தேவதை 4
அவன் வாகனத்தில் ஏறி அமர்ந்ததுமே அவன் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்திருக்க. “சொல்லுங்க டாட் “, என்றான். “உங்க அம்மா அங்க வந்திருக்காளா? “. “ஆமா காலையிலையே, அவங்க கத்துன கத்துல , என் காதுல இருந்து ரத்தமே வந்திருச்சு டாட்”. “இருபத்தி எட்டு வருஷமா என் காதல வராத ரத்தமா? “, சலைக்காது கேட்டார் மகாராஜா.
“அதுதான் டாட் எனக்கும் சந்தேகம். இத்தனை வருஷத்துல உங்க காது செவிடாகாமா இருக்குன்னா, உங்க காது எவ்வளவு ஸ்ட்ராங்குன்னு பாருங்க”, அவன் நக்கல் அடித்து சிரித்தான். சொல்லுவடா சொல்லுவ”, என்று மேலும் சிரித்துக் கொண்டே கூறியவர். “பாப்பாவ எப்ப கூட்டிட்டு வர போற. உங்க அம்மாவை எப்படி சமாதானப்படுத்த போற? “, அடுத்தடுத்து கேள்விகளையும் முன்னிறுத்தினார்.. “நீங்க கேட்ட எந்த கேள்விக்குமே என்கிட்ட பதில் இல்ல டாட். அது அது நடக்கும்போது பாத்துக்கலாம் “, என்றான் அரவிந்த்.“நீ போய் ஆறு மாசம் ஆகுதுன்றத மறந்துடாத”.
“ஞாபகம் இருக்குது டாட். இதை பத்தி அவள் கிட்ட பேசவே முடியாதுன்னு தோணுது.. ஆண்களை கண்டாலே எரிஞ்சு விழுறாள் என்ன பண்றது சொல்லுங்க?“.. “நீ குழந்தையை மட்டும் தான் பார்க்க போன, இப்ப குழந்தையோட அம்மாவும் வேணும்னு நினைக்கிற. நீ எடுத்த முடிவு சரியா தப்பான்னு எனக்கு தெரியல. ஆனா உங்க அம்மா ஒரு நாளும் இதுக்கு ஒத்துக்க மாட்டாள். நீ காதலிச்ச பொண்ணையே ஓட ஓட விரட்டினவள். இந்த பொண்ணை என்ன பண்ண போறாள்னு யோசிக்கவே பயமா இருக்கு”, என்றார் மகாராஜா.
“அந்த பொண்ணு ஒட தயாரா இருந்தாள் அதனால ஓடிட்டாள். பணத்துக்காக வந்தவ அப்படித்தான் இருப்பாள். ஆனா இவள் அப்படி இல்ல டேட். பணத்தை எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு வந்தவள். பெரிய வேலை, நிறைய சேலரி இது எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு உங்க பேத்திக்காக கிஃரஸ் வச்சு நடத்துறாள் . தேவையான இடத்தில் அடங்கி போகவும் தெரியுது. தேவையில்லாத இடத்துல எரிமலையா கொட்டவும் தெரியுது. ஷி இஸ் ஜெம் டேட் அண்ட் பெக்யூலியர் டூ”. “சரி உன் காதலை முதலில் அந்த பொண்ணு கிட்ட சொல்லிட்டியா? “..
“இல்ல டாட், அது கொஞ்சம் கஷ்டம் தான். ஃபர்ஸ்ட் ஸ்டேப் என்ன எடுத்து வைக்கிறதுன்னு தெரியாம தான் நானும் முழிச்சுக்கிட்டு இருக்கேன். ஆனா இந்த ரெண்டு வாரத்துல ஏதாவது பண்ணிடுவேன். அப்போ உங்க கிட்டயும் கண்டிப்பா சொல்றேன்”, என்றான் அரவிந்த். “சரிப்பா என்னமோ பண்ணு. ஆனால் உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. முக்கியமான விஷயம் கல்யாணம் பண்ற பொண்ண நல்லா பாத்துக்கணும். பாப்பாவுக்காக பண்றேன்னு நினைக்காத. அந்த பொண்ணோட முன் கதை தெரிஞ்சும் அவளை விரும்புறேன்னு சொல்ற. எந்த நாள்ளையும் அத குத்தி காட்டாம இருக்கணும் அதுதான் ரொம்ப முக்கியம்”, என்றார்.“ புரியுது டாட், நானும் இத பத்தி யோசிச்சிட்டு இருக்கேன். கண்டிப்பா பண்ண மாட்டேன் கவலைப்படாதீங்க “, என்று அவன் கூறி முடித்த பிறகு.
இருவரும் மற்ற விஷயங்களை பேசி முடித்துவிட்டு அழைப்பை துண்டித்து விட்டனர் . பேசுவதற்காக காரை ஓரம் நிறுத்தியவன். அப்படியே சற்று நேரம் இருந்தான். தான் எடுத்த முடிவு சரியா தவறா தன்னால் அது முடியுமா இல்லையா என்று ஐநூறாவது தடவையாக தனக்குள் கேட்டான். ஆனால் இதெல்லாம் அந்த பெண்ணின் மீது உனக்கு விருப்பம் வருவதற்கு முன்னால் யோசிக்க வேண்டியது மகனே என்றது ஆழ்மனம். தனியாக இருக்கும் போது இப்படி யோசிப்பவன். அவளை குழந்தையுடன் பார்த்து விட்டால். அந்த யோசனை எங்கோ சென்று மறைந்து காணாமல் போய் விடுகிறது. ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்டவன் எப்பொழுதும் போல அந்த பஸ் ஸ்டாண்டை நோக்கி சென்றான்.……. தாயும் மகளும் பார்க்கில் அமர்ந்து கொண்டிருந்தனர்..
கையில் இருந்த உணவை மகளுக்கு ஊட்டி விட்ட பிறகு அவளை விளையாட அனுப்பி விட்டு மாலினி அமைதியாக அமர்த்துக் கொண்டாள். குழந்தை இன்னொரு குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள். அரவிந்தனும் அங்கே வேறு திசையில் அமர்ந்து ஷாலினியை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது அவன் பார்வை மாலினியிடம் சென்று வந்தது. அவர்களுடன் சேர்ந்து இன்னும் இரண்டு குழந்தைகள் விளையாட வந்தனர். நால்வருமாக விளையாடிக் கொண்டிருக்கும் போது ஷாலினி தடுக்கி விழுந்துவிட்டாள். பதறியடித்து இவள் வருவதற்கு முன்பாகவே கையில் குழந்தையை அள்ளி தூக்கி இருந்தான் அரவிந்த் .
“ஓஒ, அழக்கூடாதுடா அழ கூடாது. பாப்பாக்கு வலிக்குதா, அடிபட்டுடிச்சா?, எங்க அடிபட்டிச்சு காட்டுங்க?“, அவனைப் பார்த்துவிட்டு அக்குழந்தை தாயை தேடியது. அதற்குள் ஓடி வந்தவள். அவனை முறைத்துக் கொண்டே அவனிடம் இருந்து குழந்தையை பிடுங்கி தன்னிடம் இழுத்தாள் .“என்னாச்சுமா எங்க அடிபட்டிச்சு? “, அவள் கேட்டதும் . உதட்டை சுழித்து அழுதபடியே தன் காலை காட்டினாள் ஷாலினி. அத்தோடு நில்லாமல், அங்கேயே மடிந்து அமர்ந்தவள் குழந்தையை மடியில் படுக்க வைத்து எங்கெல்லாம் அடிபட்டது என்று பார்க்க ஆரம்பித்து விட்டாள். அங்கே ஒருவன் நின்று கொண்டிருப்பது கூட அவளுக்கு தெரியவில்லை.
அவள் வெடிக்கின்று பிடுங்கியதும் அவனுக்கு கோவம் தான் வந்தது. ஆனால் ஷாலினியும் அவளிடம் சென்ற பிறகுதான் சிறிதேனும் அழுகையை நிறுத்தினாள் எனும் போது அவனும் அடங்கித்தான் போனான். எழுந்தவள் குழந்தையை தூக்கிக் கொண்டு தன் ஹேண்ட் பேக் இருந்த இடத்தை பார்க்க அது வெருமையாக இருந்தது. அவனும் அதை கவனிக்கவில்லை. தூரத்தில் அதை எடுத்துக்கொண்டு ஒருவன் ஓடுவதை பார்த்தவன். அவசரமாக அவனை பின் தொடர்ந்து ஓடினான். ஆனால் இவள் அலட்டிக் கொள்ளாமல் குழந்தையை தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டாள். புடவை கொசுவம் சொருகும் இடத்தில் எப்பொழுதுமே பணத்தை வைத்து இருப்பாள். அந்த தைரியத்தில் பஸ் ஸ்டாண்டுக்கும் சென்று விட்டாள். ஆனால் சற்று நேரத்தில் அவள் முன்பு ஹேண்ட்பேக்கை நீட்டியபடி வந்து நின்றான் அரவிந்த். “தேங்க்ஸ்”, என்று ஒற்றை வார்த்தையை உதிர்த்து விட்டு அமைதியாக பெற்றுக்கொண்டாள்.
“அவ்வளவுதான் ரியாக்ஷனா ?’ என்று மனதிற்குள் நினைத்ததை வாய் விட்டும் கேட்டான் அரவிந்த்.“ இது என்னோட ஹேண்ட் பேக் இதுல பெருசா எதுவும் இல்ல. இதுக்காக நானே போராடல. நீங்க எதுக்காக போராடுனீங்கன்னு தெரியல . இருந்தாலும் கொண்டு வந்து கொடுத்ததற்கு நன்றி மட்டும் தான் சொல்ல முடியும். நீங்க வேற என்ன எதிர்பார்க்கிறீங்கன்னு புரியல”, என்றாள். “என்ன மேடம் இப்படி சொல்லிட்டீங்க. உங்க வீட்டு சாவி உங்களோட முக்கியமான ஐடிஸ் போன் பர்ஸ் காசு எல்லாமே இதுல தானே இருக்கும். இதை மிஸ் பண்ணா திரும்பவும் நீங்க பஸ்ட்ல இருந்து எல்லாத்தையும் ரெக்கவர் பண்ணனும் இல்லையா? “. “அது ரெக்கவர் பண்ணிக்கலாம். ஆனா குழந்தையை? “, என்று கூறியவள். ஷாலினியை இன்னும் இறுக கட்டிக் கொண்டு அவள் முகத்தில் முத்தம் பதித்தாள். அதில் அவள் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. அது வெளியில் வராமல் அப்படியே உள்ளிழுத்து கொண்டவள். தன்னை சமன் செய்து கொண்டாள் “ தேங்க்ஸ்”, என்று கூறிவிட்டு திரும்பி நின்று கொண்டாள்.
“காபி சாப்பிடலாமா? “, என்றவன் கேட்க. அப்பொழுதுதான் நிமிர்ந்து அவன் முகத்தை ஆராய்ந்தாள்.. “இல்ல குழந்தை பயந்து இருக்கா பசிக்குதுன்னு நினைக்கிறேன். காபி ஷாப்ல பேசிக்கிட்டே அப்படியே குழந்தைக்கு பால் வாங்கி கொடுக்கலாமேனு கேட்டேன்”, என்று சிரித்துக் கொண்டே சமாளித்தான்.“சேஸ் சம்மதர் கேர்ள்”, மிக மிக சாதாரணமாக கூறினாள். அந்த வார்த்தையில் அவன் இதழ்கள் தானாக விரிந்து கொள்ள. “ஸ்மார்ட், ஆனா காபி சாப்பிட கூப்பிடுறவங்க எல்லாம் கேர்ள்ஸ் காக, ஐ மீண் கேர்ள்ஸ அட்ராக்ட் பண்றதுக்காக கூப்பிடறாங்கன்னு எப்படி நினைச்சீங்க மேடம்? “. அவள் அதற்கு பதில் கூறவில்லை. அவன் மீண்டும் தொடர்ந்தான். “குழந்தையோட இருக்கீங்க. நீங்களும் சிக்ஸ்டீன் கிடையாது. நானும் தர்ட்டிய நெருங்கிக் கிட்டு இருக்கிறேன். இவன் ஐ அம் நாட் யங்ஸ்டர் அதுக்காக சொல்ல வந்தேன். என்னுடைய ஏஜை குறிப்பிட்டேன்னு நினைக்காதீங்க ”, என்றான் மிடுக்குடன் . “சாரி, காபி சாப்பிடுற பழக்கம் இல்ல”. அவள் கூறிய பதிலில் அவன் இதழ்கள் தாராளமாக விருந்து கொண்டது. பொய் சொல்கிறாள் என்றுதான் அவனுக்கு தெரியுமே . “நீங்க சாப்பிட வேணாம் ஆனா குழந்தையும் நானும் சாப்பிடுவோம் இல்லையா? “.. “மிஸ்டர் என்ன வேணும் உங்களுக்கு? “.
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் இப்படி பொது இடத்தில் பேசினால் சரியா இருக்காது. அதனால ஒரு ஃபார்மாலிட்டிக்கு காபி ஷாப்னு கேட்டேன். உங்களுக்கு பிரச்சனை இல்லன்னா உங்க வீட்டுக்கு இல்ல உங்க கிரஸுக்கு கூட போகலாம் “, அவன் சாதாரணமாக கூறினான் . தன்னை பற்றி இவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது என்று அந்த நொடியில் அவள் புரிந்து கொண்டாள். அதிர்ந்து அவனை பார்த்தாள். ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டாள் . “என்ன பத்தி எல்லாம் தெரியும்னு காட்டுறீங்களா?. ஹூ கேர்ஸ்??, உங்கள மாதிரி நிறைய பேரை நான் கடந்து வந்து இருக்கேன்? “..“ மிஸ்ஸஸ் மாலினி”, என்றவன் சத்தமாக அழைத்து விட. அவள் இன்னும் அதிர்ந்து அவனை பார்த்தாள். “சாரி சாரி மிஸ் மாலினி. நான் உங்ககிட்ட வழிறேன்னு நினைச்சுட்டீங்க போல, நான் வந்தது உங்களுக்காக கிடையாது. குழந்தைக்காக. ஆக்சுவலா நீங்க பண்ண க்ரைம் ரேட்டுக்கு உங்கள போலீஸ்ல சரண்டர் பண்ணி கம்பி என்ன வச்சி இருக்கலாம். ஆனா உங்களுக்கும் பாப்பாவுக்கும் இருக்கிற பிணைப்பை பார்த்து நான் அதை செய்யல. மீதிக் கதைய இங்கேயே பேசலாமா இல்ல காபி ஷாப் கிரஷ் ஹோம் சாய்ஸ் இஸ் யூர்ஸ்”, மிடுப்புடன் கூறிவிட்டு தோள்களை குலுக்கினான்.. “நீ,, நீங்க? “, அவள் குரலில் பரிதவிப்பு. உடலிலும் தள்ளாட்டம் தெரிந்தது. அவள் மனம் படப்பட என்று துடிப்பது அவன் காதுக்கே கேட்டது.
அவனிடமிருந்து பார்வையை விளக்கியவன் குழந்தையை பார்த்தான். அவள் குழந்தையை தன்னுடன் அணைத்துக் கொண்டாள். . “பேசலாம் மாலினி. ஐ பிராமிஸ் யு. நான் உங்களையும் குழந்தையையும் பிரிக்க மாட்டேன்”, அவன் கூறிய அந்த ஒற்றை வாக்கியம் அவளை ஆசுவாசமடைய செய்தாலும். அவன் யார், குழந்தைக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்??, எதற்காக தன்னை மிரட்டி கொண்டிருக்கிறான். இவனுக்கு என்ன வேண்டும்??. அவள் கண்கள் கண்ணீரை வெளியேற்ற. “அம்மா அழ அழ “, என்று கூறியபடியே தாயின் கண்ணீரைத் துடைத்து விட்டால் மகள். அந்த வார்த்தையில் அவனும் திரும்பி பார்த்தான்.. மகளுக்காக அவள் உதட்டை மடித்து கடித்து கண்ணீரை கட்டுப்படுத்துவது அவனுக்கு தெரிந்தது.. “ரெண்டு வயசு ஆகப்போகுது ஏன் இவளுக்கு இன்னும் பேச்சு வரல. எதுவும் ப்ராப்ளம் இருக்கா, டாக்டர் கிட்ட காட்டுனிங்களா? “.
“ம்ம்ம், சில குழந்தைகள் பொறுமையா தான் பேசுவாங்கன்னு சொன்னாங்க”.“ஹோஒ”, அவள் குரலில் இவ்வளவு நேரம் இருந்த தைரியம் காணாமல் போய் இருந்தது அவனுக்கும் புரிந்தது. “டிரஸ்ட் மீ மாலினி. குழந்தை உங்களோட குழந்தையா மட்டும் தான் இருக்கும். ஐ ப்ராமிஸ் யூ. நீ அழுது, அவளையும் அழ வைக்காத”, அவன் வார்த்தை ஒருமைக்குத் தாவியதை அவள் கவனிக்கவில்லை. யாரோ ஒருவனை எப்படி நம்புவது, யார் இவன்??. என்ன செய்ய காத்துக் கொண்டிருக்கிறான்??
Enna nadakkuthu nu onnum puriyalaye, ivan vera miratturaan maalini ya
Appo kulanthai avalodathu illayo🙄🙄🙄🙄🙄🙄🙄
💜💜💜💜
Aravindh oda appa shalini avar oda pethi nu solluraru appo avanga veetu kuzhandhai ah athu than ivan police complaint nu sonna udanae malini jerk aana la ah ennavo oru secret iruku athu enna nu than theriyala
Interesting😍😍
Super sis nice epi 👍👌😍 Evan enna dhan plan la erukan nu therilaiye 🙄 Eva appdi enna dhan panniyirupa parpom 🧐
ena pa ithu twist perusa iruku