Skip to content
Home » தேவதையாக வந்தவளே

தேவதையாக வந்தவளே

தேவதையாக வந்தவளே 10

தேவதை 10

“நான் இருக்கிறது உங்களுக்கு பாரமா இருந்தா , நான் இங்க இருந்து போயிடுறேன். நீங்க உங்க குடும்பத்தோட சந்தோஷமா இருங்க. யாருக்கும் என்னால தலைகுனிவு தேவை இல்லை. இப்பதான் தெரியுது நீங்களும் இவனும் கூட ஆம்பள தானே? “, என்று தந்தை பேசியதற்கு பதில் பேசாமல் அமைதியாக இருந்த தன் சகோதரனைப் பார்த்து கூறியவள். அந்த வார்த்தையை அழுந்த உச்சரித்து விட்டு தன் தம்பியையும் அவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு. கார் சாவியை எடுக்க போனாள்.

“அது நான் வாங்கி கொடுத்த கார் அதையும் வச்சிட்டு போ”, என்றார் தந்தை. அதைத் தூக்கி எங்கோ விட்டெறிந்தவள். தன் பையை மட்டும் எடுத்துக் கொண்டு வேகமாகச் சென்றாள். வாசல் படிகளில் நின்று தன் தம்பியை பார்த்தாள்.

“நான் போட்டுட்டு இருக்கிறது. என்னோட சம்பாத்தியத்தில் நான் வாங்கின டிரஸ். இந்த பேக்ல இருக்கிறது எல்லாம் கூட அப்படித்தான். நீங்க எனக்கு படிக்கிறதுக்கு பீஸ் கட்டிருக்கலாம். ஆனா கஷ்டப்பட்டு படிச்சது நான். அது உங்களுக்கு கவுரவம் தானே. அதையும் உங்க கிட்ட கொடுத்துட்டு நான் ரோட்ல போயி பிச்சை எடுத்தா அதுவும் உங்களுக்கு கௌரவ கொறச்சலா தான் இருக்கும்”, என்று கூறிவிட்டு வெளியில் செல்ல போனாள் .

அவர் மீண்டும் குரல் கொடுத்தார்.“நீ வீட்ல இல்லாம வெளியில தங்குறதும் எங்களுக்கு அசிங்கம் தான். எங்களை அசிங்கப்படுத்தணும்னு தானே நீ நினைச்சுகிட்டு இருக்க. பொறுத்துப் போக தெரியல, எல்லாமே உன் இஷ்டத்துக்கு தானே பண்ணிக்கிட்டு இருக்க? “, என்று கேட்டார்.

“நான் இந்த ஊரிலேயே இருக்கல எங்கேயாவது கண் காணாத இடத்துக்கு போறேன். என்னை யாருன்னு தெரியாத இடத்துக்கு போறேன். பொண்ணு வெளியூருக்கு போயிட்டாள்னு சொல்லுங்க. இல்ல செத்து போயிட்டாள்னு சொல்லுங்க. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, எப்ப உங்க வாயிலிருந்து இவ்வளவு கேவலமான ஒரு வார்த்தை வந்துதோ, அப்பவே உங்க பொண்ணு செத்துப்போயிட்டாள்”, என்று கூறிவிட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு வந்தவள் தான்.

குழந்தையை தனியே விட்டுச் செல்ல மனமில்லாமல் வேலையைக் கூட விட்டு விட்டாள். எங்கே குழந்தையை விட்டுச் சென்ற நொடி அவளுடைய குடும்பத்தார் வந்து அவள் உயிரை எடுத்து விடுவார்களோ என்ற பயம். கண்ணின் மணியை காப்பது போல தன் கண்மணியை காத்தாள். தன் சம்பாத்தியத்தில் இருப்பில் இருந்த பணத்தை வைத்து குழந்தையைப் பார்த்துக் கொண்டே வேலை செய்யும் ஒரு தொழிலை தேடிக் கொண்டிருந்தாள். எத்தனையோ வேலைகளில் மாறி எதுவுமே அவளுக்கு முடியாமல் பிறகு தான் குழந்தை காப்பகத்தை தொடங்கலாம் என்று முடிவிற்கு வந்தாள்.

அதற்காக அவள் மேற்கொண்ட போராட்டங்களும் கொஞ்சம் நஞ்சம் இல்லை. திருமணமானவளோ ஆகாதவளோ, கன்னியோ அல்லது கன்னி கழிந்தவளோ, விதவையோ அல்லது விவாகரத்து பெற்றவளோ, எதுவாக இருந்தாலும் கைக்குழந்தையை வைத்துக் கொண்டிருப்பவள் என்று கூட பாராமல் அவளைத் தவறாக பார்த்தவர்கள் தீண்ட நினைத்தவர்கள் எல்லாம் ஏராளமே. அனைத்தையும் முறியடித்து. வீரு கொண்ட பெண்ணாய் தன் குழந்தையை காக்க எண்ணி தனியாக போராடிக் கொண்டு இருக்கிறாள். அந்த ஞாபகங்களில் அவள் கண்கள் கலங்க கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

இவையெல்லாம் அவனுக்கும் தெரியும். அதனாலயே அவளின் மீது முதலில் மதிப்பு ஏறியது. பிறகு குழந்தையின் மீது அவள் வைத்திருந்த பாசம், அவர்கள் இருவரின் பிணைப்பு என்று கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனதினுள் அவளும் நுழைந்து விட்டாள். பணத்திற்காக தன்னை விட்டுச் சென்றவளை விட, பணத்தை தூக்கி எறிந்து விட்டு பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவளை விட அவனுக்கு மனமில்லை. முக்கியமாக அவர்களை பிரிக்கும் எண்ணம் அவனுக்கு இல்லை. அவளையே விழி அகற்றாமல் பார்த்து இருந்தான்.

“சாரி, நான் ஏதேதோ பேசிட்டு இருக்கேன். உங்களுக்கு தான் என்ன பத்தி எல்லாம் தெரிஞ்சு இருக்கே. எதுக்காக வீட்டை விட்டு வந்தேன்னும் தெரியணும் இல்லையா, அதனாலதான் அதையும் சொன்னேன். ஒரு பொண்ணு தனியா இருக்கணும்னு நினைச்சா அவளுக்கு திமிருன்னு நினைக்கிறாங்க. பெத்தவங்கள மதிக்காம இருக்கிறாள்னு நினைச்சுடுறாங்க. ஆனா அது அப்படி இல்ல. தனியா இருக்கணும் கஷ்டப்படனும், இந்த சமூகத்தோட போராடனும்னு நான் ஆசைப்பட்டு வெளிய வரல. என்னோட சூழல். அதை புரிஞ்சிக்க முடியாத பெத்தவங்க. அப்புறம் இவள்.

ஒரு உயிரை காப்பாத்தறதை விட வேற எதுவும் முக்கியம் இல்லன்னு தோணுச்சு. முதல்ல அப்படித்தான் நினைச்சேன் ஆனா இப்ப என் வாழ்க்கையோட ஒரு அங்கம் ஆயிட்டாள். என்னால இவள பிரிஞ்சி இருக்க முடியாது. கைக்குழந்தைல தெரியாம தான் அவள் என்ன தாயா நினைச்சாள். ஆனா இப்ப அவள் என்ன தாயாவே நினைக்க ஆரம்பிச்சுட்டாள். தயவு செஞ்சு எங்க ரெண்டு பேரையும் பிரிச்சுடாதீங்க. என்ன வேலை வேணாலும் செய்ய நான் தயாரா இருக்கேன். இவளுக்கு ஆயம்மாவா இருக்க கூட எனக்கு பிரச்சனை இல்லை. ஆனா தயவு செஞ்சு அவங்க குடும்பத்து கிட்ட ஒப்படச்சிடாதீங்க”, பேசிக் கொண்டிருந்தவர்களின் கண்கள் கலங்கியது.

அவள் கூறிய வார்த்தை அவனை ஆட்டி வைத்தது. அது அவனுக்கு தெரியும். எம்பிஏ முடித்துவிட்டு ஒரு பெரிய கம்பெனியில் கை நிறைய சம்பாதித்தவள் ஷாலினிக்காக வீட்டு வேலைக்கு கூட சென்றால் என்று அவனுக்கு தான் தெரியுமே. அவள் ஏன் மற்ற வேலைக்கு செல்லாமல் கிரஷை வைத்து நடத்துகிறாள் என்று கூட அவனுக்கு நன்றாக தெரியும்.

ஆனால் அவன் இப்பொழுது யோசித்துக் கொண்டிருப்பது. தங்கையின் இறப்பைப் பற்றி அவள் கூறிக் கொண்டிருந்த விஷயங்களை. அவள் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்பொழுது இந்த நிலையில் கூட குழந்தையுடன் இருக்க கேட்கிறாளே தவிர. திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாள் தான். அவன் அவனை திருமணம் செய்து கொள்ள கேட்க, அவள் தவறாக குழந்தையின் தந்தையை திருமணம் செய்து கொள்ள கேட்கிறான் என்று நினைத்து விட்டாள். எதுவாக இருப்பினும் அவர் வார்த்தையில் உண்மை தெரிந்தது. ஆனால் அவன் அதை ஆராய வேண்டும். அவனுக்குத் தெரிந்த எட்வர்ட் நல்லவன்தான். அதனால்தான் தங்கையை அவனுக்கு திருமணம் முடித்தான். இவள் கூறுவது உண்மை என்றால் அவன் தன்னை ஏமாற்றி விட்டானா அல்லது இப்பொழுது மாறிவிட்டானா??. அவன் அதை முதலில் ஆராய வேண்டும் பிறகு தான். தங்கையின் இறப்பிற்கானதை கண்டுபிடிக்க முடியும். அவசரப்பட்டால் காரியம் சிதறும் என்று யோசித்துக் கொண்டிருந்தாலும் அவன் உள்ளம் எரிமலை குழம்பாக கொதித்துக் கொண்டுதான் இருந்தது.

தங்கைக்கு விதி முடிந்தது என்று நினைத்திருந்தவனுக்கு, அப்படி இல்லை அது கொலை என்று தெரியும் போது அவனால் அதை தாங்கிக் கொள்ள முடியுமா??. தங்கை இறந்து கிட்டத்தட்ட இரண்டு வருடம் கடந்து விட்டிருந்தது. தங்கை கணவனுக்கு திருமணம் ஆகியும் ஒரு வருடம் கடந்து விட்டது. இது எல்லாம் உண்மையாக இருக்குமா, அல்லது அவனுடைய தந்தை இதில் நுழைந்து விட்டாரா??, ஆரம்பத்தில் அவர் திருமணத்திற்கு தடைவிதித்தது அவனுக்கு தெரியும் காரணம் மதம். பிறகு ஏற்றுக் கொண்டதாக தங்கைதான் கூறினாள். திருமணம் முடிந்த பிறகு சிறு சில பிரச்சனைகள் வந்தது அவனுக்கு தெரியும். அவனுடைய தாய் அவளுக்கானதை செய்ய மறுத்துவிட்டார். அரவிந்த் தன்னால் இயன்றவற்றை அவளுக்கு செய்தான். அவள் இறப்பிற்கு முன்பு வரை செய்து கொண்டு இருந்தான். இப்பொழுது அவன் மனம் அதே சிந்தனையில் சுழன்று கொண்டிருந்தது.

மாலினி அரவிந்தை வெகு நேரமாக அழைத்துக் கொண்டிருக்க. அவன் வேறு ஒரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். அவளால் அதை புரிந்து கொள்ள முடிந்தது. உடன்பிறப்பின் இழப்பு என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று தான் அதுவும் அதில் மர்மம் இருக்கிறது. கொலை என்று தெரிய வரும் போது அதை எந்த ஆண்மகனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது தான். ஆனால் இப்படியே அமர்ந்து பேசிக் கொண்டிருக்க முடியாது இருட்ட ஆரம்பித்துவிட்டது. அவனைத் தொட்டு உலுக்கினாள். எதிலிருந்தோ மீண்டவன் போல தன்னை சுதாரித்து கொண்டு அவளைப் பார்த்தவன்.

“நீ நீ சொல்றது, ஐ மீன் நீ தெளிவா பார்த்தியா??. அவங்க அப்பாவோட போட்டோ என்கிட்ட இல்ல. ஆனா எட்வரோட அப்பா தான் பேசினாருன்னு உன்னால சூயரா சொல்ல முடியுமா??.”, இதில் ஏதாவது மாற்றம் இருந்து விடாதா என்று கடைசி நம்பிக்கையுடன் கேட்டான் அரவிந்த்.

“நான் பொய் சொல்றேன்னு நினைக்கிறீங்களா??. குழந்தைக்காக டிராமா பண்றேன்னு நினைக்கிறீங்களா??. இங்க பாருங்க நான் குழந்தைய ஒப்படைக்க தான் வந்தேன். ஆனா குழந்தைக்கு ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சதுனால குழந்தையை தூக்கிட்டு வந்துட்டேன். பணம் இருந்தாலே ஆபத்து இருக்கும் தான். போலீஸ் நிலையத்தில் ஒப்படைச்சு அந்த குழந்தை உயிரோட இல்லாம போறதுக்கு நானே அதை உயிரோட வளர்க்கலாம்னு நினைச்சேன். நீங்க என்னை நம்பலன்னு தெரியுது“, அவள் குரலில் அவ்வளவு பரிதவிப்பு.

