அத்தியாயம்-19
கெவின் ரீனாவின் நெஞ்சருகே கையை நீட்ட, ரீனா கெவினை கண்டு இரண்டடி பின்னகர்ந்தாள்.
அதே நேரம் பைரவ் கெவினின் கையை பற்றி, “என்ன பண்ணற?” என்று மடக்கினான்.
“யோவ் அது யாரு தெரியுமா? என் பொண்டாட்டி ரீனா.” என்று தன்னை அவள் கணவனாக அறிமுகப்படுத்தி கொண்டு பேச்சை தொடர்ந்தான்.
“எனக்கும் அவளுக்கும் பாண்டிசேரில, பாதர் சார்லஸ் தலைமையில் கல்யாணம் நடந்துச்சு.
அவ என்னோட பொண்டாட்டி.” என்று கூற, ரீனா எச்சிலை விழுங்கி இல்லையென்று தலையாட்டினாள்.
பைரவிற்கு சரணும் சுதர்ஷனனும் பாப்கார்ன் வாங்க சென்றிருந்தனர்.
சுவாதிக்கு இயற்கை அழைப்பு வரவே சஞ்சனாவோடு துணைக்கு சென்றிருக்க, பைரவ் மற்றும் ரம்யா மட்டுமே அங்கேயிருந்தனர்.
“பொண்டாட்டியா? பொண்டாட்டி பெயர் என்ன?” என்று கேட்டான் பைரவ்.
“ரீனா. ஆசிரமத்துல ரீனா தான் வச்சாங்களாம். பாதர் சார்லஸ் தான் என்னை இவளுக்கு கல்யாணம் செய்து வைத்தார். என்ன கொஞ்சம் டிரிங்க்ஸ் பவுடர் எடுப்பேன். அதுக்கு அடிச்சான் உதைச்சான்னு என்னிடமிருந்து ஓடிபோயிட்டா.
இவளை காணோம்னு அந்த பாதரிடமும் சொல்ல முடியலை. என்னடி நான் அடிப்பேன் உதைப்பேன்னு பாதரிடம் புகார் தர்றதா ஊருக்கு போகயிருந்த ஏசி பஸ்ஸிலருந்து இறங்கி வந்துட்ட. இப்ப எவனோடவோ செட்டிலாகிட்ட போல.
பூ என்ன? பொட்டு என்ன? இதுல தாலியா? எங்கடி நான் போட்ட வெட்டிங் ரிங்? கழட்டி தூக்கி போட்டுட்டியா? ஆமா யாரிவன்?” என்று எகத்தாளமாய் உரைத்தான்.
பைரவிற்கு அப்பொழுதே ஓரளவு புரிந்துவிட்டது. ஆனாலும் வெளிப்படையாக இது ரீனா என்று கூற முடியுமா?
“யாருனு தெரியாம பேசற. உன் ரீனானு சொல்ல ஆதாரம் இருக்கா? தப்பானா ஆளை சொல்லற” என்று கூற, கெவினோடு ரீனா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டினான். அதை கண்டு ரீனாவுக்கு இதயம் நின்றது. தன் வாழ்வு அனைத்தும் முடிந்தது என்று தோன்றியது.
ஆனால் பைரவோ மிகவும் இலகுவாக “ஹலோ.. ஹலோ.. ஒரே மாதிரி இருக்காங்களா உன் மனைவி.
பட் இது ரீனா இல்லை. ரம்யா… அவ அப்பா, அம்மா, தம்பி, தங்கை இருக்காங்க. ரீசண்டா அவளுக்கு கல்யாணமாகிடுச்சு. நான் இல்லை. அதோ அங்கயிருக்காரே மாம்பலம் போலீஸ் தீப்சரண், அவனோட க்ளோஸ் பிரெண்ட் சுதர்ஷன் தான் இவ கணவர். சும்மா தப்பும் தவறுமா பேசி போலீஸிடம் அடிவாங்கி சாகாத. இங்க பாரு, என் பொண்டாட்டி ரம்யா கூட எடுத்துக் கொண்ட போட்டோஸ். ரம்யா.. உன்னோட காலேஜ் போட்டோஸ் காட்டு. இந்த மேதாவி பார்த்துட்டு போகட்டும்” என்று கூற ரம்யாவான ரீனா அவளது போனில் இருந்த புகைப்படத்தை காட்டினாள்.
அதில் போனின் பெயரோடு தேதி நேரம் எல்லாம் போட்ட புகைப்படமாக பதிவு இருக்க கெவின் குழம்பினான்.
“என்ன… புரிஞ்சுதா கிளம்பு கிளம்பு.” என்று விரட்டினான். கெவின் தலையை சொறிந்தபடி ரம்யாவை பார்த்து பார்த்து நகர்ந்தான். உலகத்தில் ஒரே உருவத்தில் ஏழு பேர் இருப்பார்களாம். அப்படியான பெண்ணாக ரீனா போல ரம்யா இருப்பதாக நகர வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. போலீஸிடம் தானாக அகப்பட அவனுக்கு தலையெழுத்தா?
ரம்யாவாக இருந்த ரீனாவுக்கு மெதுமெதுவாய் நிம்மதி படர்ந்தது.
“தேங்க்ஸ்” என்றாள் பைரவிடம்.
“உனக்கும் தான்” என்று பதிலுக்கு பைரவ் மொழிந்தான்.
ரீனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் சற்று தெம்பு கூடியது. “அந்த ஆள் வச்சியிருக்கற போன்ல இருந்த போட்டோல என்னை மாதிரியே இருந்து.” என்று ரம்யாவான ரீனா பேசினாள்.
“யா… அது பார்க்க உன்னை மாதிரியே இருக்கா. அவ ரீனா கெவினோட மனைவி. ஏதோ ஆசிரமத்துல வளர்ந்து பாதரோட தயவில், இந்த லூசை கல்யாணம் பண்ணிருப்பா போல. பட் நீ சுதர்ஷனனோட மனைவி. உனக்கு அப்பா அம்மா தம்பி தங்கை, பிரெண்ட்ஸ் இருக்காங்க. அது அவனுக்கு தெரியாது. அப்ப இதை தானே சொல்லணும்.
பாரு.. சொன்னதும் தலையை சொறிந்து ஓடிட்டான். பயப்படாத ரம்யா. அவன் திரும்ப வந்தாலும் தைரியம் இதையே சொல்லு. உனக்கு பக்க பலமா சுதர்ஷனன் இருக்கார். அவரோட பிரெண்ட் தீப்சரண் போலீஸ் வேற. நாங்களாம் இருக்கோம். நீ ஏன் பொறுக்கி மாதிரி இருப்பவனை பார்த்து மிரளுற. கூல்” என்று ஆறுதல் கூறினான்.
ரீனாவுக்கு இந்த பதில் போதுமானதாக அமைந்தது. இனி கெவின் வந்து கேட்டாலும் அச்சு பிசகாது இதையே உரைக்க வேண்டுமென்று முடிவெடுத்தாள்.
“ஸப்பா.. என்ன கூட்டம் என்ன கூட்டம். எப்பவும் இப்படி இருந்ததில்லை இன்னிக்கு பார்த்து கூட்டமா இருக்காங்க. நிம்மதியா ரெஸ்ட் ரூம் போக முடியலை. பெரிய க்யூ” என்று லேசான மேடிட்ட வயிற்றோடு சுவாதி வந்தாள். அவளோடு சஞ்சனாவும் வர, “இங்க மட்டும் என்னவாம். ஐஸ்க்ரீம் வாங்க போனா அங்கயும் க்யூ. காத்திருந்து உனக்காக வாங்கினேன்.” என்று சரண் சஞ்சனாவிடம் ஐஸ்க்ரீமை நீட்டினான்.
ஆளாளுக்கு பனிக்கூழை சுவைத்தனர்.
ரீனாவுக்கு சற்று நிம்மதி பரவியது ஆனாலும் கெவின் இதே இடத்தில் இருக்க நிம்மதியாக இருக்க முடியவில்லை. சுதர்ஷனன் வந்ததும் அவன் கைகளை பற்றி தன்னுடன் வைத்துக் கொண்டாள். அவன் தான் தன் உரிமையானவன் என்பது போல. அது தான் இனி நிகழும் உண்மையும்.
கெவின் கூட தூரத்தில் இருந்து பார்த்து, ‘ரீனாவா இருந்தா என்னை பார்த்தும் எவன் கையையோ பிடிச்சிருப்பாளா? வேற பொண்ணு தான் போல’ என்று அழைத்து வந்த ஒன் நைட் ஸ்டாண்டர்ட் பெண்ணை படம் பார்க்க இழுத்துச் சென்றான்.
ரீனா முன்பு போல பயப்படவில்லையே. கழுத்தை ஒட்டிய செயின் காதை ஒட்டிய கம்மல், கரத்தில் வளையல் இல்லாமல், நெற்றியில் பொட்டு வைக்காமல், சேலை மட்டுமே அணிந்து ரீனாவை கண்டது. இங்கே குர்தி அணிந்தாலும், புதுமண தம்பதி என்று பூ பொட்டு, , கைகள் முழுக்க இசைக்கச்சேரி போல வளையல் குலுங்க, அது தன்மனைவி ரீனா வா என்று அவனுக்கே சந்தேகம் துளிர்த்தது. சாராதா அவ்வாறு மருமகளிடம் வளையல் பொட்டு என்று அணியவைத்திருந்தார்.
ரீனாவான ரம்யாவோ கெவினே தன்னை கண்டு நகர்ந்து செல்ல முழு நிம்மதியுடன் இருந்தாள்.
அதை விட பைரவ் இருவரை கண்டு, ‘இவ யாரு என்னனு தெரியாம இருந்தேன். இப்ப ஓரளவு தெரிந்துக்கொண்டேன். நாளைக்கு முழுக்க தெரிந்துக்கணும்’ என்று முடிவெடுத்துக் கொண்டான். இந்த பொண்ணுக்கும் ஏதோ கஷ்டம் போல, அதனால் தான் ரம்யாவோட இந்த வாழ்வை மனதார வாழறா போல என யூகித்தான்.
படம் முடிவடைந்தப்பின் ரீனாவான ரம்யா சுதர்ஷனனின் இடுப்பில் கரம் கோர்த்து தோழிகள் இருவரிடமும் சொல்லிவிட்டு புறப்பட்டாள்.
சரணும் சஞ்சனாவும் கூட அப்படியே புறப்பட்டார்கள்.
பைரவோ ஏழு மாதங்களுக்கு பிறகு சந்தோஷம் கொண்டான்.
அவனுக்கு இருந்த பயம் இன்று தானே முழுதாஅ நீங்கியது. இந்த ரம்யாவுக்கு பழைய நினைவு திரும்பினால் என்னாகும் என்று பயந்து திரிந்தான். இன்று இவளுக்கு நினைவுகள் எல்லாம் மறக்கவில்லை. ரம்யாவாக இருக்கும் பெண் ரீனா, ரம்யாவாக நடிக்கின்றாளென்று அறிந்துக் கொண்டான். இல்லையென்றால் கெவின் சொன்ன மோதிரம் அவள் கையில் முதலில் இருந்தது. பிறகு காணாமல் போனதை அவன் கவனித்தானே.
ஆக இவள் தான் ரம்யா இல்லை என்று உரைக்க மாட்டாளென்ற நிம்மதி பேரானந்தம் அளித்து கொண்டாட வைத்தது. அதே கொண்டாட்டத்தில் சுவாதியை காரில் அழைத்து தனது வீட்டுக்கு புறப்பட்டான்.
ரம்யாவோ சுதர்ஷனன் தோளில் சாய்ந்து, கொண்டாள்.
அவளாக உரிமையாக சாய்வதல்லாம் வரமல்லவா சுதர்ஷனனுக்கு.
கெவினோ என்ன தான் அந்த நொடி பைரவ் போலீஸ் என்று சுட்டிக்காட்டி சரணை வைத்து பேசி, ஓடவைத்தாலும், ரம்யாவாக இருந்த பெண் ரீனா மாதிரியே இருக்கா. ரீனா காணோம்னு புகார் கொடுப்போமா?’ என்று சிந்தித்தான்.
அடுத்த நொடி, அவ எங்கயோ ஓடிப்போனா. ஆனா இந்த பாதர் கிழம் என்னவோ நான் அடிச்சி உதைச்சி கொன்னுட்டதா கூட சொல்வான். இனி பாண்டிசேரி பக்கமே சவகாசம் வச்சிக்க கூடாது’ என்பது போல நினைத்தான்.
வீட்டுக்கு வந்ததும் ரீனாவுக்கு லேசாக அந்த சந்தேகம் முளைத்தது.
நாம பயந்து தடுமாறினோம். நம்மளை மாதிரி ஒரு பொண்ணு போட்டோ பார்த்ததை சஞ்சனா சுவாதியிடம் சொல்ல பயம். ஆனா பைரவ் ஏன் என்னை மாதிரியே இருக்கற போட்டோஸ் பார்த்ததை மத்தவங்களிடம் சொல்லலை. ஒரு பேச்சுக்காவது, இப்படி ஒருத்தன் வந்தான்னு சொல்லலை, எதனாலா?’ என்று சிந்தித்தாள்.
ஆனால் அதிகமாக யோசிக்கவில்லை. பைரவுக்கு சுதர்ஷனன் தீப்சரணோடு லிமிடெட் பேச்சு என்று அறிவாள். அவர்களிடம் என்றில்லை பைரவ் இந்த குழுவில் தனித்து தான் இருப்பார். என்ன அடிக்கடி தன்னை நோட்டமிடும் போது பகீரென்ற உணர்வை ஏற்படுத்திடுவார். ஏதோ இன்று தான் இதமாக, அதுவும் தனக்கு ஆதரவாக பேசினார். இது எத்தகைய பலம்.
கெவினிடம் நான் மட்டும் மாட்டியிருந்தால் கூட இந்தளவு இலகுவாய் அவனை துரத்தியிருக்க இயலாது. பைரவ் தான் துரத்தியடிக்கும் முடிவில் பேசினான். அதுவும் போலீஸ் என்றதும் கெவின் முகம் போன போக்கு நினைத்தால் இப்பொழுதும் சிரிப்பு வந்தது ரீனாவுக்கு.
நல்லவேளை பாதரிடம் உதவிக் கேட்க போகாம் விபத்து நிகழ்ந்தது இந்த விபத்தை நான் எனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதும் நல்லதே.
ஆனால் இத்தனை அன்பான நட்பும் உறவும் பெற்ற ரம்யாவுக்கு என்ன ஆனது?
அவள் எங்கே. அவளுக்கு என்ன நேர்ந்திருக்கும்?’ என்று யோசனையில் தீவிரமானாள்.
”மியா குட்டி, என் பூனை குட்டி என்ன யோசிக்கறிங்க” என்று இடைவளைத்து சுதர்ஷனன் வந்தான்.
அவன் வந்தப்பின் ரம்யாவாக வாழ்பவளுக்கு, ரீனாவின் யோசனைகள் நெருங்குமா?
-தொடரும்.
Nalla Vela maattikkala superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
But Bhairav one day you will caught. Intresting
Super sis nice epi 👌👍😍 eppo maatala thapichitanga but future la enna nadakumo parpom 🧐🤔
நல்ல வேலை பைரவ் இருந்தால் தப்பிச்சுட்டால் சஸ்பென்சா சூப்பரா போகுது மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக ஆவலுடன் அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Athu epti thurudanaye poi matipan reena ( ramya )
Ne ipo unnaku palam nu nambuna al than ramya va thanakku sathagama payanpaduthi , konnu , avan Kai yala pothachu vitrukan …apo epti soluvan ….
Nice epi👏👏
super super superb and interesting epi. kevin kanula patuta matipa pathen nalla vela bhairav vanthu kapathitan illana avanum matipane . ennaikathu oru naal veliya varum thane apo ena agumnu therila sisy twist ah vaikiringa intha fulla thula hero story tha kandipa
Kevin ah thorathitanga aana future la reena ku prachanai yae varathu nu eppudi sollurathu
தேநீர் மிடறும் இடைவெளியில்..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 19)
ஜஸ்ட் மிஸ்ஸிங்ன்னு சந்தோஷப் படவா, இல்லை இப்படி தப்பும் தவறுமா ஃபோர்ஜரி பண்றாங்களேன்னு வருத்தப்படாவான்னே தெரியலை. ஒரு பக்கம் ரீனாவுக்கு இந்த வாழ்க்கை நிலைக்கட்டும்ன்னு தோணுது,
இன்னொரு பக்கம் இது ரம்யாவுக்கு இழைக்கும் அநீதியாவும் தெரியுது.
என்ன சொல்றதுன்னே புரியலை.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Spr going
அருமை ,
Nice
Super super super super super super super super superrrrrrrrrrr
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