நீயின்றி வாழ்வேது-38
விஷாகன் போன் அடிக்கவும், தண்ணீர்கேன் கடையில் வேலை செய்யும் அகஸ்டியன் அழைப்பு என்றதால் எடுத்தான்.
“அண்ணா.. அண்ணா… அந்தக்கா மகேஸ்வரி வீட்ல ஒரு ரவுடிவந்து கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணறான். கொஞ்சம் உடனே வாங்கண்ணா” என்றான்.
அகஸ்டியன் மகேஸ்வரி இருக்கும் பகுதியில் தான் வசிப்பது. அதனால் மகேஸ்வரியை முன்பு சேலையை இழுத்து வம்பு செய்தவன் வீடு தேடி வந்து கத்தி ஏழரையைக் கூட்ட, பயந்தவளாய் கதவை அடைத்து நின்றாள். ஆனாலும் வெளியே நின்றவன் “நைட்டுத் தனியா தானே இருப்ப. சரக்கு ஏத்திட்டு வந்து கவனிச்சுக்கறேன்” என்று கதவை உடைக்க அகஸ்டியன் வீட்டுக்கு வரும் போது இதனைக் கண்டு விஷாகனுக்கு அழைத்து விட்டான்.
விஷாகன் வந்து நேரம் கதவை தட்டி, “மகேஸ்வரி?” என்றான்.
“அண்ணா.. அண்ணா..” என்று கதவை திறந்தாள்.
மகேஸ்வரி மற்றும் அவள் தம்பி அருண் மட்டும் இருக்க, இரவு தனியாக இருப்பது சரியல்ல என்று தனது வீட்டுக்கு கூப்பிட்டான்.
அருண் நடுவில் அமர, மகேஸ்வரி பின்னால் அமர்ந்து வந்தாள். வழிநெடுகிலும் அழுதுக்கொண்டு வந்தாள்.
விஷாகன் வீட்டுக்கு வந்ததும் சுகன்யா எட்டி பார்த்து அதிர்ந்தார்.
” என்னடா இது.?” என்று பதறினார். மகன் சட்டெனக் கிளம்பி வேகமாய்ச் சென்றதும் பதறி வந்தார்.
வரும்போது ஒரு பெண்ணும் பையனும் என்றதும் கண்கள் விரிந்தது.
இதயம் பிடித்து நிற்க, “அம்மா இது கொரியர் ஆபிஸ்ல வேலை செய்யற மகேஸ்வரி தெரியும்ல. இது அவளோட தம்பி அருண். அங்க கொஞ்சம் பிரச்சனை. ஒரு குடிக்காரன் வம்பிழுத்து இவளிடம் தப்பா பேசறான். நைட்டு ஏதாவது அசம்பாவிதம் நடந்திடுமோனு இங்க கூட்டிட்டு வந்தேன். சாப்பிட வச்சி படுக்கச் சொல்லு. காலையில மீதியே பேசலாம்.” என்று கூற அன்னையின் அதிர்ச்சியான பார்வையில், “தப்பு நடந்தப்பிறகு அச்சோ ஹெல்ப் பண்ணாம போயிட்டோமேனு பீல் பண்ண முடியாதும்மா.” என்று கூறி அவனது அறைக்குச் சென்றான்.
சுகன்யாவுக்கு நிம்மதி வந்தது. மகன் சொல்வதும் சரிதானே.
“உள்ளவாம்மா.. உட்காரு” என்று சாப்பிட வைத்தார். அப்பா தற்போது தான் தவறியதாகவும் மெஸ் ஆரம்பித்த பொழுது வந்த ஒரு குடிக்காரனால் வந்த தலைவலி என்று விவரித்தாள்.
சாப்பிட்டு படுக்க, தலையணையைத் தரவும் ஹாலில் அமர்ந்தாள்.
சுகன்யா பாத்ரூம் போக, அபர்ணா உறங்கியிருக்க, சுகிர்தனும் அண்ணனின் அட்வைஸால் அவன் வீட்டுக்குப் போயிருந்தான்.
விஷாகன் போனை ஹாலில் வைத்துவிட்டுச் சென்றிருக்க, இரவு பதினொன்றுக்கு விருஷாலி விஷாகனுக்குக் கால் செய்தாள்.
மகேஸ்வரி தூக்கத்தில் அதிர்ந்து பயந்து போய் மெதுவாகப் போனை எடுத்தாள்.
இந்த நேரம் விஷாகன் தங்கிருக்கும் கதவை தட்ட மனமின்றி, ‘Shali’ என்ற பெயரை கண்டதும் ‘அக்கா’ என்று எடுத்தாள்.
“ஹலோ” என்று மகேஸ்வரி குரல் கேட்க, விருஷாலி அமைதியானாள்.
இந்த நேரம் பெண் குரல் என்றதும் விருஷாலி பேசவில்லை.
“ஹலோ.. அக்கா நான் மகேஸ்வரி பேசறேன்” என்று கூறிட அடுத்த நொடி சட்டென்று கத்தரித்தாள்.
மகேஸ்வரியோ மீண்டும் அழைக்கவில்லை. காலையில் விஷாகனிடம் கூறிடலாமென்று தவிர்த்து விட்டாள்.
பாதுகாப்பாய் இருக்கின்ற உணர்வோடு நிம்மதியாய் உறங்கினாள்.
அதிகாலை சுகன்யா எழுந்து காபி போட சென்றார். அபர்ணா கண்ணைக் கசக்கி எழுந்து வந்தாள். புதிதாகப் பதினைந்து வயது பையன் மற்றும் கொரியர் ஆபிஸில் வேலை பார்த்த பெண்ணும் இருக்க, சுகன்யாவை தேடினாள்.
“அபர்ணா.. நீ ஸ்கூலுக்குக் கிளம்பு. நான் பால் ஆத்தி வைக்கிறேன்” என்றார் சுகன்யா.
மகேஸ்வரிக்கு காபி நீட்டி “நிம்மதியா தூங்கனியா.? அதெல்லாம் நாலு தெருவுக்கு ஒரு குடிக்காரன் இருப்பான். தைரியமா இரு.” என்று கூறி நகர்ந்தார்.
“அம்மா… நம்ம பக்கத்து வீட்டை வாடகைக்கு விடாம குடோனா வச்சிருக்கேன்ல, அதைச் சுத்தம் செய்ய அகஸ்டியன் வருவான். க்ளின் பண்ணிட்டு இவங்க இரண்டு பேரையும் அங்க தங்க வையுங்க. மகேஸ்வரி வாடகையை நான் சம்பளத்துல கழிச்சிடுவேன்” என்று கூறவும் சுகன்யாவுக்கோ அதில் திருப்தி தான். ஆனாலும் விருஷாலிக்கு இவளை பிடிக்காதே என்று சிந்திக்க, “தேங்க்ஸ் அண்ணா… நானே வேற வீடு கிடைக்குமானு உங்களிடம் கேட்க நினைச்சேன். அண்ணா… நைட்டு பதினொன்னுக்கு விருஷாலி அக்கா கால் பண்ணினாங்க. ஹலோ நான் மகேஸ்வரினு பேசியதும் கட் பண்ணிட்டாங்க.” என்று கூறவும் விஷாகனுக்கு இதயம் தாறுமாறாய்த் தவித்தது.
அவளா போன் போட்டிருக்கா. அந்த நேரம் மகேஸ்வரி எடுக்கணுமா… கடவுளே… இதுல நைட்டு அவ ஏன் உன் போனை எடுத்தானு கேட்பா. விட்டா பெட்ரூம்ல இருந்தியா இல்ல அவ வீட்டுக்கு போனியானு சண்டை பெரிசாகப் போகப் போகுது.’ என்றது மனம்.
கைமீறி நடக்கும் சூழ்நிலைகளைக் கையாளாத தனத்தோடு வேடிக்கை பார்த்தான்.
“சரிமா நான் பேசிக்கறேன்” என்று போனை எடுத்து ‘வாட்டர் சப்ளை கடைக்கு’ கிளம்பினான்.
கொரியர் ஆபிஸ் பத்து மணிக்கு தான் திறப்பது தண்ணிகேன் கடை அப்படியல்ல. சிலர் அதிகாலையில் வேலைக்குப் போகும் ஆட்கள் போன் செய்வார்கள்.
அகஸ்டியனும் வந்திடுவான் அதனால் விஷாகன் இடத்தைச் சொன்னால் அவன் சென்று போட்டுவிட்டு வருவான்.
இன்று விருஷாலியை பார்க்க கிளம்பத் தயாரானான். ஆனால் மகேஸ்வரிக்கு நல்ல இடமும், பாதுகாப்பும் கொடுத்துவிட்டு பிறகு செல்ல முடிவெடுத்தான்.
அவன் அலுவலகத்தில் பணிப்புரியும் பெண் என்ற அக்கறை.
‘விஷாகான் வாட்டர் சப்ளை’ கடை வந்தும் குட்டி யானையில் டிப்பார்ட்மெண்ட் கடைக்கு இருபது கேன் போட கூறவும், அகஸ்டியன் சென்றிட, விஷாகன் விருஷாலி புகைப்படத்தைக் கண்டு, அவளுக்கு அழைத்தான். அவளோ மீண்டும் எடுக்கவில்லை. அதே சமயம் மொத்தமாய்ப் போனை அணைக்கவில்லை.
மகேஸ்வரியை பற்றியும் அன்று நடந்தவையும், நேற்று நடந்தவையும் விலாவரியாக டைப் செய்து வாட்ஸப்பில் அனுப்பினான்.
விருஷாலி அதை எடுத்துப் படித்ததாக இரண்டு ப்ளூ டிக் காட்டியது.
அப்பவும் பதில் அனுப்பவில்லை. தொலைப்பேசி அழைப்பும் எடுக்கவில்லை. ‘சுத்தம் பஞ்சாயத்து கூட்டி கதம் போடப்போறாங்க” என்றது அவன் மனசாட்சி.
‘ இல்லை… என் ஷாலி என்னிடம் வருவா.” என்று மீண்டும் நம்பினான்.
நான்கு நாட்கள் ஆனது.. மகேஸ்வரி விஷாகன் வீட்டுக்கு வாடகைக்கு வந்து.
விருஷாலி வீட்டில் அன்னபூரணி அப்பத்தா, அடுத்த நாளே வந்து பார்த்து புளிசாதமும் எலுமிச்சையும் கொண்டு வந்து, உளுந்துகளி லட்டுக் கொண்டு வந்தார். “பள்ளிக்கூடம் போகணுமா? இந்த நிலையில போகாத” என்று கூற, “அது பள்ளிக்கூடம் இல்ல காலேஜ். இது முடிச்சா டிகிரி வாங்கிடுவேன். போகாம இருக்க மாட்டேன்.” என்றாள்.
‘தங்கை படுத்தபடுக்கை என்றதும் சின்னதுக்கு என்ன வாய்’ என்று எண்ணி தங்கையைக் கண்டார். உயிர் எமனின் வாசலுக்கும் வீட்டுக்கும் நடை நடப்பது அறிந்ததார்.
பேத்தியிடம் உடலை கவனித்துக் கொள்ளக் கூறிவிட்டு தங்கையைக் கண்டு கண்ணீரை உகுத்தி சென்றார்.
அடுத்த நாள் செந்தூரன் செல்லம்மா தாத்தா ஆச்சி வந்தார்கள்.
அவர்களும் பழமும் பாதம் முந்திரி வாங்கி வந்து நீட்டினார்கள்.
பிடிக்கின்றதோ இல்லையோ மூன்றாவது நாள் செல்வகுமாரும் தாமரையும் கூட அன்னபூரணியின் வற்புறுத்தலில் விருஷாலியை பார்த்துவிட்டுச் சென்றார்கள்.
நான்காம் நாள் விருஷாலிக்கு தன்னவன் வரவில்லையென்ற வாட்டம் லேசாய்த் துளிர்த்தது.
அவன் நெஞ்சில் சாய மனம் ஏங்கியது. இந்தப் பிடிவாதம், ஈகோ இரண்டும் மௌவுனவிரதத்தை மேற்கொள்ள வைத்தது.
ஐந்தாம் நாள் செம்பருத்தி அம்மாச்சியோ உயிரை இழுத்து பிடிக்க இயலாமல் சுவாசத்தை விடுதலை செய்தார்.
உதயகுமாருக்கு பிறகு இந்த இறப்பு நடந்தாலும், செம்பருத்தி அம்மாச்சியின் ஆரோக்கியம் மோசமானதால் பலரும் இந்த இறப்பை எதிர்பார்த்திருந்தனர்.
விவேகிடம் பணம் பற்றாக்குறையாக, சங்கரன் கொடுத்தார். அன்னத்திற்கு மனம் மகிழ்ச்சியில் மிதந்தது.
ஊரிலிருந்து விஷாகன் குடும்பத்தினருக்காகப் பிணத்தை எடுக்காமல் காத்திருந்தனர்.
விருஷாலி கர்ப்பமாக இருப்பது அங்கு வந்த அனைவருக்கும் தெரியவந்தது.
அவள் அழும் போதெல்லாம் யாராவது வந்து “போற வயசு தான் அழாத ஆத்தா” என்று சாந்தப்படுத்தினார்கள்.
சுகிர்தன் ஜெனிபரை அழைத்து வந்திருந்தான். இறப்பை கண்டும் சடங்கில் செய்வதையும் வேடிக்கை பார்த்தாள். ஊர்க்காரர்களோ சுகிர்தன் மனைவி என்று கிசுகிசுக்க அவளையும் சிலர் வேடிக்கை பார்த்தார்கள்.
சுகிர்தன் வீட்டுக்கு சென்ற நேரம் தந்தை பேசியதற்கு வாதம் செய்துவிட்டு வந்ததைக் கூற தவறாக எண்ணிவிட்டேன் என்று கண்ணீர் சுரந்தான்
“அட லூசே… நான் சுயநலவாதி தான் ஆனா உன்னை விட்டுக்கொடுத்து எங்கப்பா சொல்லறதுக்குத் தலையாட்ட மாட்டேன். இனி அவர் நம்ம விஷயத்துல தலையிட மாட்டார். நல்லா புரியற மாதிரி சொல்லிட்டேன். கர்த்தர் மேல ப்ராமிஸ் பண்ணிருக்கார். இனி நம்ம விஷயத்துல மூக்கை நுழைக்க மாட்டேன்னு. நானும் தப்புப் பண்ணிட்டேன் பெருமையா பேசறதா நினைச்சி எங்கம்மாவிடம் நான் என்னைப் பேச, அவங்க உன்னை மட்டமா நினைச்சிட்டாங்க. நீ எனக்குச் செலவு பண்ணற, நான் வீட்டுக்குச் செலவு பண்ணறேன்னு சொல்லிட்டேன்’ என்று அவர்கள் பிரச்சனை சுமூகமானது. சுயநலமாய் இருந்தாலும் தங்கள் வாழ்விலும் தெளிந்தனர் இந்த ஜோடிகள்.
அபர்ணா தான் இங்கயும் ஆடிக்கொண்டு இருந்தாள். அவளையும் ஊரில் சொந்தமும் உறவும் ‘உதயகுமார் மகளா “ம்ம்ம்.” என்று பெருமூச்சை விடுத்து அதிருப்தியை தந்தனர். செல்வகுமாரால் பரவியது தானே எல்லாம்.
சுகன்யா சம்பந்தி அன்னத்துக்கு ஆறுதலாக அமர்ந்து கொண்டு வேதனையைக் குறைத்தார்.
விருஷாலியோ ‘அவரைக் காணோமே?’ என்று தேடினாள்.
கண்ணுக்கு தட்டுபடவேயில்லை. பிடிவாதத்தை நகர்த்தி விட்டு, அபர்ணாவிடம், “உங்க பெரியண்ணா எங்க?” என்று கேட்டாள்.
“தெரியாத மாதிரி கேட்கறிங்க. அதோ அண்ணா உன்னையே பார்த்துட்டு இருக்கே” என்று ஒருமரத்தை சுட்டிக்காட்ட அதில் சாய்ந்து அவளைத் தான் நேசம் ததும்பப் பார்த்தான்.
அவனைக் கண்டதும் சுதாரித்து அப்படியே தலைகுனிந்தாள்.
பக்கவாட்டில் அவன் நின்று தன்னையே விழுங்குவதைக் கண்டு அசௌவுகரியம் அடைந்தாள்.
விஷாகனோ விருஷாலியின் தட்டை வயிற்றைக் கண்டு அதிலே பார்வை பதித்தான்.
அன்னபூரணி அப்பத்தாவால் சேலைகட்டியது வேறு சங்கடமாய் மாற, சேலையை இழுத்து விட்டாள்.
விவேக் நீர்மாலை எடுத்து செல்ல சுகிர்தனும் சென்றான்.
ஜனனமும் மரணமும் இயல்பானது. அதுவும் செம்பருத்தி அம்மாச்சி இறப்பு அப்படியென்றும், யாரையும் கலங்க வைக்கவில்லை. நல்லா இருந்தார் பேத்தி கல்யாணத்தைக் கண்ணாற பார்த்துவிட்டு, பத்துநாளா படுத்தபடுக்கையில இருந்து வலியில்லாம வேதனையில்லாம உயிர் பிரிந்தது என்று இறப்பை ஜீரணித்துக் கொண்டார்கள்.
விஷாகனோ, விருஷாலி பிள்ளை உண்டானதால் எந்தக் காரியத்திலும் செய்யவில்லை. மனைவி கர்ப்பவதியாக இருந்தால் பேரன் இறப்புச் சடங்கில் பங்கேற்க கூடாது என்று விவேக்கிற்குத் துணைக்கு மட்டும் நின்றான்.
வயதான உடலெனச் சட்டென இறப்புச் சடங்கை எல்லாம் செய்து, விரைவாகவே எடுத்துத் தகனம் செய்யச் சென்றனர்.
அதன் பின் வீடு கழுவி பணியைச் செய்தது வனஜா தான். காயத்ரி கண்டுக்கவில்லை. ஏற்கனவே விவேக்கிற்குப் பெண் கொடுக்க முடிவெடுத்தவர் தான். அன்னமும் விருப்பப்படுவது போலத் தோன்றியது. மகளின் தோழி, பிற்காலத்தில் ஒருவருக்கு ஒருவர் உறவில் துணையாக நிற்பாரென்ற எண்ணமே காரணம்.
வீடு சின்னதென்பதால் செந்தூரன் செல்லம்மா அவர்கள் வீட்டுக்கு சென்றார்கள். காலையில் வருவதால் ஜெனிபரையும் அபர்ணாவையும் அழைத்துச் சென்றார்.
அன்னபூரணி அப்பத்தா எதிரில் விருஷாலி விஷாகனை கண்டு முகம் தூக்கவில்லை. மரியாதையாகவே காபி நீட்டி “எடுத்துக்கோங்க” என்றாள்.
விவேக்கும் தூரத்தில் தங்கை மச்சானுக்குப் பணிவிடை செய்யக் கண்டு நிம்மதியானான்.
விருஷாலி விஷாகன் இருவரும் பகிரங்கமாகப் பேசவில்லையே தவிர, அடிக்கடி அவள் கண்கள் அவன் தன்னைக் காண்கின்றதா என்று தேடியது.
அவனும் நான் ‘இங்க தான் இருக்கேன்.’ என்று அடிக்கடி முன்னால் வந்து வருகைபதிவேட்டில் ஆஜராகுபவன் போல நின்றான்.
அன்று மட்டும் அல்ல அடுத்த இருநாளும் அவளை… அவளைப் போலவே பேசாமல் வதைத்து பார்வையிட்டான்.
விருஷாலிக்கு அழுகையே வந்துவிட்டது. வனஜாவிடம் ‘அவரெல்லாம் என்னைக் கண்டுக்க மாட்டார்.’ என்று கண்ணைக் கசக்கினாள்.
தமிழரசி டீச்சர் வீட்டுக்கு வர, ஆசையாய் அவனைக் கூப்பிட்டு அறிமுகப்படுத்தினாள்.
அவனும் முகம் காட்டாமல் நன்றாகவே பேசி பழகினான். நன்றி நவில்ந்தான்.
அனைத்தும் சுபமாக மாற இறப்பு நிகழ்ந்து நாளாவது நாள் விஷாகன் சுகிர்தன் மற்றும் ஜெனிபர் மூவரும் சென்னை கிளம்பினார்கள்.
சுகன்யா அபர்ணாவுக்கு விடுமுறை கடிதம் தந்துவிடலாமெனக் கூறிவிட்டு, இருவரும் அங்கேயே இருந்தார்கள்.
தன்னிடம் பேசாமல் சென்றவனைக் கண்டு மனதில் வசவு மொழிகளை அள்ளி தெளித்து வஞ்சமில்லாமல் திட்டினாள்.
சென்னை வந்ததும் சுகிர்தன் ஜெனிபர் அவர்கள் வீட்டை நோக்கி நடையிட, விஷாகன் தனிமரமாய் வீட்டில் திரிந்தான்.
ஹாலில் என் விருஷாலி கன்னம் சப்பியா இருக்கு. லைட்டா வெயிட் போட்டிருக்கா. எத்தனை மாசம்னு தெரியலையே? என்று திருமணமாகி இப்பவரை உள்ள நாட்களை எண்ணினான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

Very interesting
Super vishakan. But shali should understand you. Shali waiting for you. Intresting
Interesting 😍😍😍😍😍
Super sis nice epi 👌👍😍 vrushali konjam yerangi varalam paavam vishagan renduperum vittu kuduthu ponal vazkhai sirakkum🙏
Superb epi nice going
good going………………..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Vishakan erangi dan vanthan bt iva rmba panunala ipa nala kasta patatum
Vishagan avalukana time kuduthutan ava than yosichi mudivu pannanum atha vittu tu avan ah korai solli no use
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஏற்கனவே விருசாலி கோவமா இருக்கா. இப்போ இவன் வேற அவ கிட்ட பேசாமயே வந்து இருக்கான் இப்ப இன்னும் அதிகமா கோபப்பட மாட்டாளா.
veetuku vanthu irukan nee than pesanum pesanum mela sanjikanum ninacha mattum pothuma vantha kitta manasula irukauratha pesi sanda potu kuda iruka vendiyathana ithula ego pakuriya illa sandhega paduriya
👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
நீயின்றி வாழ்வேது…!
பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 38)
இவ தானே எதையும் தெரிஞ்சுக்காம, புரிஞ்சுக்காம, கோவிச்சுண்டு, மூஞ்சியை தூக்கி வைச்சிட்டு போயிட்டா.
இப்ப பார்க்கலையே, பேசலையேன்னு புலம்பினா ஆச்சா…? இல்லை, ஃபீல் பண்ணினாத்தான் போச்சா…?
இதுக்குப் பேசாம ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசினாலே
பாதிப் பிரச்சினைகள் தீர்ந்து போயிருக்கும், இந்த பிரிவும் தேவையில்லாததா ஆகி இருக்கும். தேவையா..?
உங்களுக்கு இது தேவையா ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
அருமை அருமை அருமை அருமை அருமை