“இல்ல இல்ல கண்டிப்பா இல்ல”, அவன் அவசரமாக கூறினான்.

“இங்க பாருங்க சார். நீங்க குழந்தையோட தாய் மாமா. அதனாலதான் உங்ககிட்ட பொறுமையா உக்காந்து பேசிகிட்டு இருக்கேன் இதே நீங்க சொல்ற அந்த எட்வர்ட்டா இருந்தா கண்டிப்பா நான் பேசிகிட்டு இருந்திருக்க மாட்டேன். குழந்தை எனக்கு முக்கியம் தான் அவளுக்கு கேர் டேக்கரா இருக்க கூட எனக்கு சம்மதம் தான். அவளை என் கூடவே வெச்சிக்கறதுக்காக நான் பொய் சொல்லல. எனக்கு தெரியும் உங்களுக்கு தான் அவள் மேல உரிமை இருக்கு. நீங்க கோர்ட்டுக்கு போனீங்கன்னா என்னோட வாதம் செல்லுபடி ஆகாது. ஆனா குழந்தையோட உயிர் எனக்கு ரொம்ப முக்கியம். அதனாலதான் இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருக்கேன். நான் உங்களுக்கு யாரோ தான் என் மேல உங்களுக்கு நம்பிக்கை வருவது கஷ்டம் தான் எனக்கு அது புரியுது. ஆனா நான் பொய் சொல்லல உண்மையா தான் சொல்றேன்”, இம்முறை பொறுமையாகவே பேசினால் மாலினி.

“உன் மேல நம்பிக்கை இல்லனா இத்தனை மாசம் உன்கிட்ட குழந்தையை விட்டுட்டு இருந்திருக்க மாட்டேன். உன் கிட்ட குழந்தை இருக்குன்னு எனக்கு தெரிஞ்சு கிட்டத்தட்ட ஆறு மாசம் ஆகுது. ஆனா இப்ப பிரச்சனை அது இல்ல. எட்வர்ட் பத்தி எனக்கு நல்லா தெரியும். அவன் நல்லவன்றதனால தான் என் தங்கச்சியை நான் அவனுக்கு கட்டி கொடுத்தேன். அவங்க அப்பா ஆரம்பத்துல எதிர்த்தார் தான் அதுக்கப்புறம் ஒத்து கிட்டாரு. நீ சொல்றதுக்கு என்கிட்ட ஆதாரம் இல்ல. உடனே எல்லாத்தையும் ஸ்டெப் எடுத்து வைக்க முடியாது. தீர விசாரிச்சு தான் மத்த விஷயங்களை பண்ணனும். ஆனா அதுக்காக இப்படியே உன்னையும் குழந்தையும் தனியா விட்டுட்டு போக முடியாது. உங்க ரெண்டு பேரையும் பிரிக்க கூடாது என்ற ஒரே காரணத்துக்காக தான் இவ்வளவு நாள் மறஞ்சி இருந்து உங்களை கவனிச்சேன். அது தப்புதான். ஆனா நீ குழந்தை மேல வச்சிருக்க அன்ப பத்தி எனக்கு கிளியரா தெரியணும் அதனால. இப்ப நான் எட்வர்ட் கிட்ட குழந்தையை கொடுக்க போறதில்ல. அவனுக்கு திருமணம் ஆயிடுச்சு. என் கூட குழந்தைக்கு அம்மாவா வர சொல்லி தான் உன்னை கேட்கிறேன் “. அரவிந்த் பேசி முடித்து விட்டேன். என்பது போல் அவளை பார்த்தான்.

அவள் புரியாமல் மலங்க மலங்க விழித்தாள்.

“குழந்தையோட அம்மாவா என் கூடவே வந்துரு ? “, மீண்டும் அழுத்தமாக கூறினான்.

“சார், நீங்க என்ன பேசுறீங்கன்னு புரிஞ்சுதான் பேசுறீங்களா??”.“புரியாத பேசுற அளவுக்கு நான் உணர்ச்சி பச்சை குழந்தை கிடையாது. புரியாம முழிக்கிறதுக்கு நீயும் பச்சை குழந்தை கிடையாது.

“விளையாடுறீங்களா??, எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு “.

“டைவர்ஸும் ஆயிடுச்சு”, அவன் அசால்டாக கூறினான் .

அவள் அதிர்ந்து விழித்தாள்.

4 thoughts on “தேவதையாக வந்தவளே”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *