நீயின்றி வாழ்வேது-28
விருஷாலிக்கு அன்னை பேசியதும், சின்ன மாமா செல்வகுமார் பேசியதும் கேட்டு இந்நேரம் விஷாகன் மீது சந்தேகம் எழுந்திருக்க வேண்டும்.
நிச்சயம் ஆன அன்றும், அதன் பின், விவேக் எண்ணில் விஷாகன் அழைத்துத் தன்னைப் பற்றி விசாரித்துக் கேட்டுப் பேசுவான் என்பது மட்டும் அறிவாள்.
திருமணம் ஆனப்பொழுது தன்னை அன்போடு கவனித்துக் கொண்டான். காதலும் காமமும் இரண்டையும் வாறி வழங்கினான். அதைத் தவிரக் குணத்தின் இயல்பு ஒரளவு அவனின் கனிவான பேச்சிலும் செயலிலும் கண்டிருக்கின்றாள். இந்தக் குறுகிய காலக்கட்டத்தில் அவள் அறிந்தது குறைவு தான்.
விஷாகனை பற்றி என்ன முடிவெடுப்பாள்?
விஷாகனுக்கும் இதே தான் மனதில் ஓடியது.
அவளிடம் காதலோடு காமத்தை தேடினான் என்று எடுத்துக் கொள்வாளா? காதலை காலால் ஒதுக்கிவிட்டு, காமத்தை நாடியதாகக் குற்றம் சுமத்தி, அத்தை கூறியதை கேட்டுத் தன்னை விட்டு சென்றிடுவாளோ என்று பயந்தான்.
ஆண்டான்டு காலமாக வாழ்ந்து அனுபவித்த தம்பதிகளே சரியான புரிதலின்றி இருக்க, தாங்கள் மணம்புரிந்து கொஞ்ச நாள் ஆகின்றதென்ற தவிப்புடன் விருஷாலியை ஏறிட்டான்.
விருஷாலியோ அவன் கண்ணில் தென்பட்ட கலவையான உணர்வில் பேச்சற்று நின்றாள்.
“விருஷாலி… அங்க என்னடி பார்வை. நீயே பார்த்த தானே அந்த அபர்ணா பொண்ணு அப்பானு சொன்னா. எங்கம்மா குடிக்காரனோட வாழுனு என்னை விட்டுட்டாங்க. நீ அப்படி கஷ்டப்பட வேண்டாம். தாலி கழட்டி வீசியெறிந்துட்டு நம்ம வீட்டுக்கு வா” என்று கூற, அந்த இடத்தில் இருந்த அனைவருமே அதிர்ந்தனர்.
விஷாகனோ உடைந்து போனவனாய் வலியோடு பார்க்க, “என்ன பேசற மா. நீயா என் வாழ்க்கையில முடிவெடுக்கற?
உன் புருஷன் குடிகாரர். நீ என்னைக்காவது அவரை விட்டுட்டு தனியா வாழ முடிவெடுத்தியா? அவரோட தப்பை உனக்குச் சாதகமா பயன்படுத்திக்கிட்டு அம்மாச்சியையும் வீட்டோட வச்சிக்கிட்ட.
இங்க இவர் மேல சாட்டப்படுற குற்றத்துக்கு ஆதாரமே இல்லாம ஏதோ இந்தச் சின்னப் பொண்ணு பேசறதை வச்சி தாலி கழட்டி வீசியெறிந்துட்டு வானு சொல்லற.
திடீர்னு முளைச்ச இந்தச் சின்னப் பொண்ணு பேச்சை கேட்டு, என்னைத் தாலிகட்டினவரை நம்பவேண்டாம்னு சொல்ல நீயாரு.
எனக்குச் சந்தேகம் வந்தா அவரிடம் கேட்டுக்கறேன்.” என்றாள் விருஷாலி.
மீண்டும் அங்கே நிசப்தம். சுகன்யாவோ “அம்மாடி… என்னைப் பெத்த ஆத்தா… நீ பேசியதுக்குக் கோவில் கட்டணும்டி.” என்று அணைத்து முகவாயை தொட்டு கொஞ்சினார்.
விஷாகன் விழியில் லேசாய் கண்ணீர் துளிர்த்தது.
“எனக்குக் கோவிலும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் அத்த.” என்று கடினமாய்ப் பேசியவள், அன்னையிடம் திரும்பினாள்.
அன்னமோ மகள் பேச்சில் ஸ்தம்பிக்க, “இங்க பாரும்மா… நீ இந்த வீட்டு சம்பந்தி. மாமா இறந்து மூனாவது நாள் சாமி கும்பிடணும். அதோட பதினாறாம் நாள் துணி எடுத்து கட்டணும். இங்கயிருந்து சம்பந்தி சாப்பாடு முறை செஞ்சிட்டு போவியோ இல்லை இப்படியே போவியோ உன் இஷ்டம்மா.” என்றவள் அங்கிருந்தவர்களிடம் “இங்கபாருங்க… சும்மா அவர் குழந்தை அவர் குழந்தைனு தெரியாம பேசாதிங்க.
உங்களில் யாருக்காவது சந்தேகம் இருந்தா, இரண்டு பேரையும் ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டு போய் டாக்டரிடம் காட்டி, டிஎன்ஏ டெஸ்ட் எடுங்க.
அங்கயிருந்து ரிசல்ட் வரும் வாங்கிட்டு அப்பறம் எதுனாலும் பேசுங்க.
அம்மா… பாரதி கண்ணம்மா நாடகத்தைப் பார்த்தப்ப ‘அதென்னடி டிஎன்ஏ ரிசல்ட்?’ என்று கேட்டியே நினைவிருக்கா? நான் கூடப் பக்கம் பக்கமா விளக்கம் கொடுத்தேனே.” என்றதும் அன்னம் மகளைக் கண்டு விழிப்பிதுங்க, அன்னத்திற்கு மகள் கூறும் சாரம்சம் புரியவும் தலையாட்டினார்.
“ஆஹ் அவ்ளோ தான்… அன்னைக்கு நாடக்ததுக்கு விளக்கம் சொன்னேன். புரிஞ்சுதுல… அந்த டிஎன்ஏ ரிசல்ட் எடுத்துக்கோங்க.
மத்தபடி எந்த ரிசல்டும் எடுக்க மாட்டேன். ஆனா இங்கயே இருந்து என் வீட்டுக்காரரை குறை சொல்வேன்னு இருந்திங்க. நான் மனுஷியா இருக்க மாட்டேன்.” என்றவள் செம்பருத்தி அம்மாச்சியிடம் வந்தாள்.
“அம்மாச்சி… காலேஜிக்கு போகாத உங்கப்பா அண்ணானால பணத்தைக் கட்டமுடியாதுனு சொன்ன, வீட்டுக் கஷ்டம் என்று புரிந்து படிக்கப் போகாம ஒரு வருஷம் சும்மாவே இருந்தேன்.
கல்யாணத்துகுகு முன்ன இவரிடம் சும்மா போன் பேசாதேனு சொன்ன, சரி ஏதாவது மத்தவங்க தப்பா பேசுவாங்கனு அதையும் கேட்டுக்கிட்டேன்.
பொண்ணு பார்த்துட்டு போறவரை நிமிர்ந்து பார்க்காத, வாயாடாத, அடங்கியிருனு சொன்ன எல்லாம் கேட்டு தலையாட்டினேன்.
இப்பவும் அப்படிக் கேட்பேனு நினைக்காதே. உன் பொண்ணுக்கு குடிக்காரனோட அனுசரிச்சி போனு உன் வாய் தான் சொல்லும். என் புருஷன் எந்தப் பழக்கமும் இல்லாதவர்” என்று முகத்திலடித்தாற் போலப் பேசி அறைக்குள் அடைந்து கொண்டாள்.
விஷாகனால் நடப்பவையை நம்ப முடியவில்லை. ‘பேரானந்தம்’ என்றால் என்னவென்று அந்தக் கணம் உணர்ந்தான்.
விவேக்கோ “அதான் தங்கச்சியே சொல்லிடுச்சே… போங்க.. போங்க.. ஜோலிய பாருங்க.” என்று கிழடுகளை விரட்டினான்.
யாரும் வீட்டை விட்டு செல்லவில்லை. மாறாக ஒருத்தருக்கு ஒருத்தர் உதயகுமார் குழந்தையா? விஷாகன் குழந்தையா? என்று கதையளந்திட ஆர்வம் காட்டினார்கள்.
