“டேய் தேவா நேரம் ஆகிவிட்டது பார் உனக்கு இன்று ஆபீஸில் முக்கியமான மீட்டிங் இருக்கிறது என்று சொன்னாய்”
இன்னும் கிளம்பவில்லையா? என்று கேட்டார் அவனது தந்தை “அதான் சமைத்து வைத்து விட்டாயே “
சமைத்த உணவுகளை கூட உனது சித்தியால் உணவு மேசையின் மீது எடுத்துக் கொண்டு வந்து வைக்க முடியாதா என்றார் நம் கதையின் நாயகன் “தேவ மித்திரனின்” தந்தை “தீரன் ” .
“தேவா சிரித்துக் கொண்டே” வந்து அப்பா சமைத்து முடிந்து விட்டது அனைத்து உணவுகளையும் உணவு மேசையின் மீதும் வைத்து விட்டேன்.
இன்னும் அடுப்பை மட்டும் சுத்தம் செய்துவிட்டு வந்துவிட்டால் அனைத்து வேலைகளும் முடிந்து விடும் என்றான்.
” டேய் நீ ஏன்டா இந்த வேலையெல்லாம் செய்து கொண்டிருக்கிறாய்” உனது சித்தியால் சமைத்த உணவை கூட எடுத்துக் கொண்டு வந்து வைக்க முடியாதா ..
வேலைக்கு செல்பவனை வீட்டிலும் வேலை வாங்கிக் கொண்டிருக்கிறாள்.
நீயும் எதுவும் பேசாமல் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்து கொண்டிருக்கிறாய் என்று தனது மகனிடம் கடிந்து கொண்டார் .
அப்போது அங்கு தேவாவின் சித்தியும் தீரனின் இரண்டாவது மனைவியும் மான “குழலரசி” வந்து நின்றார் .
ஆமாம் “உங்களது மகனுக்கு சப்போர்ட் செய்து கொண்டு என்னை திட்டவில்லை என்றால் உங்களுக்கு தூக்கம் வராதே என்றார்” அரசி .
அதற்கு தீரன் ஆமாம் டி எனக்கு தூக்கம் வராது தான் உனக்கு அதனால் தான் தூக்கம் வரமாட்டேங்குது எனது மகனிடம் வேலை வாங்கவில்லை என்றால் . “வீட்டில் சும்மா தானே இப்பொழுது உட்கார்ந்து கொண்டிருக்கிறாய் “
ஆனால் “வீட்டில் இருக்கும் வேலைகளை கூட உன்னால் பார்க்க முடியாதா “அவன் வெளியே ஆபீஸிலும் வேலை செய்து கொண்டு வந்து வீட்டிலும் உனக்கு ” வடித்துக் கொட்டிக் கொண்டிருக்க வேண்டுமா” என்றார் .
ஏன் சொல்ல மாட்டீர்கள் என்றார் அரசி கோவமாக “நானும் எனது பாருவும் ஆசையாக பெற்ற மகன் டி” அவன் என்றார் …
ஆமாம் எந்த நேரம் பார்த்தாலும் பாரு பாரு என்று சொல்லுங்கள் ஏன் சொல்லாமல் அதற்கு என்ன என்றார் தீரன் அதற்கு என்ன வா நீங்கள் இப்படி சொல்லி சொல்லியே தான் என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறீர்கள் என்றார் அரசி…
என்ன நான் உன்னை இந்த இடத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறேனா “பாரு இருந்திருந்தால் நீயும் இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டாய்”.
” எனது மகனும் இந்த நிலைமையில் இருந்திருக்க மாட்டான்” என்றார் ..
“இல்லாதவளை பற்றி மட்டும் நொடிக்கு ஒரு முறை நினைத்து கொண்டு இருங்கள் உங்களுடனே இருக்கும் என்னை மறந்து விடுங்கள்” என்றார் அரசி..
“உன்னை நினைக்கும் படியாக ஏதாவது ஒரு நல்ல விஷயம் செய்திருக்கிறாயா” என்று சொல் என்றார் ..
என்ன என்றார் அரசி கோபமாக “எந்த நேரமும் இவனையும் இவனது அம்மாவையும் மட்டும் தான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்னையும் எனது மகனையும் பற்றி யோசிக்கிறீர்களா என்று கேட்டார் அரசி.
தீரன் லேசாக சிரித்துக் கொண்டே உன்னைப் பற்றி யோசிக்கவில்லை என்று சொல் ஆனால் நான் எனது மகனை பற்றி யோசிக்கவில்லை என்று சொல்லாதே என்றார்..
“உங்களுடைய மகனா” அப்படி ஒருவன் உங்களுக்கு இருக்கிறான் என்று நினைப்பு இருக்கா என்றார் அரிசி .வாயை மூடு டி “எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்” என்று நினைவு எனக்கு இருக்கிறது
..
உனக்கு தான் உன் மனதில் உனக்கு ஒரு மகன் மட்டும் என்று நினைப்பு என்றார் ஆமாம் சொன்னாலும் சொல்லா விட்டாலும் எனக்கு ஒரு மகன் தான் என்றார் ..
“இந்த நினைப்பு தாண்டி நான் உன்னை விட்டு தூரச் செல்வதற்கு காரணம்” என்றார் இல்லை என்றால் மட்டும் நீங்கள் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருக்க போகிறீர்கள் பாருங்கள் என்று அரசி நக்கலாக கேட்டார்..
தீரன் தனது மனைவி அரசியை முறைத்தார் அப்பொழுது “ஒருவன் ஓடி வந்து அப்பா எனக்கு எக்ஸாம் ஃபீஸ் கட்ட வேண்டும் என்று சொல்லியிருந்தேனே ஞாபகம் இருக்கிறதா” இன்று கடைசி நாள் பணம் தாருங்கள் என்றான்..
அப்போது “அரசி டேய் உனக்கு தேவையானதெல்லாம் அவருடைய நினைவில் எப்படி டா இருக்கும் இவனுக்கு என்ன தேவை என்று தான் யோசிப்பார்” என்றார் ..
தீரன் அரசியை முறைத்துக் கொண்டு எதுவும் பேசாமல் நின்றார்.அப்பொழுது தேவா சிரித்துக் கொண்டே “ஆது உனக்கு நான் நேற்று மாலையை எக்ஸாம் பீஸ் கட்டி விட்டேன்” என்றான் .
அண்ணா தேங்க்யூ அண்ணா என்றால் ஆனால் தான் என்று சொல்லிவிட்டு அவனை குனிய சொல்லி அவனது தாடையில் முத்தம் வைத்தான்.
“ஆது என்னும் ஆதர்ஷ்”
தீரன் குழலரசியின் ஒரே மகன் அரசிக்கு தனது மகன் தேவாவை கொஞ்சுவது பொறுக்காமல் வயிறு எரிந்தது.
கோபமாக தனது மகனிடம் “டேய் அவனையே கொஞ்சு டா” நீயும் உனது அப்பாவே போல் “உன்னை பெற்ற தாய் இங்கு இருக்கேன் ஞாபகம் இருக்கிறதா” என்றார் ..
என்ன சொன்னீர்கள் என்று கேட்டான் ஆது “உன்னுடைய அம்மா “உன்னை பெற்றவள் “என்றார் அரசி ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான்.
என்னைப் பெற்றவர் என்னை பெற்றது மட்டும் தான் நீங்கள் என்றான் டேய் ஆது என்னடா பேச்சு பேசுகிறாய் என்று தேவா கடிந்தான் தனது தம்பியை அண்ணா கொஞ்சம் பொறுங்கள்…
” என்னால் உங்களைப் போல் அமைதியாக எல்லாம் சென்று விட முடியாது என்றான்” ஆது . “அப்படி சொல்லுடா எனது இளைய மகனே” என்று சொல்லி தீரன் கைதட்டி சிரித்தார்..
அரசி தனது கணவனையும் தனது மகனையும் முறைத்தார் “அப்பனை போல பிள்ளை வந்து பிறந்து இருக்கிறது” நான் என்ன செய்வது என்றார்.
அம்மா ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் “நீங்கள் அண்ணனையும் உங்களது மகனைப் போல் வளர்த்திருந்தால்” நன்றாக இருந்திருக்கும். அது மட்டுமில்லாமல் நீங்கள் சொன்னது போல் நீங்கள் என்னை பெற மட்டும் தான் செய்தீர்கள்..
என்னை முழுக்க முழுக்க வளர்த்தது அண்ணன் தான் அப்போது எனக்கு அப்பாவின் குணமும் அண்ணனின் குணமும் தானே இருக்கும் அந்த குணம் தானே வேலை செய்யும்…
“நீங்கள் சந்தோஷமாக வாழ்வதற்காக அண்ணனை எடுத்து எறிந்து பேசுவது சரியில்லை” என்றான். “நான் என்னடா அப்படி சந்தோஷமாக வாழ்ந்து விட்டேன்” என்றார் அரசி.
அம்மா போதும் எனக்கு நேரம் ஆகிறது உங்களிடம் பேசிக்கொண்டு நேரத்தை வளர்த்த நான் தயாராக இல்லை என்றான் அப்பொழுது தேவா “ஆது வா இன்று உனக்கு பிராக்டிக்கல் இருக்கிறது என்று சொன்னாய் நேரம் ஆகிறது பார்” சாப்பிட்டுவிட்டு சீக்கிரம் பள்ளிக்கு கிளம்ப பஸ் வந்துவிடும் என்றான் ..
ஆது சரி என்று விட்டு தனது தாயை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆது சாப்பிட அமர்ந்தான் “தேவா அவனுக்கு சாப்பாடு போட்டு ஊட்டி விட்டான் அதில் தாயின் அன்பை முழுமையாக பெற்றான் ஆது”
அண்ணா நீங்களும் என்னுடன் உட்கார்ந்து சாப்பிடுங்கள் உங்களுக்கும் மீட்டிங் இருக்கிறது என்று சொன்னீர்களே என்று கேட்டான்.
இல்லை டா நான் போய் கொள்வேன் ஒன்றும் பிரச்சனை இல்லை உனக்கு தான் முதலில் நேரமாகிறது நீ சாப்பிட்டு கிளம்பு என்றான் சரி என்று விட்டு சாப்பிட்டு எழுந்தான் ஆது..
தேவா அவனுக்கு என்னென்ன தேவை என்று பார்த்து பரிமாறி அவனை சாப்பிட வைத்து அவனுக்கு மதிய உணவும் லஞ்ச் பாக்ஸில் கட்டி வைத்து அவனை அழைத்துக் கொண்டு சென்று நேரத்திற்கு பஸ் ஏத்தி விட்டு வந்தான்…
தேவா ஆதுவை பஸ் ஏத்தி விட்டு வீட்டிற்குள் வந்தவுடன் தனது சித்தியிடம் “சித்தி சாப்பிடுகிறீர்களா உங்களுக்கு பிடித்த தேங்காய் சட்னி சாம்பார் வைத்திருக்கிறேன்” என்றான் அதற்கு அரசி தேவாவை முறைத்துவிட்டு ஒன்றும் தேவையில்லை .
எனக்கு பசிக்கும்போது நான் போட்டு சாப்பிட்டுக் கொள்கிறேன் அதற்கு கூட “உன்னை தான் வேலை வாங்குகிறேன் என்று உன் அப்பாவும் உன் தம்பியும் என்னிடம் ஏறிக்கொண்டு வருவார்கள்” ஒன்றும் வேண்டாம் என்றார் …
அரசி அவ்வாறு சொல்லிவிட்டு முகத்தை திருப்பி கொண்டார் தேவா தனது சித்தியை பார்த்து சிரித்து விட்டு அவனது அறைக்குச் சென்று “அலுவலகத்திற்கு நேரமாகுவதால் வீட்டில் போட்டு இருந்த உடைகளை கலைத்துவிட்டு அலுவலகம் செல்வதற்கு நேர்த்தியான உடை அணிந்து கொண்டு அவனது அறையில் இருந்து வெளியில் வந்தான்”..
“அவனது அறையில் இருந்து வெளியில் வந்தவனை தீரன் ஆசை தீர பார்த்து உச்சி முகர்ந்தார்” உன்னை இப்படி பார்க்க தான் ஆசைப்பட்டேன் ..
என்னுடைய பாருவும் இதற்கு தான் ஆசைப்படுவாள் என்றவுடன் அரசி திரும்பி தனது கணவனை முறைத்தார் அப்பா கொஞ்சம் அமைதியாக இருங்கள் ..
ஏன் எப்பொழுது பார்த்தாலும் சித்தியுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் “அம்மாவை பற்றி பேசினால் சித்திக்கு கோபம் வருகிறது என்று தெரிகிறது தானே” ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்றான் ..
“டேய் நான் அமைதியாக இருந்தாலும் உனது சித்தியின் வாய் அமைதியாக இருக்காது” நீ கிளம்பு சாப்பிட்டு விட்டு நேரமாகிறது பார் என்றார் ..
அவன் வேறு எதுவும் பேசாமல் தனது “அன்னை பார்வதி தனது தந்தையால் அன்பாக பாரு என்று அழைக்கப்படும் பார்வதி” …
போட்டோவில் மாலை போட்டு இருப்பவரிடம் சென்று விளக்கேத்தி சாமி கும்பிட்டு விட்டு தனது அம்மாவை வணங்கி விட்டு உணவு மேசையின் மீது உட்கார்ந்து காலை உணவை சாப்பிட்டுவிட்டு மதியத்திற்கு செய்ததை தனது சிறிய டிபன் பாக்ஸில் போட்டுக் கொண்டு அவனது அலுவலகத்தை நோக்கி சென்றான்…
போகும் “தேவாவை வன்மத்தோடு அரசியும் போகும் தனது மகனை வாஞ்சனையாக தீரனும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்”..
×××××
“அடியே வருணி சீக்கிரம் எழுந்து விடு டி உன்னை எவ்வளவு நேரம் எழுப்புவது எட்டு மணிக்கு மீட்டிங் என்று சொன்னாய் இப்பொழுது மணி 7:30.
8:00 மணிக்கு மீட்டிங் என்றால் 7:30 மணிக்கு எழுந்து “அவசர அவசரமாக காக்கா குளியல் குளித்துவிட்டு காக்கா போல் லேசாக கொத்திவிட்டு சாப்பிட்டுவிட்டு கிளம்புகிறாய்” சீக்கிரம் எழுந்து தொலை டி..
“உன்னை திட்டுவதை விட உனக்கு செல்லம் கொடுக்கும் உன் அப்பாவை தான் சொல்ல வேண்டும்”
என் மகளுக்கு எப்போது எழுந்து கொள்ள வேண்டும் என்று தெரியும் என்று எப்பொழுது பார்த்தாலும் உனது புராணத்தை பாடி கொண்டு இருக்கிறார்
என்று ” தனது ஆசை அருமை புதல்வி ஒரே மகளான வருணிகா”வை எழுப்பிக் கொண்டிருந்தார் கலைமணி…
வருணிகா சிரித்த முகமாக எழுந்து தனது தாயைப் பார்த்து லேசாக முறைத்துவிட்டு பிறகு சிரித்துக் கொண்டே “கலை என்னை திட்டாமல் எழுப்ப உன்னால் முடியாது தானே”
“எவ்வளவு தான் அப்பா உன்னிடம் கத்தி கத்தி சொன்னாலும் என்னை கத்தி எழுப்புவதை மட்டும் நீ நிறுத்த மாட்டேன்” என்று சொல்லிக் கொண்டே இருந்தால் என்ன அர்த்தம் என்றாள்
கலை தனது மகளை முறைத்து விட்டு ஏன் டி சொல்ல மாட்டாய் எல்லாம் உனது அப்பா தரும் இடம் மணி 7.30 ஆகப்போகிறது எட்டு மணிக்கு மீட்டிங் என்று சொன்னாய் என்றார்…
“நான் சொன்னேன் தான் அதற்கு பாசமாக கூட வந்து எழுப்பலாம்” ஆனால் “எந்த நேரம் பார்த்தாலும் என்னை திட்டிக் கொண்டே எழுப்புகிறாய்” அப்புறம் எப்படி அன்றைய நாள் நல்ல நாளாக எனக்கு முடியும் என்றாள்..
ஆமாம் “நான் உன்னை திட்டாமல் எழுப்பி விட்டால் மட்டும் உனக்கு அன்றைய நாள் நல்ல நாளாக தான் நீ அமைத்துக் கொள்வாய் பார்”
” தினமும் ஏதாவது ஒரு வம்பு சண்டையை இழுத்துக் கொண்டுதான் இருக்கிறாய் ” இன்னும் சின்ன பிள்ளை என்று நினைப்பு என்றார்..
சீக்கிரம் எழுந்து கொள் டி ” தினமும் அவசரமாக எழுந்து காக்கா குளியல் தான் குளிப்பாய் என்றார் “
போதும் “அழகாக என்னை பெற்றுவிட்டு எப்போது பார்த்தாலும் என்னை காக்கா காக்கா என்று காக்கா உடனே ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறாய் “என்று தனது தாயிடம் பழுப்பு காண்பித்து விட்டு குளியல் அறைக்குள் புகுந்தாள்..
நம் கதையின் நாயகி “வருணிகா” தனது தந்தை மாணிக்கம் தாய் கலைமணி இருவரும் தவமிருந்து பெத்த ஒற்றை புதல்வி இருவரின் செல்ல மகள்..
இப்படி “வீட்டிற்கு ஒற்றை மகளாக செல்ல மகளாக வளர்ந்த வருணி என்கிற வருணிகாவும் தனது பெற்ற தாய் இல்லாமல் தந்தையின் அன்பாலும் தனது சித்தியின் கொடுமையாலும் தனது தம்பி ஆதர்ஷ் என்கிற ஆதுவின் பாசத்தாலும் வளர்ந்து கொண்டு இருக்கும் தேவா என்கிற தேவ மித்ரனும் வாழ்க்கையில் எவ்வாறு இணைய போகிறார்கள் என்பதேபுவிதழில் பூத்த புன்னகையே “
தேவா & வருணிகா… அடடே பெயர் பொருத்தமே அருமை. ஒருத்தர் அமைதி, இன்னொருவர் வாய் சவடால் ! சூப்பர்..!
அருமை. .. சாந்தம் அமைதியானவனுக்கு அராத்து வருணி செம ஜோடி கலைக்கட்டும்
Story started nice. Congrats
Nice starting