💟-7
தன்ஷிகா கைகளை பிசைந்தபடி கவியரசன் முன் வந்து நிற்க
“போலாம்” என்றவளின் முகத்தில் என்னவோ சோகமே இருக்க கண்டான்.
இந்நாள் வரை சிடுசிடு என்று இருந்தாலும் கூட தன்ஷி அவள் பாட்டிற்கு இருந்ததை உணர்ந்தவன் இவளின் மனம் எதையோ உளைச்சலில் தவிக்க கண்டவன் எப்படியும் இன்று இரவு சொல்லிட வேண்டும் என்ற நோக்கில் எண்ணி தான் அவளை கோவிலுக்கு அழைத்து வர வண்டியை எடுத்தான்.
கையில் கோவிலுக்கு தேவையான பூ,பழம், மாலை என்று சேலை அணிந்து அவந்திகாவை கண்டவன் பைக்கில் ஏறி கிளம்பி தன்ஷிகாவை பார்த்து ” ஏறு தன்ஷி” என்றான்.
தன்ஷிக்கு மனதில் கலக்கம் இருக்க
“காரிலே போகலாம்” என்றதும் பைக் ஆப் செய்தவன் அவந்திகாவை முறைத்து கொண்டு தான் கார் எடுத்தான். வேண்டுமென்றே கிளம்பி தங்களின் பைக் பயணத்தை தவிர்க்க வைத்துவிட்டாளே.
இதிலும் சிக்கலாக யார் முன் இருக்கையில் அமருவது என்ற குழப்பம் தன்ஷிகா பின் இருக்கையில் அமர்ந்து கொள்ள அவந்திகா முறுவலோடு முன் இருக்கையில் வர கவியரசனோ
‘இது தன்ஷிகாவிற்கான இடம் அவள் அமரலை என்றாலும் இந்த இடம் யாருக்கும் போகாது’ என்றவன் மனதில் கதவை திறக்க செய்யாது லாக் செய்திட வேறு வழியின்றி பின் கதவை திறந்து சோகமே உருவாக அமர்ந்து கொண்டாள்.
கொஞ்சம் நேரம் அமைதியில் கழிய அவந்திகா “என்னங்க போன் பண்ணியதும் எடுத்திருந்தால் இத்தனை சேதாரம் இல்லை… எப்படியும் இந்த வருஷம் கரும்பை சாகுபடி பண்ண முடியாதுலங்க ” என்றதும் தன்ஷி மனதில் எவ்வளவு நஷ்டமோ கடவுளே… ரோட்டின் பாதையில் கவனித்து கலக்கத்தை மறைத்தாள்.
“இப்போ ஆட்டிகுட்டி வேற நேந்துகிட்டது சாமி குத்தம் ஆகிடுமா?” அவந்திகா கேட்க கவியரசன் முறைப்பில் தான் பேச்சை நிறுத்தினாள்.
அப்பொழுது கூட தன்ஷி சேலையை பார்த்து “இந்த நிறம் சொல்லி இருந்தா நானும் இதையே கட்டிட்டு வந்து இருப்பேன்… மாமா இதே கலர் எனக்கும் எடுத்து கொடுத்து இருக்கு” என்று அவந்திகா பேச்சில் தன்ஷிகா நொந்தே போனாள்.
கடவுளே இது என்ன வாழ்க்கை யாரும் பங்கு போடாத உறவில் சொந்தம் கொண்டாட நான் வந்து மாட்டிக்கிட்டேன். எனக்கு இது குமட்டலை தருது. இந்த அக்காவுக்கு அப்படி எதுவும் இல்லையா? இல்லை எங்கையாவது கண்காணதா இடம் தேடி ஒடிறது பெஸ்ட்… அப்படி போயிட்டா பிரச்சினை சரியாகிடுமா? அக்கா மாமா குழந்தை…..? அய்யோ திரும்ப திரும்ப இதே இடம் வந்து நிற்கறேன். அவங்களுக்கு குழந்தை இல்லைனா அதுக்கு நான் தான் கிடைச்சேனா… இல்லை மாமா குழந்தைக்காக கட்டிக்கலை சொல்லுச்சு… வேற என்ன? நிம்மதியே இல்லை எங்க போனா நிம்மதி கிடைக்குமோ….’ மனதில் புலம்பினாள்.
அதற்குள் “தன்ஷி கோவில் வந்துடுச்சு மா இறங்கு” என்ற கவி குரலில் “அக்கா?” என்று கேட்டாள்.
“அவ இறங்கி போயிட்டா…” ‘என்றோ’ என்பதை மட்டும் மனதுக்குள் சொல்ல தன்ஷி தடுமாறி இறங்கி வந்தவள்.
கோவிலுக்கு சேர்ந்து வந்திட இதுவரை கவியரசன் அவந்திகா சேர்ந்து வந்ததே இல்லை அப்படி இருக்க இன்று கவியரசன்- தன்ஷிகா சேர்ந்த நடை அவந்திகாவிற்கே எரிச்சலை கிளம்பியது.
பற்றாத குறை பூக்கார கிழவி பூவை தொடுக்க கவியரசன் அதை வாங்கி தன்ஷிகாவிற்கு சூட அவந்திகா கையில் இருந்த மலர் கசக்கி தான் போனது.
கவியரசன் அர்ச்சனை தட்டு வாங்கி தன்ஷிகா கையில் கொடுத்து மாலை வாங்கி அவன் கையில் எடுத்து வர அவந்திகா மேலும் மேலும் கடுப்பானதே மிச்சம்.
“நீயும் அர்ச்சனை வாங்கிட்டியா” என்ற அவந்திகா பேச்சில் கவியரசன் இடை புகுந்தான்.
“நீ விளக்கு ஏற்ற தானே வந்த போ” என்று விரட்ட அவந்திகா கடுக்கடுத்து சென்றாள்.
“இப்ப எதுக்கு அக்காவை திட்டறீங்க.. தப்போ சரியோ எனக்கு கஷ்டமா இருக்கு” என்று கூறினாள்.
“சரி இனி திட்டலை வா” என்று அர்ச்சனை செய்து தன்ஷிகா-கவியரசன் பெயரில் முடித்து ஆற அமர உட்கார்ந்தனர்.
அங்கே சற்று தள்ளி ஒரு குறி சொல்லும் ஜோதிட பெண் வந்து சேர சிலர் அந்த ஜோதிடம் கேட்டனர்.
தன்ஷிகா அதையே பார்க்க அந்நேரம் கவியரசன் போன் வர எழுந்து சென்றான்.
அக்காவுக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா கேட்போமா… ஆனா இதில் ஏமாற்றம் தந்தா… எத்தனையோ டாக்டர் பார்க்காமலா இருட்பா? என்ற எண்ணத்தில் மிதந்தாள்.
“தன்ஷி வா நாமளும் கேட்போம்” என்று அவந்திகா இழுத்தாள்.
“அக்கா எனக்கு இது எல்லாம் நம்பிக்கை இல்லை உனக்கு தெரியாத தா… விடு..” என்று அவசரமாக எழ தன்ஷி பிடிக்கவில்லை என்றதும் ‘அப்ப நிச்சயம் கேட்கனுமே’ என்று பிடிவாதமாக அழைத்து சென்றாள்.
“உட்காரு தன்ஷி” என்று அவந்திகா அமர வைக்க தன்ஷிகாவோ “முதலில் நீ உட்காரு” என்று அமர வைத்தாள்.
“அம்மா எங்க மாமா…” அய்யோ தலையிலடித்து கொண்டாள்
“எங்க அக்காவுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருக்கா? எப்போனு சொல்ல முடியுமா?” என்று கேட்க கண் மூடி அவந்திகாவை உற்று உற்று பார்த்த அப்பெண்மணி
“செல்வம் உள்ளதம்மா…” என்றதும் தன்ஷி மகிழ அவந்திகா குழம்பி போனாள்.
“எப்போ ஏது சொல்லுங்க” என்றவாறு தன்ஷி அவசரப்படுத்தினாள்.
“நான் இவளை கேட்கிறேன் அவளே சொல்லட்டும்” என்றதும் தன்ஷி ‘ரொம்ப தான் பண்றீங்க இந்த ஊரில்..’. என்றவள் அமைதியானாள்.
“உன் கணவருக்கு உடலில் அம்சமாக மச்சம் இருக்கா….?” என்றதும் தன்ஷி ‘ஆமா நெஞ்சில் இதயம் பக்கத்தில் அடிக்கடி என்னவோ சட்டை கழட்டி’ என்று மனதில் சொல்லியபடி அக்காவை பார்க்க அவளோ பதில் சொல்ல தயங்கி விழித்தாள்.
அவனுக்கு மச்சம் இருக்கா எனக்கு என்ன தெரியும் அவன் தான் பக்கத்தில் போனாளே தள்ளி தள்ளி ஓடுவானே என்றே எண்ணியவள்
“இல்லை அப்படி எல்லாம் எந்த மச்சமும் இல்லை” என்று அவந்திகா சொல்ல தன்ஷியோ கவியரசனை காண கவியரசன் தன்ஷிகா தான் பார்த்து இருந்தான்.
கவியரசன் தன்ஷிகா அவந்திகா இருவரும் ஒருசேர அமர கண்டதும் பார்த்து ஓடி வந்தவன் அவந்திகாவுக்கு பிள்ளை பேறு இருக்கு என்றதும் அப்படியே உறைந்து பேசுவதை கேட்க செய்தான்.
அவர் தன்னை பற்றி கேட்க அவந்திகா விழிப்பது கண்டு தன்ஷிகா தன்னை காண தன்ஷிகா எப்படியும் இப்போ புரிந்து இருக்கும் என்று எண்ணி இருந்தான்.
“இருக்கு இவருக்கு இதயம் பக்கத்தில் மச்சம் இருக்கு… அக்கா.. குழந்தை பேறு இருக்கு என்றதில் குழப்பத்தில் இருக்கா…” என்று தன்ஷிகாவே எடுத்து கொடுத்தாள்.
“ஆமா ஆமா இருக்கு… ஏதோ ஒரு எண்ணம் அதுல… கவனம் சிதறிடுச்சு” என்ற படி அவந்திகா சமாளித்தாள்.
“நீ யாரு மா? ” என்றதும் அவந்திகா தங்கையே தன் தாலி பங்கு போட வந்த கதை சொல்ல… இருவர் முகம் கண்டவர் அவந்திகாவை எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட சொல்லி செய்ய சொல்ல அவள் சென்றதும்
“உன் மனதில் இருப்பதை கேளு மகளே” என்றார்.
” என்னை எதுக்கு கடவுள் இரண்டாவது தாரமாக அதுவும் என் அக்கா வாழ்க்கை நுழைச்சார்… ப்ளீஸ் நான் ஏதும் கேட்க விரும்பலை என்ன விடுங்க…” என்றவள் கேவினாள்.
“தாரமாய் உன்னவன் இரண்டாவது இடத்தில் அழைத்து வந்தாலும் ஜானகிராமன் அம்மா அவன்” என்றதும் குங்குமம் பூ கொடுக்க சிலையாக பெற்றாள்.
இதுவரை கோவில் பூஜை என்பதில் விருப்பமின்றி இருந்த கவியரசன் அப்பெண்மணி காலில் விழ போனான்.
“கடவுள் சந்நிதியில் அவனை தவிர்த்து சக மனிதன் காலில் விழ கூடாது” என்றபடி அங்கிருந்து செல்ல தன்ஷிகா கவியரசன் அவரையே பார்த்து நிற்க தன்ஷிகா தான்
“நாம வீட்டுக்கு போகலாம்” என்று கிளம்ப அவந்திகா வர இம்முறை தன்ஷிகா அவளை அறியாது முன்னிருக்கையில் அமர கவியரசன் மனம் நிம்மதி கொண்டது.
அவந்திகா தான் இவ என்ன முன்னாடி உட்கார்ந்து ஜன்னலை பார்த்து வர்றா…. இவருக்கு நெஞ்சில் மச்சம் இருக்கு இவ தெரிந்து வச்சிருக்கா நமக்கு தெரியலை என்று கேள்வி கேட்பாளா? அப்படி கேட்டா அவ சொன்ன மாதிரி குழந்தை பேறு இருக்கு என்றதில் குழம்பி போயிட்டோம் சொல்லி அதையே சாமாளிப்போம்.
கவியரசன் இன்றே எல்லாம் சொல்ல எண்ணியவனுக்கு தன்ஷிகா யோசனை செய்ய ‘அவளே கேட்டா சொல்லிடலாம் இல்லை அவளே கண்டுபிடிப்பா என் ஷிகா புத்திசாலி’ மனதில் சொல்ல புன்னகை வந்தன.
வீட்டுக்கு வந்ததும் குறுக்கும் நெடுக்கும் நடக்க கவியரசன் கதவை அடைத்து அங்கிருக்கும் நாற்காலியில் சாய்ந்து அவளையே இமைக்காமல் பார்த்தான்.
அதுவும் மேல் சட்டையின்றி அவளாக இதை பார்த்து தன்னிடம் கோவிலில் குறி சொன்னதை பற்றி கேட்பாள் என்று அமர்ந்து இருக்க தன்ஷிகா நடந்து நடந்து திரும்பியவள் மேல் சட்டையின்றி இருந்தவனை கண்டு
“எதுக்கு சட்டை கழற்றி இருக்க” என்றாள்.
“ஒன்னுமில்லையே காற்று வரலை அதான்” என்றான்.
“இந்த கிராமத்தில் காற்று வரலை சொன்ன முதல் ஆள் நீ தான்.. ” என்றவள் மனதிலோ ‘இரண்டு கல்யாணம் பண்ணி ஜானகிராமனாம் இவன்… இவனே காசு கொடுத்து பேச சொல்லி இருப்பானோ?’ கவியரசனை ஒர கண்ணால் பார்க்க அவனோ இவளையே பார்ப்பதை கண்டாள்.
“லெமன் ரைஸ் இங்க என்ன பொங்கல் புளியோதரையா தர்றாங்க என்னையே பார்க்கற போ.. வேற வேலை பாரு… கரும்பு தோட்டம் எரிஞ்சு இருக்கு… எதையாச்சும் யோசிச்சியா…” என அதட்டினாள்.
“ஆறு மாத அறுவடை பண்ண யோசித்து இருக்கேன். நாளைக்கே டிராக்டர் ல உழுது வேலையை ஆரம்பிக்கனும்…. கருகி போன இடம் எல்லாம் அதிகமா உரம் போடனும் பக்கத்து ஊரில் எரு கேட்டு வைச்சிருக்கேன் பயிர் தான் என்ன போட யோசிக்கறேன்” என்று பதில் தந்தான்.
“இப்படியே பார்த்தா எனக்கு ஒரு மாதிரி இருக்கு கதவை திற” என்றாள். அவன் மேல்சட்டை இன்றி அமரவும் சங்கோஜமாக இருந்தாள்.
“பால்கனி திறந்து இருக்கு…” என்றான்.
“நான் கதவை சொன்னேன்”
என்றவளின் சிணுங்கலில் மேல் சட்டை அணிந்து கதவை திறந்து வைத்தான்.
தன்ஷி அப்பொழுது தான் இவன் இந்த அறையில் இருந்து சட்டை அணிந்து இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள்.
வீட்டில் அவந்திகா கவியரசன் திருமண புகைப்படம் இல்லை என்பதையும்… தன்னோடு அவன் கோவிலில் எடுத்த புகைப்படம் கூட தன் அறையில் மாட்டி இருக்க 5 வருட வாழ்வில் அவந்திகா கவியரசன் புகைப்படம் அவள் இங்கு வரும் பொழுது கண்டதில்லை.
ஏன் தன் வீட்டில் கூட அவந்தி கருகலைந்த பின்னர் அவள் புகைப்படம் எல்லாம் ஹாலில் கூட கண்டதில்லை அம்மாவிடம் கேட்பதற்கு அவ புகுந்த வீட்டில் எடுத்து கொண்டு போனா என்றார்கள். இங்கோ இருப்பது போல சுவடு கூட இல்லை… என்றவளின் யோசனை போக அரை மணி நேரம் போனது.
திலகவதியிடம் காபி கேட்க வெளியே வர அங்கே கவியரசன் அவந்திகா அறையில் இருந்து மேல் சட்டை பட்டனை அணிந்தபடி கலைந்த தலையை சரி செய்தவாறு வேகமாக கிளம்பி பைக் எடுத்து சென்றான்.
அவந்திகா அறைக்கு போகலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் தவிக்கும் நெஞ்சில் அவந்திகா கலைந்த கேசமும் நலுங்கிய உடையுமாக சரி செய்தபடி வந்தாள்.
நேத்து வந்தவளுக்கு கூட இதயப்பகுதியில் மச்சம் இருப்பது தெரிய அவந்திகா கவியரசனிடம் மச்சம் இருக்கும் பகுதியைதேடி செய்த அலப்பறையில் அவளை அடித்து சிகையை பிடித்து இழுத்து தள்ளி விட்டான். அதனை அவந்திகா தனக்கு சாதகமாய் மாற்றி தன்ஷி மனதில் இடியை இறக்கினாள்.
“நேரம் காலம் இல்லை இந்த அரசுக்கு.. பாரு சேலை கசங்கிடுச்சு.. ஜோதிடத்துலா குழந்தை இருக்குனு சொன்னதுக்கு இப்படி அலப்பறை” என்று தன்ஷிகா கண்டு பேச்சை தொடர்ந்தாள்.
தன்ஷிகா திலகவதியிடம், “அக்கா காபி எடுத்து வர்றீங்களா தலைவலிக்கு” சொல்லி செல்ல
‘நல்லா வலிக்கட்டும் உன்னை நிம்மதியாக விட மாட்டேன்’ என்றவள் முகம் ரௌவுத்திரம் பொங்கியது.
😱👌👌👌👌👌💕💕💕