என் பையன் அப்படிப்பட்டவன் இல்லையென்று அறிவியல் எதார்த்தம் அறியாது அன்னபூரணி அப்பவும் புலம்பினார்.
வெள்ளந்தி மனம் கொண்ட அவருக்குப் பெரிதாய் மகன் மீது பாசம். பேரன் இந்தகாலத்தின் அவசரத்தில் தவறாய் சென்றிருப்பான் என்ற உறுதி.
எப்பொழதும் மகனை விடப் பேரனை தான் பிடிக்கும். செந்தூரனோ அந்த நோக்கத்தில் விஷாகன் மீது நம்பிக்கை கொண்டார்.
சுகன்யா கதை கதையாகச் செல்லம்மா அம்மாச்சியிடம் விஷாகன் அடித்ததிலிருந்து விரிவுரை ஆற்றினார்.
சங்கரன் குத்த வைத்து கதை கேட்டார் அன்னத்திடம் “பாருபுள்ள, குடிக்காரன்னு என்ன ஏசிட்டே இருப்ப. சம்பந்தி பொம்பள சகவாசம் வரை இருக்கார்.
நான் குடிச்சாளும் உன்னைத் தவிர வேறொருத்தியை தொட்டிருக்கேனா?” என்று பேசவும் அன்னம் பார்த்த பார்வையில் அமைதியானார்.
அபர்ணாவோ விருஷாலி அறைக்குள் வந்து விழிக்க, விருஷாலி அவளை உள்ளே அழைத்து “உட்காரு” என்றாள்.
அபர்ணா நேராக அந்தச் சின்ன ஸ்டோர் ரூம் நோக்கி சென்று அமர, “நேத்து இங்க தான் இருந்தியா?” என்று கேட்க ஆமென்றாள்.
“இங்க தான் நைட் தூங்கனியா?” என்று விருஷாலி கேட்க அதற்கும் தலையசைத்ததும் விஷாகனை ஏறிட்டாள்.
“ஏழு வயசு பொண்ணை அந்த ரூம்ல தனியா பூட்டி வச்சி… என்னங்க இது? பயந்திருக்க மாட்டா?” என்று விஷாகனிடம் கேள்வி கேட்டாள்.
அபர்ணாவை அருகே மெத்தையில் அமர்த்திக் கொண்டாள்.
“என்ன பண்ண சொல்லற. கல்யாணம் ஆனதும் உன்னிடம் சொல்ல ஒவ்வாரு முறையும் தவிச்சேன். ஆனா நமக்குள்ள…” என்றவன் அபர்ணாவை வைத்து பேசயியலாதென்று, “அபர்ணா அம்மாவிடம் போ, விருஷாலியிடம் நான் கொஞ்சம் பேசணும்” என்றதும் அபர்ணா எழுந்து சென்றாள்.
அவள் சென்றதும் கதவை தாழிட்டு விருஷாலியிடம் மண்டியிட்டு அவள் மடியில் சாய்ந்து இடையைக் கட்டிக்கொண்டான்.
“எப்படி டி.. என்னைச் சந்தேகப்படாம புரிஞ்சிக்கிட்ட..? அத்தை பேசியதை கேட்டா… உனக்கு இந்நேரம் என் மேல சந்தேகம் வந்திருக்கணுமே? அபர்ணா கூட அப்பானு தானே கூப்பிட்டு ஓடி வந்தா? எப்படி ஷாலி?” என்று லேசாய் கண்கள் ஈரமாகக் கேட்டான்.
விருஷாலி அவன் கன்னத்தைப் பிடித்து, “நீங்க கல்யாணத்துக்கு முன்ன என்னிடம் ஏதோ பேசணும்னு சொன்னிங்க. ரொம்ப முயற்சி பண்ணினிங்க.
ஒருமுறை எனக்காக என்னைக் கல்யாணம் பண்ணறியா? இல்லை உதயகுமாரோட பையன் சொந்தமென்று தலையாட்டுறியானு கேட்டிங்க.
நான் கூட உதயகுமார் மாமா பையன் என்பதால தான் கல்யாணம் பண்ணறேன்னு சொல்லவும், நீங்க ரொம்பக் கோபமா கத்தினிங்களே.
அந்த நேரம் கல்யாணத்தை நிறுத்திடுவிங்களோனு ரொம்பப் பயந்தேன்.
அன்னைக்கு இந்தக் காரணத்துக்காகத் தான் கேட்டிங்களோனு தொடர்புப்படுத்தி யோசிச்சேன். அன்னிக்கு அதுக்குத் தான் கேட்டிங்களா?” என்று கேட்டாள்.
விஷாகன் மடியில் தலையை எடுக்காமல் “ஆமா” என்றான்.
“அன்னைக்குப் பேசியதை வச்சி கனெக்ட் பண்ணி முடிவெடுத்தியா? என்ன நம்பறியா?” என்று விஷாகன் கேட்டதும், “ம்ம்ம்… அதுவுமில்லாமா அன்னைக்கு நம்ம கல்யாணத்தில் மேல சாப்பிட வந்தப்ப, அபர்ணா ‘சாப்பிட்டேன் அப்பா’ என்று சொன்னப்பவும் மாமா உங்க பின்னாடி இருந்தார். நான் கவனிச்சேன். அப்ப உங்க மேல இருந்த இன்ட்ரஸ்ட்ல என்னைச் சுத்தி என்ன நடக்குதுனு உணரலை. அதனால கூட அபர்ணா உங்கள மாதிரி இருப்பதை நான் பெரிசா யோசிக்கலை” என்று கூறவும் விஷாகன் அவளை அணைத்தான்.
விருஷாலியோ “சுகிர்தன் மச்சான் ஒரு சொட்டுக் கண்ணீர் விடலை. மாமா மேல கோபமா?” என்றாள்.
“எனக்குக் கோபம் வந்துச்சு. அப்பாவையே அடிச்சேன்.” என்று கூறவும், “மாமாவை அடிச்சிங்களா?” என்றதும் “ஆமா… அடிச்சி ஹாஸ்பிடல்ல படுக்க வைக்கவும் அப்பத்தா, அம்மாச்சி, தாத்தானு லைன் கட்டிட்டு வந்தாங்க. அவங்களிடம் ஆக்சிடெண்ட் என்று சொல்லி வச்சோம்.
இங்க வந்தவங்க ஒரே புலம்பல். அதோட என் கல்யாணத்தைப் பத்தி பேச்செடுக்க, உன் பெயர் சொல்லி எனக்குள்ள ஏதோ மேஜிக் பண்ணிட்டாங்க.
எனக்கும் ஒருவேளை நமக்குக் கல்யாணமான அவர் இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியா நடந்துப்பார்னு எதிர்பார்த்தேன். பொண்ணு பார்க்க வந்தோமா. கைநனைச்சி உனக்கும் எனக்கும் கல்யாண தேதி குறிச்சாங்க. ஆனா அவர் திரும்ப அவங்களுக்குப் போன் பேசினாங்க. நான் மறுபடியும் திட்ட, என்னால தான் உனக்குப் பொண்ணு கொடுத்தாங்க. அப்படியிப்படினு பெருசா குடிச்சிட்டு வந்து கத்தினார். டிரிங்ஸ் பழக்கம் அப்பாவுக்கு இல்லை. சங்கரன் மாமாவை பார்த்துட்டு ட்ரை பண்ணியிருக்கார்.
போதையில பேசினாலும் எனக்குள்ள ரொம்ப ஹர்ட் ஆகிடுச்சு. அதான் உன்னிடம் போன் போட்டுக் கேட்டேன். நீயும் உதயகுமார் மாமா பையன் என்றதால தான் என்னைக் கட்டிக்கிட்டதா சொன்னதும் ‘சுர்ருனு’ கோபம். உன்னைத் திட்டிட்டு வச்சதும், மறுபடியும் நீ போன் பண்ணி பேசியதும் மனசுக்கு இதமா இருந்தது.
உன்னை… உன் பேரை மனசுக்குள்ள எத்தனை முறை ஜெபம் பண்ணிட்டேன் தெரியுமா.
ஷாலி நம்மளோடது அரேஞ்மேரேஜ். ஆனா இந்த இடைப்பட்ட நாள்ல உன்னைக் காதலிச்சிருக்கேன். எங்க நீ தப்பா புரிஞ்சிட்டு, அத்தை பேசியதை வச்சி, என்னை விட்டு போயிடுவியோனு பயந்துட்டேன் தெரியுமா?” என்றவன் அவள் கன்னத்தைப் பற்றிப் பேசவும், அவன் முகத்தைத் தன் நெஞ்சில் கட்டி அணைத்துக் கொண்டு, “நான் கனெக்ட் பண்ணி தெளிவானதை தாண்டி, உங்க கண்ணில் எனக்கான பதில் கிடைச்சதுங்க. உங்க கண்ல என்னைப் புரிஞ்சுப்பியா? இல்லையானு பரிதவிப்பா பார்த்திங்க பாருங்க. அதுல என் மேல எவ்ளோ காதல் வச்சிருந்திங்கனு அந்தக் கண்ணு சொல்லுச்சு.” என்றதும் அவளை இழுத்து முத்தமிட்டான்.
சிறிது நேரம் கழித்து விடுவித்து முடிக்க, “மாமா விபத்துல இறந்துட்டார். அபர்ணா அம்மாவும் ஆஸ்துமால இறந்துட்டதா சொன்னிங்க. இனி அவங்களைப் பத்தி பேசி என்ன புரோஜனம். அபர்ணாவை பத்தி பேசுவோம். அபர்ணாவை இனி இங்க வளர்க்கறதா முடிவு பண்ணிட்டிங்களா?” என்று கேட்டாள்.
“இங்க வளர்க்கறதா எதுவும் முடிவுப்பண்ணலை விருஷாலி. போர்டிங் ஸ்கூல்ல, ஹாஸ்டல்லயே தங்கி படிக்கிற மாதிரி யோசிச்சிருக்கேன். விவேக்கும் அப்படியே செய்யச் சொல்லிட்டான்” என்றதும் விருஷாலி திகைத்தாள்.
“அத்தைக்கு அவளைப் பிடிக்கலையா?”
“அதெப்படி பிடிக்கும். முன்ன கொஞ்சம் அபர்ணாவை கண்டாலே பிடிக்காம இருந்தாங்க. பட் இப்ப கொஞ்ச நாளா அவளுக்கு ஊட்டிவிட்டு, தலைவாறி கொஞ்சம் கேர் எடுத்து பார்த்தாங்க. மேபீ.. என்னைய மாதிரி மனிதாபிமான அடிப்படையில கவனிச்சிருக்கலாம். நான் முன்ன அப்படித் தான் யோசிச்சேன். இப்ப தான் தங்கையா ட்ரீட் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்.” என்று கூறினான்.
“அதெப்படிங்க ஹாஸ்டெல்ல… பச்… நீங்க அவளை இன்னமும் தங்கையா டீரீட் பண்ணலை. அப்படிப் பண்ணியிருந்தா, இங்க இத்தனை பேர் இருந்தும் ஹாஸ்டல் போர்டிங் ஸ்கூல்னு பேசுவிங்களா?” என்றதும் விஷாகன் தலைகுனிந்தான்.
“நான் என்ன செய்யறது. நீ செய்யறது தப்பில்லை. ‘யூ கேன் பிரோசிட் ‘ என்று தட்டிக் கொடுக்க யாராவது இருந்தா நான் அவளை இங்கயே தங்கவைப்பேன்.
பார்த்தல்ல… ஒவ்வொருத்தரும் எப்படிப் பேசறாங்க. கொஞ்ச நேரம் முன்ன கூட வீட்ல வச்சிக்கலாம்னு இருந்தேன். ஆளாளுக்குப் பேசவும் போர்டிங் ஸ்கூல் பெட்டர்னு தோனுது.
நெருங்கிய சொந்தக்காரங்களே இப்படின்னா, தூரத்துச் சொந்தம் எல்லாம் நம்ம முதுக்குப் பின்னால பேசுவாங்க, இந்தச் சொஸைட்டி வேற” என்று மனதாங்கலை இறக்கினான்.
“அட பேசறவங்க பேசிட்டே இருப்பாங்க. அவங்களை எல்லாம் இதே போல வீட்ல உட்கார வச்சி விளக்கம் தருவிங்களா?
எனக்கு விளக்கம் சொன்னதுக்குப் பிறகா உங்களைப் புரிஞ்சுக்கிட்டேன்” என்றதும் விருஷாலியை வியந்து நோக்கினான்.
“எப்படியும் கொஞ்ச நாள் அவல் கிடைச்சதை மென்னுட்டே இருப்பாங்க. விடுங்க… மாமா இறந்து இரண்டாவது நாளாகுது. மத்த காரியம் தலைக்கு மேல இருக்கும்.” என்றதும் விருஷாலியை கட்டியணைத்து, “நீ கிராமத்து பிள்ளை… இந்தளவு எப்படி முதிர்ச்சியா பேசற? என்று கேட்டவனுக்குப் பதில் தரும் முன் அபர்ணா அழுகை அதிகரிக்க, வேகமாய் வெளியே வந்து நின்றான்.
அப்பத்தா அபர்ணாவை அடித்திருக்க, கீழே விழுந்து கிடந்தாள்.
-தொடரும்.
Praveena Thangaraj

Interesting 🥰😍😍😍😍🥰🥰
Very interesting
Super sis nice epi 👍👌😍 vrushali evlo azhaga yosichi pesuva nu nenaikave Ella pa semma 😘 endha periyavanga purinjikave maatanga eppo yedhuku andha kuzhandhaiya adichangalo🙄🤧
நீயின்றி வாழ்வேது…!
(அத்தியாயம் – 28)
வாவ்.. சூப்பர்..! ஷாலி ரொம்ப அழகா பாயிண்ட் பை பாயிண்ட்டா பேசினா. அதானே குடிகாரன் புருசன் கூட வாழ்ந்து ஒண்ணுக்கு ரெண்டா பிள்ளையைப் பெத்து போட்டு, அதுக்கு ஈடா தன்னோட அம்மாவையும் வீட்டோட வைச்சு கஞ்சி ஊத்துவாங்களாம். ஆனா, பொண்ணை மட்டும் வாழவெட்டியா வந்து, வீட்டோட வேலைக்காரியா வந்து உட்காருன்னு சொல்லுவாங்களாம்… இது எந்த ஊரு நியாயம்ன்னு தெரியலை.
ஆனாலும், விருஷாலி புரிஞ்சுக்கிட்ட அளவுக்கு விஷாகனை வேற யாரும் புரிஞ்சுக்கிட்டிருக்க மாட்டாங்க.
அது சரி, இந்த அப்பத்தாவுக்கு இப்ப என்னாச்சுன்னு அந்த சின்னப் பொண்ணை போட்டு
அடிச்சிட்டு இருக்காங்க..?
தப்பு பண்ணதை அவங்க புள்ளை. அடிக்கணும்ன்னா அவனை போய் அடிக்கச் சொல்லுங்க, சட்டையைப் புடிச்சிட்டு கேட்கச் சொல்லுங்க. அவரால் இங்கே விஷாகன் கற்புக்கே இங்க சோதனை வந்திடுச்சு. அதுவும் கட்டளை பொண்டாட்டி சந்தேகப்படலை, ஆனா, கட்டையில போறவங்க எல்லாம் தீக்குளிக்கச் சொல்றாங்க..! என்ன கொடுமையடா கோபால்…?
😃😃😃
CRVS (or) CRVS 2797
செம Interesting.
Virushali Vera level. கலக்கிட்டீங்க. Super 👌
nice epi………
Super shali. Excellent. Good understanding between them. Vishakan you are so lucky to have such a lovely wife. What happened to aparna? Extraordinary narration. Interesting sis
Virushali ipadi tan pesuva nu munnadiyae theriyum yenna indha kadhaiya naan already padichiten 😂😂….
Super super akka❤️❤️…. Waiting for next ud…
itha tha ethirpathom virushali purinjikitta athuve pothum vishakanuku vera yar ena pesina ena eni thairiyama mudivu pann vishaka . paati neengala ippadi periyavanga nengale kolanthaiya adichitinga .
very interesting sisy superb ah pothu story
Visha shali understanding 👌👌👌👌👌👌👌 aiyo appatha 😱 waiting for nxt epi👌👌👌👌😍😍😍😍
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤❤❤❤💕💕💕
Shali avan ah purinchikitathu ah vida chumma point point ah pesuna la athu than highlight yae keta kelvi kum oruthar kita yum bathil illa la
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
இந்த பெருசுங்க சரியே கிடையாது சகி
Wow virushali
Wowshali
இவ்வளவு விளக்கம் கொடுத்ததுக்கு அப்புறமும் அந்த கிழவி அடங்க மாட்டேங்குது