Skip to content
Home » தேவதையாக வந்தவளே

தேவதையாக வந்தவளே

தேவதை 8

“எ, என்ன பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்??. ஹான் முதல்ல கூட என்னோட பூர்வீகம் சொன்னிங்க. நான்தான் இருந்த பதட்டத்துல அதை கவனிக்கல”, அதே பதட்டத்துடன் கேட்டுக் கொண்டிருந்தால் மாலினி.

அவன் முகத்தில் அப்பொழுதும் இளநகை தான். அவனைப் பார்த்து முறைத்தவள். அவளின் பதட்டத்தில், குழந்தை சினுங்குவதை பார்த்து தன்னை சுதாரித்துக் கொண்டு அமைதி காத்தாள்.

குழந்தையின் தலையை வருடி கொடுத்து கால்களை மெல்ல ஆட்டினாள் . மீண்டும் ஷாலினி தூக்கத்தை தொடர்ந்தாள்.

“என்ன மாலினி விளையாட்டு பிள்ளை மாதிரி கேக்குற??. ஒருத்தரப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா சோசியல் மீடியா இருக்கு. நீ அதுல ஆக்டிவில்ல, ஐ நோ. ஆனா இப்ப தான ஆக்டிவ் இல்லாம இருக்க. இதுக்கு முன்னாடி இருந்திருக்கல்ல . நான் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். நீ உன்னோட ப்ரொபைலை லாக் பண்ணி வச்சிருந்தாலும். எனக்கு ஈசியா அத அன்லாக் பண்ண தெரியும். உன்னோட ஸ்கூல் காலேஜ் எடுத்தேன் அப்படியே உன்னோட அட்ரஸ். அப்புறம் அங்க இருக்க டிடெக்டிவ் ஏஜென்சிக்கு இங்க இருந்து காசை தட்டி விட்டேன். அவன் ஒரு வாரத்திலேயே உன்னோட ஆதி அந்தம் எல்லாத்தையும் எடுத்து கொடுத்துட்டான். இப்பல்லாம் இருந்த இடத்துல இருந்து எல்லாத்தையும் பண்ண முடியும் மாலினி. ஆனா உன்ன பத்தி தெரிஞ்சுகிட்ட பிறகு. ஒருவேல குழந்தையை நீயே திருடினியோன்னு எனக்கு சந்தேகம் விழுதுச்சு”.

“ப்ளீஸ் நிறுத்துங்க. நான் ஒன்னும் வி.ஐ. பி இல்ல என்னோட கதையை அலசி ஆராய வேணாம். நான் என்னோட கடந்த காலத்தை மறக்கணும்னு நினைக்கிறேன். அதோட சுவடு கூட எனக்கு தேவையில்லை. நீங்க குழந்தையை பத்தி சொல்லுங்க. வேற எதுவும் எனக்கு வேண்டாம்”, கலக்கமான குரலோடு கூறினால் மாலினி .

மெச்சுதலாக உதட்டை சுளித்தான். “ஐ லைக் இட். உன்னுடைய இந்த தைரியம் ரொம்ப எனக்கு பிடிச்சிருக்கு. எல்லா பெண்களுக்கும் இது தேவை. இன்ஃபெக்ட் நானும் அதை தான் எதிர்பார்க்கிறேன். உன்னோட கடந்த காலத்தை நீ முழுசா மறந்துடனும்னு. இப்போ நிகழ்காலத்தை விரும்ப ஆரம்பிக்கணும்னு. இனி வரும் காலத்திற்கு அது மட்டும் போதுன்னு”, பேசிக்கொண்டே அவன் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த ஷாலினியின் தலையை வருடி விட்டான்.

அவன் பேச்சை அவள் சிந்திக்க தொடங்கினாள். அவன் பெருமூச்சை வெளியிட்டு விட்டு. “உங்க ரெண்டு பேரோட அன்பில் நான் என்னையே மறந்துட்டேன். கண்டிப்பா உங்கள பிறிக்க தான் வேணுமானு தோணுச்சு??. உன்னோட அன்பு இவளுக்கானது உண்மை தான்னு தெரிஞ்சது. அவளும் உன்னை விட்டு பிரிஞ்சு இருக்க மாட்டாள்னு புரிஞ்சது. உங்க ரெண்டு பேரையும் பிரிக்காம இருக்கிறதுக்கு வழியை யோசிச்சேன். கண்டுபிடிச்சேன் “, என்று அவன் கூறி முடித்த நொடி.

“என்ன வழி? “, என்று அவள் அவசரமாக கேட்டாள். “அதுதான் மா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னேனே?, உன்னையும் குழந்தையும் பிரிக்க மாட்டேன். நீயும் குழந்தையும் எப்பயும் ஒண்ணா இருக்கலாம். உன்னையும் சேர்த்து தான் கூட்டிட்டு போக போறேன்னு“. இம்முறை அவள் சந்திக்கும் சுயநினைவில் இருந்தாள்.

“எனக்கு சம்மதம். கேர் டேக்கரா நானே பாப்பாவை பார்த்துக்கிறேன். உங்க பேமிலி கிட்ட உங்க மனைவி கிட்ட எல்லாம் சொல்லிடுங்க”, என்றால் மாலினி.

அவன் இதழ்கள் மீண்டும் விரிய துடித்தது. “நான் உன்கிட்ட போன் கொடுத்தேன். பேமிலி போட்டோஸ் காட்டினேன். எதுலயாவது என்னோட வைஃப்பை பாத்தியா?? “, அவன் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க.

அவள் இல்லை என்று தலையாட்டினாள். மீண்டும் இளநகையை சிந்தியவன்.

“இருந்தா தானே மா காட்டுறதுக்கு??. பொண்டாட்டி இருந்தா அவளை விட்டுட்டு ஒன்றரை வருஷமா என் தங்கச்சியுடைய குழந்தை பின்னாடி சுத்த முடியுமா, இல்ல சுத்த தான் அவள் விட்டுடுவாளா??. அதுலயும் உன் பின்னாடி ஆறு மாசமா சுத்த முடியுமா??“, என்றவன் இலகுவாக கேட்டான் . அவள் புருவம் இப்போதும் மீண்டும் இடுங்கியது. உன்னை ஆறு மாதமாக கண்காணிக்கிறேன் என்பது வேறு வகை. உன் பின்னோடு ஆறு மாதமாக சுற்றுகிறேன் என்பது வேறு பொருளைத் தரும் அல்லவா??.

“இல்ல இவன் பேச தெரியாம பேசுறான். அதை தப்பா நினைச்சுக்க கூடாது”, மனதினுள்ளே உரு போட்டுக் கொண்டே இருந்தால் மாலினி.“நான் சொன்னதை நீ சரியாவே கவனிக்கலன்னு நினைக்கிறேன்.

முதல்ல எமோஷனலா இருந்த அதனால கவனிச்சு இருக்க மாட்ட.

உன்ன நான் கேர் டேக்ரா கூட்டிட்டு போறேன்னு சொல்லவே இல்ல. குழந்தையோட அம்மாவா கூட்டிட்டு போறேன்னு தான் சொன்னேன். இதுக்கு தான் நீ என்னை அடிக்க வந்தியே?“, என்று அவன் மீண்டும் அவன் கன்னத்தை தடவி கொண்டு பேசினான்.

“நீங்க சொன்னாலும் சொல்லலைன்னாலும் அந்த குழந்தைக்கு நான் அம்மா தான். என்ன விட்டுட்டு அவளும் இருக்க மாட்டாள். நானும் இருக்க மாட்டேன். நீங்க உங்க மச்சானுக்கு பொண்ணு பாக்குற வேலைய நிறுத்திடுங்க. அவன் ஒன்னும் நல்லவன் இல்ல. உங்க தங்கச்சி சாவுக்கே அவன் தான் காரணம். திரும்பவும் குழந்தையை கூட்டிக்கிட்டு போய் அவன் கிட்ட கொடுக்காதீங்க. உங்களுக்கு குழந்தையை பாத்துக்க கஷ்டமா இருந்தா என்கிட்ட விட்டுடுங்க. நானே இவள நல்லபடியா பார்த்துப்பேன். அடிக்கடி வந்து நீங்க பாத்துட்டு போகலாம். நல்லா வளர்ப்பேன். நீங்க மட்டும் இல்ல உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் கூட வந்து பார்த்துட்டு போங்க. தயவு செஞ்சு அவங்ககிட்ட குழந்தையை கொடுக்காதீங்க“, என்று அவள் கோவமாக பேசினாள் .

“திரும்பத் திரும்ப இதையே பேசுறேன்னா அதுக்கு காரணம் தெரிஞ்சுக்கலாமா?. தங்கச்சி சாவு ஆக்சிடென்ட் தானே?? அவன் கேட்டு விட்டான்.

ஆனால் மனதில் அவ்வளவு பதட்டம் . இல்லை என்று சொல்லி விடாதே என்ற தவிப்பும் அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. இவள் எட்வர்டை குற்றம் சாட்டுகிறாள். ஆனால் அவனைப் பற்றி இவனுக்கு நன்றாகவே தெரியும். காதல் திருமணம் தான். அவனுடைய தாய் ஒத்துக்கொள்ளாத போது அவன் தான் முன் நின்று அந்த திருமணத்தை நடத்தி வைத்தான். அந்தக் கோபம் இன்னுமே அவனுடைய தாய்க்கு இருந்தது. ஆனால் தங்கையின் சந்தோஷம் மட்டுமே முக்கியம் என்று தந்தைக்கு மட்டும் உரைத்து விட்டு தங்கையை அவன் தான் கன்னிகாதானம் செய்து வைத்தான். இவளுக்கே அவன் இவ்வளவு ஆராய்ந்து இருக்கும்போது. தங்கைக்கு திருமணம் முடிக்கும்போது அவன் ஆராயாமல் இருப்பானா என்ன??. இருவரும் எவ்வளவு விரும்பினார்கள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். ஏன் இப்பொழுது கூட டேவிட் நடைபிணமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இவள் என்ன கூற வருகிறாள்??. என்று பொறுமையாக கேட்க நினைத்தான்

“நானும் அந்த பெரிய ஆக்சிடென்ட் பார்க்கும்போது அப்படித்தான் நினைச்சேன்?. என்னோட டூவீலர் ஓரமா போட்டுட்டு ஓடிப்போய் உதவி பண்ண நினைச்சேன். டிரைவரும் அந்த பொண்ணும் ஐ மீன் உங்க தங்கச்சியும் ஸ்பாட்லயே இறந்துட்டாங்க. அவ்வளவு ரத்தம். வண்டி அப்படியே அப்பளம் மாதிரி நொறுங்கிடுச்சு. யாரையும் காப்பாத்த முடியாது என்பதை வலிக்க வலிக்க உணர்ந்தேன். அந்தப் பொண்ணு முகம் முழுக்க ரத்தம் என்னால் அவளை அடையாளம் கூட காண முடியல. அதனாலதான் இப்ப நீங்க போட்டோவை காட்டும்போது எனக்கு அடையாளம் தெரியல. நம்ம கண்ணு முன்னாடி ஒரு உயிர் போறதையோ, இல்ல ஒரு உயிர் போய் இருக்கிறத பார்க்கிறதை விட ஒரு துக்கம் வேற எதுவுமே இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும். அத நான் ஏற்கனவே அனுபவித்து இருக்கேன்”, என்று கூறும்போது மீண்டும் அவள் குரல் கலங்கிவிட்டது. கண்களை துடைத்துக் கொண்டாள்..

அவன் அமைதியாக அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் உள்ளம் எரிமலை குழம்பாக தவித்துக் கொண்டிருந்தது. அவன் தன் தங்கையை அப்படி பார்க்கவில்லை தான். ஆனால் அவள் பார்த்ததாக கூறும்போது அது கண்களில் தெரிவது போல வலி அவனுக்கும் ஏற்பட்டது.

கிட்டத்தட்ட ஆறு மாசத்துக்கு என்னால நைட்ல தூங்க முடியல. எப்ப தூங்கினாலும் அதுவே என் கண்ணு முன்னாடி வந்து நிற்கும். ரத்தத்தோட உங்க தங்கச்சி முகம் அப்புறம் அந்த டிரைவர். அவர் உருவமே தெரியல. சோர்ந்து போய் நான் அப்படியே வண்டியை நோக்கி நடக்கும்போது தான் அங்க ஒரு குழந்தை அழுவுற சத்தம் கேட்டுச்சு. இந்த ஆக்சிடென்டையும் இந்த ரத்தத்தையும் பார்த்ததனால எனக்கு அப்படி தோணுதுன்னு நினைத்தேன். எனக்கு இதுபோல குழந்தை அழுவுற சத்தம் அடிக்கடி கேட்கும் அது என்னோட மன பிரம்ம அதுக்காக நான் ட்ரீட்மென்ட்க்கு கூட போயிருக்கேன்”, என்று அவள் மிடறு விழுங்கினாள்…

அவனால் அவள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது அவனுக்கே ஆச்சரியம் தான்.அவன் இடை புக நினைக்கவில்லை. அவளாக பேசட்டும் என்று அமைதி காத்தான். அவள் உணர்வு பிழம்பாக தவிக்கிறாள் என்று புரிந்த போதும் . அழட்டும் மனதில் இருக்கும் வருத்தங்கள் வெளிவரட்டும் என்று அமைதியாக தான் இருந்தான்.

“ஆனா அப்படி இல்ல, உண்மையாவே குரல் கேக்குதுன்னு புரிஞ்சது. சுத்தி சுத்தி தேடி பார்த்தேன். முதல்லையும் இந்த சத்தம் கேட்ட மாதிரி தான் தோணுச்சு ஆனா எனக்கு அடிக்கடி இது மாதிரி பிரம்ம வரும் அதுன்னு நினைச்சுட்டேன். கார் ஆக்சிடென்ட் சத்தத்துல நான் இதை இக்னோர் பண்ணிட்டேன். கார்ல இருக்குறவங்கள காப்பாத்தணும்னு மட்டும் தான் எனக்கு அப்ப தோணுச்சு. அது முடியலன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் இப்ப ரொம்ப தெளிவா குழந்தையோட அழுகுரல் எனக்கு புரிஞ்சுது. அழுகுரல் எங்கு கேக்குதுன்னு தேடும்போது தான் .

நூறடி பாதையோட சரிவில எனக்கு துணி தெரிஞ்சது. அவசரமா உள்ள இறங்கினேன். குழந்தைக்கு அடிபட்டு இருந்தது. முகத்திலும் உடம்பிலும் அங்கங்க ரத்த காயம். குழந்தை யாருடையதுன்னு தெரியல. முதல்ல என்னோட ஷாலை வச்சு குழந்தைக்கு கட்டு போட்டுட்டு அந்த குழந்தையோட அழுகையை நிறுத்த நினைச்சேன். பாப்பா அப்படியே என்கிட்ட ஒண்டி கிட்டாள். வெயில் வேற ஷாலால அவள அப்படியே போத்திக்கிட்டேன். அதுக்குள்ள அந்த கார் பக்கத்துல அவ்வளவு கூட்டம். கார்ல இருந்தவங்களுடைய குழந்தையான்னு எனக்கு தெரியாது. ஆனாலும் திரும்பவும் அங்க போனேன்.

அப்பதான் அங்க ஓரமா ரெண்டு பேர் பேசிகிட்டு இருந்ததே எனக்கு தெரிஞ்சது. அவள் ஞாபகம் அந்து நினைவுகளில் சுழன்றது

“அண்ணா ஸ்பாட்லயே இறந்துட்டாங்க. ஆமா அண்ணா ரெண்டு பேரும் தான். குழந்தையா???. குழந்தை எல்லாம் எதுவும் இல்லையே அண்ணா. சத்தியமா இல்ல அண்ணா சுத்தி முத்தி தேடிகிட்டு தான் இருக்கோம்”.“சரி அண்ணா, கிடைச்சுதுனா அதையும் கொன்னுட்டு உங்களுக்கு போட்டோ எடுத்துக் காட்டுறோம். முதல்ல இப்ப எடுத்ததை அனுப்பி வச்சிருக்கிறோம் அத பாத்து சந்தோஷப்படுங்க பாருங்க. எட்வர்ட்”, என்ற அந்த பெயரை கூறும் போதே அதில் ஒருவன் அவளை, கவனித்து விட்டு அவன் தோள்களை தட்ட அவள் தன் ஷாலால் முழுவதுமாக குழந்தையை போர்த்திக் கொண்டு பதட்டத்தை தன் முகத்தில் காட்டாமல் ஆக்சிடென்ட்டை வேடிக்கை பார்ப்பது போல பார்த்தாள் .

அவர்கள் புருவம் இடிங்கியது. அங்கு சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே அவளை நோக்கி நடந்து வந்தார்கள். அவள் தன் முகத்தில் வழிந்த வியர்வையை கஷ்டப்பட்டு துடைத்தாள். குழந்தை என்று ஒன்று அவள் கையில் இருந்தது ஆனால் தெரியாதபடி அவள் முழுவதாக போர்த்தி இருந்தாள். வெயிலும் சுட்டெரிக்க அதனால் போர்த்தி இருப்பது போலத்தான் மற்றவர்களுக்கு தெரிந்தது..

6 thoughts on “தேவதையாக வந்தவளே”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *