புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

நீயின்றி வாழ்வேது-40(முடிவுற்றது)

நீயின்றி வாழ்வேது-40

செம்பருத்தி அம்மாச்சிக்கு படையலிட்டு, சாதத்தைக் காக்காவிற்கு வைத்து முடித்தனர்.

சற்று இடப்பற்றாகுறையால் தள்ளு முள்ளோடு பந்தி பரிமாறப்பட்டது.

விருஷாலிக்கு மட்டும் கூழ் காய்ச்சி படையலிட்ட கறிக்கூழம்பை அதில் சேர்த்துக் கொடுக்கக் குடித்தாள்.

“சாப்பிடலையா?” என்று கேட்டான் விஷாகன்.

“வாந்தி வருதுங்க இப்படிக் குடிச்சா தெம்பா இருக்கு.” என்று பதில் தந்தாள்.

“இங்க ஜூஸர் வாங்கி வச்சிடறேன். பழத்தை ஜூஸ்போட்டு குடி” என்றான். தலையாட்டி மிச்ச கூழை குடித்து முடிக்க, அவள் செவ்விதழோரம் வழிந்த கூழ்பதத்தைத் தொட்டுச் சுவைத்தான்.

வனஜாவோ தண்ணி குடத்தைச் சுமந்தவளாக வீட்டுக்குள் வர விஷாகன் விருஷாலியருகே இருந்து எழுந்தான்.

“உங்கம்மா என்னை வேலை வாங்கியே என் இடுப்பு எலும்பை ஓடச்சிடும்” என்று கூறி குடத்தை வைத்தாள். விருஷாலி சிரிக்க, வனஜா அடுத்தப் பணியைக் கவனிக்கச் சென்றுவிட்டாள்.

வனஜா சென்றதும், விருஷாலியை அழைத்துக் காரில் இரண்டு சுற்று சுற்றிவிட்டு வருவதாக அழைத்துச் சென்றான். யாரும் இவர்களைத் தடுக்கவில்லை. கார் வாங்கி மனைவியை அழைத்துச் செல்வதில் குறை கூறிடமுடியுமா?

செல்வகுமாருக்கு தான் மனசுக்குள் புகைந்தது. தன் மகன் செழியன் காதல் திருமணம் முடித்தாலும் திருட்டுத்தனமாகப் பேசிக்கொள்கின்றார்கள். வெளியே அதெல்லாம் அவனைத் தலைமுழுகிட்டோம் என்று முரணாகப் பேசுவார்கள். இப்படிப் பேசிவிட்டால் சமூகம் கேள்விக்கேட்டிடாது என்ற மேதாவித்தனம்.

மனதுக்குப் பிடித்தால் காதலை ஆதரிக்கலாம். இல்லையா மகன் வாழட்டும் என்று விடலாம். இரண்டும் பாதிப் பாதி எடுத்து மனதை வதைத்து மற்றவரை கண்டு பொறாமையும் உருவாக்கி கொள்வார்கள். செல்வகுமார் அந்த வகையைச் சார்ந்தவர்.
விஷாகன் கார் வாங்கிவிட்டான் இதில் உடனே மனைவி கர்ப்பம் என்றதும் சலித்துக்கொண்டார். இவரின் பார்வைபடாத தூரம் கார் பறந்தது.

விஷாகன் விருஷாலியை ஊரை தாண்டி பாதித்தூரம் சென்றதும், “இங்க தான் இடம் கிடக்குதுல… விவேக்கை வீடு கட்ட சொல்லு.” என்றான் விஷாகன்.

“ஏன்… கஷ்டமாயிருக்கா? ஆளுங்க வந்துட்டு போக இடம் குறைச்சலாயிருக்குனு?” என்று சோகமானாள். இதோ இப்பொழுது கூடத் தனிமையாகப் பேச காரை எடுத்துக்கொண்டு வரும் கட்டாயமானதே என்று விருஷாலி வாடினாள்.

“அட லூசே… உங்கண்ணாவுக்கும் வனஜாவுக்கும் கல்யாணம் ஆனா எங்க தங்குவாங்க. ஏதோ எப்பயோ வர்ற நமக்குப் பரவாயில்லை. அவன் காலம் பூரா குடித்தனம் பண்ணணும்ல.” என்று மனைவி கூறாவிட்டாலும் விவேக்கின் காதல் அறிந்தவனாய்ப் பேசினான்.

” விவேக் சொன்னானா? ஏதோ என்னிடம் மச்சானுக்குச் சொல்லாதே, ஒரு வேலையும் நிரந்தரமா இல்லை உங்கண்ணா லவ் பண்ணறானா லவ்வுனு நினைக்கப் போறதா சொன்னான்.” என்று ஐயத்தைக் கேட்டாள்.

“அவனும் சொல்லலை நீயும் சொல்லலை… நானா தான் கவனிச்சேன். பந்தி பரிமாறினப்ப, நம்ம கல்யாண தன்னைக்கும் வனஜாவிடம் உரிமையா வேலையை ஏவினான்.
அந்தபிள்ளையும் அவனிடம் ஆசையா வந்து வந்து நின்னுச்சு” என்று தோளைக் குலுக்கினான்.

“இதெல்லாம் உங்க கண்ணுலபட்டுடும்” என்று நக்கலாய் கேட்டாள்.

“அட உன்னைப் பார்த்தப்பிறகு என் மனசுக்குள்ள உன்னைப் பார்க்கணும், உன் முன்ன நிற்கணும். உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா. இப்படியெல்லாம் யோசிக்கறப்ப காதல் இருந்தா இந்தக் கிறுக்குத்தனம் வரும்னு புரிஞ்சுது.

உன் பிரெண்ட் உன்னைப் பார்க்க வர்றப்ப எல்லாம் மனசுல திட்டுவேன். தனியா இருந்தா இந்த விவேக்கும், இந்த நண்டு கொடுக்கும் வந்துடுதேனு. அப்ப தான் அந்த நண்டு கொடுக்கு உங்கண்ணாவிடம் கண்ணுலயே பேசுச்சு. விவேக்கும் முகம் காட்டி திட்டாம திரும்பி நின்னு சிரிப்பான். எதிர்ல கண்ணாடில நான் பார்த்தேன்.

சரி… எதிரெதிர் வீடு விவேக் லவ் பண்ணிட்டான்னு புரிஞ்சுது.

ஷாலிம்மா…. வீடு கட்டினா தான் அடுத்து அவனுக்குக் கல்யாணம் பண்ண வசதியா இருக்கும்.

சரி ஷாலு… மத்ததை விடு. நம்ம கதை பேசுவோம்…. வண்டி பிடிச்சிருக்கா… எதுவுமே சொல்லலை.” என்று ஓரமாய் நிறுத்திவிட்டு கேட்டான்.

“என்ன சொல்லறது… சத்தியமா தெரியலையே… எனக்கு இப்படிக் கல்யாணம் ஆகும். கண்ணுக்கு லட்சணமா ஒருத்தர் வருவார். அன்பா கையில தாங்குவார். அவர் இல்லாம நான் இல்லைனு என்னை உணரவைப்பார். இப்படி எதையும் நினைச்சதில்லை.

வீட்டு சூழ்நிலைக்குப் படிச்சிட்டு ஒரு வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கணும்னு மட்டும் தான் மனசுல நினைச்சேன்.

எப்ப உங்களைக் கட்டிக்கச் செம்பருத்தி அம்மாச்சி கேட்டுதோ, முதல்ல பயந்தேன். நீங்க சிட்டி நான் கிராமம். நீங்க வசதி நாங்க இல்லாதப்பட்டவங்க. எனக்கு உங்களைப் பிடிக்கும். உங்க ரசனை எப்படியோனு பயந்தேன்” என்றாள்.

”ஷாலிம்மா… ரொம்பச் சொந்தபந்தங்களோட இருக்கறவங்க, யாரும் இல்லாதவங்களை, தாராளமா ஏற்றுச் சொந்தமாக்கி, உனக்கு இவ்ளோ சொந்தக்காரங்க இருக்காங்க பாரு, நீ யாருமில்லாத அனாதை என்று சொல்லாதேனு புரிய வைக்கணும்.

அதே மாதிரி தான் பணம் ஒரளவு இருக்கறவங்க, பணம் இல்லாட்டினாலும் குணமா பொண்ணைத் தேடி கல்யாணம் பண்ணி, அவங்க வாழ்வாதாரத்தை லைட்டா தூக்கி விடலாம் தப்பில்லை.

அப்ப தான் இந்த உலகத்துல சமநிலையே உருவாகும்.

உன் அண்ணா விவேக்கிற்கு மாரல் சப்போர்ட் மட்டும் பண்ணினாலே அவன் எல்லாம் பெரிய ஆளா வருவான். கடுமையான உழைப்பாளி. நல்ல புரிந்துக்கற பக்குவம். இந்த வயசுலயே குடும்பப் பாரத்தை ஏற்று, தங்கைக்கு எப்படிச் சீரும் சிறப்புமா மேரேஜ் பண்ணினான் தெரியுமா. எனக்கு உன்னைப் பிடிச்ச மாதிரியே உன் அண்ணாவையும் பிடிக்கும் டி.

தேவையில்லாமா சின்னப் புள்ளதனாமா பேசாதே.” என்று அவள் உதட்டை தன் இரு இருவிரலால் பிடித்துத் தன்னருகே இழுக்க முயன்றான்.

அவன் கையைத் தட்டிவிட்டு, லேசாய் நாணியபடி ” நான் சின்னப்புள்ளையா இருந்தப்ப, நீங்க அன்னபூரணி அம்மாச்சி வீட்டுக்கு வந்திங்க. அப்ப ‘நீங்க பிளஸ்டூ முடிச்சிட்டுக் காலேஜ் போகணும்’னு லீவுக்கு வந்தப்ப உங்க அப்பத்தாவிடம் பேசிட்டு இருந்திங்க.

நான் அப்போ லீவுக்குச் செம்பருத்தி அம்மாச்சி கூட வந்திருந்தேன்., “என் கன்னத்தைப் பிடிச்சி “அப்பத்தா.. யார் இது.. அழகா பொம்ம மாதிரி இருக்கானு என்னைத் தூக்கி சுத்தினிங்க. நான் கூட உங்க தோள் முதுல ஏறியிருக்கேன்.

செம்பருத்தி அம்மாச்சு ‘ஏலேய் விடுல ஆளாகற வயசுலிருக்கா’னு உங்களைத் திட்டினாங்க.
நீங்க கூடக் கீழே இறக்கிவிட்டுக் கன்னத்தைக் கிள்ளிட்டு போனிங்க.

அப்பதிலருந்து உங்களையே பார்த்திட்டு இருப்பேன். இங்க நிறையப் பேர் திருவிழாவுக்கு வர்றப்ப, கத்தி அரட்டி உருட்டி பேசுவாங்க. நீங்க மட்டும் சைலண்டா பேசுவிங்க. லைட்டா சிரிப்பிங்க. நான் அப்ப எல்லாம் ரசித்துப் பார்த்திருக்கேன். ரொம்ப நல்ல மச்சான் என்று சந்தோஷப்படுவேன்.” என்று கண்கள் துள்ளளாகத் தன்பசுமை எண்ணத்தைக் கூறினாள்.

விஷாகனோ, “ஷாலிம்மா.. சத்தியமா நீ முதுகு மேல ஏறியதோ, நான் உன்னைத் தூக்கியதோ நினைவில்லைடி. அப்ப நீ என்னை லவ் பண்ணினியா?” என்று ஆசையாகக் கேட்டான்.

“அச்சச்ச…. அது லவ் கிடையாது. லவ்னா என்னனு கூடத் தெரியாது. ‘பிடிக்கும்’ அவ்ளோ தான்.

எப்ப உங்களைப் பத்தி பேச்செடுத்து கட்டிக்கறியானு வீட்ல கேட்டாங்களோ, அப்ப தான் பழைய எண்ணங்களோட தாக்கம் மனசுலயிருந்து மீண்டும் தோண்டி எடுத்துட்டு வந்தேன்.

அந்த நிமிஷத்துல இருந்து வேண்டுமின்னா நான் உங்களைக் காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்.” என்றதும் தனியாகக் காருக்குள் இருக்கும் தைரியத்தில், மனைவியின் செவ்விதழை முத்தமிட்டான்.

இத்தனை நாள் பிரிவும் கோபமும் நீங்கி அவனின் அருகாமையும், நேசமும் கலந்த இந்தக் காதல் முத்தத்தில், பெண்ணவளும் சுற்றம் மறந்தாள். நெடுநேரம் இதழை சுவையேற்றியான்.

ரோட்டில் ஆடுகள் ‘மேஹே..மே..ஹே.” எனக் கத்திடும் சத்தம் கேட்டு விருஷாலி அவனைத் தள்ளிவிட்டாள்.

“ஷாலி..” என்று மீண்டும் முன்னேற சென்றவனிடம், “அங்க பாருங்க ஆட்டு மந்தை” என்று கூறி மூச்சை வெளியிட்டு உதட்டினை துடைத்தாள்.

ஆடுகள் சத்தம் முன்னே வர, பின்னால் தொலைவெட்டில் தான் ஒரு மனிதன் குச்சியை வைத்து ஓட்டியபடி வந்தான்.

“ஷாலிம்மா… அய்யோ… என்னைச் சூடேத்திட்டு தள்ளிவிடற” என்று அவளிடையைக் கிள்ளினான்.

“அச்சோ… உள்ள குழந்தைக்கு வலிக்கும்.” என்று அவள் தன்னிடையைத் தேய்க்க ஆரம்பித்தாள்.

“முதல்ல வீட்டுக்கு வண்டியை விடுங்க. நீங்க வந்தது எங்க அம்மாச்சியோட முப்பதாம் நாள் சாமிகும்பிட, வீட்ல யாராவது உங்களை என்னையும் பேசப்போறாங்க. வீட்டுக்குப் போகலாம்” என்று கூறவும் “ஒரே ஒரு லாங் கிஸ்ஸடிச்சிட்டுப் போகலாம்” என்று ஷாலியருகே வர, பின்னால் பஸ்ஸின் ஹாரன் சத்தம் காதை பிளந்தது.

“பொறுக்காதே…. நடுவுல நந்தி மாதிரி அப்செட் பண்ணிடுவாங்களே” என்று வண்டியை எடுத்தான். என்னதான் ஓரமாக நிறுத்தியிருந்தாலும் ஒரு வண்டியை கடந்து செல்லும் போது இப்படி ஹாரன் அடித்தார்கள். யாரேனும் பேருந்தை பாராது கார் கதவை திறக்க நேரிட்டால்… அதனால் முன்னெச்சரிக்கையாக அந்தப் பேருந்து ஓட்டுனர் ஹாரன் அடித்தார்.

விஷாகன் விருஷாலி வீட்டுக்கு வந்தப்போது பந்தியில் கைநனைத்தவர்கள் உடனுக்குடன் வேலை பார்க்க சென்றிருந்தார்கள். பெண்கள் மட்டும் ஆற அமர சாப்பிட்டு, செம்பருத்தி அம்மாச்சி பற்றிப் பேசி அவர்கள் நகன்றிடவும் நேரம் கழிந்தது.

செல்வகுமாரும் தாமரையும் சென்றதால், அன்னபூரணி மட்டும் இருந்தார்கள்.

விஷாகன் வரவும் புறப்படத் தயாராய் சுகன்யா துணிமணி லக்கேஜை எடுத்து வைத்திருக்க, விருஷாலியை ஏறிட்டான்.

‘இங்கயேயிரு… காலேஜ் படி, நான் மாசம் ஒருமுறை வருவேன்’ என்ற வார்த்தைகள் மறந்து ‘இவளை விட்டுட்டு பிரியணுமா?’ என்ற தவிப்பு முன்வந்து இதயத்தை வலிக்க வைத்தது.

விருஷாலியோ அவன் முகம் கண்டு, “நான் வேண்டுமின்னா உங்களோட வரட்டா? பரீட்சைக்கு மட்டும் எழுத பர்மிஷன் வாங்கறேன்.” என்று கேட்டாள்.

விஷாகனோ மறுப்பாய் தலையசைத்து, “முன்ன கேட்டது அவசியம். இப்ப கேட்டா தப்பு. நம்ம பிரிவுக்காக அப்படியெல்லாம் கேட்க கூடாது. அப்பறம் இந்த மாதிரி உதவியெல்லாம் மத்தவங்களுக்கு யாரும் செய்ய மாட்டாங்க.

ஒரு உதவி செய்தா அதுல நியாயம் இருக்கணும். நான் சொன்ன சொல்படி மாசத்துக்கு ஒருமுறை வந்துடுவேன். இன்னிக்கு என்ன தேதி குறிச்சு வச்சிக்கோ. அடுத்த மாசம் இதே நாள் வருவேன் நீயின்றி எனக்கு வாழ்வேது ஷாலிம்மா” என்று கூற, லேசாய் கண்கள் கலங்கியது விருஷாலிக்கு.

தன்னவன் செல்வது அவளுக்கும் விருப்பமில்லை. பிரியாமல் இருப்பது காதல். இவளும் மனதால் பிரியவில்லையே. உடல் மட்டும் இங்கே உள்ளது. அவள் இதயம் அவனிடம் தான் துடித்துக் கொண்டிருக்கிறது.

விஷாகன் காரில் ஓட்டுனர் இருக்கையில் அமர, சுகிர்தன் முன்னிருக்கையிலும், பின்னிருக்கையில் ஜெனியும், சுகன்யா மற்றும் அபர்ணா அமர்ந்திட, அனைவரையும் பார்த்து கையசைத்து விடைத்தரக் காரை கிளம்பினான்.

விஷாகன் விருஷாலி எண்ணங்களைச் சுமந்து பயணித்தான். அவளோ அவன் மீண்டும் எப்பொழுது வருவானெனத் தேதியில் வட்டம் போட்டுக் காத்திருக்கத் துவங்கினாள்.


விஷாகன் சென்னை வந்ததும் முதலில் சுகிர்தன்-ஜெனிபரை அவர்கள் வீட்டில் இறக்கிவிட்டு, நேராகத் தனது வீட்டிற்கு வந்தான்.
அபர்ணாவோ இன்றும் மட்டம் போட முயன்றவளை விஷாகன் அதட்டுப்போட்டு பள்ளிக்குக் கிளம்பக் கூறினான்.

ஏற்கனவே ஏசி அறையென்று அபர்ணா பழகினாலும், போனை மட்டும் தாய் அருகே வைத்து, உணவு அட்டவணைப் போல மாலை ஒரு மணி நேரம் மட்டும், விஷாகன் ‘பேரண்ட்ஸ் கன்ட்ரோல்’ போட்டு தரவிறக்கம் செய்த விளையாட்டில் விளையாட அனுமதிக்கப்பட்டது.

மற்ற நேரம் போனை எடுக்கக் கூடாதென்று விஷாகனின் கட்டளையியற்றப்பட்டது.

தந்தையின் ஸ்தானம் அவனுக்கு வரபோகின்றது. முதலில் தங்கையை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்ற பொறுப்பால் இந்தக் கட்டளைகள்.
‘தாய் தந்தை இருந்து வளர்த்த பெண்ணாக இருந்தால் இப்படி இருப்பாளா’ என்ற ஒரு சொல் கூட வராத அளவிற்கு அவளைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்தான்.

வீட்டில் சாப்பிட்டு, கொஞ்சம் உறங்கி, புத்துணர்வு பெற்றதும் ‘விஷாகன் வாட்டர் சப்ளை’ கடைக்கு வந்தான். அங்கே அகஸ்டியனோடு புதுப்பையன் மோகன் தண்ணிகேனை அடுக்கிக் கொண்டிருந்தான்.

கொரியர் அலுவலகத்தை மகேஸ்வரி மற்றும் வளவன் பார்ப்பதால் இங்கு வேலை முடித்துக் கொண்டு அங்கும் வந்து சேருவான். குறிப்பிட்ட நேரம் எங்கு இருந்தால் சரியாக வருமென்ற தெளிவு தற்போது புரிந்ததும் இலகுவானது.

காலை ஏழு டூ பத்து தண்ணிகேன் கடையிலும், பத்து டூ ஒன்று கொரியர் அலுவலகம். மதியம் சாப்பிட ஒன்று டூ இரண்டு வீட்டில்… பின்னர் தண்ணீர்கேன் கடை கொரியர் அலுவலகம், ஒன்பது ஒன்பதரைக்கு வீடு என்று நேரத்தை பகிர்ந்து வாழ ஆரம்பித்தான்.

சொன்னதைப் போல அடுத்த மாதம் விருஷாலியை காண வந்தான். அவள் கல்லூரி வாசலில் காரில் சாய்ந்து, விருஷாலிக்காகக் காத்திருக்க, இவனைக் கண்டு வேகமாய் நடந்தாள்.

அவசரமாய் வரவும் வனஜாவை மறந்து செல்வதை வைத்து நாளை கிண்டல் செய்வாளோயென்று திரும்பி பார்த்து கையை நீட்டினாள்.

வனஜாவோ “நீ போபுள்ள… நான் பஸ்ல வர்றேன்னு. அண்ணா உன்கூடத் தனியா பேச ஆசைப்படும்” என்று கூறினாள்.

“நீ வா ஷாலி… விவேக் வந்து உன் பிரெண்டை பிக்கப் பண்ணிப்பான். அந்த லவ்பேர்ட்ஸை நாம பிரிக்க வேண்டாம்” என்று தன்னவளை சிவக்க வைக்க முயன்ற வனஜாவை, அவன் பேச்சு சிவக்க வைத்தது.

“அண்ணா.” என்று குங்குமமாய்ச் சிவந்து விருஷாலி பின் ஒளிந்தவளை, “தெரியும் மா. கங்கிராட்ஸ்.” என்றவன் ஷாலியை இழுத்துக் காரில் ஏற்றினான்.

விருஷாலி வனஜாவுக்கு டாட்டா காட்ட, கார் கிளம்பியது.

கார் புள்ளியாய் மறையவும் “அங்க யாருக்கு டாட்டா காட்டற” என்று இருசக்கரவாகனத்தை அவள் முன்னிருத்தி கேட்டான்.

“எல்லாம் உங்க தங்கச்சியும் தங்கச்சி மச்சானுக்கும் தான். ஆமா நம்ம லவ்வை அண்ணாவிடம் சொல்லிட்டிங்களா.” என்று கேட்டு அவன் வாகனத்தில் ஏறியமர, “ஆமா ஒரு நாள் போன்ல கேட்டார் சொல்லிட்டேன். உடனே வீட்டை கட்டிட்டு, கல்யாணம் பண்ணு விவேக்னு சொன்னார். அதான் நிலத்தை வச்சி பணம் வாங்கி, வீடு கட்ட ஆரம்பிச்சிருக்கேன்” என்று கூறி பேசியபடி காதலர்கள் பயணம் ஆரம்பமானது.

இங்கே விருஷாலியோ “என்ன அவசரம்ங்க…” என்றதும் அவளது கையை எடுத்து தன் இதயப்பக்கம் வைத்து, “எத்தனை நாள் பிரிவுடி. போன்ல வீடியோ கால்ல பேசுனா, எதிர்ல அம்மா பார்க்கறாங்க, ஆட்டுக்குட்டி பார்க்குது, கோழி பறக்கறதுனு காட்டிக்கிட்டு இருக்க. அதான் பறந்து வந்துட்டேன்.

இன்னிக்கு வெள்ளிக்கிழமை தானே. சனி ஞாயிறு அன்னபூரணி அப்பத்தா வீட்ல தங்கறோம். திங்கள் காலேஜிக்கு நானே கொண்டு வந்து விட்டுட்டுச் சென்னை கிளம்பறேன்.” என்று கூறியபடி ஓட்டினான்.

“சரி… அதுக்கு… மெதுவா ஓட்டுங்க” என்று விருஷாலி கூறவும், எங்கப்பத்தா சித்தப்பா வீட்டுக்கு போயிருக்காங்க. செல்வகுமார் சித்தப்பாவோட பையன் செழியன் அவன் மனைவி கவிதா வந்திருக்காங்க. தாமரை சித்திக்கு ஒரே குஷி. செழியன் பொண்டாட்டி உண்டாயிருக்கலாம். அன்னபூரணி அப்பத்தா அங்க இருந்து மூனு நாள் கழிச்சி தான் வர்றாங்க. சாவி மட்டும் பக்கத்து வீட்டு மணிகிட்ட கொடுத்துட்டுப் போகச் சொன்னேன்

அதனால… இன்னிக்கு நைட், நாளை சனி, நாளை மறுநாள் ஞாயிறு நாம மட்டும் தான்.” என்று கன்னம் பிடித்துக் கொஞ்சினான்.

இல்லறம் செழிக்கக் காதலும் புரிதலும் கொண்ட மனங்கள் இரண்டும் நீயின்றி வாழ்வேதென்ற அன்பில் திக்குமுக்காட தயாராயினர்.

தனியாக முன்று நாளும் விஷாகன் அவளைக் கையில் தாங்காத குறையாகக் கவனிக்க, சமைத்து சாப்பிடுவதும், பாடலை இசைக்க விட்டு அவளை மடியில் சாய்த்து கொஞ்சுவதும், காதல் சில்மிஷமுமென நேரங்கள் கழிந்தது.

மூன்று தினம் போனதா..? என்று கேட்கும் அளவிற்கு, நேரம் காலமின்றிக் கிடந்த ஜோடி திங்களன்று அவளைக் கல்லூரியில் அழைத்து வந்தது போலவே விட்டு செல்லவும் முகம் வாடியது.

இது ஒரு முறையல்ல அதற்கடுத்த மாதங்களும் இதே தொடர ஆரம்பித்தது.

இடையே சின்னச் சின்னத் தேர்வுகளும் பெரிய தேர்வான செமஸ்டர் பரீட்சையும் நடந்தது. விருஷாலியும் நன்றாகப் படிப்பதால் எந்தவித பாதிப்பும் இல்லை.

பின்னரே காலகாலத்தில் செய்யப்படும் வளைக்காப்பு நாளும் வந்தது.

திருமணமான அதே மண்டபத்தைப் பிடித்திருந்தனர்.

திருமணச் சேலையை உடுத்துவது அவர்கள் வழக்கம் என்பதால் அணிந்திருந்தாள்.
“ஏன் ஷாலி… இந்தச் சேலைக்கு இந்த ப்ளவுஸ் பார்த்த மாதிரி நினைவில்லையே” என்று தன் திருமணப் புகைப்படத்தைப் போனில் காண, “அது எப்படிங்க பத்தும். நேத்து அத்த இந்தச் சேலைதான் கட்டணும்னு எடுத்துட்டு வந்தாங்க. பட் ப்ளவுஸ் டைட் ஆகிடுச்சு. அதனால வனஜாவிடம் இதே கலர்ல ஸ்டோன் வச்சி ரெடிமேட் ப்ளவுஸ் இருந்தா வாங்க அனுப்பினேன். அவ விவேக் அண்ணா கூடப் போகவும் ஜாலியா புடவை எடுத்துட்டு போய் இதை வாங்கிட்டு வந்தா.” என்று கூறவும், “ஏன் ஷாலி… உடம்பு ஏறிட்டியோ. குட்டச்சி… ஒல்லிக்குச்சியா இருந்த” என்று உதடு மடித்துச் சிரிக்க ஷாலியோ, “போய் வேலை இருந்தா பாருங்க” என்று விரட்டினாள்.

சிரித்துக்குக் கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தாலும், அவள் பார்வை வட்டத்துக்குள்ளே நின்றான்.

வளைக்காப்பு ஆரம்பமாக முதல் வளையலாக வேப்ப இலையை, மஞ்சள் கலந்த நூலில் கட்டி, அன்னம் போட்டுவிட்டு முதல் வளையலாக விவேக் வாங்கித் தந்த வெள்ளி வளையலையும் அணிவித்தார்.

அடுத்து மாமியார் முறையில் சுகன்யாவும் வெள்ளி வளையல் அணிய தயங்கினார். முதலில் போட மறுத்து ஒதுங்க பார்த்தவரை, அதட்டி வளையலை போட வைத்தான் விஷாகன்.

அடுத்தடுத்து உறவுகளும் நட்புகளும் வளைகாப்பு வளையலை அணிவித்து முடிக்க, கைகள் முழுவதும் வண்ண வளையல்களும், தலைமேல் மஞ்சள் அரிசியும் மல்லிமலர்களும் ஆசிர்வாதம் அளித்தபோது, சிகையில் சில சிக்கியிருந்தது. கூடுதலாக இரண்டு கன்னத்திலும் சந்தனம் பூசப்பட்டிருக்க அவளைத் தேவைதையாக்கியது.

விஷாகன் அருகே வந்ததும், கையை நீட்டினாள். சிவப்பு கல்லும் வெள்ளைக்கல்லும் சேர்ந்து பதித்த தங்கவளையல் எடுத்தான்.

இருவிழிகள் கலக்க, கையைப் பிடித்து அணிவித்திட, வனஜா சந்தனத்தை இடையில் கொடுக்க, அதனை வாங்கி அவளது கன்னத்தில் பூசினான்.

இதுவரை கன்னத்தில் மற்றவர்கள் பூசியதற்கும், இவன் பூசும் கைகளுக்கும் இருந்த வித்தியாசம் புரிய, லேசாய் சுற்றம் மறந்து இமை மூட, வனஜா பன்னீரை தெளிக்கவும் விருஷாலி அசட்டுத் தனமாய்ச் சிரித்து வனஜாவிடம் மாட்டிக்கொண்டு, விஷாகன் மறு கன்னம் தீண்டவும் சிவந்தாள்

ஒன்பதாம் மாதம் முடிய டாக்டர் கொடுத்த டெலிவெரி நாளும் வந்தது.

அதனாலே விஷாகன் அன்னபூரணி அப்பத்தாவின் வீட்டிலேயே தவமிருந்தான்.

விருஷாலி முழுவதுமே தாய் வீட்டிலிருந்தாள். குழந்தை வருகைக்குக் காத்திருக்க, வளைகாப்பு முடிந்து இருபது நாளில் பிரசவ வலியில் துடிக்க, விஷாகன் காரிலே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, ஒரு மணி நேரத்தில் ஆண்சிசுவை பிரசவித்தாள்.

விஷாகன் லேபர் வார்டிலேயே கவனம் வைத்திருக்கப் பின்னால் தங்கள் வீட்டுப் பட்டாளமே வந்திருந்ததைக் கவனிக்கத் தவறினான்.

குழந்தை பிறந்ததும், செவிலியர் கொண்டு வர, “நீங்க குழந்தையை வாங்குங்க மதினி” என்று அன்னம் அவர்கள் வீட்டு வாரிசு என்ற அர்த்தத்திலும் “நீங்க குழந்தையை வாங்குங்க அண்ணி” என்று சுகன்யா பூவை இழந்ததால் தயக்கம் கொண்டு அன்னம் முதலில் குழந்தையை வாங்கவும் கூறிட, இப்படியே மாறி மாறி தயங்கினார்கள்.

“அடக்கூறுக்கெட்டவளுங்களா.. எங்கிட்ட கொண்டா.. இரண்டுத்துக்கும் குழந்தையை வாங்க தெரியாம கைநடுக்கத்தோடு இந்த நேரத்துல கபடி ஆடுதுங்க. குழந்தை அழுவுதுல..” என்று அன்னபூரணி அப்பத்தா கையில் கொள்ளு பேரனை வாங்கினார்கள்.

விஷாகன் மகனை ஆசையாய் அப்பத்தா கையிலிருந்தபடி குழந்தை காலில் முத்தமிட்டான்.

அவன் பார்வை விருஷாலிக்காகத் தவமிருந்தது.

விருஷாலியை நார்மல் வார்டுக்கு மாற்றவும், அப்பத்தா குழந்தையை அவளருகே அணைத்தபடி வைத்துவிட்டு, “சட்டுபுட்டுனு பேசிட்டு வாடா.” என்று தனிமை கொடுத்து அகன்றனர்.

மற்றவர்கள் சென்றதும், குழந்தையும் உறங்கவும் விருஷாலியை நெற்றியில் முத்தமிட்டு “ஷாலிம்மா… உயிர் போய் உயிர் வந்துடுச்சு டி. இப்ப ஓகே தானே” என்றான். இமை மூடி திறந்து, கன்னத்தைத் தொட்டு காட்டினாள்.
பட்டும் படாமலும் ஒற்றியெடுத்தவன், அவள் கையைப் பிடித்துக் குழந்தையை ஏறிட்டான்.

இருவரின் வாழ்விலும் ‘நீயின்றி வாழ்வேது’ என்ற காதல் பார்வை கலந்திருக்க, இங்கு நானும் ஒருவன் இருக்கின்றேன் என்று சிணுங்கி தன்னிருப்பை நினைவுப்படுத்தினான் குட்டிமகன்.

-சுபம்.
பிரவீணா தங்கராஜ்

18 thoughts on “நீயின்றி வாழ்வேது-40(முடிவுற்றது)”

  1. Super sis semma story 👍👌😍 nice and happy ending 🥰 eppdi ennaikey mudium nu nenaikave Ella pa story ya romba miss pannuven🤧 atlast renduperum oru puridhal oda vazdhadhu romba arumai sis 👌😘😘😘 seekirama new story podunga sis 🥰

  2. Sema sema sema lovely story 🥰🥰🥰🥰 romba azhaga etharthama irunthuthu story 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 ovovoruthar oda unarvugala yum romba azhaga solirukinga 👌🏻👌🏻👌🏻👌🏻 superb story Happy ending with cute kutty ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  3. Wow superb ending alagana love purithal venum kandipa husband and wife ku and ippadi oru support um kedaikanum itha tha ellam ethi pakiranga apadi tha intha kadhal jodigal.
    Ithu oru relation oda unamiyana kathainu sonninga great superb real life la ippadi oru jodi irukanga keka sanyhosama iruku.
    Congratulations sisy once again unga writing thodaranum

  4. வாழ்த்துக்கள் அருமையான கதை💐💐💐 புரிதல் என்றும் இனிமை ❤️🍫👍

  5. நீயின்றி வாழ்வேது…!
    பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 40)

    புருசனோட உண்மையான நேசத்தை புரிஞ்சுக்கிட்டாலே போதும்.. வாழ்க்கை ரொம்ப இனிமையா போகும். ஆனா, இங்க விஷாகன் தன் மனைவி மேல வைச்ச உண்மையான நேசம் தான், ஷாலியோட சின்ன சின்ன கோப தாபங்களையும், ஊடல்களையும் சமாளிக்க முடிஞ்சதுன்னு தோணுது.
    அதுக்கு காரணம், அவனோட அப்பாவோட எந்தவிதமான தவறுகளும் தன்னுடைய வாழ்க்கையை பாதித்துவிடாம,
    கந்தர்வகோலம் ஆக்கிடாம மிகவும் நிதானமாகவும் உறுதியாகவும் இருப்பதாலயே
    பிரச்சினைகள எளிதாக சமாளிப்பதோடு தெளிவாகவும் உள்ளான். அதனாலேயே தாய் தந்தைக்கு அருமை மகனாகவும் சகோதரனுக்கும் மற்றும் சின்னஞ்சிறு தங்கைக்கும் பாசமிகு அண்ணனாகவும், மனைவிக்கு சிறந்த கணவனாகவும், தன்னுடைய மகனுக்கு சிறந்த தந்தையாகவும் பேறு பெற்று விளங்குகிறான்.
    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  6. Niraivana niravu😍😍😍 miss u shali and visu… 😍❤️etharthamana story ❤️ visagan rombave nalla paiyan evlo kastam vanthalum atha alaga move on pannitu poita really romba gem tha visagan…. Yar manasayum avlo sikram hurt aagatha maritha oru oru decision edukuran… Aprm avanga ketha azhagana manaivi than shali but yaruka irunthalum possessive varatha seiyum…. Avanga rendu peroda love nijama rombave azhaga irunthuchu….. 🥰❤️engaluku visagan shali again venum avanga kutty paiyan ah vachu😁😁😁😁😁😁next hero material ah ready panniruga sisy ma😁 heroine kooda indrajith dharshini ponnu kooda vachukalam rendu family um patha mari aagirum .. Summa oru fun ku than sis .. 😅

  7. Lovely story sis…. It’s feeling good 👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕understanding iruntha evlo pratchinI vanthalum samalichadalam…… Happy ending 👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕💕😘😘😘😘😘😘

  8. Understanding is must between relationship… Good finish… Bravo!!!!. Waiting for next journey….. 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  9. ஆரம்பம் முதல் ஒரு இடத்திலும் தொய்வு இல்லாமல் இயல்பான நடையில் ஒரு குடும்பத்தில் நடக்கும் கஷ்டங்கள் எல்லாவற்றிலும் பிறர் குறை சொல்லாதே அளவுக்கு தெளிந்த நீரோடை போன்று கதையை கொண்டு சென்றீர்கள் பிரவீணா.மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  10. இவங்க ரெண்டு பேருக்கும் காதல் கல்யாணம் கூட இல்லை. இது பெற்றவர்கள் பார்த்து வைத்த திருமணம் ஆனாலும் எவ்வளவு நல்ல புரிதல் ரெண்டு பேருக்கு இடையில.
    எத்தனை பிரச்சனை வந்தாலும் இந்த புரிதல் மட்டும் இருந்தா போதும் அவர்களை யாராலும் பிரிக்க முடியாது.👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰❤️❤️💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!