நீயின்றி வாழ்வேது-18
விருஷாலி வீட்டில் அவள் தாய் தந்தை, மற்றும் விவேக் மூவரும் அன்னபூரணி வீட்டிற்கு ஒரு மணி நேரம் முன் சென்றிருந்தார்கள்.
செம்பருத்தி பாட்டி மட்டும் விருஷாலி தோழி வனஜா வீட்டில் பேத்தியை அலங்கரிக்க நின்றார்கள்.
வனஜா தான் விருஷாலி டவுனில் வாங்கிய ‘மேக்கப் கிட்’டை வைத்து அவளை அலங்கரித்து முடித்தாள்.
“இன்னும் எவ்ளோ நேரம்டி மணி எட்டு முப்பதுக்குப் போகணும்” என்று செம்பருத்தி இந்த அலங்காரத்திற்கே அதிருப்தி காட்டினார்கள்.
வனஜாவோ கிசுகிசுப்பாய் “விருஷா… நைட்டு நடக்கிற கதையை நாளைக்குச் சொல்வியா மாட்டியா?” என்று கேட்டாள். தலையை இடம் வலமாக ஆட்டி சொல்லமாட்டேன் என்றாள்.
“நம்ம கூடப் பத்தாவது படிச்ச அனிதாலாம் சொன்னாளே.” என்று கேட்க, அவ கூறுயில்லாம சொல்லுவா. நான் எதுக்குச் சொல்லணும்.” என்று சிரிக்க, வனஜாவோ “அடிப்பாவி… போ…போ… என்னிடம் சொல்லாம போறியானு பார்க்கறேன்” என்று கன்னம் பிடித்துக் கிள்ளி “அழகுல அசத்துற டி.” என்றாள்.
“ஸ்ஆ… வலிக்குது எருமை” என்று விருஷாலி அவள் கிள்ளிய கன்னத்தைத் தேய்த்தாள்.
“ஆங்ஆங்.. அந்த அண்ணா கிள்ளினாலும் இப்படித் தான் துடைச்சிப்பியா.” என்று கூற இதுவரை போட்ட மேக்கப்பை விடத் தானாகக் கன்னம் சிவந்திருந்தது.
“இன்னும் என்ன?” என்ற செம்பருத்தி அதட்டலில் விருஷாலி எழுந்தாள்.
வனஜா விருஷாலி வீட்டிற்கு அழைத்துச் செல்ல இருந்தவளை, செம்பருத்தி அம்மாச்சி தடுத்து, வனஜாவின் அன்னை காயத்ரியை கூட்டி செல்ல கூறினாள்.
வனஜா படிக்கும் பிள்ளை என்பதால் செம்பருத்தி அவளையும் தடுத்திருந்தார்.
விருஷாலியிடம் பாலை கொடுக்க அவள் தடுமாறவும், வனஜாவின் தாய் “நீ இரு வீடு வரை நானே கொண்டு வர்றேன். அங்க வந்து வாங்கிக்கோ” என்று கூறினார். எதிரெதிர் வீடு என்பதால் சரியென்றாள்.
செம்பருத்தி பாட்டி இன்று வனஜா வீட்டில் தான் உறங்க போகின்றார் என்பதால் தங்கள் வீட்டில் விஷாகன் மட்டும் இருப்பதை அறிவாள்.
செம்பருத்தி சுருக்கு பையிலிருந்து விபூதியை எடுத்து பேத்தியின் நெற்றியில் வைத்து குலசாமியை மானசீகமாக வேண்டினார்.
வனஜாவின் தாய் காயத்ரி விருஷாலியை அழைத்துச் சென்றார்.
பெரும்பாலும் ரோடு வெறிச்சென்றிருந்தது. தூரத்தில் நாய்களும், ஆங்காங்கே திண்ணையில் மனிததலைகளும் உறங்கிட தோதுவாய் படுத்திருந்தனர். எதிர் வீடு என்பதால் விரசாக நடந்து வந்தார்கள்.
விருஷாலி வீட்டை சுற்றி மரவேலி வைத்திருக்க. சுற்றி இடம் தோட்டம் இருக்கும். ஒரு விழாவே நடத்தும் அளவிற்கு இருந்தாலும் வீடு என்னவோ அளவாய் ஒரு அறை மற்றும் தடுப்பு கிச்சன் மட்டும் தான். பாத்ரூம் வெளியே தான் கட்டியிருந்தார்கள்.
ஊரில் எல்லாம் வீட்டுக்குள் பாத்ரூம் வைக்கும் வழக்கம் இல்லை.
வளர்ந்த டவுன்களில் எல்லாம் ஹாலும் பாத்ரூமும் பக்கத்தில் இருக்கும். அப்படியில்லையென்றால் மாஸ்டர் பெட்ரூம் என்று உறங்குமிடத்திலே கழிவறையும் சேர்த்தே கட்டி வைப்பார்கள்.
மெதுவாய் நடந்து வாசல் வரை வந்த விருஷாலியிடம் வனஜா தாய் காயத்ரி பாலை கொடுத்துவிட்டு “இதப்பாரும்மா… ஆம்பளை கைப்பட்டா தப்புனு, அவன் கண்முன்ன நின்னா தப்புனு முன்ன சொல்லிக் கொடுத்திருப்போம்.
தாலியேறிட்டா அவன் என்ன செய்தாலும் சிறுப்பிள்ளை தனமா கத்தி தொலைக்காதே. உங்க ஆத்தா வேற இங்க இல்லை. அப்படியிப்படி இருப்பாரு. அனுசரித்துப் போ என்ன புரிதா.” என்றதும் சரியென்ற கேட்டுக் கொண்டாள்.
தன் தோழி அனிதா கூறாத கதையா?
இந்தச் சமூகம் கட்டிக்கப் போகும் ஆணாகவே இருந்தாலும் பேசாதே வைக்காதே என்று கட்டளையிட்டு வளர்த்து பெரிய கோட்டுக்குள் அடைத்து விடுவார்கள்.
சட்டென மஞ்சள் கயிற்றை அணிவித்து உன் கணவன் என்று கூறி அவனோடு உடலறுவு கொள்ளத் தயங்காதே என்று அறிவுரை வேறு.
எப்படி மகள் பழகாத, பேசாத, ஒருவனோடு உடலால் இணைவாளெனத் துளியும் யோசிக்க மாட்டார்கள். தற்போது ‘கடவுளும் சாத்தானும்’ கலந்த படைப்பான ‘கைப்பேசி’ என்றவொன்று இல்லாவிட்டில் பெண்கள் தயக்கம் அப்படியே இருந்திருக்குமோ என்னவோ.
இங்கு விருஷாலியை வேறு பேசக்கூடாதென்று செம்பருத்தி தடுத்துவிட்டு இன்று பேரனோடு இணக்கமாக நடக்கக் காயத்ரி மூலமாகத் துபாம் வேறு போடுகின்றார்கள். என்ன உலகமோ?
சமூகத்தில் ஆண்களுக்கு மட்டும் அதிகச் சலுகை இருப்பதைக் கண்டு சலித்துக் கொண்டாள். இருப்பினும் விஷாகனிடம் அவளுக்குத் தயக்கம் உண்டா, இல்லையா என்பது இந்த இரவில், இருள் அறியாமல் விடியலை ஒளிப்பரப்புமா?!
கதவை திறந்து உள்ளே வரும் நேரம் விஷாகன் புதிதாய் இருந்த கட்டில், ஜன்னலை மறைத்த ஸ்கீரின் துணிகள், என்று பார்வையிட்டான்.
திருமணம் நிச்சயம் செய்த கையோடு வீட்டிற்கென்று சில முக்கியமானதை வாங்கி விவேக் நிறைத்திருந்தான்.
மனதில் விவேக்கின் முதிர்வையும் புரிதலையும் மெச்சிக்கொண்டான்.
அபர்ணாவை அங்கே தந்தையோடு விடுத்து ஏதேனும் பிரச்சனை எழுமோயென இங்கே சாந்தி முகூர்த்தத்தைத் தவிர்த்து அங்கே நடத்த அறிவுறுத்தினான்.
அன்னபூரணியோ இங்க நாளைக்குக் கறிவிருந்து செய்யணும்யா, அதுவுமில்லாம சுகிர்தன் இருக்கான் கடைப்பையன் இருக்கான்.” என்று வயசு பையன்கள் இருக்குமிடமென மறுத்தார்கள்.
அந்த நேரம் விவேக் வந்து “மச்சான் அபர்ணாவை யோசிக்காதிங்க. நான் இங்க தானே தங்க போறேன். எதுனாலும் உங்கயிடத்துல இருந்து நான் பார்த்துக்கறேன்” என்று விஷாகனின் எண்ணம் புரிந்து பேசவும் விவேக்கையும் விருஷாலி அளவிற்குப் பிடிக்க ஆரம்பித்தது.
இந்த நேரத்தில் மச்சானை எதற்கு நினைக்கின்றாய். மங்கையை நினைத்து பார்’ என்று மனசாட்சி கேலி செய்யவும் மனம் கவர்ந்தவளின் பக்கம் வந்து நின்றான்.
கதவை சாற்றியவள் ஒரு மாதிரி பதட்டம் தொற்றி நிற்க, “ஷாலி” என்று கூப்பிட, நிமிராமல் “ம்ம்” என்றாள்.
“விருஷாலிக்கு ஏன் இப்படி மெத்தையை அலங்கரிச்சிருக்காங்கனு தெரியுமா?” என்று கேட்டான்.
“ம்ம்” என்றாள்.
“தெரியுமா… தெரியாது மச்சான்னு சொல்வனு பார்த்தேன். சரி நீ சொல்லு எதுக்கு இந்த அலங்காரம்?” என்று வம்பு செய்யவும், அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு, சொல்ல மாட்டேனென மறுத்தாள்.
ஒர் கையில் பாலை வாங்கி, மறுகையால் அவளின் வலது கரத்தை பிடித்து, மெத்தைக்கு அழைத்து வந்தான்.
“நின்னுட்டே பேச கால் வலிக்குது ஷாலிம்மா” என்றவன் “இப்ப சொல்லு?” என்று தாடையை நிமிர்த்தினான்.
அவன் கண்ணில் குறும்பும் ஆசையும் கலந்து இயல்பாய் பேச்சு தொடுத்திட, அவளும் தயக்கம் தளர்த்தி நாணத்தோடு “என் பிரெண்ட் அனிதா பத்தாவது படிப்போட நிறுத்திட்டாங்க. அவளுக்கு மூன்று வருஷம் முன்ன கல்யாணம் ஆச்சு. அவ… அவ.. அவளுக்கு இப்ப ஒன்றரை வயசுல பையன் இருக்கான்.
இப்ப மறுபடியும் கன்சீவா இருக்கா. நான் வனஜா, அப்பறம் கணபதி தெருவுல இருக்கற தாமரைனு இன்னொரு பிரெண்ட்.. மூனு பேரும் அனிதாவுக்குக் கல்யாணமாகி ஊர்த்திருவிழாவுக்கு வந்தப்ப, எங்களைச் சந்திச்சு பேசவும் இதெல்லாம் கேட்டோம்.” என்று கூறினாள்.
விஷாகன் பளீரிட்ட புன்னகை சிந்தியவன், “பரவாயில்லையே… வேற என்ன கிசுகிசுனு சொல்லிவிட்டாங்க.” என்றான்.
விருஷாலி அவனை வினோதமாகப் பார்க்க, “டைம் பாஸ் ஆகணுமே ஷாலி.
நீ விவரமா பேசினாலும் கை நடுங்குது பாரு. என்ன நெர்வஸா இருக்கா. எனக்கும் தான்… உன்னைப் பார்க்கணும் பேசணும்னு கனவுல நிறைய முறை ஒத்திகை பார்த்து, பைத்தியம் மாதிரி மனசுல பேசி குடும்பம் நடத்தியிருக்கேன்.
எனக்கே நெர்வஸா இருக்கறப்ப உனக்கும் டைம் தரணும்ல.” என்றான் அவளின் மனநிலைக்கு மதிப்பு கொடுத்தவனாய்.
“என்ன பேசறது மச்சான். உங்களிடம் பொண்ணு பார்க்க வந்தப்ப ஏதோ நாலு வார்த்தை பேசிட்டேன், மிச்ச நாள் முழுக்க அம்மாச்சி என்னை உரல்ல இடிக்கிற மாதிரி இடிச்சிட்டே இருந்தது.
இன்னிக்கு காலையில இருந்து அதிகமாவே உங்களிடம் பேசிட்டேன். என்னை ஒன்னும் சொல்லாம பார்த்து பக்குவமா இருடினு விபூதி வைச்சி விட்டிருக்கு பால் வேற கொடுத்து விட்டுச்சு.” என்று நொடித்துக் கொண்டு பாலை தேட, ஸ்வீட், பழம், மிக்சர் இருக்குமிடம் பாலை சேர்த்திருந்தான்.
“பால் குடிக்கப் போறியா. எடுத்து தரவா” என்று அவன் பக்கமிருந்தவையை எடுத்து தர, மறுக்கப் பார்த்து, விஷாகன் என்ன நினைப்பானோ என மௌவுனமாய் “நீங்க குடிச்சிட்டு ஷேர் பண்ணிக்கச் சொன்னாங்க” என்று கிணற்றுக்குள் இருந்து பேசுவது போலப் பேசினாள்.
விஷாகனும் பாதிக் காலி செய்து நீட்ட, வேண்டாவெறுப்பாய் முகம் சுழித்துப் பருகினாள்.
குடித்து முடிக்கும் போது “உவ்.. உவ்” என்று இருமுறை வாந்தி வருவது போலத் தவித்தாள்.
“சாரி… நீ முதல்ல டேஸ்ட் பண்ணிட்டுத் தந்திருக்கலாம். சிலருக்கு எச்சி பிடிக்காது.” என்று கூறுவும் “அச்சச்சோ அப்படியில்லை மச்சான்” என்று மறுத்தாள்.
“ஐ நோ… என்னதான் இருந்தாலும் நாம பேசலை பழகலை, சட்டுனு கல்யாணம் பேசி முடிச்சி பஸ்ட் நைட் ரூம்ல தள்ளவும் கஷ்டம் தான்.” என்று லேசாய் வாடிப்போனான்.
அவனைப் போலவே கல்யாண கனவுகள், பெற்றோர் பார்த்த திருமணம் என்றாலும் அவளும் தன்னை நேசித்ததாகக் கணித்தான்.
காதல் என்றால் பெற்றவர் பார்த்து வைப்பதில் சேராதா என்ன?
ஒர் இதயம் இன்னொரு இதயத்திற்காகத் துடிக்க ஆரம்பித்தாலே காதல் தானே.
விருஷாலி இதயத்தில் தான் இன்னமும் வேரூன்றவில்லையோ என்ற கவலை ஆழ்த்தியது.
விருஷாலியோ நெஞ்சை பிடித்து மீண்டும் வாந்தி வரும் உணர்வில் எழுந்து விட்டு, கிச்சனில் தண்ணி பிடிக்க இருந்த குழாய் அருகே வாந்தியை எடுத்தாள்
விஷாகனுக்கு அதைக் கண்டு கவலையேச் சூழ்ந்தது. அவனாகத் தண்ணீரை நீட்டி, பருக தந்தான். அவன் முகமே வேதனை சுமந்ததைப் பறைசாற்றியது.
“எ…எனக்குப் பாக்கெட் பால் ஒத்துக்காது. எப்பவும் பசும்பால் தான் மச்சான். இன்னிக்கு காலையிலேயே பசும்பால் காலி. சாயந்திரம் கன்னுக்குட்டி பாலை மொத்தமா குடிச்சிடுச்சு. யாரிடமாவது சொல்லி வைக்கலாம்னா சுகன்யா அத்தை தான் என் பையன் பாக்கெட் பால் குடிப்பான் அதே வாங்கி வச்சிடுச்சுங்க மதினினு அம்மாவிடம் சொன்னாங்க. அம்மாவும் பால் பாக்கெட் வாங்கிக் காய்ச்சி வச்சி தர சொல்லிட்டு போனாங்க. எனக்குப் பாக்கெட் பால் சுத்தமா ஒத்துக்காது மச்சான்.
மத்தபடி நீங்க கவலைப்படற மாதிரி, நீங்க குடிச்சிட்டு தந்ததால வாந்தி எடுக்கலை” என்று கையைப் பிசைந்து முடித்தாள்.
அவள் வாயை சேலையால் துடைத்து, தண்ணீர் அருந்தினாள்.
“ஓ… இதானா.. முதல்லயே சொல்லி அவாய்ட் பண்ணிருக்கலாமே. வேற ஏதாவது சாப்பிட்டுயிருக்கலாம். இங்க பாரு விவேக் சின்னப் பெட்டி கடையை வச்சியிருக்கான்.” என்று ஆப்பிள் மற்றும் லட்டை உருட்டினான்.
விருஷாலி வெட்கப்பட்டுச் சிரித்திட, ஆப்பிளை கிச்சன் கத்தியால் வெட்டி அவளுக்கு நீட்டினான்.
இரண்டு துண்டு எடுத்து சாப்பிட்டவள், விஷாகனை ஏறிட, அவனோ ஆப்பிளை விழுங்கும் மனைவியைத் தான் விழுங்கினான்.
வெளிச்சத்தை அணைத்து விட்டு மினிலைட் ஒன்றை எறியவிடவும் விருஷாலி அதிர்ந்தவளாய் நிமிர்ந்து அருகேயிருந்தவனைத் தேட, “பெரிய லைட் இருந்தா இங்க நாம இன்னமும் பேசிட்டு இருக்கோம்னு வெளியே தெரியும் ஷாலி.
உனக்கு வேறயெதுவும் பேசணும்னா சொல்லு பேசலாம். இல்லை….. நம்ம இதழ்கள் இரண்டும் பேசறப்ப மத்த பேச்சு வேறெதுவும் வேண்டாம்னாலும் எனக்கு ஓகே” என்றவன் கன்னம் ஏந்தி முத்தகவிதை பேசவா என்று அனுமதி கேட்டான்.
உதடு தந்தியடிக்க, “எதுனாலும் சம்மதம் விஷாகா அத்தான்” என்றாள்.
இந்தப் பதிலுக்குத் தான் காத்திருந்தவன் போல மலரிதழை மென்மையாய்க் கொய்யத் துவங்கி, மெத்தையில் யுத்தம் நடத்திடும் வேங்கையாக மாறினான்.
ஏற்கனவே தோழிகளின் கதைகளில் கொஞ்சம் கொஞ்சம் அறிந்து வைத்த கேள்வி ஞானம் எல்லாம் அடியோடு மறைந்து அனுபவ கல்வியை விஷாகனிடம் கற்றுக்கொண்டிருந்தாள்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

Wow super shali. Vishakan good move. Intresting
Super sis nice epi 👍👌😍
👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕👌👌👌💕💕💕💕💕waiting for nxt epi😍😍😍😍
Super😍 o
Kandipa intha kalathula ithu set agathu taknu parthu kalyanam pesi vacha eppadi udane ethukittu ellam nadakuma antha kalathulaum thayakam irunthu irukum kamika matanga ipo la ponnunga soliduvanga pesi palagi apram vara kadhal kamam thane alagu
Superb epi interesting
Fantastic 😍😍😍😍😍
Shali.oda ennam niyam than.aana atha keta innum.rendu ooru alavuku advice ah kudupaha la yae thavira vera onnum kedaiyaathu
Very nice
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நீயின்றி வாழ்வேது…!
(அத்தியாயம் – 18)
எப்படியோ மச்சானோட தயவுல அபர்ணா விஷயத்தை கொஞ்சமாச்சும் சமாளிச்சிட்டான். இனி என்ன ஆகுமோ தெரியலை.
உண்மை தானே..! பொண்ணுங்களோட நிலைமையே ரொம்ப குஷ்டம் தான்ப்பா. கல்யாணத்துக்கு துன்ன வரைக்கும், ஆம்பிளைங்களை பார்க்காதே, பேசாதே, அவங்க முன்னாடி நிக்காதேன்னு ஆயிரத்தெட்டு கண்டீசன்கள். அதே கல்யாணமாயிட்டப் பிறகு, புருசன் என்ன சொல்றானோ அதை கேளு, புருசனுக்கு ஏத்த மாதிரி அனுசரிச்சிட்டுப் போ, அவன் ஆசைக்கு உடன்படுன்னு, இப்படி முன்னே பின்னே பார்த்து பழகாதவன் கிட்டேயே இத்தனை அனுசரனைகள். நமக்குன்னு எந்த ஆசையோ, கனவோ, நேசமோ எதையும் காட்டக் கூடாது. இதுவே ஒரு முரண்பாடுத் தான்.
இதுல… சில ஆம்பிளைங்க எடுத்தவுடனே பொண்டாட்டி கிட்ட அம்மாவை தேடுவாங்க. தேடட்டும் நிச்சயமா கிடைப்பாங்க. கிடைக்க கொஞ்சம் நாளாகும். ஆனா, அதே அம்மா கிட்ட எவனாவது பொண்டாட்டியை தேட முடியுமா ? முடியாது தானே..?
அந்த முட்டாள்களுக்குத் தெரியாத விஷயம் என்னன்னா… பொண்டாட்டி வேணுமின்னா, பொண்டாட்டியாவும் இருப்பா, சிலநேரத்துல அம்மாவாவும் மாறுவா. ஆனா, எந்த அம்மாவாலயும் பொண்டாட்டியா இருக்கத்தான் முடியுமா…? இல்லை, பொண்டாட்டியா மாறத்தான் முடியுமா. ? அதை இவனுங்க நினைச்சே பார்க்க மாட்டாங்க.
அம்மாவால ஒரு ரோல் மட்டும் தான் பண்ண முடியும்.
ஆனா, ஒரு மனைவியால….
அம்மா, பொண்டாட்டிங்கற டபுள் ரோலை செமையாவே பண்ண முடியும். அவங்களால அம்மா மாதிரி அன்பாவும், அனுசரனையாவும் பார்த்துக்க முடியும். அதே நேரத்துல காதலாவும், நேசத்தோடும் அணைச்சுக்க முடியும்.
அது தான் பொண்டாட்டியோடட ப்ளஸ் பாயிண்ட்டே ஆகும். இனிமேலாச்சும் புரிஞ்சுக்கிட்டா சரி.
😀😀😀
CRVS (or) CRVS 2797
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