Skip to content
Home » நுண்ணோவியமானவளே

நுண்ணோவியமானவளே

💕நுண்ணோவியமானவளே💕                   

                                            அர்ஷித் முதல் முதலாக தன்னிடம் காதல் சொல்லி தன் கையை பற்றிய பொழுது ஹர்ஷினி அதனை நம்பவே இல்லை. அவனுக்கும் தனக்கும் திருமணம் நடைபெறும் என்று. ஆனால் இன்று நம்பாமல் இருக்க முடியவில்லை.


       இரு வாரம் முன் நடந்த தங்கள் திருமணம் எளிமையாக, அதே நேரத்தில் நிறைவாக.    தான் வளர்ந்த ஆசிரமத்தில் சுந்தரம் அங்கிள் தலைமையில் ரிஜிஸ்டர் செய்து ஆண்டவர் திருச்சபையில் மோதிரம் மாற்றி பின்னர் அர்ஷித் கையால் மாங்கல்யம் அணிந்ததை அங்கு இருந்த தனது தோழிகள் அங்கு வளரும் குழந்தைகள் என்று ஆர்பாரித்து கொண்டாடிய நிகழ்வையும் மற்றும் அதற்கு மறுநாள் அர்ஷித் அவனின் சிறு குடும்பத்தில் ஏற்பாடு செய்த வரவேற்பையும் எண்ணி கனவு போல எண்ணினாள். 


  அவன் வலிய கரங்களில்,அவளின் பொன் கழுத்தில் கட்டிய தாலியை வருட தான் நிஜமாகவே தனக்கு திருமணமாகி அவனின் இல்லாளாக மாறியதை உணர்த்தியது.


        அவனின் தோளில் சாய்ந்து அவனுள் புதைந்து, அவன் வாசம் உணர முறுவல் செய்தவள் இவனின் வாழ்வில் பங்கு கொண்ட நாட்களை நினைத்து பார்த்தாள். 


              பத்து வயது வரை அப்பா அம்மா தங்கை என்று வாழ்ந்த ஹாசினி வீட்டின் மாடி பகுதி சரிந்து அப்பா அம்மா தங்கை என மூவரையும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் இழந்து விட்டாள். அதன் பின் ஒரு ஆசிரமதில் தான் வாசம். கல்லூரி வரை கொண்டு வந்து நிறுத்தியது. வேலைக்கு வந்த இடத்தில் அர்ஷித்தை சந்திக்க நேர்ந்தது.


       அர்ஷித் எல்லோரிடமும் சட்டென பழகிடுபவன். அவனின் தோற்றம் கூட மற்றவர்களை வசியம் செய்திடும், மற்றவர்களும் இவனிடம் அதே போல இயல்பாக விரைவில் பழகிட செய்தார்கள். ஒருத்தியை தவிர.


     ஹாசினி… ஹாசினி வளர்ந்த இடமோ என்னவோ பழக யோசிப்பாள். ஆனால் பழகிய நட்பில் மட்டுமே பேசுவாள். அப்பொழுது கூட ஹாசினி தானாக ஒரு வில்லை கூட அடுத்தவர்கள் உணவு பொருளில் கை வைத்து உரிமையாக பழக மாட்டாள். அச்சம். அதனாலே ஒரு வட்டதிலேயிருக்க எண்ணுவாள். அவளின் வட்டதில் நுழைய யாரையும் விட்டதில்லை.   


        அவள் ஆசிரமதில் வளர்ந்த பெண் என்பதாலோ என்னவோ பேசி பழகி காதலில் வர தோன்றும் ஆடவர்கள் கூட திருமணம் என்று நினைக்கும் பொழுது இயல்பாய் தோன்றும் உறவு நகை ஆடம்பரம் இவளிடம் கிடைக்காது என்று திருமணத்திற்கு போக மாட்டார்கள்.


        அர்ஷித் தான் தன்னை கண்டு ஒதுங்கும் ஹாசினியை  அன்று தனியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க பேசினான்.
     ஒரே கேப் வர பேசாமல் கடக்க முடியுமா?


        ”இங்க தான் தங்கி இருக்கிங்களா?” என்றான் முதல் முறையாக நேரிடையாக பேசினான்.
       ”ஹ்ம்ம்..” என்றதோடு நகர அர்ஷித் பேசியதையும் அதற்கு தான் ஹ்ம் என்றதும் சொல்லி விட்டோம் என ஹாசினி மனம் மகிழ்ந்தாள்.
       ஆம் ஹாசினிக்கு அர்ஷித் அவ்வளவு பிடிக்கும். தன் கனவு நாயகன் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றாளோ அப்படி இருப்பான்.


         யாருக்கும் பயபடமாட்டான். அவனை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும் எல்லோரிடமும் பழகி சிரிப்பில் விரிந்திருக்கும் அவன் உதடுகள். பேசலாமா வேண்டாமா? என்ற மனதில் பட்டிமன்றம் எல்லாம் அவனிடம் இருக்காது போல, பழகிய இரண்டே நாளில் மற்றவர்கள் உணவில் இவனுக்கும் சேர்த்து ஷேர் வரும் அந்தளவு நட்பு பிடித்துடுவான்.


         கண்கள் என்றுமே சோர்ந்து கண்டதில்லை ஒரு சுறுசுறுப்பு என்றுமே உண்டு.
     அவனே தற்பொழுது பேசியது அவளுள் மகிழ்ச்சி கடலை  வார்த்திருக்கும்.
       என்ன அர்ஷித் தான் இவளின் அமைதியில் அவனாக பழக பேச செய்யாது இருந்தான். அதற்கு காரணம் அவனுக்குள் ஹாசினி கண்டதும் காதல். ஒரு ஆண் மகன் தனக்கு வருபவள் இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று எண்ணி இருக்கும் அழகு, அறிவு, அடக்கம் என்று அவளுள் கண்டான். அவளின் செய்கை அதற்கு மேல், பேச யோசித்து ரத்தின சுருக்க வார்த்தைகள், இதெல்லாம் அவனுக்கு  வியப்பாக இருந்தது. 


தனக்கு எப்படி பேச்சை கட்டுப்படுதினாலும் பேச்சு சரளமாக வர, இவளோ ஒன் வோர்ட் ஆன்சர் செய்வது அவனுக்கு வித்தியாசமாக தோன்றியது. இந்நாள் வரை….
        இன்று ஹாஸ்டல் என்றதும் அவனுக்குள் அப்பா அம்மா விடுத்து ஊரில் இருந்து தனியாக தங்கிருக்கும் பெண் என எண்ணி கொண்டான். அதுவும் ஒரு வாரம் தான் அப்படி எண்ணி கொண்டான். அடுத்த வாரம் சனி அன்று தங்கள் நட்போடு ஒரு ஆசிரம் போக அங்கே ஹாசினி குருப் படம் இருக்க கண்டான். 


 அங்கிருக்கும் நிர்வாகியிடம் அவளை பற்றி கேட்க அவள் பத்து வயதில் இங்கு வந்து தற்சமயம் தான் வெளியே போனதாக அறிந்தான்.
         அதன் பின் அவளின் அமைதி அவனுக்கு எல்லாம் உணர்த்தியது. அவள் அமைதி அவள் தனிமை என்று பார்த்தவன் ஒரு நாள் நேரிடையாக கேட்டே விட்டான்.
    ”ஹாசினி…. வில் யூ மேரிட் மீ” என்று கேப் டிரைவர் போனில் ஹெட் செட் போட்டு யாரோடு பேசி கொண்டிருக்க ஹாசினி தான் உறைந்தே போனாள்.


           ஹாசினி இதனை எதிர்பார்க்கவே இல்லை.. கடந்த வாரம் தனது தோழி இவனிடம் காதல் தெரிவித்தமைக்கு ”சாரி எனக்கு உங்க மேல காதல் இல்லை.. நான் வேற ஒரு பெண்ணை விரும்பறேன்” என்றான். அப்படி என்றால் அந்த பெண் தான் தானா?’
       ”இப்பவே பதில் சொல்ல வேணாம் ஆனா நாளைக்கு என் லவ்க்கு ஓகே சொல்லிடு…. என்னை அதிக நேரம் வெயிட் பண்ண வைக்காதே.. எனக்கு காத்திருப்பது எல்லாம் பழக்கம் இல்லை” என்று நெருக்கமாய் வந்தான்.


     தன் முகத்தின் அருகே, அவன் முகம் வர அதிர்ந்து பின் நகர, கார் கதவை திறந்து கையை நீட்டினான். அவன் கதவை திறக்கவே தன் அருகே வந்தான் என அறிந்துக்கொண்டாள். ஆனால் அதற்குள் அவள் கண்கள் நிமிடத்திற்கு பல முறை படபடத்தது.


     இதழ் மடித்து சிரித்து கொண்டவன் காதலை சொல்லி விட்ட சந்தோஷத்திலே கிளம்பினான்.
          ஹாசினிக்கு தரையில் நடந்து வந்தோமா அல்லது பறந்து வந்தோமா என புரியாது தவித்தாள்.     
      இவனிடம் நட்பு பாராட்டவே தோழிகளாக இருக்கும் பெண்களுக்கு மத்தியில் இவன் தன்னிடம் காதலை சொல்லியதில் பெண் மனம் குதூகலித்தது.


           தான் விரும்பும் ஆடவன் நாளை எப்படியும் பதில் வேண்டி நிற்பான் என்று யோசிக்க உறக்கம் என்பது பக்கத்திலே வர மறுத்தது.
         அடுத்த நாளே வந்து மயக்கண்ணான் போல நின்றவன்.
     ”நேற்று எல்லாம் தூங்கலையா? கண்ணு சிவந்திருக்கு” என்றான். ஹாசினி எப்பொழுதும் போல அமைதியாக இருந்தவள் பேச பயந்து தவிக்க அவனோ ”நமக்கு லீவு சொல்லிட்டேன் வா” என்று அவளை கையை பிடித்து இழுத்து சென்றான்.
      பேச கூட விடாமல் அவளை பைக்கில் ஏற வைத்து, பைக் ஓட்ட கண்ணாடி வழியில் அவளின் பதற்றம் தவிப்பை எண்ணி சிரித்து கொண்டவன்.


      தங்கள் அலுவலக இடமிருந்து கிராமமாக தெரியும் இடம் நோக்கி வண்டி பறந்தன.
   ஒரு அல்லி குளம் அருகே வண்டியை நிறுத்தினான்.
               இறங்கியவள் மனதில் இது எந்த இடம்?  என்று ஒன்றும் அறிந்திருக்கவில்லை என்றாலும் அவனோடு வந்துள்ளதை நினைக்க  எல்லா எண்ணங்களையும் பின் தள்ளியது.
      ”உட்கார்” என்று படிக்கட்டினை காட்டினான்.


              அமர்ந்தவள் பார்வை அவனின் கண்களை கண்டதும் குளத்தினை கண்டது. அல்லி தாமரை பூத்து கிடக்க மனம் அதில் ரசிக்க ஆரம்பித்தது. 
    ”போதும் ரசிச்சது… இப்பவாது என்னிடம் பேசணும், ஓகே சொல்லணும், எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தேனு கேட்பனு பார்த்தா ஒரே மவுனமா இருக்க?” என்றான் கைகளை கட்டி இரு படிக்கட்டு மேலே நின்றபடி.
      ”பிடிச்சிருக்கு… ஆனா உங்களை போல எப்படி சொல்றது என்று எனக்கு தெரிலை” என்றாள் எழும்பாத குரலில் தெளிவாய். 
     ”பேசினியா? இல்லை இங்க ஏதோ காற்று மட்டும் அசைந்தது போல இருக்கு?” என்றான் கிண்டலாக.


      ஹாசினி முறைக்க பார்த்து, அவளால் அவனை முறைக்க முடியாது சிரித்து விட்டாள்.
      ”சிரிச்சியா என்ன? இல்லை என் கண்ணுக்கு தான் அப்படி தோனுதா?” என்றான். அவளிடம் அதே மௌனம்.
     ”இங்க பாரு ஹாசினி… நீ பேசலனாலும் எனக்கு புரியுது தான் ஆனா பேசிடு… நீ மனசில் எதையும் வைக்காம பேசு” என்றான். ஹாசினி புரியாமல் பர்க்க
      ”என்ன புரியுது?” என்றாள் மெல்லிய குரலில்.


     ”நீ என் மேல வச்சிருக்கற காதல்…. அப்படியே திற்பரப்பு நீர் விழ்ச்சி போல பொழியுது. 
 நான் இங்க தனியா கூட்டிட்டு வந்திருக்கேன் ஆனா நீ என் மேல எந்த அளவு நம்பிக்கை வைத்து வந்திருக்கனு தெரியுது. அப்பறம் ஏன் இந்த உதடு பேசவே தயங்குது. அது ஏன் தெரியுமா?” என்றான் கேள்வியோடு
    ”எதுக்கு? என்றாள். கண்களில் தவிபோடு
    ”நீ ஆசிரமத்தில் வளர்ந்திருக்கற அது தெரிந்தா நான் விட்டுட்டு போயிடுவேனோ என்ற தயக்கம் பேச விடாம தடுக்குது.. சரியா?” என்றான்.

                 மேற்படிக்கட்டுகளில் இருந்து இறங்கி அவள் அருகே கொஞ்சம் இடம் விட்டு அமர்ந்தான். 
    ”உங்களுக்கு…? உங்களுக்கு எப்படி?” என்றாள் பயதின் முடிவில்
    ”என் மனசு உன்னை விரும்ப ஆரம்பிக்கும் பொழுது உன்னை பற்றி தெரிந்து கொண்டேன் என்று சினிமாதனமா சொல்ல மாட்டேன் ஆனா நான் விரும்பும் கணம் அதுவா தானா சில நிகழ்வுகள் உன்னை பற்றி அறிய வச்சிடுச்சு.. நீ ஹாஸ்டல்ல இறங்கின.. நீ தங்கினது ஹாஸ்டல் என்று புரிய, கொஞ்ச நாளில் ஒரு ஆசிரமதில் உன் போட்டோ பார்த்தேன் சுந்தரம் அங்கிள் சொன்னார். 
அப்போ தான் உன் அமைதி எதுக்குனு புரிந்தது. முதலில் காதலை பிறகு சொல்லிக்கலாம் என்று தான் இருந்தேன். ஆனா உன்னை கட்டிக்கிட்டு உன்னை என் கூடவே வச்சி அன்பா பார்த்துக்கணும் என்று தோன்றிடுச்சு அதன் லவ் சொல்லிட்டேன்” என்று அவள் கைகளை பற்றினான்.


     ”கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று கேட்க கண்ணீர் துளிகள் ஹாசினி கன்னத்தில் வடிந்தன.
     ”ஹே எனக்கு அழுகை பிடிக்காது ஹாசினி, சேஞ்ச் பண்ணிக்கோ” என்றவன் அவளை திரும்ப அழைத்து வந்து ஹாஸ்டலில் விடுத்து, ஒரே வாரத்தில் அவனின் அப்பா அம்மாவிடம் சொல்லி பார்த்தான்.
       முதலில் ஆசிரமத்தில் வளர்ந்த் பெண் என்றதும் மறுக்க, பிறகு அர்ஷித் மனம் மாறாத நிலையில் அரை மனதோடு சம்மதித்து இதோ வரவேற்பு முடிந்து அர்ஷித் தனியாக தனி குடித்தனம் செல்ல வந்தாயிற்று.


       கணவனின் தோள் சாய்ந்தவள் அவனின் எல்லா முடிவிலும் ஒரு அழுத்தம் இருக்க கண்டாள்.
          பேருந்து நிற்க நடந்து வந்தார்கள். ஹாசினியை கை வீசி வர வைத்து அவளின் பையை தனது தோளிலும் கையிலும் சுமந்து வந்தான். 
        இதோ ஹனிமூன் சென்று புது வீட்டில் அடியெடுத்து வைக்க வந்தாயிற்று.
                     கேட்டிற்கும் வீட்டிற்கும் நடக்க இரவில் பேரமைதி ஹாசினிக்குள் விதிர்க்க செய்தது.
      ”ஏன் அர்ஷி… எவ்ளோ தூரம்? வீடு எங்க?” என்று கேட்டாள். 


      ”சாரி டி வாசலுக்கும் வீட்டுக்கும் கொஞ்சம் தொலைவு தான் ஆனா காலையில் பார்த்த அசந்துடுவ. இப்ப இரவு என்றதால் கொஞ்சம் ஒரு மாதிரியிருக்கு” என்று சொல்ல அவனின் பேச்சை எங்கே கேட்டால்? அவளுக்கு பின்னால் ஒரு உருவம் வந்துச் சென்றது போல தோன்ற எச்சி விழுங்கி போராடி அர்ஷித் கையில் அழுத்தம் கொடுத்தாள்.                

                     தன் பின்னால் ஏதோ அசைய கண்டு ஹாசினி அர்ஷித் கைகளில் அழுத்தம் கொடுக்க அதனை கண்ட அர்ஷித் ”என்ன ஹனி பயமா இருக்கா?” என்றான்.
     ”அர்ஷித் யாரோ போனது போல இருந்தது.” என கண்களை அந்த பக்கம் பார்த்தவாறு சொன்னாள். 
       ”லூசு அது உன் நிழல் தான். நாம இப்படி கிராஸ் செய்தோம் அதான் பின்னாடி நம்ம நிழல் அந்த பக்கம் மூவ்வாகி இருக்கும்” என கதவை திறக்க வந்தான். அவன் சொன்னதை கேட்டாலும் ஹாசினி மனம் இந்த பெரிய இருட்டில் என்னவோ போல தான் உணர்ந்தாள்.   

         உள்ளே வந்து விளக்கை போட அறை எங்கும் வெளிச்சம் பரவியது. அர்ஷித் தனது மனையாளை அணைக்க ஆரம்பித்தான். 
      ”அர்ஷித் டிராவல் பண்ணியதுல் கசகசனு இருக்கு நீங்க வேற விடுங்க” என்றதும்
      ”மேடம் டிராவல் பண்றப்ப மட்டும் ஏன் தோளில் சாய்ந்து நல்லா பிளாஷ்பேக் நினைச்சு சிரிப்பிங்களா?” என்று அவளை அணைத்தபடி கேட்டான். 
     ”அர்ஷி நீ அப்போ தூங்கலையா…”
      ”இல்லை உன் மல்லி பூ வாசம் இம்சை பண்ணிச்சு அதனால தூங்க முடியலை” என்றவனை தள்ளினாள். 
     ”முதல்ல வீட்டை சுற்றி பார்க்கலாம விடுங்க” என்று சோர்வில் கூறினாள்.


     ”நாளைக்கு பொறுமையா பார்த்துக்கலாம் இப்ப டிராவல் செய்து வந்ததுல அசதியா இருக்கும் குளிச்சுட்டு தூங்கு” என்று கையில் டவல் மற்றும் இரவு உடையை கொடுத்தான். 
     ”சோப்பு?” என்றவளிடம் அதை நான் கொண்டு வந்து கொடுக்கலாம்னு இருந்தேன் பிடி” என்று கொடுத்து காதில் உரசினான். ”அர்ஷி.” என அவன் சீண்டலில் தள்ளிவிட்டு குளிக்க போனாள்.
                அவள் குளித்து வரவும், அர்ஷித் குளிக்க சென்றான்.
       அறையை நோட்டமிடவளுக்கு தான் ஹாஸ்டலில் தங்கி இருந்த அறையை விட பெரிதாக தோன்றியது. இவ்வறை பெரிதாக அழகாக தோன்றியது. கட்டிலில் விழுந்தவள் கண் மூட அவளை அறியாது களைப்பில் உறங்கிப் போனாள்.  
        குளித்து வந்த அர்ஷி உறங்கும் தனது காதல் மனைவியை பார்த்தவன் அவளின் மேலே போர்வை போற்றி ஃபேன் கூட்டி அருகே படுத்துக் கொண்டான்.
        அவளினை அணைத்து உறங்க விரைவில் உறங்கியும் போனான்.


            மணித்துளிகள் நகர பெரிய முள் சின்ன முள்ளோடு சேர்ந்திட, அந்த செவ்வக கடிகாரத்தில் இருந்து பன்னிரெண்டு முறை ‘டிங் டிங்’ என்ற சப்தம் ஒலி எழுப்பியது.  
       நன்கு உறங்கி கொண்டிருந்த அர்ஷித் அதே உறக்கதின் பிடியில் இருக்க, ஹாசினிக்கோ அச்சத்தம் அச்சுறுத்த திடுக்கிட்டு எழுந்தாள். எழுந்த பின் தான் ஒலி வந்த திசை நோக்கி பார்வை பதிக்க, அங்கே கடிகாரம் 12 காட்டியது. அதனை கண்டு ‘இதுவா?’ என சலித்தாள்.
        மொத்த உறக்கம் கலைந்து பார்வையை அந்த அறையினை ஆராய, உறங்கும் முன் அழகாக இருக்க கண்டது, ஏனோ தற்போது திகிலை கூட்டியது.


         உடலெங்கும் வேர்வை துளிர்க்க, எங்கோ, ஏதோ ஒரு சப்தம் கேட்க மெல்ல எழுந்தாள்.
          எழுந்தவளின் கால்கள் தன்னையறியாமல் நடக்க கதவுத்திறந்து பார்த்தாள். 
 படிக்கட்டில் யாரோ அழுவது போல தோன்ற பயத்தின் உச்சியில் போனாள். மெல்ல கால்கள் அங்கே நெருங்க நெருங்க நெஞ்சுகூட்டில் சத்தம் நிற்பதாக உணர்ந்தாள். அந்த உருவத்தின் முன் கையை வைக்க போக அதே நேரம் ஹர்ஷினி தோளில் ஒரு கை வந்துப்பட்டது.


         முகத்தில் அரும்பிய வேர்வை இப்பொழுது மழையில் நனைந்த விதமாக இருக்க, இதயம் நின்றது போல உணர்ந்து திரும்ப, அங்கே அர்ஷித் இருந்தான்.
     ”அர்ஷி அர்ஷி அங்க ஏதோ பொண்ணு.” என்று கையை காட்ட அங்கே எதுவும் இல்லாமல் போக முழித்தாள்.
      ”என்ன பண்ணிட்டுயிருக்க என்ன பொண்ணு? என்ன உலறுற?”. என கண்ணை கசக்கி நின்றான்.
     தனது மனம் பயத்தில் என்னவோ எண்ணியிருக்கும் என்று ”ஒன்னுமில்லை அர்ஷி ஏதோ சத்தம் அதான்” என்றாள்.


      ”சத்தம் என்றால் என்ன எழுப்ப வேண்டியது தானே.. நீ ஏன் தனியா பார்க்க வந்த.. இது கொஞ்சம் பெரிய வீடு மா” என்று அவளை அணைத்து அழைத்து படுக்கை அறைக்கு வந்து சேர்ந்தான்.
       ”அர்ஷி பாரு மறுபடியும் ஏதோ சத்தம்” என்று சொல்ல அதனை நின்று கேட்க, எங்கோ குழாய் ஒழுகும் சப்தம் கேட்டது. அர்ஷி கொஞ்சம் யோசித்தவன் பாத்ரூம் கதவை திறக்க அவன் எண்ணியது போலவே ஷவர் சரியாக மூடாமல் லேசாக ஒழுகியது.


      ”பாரு ஷவர் தான் சரியா மூடலை” என்று அந்த குழாய் தலையில் ஒரு தட்டு தட்ட, ஷவர் நீரை நிறுத்தியது.
      ”ஆமா நீ எப்போ எழுந்த?” என்றாள் ஹர்ஷினி.
      ”உன் வாசம் பெட்ல இல்லை என்றதும் எனக்கு தானா முழிப்பு வந்துடுச்சு மா” என்று அணைத்தவன் அவளையும் அணைத்து கொண்டான்.
         தூரத்தில் அங்கே படிக்கட்டில் இருந்த உருவம் கொஞ்சம் கொஞ்சமாக ‘நீ வந்துட்ட இனி உன்னை இங்கிருந்து அனுப்ப மாட்டேன்’ என சொல்லி மறைந்தது. 


