அத்தியாயம்-23
விகர்த்தனன் குளிக்க சென்றவன் தலைத்துவட்டி வர, சம்ருதி நகம் கடித்தபடியிருந்தாள்.
“அழகான நெயில் ஏன் சம் கடிக்கிற” என்று துவட்டிய துண்டை அவள் தோளில் வைத்தான்.
“பச்… அத்தை என்றால் அப்பாவுக்கு ப்ரியம் விகர். என் விஷயத்துல வசந்தும் மாமாவும் செய்ததுல இப்ப அப்பா, தன்னோட அக்கா பாசத்தை துண்டிக்கறார்.” என்று வருத்தப்பட்டாள்.
சம்ருதியை கேலி செய்யும் சிரிப்பை சிரித்து, விகர்த்தனன் “உங்கத்தையும் சதியில் ஒன் ஆஃப் தி பார்ட்னர் தெரியுமா? உன்னோட வசந்தை துணைக்கு அனுப்பியதே தந்திர புத்தியால தான்.
ஜனனி அவ வாயல என்னிடம் சொல்லிருக்கா. எங்கம்மா வசந்த் அண்ணாவும் சம்ருதியும் பழகட்டும்னு என்னை நடுநடுவுல கழண்டுக்க சொன்னாங்க.’னு. அதோட ஜனனியிடம் தான் நீ குடிக்கற கூல் டிரிங்க்ஸ்ல புட்பாய்ஸனுக்கு மாத்திரை கலந்தது.
அம்மா சொன்னாங்கன்னு அவ கலக்கலாமா? என்ன நீ பாவம் பார்த்துட்டு இருக்க? இதே சிங்கப்பூர்ல ஜனனியை வச்சி மயக்க மருந்து கொடுத்து அவன் உன்னை என்ன செய்தாலும் தெரிந்திருக்காது. ஜனனியை இந்த விஷயத்தில் என்னால் மன்னிக்க முடியலை. அதனால் தான் அவளை தண்ணில தள்ளிவிட இலக்கியனை யூஸ் பண்ணினேன்.” என்றான்.
சம்ருதி அதே நிதானத்துடன், ”உண்மை தான் மாமா வசந்தும் என்னை அவங்க வீட்டு மருமகளா வந்தா நகைகடையையும் சொத்தும் கிடைக்கும்னு கிருஷ்ணாவை மிரட்டி துரத்தியிருக்காங்க.
அதோட அத்தை வசந்தை என் கூட சிங்கப்பூருக்கு அனுப்பியது அவர் என்னோட பழகி சொந்தத்துல கல்யாணம் பண்ணி வைக்கிற தாட்ஸை எனக்குள்ள விதைக்க நினைச்சிருப்பாங்க. ஆனா இதெல்லாம் தப்பில்லையே. எனக்கு இது தப்பாவும் தோணலை. என்ன… அவங்க கிருஷ்ணாவை மிரட்டியதும், ஜனனி மூலமா என்னை ஆஸ்பிடல்ல இரண்டு நாள் சேர்த்து விட்டதும் தான் பெரிய தப்பு.
நீங்க செல்லற மாதிரி சிங்கப்பூர்ல வசந்த் தப்பா நடந்திருக்கவும் வாய்புண்டு. ஆனா உங்களை சந்திக்க வாய்ப்பு அமைந்தது வசந்தால தான்.
இப்ப அவங்க செய்த தப்புக்கு தண்டனை கிடைச்சிருக்கும்.” என்றாள்.
ஆனாலும் கடைசியில் வருத்தமாய் உதிர்த்தாள்.
“உனக்கு என்னை பிடிச்சி போயிடுச்சு சம்ருதி. ஒரு வேளை கிருஷ்ணா தவறு செய்யலை என்றது பின்னாடி தெரிய வந்தது என்னை சந்திக்காம இருந்திருந்தா, நீ உங்கத்தை மாமாவை கடிச்சி குதறியிருப்ப. இப்ப கிருஷ்ணாவோட காதல் தவிர்க்கப்படவும், என்னை பிடிக்கவும், ஒரு விதத்துல நீ வசந்த் குடும்பத்தோட செய்த சதியை நல்லதா நினைச்சிக்கற. மத்தபடி இப்பவும் டேஞ்சரஸ் பீப்பிள்ஸ் தான்.
பட் இப்ப தண்டனை பெத்த பொண்ணே தந்துட்டா. நமக்கு வேலையில்லாம போச்சு. இல்லைன்னா.. அதுக்கு ஒரு நரி தந்திரம் பண்ணணும். இப்ப நம்ம வேலையை பார்க்கலாம். அதோட மாஸ்டர் பிளான் சத்யமூர்த்தி தான். வசந்த் அவனுக்கு பாதகமா இல்லாம தான் திருடுவான்.
ஆக்சுவலி ஜனனிக்கு வசந்தை முன்னிருத்தி பேசி தன் பேச்சை அம்மா அப்பா காது கொடுத்து கேட்கலைன்னு ஒரு குறை. அதனால அவ விரும்பிய பையனோட ஓடிட்டா. ஜனனி பாண்டிசேரில செட்டிலானதா கிருஷ்ணா யூகத்துல சொன்னான்." என்றதும், சம்ருதி யோசித்து "ம்ம்ம் இருக்கும்.. அவ காலேஜ்ல ஒரு பையன் அங்க தான் வேலை செய்யறான். அப்ப அவனை தான் காதலிக்கறாளா? அப்பாடி அப்ப பாண்டிசேரில தான் இருக்கா. லேசா பயமாயிருந்தது விகர். யாரை விரும்பினாளோ எங்க இருக்காளோனு. அந்த பையனை பார்த்திருக்கேன் ஓகே" என்று நிம்மதியாக மூச்சு விட்டாள்.
“சம்ரு… இனி நம்ம லைப்பை பார்ப்போம். அவங்களை பத்தி தேவையில்லாம பேச வேண்டாம்” என்று கட்டிப்பிடிக்க வந்தவனை தள்ளிவிட்டு, ”நீங்க குளிச்சிட்டு வந்தாச்சு. நான் குளிக்கலை, குளிச்சிட்டு வர்றேன்” என்று நாக்கை துருத்தி ஓடினாள்.
அவள் செல்லவும், ஜனனி அலைப்பேசிக்கு அழைத்து பார்த்தான்.
அது அமர்த்தப்பட்டு இருப்பதை உணர்த்த, “கொஞ்ச நல்ல பொண்ணு… நல்லபடியா வாழ்ந்தா சரி” என்றவன் தனது வேலையில் மூழ்கினான்.
சம்ரு வந்ததும் தாய் தந்தை பார்க்க ஓடினாள்.
ஜானகி எல்லாம் வசந்த் தங்கள் கடைக்கு அவப்பெயரை இழுத்து வைத்து விட்டானே என்று தான் கலங்கினார். மற்றபடி நாத்தனார் கணவரை பற்றி கவலைப்படவில்லை.
அதோடு மகள் புகுந்த வீட்டில் ராணியாக வலம் வரும் பொழுது நகைக்கடையில் ஏற்பட்ட அவப்பெயரை கூட மறந்து மகளின் வாழ்வு மலர, இறைவனை பிராத்தித்தார்.
சந்திரசேகரும் மகள் வந்தப்பின் கூடுதலாக சம்பந்தி வீட்டில் உரிமையாக நடமாடினார்.
மகன் விகர்த்தனன் வந்ததும் அம்பலவாணன் தொழிற்சாலைக்கு செல்வதை தவிர்த்து சந்திரசேகரிடம் பேசி பொழுதை கழிக்க விரும்பினார்.
சந்திரசேகர் வீட்டிலேயே இருந்தால் சரிவராது என்று மனமாற்றத்திற்காக தியானம் செய்ய யோகா கிளாஸ் அழைத்து சென்றார் அம்பலவாணன். இரண்டுமணி நேரம் வகுப்பிற்கு போக வர பயண நேரம் ஒரு மணி நீட்டிக்கும். காலையில் வாக்கிங் என்று செல்வார். இதனால் நேரம் இனிதாக கழிந்தது.
நடுநடுவே ஜானகி சமைக்க, வீட்டில் சம்ருதி “உனக்கேன்மா இந்த வேலை” என்பாள்.
“வேலைக்காராங்க சமையலை சாப்பிட்டு பழகியவங்க மாப்பிள்ளையும் உன்மாமனாரும். நீ ருசியா சமைச்சி அவங்களுக்கு பரிமாறு” என்று கூற சில நேரம் தனக்கு தெரிந்த சமையலை செய்ய ஆர்வம் காட்டினாள்.
சின்ன சின்னதாக கைகள் சுட்டு விட்டதாக சம்ருதி உதடு பிதுங்கி குழந்தையாக வந்து விகர்த்தனனிடம் காட்டுவாள்.
‘நீ சமைக்காத சம்ரு’ என்றெல்லாம் சொல்ல மாட்டான். அதற்கு பதிலாக ‘விரலில் சூடுபட்ட இடத்தில் முத்தங்களை நிரப்பி அவளை குளிர்விப்பான்.
கணவனின் பாராட்டும் அன்பும் கிடைக்க, புதுசு புதுசாக அசத்தினாள்.
அடிக்கடி கிருஷ்ணா பேச்சு அம்பலவாணனிடம் விகர்தனன் பேசுவான். கூடவே நவ்யா கன்சீவா இருப்பதால இப்ப எல்லாம் எங்கேயும் வரமாட்டேங்கறான் அப்பா” என்று விகர்தனன் கூறவும், இப்ப எத்தனை மாசம்?” என்று வந்து நின்றது அன்றைய பேச்சு.
அதெல்லாம் கேட்டு ஜானகியோ “நீயும் காலாகாலத்துக்கு புள்ளையை பெத்துக்கணும் சம்ருதி. நீயும் ஒத்த பிள்ளை. மாப்பிள்ளையும் ஒத்த பிள்ளை. அதனால் வகைவகையான பெத்து கையில கொடு. நான் வளர்க்கறேன்” என்று தன் மனதின் எண்ணத்தை வெளியிட்டார்.
“ஆமா அம்மா... இப்ப தான் மேரேஜ் ஆகியிருக்கு. இரண்டு வருஷம் நோ கிட்ஸ்.” என்றாள்.
அந்தநேரம் விகர்தனன் கேட்டு விட்டான்.
ஜானகியோ தலையிலடித்து, “மாப்பிள்ளை எதிர்ல குழந்தைங்க வேண்டாம்னு பேசற. அவர் என்ன நினைப்பார். முதல்ல அவரிடம் பேசு” என்று அனுப்பினார்.
‘மாப்பிள்ளை வந்தாலே மாடிக்கு துரத்தறிங்கம்மா.’ என்று வந்தவளிடம் விகர்தனன் வாட்ச் கழட்டி, “என்ன அத்தையும் நீயும் பேசறச்ச குழந்தை என்ற பேச்சு அடிபட்டுச்சு” என்று வந்தான்.
“அவங்களுக்கு பாட்டி ஆகணுமாம்.” என்று கூற, “என் சம்ரு ப்யூட்டி ஒத்துழைச்சா ஜானகி அத்தையை பாட்டி ஆக்கிடலாம்” என்று இடையை நெருக்கினான்.
“உங்க ப்யூட்டி ஒத்துழைக்காமலா இருக்கா. இப்ப கூட பாருங்க நீங்க வந்ததும் உங்களை அணைச்சிட்டு இருக்கேன்.” என்று கிறக்கமாய் உரைத்ததும் “இன்னும் ஐந்து வருஷம் கழிச்சு தான் கல்யாணம் செய்வேன்னு கிருஷ்ணா கல்யாணத்துல சொன்னவன் நான். என் நெஞ்சை கொய்த வதுகையா (இதயத்தை பறித்த பெண்ணாக) உன்னை சந்திச்சேனோ அடுத்த செகண்ட் காதலில் விழுந்தேன், கல்யாணம் செய்தேன்.
அடுத்து குழந்தையும் வேண்டும்னு ஆசையா இருக்கு.” என்றதும், “நீங்களும் தான் இதயத்தை கொய்திங்க. யாராவது காதல் தோல்வின்னு இருக்கறப்ப சைட் அடிக்க மனசு வருமா? நான் உங்களை ரசித்தேன். நீங்க தான் என் இதயத்தை கொய்திங்க” என்று விகர்தனனை மெத்தையில் தள்ள அவனோ தன்னவளை சேர்த்தே இழுக்க இருவரும் மஞ்சத்தில் விழவும் இனி பேச்சுக்கு வேலையற்று போனது.
குழந்தையென்ற சுபமிடும் இனிய முடிவை கடவுளே அருளிப்பார்.
அதுவரை காதல் அன்பும், காம அம்பும் இவர்களின் காவிய காதலில் மாறிமாறி வட்டமிடும்.
-சுபம்-
-பிரவீணா தங்கராஜ்
வணக்கம் ரீடர்ஸ்….
முதல்ல வாசித்து கருத்தளிக்கும் உங்களுக்கு எனது அன்பான நன்றி.
உங்க ஆதரவு மட்டுமே என்னை முன்னேற்றும்.
இந்த கதை வரும் பத்தாம் தேதி வரை தளத்தில் இருக்கும். பிறகு நீக்கிடுவேன் வாசிக்காதவங்க வாசிக்கலாம். சைட்ல கதை வைக்காததற்கு முக்கிய காரணம் புக் வர்றதுக்குள் பிடிஎப் வந்துடக்கூடாது என்பதற்கு தான். சிலர் திருடிடறாங்க.
கதை போட போட வாசித்திடுங்க. அடுத்து ரீரன் கதை தான் பதிவிடணும். புதுக்கதை எழுதியிருக்கேன். ஆனா மேகஸினுக்கு அனுப்ப தயார் பண்ணறேன்.
அதனால் ரீரன் பண்ணுவேன். எந்த கதை என்று இன்னும் யோசிக்கலை.
சப்போஸ் வாசிக்காதவங்க வாசித்து ஆதரவு தாங்க.
📌📌📌சைட்ல ரிஜிஸ்டர் பண்ணாம கதை வாசிக்கறிங்களா? ரிஜிஸ்டர் செய்து வாசிக்கவும். 📌📌📌

👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕😍😍😍😍😍😍😍
♥️♥️♥️♥️🫰🫰🫰🫰🫰🫰🫰♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Super story.
Very interesting lead. 👌👌👌💕💕💕💕💕
Nice story
Super sister rerun story nee en mudhal kathal podunga sis
Very nice story sis, superrrrr
Nice finishing
Nice story
ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது ❣️❣️❣️❣️❣️❣️
Super sis very nice ending 👌👍😍 vikarthanan sonna mathiri love pannalana avanga athai family ya oru vazhi panniyirupa eppo mannichi vitita 🙄 anyways kadavula parthu dhandanai kuduthutaru 🙂 atlast a happy ending 🥰 seekirama next story podunga sis 🙏
Excellent story dear 👍👍👍
A feel good family story 🥰🥰🥰🥰
Vigar ❤️samyu lovely pair 💕💕💕💕 keep up the good work 👍👍🥳👌
Nice and feel good story
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super. Fantastic story. Keep up your good work sis. Congratulations.
நெஞ்சை கொய்த வதுகை …!
பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 23 Final)
எப்படியோ தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை, அவங்கவங்க தப்புக்கு எத்த மாதிரியே கிடைச்சிடுச்சு. இனி அந்த தண்டனையை அனுபவிக்கிறதும், அதுல இருந்து மீண்டு வரதும் அவங்கவங்க வினைப்படி நடக்கட்டும். ஏன்னா, எல்லாரும் ஜீஸஸ்ஸா இருக்க முடியாது தானே. சில நேரத்துல கிருஷ்ணர் மாதிரி கம்சன்களுக்கு தண்டனைகளையும், மரணத்தையும் பரிசா அளிக்கிறதை தவிர்க்க முடியாது தானே..?
இனிமேல் சம்பந்தியும் சம்பந்தியும், யோகா, வாக்கிங், கோவில், சேத்திராடனம்ன்னு பொழுதை நல்லபடியாவே போக்கட்டும். விகர் & சம்மூ போற வேகத்தைப் பார்த்தா அடுத்த மாசமே குட் நியூஸ் சொல்லிடுவாங்க போலவே.
எப்படியும் பாப்பா வந்த பிறகு பெரியவங்களுக்கும் சின்னவங்களுக்கும் அந்த பாப்பாவை பார்த்துக்கறதிலேயே பொழுதும் நல்லா போகும், குழந்தையையும் நல்ல ஒழுக்க நெறிமுறைகளை சொல்லிக் கொடுத்தே, பெரியவங்க சின்னவங்க கண்காணிப்பிலேயே நல்லபடியா வளர்த்து ஆளாக்கலாம் தானே..???
😀😀😀
CRVS (or) CRVS 2797
Nice finish. Waiting for next journey. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Wow superb superb ending azhaga mudichi irukinga epovum pola unga style ah athu tha highlight story ku . Next story vasika ready sikram podunga
Soooooppppeeerrr😍😍😍😍
Azhagana cute lovable story sis
Super super super😍😍😍😍 Good story😍