புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

நீயின்றி வாழ்வேது -32

நீயின்றி வாழ்வேது-32

   சுகிர்தனின் வருங்கால மாமனார் இம்மானுவேல் பேச பேச, விஷாகனுக்கு எதுவும் பிடிக்கவில்லை.
  
    என்னவோ தன் குடும்பம் ஒழுக்கம் கெட்டதாக மொத்தமாய் முடிவு செய்து இழிவாகப் பேசினார். பின்னர் அதெல்லாம் நாங்க மனசுல வச்சிக்கலை. ‘எங்க பொண்ணு எப்பேற்பட்ட குடும்பத்துல கூட வாழ்ந்துடுவா புத்திசாலி’ என்றார். மனதில் எண்ணியதை எல்லாம் வன்மமாகக் கொட்டி தீர்த்தார்.
ஜெனிபருக்கே சங்கடமாய்ப் போனது. தந்தைக்கு அரைமனதாகச் சுகிர்தனை பிடித்திருப்பதும், எப்பொழுது தட்டி கழிக்கலாமென்ற அவசரமும் அவரைப் பேச தூண்டியது.

   இம்மானுவேலோ பேச்சை தொடர்ந்தார். “நடுவில் எங்க பொண்ணு எந்த ஊர்த்திருவிழாவுக்கும் கோவிலுக்கும் வரமாட்டா. ஆனா எங்கவீட்ல உங்க தம்பி மாப்பிள்ளையா வந்தா ஞாயிறு சர்ச்சிற்குக் கண்டிப்பா போகணும்.

   என் மகளுக்குச் சமைக்கத் தெரியாது. எப்படியும் வேலைக்காரங்களைப் போட்டு சமைச்சிப்பா.” என்று கூறவும், “அம்மா நல்லா சமைப்பாங்க. வேலைக்காரங்க வைக்கிற அளவுக்கு அப்படியொன்னும்…” என்று விஷாகன் பேசவும் இடை வெட்டினார்.

“தம்பி இப்ப யாரு கூட்டுக் குடும்பமா சேர்ந்து இருக்கப் போறா. என் பொண்ணுக்கு உங்க வீட்ல இருந்தா அவளுக்கு அதெல்லாம் ஒத்து வராது. எங்களுக்கும் அது சரிபடாது.

    உங்க வீட்டுக்காரம்மா கிராமத்துல வளர்ந்தவங்க. என் பொண்ணு சிட்டில வளர்ந்தவ. உங்கம்மா வயசானவங்க, அவங்களுக்கு உதவிசெய்துட்டு இருந்தா என் மக எப்ப ஆபிஸ் போவா. இதுல போதாதுக்கு ஒரு குழந்தை வேற.

என் மகளைப் படிக்கவச்சி தனிச்சையா வேலைக்கு அனுப்பியது உங்களுக்குச் சேவகம் பண்ணறதுக்கு இல்லை.” என்று பேசவும் விஷாகன் தம்பியை கோபமாய் பார்த்தான்.

‘தன் அன்னை சுகன்யா வயசானவங்க என்றால் இவங்க மட்டும் என்னவாம். நாளைக்கு உடல்நிலை சரிந்தால் யார் பார்ப்பார்கள். பெரியவர் என்ற அறிவின்றிப் பேசுகின்றாரே’ என்றிருந்தது.

ஜெனிபரோ இப்படிப் பேசினா சுகிர்தனின் அண்ணனுக்குக் கோபம் வரப்போகுது. அப்பா வேண்டுமென்றே திருமணத்தை நிறுத்தும் நோக்கத்தில் மட்டும் பேசிவது தெளிவாய்ப் புரிந்தது.

   பேசவேண்டியதை எல்லாம் பேசி தொலையட்டும் என்று பொறுமை காத்தான் விஷாகன்.

    சுகிர்தனோ தலைகவிழ்ந்து நின்றிருக்க, இங்கு ரோஷப்பட வேண்டியவன் அவன். அவனே அனைத்தும் கேட்டு விழுங்கிய மலைப்பாம்பாக இருந்துவிடத் தனக்கு என்ன மறுப்பு உள்ளது என்று விஷாகன் பேச்சை பொறுத்துக் கொண்டான்.

     “சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டேன் தம்பி. இனி உங்க அப்பா இடத்துல இருந்து அண்ணனா நீங்க தான் பதில் சொல்லணும்” என்று இம்மானுவேல் கூறியதும் எஸ்தர் காபியை நீட்டினார்.

    “நோ தேங்க்ஸ் ஆன்ட்டி.” என்று மறுத்தவன், தொண்டையைச் செருமி எழுந்துவிட்டான்.

“கல்யாணத்தை எப்படிப் பண்ணறது?” என்று நக்கலாய் கேட்டார். எப்படியும் இந்தளவு பேசியப்பின் இளரத்தம் வெடுக்கெனத் திருமணத்தை மறுத்து ஓடுவான் ‘மகளிடம் பார் அவர்கள் குடும்பம்’ என்று சுட்டி காட்ட வசதியாய் இருக்கையில் சாய்ந்தார்.

“உங்க சௌவுகரியம் எப்படினு சொல்லுங்க ஆங்கிள். பண்ணிடுவோம். நாளைக்கே என்றாலும் சரி.

என்ன முப்பது கழிச்ச கொஞ்ச நாள்ல இரண்டாவது பையனும் எவளையோ கட்டிட்டு வந்துட்டான்னு பேசுவாங்க. ஊரார் பேசறது என்ன புதுசா. அப்பா ஒழுக்கம் கெட்டு போகவும், புள்ள அவனிஷ்டத்துக்கு ஆடறான். மதம் மாறி தனிக்குடும்பம் போயிட்டான்னு பேசுவாங்க.

ஏற்கனவே கிராமத்துல இருந்து வந்த அடிமுட்டாளை கட்டிட்டு வந்திருக்கேன்.
ஒருத்தருக்கும் கூறுயில்லாதவங்கனு பேச்சும் வரலாம். எதுவானாலும் பேசட்டும் அங்கிள். நீங்க எப்ப கல்யாணம் வைக்கறிங்களோ வந்துட்டு முழுச் செலவையும் ஏத்துட்டு போறோம்.” என்று எழுந்தான்.

சுகிர்தனோ “அண்ணா… அண்ணா..” என்று முழுசெலவுமா? என்று பயந்தான். அவனிடம் தான் சல்லி பைசா தேறாதே.

“இதப்பாருடா… நீ லவ் பண்ணினியா. கல்யாணம் பண்ணு… தனிக்குடுத்தனம் போ. ஆனா இந்த ஆறடி உசுரை கொடுத்தது அந்தாளு தான். இந்த வேலைக்குப் போகப் படிக்க வச்சாரே அதுவும் அந்தாளு தான்.

எனக்குத் தப்புனு தெரிந்தது தூக்கிபோட்டு மிதிச்சேன். மனசுல இருந்த வலி, வேதனையை அப்பவே மறந்துட்டேன். அப்ப கமுக்கமா இருந்துட்டு எப்ப குத்திக்காட்டி பேசலாம்னு காலநேரத்தை எதிர்பார்த்திட்டு இருக்கறவன் நான் இல்லை.

கல்யாணம் எப்ப வைக்கச் சொல்லு… பணத்தைப் புரட்டணும். அப்பா இல்லாத இடத்துல நான் தான் செய்யணும். நான் இறங்கி செய்வேன். எந்த விதண்டாவாதப் பேச்சுக்கும் ஓடறவன் இல்லை. ” என்று கூறவும் சுகிர்தன் வாயை மூடினான்.

இம்மானுவேலோ தன் குட்டு வெளிப்படையாகத் தெரிகிறதோ என்று எழுந்தார்.

விஷாகன் மூவரிடம் விடைப்பெற்று வெளியே வர, சுகிர்தனோ பின்னாலே வந்தான். திரும்பி திரும்பி ஜெனிபரை பார்த்துவிட்டு, விஷாகனின் பைக்கில் ஏறியமர்ந்தான்.

“சாரிண்ணா… நான் ஒருமுறை பேசிட்டு உனனை கூட்டிட்டு வந்திருக்கணும்.” என்று வருத்தப்பட்டான்.

“இந்தளவாது பீல் பண்ணற.” என்று விஷாகன் எகத்தாளமாய்க் கூறி வீட்டுக்கு வந்தான்.

வீட்டில் அன்னையிடம் “கல்யாணம் எப்பனாலும் வைக்கச் சொல்லிருக்கேன் மா. அவங்க எப்ப சொல்றாங்களோ பண்ணிடலாம். வேற எதுவும் இல்லை” என்று அறைக்குச் சென்றான்.

விருஷாலியோ அபர்ணாவுக்குப் பாடம் சொல்லி கொடுத்தவள் விஷாகன் வரவும் புத்தகத்தை மூடி, “அபர்ணா நாளைக்குப் படிக்கலாம். இதை எடுத்துட்டு போ” என்று புத்தகத்தைக் கொடுக்க, “நீங்க போங்க அண்ணி. நான் இந்த ரூம்ல தூங்கப்போறேன். எனக்கு ஏசி பிடிச்சிருக்கு” என்று நீட்டி நிமிர்ந்தாள்.

விருஷாலியோ விஷாகனை காண அவன் சரியாகக் கவனிக்காமல் பாத்ரூம் சென்றிருந்தான்.

“இல்லைடா நீ தூங்கணும். காலையில ஸ்கூலுக்குப் போக எழுந்துக்கணும்ல” என்று நாசூக்காய் அனுப்பும் நோக்கத்தோடு கூறினாள்.

“ஏன் நான் இங்க இருந்தா உங்களுக்கு என்ன?” என்று ஏசியை அதிகப்படுத்தினாள்.

“அபர்ணா… எனக்குச் சளிப்பிடிக்கும். ஏசியை நிறுத்து.” என்று விருஷாலி கூறவும், “நீங்க வேண்டுமின்னா ஹாலுக்குப் போங்க” என்று கூறினாள்.

விஷாகன் பாத்ரூமிலிருந்து முகத்தைக் கழுவி டவலை தேடி எடுத்து துடைக்க, “பாருங்க இவளை ஏசியை அணைக்கவும் மாட்டளாம்? அங்க போய்த் தூங்குனு சொன்னாலும் கேட்கறதில்லை” என்றதும், “ஏன் அண்ணா நான் ஏசில தூங்கக்கூடாதா, என்ன எப்ப பாரு ஏசில இருக்கணுமானு திட்டறாங்க” என்று லேசாய் கண்ணைக் கசக்கவும், விஷாகன் இருந்த மனநிலைக்கு, “ஏன் ஷாலி சின்னப் பொண்ணிடம் இப்படிப் பிஹேவ் பண்ணற. கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருக்க முடியாதா?” என்று எரிந்து விழுந்தான்.

விஷாகன் சாதாரணமாய் பேசிவிட்டு ஹாலுக்குச் சென்று சாப்பிட அமர்ந்தான். முன்பு வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பார்த்தான். சரியாக ஆறுமணிக்கு வீட்டுக்கு வந்து நிம்மதியாய் படம் பார்த்து உறங்குவான். இன்றோ இரண்டு பிசினஸ் பார்த்துக்கொண்டு இதில் சுகிர்தன் மாமானார் வேண்டாதபேச்சை கேட்டுக் கொண்டு வந்த கடுப்பில் ஹாட்பாக்ஸில் சப்பாத்தி இருக்குமென எடுக்க முனைந்தான்.

அங்கே சப்பாத்திக்குப் பதில் ஸ்பிரிங் பாஸ்தா இருந்தது.

“மா.. இத யாரு வச்சா?” என்று கேட்க, “அபர்ணா தான் விருப்பப்பட்டுக் கேட்டா. ஆசையா கேட்டாளேனு கடையில வாங்கினேன். நம்ம விருஷாலி தான் சமைச்சா.” என்றதும் வேண்டாவெறுப்பாய் அள்ளி விழுங்கினான். அப்படியிருந்தும் மனவுளைச்சல் அடங்காமல் பாதிசாப்பாட்டிலேயே எழுந்துவிட்டான்.

அறைக்குள் வந்து படுக்கவும், விஷாகன் அருகே அபர்ணா படுத்திருக்க விருஷாலி கையைப் பிசைந்து மறுபுறம் உறங்கினாள்.

சுகன்யா வந்து அபர்ணாவை அழைக்க, “நான் இங்கயே தூங்கறேன் அம்மா.” என்றாள்.

சுகன்யாவோ என்னவென்னவோ சொல்லிக் கூப்பிட வரமறுத்தவளை கண்டு, “மா தூங்கட்டும் விடுங்க” என்று சலித்துக் கொண்டான். சுகன்யாவும் “சரிய்யா சரிய்யா” என்று அறைக்குத் திரும்பினார்..

விருஷாலி முகம் லேசாய் வாடியபடி திரும்பி கொண்டாள்.

தம்பி திருமணம் என்றால் பணத்தைப் புரட்டவேண்டுமே என்ன செய்ய என்று அவன் சிந்தனை ஓடியது.

அரைமணி நேரம் கழிந்தப்பின் இதுவரை லோன் என்றதில் நுழைந்தது கிடையாது. தற்போது அந்த வழியில் சென்று பார்க்க வேண்டும். தனுஷிடம் கேட்டால் வங்கி விவரத்தை கூறுவான். மேலும் அவனுக்குத் தெரிந்த வங்கிஆட்களும் உண்டு. கடைசியாக வீடு கட்ட தனுஷ் வாங்கியிருந்தான்.
போதாதற்குச் சண்முகம் அண்ணாச்சி பணத்தைக் குறைந்த அளவிற்கு வட்டிக்கு விடுவார். இரண்டு இடத்திலும் வாங்கிடலாமென்று தெளிவுப்பிறக்க விருஷாலியை தேடினான் விஷாகன்.

இடையே நந்தியாக அபர்ணா இருக்க, ‘அம்மாவிடம் அப்பவே அனுப்பியிருக்கணுமோ’ என்று தாமதமாகப் புரிந்தது.

அபர்ணா ஏசி ரிமோட்டை கையில் இறுக பிடித்து உறங்கவும், அவளைத் தூக்கிக் கொண்டு அன்னையின் அறைக்கு வந்தான்.

“நல்லா தூங்கிட்டாம்மா.” என்று அவளை மெத்தையில் கிடத்திவிட்டு ஏசி ரிமோட்டை உருவிக்கொண்டான்.

ஏசியை அணைத்துவிட்டு விருஷாலி அருகே வரவும் அவள் முகம் திருப்பிப் படுத்துக்கொள்ள, “என்னாச்சு… கோபமா..?” என்றதும் ஆமா” என்று வெடுக்கென விருஷாலியிடம் இருந்து பதில் வந்தது.

“என்ன ஷாலி… அவ குழந்தை அவளிடம் மல்லுக்கு நிற்கற” என்று கேட்டு அவளை அணைக்கவும், கையைத் தட்டிவிட்டாள்.

“நான் எப்பவும் சீப்பா சின்ன விஷயத்துக்குக் கோபப்பட மாட்டேன். நீங்க சாப்பிட்டிங்களே என்னை ஒரு வார்த்தை சாப்பிட்டியானு கேட்டிங்களா?” என்றதும் விருஷாலியை தன் பக்கம் திருப்பி, “நீ சாப்பிடலையா?” என்று கேட்டான்.

“உங்களுக்காக ஆசையா வெயிட் பண்ணிட்டு இருந்தேன். எல்லாம் வேஸ்ட். சின்னச் சின்ன ஆசையா உங்களோட சாப்பிடணும்னு எதிர்பார்த்தேன் பாருங்க என்னைச் சொல்லணும்.” என்று முதுகு காட்டி உறங்கவும், அவள் தோளில் கைவைத்து, “சுகிர்தன் மாமனார் பேசியதுல கொஞ்சம் மூட் அப்செட் டி.” என்று கூறினான்.

“ஏன்… அந்தக் கோபத்தை என்னிடம் காட்டணுமா. இந்தக் கோபம் சங்கிலி தொடராட்டும் போகணும் அப்படித் தானே.

இல்லை வரவர உங்களுக்கு நான் திகட்டிட்டேன்.” என்று கலங்கினாள்.