   அது தெரியாமல் புதுமண தம்பதியின் அறையில் ஜன்னல் மற்றும் கதவுகள் மெல்ல மெல்ல மூடிக் கொண்டார்கள். இனி எங்களின் அனுமதியின்றி இங்கே காற்று கூட வரக்கூடாது என்பது போல.
       ஹர்ஷினி தான் அதன் பின் அர்ஷித் கையில் விளையாட்டு பொம்மை போலானாள்.
         அடுத்த நாள் அதிகாலையில் எழுந்திட ஹர்ஷினி குளித்து வீட்டினை பார்க்க ஆவலாக எண்ணி கீழே இறங்க மலைத்து போனாள்.


            வீடா இது? இல்லை ஒரு ரசிகனின் மொத்த விருப்பங்கள் போல இருந்தது. ஹால், கண்ணாடி டேபிள் அதன் மேல் இருக்கும் ஃப்ளவர்வாஸ் முதல் திரைச்சிலை எல்லாம் அழகாக, ரசனையுள்ள ஆட்களின் தேர்வு என்று சொல்லாமல் சொல்லியது. படிக்கட்டில் கீழே ஹாலோடு இருக்கும் அந்த பகுதியில் புக்-ஷெல்ஃப் ஏற்பாடு செய்து வடிவமைத்து இருந்தார்கள். மயில் வண்ண ஊஞ்சல். அன்னம் போன்ற ஷோபா என்றதில் பார்த்தவள் சோபாவில் அமர போக ஒரு கை தானாக தூக்கி ஊஞ்சலில் அமர வைத்தது.
        அது தன்னவன் என்றதில் நிம்மதி அடைந்து பார்க்க அவனோ அவளை ஊஞ்சலில் ஆட்டி அவனும் சேர்ந்து அமர்ந்தான்.
     ”என்ன வீடு பிடிச்சிருக்கா?” என்றான்.


     ”ஹாலை நேத்து சரியா பார்க்கலை. இருட்டு நேரமா தூக்கம் தான் முக்கியமா பட்டுச்சு, இப்ப காலையில் பார்க்கவும் அப்படி ஒரு அழகு. ரொம்ப பிடிச்சிருக்கு” என்றதும்
      ”தேங்க்ஸ் டி பொண்டாட்டி எனக்கு அதுக்கு கிஃப்ட் இல்லையா” என அவளை இடித்தான். 
      ”கிஃப்ட் தானே இருங்க, முதலில் சூடா டீ குடிங்க” என குதித்து நழுவி ஓடினாள்.
                  கிச்சன் கூட நேர்த்தியாக இருந்தது. எல்லாம் ஏற்கனவே வாங்கி வைத்து இருப்பான் போல எல்லாம் தயாராக இருக்க டீ கலந்தாள்.
      ”கிஃப்ட் எங்கடி?” என்று துரத்தி வந்து கேட்டான். 


      ”பச்.. அர்ஷி நானே ஒரு அனாதை இப்ப தான் வேலைக்கு போறேன் கிஃப்ட் இனிமே தான் வாங்கி தரணும்” என்றதும்
        ”இன்னொரு தடவை அனாதை என்று சொன்ன பல்லை தட்டிடுவேன். கழுத்தில் தாலி கட்டி உன்னோட ப்ராப்பர்டி நான் ஆகிட்டேன் புரியுதா இனி அப்படி பேசாதே” என்றதும் அங்கிருந்த கிளாஸ் உடைய, இருவரும் திரும்பி பார்த்தார்கள். 


  அங்கே ஜன்னலில் இருந்து காற்று பலமாக வீச, அங்கே ஒரு உருவம் ‘அப்போ இனி நீ எனக்கானவன் இல்லையா அர்ஷித்’ என்றது.
      ”காற்று வீசியதில் உடைந்து இருக்கும் போல இரு” என்று எடுத்து வைத்தான். 
       ”வந்த முதல் நாளிலே கண்ணாடி உடைந்துடுச்சு அர்ஷி… ஏதோ சரியில்லை” என வருத்தமாக கூறினாள். 
       ”அம்மாடி எனக்கு இந்த சென்டிமெண்ட் எல்லாம் பிடிக்காது அழுகை பிடிக்காது… புரிஞ்சுகோ இது மாதிரி இனியும் பேசாதே” என்றவன் “ஏற்கனவே இது எல்லாம் கேட்டு புளிச்சு போச்சு நீ வேற” என சத்தமில்லாமல் சொல்லி கொண்டான். 
       ”அர்ஷி…”
      ”ப்ளீஸ்… எதையும் கேட்காதே” என வேகமாக சென்று விட்டான்.


                 அவன் போன வேகத்தில் குளித்து ரெடியாகி கீழே வந்தான். அலுவலகம் கிளம்பியவன் ”நீ ரெஸ்ட் எடு… நான் போயிட்டு வந்துடறேன்” என்றான். “சரி” என தலை அசைக்க அவளின் நெற்றியில் இதழை ஒற்றியும் ஒற்றாமலும் முத்தமிட்டு சென்றான்.
        போகும் அவனையே பார்த்திட அவளை போலவே ஒரு அருவம் கொண்ட ஜீவன் ஏக்கமாய் பார்ப்பதை அறியாமல் இருந்தாள்.


—-          

                       ஒவ்வொரு அறையாக பார்த்து கொண்டே வர எல்லாமே தங்களுக்கு அதிகமாக தோன்றியது. இருவருக்கு எதற்கு கீழே இரு அறை மேலே இரு அறை என்று யோசிக்க செய்தாள். அவளுக்கு அங்கிருக்கும் பொருட்களை மாற்ற மனமில்லை ஏற்கனவே ஒழுங்கோடு தான் அவை இருந்தன.
           அவளுக்கு உணவு முடித்து வெளியே தோட்டமருகே வந்து நின்றாள். காலையில் அர்ஷி போகும் பொழுதே கண்ட தோட்டம் தான். பெரிதாக இருக்க குளித்து வந்து பார்க்க வேண்டும் என்று எண்ணி இப்பொழுது தான் வந்து பார்த்தாள்.
             அழகான இடம் சுத்தமான காற்று பார்க்கும் இடமெங்கும் வண்ண செடிகள் பூக்கள்.
          இதில் செயற்கை  ஊற்று வேறு என்றிருக்க, அங்கே அமர்ந்து டீ குடிக்க தன்னை யாரோ உற்று பார்க்கும் உணர்வு தோன்ற அதே நேரம் அவள் அருகே ஒரு நிழல் பட திரும்ப முறுக்கு மீசையில் ஒருவர் நின்று இருந்தார்.


       நல்ல வேலை காக்கி உடையில் இருக்க வாட்ச் மேன் என்று சொல்லாமல் புரிந்தது. இல்லை கத்தி கூச்சல் போட்டு இருப்பாள்.
     ”யார் யார் நீங்க?” என தடுமாறினாள்.  
                அதே நேரம் போன் அடித்தது. எடுத்தவள் ”அர்ஷி… இங்க.” என சொல்ல வருவதற்குள்
      ”வாட்ச் மேன் வந்துட்டாரா? சமைக்க வசந்தி அக்கா வந்து இருக்காங்களா? என கேட்டான். 
     ”வாட்ச் மேன்? ஆஹ் இப்போ தான் பார்த்தேன்” என்றாள்.


    ”சரி ரொம்ப நேரம் தோட்டதிலே உட்காராதே உள்ள போ வெளிய வெயில் சுட்டெரிக்கு” என்று உத்தரவிட்டான்.
             மனதிற்குள் அர்ஷியின் அன்பு இனித்தது. நிஜமாகவே 11.30 மணியாகி சூரியன் சுட்டெரிக்க தான் செய்தது. அவன் அதனை எல்லாம் யோசித்து பேச பெண்ணவள் மனம் பூரித்தது. 
       வீட்டுக்குள் செல்ல அங்கே ஒரு பெண் அதே நேரம் பின் தொடர திரும்பியவள் வேலைக்கு என புரிந்தது. 


       ”வாங்க வசந்தி அக்கா..” என முதலில் காபி போட்டு கொடுக்க வசந்தி வினோதமாக பார்த்து வாங்கி பருகினாள்.
      அங்கே மற்றும் ஒரு உருவம் அருவமாக நின்று பார்த்தது. 
      காய்கள் அறிந்து கொண்டு சமையலில் ஹர்ஷினி நிற்க, உதவியாக வசந்தி மற்ற வேலையினை செய்தபடி இருந்தாள். 


           கீழே இருந்த ஒரு அறையில் சாமி புகைப்படம் அடுக்க அங்கே அவ்வுருவம் வேண்டாத வெறுப்பாக பார்த்து ஹாசினியை முறைத்து கொண்டது.
     வசந்தி சென்றதும் ஹர்ஷினி எல்லா இடமும் சென்று பார்த்து ரசித்து முடிக்க உறங்கி போனாள்.
         எழுந்திடும் பொழுது நேற்று அவளை பயமுறுத்திய அதே இருட்டு…
       ‘கடவுளே சாயந்திரம் ஆகிடுச்சா… எங்க ஸ்விட்ச்னு தெரிலையே’. என்ற அச்சதோடு யோசிக்க முதலில் தான் எங்கு இருக்கின்றோம் ஹாலிலா அறையிலா என குழம்பினாள்.
                 இங்கிருந்து எப்படி செல்ல? எங்கே ஸ்விட்ச்? என குழம்பியவள் போனையும் எடுத்து வர மறந்து போனதை எண்ணி வருந்தினாள்.


            ‘கடவுளே’ என்று ஊரில் இருக்கும் தெய்வங்களுக்கு எல்லாம் மனு போட்டு குத்து மதிப்பாக நடக்க, யாரோ தோளில் தொட திரும்ப அங்கே யாருமில்லை என்று பீதி அடைந்தாள். கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் அதே தீண்டல் இருக்க
    ”யாரு யாருங்க” என்று சொல்ல நாவோ மேல் பக்கம் ஒட்டி கொண்டது.
         பயத்தில் இதயம் அதிகமாக துடிக்க திடீரென யாரோ தன்னில் வேகமாக வந்து மோத பார்ப்பதை உணர்ந்து கண்களை மூட தன்னை யாரோ தூக்கி சுற்றி இருப்பதாய் தோன்ற… அதுவும் அது தன்னவன் என்று அவனின் வாசம் உணர்த்தியது.


      ”அர்ஷி…. விடு… எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா?” என கண்ணீர் துளிர்க்க விசும்பினாள். 
      ”ஏன்டி லைட் கூட போடாம தூங்கிட்டு இருந்தது நீ… நான் என்ன பயமுறுதினேன்” என அவளை பாகுபலி போல தோளில் தூக்கி கொண்டு ஸ்விட்ச் தட்ட வீடு ஒளிவு பெற்றது. 
 ஹர்ஷினி தான் அழுது கொண்டிருந்தாள்.
      ”சாரி அர்ஷி தூங்கிட்டேன். அதனால தான் லைட் கூட போடலை… மன்னிச்சுடு… வீட்டுக்கு வந்த முதல் நாள் விளக்கு கூட ஏற்றலை… தப்பு தான்” என வருந்தினாள்.
      ”மேடம் நான் உங்களை ஒன்னுமே சொல்லலையே? எதுக்கு இப்படி அருவி கொட்டுது…” என்று கிண்டல் செய்தான். 


      ”இல்லை நீ திட்டுவியோனு” என மிரண்டாள். 
      ”அதெல்லாம் திட்ட மாட்டேன் ஆனா லைட் போட்டுட்டு நீ தூங்கு.. இப்படி பயபடமா இருப்ப” என்று சொன்னவன் அடுத்து இரவு உணவு உண்டு, உறங்க ஆரம்பித்து, சிற்சில சீண்டலில் துவங்கி, அவளை திணறடித்து இல்லறம் நல்லறமாக மாற்றி, உறங்கியும் போனார்கள்.
      நேற்று போலவே இம்முறையும் இரவில் ஏதோ உறுத்த எழுந்து அமர்ந்தாள்.


         எழுந்து வெளியே செல்ல பயந்தாள் அதனால் அர்ஷித்தை இன்னும் நெருங்கி படுத்தபடி இமைகளை இறுக்கமாக மூடி கொண்டாள்.
         மூடிய விழியில் ”அர்ஷித் அர்ஷித் என்னை விட்டு போகாதே…” என்ற உளறல் அதிகமாக அர்ஷித் தான் எழுந்து அவளை அணைத்து ”எங்கயும் உன்னை விட்டு போக மாட்டேன் டி.. ரிலாக்ஸ்” என காதில் சொல்லி சிகையினை கோத உலறலை நிறுத்தி உறங்கி போனாள். 


       இப்படியாக அர்ஷித் ஹர்ஷினி வாழ்க்கை மாதங்கள் முடிவடைய ஒரு நாள் அர்ஷித்தின் வீட்டில் இருந்து அவனின் தாத்தா பாட்டி வந்து நின்றார்கள்.
          ஹர்ஷினி அவர்களை மிகவும் அன்பாக கவனித்து கொண்டாள்.
                     முதலில் தனது பேரனை தனியாக குடித்தனம் செய்ய இவளே காரணம் என்றெண்ணி இவளிடம் விலகியவர்கள். ஹர்ஷினி மனம் கூட்டு குடும்பத்தினை நாடுகின்றது என்பதை அறிந்துக்கொண்டார்கள். 


எல்லாம் அவளின் பேச்சால்…
       தாத்தா பாட்டி ஒரு வாரம் இருந்தார்கள். போகும் பொழுது சீக்கிரம் கொள்ளு பேரனின் வருகையை சொல்ல சொல்லுமாறு கேட்டு கொண்டார்கள். அதற்கு வெட்கம் கொண்டு சரி என்பதாய் தலை அசைத்தாள்.
        அர்ஷித் அன்று கையில் மல்லிகை மணக்க ஸ்வீட் வேறு வாங்கி வந்து கொடுத்திட…
       ”எதுக்கு அர்ஷி இது” என்றே கேட்க
      ”எனக்கு ஜாப்ல சேலரி இன்னும் அதிகப்படுத்தி இருக்காங்க” என்று அவளை அணைத்தான்.
       ”அர்ஷி என்னை எதுக்கு ஜாப் போக வேணாம்னு சொல்லிட்ட… எனக்கு ரொம்ப கவலையா இருக்கு.. தனியா இங்க இவ்ளோ பெரிய இடத்தில இருக்க என்னவோ போலயிருக்கு. அதோட யாரோ கூடவே சுத்தற மாதிரி பயமாயிருக்கு. எனக்கு கூட்டு குடும்பம் தான் ரொம்ப பிடிக்கும் ஆனா நீ தனியா இங்க கூட்டிட்டு வந்த?” என கவலையாய் கேட்டாள். 


     ”என்ன எங்க தாத்தா பாட்டி ஏதாவது சொல்லிட்டு போனங்களா? இதுக்கு தான் வரவே வேணாம் என்று சொன்னேன்” என்று அவளை விலகி சட்டை பட்டனை கழற்றினான். 
       ”அவங்க எதுவும் சொல்லலையே…. ஏன் ஏதாவது சொல்ல வந்தாங்களா? அர்ஷி அப்போ ஏதோ உங்க வீட்ல பண்ணி வச்சியிருக்க அப்படி தானே?” எனறு கேட்டாள். 
       ” ஆமா என்னவோ பண்ணி வச்சிருக்கேன் போதுமா… அவங்க உன்னை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லலை… பிடிவாதம் பண்ணி உன்னை கட்டிக்கிட்டேன். 


     அவங்க கூடவே இருக்க முடியலை… இந்த வீடு எல்லாரும் சேர்ந்து வாழ தான் ஆசையா வாங்கினேன். ஆனா உன்னோட அவங்க வாழ யோசிக்கறாங்க… அதனால எனக்கு எங்க வீட்டு ஆட்களை சுத்தமா பிடிக்கலை, அவங்களை அவங்க சொல்றதை விட்டுட்டு உன் கூட வந்துட்டேன்”
      ”அப்போ அவங்களுக்கு என்னை பிடிக்காதா?” என உள்ளுக்குள் போன குரலில் இடிந்து போய் கேட்டாள். 
      ”இங்க பாரு நான் பேஸிக்கா ரியாலிட்டி சொல்றது போல வாழற ஆளு. அவங்களுக்கு உன்னை பிடிக்கலை. அதனை எனக்கு அவங்களை பிடிக்கலை. கல்யாணம் மட்டும் கௌரவம் குறைய கூடாதுனு கட்டி வச்சாங்க ஓகே என்று திருமணத்தை ஏற்றுக் கொண்டு உன்னிடம் நிம்மதியா வாழ ஆரம்பிச்சேன். எதையாவது ஒன்னு இழந்தா தான் ஒன்று கிடைக்கும்.” என்று தன் வீட்டு நிலையை கூறினான். 


      ”எனக்காக அவங்களை இழக்கற அப்படி தானே?”
      ”ஆமா பசிக்குது… சோறு வை” என அமர ‘நான் வைக்க மாட்டேன்’ என்பது போல  திரும்பி நின்று கொண்டாள்.
         அர்ஷி தானாக உணவு வைத்து உண்டு முடித்து அதே தட்டில் உணவினை வைத்து பிசைந்து அவளுக்கு ஊட்டி விட, தனக்கு இதுவரை ஊட்டி விட ஆளே இல்லாத காரணத்தினால் அவன் ஊட்டி விட உணவினை ‘ஆ’வாங்கினாள்.
            இரவு எதுவும் நடக்காதது போல அவளை இழுத்து தன் மேல போட்டு படுக்க, ”எனக்கு இங்க இருக்க பிடிக்கலை அர்ஷி… பயமா இருக்கு… அங்க யாரோ இருக்காங்க. கூடவே நடந்து என்னை வேவு பார்ப்பது போலயிருக்கு அடிக்கடி என்னவோ பயமுறுத்தறது.  எனக்கு எப்படி சொல்ல தெரியலை.  நாம உங்க வீட்டுக்கு போகலாமா? அங்க உன் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, உன் தம்பி, என்று ஒரு பெரிய குடும்பம் இருக்கும்” என தான் ஆசைப்பட்ட குடும்பம் கிடைக்க பேசினாள். 
     ”எங்க பாட்டி இப்படி பேச சொல்லிட்டு போச்சா?” என்றான் முறைப்போடு.


      ”இல்லை அர்ஷி அவங்க எதுவும் சொல்லலை. எனக்கு நிஜமா இந்த பெரிய வீட்ல பயமா இருக்கு. நான் தனியா வளர்ந்தேன் தான் ஆனா என்னை சுற்றி ஒரு துணை இருக்கும் அப்படி இல்லாமல் போக ஒரு பயம் வரும் அது இங்க அதிகமா தோணுது” என விடாது கேட்டவளின் இம்சையால், அர்ஷி பேசாமல் பக்கத்து அறைக்கு சென்று படுத்து கதவை மூடிக்கொண்டான்.
     இங்கு ஹர்ஷினி பயத்தின் உச்சத்தில் இருந்தாள். இதில் ஏதோ பயமுறுத்தும் உருவம் வேறு வந்து செல்ல, கத்தி கத்தி அவனை கூப்பிட்டு அழ அர்ஷித் வெளியே வந்தான்.
       ”இனி வேற எதுவும் பேசக் கூடாது அப்படி பேசின நான் பக்கத்து அறையில் தான் போவேன்” என கட்டிலில் விழுந்தான். ஹர்ஷினி அப்படியே இனி எதுவும் பேச வேண்டாம் என அவன் அருகே படுத்துக்கொண்டாள்.                                                                                              

                       
            நிஜமாகவே கொஞ்ச நாளாக ஹர்ஷினி அனுபவித்து கொண்டு இருக்கும் உணர்வுகள் தான். தன்னை யாரோ பின் தொடர்வதாக… கூடவே வருவதாக… இருட்டில் அதிகமாக தனது பயத்தினை உணருகின்றாள். அதுவும் தனிமையில் சொல்லவே வேண்டியதில்லை.
                 பத்து வயது வரை அப்பா அம்மா என வாழ்ந்தவளின் வாழ்வில் அதன் பின் ஆசிரமதில் தனியாக உறங்க எல்லோரும் இருந்தாலும் ஒரு தனிமை உணரவே செய்தாள். அம்மாவின் ஸ்பரிசம் தொடுகை எல்லாம் இழந்த நேரம் அதுவும் இரவில் அம்மா முந்தானையில் உறங்கியவளுக்கு இது இன்னும் பயத்தினை கொடுத்தது.


          ஆசிரமத்தில் என்ன அன்னை போல தட்டி கொடுத்து உறங்கவா வைப்பார்கள் அல்லது அணைத்து ஆறுதல் தான் சொல்வார்களா?
           நடு இரவில் விழிப்பு வந்து விட்டால் இரவின் பிடியில் இருட்டில் ஆங்காங்கே ஏதோ ஏதோ ஒரு கற்பனை உருவகம் செய்து அது தன்னருகே வருவது போலவே எண்ணி கொள்வாள்.
          அவ்வுருவம் தன்னை பயமுறுத்துவதாக தோன்றும்.


          அது பருவம் செல்ல செல்ல மற்றவர்களிடம் பேச்சில் கலந்துவிட மறந்தே போனது ஆனால் இந்த தனிமையில் அது திரும்பவும் தன்னை ஆட்கொள்வதாக தோன்றியது அவளுக்கு…. அதனை சொல்லி அர்ஷிடம் அவனின் உறவுகள் இருக்க, தான் ஏன் தனித்து இருக்க வேண்டும் என எண்ணி கேட்க செய்தாள். ஆனால் அர்ஷித் வீட்டில் தன்னை வெறுக்கின்றார்கள் என்று இன்று தான் அவள் அறிந்தது.
           ஆனால் உண்மையிலே தன் அருகே ஒரு உருவம் விடாது துரத்துகின்றதை அவள் இன்னும் உணரவில்லை. அவ்வுருவம் அவளை இன்னும் எதுவும் செய்யாமல் இருக்க கூட அதனால் தெரியாமல் இருக்கும்.


        கண்ணீரில் ஹர்ஷினி உறங்க இங்கு நாயகனோ இவளுக்காக பார்த்து பார்த்து, காதல் சொல்லி, இவள் கையை பிடிச்சு, இவளின் தனிமை, சோகம், எல்லாம் மறந்து, இவளுக்கு ஒரு காதல் வாழ்க்கை கொடுத்தா, இவளை வேணாம் சொன்னவங்களை போய் கூப்பிட சொல்றா? இவளுக்கு என்ன புரியுது. அவங்க இங்க வந்தா இவள் மனம் நோக செய்வார்கள் என்பது புரியாம பேசாறாளே என சிந்தித்தான். 


               காலையில் எழுந்ததும் எவ்வித ஆர்பாட்டமின்றி கிளம்பினான் அர்ஷி.
      சின்ன சின்ன தீண்டல் சீண்டல் கொஞ்சல் எதுவும் இல்லை. ஹாசினிக்கு அழுகையே வந்து விட்டது. அவனுக்கு அழுகை பிடிக்காது என்று அதையும் கட்டுப்படுத்தி கொண்டாள்.
       இதே போல நான்கு நாட்கள் நகர… 
அன்று அர்ஷித் வரும் நேரம் ஹர்ஷினி கிச்சனில் இருந்து வர அங்கே ஒரு தண்ணீர் பாட்டில் தானாக திறந்து ஹர்ஷினி வரும் வழியில் ஊற்றி முடித்தது.


      விழுந்த வேகத்தில் சுவற்றின் முனையில் பட்டு நெற்றியில் நன்றாக இடித்தது. 
          ஹர்ஷினி கால் வைக்க வழுக்கி பயத்தில் அவள் மயங்கி சரிய அர்ஷித் அதே நேரம் ஓடி வந்து அவளை வேகமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.
         நெற்றியில் ரத்தம் சொட்ட, அவ்விடம் கண்டு மயங்கினாள். அவளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை முடித்து, நெற்றியில் தையலிட மயக்கத்தில் நேற்று நினைத்த நிகழ்வுகள் எல்லாம் உலர அதனை எல்லாம் போனில் ரெகார்ட் செய்து அர்ஷித்துக்கு போட்டு காட்டினார் அந்த மருத்துவர் நிஷாந்தினி.


    ”எல்லாம் கேட்டீங்க தானே… ” என்று மருத்துவர் கேட்க, ”டாக்டர் அவள் போன வாரம் என்னிடம் சொன்னா ஏதோ பயமா இருக்கு என்று, ஆனா இப்படி தனியா மனதில் சிறு வயதில் எண்ணி பார்த்த பயம் சுவரில் உருவகம் கற்பனை செய்து பயந்து இது எல்லாம் எனக்கு கேட்க புதுசா இருக்கு” என்றான் அர்ஷித்.
     ”இங்க பாருங்க அர்ஷித் நாம நார்மல் லைஃப்ல இருக்கற வாழ்க்கையிலே எத்தனையோ கற்பனை செய்து பார்க்கின்றோம். குழந்தை கருவுற்று இருக்கும் காலத்தினில், குழந்தை இப்படி இருக்கும் அப்படி இருக்கும், இப்படி விளையாடும் அப்படி விளையாடும் என்று. 


அதே போல, ஒரு பெண் பார்க்கும் படலம்ல, ஒரு பெண்ணை பார்த்துட்டு வந்து அவளை மனைவியா கல்யாணமாகறதுக்கு முன்னேயே அவளோட பேசி, சிரிச்சு, கற்பனையிலே ஒரு வாழ்க்கை வாழறாங்க.
 சிலர் கற்பனையின் உருவில் தோன்றியதை தான் கதை சீரியல் நாவல் என்று படைக்கிறாங்க.
 அதே போல தான் இந்த கற்பனை. உங்க மனைவியின் கற்பனை சின்ன வயதில் தோன்றிய பயம், இருட்டு தனிமை, எல்லாம் இதுவரை அவர்களை திரும்ப பாதிக்கலை. ஆனா இப்போ உங்க வீட்டில் பெரிய இடத்தில் அவங்க தனிமையை உணருறாங்க.. அதோட கூற்று தான் இந்த பயம் கற்பனை எல்லாம்”
      ”நான்…. நான் என்ன செய்றது? எனக்கு என்ன செய்யனும் மட்டும் சொல்லுங்க” என்றான் அவன். 
        ”அவங்களுக்குள்ள இருக்கற இருட்டை விரட்டுங்க…. இல்லையா சின்னதா அவளுக்கு மைண்ட் செட் போல ஒரு லைஃப்ல வாழ விடுங்க… அதாவது அவள் எதிர்பார்க்கும் உங்க உறவுகளை கொண்டு வந்து, அந்த வீட்டில் நிறுத்துங்க. அவளுக்கு எங்க பார்த்தாலும் தனிமை இருட்டு என்றது இல்லாமல், உறவு சந்தோஷம்னு மாற்றுங்க.


 இல்லையா தனியா அந்த வீட்டை தூக்கி போட்டுட்டு ஒரு சின்ன பிளாட்னு இருங்க அவங்க சின்ன வீட்டில் இருந்தா எப்படி ரியாக்ட் பண்றாங்க என்று பாருங்க. ஆனா எனக்கு தெரிந்து அவங்க தனிமை போகணும் என்றால் உறவை தான் தேடுது… இது கிடைக்காம போனா அவங்க மைண்ட் அளவுக்கு அதிகமா டிஸ்டர்ப்பாகி மனநோயாளியா மாற வாய்ப்பிருக்கு.


         நிறைய பேர் இப்படி தான் புது லைஃப் மனைவி கூட தனியா வாழ ஆரம்பிக்கறாங்க ஆனா அது இயல்பா வாழும் பெண்களுக்கு வரபிரசாதமா போயிடுது. தனிமை இனிமை என்று.
             ஆனா இப்படி உறவுகளுக்கு ஏங்கும் பெண்கள், தனித்து வாழ்ந்து இருக்கும் பெண்களுக்கு, தனியா ஏதோ நம்மளை சுற்றி யாருமில்லை என்ற பயம், யாரோ பேயா இருக்காங்க என்று கற்பனை செய்து, பயந்து, மனவுளைச்சலில் சிக்கிக்க செய்யறாங்க. எனக்கு தெரிந்து அவங்க சில நாட்கள் உங்களிடம் சொல்லி, மனசில் அழுத்தி தான் மயக்கம் வந்து இப்படி இருக்காங்க. இல்லை என்றால் அவங்க மயங்க சான்ஸே இல்லை” என்று சொல்ல அர்ஷித்திற்கு என்னவோ புரிந்தது.
              அவளினை நுண்ணோவியமாக ஒவ்வொரு முறையும் பார்த்து பார்த்து பக்குவமாக காதலை சொன்ன தானே இன்று அவளை நுண்மையையாய் நோக்கி அறியாது, தவிக்க விட்டு விட்டோம் என புரிந்த்து.


           அவளின் தவிப்பு புரிந்தாலும், வறட்டு பிடிவாதம் கொண்டு, தனது குடும்பத்தினை அவள் குடும்பமாக எண்ண வைக்காமல் போனதை உணர்ந்தான்.
           ஒரு முடிவோடு கண் விழிக்கும் ஹாசினிக்காக காத்திருந்தான்.
         அவள் மயக்கத்தின் பிடியிலும் கொஞ்சம் உறக்கம் என்றிருக்க அங்கே நர்ஸ் உதவியில் அவளை விட்டு விட்டு தனது குடும்பத்தினை காண சென்றான்.
   முதலில் சாதாரணமாக வர மறுத்து பிடிவாதம் செய்தவர்களின் முன் தனது மொத்த வறட்டு கௌவுரவத்தினை விட்டு எல்லோரிடமும் அவள் நிலைமையை சொல்லி பேசினான்.
     ”அம்மா அப்பா உங்களுக்கு என்ன நான் உங்க பேச்சை மீறி ஒரு அனாதை கட்டிக்கொண்டேன் அவ்ளோ தானே?” என்றான். அந்த அனாதை என்று அதை சொல்லும் பொழுது அவனுக்குள் வலித்தாலும் சொன்னான். 


     அதுக்கு தானே என்னோட வர மறுக்கறிங்க அப்படி தானே? எனக்கு தெரியும் எல்லா பெற்றோருக்கும் தனது பிள்ளை தங்களிடம் இல்லாமல் வேற ஒருத்தி தானா தேடி போனா, அவளுக்காக பெற்றோரை மதிக்க மாட்டாங்கனு நினைச்சுக்கறிங்க. ஆனா உண்மை அது இல்லை. நானும் அவளும் உங்களின் அன்புக்காக தான் ஏங்கறோம். என்ன விட அவள் அதிகமா ஏங்கறா.  அவள் ஒன்னும் நம்மளை பிரிக்க மாட்டா அம்மா.. அவளுக்கு யாரும் இல்லை. நீங்க அவளை ஏற்றுக்கொண்டா அவ உங்க பொண்ணு மாதிரி அன்பா இருப்பா அம்மா. 
         ஒரு வாரமா தாத்தா பாட்டி வந்துட்டு போனதிலருந்து சொல்லிட்டு தான் இருக்கா. எனக்கு இதுக்கு முன்ன தான் தனிமையா இருந்தேன் இப்பொழுதாவது குடும்பம் வேணும் அர்ஷி எல்லோரையும் கூட்டிட்டு வா சொல்லிட்டே இருந்தா.. நான் தான் பாட்டி சொல்லி இப்படி பேசறானு திட்டிட்டு கவனிக்கலை.


         ஆனா இன்னிக்கு அவள் மயங்கிட்டா அம்மா.. அவளுக்கு தனிமை கொடுத்து தண்டனை கொடுக்காதிங்க. அவளுக்கு ஒரு உறவை கொடுத்து ஏற்றுக்கோங்க. அவள் ஒன்னும் நம்மளை பிரிக்க வரலை… சேர்க்க வந்திருக்கா.. அவளுக்கு மனநிலை பாதிச்சு ஹர்ட் ஆனா எனக்கு கவலை இல்லையாம்மா… நான் கவலைப்பட்டா நீ சந்தோஷமா இருப்பிங்களா தாத்தா…” என அர்ஷித் அழுதான். எனக்கு அழுகை பிடிக்காது என்று பேசுபவன் அழுதான் தன்னவளுக்காக. 
         பாட்டி தான் அவன் தோளில் கையை வைத்து ”நீ போ ராசா.. உன் அம்மையும் அப்பனையும் நான் கூட்டிட்டு வர்றேன்” என்று அமராவதி பாட்டி கண்ணீரை துடைத்து விட்டு நம்பிக்கை கொடுக்க கிளம்பினான்.


    கண்களில் கண்ணீரோடு மனையாளை கண்டான்.
              காதலிக்கும் பொழுது அவளை நுண்ணோவியமாக கூர்ந்து கவனித்தவன் இன்று அவள் கூறியும் ஒரு வாரம் செவி மடுக்கமல் சென்றதை எண்ணி வருந்தினான்.
        அவளை அழைத்து வீட்டுக்கு வந்தான். கதவுதிறக்க அங்கே தனது பாட்டி அமராவதி, தாத்தா கஜேந்திரன் மற்றும் அர்ஷித் தந்தை செந்தமிழன் தாய் தாமரை என்றிருந்தார்கள். ‘எப்படியோ பேசியே சாதிச்சுடு’ என்ற பார்வையில் அவனின் தம்பி வினய் நின்றான்.


           பெற்றோரை பார்த்து பேசி, வந்த பிறகு கூட, நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தான் ஆனால் தனக்காக குடும்பமே வந்து நின்றதை எண்ணி மகிழ்ந்தான்.
      ”என்ன டி மா இருட்டுகெல்லாம் பயப்படுவியோ… பாரு பிள்ளை பயந்தே போயிட்டான்” என தாமரை வந்தார். 
        ”இங்க பாரு இனி பயப்படாத நாங்க எல்லாம் உன்கூடவே இருப்போம்” என்று செந்தமிழன் சொன்னார். 
    ”அப்பா அம்மா…” என ஹர்ஷினி அவர்கள் பாதம் நோக்கி விழுந்தாள். 
    காலில் விழுந்து ”நானும் அர்ஷித்… ஆஹ்.. அவரை போல அப்பா அம்மா கூப்பிடட்டுமா?” என அனுமதி கேட்டாள். 
      ”நோக்கு எப்படி கூப்பிடணுமோ அப்படி கூப்பிடுடி மா.. அவனையும் தான்” என அமராவதி பாட்டி பேரனை அர்ஷித் என்றதையும் கண்டு கொண்டு பேசினார். 


 அங்கு அதே நேரம் மின்சாரம் துண்டாக, ‘அர்ஷி’ என்று நடுங்கினாள்.  
இருட்டில் தாத்தாவோ ”கவலை படாதே டாம்மா… தாத்தா போனில் லைட் ஆன் பண்ணறேன்” என கஜேந்திரன் சொல்ல ஹாசினியின் வாழ்வில் முற்றிலும் இருள் அகன்றது.
        சிறு வயதில் தோன்றிய அந்த இருட்டு பயம் தான் தனிமை என இன்னும் அச்சுறுத்த இன்றோ முற்றிலும் அகன்றது போன்றே தோன்றியது.
           வெளிச்சம் வர வர அங்கே ஹர்ஷினி மனதில் இருக்கும் பயமும் அகல்வதை போலவே அங்கே அருவமாக நின்று இருந்த விசாலினி உருவமும் அகன்றது.


            ஆம்………… 
    அங்கே விசாலினி என்ற உருவம், ஹர்ஷினி அருகே தான் இருந்தது. இக்கணம் வரை.
             விஷாலினி கல்லூரியில் அர்ஷித் மேல் கொண்ட காதலில் அவனிடம் காதலை தெரிவிக்க, அவனோ அவள் மேல் காதல் தோன்றவில்லை என கூறிட இன்று மறுப்பவன் கொஞ்சம் காலம் திரும்ப வந்தால் ஏற்று கொள்வான் என்றெண்ணி காலம் நகர்ந்தினாள். 
               அன்று ஒரு நாள் தனது காதலை சொல்லி அவனிடம் பகிர வர அவனோ ஹர்ஷினியை அழைத்து செல்வதை கண்டாள் விஷாலினி.


           அர்ஷித் காதலை சொல்லி கையை நீட்ட விஷாலினி வலி கொண்டு அவ்விடம் இருந்து மறைந்தாள்.
         அதே சிந்தனையில் காரினை ஓட்ட அதுவோ ஒரு ப்ரிட்ஜ் வளைவில் விழுந்து நீரில் கார் முழ்கி விசாலினி இறக்க நேர்ந்தது.
           விஷாலினி இருப்பிடம் இருக்கும் வீட்டை விற்றுவிட்டு மகளின் இறப்பை தாங்கி கொள்ளாமல் தான் தனசேகரன் பாதி விலைக்கு அந்த வீட்டை விற்க முயன்றார். அந்த வீட்டை தான் அர்ஷித் வாங்கினான். அர்ஷித் பெயருக்கு வீட்டை மாற்றி விட்டு லண்டன் சென்றார் விசாலினி தந்தை.
        தனது வீட்டிலே சுற்றி கொண்டு இருந்த விசாலினியின் அருவம் கொண்ட ஆத்மா, அர்ஷித் வாழ்வில் பங்கேற்க துடித்து அது முடியாது ஆத்மாவாக அலைய, அந்நேரம் அர்ஷித் தனது இல்லத்தில் நுழைவதை கண்டாள்.


             தந்தை அர்ஷித்திடம் விற்றதை எண்ணி மகிழ முடிந்தவளால் அவனோடு வாழும் நிலை தனக்கு இல்லை என்றெண்ணி வருந்த, அவனுக்கு திருமணம் ஆனது மேற்கொண்ட வலியும் கொடுத்தது.
           முதல் நாள் ஹர்ஷினி அர்ஷித் வருகையில் ஹர்ஷினி மேல் கோவம் கொண்டு பின்னாலே போனாள்.
         தன் மனம் கவர்ந்த காதலனுக்கு இவள் தகுதியானவளா என பின் தொடர்ந்து அறிய, விசாலினி செல்ல ஏற்கனவே சின்ன சின்ன இருட்டுக்கும் நிழலுக்கும் பயந்த ஹர்ஷினியை அறிந்தாள். 
தான் விரும்பிய அர்ஷித் தனக்கு கிடைக்காமல் போனாலும் அவனுக்கு அமைந்த மனைவியின் மனம் இவ்வாறு பயத்தில் தத்தளிப்பதை அறிந்து, விசாலினி ஹாசினியின் பயம் போக எண்ணினாள்.
             பேயாக முன் வந்தால் அவள் பயந்தே ஓடுவது சாத்தியம் என ஹர்ஷினியை நோட்டம் விட்டாள்.
        அப்பொழுது தான் ஹர்ஷினி ஒரு குடும்பத்தினை தேடுவது புரிய அர்ஷித் வர தண்ணீர் பாட்டில் நீரை கொட்டி விழ வைத்து மருத்துவர் மூலமாக குடும்பத்தினை வர வைக்க அர்ஷித்திடம் அவளே பேசினாள்.


       நிஷாந்தினி இதை தான் சொன்னாலும் குடும்பத்தினை வர வைக்க இவனுக்கு எடுத்து சொன்னது என்னவோ விஷாலினி தான்.
           தனது மனம் கவர்ந்த காதலன் அர்ஷித் அவன் விரும்பிய பெண்ணோடு நிம்மதியாக வாழ, இதுவே தனக்கு போதும் என்று நிம்மதியடைந்தது விசாளினி ஆன்மா. 
 இனி தான் இருக்க செய்வது மிகுதியென அந்த உருவம் மறைய துவங்கியது.
        தனது காதலியை நுண்ணோவியமாக கூர்ந்து பார்த்தவனுக்கு தனது வாழ்வில் தனக்கே தெரியாமல் ஒருவள் நுண்ணோவியமாக காற்றோடு கலந்ததை அறியாமலே போனான் அர்ஷித். 

                                                                                                     – சுபம்
                             -பிரவீணா தங்கராஜ்.

1 thought on “நுண்ணோவியமானவளே”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *