Skip to content
Home » நான் விரும்பும் என் முகம்

நான் விரும்பும் என் முகம்

முகமூடி அணிந்து
   பேசிடும் பழக்கமில்லை
அகம் நாடும் உள்ளுணர்வு
   சொல் கேட்டுடும் வழக்கதினால்
புன்னகையே எந்தன்
   விருப்பமான அணிகலன்
தன்னம்பிக்கை தைரியமும்
    எந்தன் சொத்து
இன்னலை இனிதே
     கையாள்வேன்
இசைக்கு மட்டுமே
     தலை அசைப்பேன்
பொய் பேசி பிரச்சனையை
     முடக்குவதை விட
மெய் பேசி பிரச்சனையை
       எதிர் கொள்வேன்
எல்லாம் நன்மைக்கே
    என்பதை ஏற்பேன்
நற்கவியில் வாசித்து
    என்னை லயித்திடுவேன்
கடலளவு கவிதையில்
  ஒரு சொட்டு கிணற்று நீர் நான்
ஆம் …
   எழுத்து உலகில் ஒரு
     துளி மையாக படைத்திடவே
நான் விரும்பும் என் முகம்.
            — பிரவீணா தங்கராஜ் .

Thank you for reading this post, don't forget to subscribe!

2018 ஏப்ரல் *நான் விரும்பும் என் முகம்* என்ற கவிதை தொகுப்பு புத்தகத்தில் இடம் பெற்றவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *