார்” என்றேன். (இப்ப வெப்சைட் வாங்கி தந்தது அவரே.)
‘சரி அவரை தொல்லை பண்ணாத. நான் க்ரியேட் பண்ணி தர்றேன். Blog Open பண்ணறது ரொம்ப ஈஸி.’ என்று வேகமாய் create செய்தார்.
https://praveenathangaraj.blogspot.com/ பெயரை வச்சி create பண்ணிட்டு எப்படி போஸ்ட் பண்ணணும் draftல வச்சிக்கணும் என்ற இரண்டை மட்டும் சொன்னார். அப்பறம் டைம் ஆனதால் கிளம்பிட்டார்.
சும்மாவே ஏதாவது தெரிந்ததுக்கணும்னு ஆசை. அதுவும் பாப்பா ஸ்கூல் போனப்பிறகு நேரம் இருக்கவும் நான் எழுதிய கவிதை எல்லாம் நோட்ல இருந்ததை ஓபன் பண்ணி வச்சிட்டு டைப் பண்ணினேன்.
கவிதையை போஸ்ட் பண்ணினேன்.
அது கொஞ்சம் என்னை சுறுசுறுப்பா மாற்றியது. பாப்பாவை ஸ்கூவுக்கு அனுப்பிட்டு நான் எழுதி வச்ச, 200 கவிதையையும் ஒவ்வொன்னா டைப் பண்ணி ப்பளிஷ் செய்வேன். அதோட பிளாக்ல எப்படி வைக்க பிடிக்கும்னு பிளாகை நொண்டிட்டு இருப்பேன்.
*Blog உருவாக்குவது மிக எளிது. இரண்டே நிமிடத்தில் அதை உருவாக்கிடலாம்.
*Blog நமக்கு தேவையான விதத்தில் நாம மாற்றி அமைத்து கொள்ளலாம். (அந்த நேரம் எனக்கு வைக்க தெரியாது.)
*கதை கவிதை தத்துவம் கட்டுரை எதுனாலும் பிளாக்ல பதிவிடலாம். இதற்கு எவ்விதமான பணமும் செலவு இருக்காது.
*வாசகரை படிக்க வைக்க இழுக்கணும்.
உங்க எழுத்து மேல நம்பிக்கை வச்சா யார் வேண்டுமென்றாலும் ஆரம்பிக்கலாம்.
*Blog லபணம் வருமா?னு கேட்டா… சாரிங்க… பணம் ஈட்ட வருடம் கடந்துடும். அதுகூட 100 டாலர் சேரும் வரை காத்திருக்கணும்.
அப்ப கூட ads இல்லைன்னா எப்பவும் பணம் வராது. Ads இல்லாத Blog ஒரு Rough Note அவ்ளோ தான்.
உங்க திறமை மட்டும் அடுத்தவர் வாசிக்கணும்னு நினைக்கறவங்களுக்கு பிளாக் சரியானது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.