“ஷாலிம்மா… இங்க பாரு. சத்தியமா ரொம்ப எரிச்சலா வந்தேன். நீ அபர்ணாவோட பேசியதை கேட்டு கடுப்புல பேசிட்டேன் சாரிடி. நீ சாப்பிட்டியா இல்லையானு கூடத் தெரிந்துக்கலை. கேட்டுயிருக்கணும் தப்பு தான்” என்று மன்னிப்பு கேட்க, அவனைத் திரும்பி பார்த்தாள்.

“நான் போய்ச் சாப்பிட்டு வர்றேன்” என்று எழவும், “இங்கயிரு நான் போய் எடுத்துட்டு வர்றேன்.” என்று சென்றான்.

ஒரு கையில் பாஸ்தா தட்டும், மறுகையில் தண்ணீர் பாட்டிலும் எடுத்து வர, எழுந்து அமர்ந்தாள்.

அவனாகவே கையில் ஊட்ட வரவும், “அட முள்ளுகரண்டி இருக்குமே ஏன் எடுத்துட்டு வரலை” என்று கேட்டு அவளாகவே எடுத்து சாப்பிட்டாள்.

“உனக்கு இந்தப் பாஸ்தா எப்டி செய்யத் தெரியும். அதோட போர்க்ல சாப்பிட தெரியுமா?” என்றதும், “அதெல்லாம் தெரியும் கிராமத்துல வளர்ந்தாலும் ஒரளவு புத்தியிருக்கு” என்று பேசினாள்.

விஷாகனோ ‘இவளை வேற பேசிட்டாரே சுகிர்தன் மாமானார்.’ என்று எரிச்சல் மண்டியிட்டது.

“என்னங்க… அபர்ணா வரவர ஒரே அடம். அழுது சாதிக்கலாம்னு கத்து வச்சியிருக்கா. இப்பவே அதட்டுங்க. இல்லை ரொம்பக் கஷ்டம்” என்று கணவனின் அன்பு கிடைத்த திருப்தியில் கூறவும் இவளிடம் அபர்ணா பேசியதை கூறுகின்றாளென லேசாய் எடுத்துக் கொண்டான் விஷாகன்.

“ம்ம்.. ரொம்பக் கஷ்டம் தான். அவளை இங்கயிருந்து தூக்கிட்டு போன காரணமே மறந்துட்டேன்.” என்றவன் அவளை இழுக்க, அவன் மேலே மோதினாள்.

“இந்த நைட்டி நீ முதல் முதல்ல நம்ம பஸ்ட் நைட் முடிஞ்சி குளிச்சிட்டு யூஸ் பண்ணியது தானே?” என்று அவள் கழுத்திலிருந்த ஊர்வலமாகக் கையைப் பயணித்துக் கேட்டான்.

“ஏன்… அதுக்குப் பிறகு எத்தனையோ முறை உபயோகப்படுத்திட்டேன். உங்களுக்கு இப்ப தான் கண்ணுல மறுபடியும் தென்படுதோ” என்று கையைத் தட்டிவிட, அவன் தீண்ட, அவள் தட்டிவிட, சின்னப் பிள்ளைகள் போல விளையாட ஆரம்பித்து முடிவில் விஷாகனையே வெற்றி பெற வைத்து முகத்தை மூடிக்கொண்டாள்.

காதல் யுத்தத்தில் பெண் அடங்கவும் ஆண் வெற்றி பெறவே விரும்பி தொலைகின்றாள்


அடுத்த நாள் அபர்ணா எழுந்துக்கொள்ளும் பொழுதே இடம் மாற்றத்தை உணர்ந்து கோபமாய் முகம் தூக்கி வைத்தாள்.

விஷாகன் பள்ளிக்கு அழைக்கவும், வேண்டா வெறுப்பாய் கிளம்பினாள்.

விஷாகன் சுகிர்தனிடம் “நான் போய்ச் சண்முக அண்ணாச்சியிடம் பணத்தைக் கேட்க போறேன். இப்ப கேட்டா தான் நாம கேட்கற தேதிக்குப் பணம் கைக்கு வரும். அப்பறம் உங்க மாமனாரிடம் எப்ப கல்யாணம் பண்ணலாம்னு தேதியை கேளு.” என்றதும் கவலையாய்த் தலையாட்டினான்.

விஷாகன் மதியம் வீட்டுக்கு வந்தப்போது வீட்டிலிருந்து சுகன்யா அழுகுரல் கேட்டது.

என்னானது என்று வாகனத்தை நிறுத்தி வரவும் சுகன்யா ஒப்பாரி வைத்ததைக் கண்டான். விஷாகனோ “இப்ப எதுக்கு இந்த ஒப்பாரி” என்று ஹாலுக்கு வந்து பார்க்க, சுகிர்தன் ஜெனிபரோடு அவனது வீட்டுக்குள் மணக்கோலத்தில் நின்றிருந்தான்.

சுகிர்தனிடம் “என்னடா இப்படி வந்து நிற்கற?” என்று அதிர்ந்து கேட்டான் விஷாகன்.

“எங்கவீட்ல அப்பா ஒத்துக்கலை. நாங்க எங்க பிரெண்ட்ஸ் நாலு பேரை கூட்டிட்டு போய் மேரேஜை முடிச்சிட்டோம்” என்று ஜெனிபரிடமிருந்து பதில் வந்தது.

திருமணத்துக்கு நாலு பேர் போதுமா? என்று தான் விஷாகனின் மனவோட்டம் சென்றது.

-தொடரும்.
Praveena Thangaraj

15 thoughts on “நீயின்றி வாழ்வேது -32”

  1. நீயின்றி வாழ்வேது…!
    பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 32)

    அய்யய்யோ..! இந்த காலத்துல யாரையுமே நம்ப முடியாது போலவே…? தம்மாத்துண்டு இருந்துட்டு என்னாம்மா சட்டம் பேசுறா இந்த அபர்ணா குட்டி..!
    ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டிச்சாம் அது மாதிரி இல்ல இருக்குது.. இவ பண்ற அட்டகாசம்.
    அடேய் விஷாகா.. ! இப்பவே அந்த குட்டியை அடக்கி வை…
    இல்லைன்னா உனக்கும் உன் ஷாலிம்மாவுக்கும் சிண்டை முடிச்சு விட்டுடும் பார்த்துக்க.

    அய்யோடாப்பா..! இந்த ஜெனிஃபர் வாயா இல்லை சாக்காடையா…? இப்படி ரவுண்ட்டு கட்டுறாரு.

    பாவம் விஷாகன், வீட்டுக்கு மூத்தவனா பிறந்தாலே ஒண்ணு எஸ்கேப் ஆகிடறாங்க.
    இல்லையா மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க. கடனே இல்லாம சுயமா சம்பாரிச்சிட்டு இருந்தான்… இப்ப தம்பியோட தனிக்குடித்தனத்துக்கு கூட
    விஷாகனே படி அளக்கணும் போல..?

    அடேய் ஊதாரி சுகிர்தா..! இப்பவாவது அடக்கி வாசிக்க கத்துக்கடா…! இப்ப பார்த்தியா
    மைனர் ஜாலி, மணிபர்ஸ் காலிங்கற மாதிரியாயொடுச்சு.

    அட.. இந்த டுவீஸ்ட்டை எதிர்பார்க்கலையே…! சிம்பிளா கல்யாணம்… இதுவும் நல்லாத்தான் இருக்குது.
    ஆனா, இது நல்லதுக்கா..?
    கெட்டதுக்கா…? புரியலையே..??
    😄😄😄
    CRVS (or) CRVS 2797

  2. Sis ungaluku en tha visagan mela ivlo kovamo pavama avan evlo pblm tha face pannuvan 😪ivan vera ipdi kalyanam pannitu vanthutane

  3. Super sis nice epi 👍👌😍 endha sugirthan mamanar enna evlo kevalama pesuraru evanga amaidhiya vandhurukka koodadhu pa😤 endha ponnu vera evanga renduperum kulla sandaiya kelapuraley🙄😢

  4. Jeni appa amma othukala na sugar unga amma anna anninirukangale avanga kitta solli kalyanama pani irukalam la . Selavu agumnu koraichitiya. Abarna vera ipo Adam pana aarambikira avala la tha ivanga rendu perukum prachanai varum pola

  5. எல்லாரும் சேர்ந்து விசாகன் வாழ்க்கையில் கும்மியடிக்க பார்க்குறாங்க.
    பாவம் அவனும் மனுஷன் தானே எவ்வளவு தான் தாங்குவான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!